DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 256
தேடல் 13(3)
வருணுக்கு மஹிந்தன் தன்னிடம் கறார் குரலில் கூறியது பிடிக்கவில்லை எனினும் அதனை வெளிக்காட்டாமல் தன் அக்காவிடம் பேச முயன்றான்.
தன் தம்பி பேசுகிறான் என்று தெரிந்தவுடன் “வருண் அப்பா எப்படிடா இருக்கிறார்?
என் பாஸ் எப்படி என் விருப்பமில்லாமல் எனக்கே தெரியாமல் என்னை கல்யாணம் பண்ணினாரோ, அதேபோல் என்னை கேட்காமலே அவரின் வீட்டிற்கு என்னை கொண்டுவந்துட்டார்டா. எனக்கு அப்பா என்னை தேடுவார் என்று பயமாக இருக்கிறது வருண்” என்று கூறினாள்.
அவள் பயப்படுவதை கேட்ட வருணுக்கு கஷ்டமாக இருந்தது எனினும் அதை வெளிக்காண்பிக்காது “அப்பா நல்லா இருக்கிறார் கவி, நீ இருக்கும் வீட்டின் அட்ரஸ் சொல்றயா நான் வந்து உன்னை அங்க வந்து உன்னை என் கூட நாம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருறேன்” என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் “இது ஏதோ பீச் ஹவுஸ் போல் உள்ளதுடா எனக்கு எந்த இடம்னு சொல்லத் தெரியவில்லை” என்றாள்.
அவள் அவ்வாறு பேசிகொண்டிருக்கும் போது அவளிடம் இருந்த போனை பறித்த மஹிந்தன்,
“வருண் நாளை நானே கார் அனுப்பி உன்னை இங்கு கூப்பிட்டு வருறேன்.
இப்பொழுது எனக்கு நிறைய வேலை இருக்கு. சோ! நீ வீட்டிற்குப் போய் அங்குள்ள நிலைமையை சரிசெய்” என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.
மஹிந்தன் தான் பேசிக்கொண்டிருக்கும் போதே மொபைலைப் பறித்ததும் கவிழையாவிற்கு கட்டுப்படுத்த முடியாதவாறு கோபம் ஏற்பட்டது.
எனவே அவள் தான் இருக்கும் இடத்தையும் மற்ற வேலையாட்கள் அங்கங்கே வேலைப் பார்ப்பதையும் கவனத்தில் கொள்ளாமல்,
“நான் பேசி முடிக்கும் முன்ன எப்படி நீங்கள் என்னிடம் இருந்து மொபைலை பிடுங்கலாம் .உங்கள் மொபைல் என்பதால்தானே...! என்னிடம் இருந்து பிடிங்கிட்டீங்க, முதலில் என் போனை என்கிட்ட கொடுங்கள்”
என்று சிலிரித்துக் கொண்டு சண்டைப் போடுவதுபோல் அவனைப் பார்த்து சத்தமாகப் பேசினாள்.
அதற்கு மஹிந்தன் “கொடுக்க முடியாது போடீ!” என்று அசால்டாக கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதும் அவளுக்கு வந்த கோபத்தில் தன் ஒரு கைவிரல்களை மடக்கி அவனின் சட்டை காலரை மறு கையினால் பற்றி அவனை குனியுமாறு இழுத்துவைத்துக் கொண்டு...
“இப்பொழுது என் மொபைலை நீ கொடுக்கலைனா நான் கொட்டுற கொட்டில் டாம் அண்ட் ஜெரியில் வரும் டாமிற்கு மண்டை புடைப்பது போல் உன் மண்டையும் புடைத்துவிடும்” என்று கண்களை உருட்டி கோபமாக கூறினாள்.
மஹிந்தனுக்குதான் தன்னைச் சுற்றி அங்கங்கே வேலையாட்கள் இருக்கும் போது கவிழையா இப்படி செய்வது சற்றுச் சங்கடமாக இருந்தது.
