DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 256
அத்தியாயம் 23 (1)
மணி அந்த இன்னொரு வாத்தியாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் போல. அதோட அந்த வாத்தியாருக்கிட்ட வித்தை கத்துக்கிறவங்கக்கிட்ட கொஞ்சம் செல்வாக்கு உள்ளவன் மணி.
அந்த வாத்தியார் ரொம்ப தண்ணி அடிச்சிட்டு சலம்பல் பண்ணுவாராம்; அதனால அவரையோ, அவரை சேர்ந்த ஸ்டூடன்ட்களையோ அந்த ஏரியா மக்கள் மதிக்கலை.
அதோட போன வருஷம் புலியாட்டத்தில் அந்த மணிக்கு புலிவேசம் கட்டச் சொல்லி அந்த வாத்தியார் ஊர்ல பேசியிருக்கார். ஆனா யாரும் அவர் சொன்னதை காதில் வாங்கல.
அதோட போதையில அந்த மணி ஒரு பொம்பள பொண்ணுக்கிட்ட அத்து மீறி நடக்க முயற்சி பண்ணியதை தெரிஞ்ச இந்த வெயில், மணி போதையில் இருந்தபோது தெருவில வச்சு அடிச்சுத்தொவச்சிருக்கான்.
அவன் போதைல இருந்ததால வெயிலை எதிர்த்து நிக்க முடியல.
ஊர்ல எல்லோரும், மணி இப்படி அடிவாங்கிக்கிட்டு திரும்ப அடிக்க முடியாம இருப்பதைப் பார்த்து, “புல்தடிக்கி பயில்வானா இருக்கற இவனுக்குப் போயி அந்த குடிகார வாத்தியார் புலிவேசம் போடச் சொல்லி போன வருசம் மல்லுகட்டுனாரு — சரியான பொட்ட புலி இவன்!” என்று கேலி பேசினார்கள்.
அதனால அந்த வாத்தியாரும் மணியும் கடுப்பாயிட்டாங்க.
இந்த வருஷம் புலியாட்டம் நடக்கும் போது புலிவேசம் கட்டுறவங்களை வம்பிழுத்து தாக்குதல் நடத்தப்போறோம்’ன்னு மறைமுகமா சவால் விட்டுருக்காங்க.
இந்த விஷயம் போலீஸ் காதுக்குப் போனா, ஆட்டமே நடக்கவிடாம தடை விதிச்சிடுவாங்க.
அதனால இந்த வெயிலோட வாத்தியாரு அரவமில்லாம, பெரிய மனுஷங்களோட சப்போர்ட்டில் புலிவேசம் போடுற வெயிலுக்கு பாதுகாப்பு செய்து வைத்திருக்காங்க,” என்றார்கள்.
அவர்கள் சொன்னதை கேட்ட ராம்ஜி,
“இந்த வெயிலுக்கு நாலு பெரியவங்க சப்போர்ட் பண்ணுனா, நாம அந்த மணிக்கு சப்போர்ட் பண்ணுவோம்.
அந்த மணியைத் தூக்கிட்டு வங்க. அவன்கிட்ட பேசி, அந்த வெயிலை போட்டு தாக்க, எத்தனை பேர் வேணும்னு கேட்டுப் பார்த்து ஆட்களை கூட அனுப்புவோம்,” என்றான்.
“சார், நாங்க போயி அந்த மணியை தூக்க ரெடிய்தான்.
ஆனா புலியாட்டத்துக்கு நேரம் கம்மியா இருக்கு.
இப்போ போயி அந்த மணியை தூக்கிட்டு வந்து, நம்ம ஆட்களை வரவச்சு ஏற்பாடு பண்ணுறதுக்குள்ள புலியாட்டமே முடிஞ்சிடும்,” என்றார்கள்.
“சரி அப்போ தூக்க வேண்டாம். அந்த மணியை பாலோ பண்ணுங்க.
அவன் அந்த வெயிலை ஊர்வலத்தில் அடிச்சுப் போட, நம்மளால எதுவும் உதவ முடிஞ்சா உதவலாம்.
இல்லாட்டி ஆட்டம் முடிஞ்சதும் — இரண்டுபேருக்கும் அந்த வெயில் பொதுவான எதிரி.
அதனால ‘எதிரிகள் நண்பர்கள்’ன்னு கூட்டிச் சேர்ந்திடலாம்.
நமக்குப் பழக்கமில்லாத ஏரியால, வெயிலை தூக்க அந்த ஏரியா பத்தி தெரிஞ்ச ஒருத்தன் வேணும் — அந்த ஒருத்தனா மணியை நாம வச்சிக்கலாம்,” என்றான் ராம்ஜி.
விந்தியாவுக்கு வெயிலை தான் ஒதுக்கியதைப்பற்றிய உறுத்தல் இல்லை.
