DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 265
தேடல் - 18(1)
சாப்பிட்டு முடித்தபிறகு மஹிந்தனிடம், மாமா.. என்று ஒட்டிக்கொண்ட வருணிடம் மஹிந்தன் ழையாவின் பழைய போட்டோக்களை காண்பிக்குமாறு கேட்டான்.
அதை காண்பிக்க ரூமிற்குள் கூட்டிச் சென்றதும், ழையா தன் அம்மாவிற்கு உதவியாக சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுங்கவைக்க உதவிக்கொண்டிருந்தாள்.
பார்வதி அடுப்படிக்குள் தன் மகள் நுழைந்ததும், கவி.... என்று பாசத்துடன் அவளின் கன்னம் வருடி கலங்கிய கண்களுடன் எப்படி இருக்க கவி! உன் வீட்டில் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே?
உன்னை இப்படி டார்ச்சர் செய்து கல்யாணம் செய்துகொண்ட மாப்பிள்ளை... எப்படி பட்டவரோ..? என்று பயந்துபோய்தான் இருந்தேன்,
ஆனால் எனக்கு அந்தபயமெல்லாம் மாபிள்ளையை இன்னைக்கு நேரில் பார்த்ததும் போயிடுச்சு.. உனக்கு பக்க பலமாய் அவர் இருக்கிறதை நான் கண்கூடாகப் பார்த்துட்டேன்
நீயும் நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு மாப்பிள்ளையுடன் விரைத்துக்கொண்டு இருக்காதே.... அவரின் மனம் நோகாமல் நடந்து கொள்.
மேலும் மாப்பிளையின் அம்மா, உன்னிடம் சரியாக நடந்து கொள்ளாவிட்டாலும் அதை நீ பெரிது படுத்தாமல் போய்விடு என்றார்.
உடனே அம்மா நான் என்னம்மா தப்பு செய்தேன்! அவர் தானே என்னை ஏமாற்றி எனக்கே தெரியாமல் இத்தனையும் செய்து என்னை கல்யாணம் செய்தார்.
ஆனால் அவர்கள் நான் என்னமோ அவர்கள் மகனை மயக்கியது போல் பேசினால் எனக்கு கோபம் வராதா? என்றாள்
“உன் மேல் தவப்பில்லை ஆனாலும், மாப்பிள்ளை உன்னை அவரோட வீட்டிற்குத் தெரியாமல் , பெத்தவங்களிடம்... சம்மதம் வாங்காம தான் கல்யாணம் செய்திருக்கிறார்.
எனவே அவர்களின் கோபம் உன் மேல் வார்த்தைகளாக பாயும் அதை நீ பெரிது படுத்தாமல் இருந்தாலே சரியாகிவிடும்” என்று கூறிக்கொண்டிருக்கும் போது ....
அங்கு வந்த மஹிந்தன் தங்கை மதுராவிடம் இருந்து வரச் சொல்லி போன் வந்துவிட்டது என்று சொல்லி வந்தான்.
“அதற்குள்ளேயே கிளம்புறீங்களா தம்பி! “இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பலாமே” என்று கூறினாள் பார்வதி .
“மதுரா மதியம் சாப்பாடு ரெடியாகிடுச்சுன்னு வரச்சொல்லி போன் பண்ணிவிட்டாள் .
ழையாவை இன்னும் என் வீட்டிற்கு கூப்பிட்டுப் போகாதது வேறு எனது பெற்றோருக்கு வருத்தத்தை தந்திருக்கும்.
சோ..! இப்பொழுது கூப்பிடும்போதே போய்விட்டால் கொஞ்சம் அவர்களின் கோபத்தை குறைக்க முடியும் அதனால் தான் உடனே கிளம்புறோம்
அடுத்ததடவை ழையாவுடன் வரும் போது தங்கிவிட்டு போவதுபோல் வருகிறோம்”. என்று விளக்கமாக பார்வதிக்கு பதில் கொடுத்ததுடன் ழையாவை வா என்னும் விதமாக தலையசைத்தான்.