ஏனெனில் இதுவரை அவனிடம் யாரும் அவன் வீட்டார் உட்பட இவ்வாறு நடந்துகொண்டதில்லை அவனிடம் மரியாதையாக சற்று தள்ளிநின்றுதான் பேசுவார்கள்.
அவனின் சின்ன வயதில் இருந்தே மற்றவர்கள் அவனின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச முயன்றதில்லை. ஆளும் அரசனின் தன்மை. அவனின் தாத்தாவின் மூலம் சிறுவயதிலேயே வந்திருந்தது.
எனவே அவனும் தனக்கென்று ஓர் வட்டத்தை போட்டு யாரும் தன்னை நெருங்காதவாறு தான் வளர்ந்துவந்தான். தன் தாத்தா சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவான். மற்றபடி அவனைச் சுற்றயுள்ளவர்கள் அனைவரையும் அவனது கட்டுப் பாட்டில் தான் வைத்திருப்பான்.
ஆனால் இப்பொழுது ழையா அவனிடம் கோபப்பட்டு தன் சட்டை காலரைப் பிடித்து இழுத்து முறைத்துக் கொண்டு பேசுவது அவனுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனால் மற்றவர்களின் முன் அவள் அவ்வாறு செய்வது அவனுக்குச் சங்கடமாக இருந்தது,
எனவே மஹிந்தன் அவள் தன் காலரைப் பிடித்திருந்த கையை தன் ஒருகையில் பிடித்து கொண்டு மற்றொரு கையால் அவள் ஓங்கிய கையை அவளில் எதிர்ப்பை அசால்டாக அடக்கி,
“ஏ..ய் இப்படி நடு ஹாலில் வைத்து என்னைப் படுத்தினாள் என்னுடைய பனிஸ்மென்ட் உன் உதட்டுடன் மட்டும் முடியாது” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்”
அவன் அவ்வாறு கூறியதும் டக்கென்று அவனின் பிடியில் இருந்து திமிறி தன் கையிரண்டையும் உருவ முயன்றாள்.
அவளின் செயலில் புன்னகையுடன் ஒரு கையை மட்டும் விட்டுவிட்டு மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் அவளை இழுத்துக் கொண்டே அந்த வீட்டின் மாடியில் இருந்த அவர்களுக்காக பார்த்துப் பார்த்து அவன் டிசைன் செய்திருந்த பகுதிக்குள் அவளை நிறுத்தினான்.
ழையாவிற்கு இதுவரை ஒட்டியிருந்த சிறிது தைரியமும் ஆளில்லாத அம்மாடிப்பகுதிக்கு வந்ததும் விடைப்பெற்று ஓடிவிட்டது.
அவள் நடுக்கத்துடன் என்னசெய்வது என்பதையறியாமல் அவன் தன்னை பிடித்து நிற்க வைத்த இடத்திலேயே அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.
அங்கு அவளை விட்டப்பின் மஹிந்தன் பெறும் ரிலாக்ஸாக உணர்ந்தான்.
அவன் ழையா நிற்பதை பார்த்துக்கொண்டே “இப்படியே அசையாமல் ஓரே இடத்திலேயே எவ்வளவு நேரம் நிற்கப் போகிறாய் பேபி”.
என்று கேட்டுக்கொண்டே “நான் ரெப்ரஷ் செய்யப்போகிறேன் நான் வரும்வரை சற்று உட்கார்ந்து நீயும் உன்னை ரிலாக்ஸ் செய்துக்கோ” என்று கூறியவன் பாத்ரூமிற்குள் சென்று மறைந்தான்.
கவிழையாவிற்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது, அவளுக்குமே சற்று உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப்பட்டது.
அவள் இதுமாதிரியான சூழலில் உடனே இப்படி சிக்குவோமென எதிர்பார்க்கவில்லை.
