DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 256
தேடல் - 14(2)
கவிழையா பேசப்பேச மஹிந்தனின் முகத்தில் இருந்த குறும்புச் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக் மாறி அதில் கடுமை குடியேறியது ,
“வேண்டாம்.. ழையா... என்னிடம் இவ்வாறு பேசுறது என் ஈகோவைச் சீண்டிவிட்டுடும், இதுவரை நான் என் முன்னால் விரல் நீட்டிப் பேசக்கூட யாரையும் அனுமதித்ததில்ல .
ஆனால் நீ மட்டும் அதற்கு விதிவிலக்குனு நான் நினைத்தாலும், உன்னுடைய அதிகப்படியான் உதாசீனம் உன்னை என்னால் காயப்பட வைத்துவிடுமோன்னு எனக்கு பயமாக இருக்குது” என்றவன்
ம்.... என்ன சொன்ன? .பெண்கள் என்றாள் எனக்கு ஈசியாகப் போய் விட்டாங்கன்னா சொன்ன?. உன்னைப் பார்த்தப்பிறகு எந்த மடையனாவது அப்படி நினைக்க முடியுமா?
உன்னால் காந்தம் போல இழுபட்டு இப்பொழுது என்ன செய்தால் என்னை புரிந்துகொள்வாய் என்று என் மண்டையை காய வைக்கிறாயே,
“அப்பா! உலகத்திலேயே ரொம்ப கடினமான விஷயம் இந்த பெண்களை டீல் பண்ணுவதுதான்” என்றான்.
“இன்னும் ஒன்று சொன்னாயே, நான் நினைத்தது எதவும் உன் விசயத்தில் இனி நடக்காதா? உனக்கு ஒன்று தெரியுமா? இதுவரை நான் நினைத்தது எதையும் நடத்தி முடிக்காமல் விட்டதில்லை.
உன் விசயத்தில் நான் உன்னை அடைந்த விதம் தவறானதா இருக்கலாம்.
ஆனால் நீ என்னுடையவள்ன்னு நான் உணர்ந்தபிறகும், உன் மனம் மாறும்வரை காத்திருக்கிறேன்னு உன்னை அந்த தனுசிடம் விட்டுவிட என்னை என்ன கையாலாகாதவன்னு நினைச்சயா?
நெவர் முடியாது.... முடியவே முடியாது”, என்று அவளைப்போலவேச் சொன்னவன், உனக்கு வாழ்வோ சாவோ அது என்னோடுதான்” என்று கூறி கோபத்துடன் அந்த இடத்தைவிட்டுக் கீழே இறங்கிச்சென்றான்.
கீழே வந்தவன் எதிரில் வந்த காயத்திரியிடம் “தங்கை வருகிறாள் எனவே நைட் டிபன் இனிப்புடன் கூடுதலாக மூன்று பேருக்கு இருக்கும்படி செய்துவிடுங்கள்”
என்று கூறிவிட்டு வெளியேறி, நீச்சல் குளத்திற்குச் சென்று தன் மனதின் கொதிப்பை நீரினில்மூழ்கி நீந்தி குறைக்க முற்பட்டான் .
மாடிப்பால்கனியில் நின்று நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த மஹிந்தனை குளத்தின் அருகில் இருந்த சோடியம் விளக்குகளின் ஒளியில் தெரிந்த அவன் பிம்பத்தை, தான் பார்த்துக்கொண்டு இருப்பதை உணராமலேயே பார்த்துக்கொண்டு இருந்தாள் கவிழையா.
அவள் மனது முழுவதுவும் குழப்பமே குடியிருந்தது .அவளால் அவனை கணவனாக ஏற்கவும் மனதில்லை.
ஆனால் தன் அம்மா சொன்ன, “உனக்கு அவர்தான் என்று முடிவானப்பிறகு கிடைத்திருந்த வாழ்கையை காப்பாற்றப்பார்” என்று கூறியபிறகு தன் வீட்டிற்குப் போகவும் மனம் வரவில்லை.
அடுத்து என்னசெய்ய என்று மருண்ட மனதுடன் நின்றிருந்தாள் ,
.
அவள் கற்பனையில் அவளின் எதிர்காலக் கணவன் என்பவன், படித்து நல்ல உத்தியோகத்திலுள்ள தன் மனவுணர்வுகளைப் புரிந்து நடக்கும் தென்றலைப்போல் குணமுள்ள ஒருவனைத்தான் கற்பனைச் செய்திருந்தாள்.
