DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 256
தேடல் - 19
அவளின் வார்த்தைகள் அவனை பொசுக்கியது அதை கண்களில் கனல் வீச பிரதிபலித்தவன் ஆழ்ந்த குரலில் “என்னடீ சொன்ன.... உன்னை நான் சந்தேகப் படுவதாக என் மீது அடுத்த புகாரை சொல்றாயா? என்றவன்
“முடியல டீ, என்னால் முடியாதது எதுவும் இல்லையென்று உன்னை பார்க்கிற வரை கர்வமாக இருந்தேன்.
என்னைக்கு உன்னை பார்த்தேனோ அன்னைக்கே என் கர்வம் ஆட்டம் கண்டுடுச்சு.
நான் இதுவரை யாரையும் பார்த்து பொறாமை பட்டதில்லை வனித்தாவோட உன்னை நான் பார்க்கும் போது அவக்கூட நீ சிரிச்சு பேசியதால அவ மேல எனக்கு பொறாமை வந்துச்சு .
ரெஜிஸ்டர் ஆபீசில் என்மகள்னு உன் அப்பா என் முன் உரிமையா உன் பக்கத்தில் நிற்கும் போது பொறாமை வந்துச்சு உன் தம்பி என் அக்கா என்று உனக்கு சப்போர்ட்டா என்கூட சண்டை போடும் போது அவன் மேல் எனக்கு பொறாமை வந்துச்சு
அவங்க எல்லோர்கிட்டேயும் நீ என் ழையா, இந்த உலகத்துலேயே எனக்குத் தான் உன் மேல் அதிக உரிமைன்னு அவர்களிடம் காண்பிக்கணும் என்று எனக்கு ஆத்திரம் வந்துச்சு
அவங்க கூடவே நீ பேசுறதே எனக்கு பொறாமையை கொடுக்கும் போது அவன் அந்த தனுஷ் அன்னைக்கு உன் கூட உன் போனில் பேசியத என்னால் ஜீரணிக்க முடியும்னு நினைக்கிறாயா ழையா?
என்னடா இவன் சைக்கோ மாதிரி பேசறானேன்னு பார்கிறயா?, ஆமா நான் பைத்தியம் தான். உன் மேல் பைத்தியமாகத்தான் இருக்கிறேன். உன்னால மட்டும் தான் என் பைத்தியத்தை தெளிய வைக்க முடியும் .
எப்படின்னு நினைக்கிறயா? எனக்குரிய பிரச்சனை என்னனு உனக்கு புரியலையா சொல்றேன்டீ என் பிரச்சனை என்னனு சொல்றேன்
கல்யாண வாழ்க்கையில் மனசு ஒத்து வாழ்கிறவங்க தான் செக்யூர்டா பீல் பண்ணுவாங்க ஆனா நாம அப்படியா வாழறோம்...?
உன் விருப்பம் இல்லாமல் உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாமல்.... “நோ அதர் வே” என்ற நிலையில் உன்னை கட்டாயப் படுத்தி என்னிடம் கொண்டு வந்துருக்கேன் டீ,
அதனால் நான் அன் செக்யூட்ரா தான் பீல் பண்ண முடியும் . இப்போ நீ என் கூட வாழ ஆரம்பிச்சு இருந்தாலும் நான் உன்னிடம் கூறிய காதலுக்கு பதில் நீ இன்னமும் என்னிடம் உன் வாய் வார்த்தையால் சொல்லலை.
நோ அதர்வேன்ற காரணதிற்காகத்தான் இப்போ என் கூட நீ சேர்ந்து வாழ உன்னைத் தயார் படுத்தியிருக்க.
நீ உன் காதலை வார்த்தையால் என்று என்னிடம் சொல்றியோ.. என்னைப்போல் நீயும் காதலில் என் மேல் உள்ள தவறுகளை எல்லாம் தாண்டி என்னை முழுமனசோடு நீ ஏத்துக்கிட்டன்னு நான் உணருகிறேனோ. அன்னைக்குத்தான் என்னுடைய இந்த சஞ்சலம் போகும்.