ஐஸ்வர்யாவின் வயிற்றில் உள்ள குழந்தை அவனுடையது கிடையாது என்றும் அது அவளின் லவ்வரின் குழந்தை என்று தெரிந்தபோதே தான் அறியாமல் ஐஸ்வர்யாவின் வாழ்கையில் தன்னால் பெரிய துரோகம் நடப்பதற்கு தான் காரணமாகிவிட்டோம் என்ற உறுத்தல் அவளுக்கு மறைந்தது.
மேலும் மஹிந்தனின் மேல் இருந்த பெண்களைப் போகப்பொருளாக பயன்படுத்தும் கீழ்தரமானவன் என்ற எண்ணம் அவளைவிட்டு விடைபெற்றது.
ஆனாலும் தன்னிடம் நெருங்குவதற்கு அவன் மேற்க்கொண்ட செயல்களும் அவனின் பணத்திமிரும் தான்என்ற அகம்பாவமும் உள்ளவனை எப்படி தன்னால் ஏற்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.
அதுவும் இப்பொழுதும் தன் மனதினை பற்றி சற்றும் சிந்திக்காமல் அவன் அவளின் மேல் ஆசைப்பட்ட காரணத்திற்காக இங்கே கொண்டுவந்து நிறுத்தியது வரை,
தன் மீதான மஹிந்தனின் அடக்குமுறையை நினைக்கையில் அவளுக்கு உள்ளம் கொதித்தது.
இவ்வாறான மனக் குழப்பத்தில் அவள் அருகில் இருந்த கட்டிலின் உட்கார்ந்து தன் கால்கள் இரண்டையும் படுக்கையின்மேல் குத்திவைத்து அவளின் கால்களிரண்டையும் தன் கைகளால் சுற்றி வளைத்துப்பிடித்து தன் முட்டிகளில் தலையை சாய்த்து உட்கார்ந்தாள்.
தன்னை அமைதிப்படுத்தினால்தான், தன்னால் அடுத்து யோசிக்கமுடியும் என்ற எண்ணத்தில் கண்களை மூடி மனதிற்குள் ஓம்...ஓம்... என்று முருகனின் நாமத்தை கூறி தன்னை அமைதியாக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
வெள்ளைநிற டர்கித்துண்டை இடையில் கட்டிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியில் வந்த மஹிந்தன் கட்டிலில் கண்மூடி உட்கார்ந்திருந்த ழையாவை நின்று ரசித்துப் பார்த்தான்.
தன்னுடன் அவளை அந்த படுக்கையில் இருப்பது போன்ற அவனின் கணவு இன்று கைசேர்ந்ததுபோல் அவனுக்கு நிறைவு ஏற்பட்டது.
தற்செயலாக கண்விழித்து பார்த்த ழையா அவனின் கோலம் கண்டு “கருமம்! கருமம்!” என்று கூறிக்கொண்டு மறுபுறம் திரும்பி முகத்தை வைத்துக்கொண்டு “இப்படியா அரைகுறையாக வந்து நிற்பது?” என்று கடுப்புடன் கேட்டாள்.
அவள் அப்படிகேட்டதும் “இது என்னடா வம்பாப் போச்சு., என்வீட்டில் என் படுக்கையறையில் என் பொண்டாட்டி முன்னால் நான் எப்படியும் இருப்பேன்...
இதற்கு ஏன் நான் வெட்கப்படவேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே அவன் அலமாரியைத் திறந்து அதிலிருந்த வீட்டிற்குப் போடும் சாட்சும் கையில்லாத டீ சர்ட்டும் எடுத்துஉடுத்தினான்.
“ஸ்...அப்பாடா” என்ற கூறிக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்த பெட்டில் விழுந்தவன் அதிலிருந்த தலையனையை எடுத்து அணைத்துக்கொண்டான்.
அவன் கட்டிலில் விழுந்த மறுநொடி குதித்து கட்டிலைவிட்டு இறங்கிய ழையா அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவள் முறைப்பதைப் பார்த்த மஹிந்தன் “ரொம்பத்தான் பண்ற நீ என்றவன், உன்னிடம் ரொமான்ஸ் பண்ணுகிற மூடில் இப்பொழுது நானில்லை...
