"என்னடி ரொம்ப வலிக்குதா? அமைதியாகிட்டயே?" அனந்த கிருஷ்ணன் கேட்டதற்கு
"வலியெல்லாம் இல்லை" என்றாள் அவள்.
"கதையைப் பத்தின யோசனைக்குப் போயிட்டயா?"
"அந்த யோசனைதான். வீட்டுக்குக் கிளம்பலாமா?"
"வா நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்"
"இல்லை பரவாயில்லை. நான் போய்க்குவேன். வண்டியில தானே வந்தேன். நீங்க இங்க வேலையைப் பாருங்க க்ருஷ்" அவள் எழவும் கையைப் பிடித்துக் கொண்டவன் "நான் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன். போய் உன் கார்ல வெயிட் பண்ணு. ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்துடுறேன்" அழுத்திச் சொல்லவும் வேறு வழியில்லாமல் அவள் சென்று காரினுள் அமர்ந்தாள்.
அனந்த கிருஷ்ணனின் போனையும் அட்டெண்ட் பண்ணாமல் அவள் பாட்டுக்குப் படுத்திருந்தாள். எழுதுவது கூட அவளுக்கு மறந்து போயிருந்தது. அந்தளவுக்கு அவளது மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.
வெளியே வந்தாள். வந்தவளின் காலில் தட்டுப்பட்டது அந்த சட்டை.
அதை கழட்டி வீசியிருக்கிறான் என்றால் தன் மீது வெறுப்பை வளர்த்திருப்பான் என நினைத்துக் கொண்டு அவள் கிச்சன் அருகே வர அவளுக்கானது எல்லாமே தயாராக இருந்தது.
இதைத்தானே பண்ண வேண்டாம் என்று அவள் சொல்லியிருந்தாள். திரும்பவும் இதையெல்லாம் செய்து வைத்து ஏன் தன்னை குற்றவுணர்வுக்கு ஆளாக்க வேண்டும் என்று நினைத்தவள் "டாக்டர்" என்று சத்தமிட்டாள்.
விடியற் காலையிலேயே தங்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கிய தன் நண்பன் மற்றும் தங்கையின் குடும்பத்தை கண்டு இன்பமாக அதிர்ந்தனர் மணிவண்ணன் மற்றும் மரகதம் தம்பதியினர்.
பாசப் போராட்டம் அனைத்தையும் கடந்து ஆரத்தி எடுத்து அனைவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார் மரகதம்.
பின்னர் அனைவருக்கும் குடிப்பதற்கு சூடாக பால் காய்த்து கொடுத்தார். வீட்டில் ஒரு வித அமைதி நிலவிக் கொண்டு இருந்தது. மணிவண்ணன் மற்றும் கதிர்வேல் இருவரும் தங்கள் கைகளின் பிணைப்பை விடுவிக்கவே இல்லை.
அனைவருக்கும் பாலை கொடுத்து விட்டு அங்கு அமர்ந்த மரகதத்திடம் "அம்மா நீங்க அத்தையையும் மாமாவையும்...
மரகதம் மல்லிகாவிற்கு சாப்பாட எடுத்துக்கொண்டு சென்று கொடுக்க, அவளும் அமைதியாக வாங்கி சாப்பிட்டாள். அது மட்டும் அல்ல மரகதம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் மென்மையாகவே பதில் கூறி, அவருடன் சகஜமாகவே இருந்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடிய, தனக்குள் இருந்த கேள்வியை மாறனிடம் கேட்டான் மணிவண்ணன், "இவர்கள் அங்கு இருப்பது உனக்கு எப்படி தெரியும் மாறா?" என்று.
அதே கேள்விதான் கதிர்வேலின் மனதிலும் குடைந்து கொண்டே இருக்க, அவரும் அவனை ஆர்வமாக பார்த்தார்.
அனைவரையும் பார்த்து ஆழ்ந்து பெருமூச்சு எடுத்து விட்ட மாறன், "நாம் மாமாவை தேடுவதில் ஏதோ தவறு செய்வது போல் எனக்கு...
சிறிது நேர ஓய்விற்குப் பிறகு கதிர்வேலும் மாறனும் மதிய உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். இருந்தாலும் கதிர்வேலை அந்த ஊருக்கு திரும்பவும் அனுப்புவதற்கு மணிமேகலைக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
அந்த பயம் அவள் முகத்தில் தெளிவாக தெரிய, லேசாக தோளுடன் அணைத்து "அத்தை, எதை நினைத்தும் கலங்காதீர்கள். எப்படி நாங்கள் போகிறோமா! அப்படியே பத்திரமாக வருவோம், சரியா?" என்று மென்மையாக கூறினான் மாறன்.
"இருவரும் பத்திரமாக வந்து விடுவீர்கள் என்று அறிவுக்கு தெரிகிறது மாறா, ஆனால் மனதிற்கு ஏதோ ஒரு விதம் பயம் இருந்து கொண்டே இருக்கிறது. இத்தனை வருடங்கள் அங்கே பயத்துடனே...
உள்ளே வந்தவனை கோபமாக ஏறிட்டவள் அதன் பின் நிமிரவே இல்லை.
"என்னை பாரு அபூர்வா" அவன் அழைத்தும் அவள் நிமிரவே இல்லை. கோபம் உள்ளே இருக்கிறதுதான். ஆனால் மாஸ்க் போட்டபடி உள்ளே நுழைந்தவனிடம் அந்தக் கோபத்தினைக் காட்ட முடியவில்லை.
அவளது பலவீனம் அறிந்தே அவன் அப்படி வந்திருக்க வேண்டும்.
"அபூர்வா என்னைப் பாரு. எனக்கான ஒரு வாய்ப்பை நீ தந்துதான் ஆகணும். இப்போ நான் பேசுவேன் நீ கேட்டே ஆகணும். அதுக்கப்பறமும் உனக்கு என் மேல கோபம் இருந்தால் தாராளமா நீ காட்டலாம். வெறுத்து மட்டும் ஒதுக்கிடாத டி"
"சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு. முதல்ல அந்த மாஸ்க்கை கழட்டு"