அதுவரை நான் பேசுறது உன்னை காயப் படுத்தும். நீ பேசுறது என்னை குற்ற உணர்வுக்கு உள்ளாக்கும்”
என்றவன், ஓர் பெரிய ஆசுவாச மூச்சை இழுந்து விட்டவாறு “நான் என்ன பண்ண பேபி! நீ மட்டும் தான் என் மனைவி என்றும் உன் கூட மட்டும் தான் என்னால் வாழ முடியும்ணும் தெரிந்த பிறகு என்னால் உன்னைவிட்டு விலக முடியலையே !
உனக்கு விருப்பம் இல்லாமல் உன்னை கல்யாணம் செய்தால் இது போல பிரச்சனை நமக்குள் வரும் என்று தெரிந்து தான் நான் எல்லாம் செய்தேன். இதற்கெல்லாம் பயந்து என்னால் உன்னை விட்டுக்கொடுக்க முடியாது டீ !” என்றான்
அவனின் பேச்சை கேட்டவள் மனதில் பெறும் சூறாவளி ஏற்பட்டது ஏனோ கண் இரண்டும் அவளை அறியாமல் கண்ணீரைச் சொரிந்தது மனம் முழுவதும் சந்தோசமும் துக்கமும் சேர்ந்து ஏற்பட்டது
அவள் அறியாமல் அவனிடமே ழையா கூறினாள் “ஏன் மஹி முதலில் எனக்கு வில்லனாக அறிமுகமானீங்க? எனக்கு முதலிலேயே நல்ல காதலனாக ஏன் அறிமுகமில்லாமல் போனீங்க?
இப்போ என்னால் உங்க காதலை புரிந்து கொள்ள முடிந்தும் என் காதலை உங்களிடம் காண்பிக்க முடியலையே” என்றவள் கண்கள் மேலும் கண்ணீரை சொரிந்தது.
அவள் கண்ணீரை பார்த்ததும் அவளின் கண்ணீரை துடைத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“எனக்கு நம்பிக்கை இருக்கு பேபி, “உன்னால் முழு மனதுடன் எந்த வருத்தமும் இல்லாமல் என்னுடன் காதலாய் ஓர் நாள் குடும்பம் நடத்துவாய் ” என்ற நம்பிக்கை இருக்குது என்றான்.
அன்று மஹிந்தனின் வீடு பார்ப்பதற்கு சொர்க்கலோகம் போல் இருந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் விழாவிற்கு ஆட்கள் வரத் துவங்கிவிடுவார்கள் கவிழையாவின் அறையில் ழையாவின் கண்கள் வாசலில் தன்னையும் அறியாமல் மஹிந்தனை தேடி அழைந்தது .
இரண்டு நாட்களுக்கு முன் மஹிந்தனுடன் பேசிய பின் தன்னை அவனளவு தன்னால் காதலிக்க முடியுமா என்ற கவலையும், அவனின் காதலில் மூழ்கித்திலைக்க ஆசையும் அவளுள் பொங்கியது.
ஆனால் இந்த இரு நாட்களும் அவள் அவனை தேடினாலும் அவனை பார்க்கத்தான் அவளால் முடியவில்லை. இரவு நேரம் கழித்து தூங்குவதற்கு மட்டுமே அவன் அவர்களின் அறைக்கு வந்தான்.
பகலில் அவனை கண்களால் காண முடியவில்லை. இன்று தான் இவ்வளவு அலங்காரத்தில் இருக்கும் போது அவனின் பாராட்டுதலான ரசனையான பார்வைக்கு அவள் மனது ஏங்கியது.
இன்று விடியற்காலையிலேயே அவளின் அம்மா பார்வதியும் அப்பா ஈஸ்வரனும் தம்பி வருணும் அங்கு வந்து விட்டார்கள். உள்ளிருந்து வந்த பார்வதி கவி எதுக்கு வாசலில் நிக்கிற உனக்கு மேக்கப் போட்டுவிட்ட பெண் வேர்க்காமல் இருக்கனும் என்றாள். நீ சும்மா சும்மா அலைந்து கொண்டே இருந்தால் வேர்த்துவிடும் வா.. இப்படி உட்கார்” என்றார் .
“அம்மா நீங்க வந்தபோது அவரப் பார்த்தீங்களா? கீழ தானே இருக்கார்” என்று கேட்டாள் .
