My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

விழியோரத் தேடல் நீ Epi-16(2)

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
256
தேடல் - 16(2)

வருணைப் பார்த்து, “சாரிவருண் உன் கூட இப்ப டைம் ஸ்பென்ட் பண்ணமுடியாது” எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு போகணும்..நீ உன் அக்காவுடன் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இரு. நான் வந்துவிடுகிறேன்”

என்று கூறிக்கொண்டு, போன் பேசுவதற்காக சற்று தன் முதுகின் பின்னால் தள்ளி நின்று கொண்டு இருந்த ழையாவைத் திரும்பிப்பார்த்தான்,

அப்பொழுது அவள் அவளின் ஓவியத்தின் கீழ் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள். தான் கைப்படவே வரைந்த அவளின் நிழலையும் அதனருகில் இருந்த நிஜத்தையும் ரசித்தான்..

அவளின் இன்றைய விசேஷ அலங்காரமும் திரும்பி நின்றதில் அவளின் சைடு போசின் காரணமாக கொஞ்சமாகத் தெரிந்த அவளின் இடுப்பழகையும் பார்த்தவனுக்கு,

ப்பா! இவ்வளவு அழகாக இருந்து என்னை கொல்றாளே... என்று சந்தோஷச்சலிப்புடன் தன் மொபைலில் அவளின் தற்போதைய அழகை நிழல் படமாக போட்டோ எடுத்தான்.

கவிழையாவிடம் பேசிய பார்வதி எப்படி இருக்க கவி? உன்னை மாப்பிள்ளை நல்லா வைத்திதுக்கொள்கிறாரா? என்று கேட்டாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த ஈஸ்வரன் அவளின் நலத்தை அறிய ஆவலுடன் போனை கை பற்றி, வருண் அங்கு தானே இருக்கிறான். மாப்பிள்ளை உன்னை நல்லபடி கவனித்துக்கொள்வதாக அவன் கூறினான் இருந்த போதிலும் நீ உண்மையை மறைக்காமல் சொல் ழையா, நீ அங்கு நல்லா இருக்கிறாயா?” என்று கேள்வி எழுப்பினார் .

கவிழையா மனதிற்குள் எப்படி அதற்குள் நம் வீட்டில் உள்ள அப்பா அம்மா வருண் உட்பட மஹிந்தனை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ள முடிந்தது .

என்னால் மட்டும் அவன் எனக்குச் செய்தவைகளை மறந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று எண்ணினாள். அப்படி நினைக்கும் போது முதல்நாள் அவனிடம் தான்மயங்கி நின்றது ஞாபகம் வந்தது.

அவளது மனசாட்சி கணவன் என்று நினைப்பு உனக்கும் வந்ததினால்தான் நீ அவனிடம் நேற்று மயங்கி நின்றாய் என்று உள்மனது சொன்னது.

ஆனால் மனசாட்சிக்கு குட்பை சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவள் அப்பா “என்ன கவி நான் கேட்பதற்கு பதில் சொல்”, என்று கேட்டதும் தான் சுயநினைவிற்கு வந்தவள்

அப்படியெல்லாம் இல்லப்பா. நான் இங்கு எந்த பயமும் இல்லாமல் நல்லாத்தான் இருக்கிறேன் ஆனால் உங்களை எல்லாம் விட்டுவிட்டு இங்கு இருப்பதற்குதான் கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.

வருண் மஹிந்தனிடம், அவசரமாக வெளியில் கிளம்பணும்னு சொன்னீங்க? என்று அவனிடம் பேச்சுக்கொடுத்தான்,

உடனே மஹிந்தன் உன் அக்காவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அவள் இப்போதைக்கு பேசி முடிப்பது போல் தெரியலை என்றவன், எழுந்து அவள் அருகில் சென்றான்.