புயலை போன்ற வேகமும், மிரட்டும் அளவுடைய பணமும் எதிரில் இருப்பவர்களை தன் கண் பார்வையில் ஆட்டுவிக்கும் தன்மையுடைய மஹிந்தனைப் போல் ஒருவனுடன் தன் வாழ்வு இணையும் என்று அவள் கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை.
அவளுக்கு அவள் நின்றிருந்த இடத்தின் பிரம்மாண்டம் அவளுக்கு பழக்கம் இல்லாதச்சூழல் முதலியன பயத்தினைக் கொடுத்தது.
கவிழையா அவளின் அழகை என்றுமே உணர்ந்தது இல்லை அவள் தன் வயதுடைய மற்ற பெண்கள் இன்று அழகுநிலையத்தின் உதவியால் திருத்தப்பட்ட புருவமும், வேக்சின் செய்திருந்த சருமமும் அலைஅலையாக தலைமுடியும் கண்டு பிரமிப்பு கொள்வாள் .
ஆனால் பார்வதி தன் மகளுக்கு இயற்கை முறைமையில் பயத்தமாவு ,கஸ்த்தூரி மஞ்சள் .வெட்டிவேர் மற்றும் சீவக்காயால் அவளது நிறத்தை தங்க நிறமாகவும் தலைமுடியை கருத்த அழகான நீண்ட வாசனைடயதாகவும் பெண்களின் கண்ணியத்தை உடையிலும், நடையிலும், கலாச்சாரத்திலும் அவளுக்கு சிறுவயதில் இருந்து ஊட்டி வளர்த்ததினால்
அவளிடம் மிளிர்ந்த பெண்மையின் மிளிர்வுடன் தெரிந்த நிமிர்வையும். ஆரோக்கியமான சிறுத்த இடையுடன் கூடிய சாமுத்திரிகா லட்சன உடற்கட்டையும் அவள் பெரிதாக நினைத்ததுமில்லை.
கவிழையா மஹிந்தனின் அலுவலகத்தில் உள்ள பெண்கள் மட்டுமில்லாமல் அலுவலகத்தின் சார்பில் ஹோட்டல்களில் நடக்கும் மீட்டிங்கின் போது அங்குள்ள அல்ட்ரா மாடல் பெண்கள் மஹிந்தனை நெருங்கவும்,
அவன் ஒருவார்த்தை பேசிய உடனே அவனுடன் குழைந்து பேசமுயல்வது போன்ற செயல்களைக் கண்டவள் மெழுகுச்சிலை போல் உள்ள பெண்களை விட்டுவிட்டு எதற்காக தன்னை அவன் தேர்ந்தெடுத்தான் என்பது அவளுக்கு விளங்கவில்லை.
அவளுக்குத் தெரியவில்லை, அம்மெழுகுச்சிலைகளிடம் இவளைப்போல் பெண்மையின் மிளிர்வும் நளினமும் இயற்கை அழகும் இல்லையென்பதை அவள் உணரவில்லை.
அவள் வீட்டில் மதுரா தான் கொண்டுவந்த பழங்கள் அடங்கிய கூடையை பார்வதியிடம் இந்தாருங்கள் அத்தை என்று கொடுத்தவள்
“மாமாவின் உடல்நிலை ஆப்பரேசனுக்குப்பிறகு எந்தபிரச்சனையும் இல்லாமல் இருக்கிறதா?”
என்றுக் கேட்டு அங்கு இருந்த இருக்கமான சூழ்நிலையை மாற்ற முகத்தில் புன்னகையுடன் தன் பேச்சைத் துவங்கினாள்.
மதுரா வந்தவுடன் பார்வதி மட்டுமே வாருங்கள் என்று அழைத்தாள் ஈஸ்வரனும் ,வருணும் எதுவும் கூறாமல் இறுகிய முகமாகவே இருந்தனர் .
மதுரா அவ்வாறு கேட்டதும் பார்வதி “அவருக்கு உடம்பிற்கு முடியாமல் போனதே தன் மகளைப் பற்றிய கவலையால் தான்” என்றாள் .
அதற்கு மதுரா, “முதலில் நீங்கள் இருவரும் என் அண்ணன், அண்ணியை உங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்ததற்கு மன்னிச்சுக்கோங்க .