“மாப்பிள்ளை கீழதான் இருக்கார். . பியூட்டிசியன் இருக்கும் போது கதவை தட்டியது அவர் தான். .நீ ரெடியாகிக்கிட்டு இருக்கேன்னு சொன்னதும் பிறகு வருகிறேன்னு சொல்லிட்டார். இப்ப எதுக்கு அவரைத் தேடுற?” என்று கேட்டார்
பார்வதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கு பிரசன்னமான மஹிந்தனின் காதுகளில் பார்வதி கூறிய எதுக்கு அவரை தேடுற என்ற வார்த்தையை கேட்டதும் பார்வதி இருப்பதையும் பொருட்படுத்தாமல்.
“எதுக்கு பேபி என்னைத் தேடின” என்று கேட்டபடி அவளின் அருகில் வந்தவன் மேலும் மெருகேறித் தெரிந்த அவளின் அழகை கண்களில் மயக்கத்துடன் ரசித்தபடி அவளின் அருகில் அமர்ந்தான்.
மஹிந்தனின் குரல் கேட்டதும் முகம் பூவாய் மலர அவனை ஏறிட்டு ழையா பார்த்தாள் .பார்வதி வேகமாக எழுந்து கவி நீ காலை எழுந்ததில் இருந்து எதுவும் சாப்பிடலை மாப்பிள்ளைக்கும் உனக்கும் கிச்சனில் இருக்கும் வேலையாளிடம் சாப்பாட்டை இங்கேயே கொண்டு வரச்சொல்லிவிட்டு , கீழே நம் வீட்டு சார்பாக வந்தவர்களை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கீழே போகப்பார்த்தார்..
“அத்தை அப்படியே எனக்கு கிரீன் டீயும் கொண்டு வரச் சொல்லுங்க” என்றான். சரி என்னும் விதமாக தலையசைத்து சென்றுவிட்டார்.
அவர் சென்றதும், திரும்பவும் “எதற்கு என்ன தேடின பேபி?” என்று கேட்டான் அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் கூச்சத்துடன் தலையைக் குனிந்தபடி “இல்ல.... ரெண்டுநாளா உங்களை பார்க்கவே முடியலையா அதனாலத்தான் கேட்டேன்” என்றாள்
அப்போ ரெண்டு நாளா என்ன பார்க்காம தவிச்சு தேடியிருக்க அப்படித்தானே?” என்று முகத்தில் படர்ந்த சிரிப்புடன் உல்லாசக்குரலில் கேட்டான் .
“அய்யாவுக்கு நெனப்புத்தான் ,நான் ஒன்னும் உங்களைத் தேடலேயே சும்மா ஆளக் காணலையே என்று கேட்டா இவரத்தேடுனாங்களாம்” என்று அவள் குழைவாகக் கூறியதில் இருந்தே அவள் அவனை தேடினால் என்ற உண்மை அவனுக்கு தெளிவாகத் தெரிந்தது .
அவளின் சிணுங்கள் பேச்சு அவனுக்கு சிலிர்ப்பை தந்தது. இவளுக்கு இப்படிக்கூட பேசத்தெரியுமா? என்று ஆசையுடன் அவள் முகம் பார்த்தான்.
அவன் அவளிடம் இத்தனை நாள் தேடிய தேடலுக்கு இன்று பதில் கிடைத்துவிடுமோ என்ற ஆசையில் அவள் கண் பார்க்க அவன் முயன்றான் .
ஆனால் அருகில் இருந்தும் அவள் முகம் பார்த்து பேசாமல் நிலம் பார்த்தபடி இம்சை செய்தாள்
“ஏய்... ழையா! என்னை பார்த்துப் பேசு“ என்று அதிகாரமாய் பேச நினைத்தவன் குரலில் ஏனோ அத்தனை மென்னை இருந்தது .
இத்தனை நாள் அவனை எதிர்கொள்ளும் போது அவளின் பாஸ் அவன் என்ற நினைப்பிலும் ,பணத்திமிர் பிடித்த தான் நினைத்ததை சாதிக்கும் அடாவடிக்காரன் என்றும் அவனை எதிர்ப்பது ஒன்றே குறிக்கோளாய் இருந்தவளாள் தைரியமாக அவனை எதிர்கொள்ள முடிந்தது
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையில் நடந்த ஊடல் காரணமாக அவளிடம் அவன் வெளிப்படுத்திய அதிரடியான காதல் வார்த்தைகள் அவளை அவனின்பால் மொத்தமாக சாய்த்தது.