ஆனால் வெயிலுக்கும் அவளுக்கும் இருந்த காதல் பற்றி யாராவது, அவளுக்கு வாய்த்திருக்கும் அந்த அல்ட்ரா மாடல் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு சொல்லிட்டா பிரச்சனை ஆகிடுமோ என்ற பயம் இருந்தது.
அவளுடன் அந்த வெளிநாட்டு மாப்பிள்ளை சம்பத்துக்கு நிச்சயம் செய்ததில் இருந்து, மொபைலில் அவளை அழைத்து பேச சம்பத் அடிக்கடி முயன்றான்.
மேலும், சிலீவ்லெஸ் அல்லது ஜீன் டாப்ப் போன்ற உடைகளுக்கு பழக்கம் இல்லாத விந்தியாவை, அப்படிப் போட்டோ எடுத்து அனுப்பச்சொல்லி கேட்டான்.
வெயிலைப் போல ஓங்குதாங்காக இல்லையென்றாலும், அவளை விட உயரமாகவும், சற்று பூசினாற் போல தோற்றத்துடன் இருந்தாலும், சீனாக அயர்ன் பண்ணிய சட்டை, நுனி நகத்துல கூட அழுக்கு இல்லாத பராமரிப்பு, ஆப்டர் சேவிங் லோசன் வாசனை, விலையுயர்ந்த கட்சூ — இப்படி இன்றைய இளம்வயது ஆணுக்கு ஏற்ற தோற்றமோடு இருந்த அவனின் ஸ்டைல் விந்தியாவை ஈர்த்தது.
அவனுடன் வெளியில் போனால், தன் ரேஞ் உயரும் என்ற எண்ணமும் அவளுக்கு உண்டானது.
வெயிலுடன் இருந்த காதலால், இவனுடன் நடக்கயிருக்கும் கல்யாணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்ற பதைபதைப்பு உண்டானது.
எனவே இந்த திருவிழாவிற்கு மாப்பிள்ளை சம்பத் வருவதாகச் சொன்னதும் —
“அதெல்லாம் வேண்டாம். கல்யாணத்துக்கு முன்னாடி இங்க வந்து என் கூட பேசுறது நல்லா இருக்காது” என்று அவள் தடுத்தாள்.
ஆனால் அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்ற பெயரில் சம்பத் இன்று காலையில் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.
வருங்கால மாப்பிள்ளை என்பதால், வீட்டில் உள்ளவர்களுக்கும் எதுவும் சொல்ல முடியாது; இன்முகத்துடன் அவனை வரவேற்றனர்.
மேலும் அவன் விந்தியாவின் அம்மாவிடம்,
“அத்தை, இன்னைக்கு மகர நோன்பு விழா ஊர்வலம் எல்லாம் இங்க செமையா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.
அதுதான் மாமா வீட்டில் அம்மா அப்பாகிட்ட பொங்கலுக்கு இங்க வீட்டோட வரச்சொன்னது கேட்டதும் கிளம்பி வந்துட்டேன்.
அவர்களுக்கும் வரணும்னு ஆசை. ஆனா கல்யாண வேலையால பிசியா இருக்கிறதால வர முடியலை.
நான் மட்டும் வந்தது உங்களுக்கு வருத்தமில்லையே?” என்று சமாளித்தான்.
விந்தியாவின் அம்மா, அவளைக் கொண்டு அவனுக்கு பரிமாற விருந்தோம்பச் செய்தார்.
தாயறியாத சூலா. மகளின் மனமாற்றமும் கலக்கமும் அவருக்குத் தெரிந்தது.
எனவே மருமகன் அண்டை அசல் வீட்டார்களால் அண்டப்படாமல் இருக்க, வீட்டு கேட்டை பூட்டி வைத்தார்.
பேச வருபவர்களை வாசல் வரை பேசி அனுப்பினார்.
“என்ன விந்தியா அம்மா… புது மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடியே விருந்தாடியா வந்திருக்கிறார் போல!” என்று வழியந்த மக்கள் பேச்சுக்கொடுத்தார்கள்.
மேலும் சம்பத்தைக் காண ஆர்வப்பட்டனர்.
வருபவர்களைத் தவிர்க்க,
“மாப்பிள்ளை தூங்குறார், சாப்பிடுறார்…
மத்தவங்க கூட பேச தயங்குறார்.
கல்யாணத்துக்குப் பிறகு விந்தியா அவரை மாத்திடுவாள்,” என்று சமாளித்து அனுப்பினார்.
களத்தில் வெயிலின் புலியாட்டம் தொடங்கியது.
பாதைகள் தோறும் காட்சியளிக்கும் மக்களின் முன் புலித்தோற்ற அசைவுகளில் மகிழ்வித்தபடி ஆட்டம் ஆரம்பித்தது.
