My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

விழியோரத் தேடல் நீ Epi 17(1)

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
256
தேடல் – 17(1)

மஹிந்தன் காரைவிட்டு இறங்கி ஹோட்டலின் வாசலருகில் சென்றதுமே எதிர் நோக்கிவந்த குமரேசன்,

“வாங்க சார் நீங்கள் என்னை பார்க்க வரச் சொன்ன உடனேயே நான் கிளம்பி வந்துவிட்டேன்” என்று கூறியவரைப் பார்த்தவன் மரியாதை நிமித்தமாக கை குலுக்கினான்.

“குமரேசன்! நீங்கள் நான் சொன்னவுடன் வந்துவிடுவீங்க எனக்குத் தெரியும், வாருங்களேன் உள்ளபோய் உட்கார்ந்து நான் எதற்கு உங்களை பார்க்க வந்தேனென சொல்றேன்”, என்றான்.

அவரும் பவ்யமாக சரிசார், என்றவர் அவனுடன் உள்ளே அவர்களுக்காக புக் செய்திருந்த மேஜையில் சென்று அமர்ந்தார்.

“மிஸ்டர் குமரேசன் இந்த தடவை எங்கள் எஸ்.வி.என் ஸ்டீல் பாக்டரியின் ப்ளாஸ்ட் பர்னேன்ஸ் ஸ்லாக்( ஊதுலை கசடு) டெண்டரை உங்களுக்கு தர முடிவு செய்திருக்கிறேன்”, என்றான் .

அவன் கூறியதை கேட்ட குமரேசனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவனுடைய ஸ்டீல் பாக்டரி கழிவு டெண்டர் தன்னைப் போன்றவர்களுக்கு கிடைப்பதால் தன்னுடைய பிஸ்னெஸ் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்பதை உணர்ந்தவர்.

எனவே, கடந்த நான்கு ஐந்து வருடமாக அவரும் அந்த டெண்டரை கைப்பற்ற பெறும் முயற்சி செய்து கொண்டிருந்தார் இருந்த போதிலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை .

இந்த நிலையில் ஸ்டீல் பாக்டரியின் எம்.டி.மஹிந்தனே தன்னிடம் வந்து அந்த டெண்டரை உங்களுக்குத் தருகிறேன் என்றதும் மகிழ்ச்சி பிடிபடவில்லை குமரேசனுக்கு .

அவர் முகத்தில் வந்த மகிழ்ச்சியின் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்த மஹிந்தன், ஆனால்! அதற்கு நீங்கள் எனக்கு ஓர் உறுதி கொடுக்க வேண்டும் என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும், “சொல்லுங்க சார் நான் என்ன செய்யணும்” என்று குழப்பத்துடன் கேட்டார்.

ஏனெனில் தான் ஒரு பிஸ்னஸ் மேன் என்றாலும் மஹிந்தனின் பிஸ்னஸ் சாம்ராஜ்யத்தின் முன் தன்னுடையது கடுகளவு தான் இருக்கும். அப்படிப்பட்டவனுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி அவர் மனதில் உண்டானது .

அவரின் கேள்வியை பார்த்து சிரித்தபடி “நீங்கள் பயப்படுமாறு எந்த உதவியையும் உங்களிடம் நான் கேட்கப் போவதில்லை .சொல்லப் போனால் நீங்கள் எனக்கு கொடுக்கும் இந்த உறுதியால் இலாபம் உங்களுக்குத்தான் அதிகம்.

நான் ஜஸ்ட் ஓர் இண்டர்மீடியேட்டர்தான் எனக்கு இதில் இலாபம் என்று பார்த்தால் என் பெர்சனல் லைப்பில் என் இமேஜை இந்த விசயத்தில் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவதால் உங்களுக்கு இப்படி ஓர் சான்சை கொடுக்கிறேன்” என்றான்.

உடனே குமரேசன் “முதலில் உங்களுக்கு நான் என்ன உறுதி கொடுக்கணும் என்று சொல்லுங்கள். என்னால் முடியுமானால் உடனே நான் சரிசொல்லிவிடுகிறேன் என்றார்.