ஏனோ தன்னை நிர்பந்தத்தால் அவனிடத்தில் அவன் கொண்டு வந்திருந்தாலும் இப்பொழுது அடம் மிகுந்த தனது கைப்பொருளை காப்பாற்றத்துடிக்கும் பிடிவாதக் குழந்தை மஹிந்தன் என்றே அவளுக்கு எண்ணம் ஏற்பட்டது .
அவன் காதலை தான் உணர்ந்த இந்த இரண்டு நாளிலேயே அவனின் முகம் பாராது தவித்த தன் மனதை கொண்டே அவளும் அவனின் பால் காதலில் விழுந்து விட்டோம் என்பதை உணர்ந்தாள்
உணர்ந்தபின் அவனின் அருகாமைக்கும் அவனின் பார்வைக்கும் அவனின் தொடுகைக்கும் அவள் உள்ளம் ஏங்க ஆரம்பித்தது .
அவளின் மாற்றத்தை நேற்றே மஹிந்தன் உணர்ந்துவிட்டான். நேற்று காலை 9 மணிக்கு தன் ரூமில் மறந்து விட்டுப் போன முக்கியமான டாக்குமென்டை எடுப்பதற்காக வந்த மஹிந்தன் இயல்பாக தனது அறையின் கதவைத் திறந்தவனுக்கு ழையாவின் பாட்டுச் சத்தம் கேட்டதும் தான் உள்ளே போனால் அவள் பாடுவதை நிறுத்திவிடுவாள் என்று டக் கென்று அங்கிருந்த அலமாரியின் பின் மறைந்து நின்றான்.
அவன் காலையில் கழட்டிப் போட்ட டீசர்ட்டை தனது இரவு உடையின் மீது போட்டிருந்த ழையா படுக்கையில் அவனின் தலையணையில் அணைவுடன் படுத்திருந்தவள் எழுந்தபடி
நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
{என்று பாடியபடி சென்றவள் சுவற்றில் இருந்த அவனின் பெரிய உருவபடத்தின் வடிவை விரலால் வரைந்தபடி }
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
{என்று பாடியபடி அவனின்படத்தின்மீது சாய்ந்து}
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே...
இதோ.... துடிப்பு
{என்று பாடுகையில் அவள் உதடுகளும் துடித்தது}
உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள்
ஏதோ படிக்க –
{என்றவள் அந்த இடத்திலேயே சரிந்து அமர்ந்து}
மதுவின் மயக்கமே உனது மடிமேல் இனி
இவள் தான் சரணம் சரணம் –
{என்று பாடியபடி கண்மூடி இருந்தாள்}
மஹிந்தனுக்கு அவளை அப்படியே போய் எடுத்து அணைத்து அவளின் சரணம்தனை ஆராதனை செய்யவேண்டும் என்ற தாபம் எழுந்தது .
ஆனால் இப்பொழுது தனக்கிருக்கும் வேலையில் அவளை தொட்டால் விலகமுடியாது என்பதனை உணர்ந்து நாளை விழா வரையில் அவனை அவள் தேடுவதை கண்டு ரசிக்க பொறுமையாக இருக்க நினைத்தான் .
ஆனால் அவனின் இருப்பை அவனது மொபைலின் ஒலி கவிழையாவிற்கு காட்டிக்கொடுத்தது .மொபைலின் ஒலியில் டக் கென்று கண்ணை திறந்தவள் அலமாரியின் மறைவிலிருந்து அவளை பார்த்தபடி முன்னேறி நடந்து வந்த மஹிந்தனை பார்த்து கன்னம் இரண்டும் சிவக்க வெட்கத்துடன் அவன் பிடியில் மாட்டாமல் ஓடி மறைந்தாள். .
உதட்டில் உறைந்த சிரிப்புடன் தான் தேடிவந்ததை எடுத்தவன் வெளியேறினான். ஓடிச் சென்றவள் தன் பின்னால் அவன் வருவான் என்று பால்கனியில் நின்றவள் சிறிது நேரம் கழித்தும் அவன் வராததால் அறைக்குள் வந்தவள் அவனை காணாமல் சோர்ந்தாள்.
