My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

ரா. சிதம்பரம் ஆசிரியர் குறிப்பு

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,397
ரா. சிதம்பரம் ஆசிரியர் குறிப்பு

ரா. சிதம்பரம் ஆசிரியர் குறிப்பு.

எழுத்தாளர் யார் ?எவர்? என்ற நூலிலும்(Who is Who?) சிறுகதை ஆசிரியர் இடம் பெற்று உள்ளார்.

பொதுவுடைமைச் சிந்தனை சார்ந்து இயங்கியும், மானாமதுரை-மேலபசலை கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் (1958-59)பணிபுரிந்துள்ளார்.

மானாமதுரை அருகே மேல கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிதம்பரம் தமுஎச கலை இரவில் பாராட்டப் பெற்றார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மலை கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் அவருக்கு வயது 82 இவர் சிறந்த சிறுகதைகள் எழுதியிருக்கிறார் ஆனந்த விகடன் வார இதழில் இவர் எழுதிய சிறுகதைகளின் தொகுதி புதைந்த சிற்பம் என்ற தலைப்பில் குயிலன் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டது இந்தப் புத்தகம் அமெரிக்க நூலகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலைமகள் குமுதம் ஆனந்தவிகடன் முன்னணி நிழல் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ள கதைகள் இலக்கிய கட்டுரைகள் நாடகங்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

திருநெல்வேலி இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பகுதிநேர பேராசிரியர் கருப்பையா என்பவர் இவர் கதையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு ஆய்வு செய்துள்ளார்.
இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற எழுத்தாளர் சிதம்பரம் மானாமதுரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க வெள்ளி விழா கலை இரவில் பாராட்டப் பெற்றார்.

1.புதைந்த சிற்பம்
2.பெண்புலி
3.பகைமையிலும் பண்பு
4.பரிசு
5.துறவு
6.வாழ்விக்க வந்தவள்
7.சதி
8.விஷம்
9.மாலையிட்ட கை
10.கற்பகத்தின் கண்ணீர்
11. நிர்வாணம்
12. சாணக்கியரின் தோல்வி
13. ராக வேதனை
14.அடுத்தவனின் கடிதம்
15.சோதனை
16. செஞ்சோற்று கடன்
17.விதி சிரித்தது
18. பசி எடுக்காது
 
Back
Top