நீயும் ரெப்ரஸ் பண்ணிக்கொள் பேபி உனக்கு சேஞ் பண்ண டிரஸ் இல்லைதானே என்றவன், வேணுமென்றால் என்னுடையதை நீ யூஸ் பண்ணிக் கொள்ளலாம் எனக்கு எந்த அப்ஜெச்சனும் இல்லை”
என்று கூறிக்கொண்டு தன்னுடைய மொபைலை எடுத்து அவளின் முகச்சுளிப்பை பார்த்து புன்னகைத்துக்கொண்டே தன் தங்கை மதுராவிற்கு போன் செய்தான்.
ஒரு ரிங்கிலேயே போனை எடுத்த அவளின் தங்கை “அண்ணா நீ எங்க இருக்கிறாய், அம்மாவும் அப்பாவும் நீ அண்ணியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வரவில்லை என்று சொன்னார்கள்.
அவர்களுக்கு நீ கல்யாணம் முடித்தவிசயம் தெரிந்து உன்மேல் வருத்தமாக இருக்கிறார்கள்.
நீ அண்ணியுடன் நம் வீட்டிர்க்கு போய் அவர்களை சமாதானப் படுத்தாமல் எங்கு போயிருக்கிற?” என்று கேட்டாள்.
கவிழையா அருகிலிருப்பதை பார்த்துவிட்டு தன் தங்கையிடம் “மதுரா ஏற்கனவே உன் அண்ணியை அவளிடம் கேக்காமலே நான் கல்யாணம் செய்து என்னுடன் கூட்டிவந்ததுக்கு என் மேல் கோபமாக இருக்கிறாள்.
இந்த நிலையில நான் நம் வீட்டுக்குகூப்பிட்டுப் போனால் நம் அம்மாவும் அப்பாவும் ஏதாவது அவளை பற்றி தவறாகப் பேசிவிட்டால் அவ்வளவுதான் என் கல்யாணக் கதை முடிந்தது.
அதனால் உன் அண்ணியை நான் இப்பொழுது அவளுக்காக வாங்கியிருக்கிற புதுவீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறேன்” என்றான்.
அவன் பேசப்பேச மதுராவிற்கு டென்ஷனில் வாயில் வார்த்தை வர மறுத்தது.
பின் தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவள், அப்போ உன்னை அண்ணிய காதலித்து கல்யாணம் முடிக்கலையா ? நீ என்ன லூசா? எப்படி அண்ணா ஒருவரை கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தமுடியும்?
கொஞ்சம் பொறுமையாக அண்ணியின் மனசுக்குள் நீ நுழைந்து பின் கல்யாணம் செய்திருக்கலாம்.
ஆனாலும் உன்னைக்கூட கல்யாணம் செய்ய ஒருத்தி மறுப்பாள் என்பதனை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்றாள்.
அவள் பேசுவதை உள்வாங்கியவன் “நீ சொல்வதுபோல் உன் அண்ணி காதலுக்கு பச்சைக்கொடி காண்பிக்கும் ரகம் இல்லை. அப்பா அம்மா பார்க்கும் மாப்பிள்ளையை கடவுளாக துதிபாடும் ரகம்.
அவளின் மனதிற்குள் நான் நுழைய, முதலில் நான் சமாதானப் படுத்தவேண்டியது அவளில் அம்மா அப்பாவைத்தான் என்றவன் அந்த வேலையை செய்யத்தான் உன்னை கூப்பிட்டேன்” என்றான்.
அவன் அவ்வாறு கூறவும், ‘’நான் என்ன அண்ணா செய்யணும்’’ என்று கேட்டாள்.
உடனே மஹிந்தன், நீ என்ன சொல்வாயோ ஏது சொல்வாயோ எனக்குத் தெரியாது.