அதன் பின் இன்று தான் அவளின் முகம் காண முடிந்தது. மஹிந்தனுக்கு அவளின் சிணுங்கலும் ,வெட்கமும் நேற்றைய பாடலும் இன்றைய பிரத்யோகமான ஒப்பனையும் சேர்ந்து அவனை போதை கொள்ளச் செய்தது
அப்பொழுது “அண்ணா..” என்ற அழைப்புடன் ராசாத்தியை கையில் உணவு ட்ரேயுடன் கூப்பிட்டுவந்த மதுரா “உங்கள் இரண்டு பேருக்காகவும் கீழே எல்லோரும் காத்திருப்பது தெரியாமல் ரொமான்ஸா பண்ணிட்டு இருக்கீங்க.......!
ம்..கூம் இப்போ இரண்டு பேரையும் தனியே விட்டால் சரிப்பட்டு வராது. வாங்க நானே சாப்பாடு எடுத்துவைக்கிறேன் கீழே உங்களை கூப்பிட்டு வரச் சொல்லி அவசரப் படுத்துறாங்க.” என்றவள் பரிமாற ஆரம்பித்தாள்.
மஹிந்தன் தங்கையைப் பார்த்தவுடன் இயல்புக்கு வந்தது போல் பாவனை காண்பித்தான் ஆனால் ழையாவிற்கோ மதுராவின் கேலி பேச்சும் மஹிந்தனின் பார்வையும் சேர்ந்து அவனைப்போல் உடனே தன்னிலை அடைய முடியாமல் தவித்து விட்டாள்.
அவளின் தவிப்பை பார்த்து அவளை சமாதானப் படுத்தும் நோக்குடன் அவளின் கையை பிடித்து அழுத்தி அவளுக்கு ஆறுதலளித்தான்.
உடனே ம்..கூம்... என்று தொண்டையை கனைத்த மதுரா உங்கள் ரொமான்சை எல்லாம் விழா முடிந்தபின் கண்டினியூ பண்ணுங்கப்பா, இப்போ ஸ்பீடா சாப்பிட்டு முடிங்க, கீழே எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று கூறினாள்
அதன் பின் அமைதியாக சாப்பிட்டவர்களை பார்த்தவள் தன்மொபைலில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்தபடி சாப்பிடுவதை மகிழ்ச்சியுடன் மொபைலில் கிளிக் செய்து மனம் சந்தோசமடைந்தாள் .
கீழே இறங்கி விழா நடக்கும் இடத்துக்கு ழையாவின் கைக்கோர்த்து அழைத்து வந்தான் மஹிந்தன்
மேடையேற வரும் பொழுது வழியிலேயே மைக்கை எடுத்தவன் ஒரு கையில் அவளை பற்றி அவள் முகத்தை பார்த்தபடி ஏறிக்கொண்டே நேற்று அவள் பாடலை விட்ட இடத்தில் இருந்து பாடத்துவங்கினான்
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் ....
நரகம்... சரணம் சரணம் –
என்று பாடியவன் ம்.. சேர்ந்து பாடு பேபி என்றவன் அவளின் மேல் கை போட்டு இருவருக்கும் பொதுவாக மைக்கை பிடித்ததும்
நானேநானா யாரோதானா?, மெல்லமெல்ல மாறினேனா?.
தன்னைத்தானே மறந்தேனே, என்னை நானே கேட்கிறேன்.
கோரசாக பாடிமுடித்தனர் அங்கு பெறும் கைத்தட்டல் ஒலி எழுந்தது அப்பொழுது கதிர் மேடைக்கு வந்து அவனிடம் ஒரு கவரை கொடுத்து விட்டு நகர்ந்தான்
அதில் இருந்த ரெட் ரோஸ் ஒன்றையும் ஓர் மோதிரப் பேழையையும் எடுத்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “பெண்ணே என் மேல் பிழையை மன்னித்து ஏற்றுக்கொண்டதுக்கு என்னுடைய சின்ன பரிசு” என்றவன்
முட்டிபோட்டு நின்று “ஐ லவ் யூ ழையா” என்று கொடுத்தான் அவனது கண்ணை பார்த்துக்கொண்டே தன் கண்களில் காதலை பிரதிபலித்தபடி “மீ டூ” என்றவள் விரல்பிடித்து தான் முதல் முதலாக் என்கேஜ் மெண்டுக்கு வாங்கிய மோதிரத்தை ழையாவிற்கு போட்டுவிட்டான்
ஐஸ்வர்யாவை தனது வாழ்க்கைத் துணையாக தன் வீட்டில் தேர்ந்தெடுத்தபோது தான் பார்த்து பார்த்து வாங்கிய மோதிரம் அவளுக்கு பொருந்தவில்லை அது தன் வாழ்க்கையில் இப்போ ழையா பொருந்தியது போல் அவளின் விரலுக்கும் பொருத்தமாக இருந்தது
அதனை பார்த்து அங்கிருந்த இளைஞர் கூட்டம் ஓ...... என்று சத்தமாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் .