என் அண்ணனுக்கு என் கணவரின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு நிச்சமாகியிருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் அக்கல்யாணமே, எங்களின் எஸ்.என்.வி நிறுவனத்தை என் அப்பாவீட்டார் அவர்களிடம் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தால் நிச்சயிக்கப்பட்டது
என் அண்ணா ஆசைப்பட்டு ஒன்றும் ஐஸ்வர்யாவுடனான கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என் அண்ணன் நேற்று என் வீட்டிற்கு வந்து தனக்கு அண்ணி கவிழையாவுடன் கல்யாணம் ஆகிவிட்டது ,இனிமேல் ஐஸ்வர்யாவுடன் நிச்சயமான இக்கல்யாணம் நடக்காது என்றும் கூறி நிச்சயித்திருந்த அந்த திருமணத்தை முறித்துவிட்டே அண்ணியை கூட அழைச்சிட்டு போனான்” என்றாள் .
அவள் அவ்வாறு கூறியதும் “எங்க கவியை ஒன்றும் உன் அண்ணன் அவளின் சம்மதத்தோடு கூட்டிட்டுப் போகலை"” என்று கோபமாகக் கூறினார் ஈஸ்வரன்.
அவர் அவ்வாறு கூறியதும் “பெண்ணினை பெற்றவர்களுக்கு இருக்கும் ஆதங்கம் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும்.மாமா.
என் அண்ணன் உங்களை கேட்காமல் அண்ணியை கல்யாணம்முடித்து, அவர் தன்கூட இழுத்து வச்சுகிட்டதுக்கு நான் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் .
என் அண்ணன் செய்ததை நான் நியாயப்படுத்தலை. அதே நேரம் என் அண்ணன் இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் பிளேபாய் போலச் சுற்றியதும் இல்லை,
அவன் முதல் முதலாக விரும்பிப் பின்னால் சென்றது கவி அண்ணியின் பின்னால் தான் .
ஆனால் அவன் அப்பொழுதிருந்த நிலைமையில், அவன் காதலை சொல்லி உங்களிடம் பெண்கேட்டு வரும் சூழ்நிலையை அவனுக்கு ஐஸ்வர்யாவினுடன் முடிவுசெய்திருந்த கல்யாணத்தினால் முடியாததாகிவிட்டது .
மேலும் அவன் கட்டாயமாக அண்ணியை நன்றாகப் பார்த்துக்கொள்ளுவான் அதற்கு நான் உங்களுக்கு உத்தரவாதம் கொடுக்கிறேன்.
நடந்தது நடந்துபோச்சு, இனி அதை மாத்த முடியாது. இனி அவர்கள் நல்ல படியாக வாழ நாம் பழையதை மறந்துவிட்டு இனி என்ன செய்தால் இருவரும் நலமா இருப்பாங்கன்றதில கவனம் செலுத்தணும்” என்று கூறினாள் .
மதுரா தன் அண்ணனுக்காக இறங்கிப் பேசுவதை பார்த்த பார்வதிக்கு மனம் சிறிது சமாதானம் கிடைத்தது.
தன் பெண் வாழப்போகும் வீட்டின் மனிதர்கள் ஒன்றும் அவ்வளவு கெட்டவர்களாக இருக்கமுடியாது என்ற எண்ணம் உண்டானது .
பெரியவீட்டுப் பெண் என்ற கௌரவம் பாராமல் தங்களிடம் பெரியவர்கள் என்ற முறையில் மரியாதையாகப் பேசிய மதுராவின் தன்மை பார்வதியை மிகவும் மிகவும் கவர்ந்தது
இப்படிப்பட்டவளின் அண்ணன் முற்றிலும் கெட்டவனாக இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது .
எனவே பார்வதி மதுராவைப் பார்த்து, “நீ சொல்றதெல்லாம் சரிதான்மா, இருந்தாலும் உங்களின் வீட்டுப் பெரியவங்க இதை பற்றி என்ன சொல்வார்களோ? நீ கூறுவதை போல் உங்களின் அம்மாவும் கூறுவார்களா?” என்று கேட்டாள்
அவள் அவ்வாறு கூறியதும் மதுரா சொன்னாள் “அம்மா அப்பாவிற்குமே அண்ணன் செய்தது அதிர்ச்சிதான், இருந்தாலும் என் அண்ணனின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யமாட்டாங்கள் இருந்தாலும் அண்ணன் அவர்களை கலந்து கொள்ளாமல் கல்யாணம் செய்தது அவர்களுக்கு கோபமாகத்தான் இருக்கும் .