அப்பொழுது அங்கு வந்த மஹிந்தனுக்கு ழையா அவள் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த உங்களை விட்டு இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்ற வார்த்தை காதில் விழுந்ததும் முகம் இறுக்கமாகியது,

அவன் வருவதை அவள் உணராமல் இணக்கமாக அவள் வீட்டவரிடம் போனில் பேசிக்கொண்டிருப்பதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருந்தபோதிலும் அதனை வெளிப்படுத்தவும் தயக்கமாக இருந்தது எனவே வருணிடம் “நீபோய் உன்அக்காவிடம் உள்ள போனை வாங்கி பேசு,

நான் அவளிடம் இப்பொழுது அவசரமாக வெளியில் போவதை சொல்வதற்காக போனை வாங்கினால் என்னுடன் சண்டைக்குவருவாள் “ என்று கூறினான்

வருணுக்கு அவனின் நிலை கொஞ்சம் புரிந்ததால், தன் அக்காவின் கையில் இருந்த போனை பறித்து ஒரு நிமிஷம் நான் பேசிட்டு உன்னிடம் கொடுக்கிறேன் என்று தன் காதில் கொடுத்தபடி பேச ஆரம்பித்தான் வருண்.

அப்பொழுது தன் தம்பியை கோபமாக முறைத்துக்கொண்டு இருந்த ழையாவைப் பார்த்த வருண், தான் போனை அவளிடம் இருந்து பறித்ததற்கு அவள் முறைக்கவும், திரும்பி நின்று கொண்டு தன் பேச்சை தொடர்ந்தான் .

அவர்கள் இருவரின் செயல்களை பார்த்து கொண்டிருந்தான் மஹிந்த், ழையா அவளின் தம்பியை பார்த்து முறைத்ததைப் பார்த்ததும் அவன் எஸ்கேப் ஆவதற்காக மறுபுறம் திரும்பிநின்றதை கண்டவனுக்கு அவளுடன் வம்பிழுக்க ஆசை வந்தது.

அவளின் பளிச்சிட்ட இடையின் மென்மையை உணர அவன் கை துருதுருத்தது. அவள் தன் தம்பியின் முதுகைப் பார்த்து இன்னும் முறைத்துகொண்டிருந்த நேரத்தில் அவள் இடையில் மென்மையாக கிள்ளினான் மஹிந்தன் .

அவள் துள்ளிப்போய் தள்ளிநின்றதும், ஆட்சேபனை செய்யும்படியான பார்வை பார்த்துக்கொண்டே அவளின் அருகில் சென்றான்.

பின் “உன் அப்பாவிடம் பேசுவது போல் என்னிடமும் எப்பொழுது உரிமையாகப் பேசுவாய் பேபி? என்று கெஞ்சும் குரலில் கேட்டான்,

அவனின் இறைஞ்சும் குரலில் ஓர் நிமிடம் ஸ்தம்பித்து நின்றவளை, அணைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து,

“நான் வெளியில் போகணும். நீ, நான் வருவதற்கு காத்திருக்காமல் சாப்பிட்டுத் தூங்கு” என்றான்.

அப்பொழுது போனில் பேசிக்கொண்டு இருந்த வருண் அக்கா, “அப்பாவை ஆஸ்பிட்டலில் செக்கப்புக்கு கூட்டிப்போகணும் அதனால் நான் கிளம்பறேன்” என்றான் .

“தன் தம்பி சொன்னவுடனே, ஆமாம், இன்னைக்கு செக்கப்புக்கு போகணுமே நான்பார் எனக்கிருந்த குழப்பத்தில் மறந்தேபோயிட்டேன்” என்றாள் .

அப்பொழுது, “வருண்! நீ எதில்வந்த என்று கேட்டான் மஹிந்த். அதற்கு வருண் கால்டாக்ஸியில் வந்தேன் என்று கூறினான்,

அதனைக் கேட்ட மஹிந்த் “அப்போ என் கூட வா, நான் உன்னை டிராப்பண்ணுறேன் என்றான்.

பின், ழையாவைப் பார்த்து சிரித்துக்கொண்டே நான்வெளியே போய்விட்டு சீக்கிரம் வர ட்ரை பண்றேன், பாப்பாக்கு தனியாக இருக்க பயம் ஒன்றும் இல்லையே என்று கண்களால் சிரித்துக் கொண்டே கேட்டான் .

அவன் தன்னை பாப்பா என்று சீண்டவும் .கோபத்துடன் தன் தம்பி இருப்பதையும் பொருட்படுத்தாமல் நான் ஒண்ணும் பாப்பா கிடையாது உங்கள் தொல்லையில்லாமல் இருந்தாலே எனக்கு போதும் என்று கடுப்புடன் கூறினாள் .