அப்பொழுது மஹிந்தனும் ழையாவும் சுற்றுப்புறம் உணர்ந்து வெட்கமுடன் தங்கள் பார்வையை விளக்கி தரையைப் பார்த்து குனிந்து நின்றனர்
மஹிந்தனின் வெட்கம் பார்த்த மதுரா ஐ!..... என் அண்ணன் வெட்கப்பட்டும் போது எவ்வளவு அழகாக இருக்கிறான் என்று கேலி செய்யவும் அனைவரின் முகத்திலும் புன்னகை தோன்றியது .
மஹிந்தனால் கண்களை அவளை விட்டு அகற்ற முடியவில்லை. மேடைக்கு வந்தவர்களிடம் கைகுலுக்கியபடி வாழ்த்துக்களை ஏற்றாலும் அவனது கண் அவனை அறியாமலே நிமிடத்துக்கு ஒரு முறை அவளை ரசிப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
அருகில் நிற்பவனின் முகம் பார்க்க அவளுக்கு ஆசை பிறந்தது ஆனால் தன்னை கண்ணெடுக்காமல் அவன் பார்ப்பதை உணர்ந்தவளுக்கு நேரடியாக அவனின் முகம் காண தடுமாற்றம் ஏற்பட்டது.
மதுராதான் தன் அண்ணனின் பார்வையையும் அண்ணியின் முகச் சிவைப்பையும் கண்டு “ம்...நடத்துங்க.. நடத்துங்க…” என்று கலாய்த்து கொண்டிருந்தாள்.
வருணின் நண்பர்கள் சிலபேர் மஹிந்தனின் கம்பெனியில் வேலைக்குச் செல்வதையே ஆம்பிசனாக வைத்திருந்தனர். அவர்களின் முன் அது தன் அக்காவின் கணவன் என்று கூறுவதில் பெருமை பொங்க நின்றான் .
அதிலும் வருணிடம் மஹிந்தன் காண்பித்த பிரியத்தில் வருண் பூரித்துப் போனான். பார்வதிக்கும் ஈஸ்வரனுக்கும் அந்த விழாவின் மூலம் தன் மகள் வாழப்போகும் இடத்தின் செல்வாக்கை பார்த்து தாங்கள் தேடி முடித்திருந்தால் கூட இது போன்ற இடத்தில் தங்கள் மகளை மருமகளாக அனுப்ப முடித்திருக்காது என்ற உண்மை புரிந்தது .
மேலும் சுபத்ரா கூட அந்த சபையில் தங்களை அவளின் சம்பந்தி என்று மற்றவர்களிடம் மரியாதயாக அறிமுகப்படுத்தியது நிறைவைக் கொடுத்தது.
அங்கு வந்த வனித்தாதான் மேடைக்கு வந்ததும் வெளியில் சிரித்தது போல் காண்பித்துக்கொண்டாலும் ழையாவிடம் “ஏன்டீ ஒரு போன் கூட உன்னால் பண்ண முடியாதா டீ! நான் தான் லூசு போல் உனக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று புலம்பிக்கொண்டு இருந்தேன் ஆனா நீ பெரிய ஆளானதும் இவளெல்லாம் எனக்குத் தேவையில்லைனு இருந்துட்ட.
ஆனா அம்மா அப்படி இல்லை டீ ,என் வீட்டிற்கே வந்து என்னை கையோட கூட கூப்பிட்டு வந்துட்டாங்கடீ” என்று பொரிந்து கொண்டிருந்தாள்.