அதன் பின் பார்வதி ழையாவிடம் “அப்போ சரி ,கவி! நீ மாப்பிள்ளையுடன் கிளம்பு. உன் ரூமில் உனக்கு இன்னும் சில புது உடைகளுடன் கூடிய பேக் வைத்துள்ளேன், அதையும் எடுத்துக்கோ” என்றாள்
“ழையா மனதில் மருண்டபடி பார்வதியின் கையை பிடித்தவள், இவங்க அம்மாவை நினைத்தால் அங்கு போகவே பயமாக இருக்குது.
அவர்கள் எதுவும் என்னையோ நம் வீட்டையோ தவறுதலாக பேசினால் கட்டுப்படுத்தமுடியாமல் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடுவேனோ..? என்று பயமா இருக்கிறது” என்றாள் .
அவள் பயத்தினை தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் தன் அம்மாவைப்பற்றி பார்வதியிடம் கூறியது மஹிந்தனுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது.
இருந்தாலும் அவள் பயப்படும்மாறு தன் அம்மாவே தான் நடந்து கொள்கிறார்களே! என்று விசனம் உண்டானது. இருந்தும் அதை வெளிப்படையாக அவனால் ஒத்துக்கொள்ள முடியாமல் அவனின் ஈகோ தடுத்தது .
எனவே, “நோ ழையா! அம்மா, என்மனைவிக்கு உரிய மதிப்பை கண்டிப்பாகத் தருவார்கள் நீ அனாவசியமாக பயப்படுகிறாய் ம்……ம் வா போகலாம்” என்று கடினமான குரலுடன் கூறியவன் முன்னால் நடந்தான்.
வாசல் வரை போனவன் ஈஸ்வரனிடம் வருணிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பவில்லை என்பதை ஞாபகம் வந்தவனாய் ழையா பின்னால் வருகிறாள் என்ற நினைவில் ழையா உன் அப்பாவிடமும் தம்பியிடமும் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று சொன்னபடி திரும்பினான்
ஆனால் ழையா அவன் பின்னால் வராமல் தன் அம்மாவிடமும் அப்பாவிடமும் பொங்கும் கண்ணீருடன் பேசிகொண்டு இருந்ததை பார்த்தவனுக்கு மனம் துடித்தது.
பார்த்தவன், கண்களை அவளை விட்டு விளக்காமல் இருந்தவனுக்கு அவளுடைய கண்ணீர் அவனை பாதிப்பதை உணர்ந்தான்.
மனதிற்குள் நோ பேபி... நீ ஆறுதல் தேட என்னைத்தான் தேடவேண்டும். நீ வருத்தப்பட்டால் என் மனம் வலிக்கிறது. அப்படியிருக்க நான் உன் மீது பித்தாக இருக்க நீ என் அன்பை புரிந்து கொள்ளாமல் என்னுடன் வர பயந்து கண்ணீருடன் நிற்கிறாயே... உன் மனம் என்னை தேடும் நாள் என்றோ? என்ற ஏக்க பார்வை பார்த்துக்கொண்டே இருந்தான்.
அவளை அணைத்து பார்வதி, தங்களை விட்டு தன் மகள் பிரிந்து போவதையும், பிடிக்காத மாமியாரின் வீட்டில் தன் மகள் ஏதேனும் கஷ்டப்படுவாளோ? என்று கலக்கத்தில் தொண்டை அடைத்தது.
தான் கண் கலங்கினால் ழையா மேலும் பயந்து விடுவாள் என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,
“அழக்கூடாது கவி இனி அதுதான் இனி உன் வீடு உன் அம்மா நான் கோபத்தில் உன்னை திட்டினால் பொறுத்துப்போகமாட்டாயா?
அதுபோல் உன் அத்தை ஏதேனும் கூறினாலும் பெரிதுப்படுத்தாமல் போய்விடவேண்டும். காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்”
என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவர்,
“பார்! மாப்பிள்ளை உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்., போய்வா!” என்று கூறியதும் தன் அம்மா அப்பாவின் பாதம் பணிந்து தன் தம்பியிடமும் விடைபெற்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மஹிந்தனுடன் வந்து காரில் ஏறினாள்.
