விருதுநகர் -
விருதுநகர் புறநகர்க் காவல் நிலையத்தில் ஒருவர் தன் நண்பனைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்தார்.
காவல் ஆய்வாளர் ரோகிணி -
புகாரை படித்து பார்த்து விட்டு,
“ என்ன தம்பி நீங்கள், தினமும் போனில் மெசேஜ் செய்வார் என்று குறிப்பிட்டு இருக்கீங்க.! , ஆனால் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்தேன் என்று சொல்றீங்க?, ஒன்னும் புரியவில்லை? “ என்று கேட்க,
புகார் கொடுக்க வந்த இசக்கி, “ மேடம், அதான் புகார் கொடுக்க வந்தேன்” என்று சொல்ல,
காவல் ஆய்வாளர் ரோகிணி - “ விளக்கமாக சொல்லுங்க”
இசக்கி “ மேடம் நானும் அவனும் நெருங்கிய நண்பர்கள்.
எனக்கு வேறு ஊர் அவனுக்கு வேறு...