அவள் பேசுவதையும் பதில் கூற முடியாமல் விழித்துக் கொண்டிருந்த ழையாவையும் பார்த்த மஹிந்தன், வனித்தாவிடம்
“சிஸ்டர் என் பேபி பாவம் அவள் உங்க கூட பேசாம இருக்க நினைக்கலை அவளின் பழைய போன் மிஸ் ஆகிடுச்சு.. சோ! உங்களை காண்டாக்ட் செய்ய முடியல”என்றவன்
அவளின் மொபைலை வாங்கி அதில் இருந்து ழையாவின் இப்போதைய நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து “இதை பதிந்து கொள்ளுங்கள். இனி தினமும் எனக்கு டிஸ்டபென்ஸ் இல்லாமல் என்னுடன் என் வொய்ப் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரம் நீங்கள் தாராளமாக உங்க பிரண்ட் கூட அரட்டை அடிக்கலாம்” என்றான்.
அங்கு வருவதற்கு முன்புவரை தன் தோழி கவியை கஷ்டப்படுத்திய வில்லன் மஹிந்தன் என்று அவனை மனதுக்குள் வசவால் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தாள்.
உள்ளே நுழைகையில் கதிரை பார்த்தவள் மஹிந்தன் கூட பார்த்த அல்லக்கை தான இது என்று அவனை முறைத்துப் பார்த்தாள்.
அதுவரை வனித்தாவை கண்டுகொள்ளாமல் இருந்த கதிர், அவள் தன்னை முறைத்துப் பார்த்ததும் சுவாரஸ்யத்துடன் அவளை பார்வையிட ஆரம்பித்து விட்டான் .
மேடையில் வனித்தாவுடன் பேசும்போது அவளை சாப்பிட கூப்பிட்டுப் போகச் சொல்ல கதிரை கண்களால் தேடினான். .
அப்பொழுது கதிர் வனித்தாவை சுவாரஸ்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த பார்வையும் வனித்தா இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அடிக்கடி பார்வையால் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்ததும் பார்த்து ஆச்சரியமாகிப் போனான் மஹிந்தன்
ஏனெனில், கதிரின் பார்வை பெண்களின் மேல் திரும்பி இது வரை அவன் பார்த்தது இல்லை. ஏனோ அவனின் பார்வை முதலில் தான் ழையாவை பார்வையிட்டதை நினைவுபடுத்தியது .
கையசைத்து கதிரை அழைத்தான் மஹிந்தன். அருகில் வந்தவனிடம் ழையா வனித்தாவிடம் பேச்சில் ஐக்கியமாகிய நிமிடங்களை பயன்படுத்தி கதிருக்கு மட்டும் கேட்குமாறு , “என்னடா! ழையாவின் பிரண்டை இந்த பார்வை பாக்குற, என்ன நீயும் கவுந்துட்டயா?” என்று கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் “இல்ல பாஸ் அது தான் உள்ள வந்தததில் இருந்து என்னை முறைச்சு.. முறைச்சு பாக்குது! அதுதான் தனியாமாட்டுச்சுன்னா ஒரு வெரட்டு வெரட்டலாம்னு பாக்குறேன்”, என்றவனின் பார்வை மட்டும் அவளிடமே இருந்தது.
அவன் கூறியதை யோசனையுடன் பார்த்த மஹிந்தன் “ம்......கூம் அந்த தப்பை மட்டும் செய்திடாத கதிர்.அப்படி செய்தால் பின்னாடி என்னை போல் நீயும் உன் மனம் விரும்புபவளின் வெறுப்புக்கு ஆளாகிடுவன்னு நான் சொன்னா கேட்கவா போற எல்லாம் பட்டுத்தான் திருந்தி அனுபவிக்கணும்" என்றவன் .
“நான் சொல்வதை நிதானமா யோசி...கதிர்ர். இப்போ அவங்களை சாப்பிட கூப்பிடுப் போ” என்றான்.
ரிசப்ஷன் முடிய இரவு நேரம் ஆனதால் ழையாவின் அம்மா அப்பா மற்றும் வருணை மஹிந்தன் கீழே இருந்த அறைகளில் தங்குமாறு கூறியிருந்தான் முக்கியமான விருந்தாளிகளை விடை கொடுத்து அனுப்பிவைக்கும் போது ழையாவையும் தன்னுடனே கை பிடித்தவாறு அங்கும்மிங்கும் சென்று கொண்டிருந்தான் மஹிந்தன் .