காரில் ஏறியவளின் முகத்தில் இருந்த கலக்கத்தை போக்க வேண்டும் என்று மஹிந்தனுக்கு ஏக்கம் பிறந்தது. ஆனால் அவள் தன்னிடம் அடைக்கலமாகாமல் அவள் அம்மாவிடம் ஒன்றியத்தை நினைத்தவனுக்கு நேரிடையாக அவளை சமாதானப் படுத்துவதற்கு ஈகோ தடுத்தது
எனவே அவளை வம்பிழுப்பதன் மூலம் அவளின் கவனத்தை திசை திருப்ப நினைத்தான்.
“பேபி வீட்டிற்கு போவதற்கு முன் உனக்கு செப்பல் அடியில் ஸ்டூல் அட்டாச் ஆனது போல் ஒரு சில ஜோடி செருப்புகளை கடையில் வாங்கிவிட்டு போகலாமா...?” என்று கேட்டான்
அவன் திடீர் என்று அவ்வாறு கேட்டதும் புரியாமல் என்ன சொன்னீங்க என்று கேட்டவளிடம் “இல்ல நீ குட்ட கத்திரிக்காய் என்று வருண் சொன்ன பிறகுதான் ,என் அருகில் நீ நிற்கும் போது என் ஷோல்டருக்கு கூட இருக்க மாட்ட என்பதை கவனித்தேன்.
அதனால் எனக்கும் உன் தம்பி போல் உன்னை குட்ட கத்திரிக்காய் என் கூப்பிட தோன்றும்.... அப்படி கூப்பிட்டால் என் பேபிக்கு கோபம் வரும் எனத் தெரியுமே...என்று சொல்லிக்கொண்டே போனான்
அவன் தன்னை குள்ள கத்தரிக்காய் என்று சொல்லியதை கண்டு கோபம் பொங்க அவனை பார்த்துக்கொண்டு இருந்த ழையாவின் கண்கள் அவனை முறைத்தது .
“அதனால் உனக்கு ஹைய் ஹீல்ஸ் செப்பல் வாங்குவோமா? என கேட்டால் என்னை ஏன் முறைக்கிற?” எனக் கேட்டான்
“ஹலோ.... நீங்கலெல்லாம் நெடு மரமா வளர்ந்துட்டீங்க அதுக்கு மத்தவங்களை குள்ள கத்தரிக்காய்னு கிண்டல் பண்ணுவீர்களோ…?” என்று வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போனாள்
உடனே மஹிந்தன், “அப்படினா நீ குள்ள கத்தரிக்காயில்லை. இந்த மஹிந்தனுக்கு பொருத்தமான ஜோடிப்புறான்னு சொல்ற அப்படித்தானே?” என்று தூண்டில் போடுமாறு பேச்சை கொண்டு போனான் .
அவன் அவ்வாறு பேசியதும் பதில் பேசாமல் அமைதியானாள். உடனே மஹிந்தன் “என்ன டீ பதிலுக்கு பதில் பேசுன. இப்பொழுது மட்டும் அமைதியாகிட்ட?” என்றவன் அவளை திரும்பிப்பார்த்தான்.
அவன் கேட்பதற்கு அவள் வெளிப்படையாக பதில் கூறாவிட்டாலும் மனதிற்குள் இவர் அருகில் நின்றால் குட்டையாக இருப்போமா...? என்ற யோசனையுடன் அவளும் அவனை திரும்பிப்பார்த்தாள்
அவளின் கண்களை பார்த்ததும் எப்பொழுதும் போல் மஹிந்தனுக்கு அக்கண்கள் தன்னை காதலாக பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது
எனவே ஊடுருவி அவள் பார்வையோடு தன் பார்வையை கலக்கவிட்டு அவளின் மனதில் உள்ளதை படிக்க முயன்றவன், மென்சிரிப்புடன், ஒரு கையில் தனது ஐ போனை எடுத்து அதில் ஸ்கிரீன் பிக்சராக இருந்த இருவரின் புகை படத்தை காண்பித்தவன் இதை பார்த்த பிறகும் எனக்கு பொருத்தமான ஜோடி நீ மட்டும் தான் என்பது உனக்கு புரியலையா? ழையா?