“எனக்கு கல்யாணமான விசயமும் இக்கல்யாணத்திர்க்கு முன் ஐஸ்வர்யாவுடன் நடந்த நிச்சயதார்த்தம் முறிந்துவிட்ட விசயமும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்,

உங்கள் மகன் அஜய்க்கு எனக்கு நிச்சயம் செய்திருந்த ஐஸ்வர்யாவிற்கும் கல்யாணம் முடிக்க நீங்கள் சம்மதிக்க வேண்டும்” என்றான்

அவன் அவ்வாறு கூறியதும் “உங்களின் மோட்டார் கம்பெனியின் பங்குகளில் பெரும்பகுதி இப்பொழுது அந்த பெண் ஐஸ்வர்யாவின் வீட்டார்களின் வசம் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

இந்த நிலையில் உங்களுடனான அந்த பெண்ணின் திருமணம் நின்றதால் அதன் பங்கு விலை சரியப்போவதாக் கேள்விப்பட்டேன்.

இந்த சூழ்நிலையில் என் பையனை இதில் கொண்டுவருவதில் உங்களுக்கு என்ன இலாபம் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் குமரேசன் .

அவர் அவ்வாறு கேட்டதும் “எங்கள் மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் எப்படி அவர்கள் வீட்டாரிடம் அதிகம் போனது என்ற விபரம் உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் .

என் தங்கையை அவர்களின் குடும்பத்தில் தான் கல்யாணம் செய்து கொடுத்துள்ளோம். அதனால், என் தங்கையின் பேரில் இருந்த பங்குகளுடன் ஏற்கனவே அவர்களின் வீட்டார் வாங்கி இருந்த பங்குகளும் சேர்ந்ததால் தான் அவர்களின் ஷேர் எண்ணிக்கை அதிகரித்தது .

ஆனால் என் தங்கை இன்று மதியம் எனக்கு அந்த ஷேர்சை மாற்றிக்கொடுக்கப் போகிறாள். சோ! பங்குச் சந்தையில் கீழே போய்கொண்டிருக்கும் என் ஷேரின் மதிப்பு ஜெட் வேகத்தில் திரும்ப உயரப்போகிறது .

அதற்கும் உங்கள் பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் அந்த ஐஸ்வர்யாவிற்கும் உங்களின் மகனுக்கும் சம்மந்தம் உண்டு,

இப்பொழுது அந்த ஐஸ்வர்யாவின் வயிற்றில் உங்கள் மகனின் குழந்தை உள்ளது” என்றான் மஹிந்த்.

அவன் அவ்வாறு கூறவும் ஓர் நிமிடம் அதிர்ச்சியில் பேச வார்த்தை அவருக்கு வரவில்லை. பின் கோபமாக என்ன சார் நீங்கள் பெரிய பிஸ்னஸ் கிங்காக இருக்கலாம். அதற்காக என் மகன் மீது இவ்வளவு பெரிய பழியைப் போடலாமா?” என்று கூறினார்

அவர் அவ்வாறு சொல்லிக்கொண்டு இருக்கும் போது மஹிந்தனின் ஆட்கள் இரண்டு பேர் அஜய்யின் இருபுறமும் அவனை மிரட்டியபடி கூப்பிட்டு வந்து அவர்கள் இருந்த மேஜையின் அருகில் நிற்க வைத்தனர் .

மஹிந்தன் இப்பொழுது இருக்கும் அந்த ஹோட்டலின் பெரும்பான்மை பங்குகளின் சொந்தக்காரன். என்றாலும் அன்று அந்த ஹால் முழுவதும் அவன் புக் செய்திருந்ததால் அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த ஹாலில் இல்லை.

மேலும் அவர்கள் உள்ளே வந்ததும் அந்த ஹாலின் அனைத்து வாசலிலும் மஹிந்தனின் ஆட்கள் காவலுக்கு நின்றிருந்தனர் .

அப்பொழுதுதான் குமாரசாமி தன் மகனை மிரட்டியபடி கூப்பிடுவந்து தன் எதிரில் நிற்க வைத்ததும் தன்னை சுற்றி உள்ள சூழ்நிலையை கவனித்தார்.

“இந்த ஹோட்டளின் டாப் மோஸ்ட் ஷேர்ஹோல்டர். சோ, இப்பொழுது வேற யாரும் நம்மை டிஸ்டப் பண்ண மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் மகனிடம் ஐஸ்வர்யாவுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பு எப்படிப்பட்டதென கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றான் .

தன் தந்தையைப் பார்த்ததும் தலை கவிழ்ந்து நின்ற அஜயிடம் “இவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா?” என்று கேட்டார் குமாரசாமி .