ஆனால், அண்ணனால் அவர்களை எளிதில் சமாதானப் படுத்தமுடியும் எப்படியும் இன்னும் ஒரு வாரத்திற்குள் அம்மாவையும் அப்பாவையும் உங்களிடம் வந்து பேசி அண்ணன் அண்ணியின் கல்யாண ரிசப்சனுக்கு எற்பாடு செய்வான்.
அவன் சொன்ன எதையும் இதுவரை செய்யாமல் விட்டதில்லை எனவே நீங்கள் மேற்கொண்டு ரிசப்சனை எப்படி நடத்தலாமென்று யோசித்து வையுங்கள்.
நான் இப்பொழுது கிளம்புகிறேன் எதுவென்றாலும் என்னிடம் மொபைலில் தொடர்பு கொண்டு கேளுங்கள்” என்று கூறி தன்னுடைய போன்நம்பரை அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்று வெளியேறினாள்
மதுரா காரினில் வந்து இறங்குவதை பார்த்த மஹிந்தன் மதுராவைப்பார்த்து கையசைத்துவிட்டு “நீ உள்ளப்போ மதுரா, நான் ஒருநிமிடத்தில் வருகிறேன்’ என்று கூறிவிட்டு தன் ஈரஉடையை மாற்றிவிட்டு மதுராவிடம் வந்தான்.
மதுரா வந்ததை மாடியில் இருந்து பார்த்த கவிழையா கீழே இறங்கிவரவும் ழையாவைப் பார்த்து சிரித்தமுகமாக ஓடிச்சென்று அவளின் கை கோர்த்து
“அண்ணி,... அண்ணன் உங்களுக்காக வாங்கியிருக்கும் இந்த வீடும் அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்த ழையாவின் ஓவியத்தையும் காட்டி சூப்பரா இருக்கு” என்றாள் .
“அண்ணன், இவ்வளவு அழகான வீட்டையும் உங்களையும் பற்றிச் என்கிட்ட சொல்லாததுக்கு கோபம் முதலில் இருந்தது, ஆனால் உங்களின் முகத்தை பார்த்தவுடன் என் கோபம் எல்லாம் பறந்து போயிடுச்சு” என்று கூறியவள் .
தான் கூட்டிவந்த டிசைனரை காண்பித்து “இவர்கள் ரித்திகா இவங்க டிசைன் பண்ணிய உடைகள் அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கும்” என்று கூறியவள்,
ரித்திகா என் அண்ணிக்கு நாம் வாங்கிய உடை பொருத்தமாக இருக்குமில்லையா? என்று கேட்டாள் .
அவள் கூறியதும் ரித்திகா சொன்னாள் “இவங்களுக்கு எல்லாவகை உடைகளும் பொருத்தமாக இருக்கும் ஆனால் நாம் வாங்கியிருக்கும் உடை ஹிப்சைஸ் கொஞ்சம் பெரிதாக இருக்குமென்று நினைக்கிறேன்” என்று கூறியவள்
ஒருநிமிஷம் என்றவள் அவ்வீட்டின் வேலையால் காரிலிருந்து உள்ளே கொண்டுவந்து வைத்திருந்த லக்கேஜில் இருந்து மெசர்மென்ட் டேப்பை எடுத்து அவளுக்கு அளவு எடுத்தாள்.
மஹிந்தன் மதுராவிடம் போனில் பேசும் போது கவி அருகில் இருந்ததால் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை கவிழையா அறிந்திருந்தாள்.
எனவே மதுரா “நீங்கள் என் வீட்டிற்கு போனீங்களா? அப்பா நல்லா இருக்கிறாரா? அம்மா என்ன சொன்னார்கள்?” என்று கேட்டாள் ழையா.
அப்பொழுது உள்ளே வந்த மஹிந்தன் “ஏன் எல்லோரும் நின்றுகொண்டே பேசுகிறீர்கள். ழையா வீட்டிற்கு வந்த என் தங்கையை உட்காரச்சொல்லாமல் நிற்கவைத்தே நீ கேட்க நினைப்பதெல்லாம் கேட்பயா..?” என்றவன்
இயல்பாக இருப்பது போல் அவளின் அருகில் வந்து ழையாவின் தோளின்மேல் தன் கைபோட்டு கூட்டிச்சென்று சோபாவில் உட்கார்த்தி அவள் அருகில் அமந்தான்.