தன் அக்கா அவனுடன், வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கட்டுவதையும் அதற்கு மஹிந்தன் கோபப்படாமல் திரும்பவும் அவளிடம் வம்பிழுப்பதை பார்த்த வருணுக்கு ,

வேண்டுமென்றே அக்காவிடம் வீட்டில் தான் வம்பிழுப்பது நினைவு வந்தது.

பின் புன்னகையுடன் ஓகே அக்கா. நீ வீராங்கனை என்று நான் சாரிடம் சொல்றேன் இப்பொழுது எனக்கு நேரம் ஆகிவிட்டதால் நான் கிளம்புகிறேன் என்றான்.

அதற்கு மஹிந்தன், “வருண்! என்னை சார்னு கூப்பிடாதே, நான் உன் அக்காவின் ஹஸ்பென்ட் சோ! மாமான்னு கூப்பிடு” என்றான்

பின் ழையாவிடம் “பேபி ஐ ஹேவ் சம் அர்ஜென்ட் வொர்க் சோ ஐ ஆல்சோ லீவ் நவ் என்றவன்

வருண் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ழையா எதிர்பார்காத நேரத்தில் அவளின் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அவள் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்து திட்டுவதற்குள்,

வருண் வா! ‘ஓடிப் போய்டலாம்” என்று குறும்புடன் அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு வருணுடன் வெளியேறினான்

ழையாவிற்கு வருண் முன் அவனின் செயல் சங்கடமாகவும் கோபமாகவும் இருந்தது. இருந்தாலும் அவளின் மனதின் ஓரம் மஹிந்தனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது அதனால் அவளுக்கு தன் மேலேயே கோபம் வந்தது .

தான் பலவீனமானவளோ! என்ற எண்ணம் ஏற்பட்டது, அவன்தான் தனக்கு அநியாயம் செய்தவன் என்பதனை எப்படி மறந்து போகிறேன்.

இப்பொழுது அவன் மயக்கப் பார்ப்பதை அறிந்தும் தன்னால் ஏன் அவனிடம் சில நேரங்களில் மயங்காமல் இருக்க முடியவில்லை, என்ற கேள்விக்கு விடையை தேடினாள். விபரீதமான விடையாக கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தபடி அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்

வெளியில் இருந்த காரில் கதிர், மஹிந்தனுக்காக காத்திருந்த போது வருணுடன் சிரித்த முகமாக வந்து அமர்ந்த மஹிந்தனை பார்த்த கதிருக்கு ஆச்சரியமாக இருந்தது .

கனவுகள் மிதந்த மலர்ச்சியான முகத்துடன் இருக்கும் இந்த மஹிந்தன் அவனுக்குப் புதிது. .பிசினெசில் அவன் வெற்றி பெறும் போதும் பெண்களிடம் அவன் பொழுதுகளை கழிக்கும் போதும் அவன் சிரிக்கும் சிரிப்பில் ஓர் அலட்சியம் இருக்கும்.

ஜோக்குகள் அவனுக்கும் தனக்கும் பழக்கம் இல்லாததாக இருந்தது. எனவே இப்பொழுது அவனின் முகத்தில் இருந்த அவனின் பூரிப்பான சிரிப்பு இன்னும் அவனை இளமையானவனாக அழகானவனாக காண்பித்தது கதிருக்கு.

தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த கதிரை பார்த்த மஹிந்தன் “வொய் ஆர் யூ லுக்கிங் மீ ஸ்ட்ரேன்ஜ்?”. என்று புன்னகையுடன் கேட்டப்படி காரின் பின்னால் வருணை உட்காரச் சொல்லி ஜாடை காட்டியபடி முன்னால் ஏறி அமர்ந்தான் மஹிந்தன் .

அவன் கேட்டதற்கு, “நீ இன்னைக்கு பார்க்க வித்தியாசமா எனக்கு தெரியிற” என்றான் கதிர் .

அவன் அவ்வாறு கூறியதும் “தன்னைக் குனிந்து பார்த்தவன் நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன் எதைவைத்து அப்படி சொல்ற”, என்று கேட்டான் மஹிந்.