என்றவன் கனவுகள் சுமந்த மந்தகாச சிரிப்புடன் “என் கைக்கு அடக்கமாக இருக்கும் உன்னைத்தான் எனக்கு புடிச்சிருக்கு ஆனால் மேடம் தான் கருணை காண்பிக்க யோசிக்கிறீங்க” என்று தாபத்துடன் கூறினான் .
அவனின் பார்வை தாபமாக தன் மீது பதியவும் தன் உதடு கடித்து பார்வையை திருப்பி ஒதுங்கி அவள் உட்கார்ந்ததும், போச்சுடா திரும்பவும் சுருண்டுகிட்டா என்று சலிப்புடன் நினைத்தான்
அவளின் ஒதுக்கம் அவனுக்கு கோபத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்றாலும் அதை வெளிப்படுத்தினால் திரும்பவும் அவள் மனம் தன்னால் காயப்படுமோ என்றும் அவன் பயந்தான்.
மேலும் தன் வீட்டிற்கு போகும் போது அவன் பெற்றவர்களின் முன்னிலையில் அவள் தன்னுடன் முகம் திருப்பிக்கொண்டு இருப்பதை அவன் விரும்பவில்லை எனவே பே....பி என்றான் .
அவனின் அழைப்பில் திரும்பி என்ன என்று பார்வையோடு அவனைத்திரும்பி பார்த்தவளிடம் எப்படி சொல்வது என்று தடுமாற்றத்துடன் நா....ன் நா...ன் ஒன்று சொல்வேன் அதற்கு நீ.......என்று சொல்வற்கு யோசனையுடன் நிறுத்தினான்
அவன் தயங்கி தயங்கி தன்னிடம் பேச முயல்வதை பார்த்தவளுக்கு இவருக்கு கூட இப்படி ஒருவரிடம் பேச தயக்கம் ஏற்படுமா? என்ற பிரமிப்பு உண்டானது,
அவள் பார்த்தவரை அவன் யார் முன்பும் இதுவரை எதற்கும் தயக்கத்துடன் பேசியதையோ கலக்கத்துடன் இருந்ததையோ இதுவரை அவள் பார்த்ததில்லை.
அவளுக்கே அவனின் தயக்கம் என்னவோ போல் இருந்தது அது அவனது கம்பீரத்தை குறைப்பது போல் . அப்படி குறைவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது ஏன்? என்று அவள் ஆராய்ந்து பார்க்க விரும்பவில்லை எனவே
இது என்ன தி கிரேட் எஸ்.வி.எம் ஒற்றை வாரிசு,இந்த நாடே பார்த்து வியக்குற பிஸ்னஸ் மேன் மிஸ்டர் மஹிந்தனா இப்படி பேச தடுமாறுவது” இப்படி இருப்பது உங்களுக்குப் பொருத்தமா இல்லை.
அது உங்களுக்கு அழகாகவும் இல்லை சோ ப்ளீஸ் இனி ஒருமுறை இதேபோல் யாரிடமும், ஏன் என்னிடம் கூட உங்களின் கம்பீரத்தை குறைக்குமாறு நடந்துகொள்ளாதீங்க என்று அவளை அறியாமலேயே அவனிடம் வாய் விட்டாள்.
அவள் அவ்வாறு பேசப் பேச அவனுக்கு மனதில் சந்தோசம் விரவியது.
அந்த சந்தோசத்தை அவளுடன் தனித்து செலவழிக்க அவனுள் ஆசை துளிர்த்தது.
எனவே சாலையோரத்தில் இருந்த மரத்தின் கீழ் காரை நிறுத்தினான்.
அவ்வாறு நிறுத்தியவன் அவளின் கண்களை காதலுடன் பார்த்தபடி குழைவுடன் “ஓகே பேபி உனக்கு பிடிக்காததை எதையும் இனி செய்யமாட்டேன்” என்று ஆசையுடன் அவளிடம் கூறினான்.
