இந்த கதை ஆப்பரேஷன் சிந்தூர் நடந்த சில நாட்களில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காட்சியே எல்லையில் போரில் மடியும் அமலாதிபிரான், கதாபாத்திரம் உணர்ச்சி வய படுத்தியது. எண்ணற்றோரின் உயிர் தியாகத்தால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம், என நன்றி உணர்வு பெருக்கெடுத்தது.
கதைக்கு வருவோம், அமலாதிபிரான், நன்பன் இளங்கவியிடம், தனக்காக காத்திருக்கும் காதலி காந்தாள் விழியிடம், அவளிடம் திரும்பி செல்ல இயலாமைக்கு மன்னிப்பை வேண்டி, மர வளையலை அவளிடம் சேர்பிக்குமாறு கொடுக்கிறான். .
அமலன், காந்தாள் விழியின் இளம் வயது தோழன், காதலன் நீண்ட வருடங்கள் கழித்து, அவனின் இறப்பு செய்தியை சுமந்து, அவர்கள் காதல் சின்னமான மர வளையோடு வர, காந்தாள்(பார்வையற்றவள்) இளங்கவியவே அமலனாக நினைத்து தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.
காந்தாள் விழி , அமலாதிபிரான் இருவரின் காதல் கதையால் ஈர்க்கப்பட்ட இளங்கவி, விழியின் நேசத்தை பெற, பார்வையற்ற அவளின் நிலையை பயன்படுத்தி தானே அமலனாக மாறுகிறான்
அநாதையான இளங்கவிக்கு, முதன் முதலில் அவன் மீது நேசம் காட்டும், ஒரு பெண்ணின் செயலை தனக்கானது என்றே தீர்மாணித்து ஆள் மாறாட்டம் செய்து அவள் வாழ்க்கை துணையாகிறான். இளங்கவி, அமலன் என்ற பெயரிலே விழியுடன், காதலாகி கசிந்துருகி கலக்கிறான்.
காந்தாள், அமலன் ஒருவர் மீது மற்றொருவர் வைத்த நேசம்,இளங்கவி, காந்தாள் மீது வைத்த நேசம் என முக்கோண காதலாக இருந்தாலும், அமலன் வடிவில் சென்ற பெரும் பிழையை இளங்கவி செய்கிறான்.
காந்தாள் மீது அளவற்ற நேசத்தை இளங்கவி காட்டினாலும், தன்னெஞ்சறிய பொய்யற்க, என்ற வள்ளுவர் கூற்றை புறக்கணித்ததின் பயனை அடைகிறான்.
கதை முழுதும், காந்தாளுக்கு, உண்மை தெரிந்து விடுமோ என இளங்கவியோடு சேர்ந்து வாசகரும் பதை பதைத்து நிற்கிறோம்.
உண்மை தெரிந்தால், காந்தாள் என்ன ஆவால் என்ற கேள்வியே நம் நெஞ்சை கவ்வி பிடிக்க, இளங்கவியை சபிப்போம்.
ஆனால் அமலனாக, இளங்கவி, காந்தாள் மீது கொட்டிய உண்மையான நேசம், அமலன் மேல் தூய அன்பு செலுத்திய, காந்தாளுக்கு கிடைத்த பரிசாகவும் எடுத்துக் கொள்ளலலாம்.
இளங்கவி எனும் தீந்துளியில் கலந்த காந்தாள் எனும் தேன்துளி...
உங்கள் மனதில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என வாசித்து பதிவு செய்வீர்.
"தீந்துளியில் கலந்த தேன்துளி" தலைப்பே கவிதையாய் மனதை நிறைக்கிறதே என்றே கதைக்குள் பிரவேசித்தேன். கதைக்களம் ஆரம்பத்தில் "பவுனு பவுனுதான்" திரைப்படத்தை நினைவுருத்துவதாக தோன்றியது ஆனால் இல்லை இல்லை இது புராணங்களில் வரும் பக்தி.... அதாவது, வட இந்திய வைஷ்ணவ பக்திமார்க்கத்தில் தவிர்க்க முடியாத மீராபாய் கிருஷ்ணபக்தை மீது கொண்ட பக்தியாக... தென்னிந்திய வைணவ ஆண்டாள், கிருஷ்ணன் மீது கொண்ட தீவிர பக்தி போலவும் கதையின் நாயகி காந்தாள்விழி அமலாதிபிரானின் மீது பற்றுதலோடு காத்திருக்கும் கதை என்றே உணர்ந்தேன்.
அமலாதிபிரான் இறக்கும் தருவாயில் நண்பன் இளங்கவியிடம் ஊரில் தனக்காக காத்திருக்கும் காந்தாளிடம் அவளின் நினைவாய் அவனின் கையில் கிடந்த மரவளையத்தை ஒப்படைக்கச்சொல்லி கொடுத்துவிட்டு கண்மூடுகிறான்.
காந்தாள் அமலாதியின் மீது கொண்டிருந்த பக்தியை நேரில் கண்ட இளங்கவி, அவளின் பக்திமீது காதல் கொள்கிறான். தன்னையே அமலாதியாக சொல்லி கண்ணில்லாத நாயகியின் காதலை பெற நாடகமாடி கரம்பிடிக்கிறான். அவளோடு கணவனாய் காதலும் மோகமும் கொண்டு கலக்கிறான்.
அவளிடம் பெற்ற காதலும் மோகமும் தனக்கானது இல்லை இனிமேலும் அது தக்கானதாக மாற வாய்ப்பு இல்லையென உணர்ந்து மனம் வெதும்பி நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர இளங்கவி என்ன செய்கிறான் என்பதை கதையை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள் வாசகர்களே. அழுத்தமான கதைக் களத்தை கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.
அமலன் காந்தாள் காதல் அழகு. அமலன் இறக்கும் தருவாயில் நண்பனை கொண்டு காதலியை பார்க்க சொல்ல அவனும் பார்க்க போய் அமலனின் மேல் காதல் வாய் பேச மடியாமல் போக அமலன் பெயரை அடுத்து பேச விடவில்லை. அவனும் காதல் கொண்டு பேசவில்லை. பின்னர் கல்யாணம் ஆனாலும் அவளுக்காக பிரியாமல் வேண்டும் நினைக்கத் தோன்றியது. கவியின் மனசாட்சி விடவில்லை காதலையை விட அமலனின் காதல் விடவில்லை அது தான் சரி. பாவம் இளங்கவி காந்தாள் அமலன். முடிவு அருமை தான் அமலனின் நினைவுடனும் குழந்தையுடனும் . கவி அவளின் நினைவுடனும் குழந்தைகளின் நினைவுடனும் வாழ வேண்டும். சூப்பர் முடிவு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.