உடனே “உன் முகம் எப்போதையும்விட இன்று பளிச்சுனு இருக்கிறது. உன் ஸ்மைல் எப்பொழுதுதையும்விட இன்று அழகாக இருக்கிறது” என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும் மஹிந்த் “அச்சோ இப்படி எல்லாம் நீ என்னை சொன்னால் எனக்கு உன் கூட உட்கார பயமாக இருக்கு .இந்த டயாலாக்கை என்னை ழையா பார்த்து சொல்லணும்” என்றான் .

இவர்கள் பேசும் போது கதிர் புன்னகைத்துக்கொண்டே யோசனையுடன் மஹிந்தனை பார்த்துக்கொண்டு இருந்தான் .

அவனின் முகக்குறிப்பை பார்த்த மஹிந்த் “கேளு வருண் உனக்கு என்ன தெரியணும், நீ கேட்பதற்கு நான் கட்டாயம் பதில் சொல்வேன் யோசிக்காமல் கேள்” என்றான்.

இல்ல! நான் இங்க வருவதற்கு முன் உங்களை பார்த்து நிறைய திட்டனும், என் அக்கா அழும் படி நீங்கள் அவளை வைத்திருந்தால் உங்களின் முதல் எதிரி நானாகத்தான் இருக்கனும் என்று நினைத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன்

ஆனா! இங்க வந்தபிறகு அது மாதிரி உங்களிடம் நான் பேசவேண்டிய அவசியம் இல்லை என்பதை உங்கள் அம்மாவுடன் நீங்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.

இருந்தாலும் ஒரு சந்தேகம் நீங்கள் இவ்வளவு பெரிய ஆள் நீங்கள் என் அக்காவை ரொம்ப விரும்புகிறீர்கள் பிறகு ஏன் அவளை இப்படி நிர்பந்தத்தில் நிறுத்தி கல்யாணம் பண்ணினீர்கள்

ஒன்று என் அக்காவின் மனம் மாறி உங்களின் அன்பை புரிய வைத்து பின்பு அவளின் சம்மதத்துடன் எங்களின் வீட்டில் பெண் கேட்டுவந்து கல்யாணம் செய்திருக்கலாமே” என்று கேட்டான் .

அவன் அவ்வாறு கேட்டதும் மஹிந்த் கூறினான், “நான் சொல்லவதை கேட்டு நீ கோபப்படக் கூடாது நான் முதலில் ழையாவை பார்த்தபோது அவள் யார் என்று எனக்குத் தெரியாது.

இருந்தாலும் அவள் கண்கள் எனக்கு மறக்க முடியாத ஓர் ஈர்ப்பைக் கொடுத்தது .அதற்குப்பின் எனக்கு ஐஸ்வர்யாவுடன் நிச்சயம் ஆனபிறகு தான் உன் அக்காவைப் பார்த்தேன்

ஆனால் அப்பொழுது இரண்டு பேருக்கும் மோதல் தான் வந்தது.

அப்போ உன் அக்கா என்னை பார்த்து கூறிய வார்த்தைக்கு கோபத்துடன் அவளின் மனதை காயப்படுத்த என் அருகில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று தான் நினைத்தேன்.

பட், அவள் என் கிட்ட வந்த பிறகு அவள் என்னுடையவள் என்ற பீலிங் எனக்கு ஏற்பட்டது

ஆனால் நான் அவளிடம் முதலில் காண்பித்த வில்லன் வேஷம் அவளின் மனதில் பதிந்து போய்விட்டது.

சோ! என்னால் அவளை அட்ராக்ட் பண்ணமுடியலை. அவளை நான் ஈர்க்கணும் என்று நான் யோசிச்சு வேலை செய்தால்... அவள் யோசிக்காமலே அவளை அறியாமலே என்னை ஈர்த்து என்னை அவள் மேல் பைத்தியமாக ஆக்கி வைத்தாள்

அதனால்தான் அவளை கல்யாணம் செய்தேன். ஆனால் ஓர் விஷயத்தை நான் கட்டாயம் சொல்வேன். நான் அவளை ஏமாற்றி கல்யாணம் செய்த பிறகு தான் ஒன்றை உணர்ந்தேன். அவளுக்கும் என் மேல் கொஞ்சம் ஈர்ப்பு இருக்குன்னு ,

இப்பொழுது உன் அக்கா என்னை அவள் அறியாமலே லவ் பண்றாள்.