நான் என்ன உன்னிடம் சொல்ல வந்தேன்னா, வீட்டில அம்மா அப்பா முன்னாடி நம்ம ரெண்டு பேருக்குள்ள விலகள் தெரிவதை நான் விரும்பல.
நமக்குள் உள்ளதை ரூமோட நிறுத்திடுவோம் வெளியில் மத்தவங்களுக்கு முன்னாடி என் மனதில் உள்ளபடி நீ என் பெட்டர் ஹாப் என்பது மட்டும்தான் தெரியணும் ஓகே வா ழையா பேபி.
என்று கூறி முடிக்கும் போது அவளது கண்களில் அவன் எதிர்பார்க்கும் காதல் வழிவதை கண்டு கொண்டவனுக்கு அவனை கட்டுபடுத்த முடியாத தாபம் அவனுக்குள் உண்டானது.
“மை பேபி….! இப்போ உன் கண் என்னை காதலாக பார்க்குது, உன் கன்னம் என்னை டெம்ட் பண்ணுது உன் லிப்ஸ்..... ப்ளீஸ் வேணாம் என்று சொல்லிவிடாதே என்றவன் அவளை இழுத்து அவளின் உதடில் தனது உதட்டால் கவிதை எழுதினான்.
அதில் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து மூழ்கியிருந்த போது பக்கத்தில் சென்ற லாரியின் ஹாரன் ஒலியில் தன்னிலை அடைந்த இருவரும் விலகி அமர்ந்தனர்.
அவளின் கிறங்கிய கண்களும் சிவந்த இதழ்களும் அவனுக்குள் பேரலையை எழுப்பியது .அந்த சந்தோசத்தை தொடர இது ஏற்ற இடமில்லை என்ற காரணத்தை உணர்ந்தவன் அவனுடன் அவனின் வீட்டில் அவனது அறையில் அவனுடைய கைகளில் அவள் என்ற கற்பனையே அவனைத் தேன் குடித்த வண்டின் நிலைக்குத்தள்ளியது.
அவன் முகத்தில் மந்தகாசப் சிரிப்பு உண்டானது விடலைப் பையனைப் போல் விசிலடித்தபடி காரை விரட்டினான் வீடு நோக்கி.
அவனின் முத்தத்தால் சிவந்த இதழை நாவின் தடவளாலும், நலுங்கிய உடையை கைகளாலும் திருத்திவிட முயன்றவளால் அவனின் முகம் பார்க்க முடியாவிட்டாலும் பார்வையாலேயே தன்னை வேட்டையாடும் அவன் விழியின் வீச்சை அவளால் உணரமுடிந்தது.
அவளின் மேனி பயத்தாலும் எதிர்ப்பார்பாலும் குளிரும் வெயிலும் ஒரே நேரம் தாக்கிய கொடியெனத் துவண்டது.
அவளின் நிலையை அறிந்தவனோ ஒரு கையால் ஸ்டியரிங்கை சுழற்றிக்கொண்டே மற்றொரு கையால் எட்டி அவளை இழுத்து தன மீது சாய்த்துகொண்டவனுக்கு உலகமே தனது வசமானதும் அழகானதுபோலத் தோன்றியது.
வீட்டின் அருகே வரும் போதே “பேபி பீ ரிலாக்ஸ். வீ அல்மோஸ்ட் ரீச்சுடு அவர் ஹோம்.” என்ற மஹிந்தனின் வார்த்தையில் தன்னை மீட்டுக்கொண்டவளுக்கு இப்பொழுது அவனின் மீதான மயக்கம் தெளிந்து அவன் வீட்டின் சூழ்நிலை எப்படியிருக்குமோ என்ற பயம் சூழ்ந்தது.
அவளின் கண்களிலேயே அவளின் உள்ளத்தை படித்த மஹிந்தன் மனதிற்குள் ஷி ஹேவ் எக்ஸ்பிரஷ்ஷிவ் ஐஸ்’ என்றவன்.நான் உன் கூடவே இருப்பேன் டோன்’ட் பேனிக் பேபி” என்றான்.