உடனே அஜய், “டாட் அது அவளோட தவறு, ஐஸ்க்குத் தெரியும் நாங்கள் ரெண்டுபேரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் தானென. .சோ! அவள் பாதுகாப்பில்லாமல் என்னுடன் என்ஜாய் பண்ணி இப்படி ஆகிவிட்டாள்.

அதற்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும் குழந்தை பிறந்துவிடவில்லையே அபார்சன் பண்ணினால் பிரச்சனை முடிந்து விடப் போகிறது .நீங்கள் வொரி பண்ணிக்காதீர்கள்” என்று அவன் கூறி முடிப்பதற்குள் வேகமாக எழுந்த குமரேசன் அஜயின் கன்னத்தில் பளார் என்று ஓர் அரை கொடுத்தார் .

பின் மஹிந்தனைப் பார்த்து, “உடனே கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றவர்

விறுவிறு என்று வெளியேறினார். அவரின் பின்னாலேயே டாட்... டாட் என்று கூறிக்கொண்டே அஜயும் சென்று விட்டான்.

அஜயும் அவன் அப்பாவும் போவதை பார்த்துக்கொண்டே “பாவம் நல்ல மனுஷன் ஆனால் மகனை வளர்க்கத்தெரியவில்லை” என்ற மஹிந்தன்

தன் அப்பாவிற்கு போன்செய்து “எஸ்.என்.வி மோட்டார்ஸ் கம்பெனி போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்துவிடீர்களா?” எனக் கேட்டான். அதற்க்கு அவர், ஈவினிங் 5மணிக்கு அரேன்ஞ் செய்திருக்கிறேன் மஹிந்த் என்றார் .

“ஓகே டாட் நான் மற்ற வேலைகளை முடித்து சரியான நேரத்திற்கு மீட்டிங்கில் அட்டன் செய்திடுவேன்” என்று கூறி தொடர்பைத் துண்டித்தான் .

அதன் பின் அவனது வேலைகள் அசுரவேகத்தில் இருந்தது. பார்த்தீபன் கூறியபடி தன் மனைவி மதுராவின் பெயரிலிருந்த பங்குகளை மஹிந்தன் பெயருக்கு மாற்றி எழுதினார்கள்

மஹிந்தன் கொடுக்க இருப்பதாகச் சொன்ன கம்பெனியை தன் சகோதரி மதுராவின் பெயருக்கு அவர்களின் குடும்பத்தாரின் முன் மாற்றிக்கொடுத்தான்.

பின் ஐஸ்வர்யாவின் அப்பாவிடம், அஜய்யின் அப்பா நாளை ஐஸ்வர்யாவிற்கும் அஜய்குமான கல்யாணத் தேதியை முடிவு செய்ய அவர்களின் வீட்டிற்கு வருவதை தெரிவித்தான் .

மேற்கூரியவேலைகள் முடிய மாலை 4.3௦ ஆகிவிட்ட நிலையில் போர்ட் மீட்டிங் ஏற்பாடு செய்து இருந்த நேரத்தில் வீட்டுல் வேலை செய்யும் கஸ்தூரி வீட்டின் தொலைபேசியில் இருந்து அழைத்தாள்.

வீட்டின் நம்பரைப் பார்த்ததும் ழையாதான் கூப்பிடுகிறாள் என்ற ஆசையுடன் எடுத்தான்.

ஆனால், “ஐயா நான் கஸ்தூரி பேசுகிறேன், நீங்கள் போனதும் மேலே போன அம்மா கீழேயே வரலை நீங்கள் சொன்னதால் மதியம் சாப்பாடு எடுத்துப் போனேன் வேண்டாம்னு சொல்லி என்னை அனுப்பிட்டார்கள். அதனால் தான் என்னசெய்யனு தெரியாமல் உங்களுக்கு போன் செய்தேன்” என்றாள்

மஹிந்த் நேற்று கஸ்தூரியை கூப்பிட்டு நான் வெளியில் வேலையாகப் போய் இருக்கும் நேரத்தில், ழையாவைப் பத்திரமாகப் பார்த்துகொள்ளும் படியும் நேரத்திற்கு அவளை சாப்பிட வைக்கும் படியும் சொல்லியிருந்தான்.

எனவே அவள், இப்பொழுது ழையா சாப்பிடாத விஷயம் தெரிந்தால் எங்கே தம் முதலாளி தன்னை வைவானோ என்று அவனுக்குப் போன் போட்டு சொல்லிவிட்டாள் .

