இல்லம் களைகட்டி இருந்தது. மணிமாறனின் உறவினர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் வாசிகளே. அதனால் அவ்வப்போது வந்து சென்ற வண்ணமே இருந்தனர்.
மின்சார அடுப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்குக் குறைவில்லாமல் இயங்கியது, டீ மற்றும் காஃபிக்காக.
சுற்றத்தில் மிக முக்கிய மற்றும் நெருங்கிய உறவுகள், மணப் பெண்ணிற்கு நாள் செய்வதாய்க் கூறி, தினம் ஒருவராய் சீர் வரிசைத் தட்டுகளுடன் வந்து நலங்கு வைத்துச் சென்றனர்.
அன்றைய தினம், மிருதுளாவின் இரண்டாவது தாய்மாமன் முறை. மூத்தவர், முதல்நாளே செய்து விட்டார். தங்கை மகளிற்குச் சீராக, இரண்டு சவரனில் சங்கிலி வாங்கி அணிவித்து இருந்தார்.
இதில்...
கதிர்வேலின் கோபத்தைக் கண்டு வீட்டை விட்டு வெளியேறினான் தயாளன்.
அவன் கூடவே வெளியே வந்த கதிர்வேல் "என்னிடம் எது பேச வேண்டுமென்றாலும் இங்கிருந்து தான் பேச வேண்டும். வீட்டிற்குள் காலடியை எடுத்து வைத்தாய் என்றால் காலை உடைத்து விடுவேன்" என்றான் கோபம் சற்றும் குறையாமல்.
"ஏய் என்னையே மிரட்டுறியா நீ? நாளைக்கு வேலைக்கு வருவ இல்ல, அப்போ உன்னை கவனித்து கொள்கிறேன்" என்று கதிர்வேலிடம் சொல்லிவிட்டு "டேய் முனியா!" என்றான்.
உடனே "என்னண்ணே" என்று கேட்டபடியே ஒருவன் வந்து நிற்க,
"நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நீ இவனை கூப்பிட்டு குவாரிக்கு வந்துரு" என்று அவனிடம் அதிகாரமாக...
ஒரு சமூக விரோத கும்பல், பொதுமக்கள் கூடும் ஒரு இடத்தில் விஷவாயுவை பரப்பி, மக்களுக்கு சுகாதார கேடு ஏற்பட வேண்டும் ,
என்று திட்டம் போட்டார்கள்.
அந்த கும்பலில் ஒருவன் தன் காதலி சொன்னது மூலம் இனிமேல் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட போவதில்லை என்று சொல்ல வந்தான்.
அப்போது அவர்கள் கும்பல் திட்டம் போடுவதை பார்த்து விட்டு, “ இதை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்” என்று சொல்ல , உடனே மற்ற மூவரும் “ ம்ம் சரி” என்று அவன் நம்பும் படி செய்து விட்டு அவனை ஒரு அறையில் வைத்து அடைத்தனர்.
பிறகு தங்கள் திட்டத்தை பற்றி மறைமுகமாக பேசினார்கள்.
வைகை நதி பாயும் மதுரையில்,
தென்னிந்திய பலகார திருவிழா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வைரமான வாய்ப்பு என்று, தென்னிந்திய பலகார திருவிழா நடக்கும் இடத்தின் நுழைவு வாயிலில்,
பலகார திருவிழா பற்றிய பல விளம்பரங்கள் இருந்தன.
ஒவ்வொன்றாக பார்த்து கொண்டே அருணனும் அருணகிரியும் போட்டி நடக்கும் இடத்திற்குள் சென்றார்கள்.
அருணனுக்கு எதிரே வந்த ஒரு குடும்பம் அருணனை வரவேற்றது
அதில் ஒருவர் “ அண்ணா நீங்கள் இங்கே வருவீர்கள் என்று சொல்ல வில்லையே ! , நீங்கள் வந்தது எனக்கு கூடுதல் பலம்” என்று சொல்லி விட்டு, தன் குடும்பத்திடம்...
அந்த அறை கலையரசி தாரா, சாரா தூங்கும் அறை... அவர் தன் மகளின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்... அப்போது ஆரம்பித்த பேச்சுதானே இந்த அளவிற்கு வந்து முடிந்துள்ளது...
சத்தம் கேட்டு எழுந்தவர் கையில் அந்த அறையின் சாவியோடு வருகிறார்... எல்லாரும் நகருங்க, வழியை விடுங்க என்ற படியே வெளிப்பக்கத்தில் சாவியை விட்டு திறக்கிறார்...அந்தக் கதவு அப்படிப்பட்ட ஒரு டிசைன் செய்யப்பட்டு இருந்தது பாட்டிக்காக. கதவு திறப்பதற்குள் ஒரு மிடறும் குடித்தும் விடுகின்றனர்... மிச்சமிருந்தை அஸ்வின் வேகமாய் தட்டி விட்டு உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்கிறான்... போன் செய்த கையோடு இருவருக்கும் சிகிச்சைகளை செய்யத்...
அவளுடைய கெட்ட நேரமோ, யாருடைய நல்ல நேரமோ தெரியவில்லை... போன் உடைந்து போனது போனதுதான்... அதை சரி செய்ய இன்னும் எத்தனை நாள் ஆகுமோ...
வீட்டில் உள்ளவர்களும் அலங்காரம் செய்து கொண்டு தயார் நிலையில் இருக்கிறார்கள்... அஸ்வினும் பட்டு வேட்டி சட்டை அணிந்து ராஜகுமாரனை போல காட்சி அளிக்கிறான்... கருஞ்சிவப்பு நிறத்தில் தங்க நிற ஜரிகைக் கொண்ட பட்டுப் புடவையுடன் நகைகள் அணிந்து தேவதையாய் நிற்கிறாள் யாழு...
கலையரசியும் அவருக்கு எடுத்துக் கொடுத்த புதுப்பட்டு புடவையை கட்டிக் கொண்டு எங்கே பலகாரங்கள் இருக்கின்றன என்று கவனித்து வைத்துக் கொள்கிறார்... அந்த தட்டின் பக்கத்தில் சென்று உட்கார்ந்து கொண்டு...
அடுத்த நாளும் மெல்ல புலர்ந்தது. “ மேஷாக்கும் சௌராவும் தயாராகி வெளியே வர ரெஜீனா காலை உணவுடன் வந்தாள். “ சாப்பாடு" என தான் கொண்ட வந்த உணவைக் கொடுத்தவள் மேஷாக்குடன் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினாள்.
இருவரும் காலை உணவை உண்டு விட்டு மார்கெட் நோக்கிப் புறப்பட்டனர். இத்தீவில் குதிரை பூட்டிய வண்டிகள் தான் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர். பார்த்தவரையில் ஓரு சிலர் சிறிய வகை மோட்டார் சைகிள் வைத்திருந்தனர். அவர்களையும் விரல்லிட்டு எண்ணக் கூடியதாக இருந்தது. சண்டகோனிடம் மட்டும் ஜீப்பொன்று இருந்தது. முப்பது நிமிடப் பயணத்தின் பின்...