புலிவேடமிட்ட வெயிலின் பின்னால் ‘எதிர்ப் புலி’ சீனியரின் அசைவுக்கு ஏற்ப விளையாட, உடற்பயிற்சி கழகத்தினர்கள் ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள முக்கியஸ்தர்களுடன் மரியாதையாக ஊர்வலமாக கிளம்பினர்.
முக்கிய சந்திப்புகளில் காவல்துறை அதிகாரிகளும் நின்று வித்தை காட்டியபடி மரியாதை செலுத்தினர்.
வெயிலும் சக வீரர்களும் முன்னேறினர்.
எல்லையை நெருங்கும் இடத்தில், ஒரு தெருவிளக்கு எரியாமல் இருந்தாலும், ஊர்வல வாகனங்களின் ஒளி போதுமான வெளிச்சம் தந்தது.
அந்த பாதை தவிர, இருபுற பில்டிங்குகளும், கோணல் பாதைகளும் இருட்டடிக்கப்பட்டிருந்ததால், ஒரு சந்திப்பில் சலம்பாட்ட வீரர்களின் உடையில் நான்கைந்து பேருடன் மணி வேடம் அணிந்து காத்திருந்தான்.
ஊர்வலம் நெருங்கியதும், மணி அரவமில்லாமல் தனது ஆட்களுடன் கூட்டத்தில் உருண்டு நுழைந்தான்.
மற்றவர்கள் சலம்பல் செய்து, பக்கத்தில் இருந்தவர்களை வம்பிழுத்தனர்.
இதனால் வீரர்களின் கவனம் அவர்களிடம் திரும்பி, சலம்பல்காரர்கள் தனியாக இழுத்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த சூழலில் அனைவரின் கவனமும் அங்குச் சென்று கொண்டிருப்பதை பயன்படுத்தி, மணி வெயிலின் பக்கம் நெருங்கினான்.
அவன் உடலில் பிளேடுகளை மறைத்து வைத்திருந்தான்.
அந்த சூழலை கவனித்த வெயில், மணி ஊடுருவிவிட்டதை உணர்ந்தான்.
அவனை நெருங்கும் ஒவ்வொருவரையும் உற்றுநோக்கியான்.
மணியின் கடந்த முறை பிளேடு கொடுத்த சம்பவம் நினைவுக்கு வந்தது.
அவன் இரு கைகளையும், பல்லுக்கு இடையில் பிளேடு வைக்கும் பழக்கத்தையும் வெயில் நினைவு கூர்ந்தான்.
வெயில் அவனை கவனிக்காதது போல பாவனை செய்தான்.
மணி வெயிலை நெருங்கி அடிக்க வர, வெயில் கடைசி நிமிடத்தில் விலகி, அதன் பின்னால் சென்று கிடுக்குப்பிடி போட்டு, தலைக்கு மேலே தூக்கி சுழற்றி, அவனை வீசியான்.
அவனின் ஆக்ரோஷமும் திறனும் கூட்டத்தை மிரளச் செய்தது.
போலீஸ் வரும்முன்னே எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.
வலியால் அலறிய மணியை போலீசார் தூக்கிச் சென்று ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுபோனார்கள்.
ஊர்வலம் உடனே சீர்படுத்தப்பட்டு, கோவிலில் சாமி தரிசனம் செய்து புலியாட்டம் வெற்றிகரமாக முடித்தான் வெயில்.
ஊர்வலத்துடன் போஸ்ட்மாஸ்டர்—விந்தியாவின் அப்பாவும்—மாப்பிள்ளை சம்பத்தையும் அழைத்து வந்திருந்தார்.
சம்பத் நடப்பதைப் பதிவுசெய்து விந்தியாவுக்கு அனுப்பினான்.
வெயில் விந்தியாவின் முன்னாள் காதலன் என்பதை அறியாமல் —
“உங்க ஊர் ஆளுங்க நிஜ ஹீரோ!” என்று புகழ்ந்து மெசேஜ் அனுப்பினான்.
விந்தியாவின் அப்பா, யாராவது மாப்பிள்ளைக்குப் பேசி ‘விந்தியா–வெயில்’ கதை சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவனை எல்லாரிடமிருந்தும் பிரித்து வைத்தார்.
ராம்ஜி பக்கம் —
அவன் ஆட்களும் இதை ஒளிப்பதிவு செய்து உடனுக்குடன் அனுப்பினர்.
அதை பார்த்த ராம்ஜி —
“வெயிலை ஆட்களால அடிக்க முடியாது…
சூழ்ச்சி மூலமாதான் அவனை ஒழிக்க முடியும்” என்று யோசனையில் ஆழ்ந்தான்.
----