ஆனால் அதை நான் அவளை கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்தேன் என்ற கோபம் அவளை உணர விடாமல் ஆக்குது.

பட், கூடிய சீக்கிரம் முழுசா என் ழையா எனக்கு கிடைப்பாள்” என்றான் .

அவன் கூறியதை கேட்டதுமே “என் அக்காவின் கோபத்தை குறைப்பது அவ்வளவு ஈசின்னு நினைச்சுடாதீர்கள், அதற்கு இந்த மச்சினன் உதவி உங்களுக்கு கட்டாயம் தேவை” என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் சிரித்தபடி “நோ..நோ... இந்த மஹிந்தன் யாருடைய உதவியையும் இதுவரை எதற்கும் கேட்டதில்லை என்றவன்.

பட், நீ என் ழையாவின் தம்பி... அதுவும் பாசமான.... தம்பி. சோ! உன் உதவியை கன்சிடர் பண்ண கொஞ்சம் யோசிக்கிறேன்” என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும், “அப்பா! ரொம்ப பிகு தான்.. அப்படியெல்லாம் போனாப் போகுதுன்னு ஹெல்ப் கேட்டால் என்னால் செய்ய முடியாது.

உங்கள் பிஸ்னெஸ் மேன் கெத்தை விட்டு கொஞ்சம் இறங்கி வந்து என்னிடம் நீங்கள் கேட்டால் அவளின் வீக் பாய்ன்ட் என்ன, ,என்ன செய்தால் அவளுக்கு உங்களைப் பிடிக்கும் என்று டிப்ஸ் கொடுக்கலாம்னு நினைத்தேன்,

ஆனால் நீங்கள் ஹெல்ப் கேட்க இவ்வளவு பந்தா செய்கிறீர்கள் சோ! நான் அந்த டிப்ஸ் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று கூறினான் .

“ஓகே வருண் சரண்டர் .ப்ளீஸ் எனக்கு அந்த டிப்ஸ் வேணும் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது கார் வருணின் வீட்டின் முன் நின்றது .

அதற்குள் வீடு வந்துவிட்டதா? என்று பார்த்த வருணிடம் கதிரை காண்பித்து “இவனை நம்பி வண்டியில் நான் மட்டும் தான் ஏறுவேன். பட் உன்னையும் இன்று என்னுடன் கூட்டிவந்துவிட்டேன். அப்பா! என்னவேகம்” என்று போலியாய் பயப்படுவதுபோல் பாவனைசெய்தான் மஹிந்தன்.

அவன் அவ்வாறு கூறியதை கேட்டதும், கதிர்! “நீ உன் மாமா சொல்வதை நம்பி விடாதே காரில் ஏறியதும் எனக்கு அவன் போட்ட கண்டிஷன் என்ன செய்வாயோ தெரியாது இன்னும் அரை மணி நேரத்தில் நாம் வருணை அவன் வீட்டில் விட்டுவிடவேண்டும் என்றான்.


ரொம்ப முக்கியமான வேலை உடனே போகவேண்டும் சோ! நான் ஒரு மணி நேரம் எடுக்கும் டிஸ்டன்சை அரை மணி நேரத்தில் ரீச் ஆகுமாறு ஓட்ட வேண்டிவந்தது” என்றான் .

கதவை திறந்து இறங்கிய வருணிடம் “எனக்கு டிப்ஸ் சொல்லிவிட்டு போ வருண்” என்ற மஹிந்தனிடம்

“வீட்டிற்குள் வாருங்கள் நான் உங்களுக்கு சொல்கிறேன்” என்றான் வருண் .

அவன் அவ்வாறு சொன்னதும் மஹிந்தன், “ஐ ஹவ் அர்ஜென்ட் வொர்க் சோ! அடுத்த தடவை நான் உன் வீட்டிற்கு ழையாவுடன் வரும் போது உன்னிடம் டிப்ஸ் கேட்டுக் கொள்கிறேன்”

என்ற கூறிவிட்டு அவனுக்கு பை சொல்லிவிட்டு காரை கிளப்பிய கதிரிடம் “சோழாஹோட்டலுக்கு போ கதிர் அங்கு அஜயின் தந்தை குமரேசன் வந்து காத்திருப்பார்” என்றான்.

---தொடரும்-
--
 
Back
Top