“ஓகே நான் அவளிடம் பேசிக்கொள்கிறேன், என்றவன் தொடர்பைத் துண்டித்து அவர்களின் அறையில் இருந்த தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான்” இன்னுமும் ழையாவின் மொபைலை அவளுக்கு கொடுக்கவில்லை

சிறிது நேரம் கழித்து போனை எடுத்த ழையாவின் குரலில் தூங்கி எழுந்தவளின் தூக்கக்கலக்கமான “ஹலோ” என்ற குரல் கேட்டது

“மை பேபி” என்ற அவனின் குரலில், சற்று நிதானித்தவள் “சொல்லுங்கள்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தாள் .

நீ மதியம் சாப்பிட கீழே வரலையாமே? ஏன் ? என்று கேட்டான் .

“நான் தூங்கிட்டேன்” என்று திரும்பவும் ஒரே வரியில் பதில் கொடுத்தாள்

“அதென்ன மதியம் சாப்பிட கூட போகாமல் ,போன் மணி ரொம்பநேரம் அடித்தும் கூட எந்திரிக்காமல் என்னத் தூக்கம்? ஆர் யூ ஓகே?” என்று கேட்டான்

உடனே கவிழையா, “எல்லாம் உங்களால்தான் நேற்று என்னால் தூங்கவே முடியவிலை, காலையிலும் சீக்கிரமாகவே எழுந்துட்டதால் எனக்கு இப்படி தூக்கம் தூக்கமா வந்துட்டது” என்றாள் .

பாவம் அவள் கூறியதன் அர்த்தமோ நேற்று இரவு அவனுடன் ஒரே அறையில் ஒரே பெட்டில் அவனுடன் தூங்க பயந்துகொண்டு இருந்ததை அவள் அந்த லட்சனத்தில் சொல்லிவைத்தாள் .

அவள் அவ்வாறு கூறியதும் “என்னாலா... பேபி!” அப்போ நான் உன்கூட என்ஜாய் பண்ணியது எல்லாம் கனவில் இல்லையா! உண்மையாகவே நமக்குள் எல்லாம் முடிந்துவிட்டதா பேபி” என்று குழைந்த படி கேட்டான் .

அவன் அவ்வாறு கேட்டதும் தான், அவள் கூறிய விதம், இன்னுமொரு அர்த்தத்தை உணர்ந்தவள் உதடு தந்தியடித்தது .

அதை தன் பற்களால் இருக்கி தன்னை சமாளித்துக் கொண்டவள், வார்த்தைகளில் எரிச்சலை வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டு கோபத்துடன் பேசுவதுபோல்

“இப்போ நீங்க எதற்கு கூப்பிட்டீர்களோ அதை மட்டும் சொல்லுங்கள், தேவையில்லாமல் பேசி என்னிடம் வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொள்ளாதீங்க” என்று கூறினாள் .

“நான் வம்பிழுத்தால் நீ என்னை கட்டிக் கொள்வாயா பேபி உன்னுடன் என்னை நீ கட்டிக்கொள்வதென்றால் நான் வம்பிழுத்துக் கொண்டே இருப்பேனே” என்றான் குழைவுடன் .

அவன் அவ்வாறு கூறியதும் விதிர்விதிர்த்துப் போன ழையா டக் என்று தொடர்பை துண்டித்தாள் .

அவளுக்கு முகம் சிவந்திருந்தது “அச்சோ இப்படிஎல்லாம் எப்படித்தான் இவனால் பேசமுடிகிறதோ?” என்று கோபத்துடன் சொல்லிக்கொண்டாள்.

இருந்தாலும் அவளின் மனதின் ஓர் ஓரம் அவனின் சரசமான வார்த்தைகள் அவள் அவனுக்கானவள் என்று தன் நெஞ்சில் தொட்டுக்கொண்டிருந்த மாங்கல்யம் அவளுக்கு உணர்த்துவதை அறிந்த அவளின் உடலில் எதிர்பார்ப்புடன் கூடிய ஓர் நடுக்கம் பிறந்தது .

அவளது உதடுகள் இவன் எனக்கு ஏன் வில்லனாக அறிமுகமானான் முதலிலேயே எனக்கு காதலனாக ஏன் அறிமுகமாகாமல் போனான். இப்பொழுது என்னால் மஹிந்தனை முழு மனதுடன் ஏற்கவும் முடியவில்லை.