நீ இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பி ரெடியாக இரு, கதிர் வந்து உன்னை ழையாவின் அப்பாவிடம் கூட்டிப்போவான்...
நீ அவர்களிடம் போய் இன்னும் இரு நாளில் நம் அம்மா அப்பாவுடன் வந்து எங்களின் கல்யாணத்திற்கு ரிசப்ஷன் வைப்பதற்கான தேதி முடிவு பண்ண பேசவருவார்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு அவர்களை சம்மதிக்கவை.
நாளை நாங்கள் இருவரும் சேர்ந்து பத்திரிக்கைக்கு எங்களின் பேட்டியைக்கொடுக்க போட்டுக்கொள்ள உன் அண்ணிக்கு டிரஸ் வாங்கிக் கொண்டு உனக்கு டிரஸ் டிசைன் பண்ணும் உன் காஸ்ட்யூமரையும் கூப்பிட்டுக் கொண்டு கதிருடன் இங்கு வா” என்று கூறினான்.
பார்வதி தன் வீட்டின் வாயிலிலேயே தன் மகளை எதிர் பார்த்துக் காத்திருந்ததால் வாசலில் கதிர் காரை நிருத்தவும் தன் மகள் தான் வந்துவிட்டால் என்று வேகமாக வாசலுக்கு வந்தாள்.
காரிலிருந்து தன் மகள் இறங்காமல் கதிர் இறங்கி தன்னை நோக்கி வருவதைப் பார்த்து “தம்பி நீங்கள் மட்டும் காரில் இருந்து இறங்குகிறீங்க என் மகளைக் காணோம்? என்று கேட்டாள்.
அதற்கு கதிர் பதில் சொல்லுவதற்கு முன் அவனுக்கு வந்த டென்ஷனை மறைத்துக்கொண்டு வெளியில் பார்வதியைப் பார்த்து வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் மேடம் வீட்டில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்று கூறினான்.
அவனது பதிலில் குழம்பிப்போன பார்வதி “அவள் இன்னும் வீட்டிற்கு வரவில்லையே தம்பி” என்றாள்.
கார் சத்தம் கேட்டவுடன் “கவி வந்துவிட்டாள் என்று கூறிக்கொண்டு வாசலுக்குப் போன பார்வதி யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதைப் கேட்ட ஈஸ்வரன், என்ன என்று பார்ப்பதற்காக வாசலுக்கு வந்தார்”
அந்த நேரம் விரைந்து வீட்டு வாசலுக்கு வந்த வருண் “அப்பா இவர் கதிர் என்றவன் வீட்டுக்குள்ளே போய் பேசலாமா சார்” என்று கதிரைப் பார்த்து கூறினான்.
வருண் தன்னைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னதும் கதிருக்கு அப்பாடா! என்றிருந்தது.
வீட்டிற்குள் வந்ததும் கதிர் தன்னிடம் இருந்த மஹிந்தன் கவிழையா கல்யாணப் பதிவு செய்த சான்றிதழை ஈஸ்வரனிடம் கொடுத்தான்.
“என்னது சார் இது என்று கேட்டுக்கொண்டே வாங்கியவர் அதை பார்க்கும் போது கதிர் கூறினான் “கவி மேடமும் எங்கள் பாஸ் மஹிந்தனும் கல்யாணம் முடிந்ததை பதிவு செய்த சான்றிதழின் நகல் சார்” என்று கூறினான்.
அவன் சொன்னதை அதிர்ச்சியுடன் கேட்டவர் அந்த சான்றிதழில் உள்ள பெயர்களை பார்த்தும் அவரால் அதை நம்பவோ ஏற்கவோ முடியாமல்.
“என் மகள் இப்போ எங்கே...? நீங்கள் கடத்தி வைத்திருக்கிறீர்களா? என் மகள் சம்மதத்துடன் ஒன்றும் இவ்வாறு நடந்திருக்காது” என்று கதிரின் சட்டையை பிடித்து உலுக்கிக் கேட்டார் .
---தொடரும்---