அப்பெரிய மதில் சுவர்களுக்குள் கார் பிரவேசித்து அதன் ஓடுபாதையில் ஓடி வாசலில் நின்றது.
மதுரா கையில் ஆரத்தித் தட்டுடன் நின்றுகொண்டிருந்தாள் அவளைத்தொடர்ந்து விஸ்வநாதனும் சுபத்ரா பார்த்தீபனும் நின்றுகொண்டிருந்தனர் மற்ற வேலையாட்கள் எல்லோரும் ஆவலாக தங்கள் வீட்டின் சின்ன எஜமானனின் மனைவியை பார்ப்பதற்கு ஆவலுடன் நின்றுகொண்டிருந்தனர்.
மருண்ட விழிகளுடன் மஹிந்தனை ஒன்றியபடி காரிலிருந்து இறங்கிய ழையாவிற்கு சிரித்த முகத்துடன் நின்ற மதுராவை கண்டதும் அவளுக்கு மனதில் பரவிய இதம் அவளின் பின் நின்ற சுபத்ராவின் முகத்தை பார்த்ததும் விலகியதால் அவளின் கரம் அழுத்தத்துடன் மஹிந்தனின் கரத்தை பற்றியது.
அவள் தன்னிடம் இப்பொழுது அடைக்கலமாகி பயத்தை துறக்க முயன்றவளின் செயலை உணர்ந்த மஹிந்தனுக்கு அவனின் வீட்டில் தன்னை தவிர்த்து அவளின் பெற்றோரிடம் ஒன்றியதால் ஏற்பட்ட மனச்சுமையை இறக்கிவிட்ட ரிலீப் உண்டானது.
எனவே உரிமையுடன் அவளின் இடுப்பில் கைப்போட்டு தன்னுடன் சேர்த்து சந்தோசத்தை தாங்கிய முகத்தோடு ஆரத்தி எடுக்க நின்றான்.
அவனின் செயலில் முகம் சிவந்தவள் நெளிந்து அவனின் கையை இடுப்பைவிட்டு எடுத்து விட முயன்றபடி ஆரத்திச் சற்றும் மதுராவின் முகத்தைப்பார்த்து சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
அவளின் கூச்சத்தையும் தனது அண்ணனின் மகிழ்ச்சியான முகத்தையும் கண்ட மதுரா இரண்டுபேரும் வாழ்க்கையை துவங்கிவிட்டனர் என்று எண்ணி சந்தோஷமடைந்தாள்.
சுபத்ராவின் பார்வையிலேயே தன் வலதுகாலை எடுத்துவைத்து வரச்சொல்வதை புரிந்தவள் அவ்வாறே செய்தாள்.
உள்ளேவந்தவளுக்கு அந்த வீட்டை வெளியில் இருந்து பார்க்கும் போதே சுற்றி இருந்த விஸ்தாரமான அமைப்பே அவளை வியக்கவைத்திருந்தது என்றால் உள்ளே நுழைந்தவள் அதன் பிரமாண்டத்தை கண்டு ஒரு தனி நபரின் வீடாக அவனின் அரண்மனையை எண்ண முடியவில்லை ,
அவளின் தந்தையின் வீட்டில் வறுமையில்லாமல் வளர்ந்தவள் தான் தங்க நகைகளை அணிந்து மகிழ்ந்தவள் தான்,
அவளின் தோழிகளில் கார், பங்களாக்களில் வாழ்ந்தவர்களுடன் பழகி இருக்கிறாள்தான். எனினும் இது போன்ற பிரம்மாண்டமான அரண்மனைகளை படங்களில் தான் அவள் பார்த்திருந்தாள்.
மேலும் அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களின் பவ்யமும் மஹாராணியை போல் சுபத்ராவின் கண்ணசைவில் வேலைகளை செய்யும் பணியாளர்களின் பாங்கும் அவளுக்கு அந்தக்கால ராஜாக்களின் படங்களை பார்க்கும் சுவாரஸ்யம் ஏற்பட்டது.
மேலும் அந்த வீட்டில் செழுமை அவளை மிரட்டி மற்றவர்களிடம் இருந்து ஒதுங்க வைத்தது.
---தொடரும்---