ஆனால் கணவன் என்ற உரிமையில் என்னால் அவனை ஒதுக்கவும் முடியவில்லையே! “ஒருபுறம் மனது அவனுக்காக ஏங்குகிறது, மறுபுறம் அவனை வெறுக்கிறது” என்று தலையை பிடித்தபடி உட்கார்ந்தாள் .

திரும்பவும் தொலைபேசி ஒலி எழுப்பவும் தயக்கத்துடன் காதில் எடுத்து வைத்தவளிடம் “ஓகே ழையா உன் இஷ்டம் போல் நீ தூங்கலாம் ஆனால் அதற்கு முன் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு என்றவன்” ‘இச்’ என்ற சத்தத்துடன் தன் முத்தத்தை கொடுத்துவிட்டு தொடர்பைத் துண்டித்தான் .

இங்கு ழையாவிற்கு தூக்கம் பறந்து ஓடிவிட்டது. முகம் கழுவி கீழே சென்றவளை பார்த்ததும் வாயில் இருந்த அத்தனை பற்களும் தெரிவதுபோல் சிரித்த கஸ்தூரி,

“அய்யா சொன்னதும் தட்டாமல் சாப்பிடவந்துவிட்டார்கள்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

ழையாவும் தனியாகச் சும்மா உட்கார்ந்துகொண்டு இருந்தால் தேவையில்லாத எண்ணம் வந்து பாடாய் படுத்தும் எனவே கீழே இறங்கிவந்தாள்.

வரும் போது மஹிந்தன் இல்லாததாலும் கவனத்தை திசை திருப்பும் நோக்குடனும் வீட்டின் அழகை கண்களால் சுற்றி அதிசயத்துடன் பார்த்தாள்.

அவள் நேற்று இங்கு வரும் போது அவள் மனதிற்குள் பலவித பயம் மிரட்சி இருந்ததாலும் இன்று காலை பேட்டி எடுக்கப் போவதனால் வந்த டெண்சனாலும் பின், மஹிந்தன் போனபின் நேற்று இரவு சரியாக் தூங்காததாலும் மனச் சோர்வினாலும் எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உடைமாற்றிப் படுத்தவள் தூங்கிவிட்டாள்.

இப்பொழுதுதான் அவள் இருக்கும் வீட்டின் அழகை கவனித்தாள்.

பளிங்கு மாளிகையாக அது இருந்தது. வீட்டின் ஹாலில் மையத்தில் தொங்கவிட்டுருந்த சாண்டில்யன் விளக்கின் அழகும் உயர்ந்த சீலிங்கும் வரவேற்பு அறையில் இருந்து தொடங்கிய படிக்கட்டின் அழகான வேலைப்பாடுள்ள மரத்தால் ஆனா கைப்பிடிப் படிக்கட்டின் ஒருபுறம் ஆரம்பித்து மாடியின் தளத்துடன் வந்து முடியாமல் மாடிக்கு பால்கனித்தடுப்பாக, அவ்விசாலமான வரவேற்பறையின் மேல் வட்டவடிவில் ஓடி மற்றோற்படிக்கட்டின் கைப்பிடியாக இறங்கி கீழே சென்று முடிந்திருந்தது.

கீழே சென்றவள் அங்கு மாட்டப்பட்ட சட்டங்களுக்குள் அடங்கியிருந்த ஓவியங்களை பார்த்தபடி இறங்கியவள், அழகான தங்கநிற பிரேமினுள் இருந்த அவளின் ஓவியத்தை அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தாள்.

முதல் பார்வைக்கு புகைப் படம் போலவே இருந்த அந்த படத்தை நெருங்கி பார்த்ததும் தான் தெரிந்தது அது அவளின் புகைப் படம் அல்ல ஓவியம் என்பதை உணர்ந்தவள், ஆர்ட் பை மஹிந்தன் என்று இருந்த எழுத்தை கண்டதும் அசந்து போனாள்

ஏனெனில், முதல்நாள் அவள் வேலைக்கு வர சிரத்தையுடன் அவள் தேடிப்பிடித்து வாங்கிய உடையில் அது இருந்தது.

“இந்த அளவிற்கா அவனின் மனதில் நான் பதிந்துள்ளேன்!” என்ற அலை மனதில் அடித்தது .

---தொடரும்---
 
Back
Top