ழையா நேரம் ஆனதால் மிகவும் களைத்து போய்விட்டாள். அவளின் முகம் பார்த்து, “பேபி!.. என்ன ரொம்ப டையர்ட் ஆகிடுச்சா நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு”, என்றவன் அவளை தங்கள் அறைக்கு கூட்டிவந்து தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு அவன் மார்பில் சரண் புகுந்திருந்தவளின் நாடியை ஓர் கையால் நிமிர்த்தி அவளின் கண்ணோடு தன் கண்ணை உறவாடவிட்டான்.
அதில் தான் தேடும் காதல் கசிந்ததால் அவன் மனது அமைதியடைந்தது. அவன் தொழிலில் பெற்ற வெற்றிக்குக் கூட இந்த அளவு அவனுக்கு சந்தோசத்தை தந்ததில்லை. தான் தேடிய காதலை அவள் கண்களில் கண்டவன் “தேங்க்ஸ் பேபி....” என்று கரகரப்பான குரலில் கூறியவன் அவளின் இதழில் இதழ் பொருத்தினான்.
அவன் கைகளில் அவளின் எதிர்ப்பில்லாத சரணாகதியில் சொர்க்கலோகம் கை சேர்ந்த மிதப்பு ஏற்பட்டது. பூலோகம் இறங்க மனமில்லாமல் பறந்தவன் திடீரென்று ஏதோ நினைத்தவனாக அவளிடம் இருந்து சடனாக விலகினான். தன்னை நிலைபடுத்திக்கொண்டவன் பின் ழையாவிடம் ஸ்வீட்டி கீழே எல்லோரையும் அனுப்பிவச்சுட்டு வருறேன்”, என்றவன் கீழே சென்றான்.
அவன் கீழே சென்றதும் அவளின் உடைகள் அடங்கிய பேக்கை நேற்று இரவு அங்கு கொண்டு வந்து வைத்திருந்ததை இன்னும் அவள் அலமாரியில் அடுக்கவில்லை.
இன்னும் ஓர் நாள் கழித்து திரும்பவும் தன்னை முதல்முதலாக அவன் கூட்டிச்சென்ற அவளுடன் அவன் வாழ்ந்த அந்த வீட்டிற்குத்தானே செல்லப் போகிறோம் திரும்ப கொண்டுப்போகவேண்டிய உடையை எதற்கு அடுக்குவானேன் என்ற நினைவில் பேக்குடன் அலமாரியில் வைத்துவிட்டதை வேகமாக எடுத்து மஹிந்தன் தனக்கு முதல் முதலாக வாங்கிய உடை அதில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தாள்.
அதில் கீழே ஓர் கவரில் அந்த உடையும் அதற்கு பொருத்தமாக அன்று அணிந்த நகையும் இருந்தது அதை பார்த்து மனதிற்குள் சிரித்தவள் கள்ளன் என்று செல்லமாக அவனை திட்டிவிட்டு உடுத்துவதற்காக எடுத்தாள்
மஹிந்தன் ஒருமணி நேரம் சென்று தனது அறைக்கு வந்தவன் ழையா உடுத்தியிருந்த உடை கண்ணில் பட்டவுடன் தன்னவளின் சரணம் முழுமையானது என்று தெரிந்து மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.
அவன் அன்று சொன்ன இனி எப்பொழுது இந்த உடை உடுத்தி சம்மதத்தை எனக்குச் சொல்கிறாயோ அதன் பிறகுதான் உன்னைத் தொடுவேன் என்று கூறியதை நினைவில் வைத்து தன் சம்மதத்தை கொடுத்தவளை ஆசையுடன் நெருங்கினான்.
அவள் அவனின் அணைப்பில் இசைந்து நின்று அவனின் பைத்தியத்திற்கு தன்னை வைத்தியமாக கொடுக்க சித்தமானாள். அங்கே இனிய தாம்பத்யம் ஒன்று ஆரம்பமானது .
(சிறப்பு பகுதி அடுத்த ud ல்)
----முற்றும்---