அவர்களின் எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்த மதுரா தான் வாங்கிய உடைகளை காண்பித்து “அண்ணா நான் அண்ணிக்கு வாங்கிய டிரஸ்ஸைப் பாருங்கள். அண்ணீ, உங்களுக்கு என்னுடைய செலக்சன் பிடிக்காட்டால் அதை ரித்திகா உங்களுக்கு பிட்டாக மாத்தி தைப்பதற்குள் சொல்லிடுங்கள். உங்களுக்குப் பிடித்தமாதிரி வாங்கிவிடலாம்” என்றாள் .
ஆனால் கவிழையாவிற்கு அந்த உடைகளை பார்வையிட மனம் செல்லவில்லை.
அவள் அவ்வாறு கேட்டவுடன் கவிழையா சிரித்துக்கொண்டே “பரவாயில்லையே நீங்கள் உங்கள் அண்ணனைப்போல் இல்லாமல் எனக்கு பிடிக்குமா? பிடிக்காதா? என் அபிப்ராயம் கேட்கும் கர்டசி உள்ளவர்களாக இருக்கிறீர்களே..! .
நீங்கள் நான் முதலில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலை. நான் கேட்ட கேள்விக்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்க. பிறகு நான் இந்த டிரஸ் எனக்கு பிடிக்கிறதா பிடிக்கவில்லையான்னு சொல்லுறேன்” என்றாள் கவிழையா .
“வரும்போது உங்கள் அம்மா வீட்டிற்குப் போய்விட்டுத்தான் வந்தேன்.
அத்த, மாமா மற்றும் வருண் எல்லோரும் நல்லா இருக்காங்க அண்ணி..
எல்லோருக்கும் உங்களை பற்றிய நினைப்புதான் . நான் தான் என் அண்ணியை பத்திரமாக் பார்த்துக்கொள்வேன் அவர்களை பற்றிய கவலையே இனி உங்களுக்கு வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்திருக்கேன்.” என்றாள்.
ழையா அவ்வாறு பேசியது மஹிந்தனுக்கு கடுப்பாக இருந்தது.
மேலும் தன் தங்கைக்கு ழையாவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருக்கவேண்டுமென அவன் விரும்பினான்.
மேலும் தன் மீது உள்ள கோபத்தில் ழையா, மதுராவை காயப்படுத்தும் விதமாகப் பேசுவதை அவன் பொறுத்துக்கொள்ள மாட்டான்.
மஹிந்தனுக்கு தன் தங்கைமேல் பாசம் உண்டு, சிறுவதில் இருந்து அவள் கல்யாணம் முடித்துசெல்லும் வரை வீட்டில் அவன் வருகைக்காக காத்திருந்து அவன் சாப்பிட்டானா? என்று தெரிந்துகொண்டு இல்லாவிட்டால் வேலையாட்களை கொண்டு அவனுக்கு பிடித்தமான உணவுகளை வரச்செய்து அவனுடன் உட்கார்ந்து பேசிகொண்டு அவளும் உண்டு அம்மாவின் ஸ்தானத்திலும் ,தோழியின் இடத்திலும் இருப்பவள் மதுரா.
மதுராவைப்போல மஹிந்தன் அன்பை வெளிப்படையாக காண்பிக்காவிட்டாலும் அவன் தன் தங்கையின் முகம் பார்த்தே அவள் கேட்காமலேயே அவளுக்குப் பிடித்ததை செய்துகொடுப்பவன் மஹிந்தன் .
“மதுராவிற்கு கவிழையாவின் மனநிலையை கணிக்க முடிந்தது.
எனவே “அப்படியா அண்ணி, அண்ணன் உங்களைக் கேட்காமல் இனி எதைச் செய்தாலும் என்னிடம் சொல்லிவிடுங்கள் நாம சேர்ந்து அண்ணனை ஒரு கை பார்த்துடுவோம்
நாம் படுத்தும் பாடு தாங்காது கடைசியில் உங்களின் வசம் வந்துடுவான் பாருங்கள்,
நான் சொன்னதை கேட்டீங்கள்ள, அண்ணா! இனி என் அண்ணியின் மனம் நோகுறபடி எதுவும் நீங்கள் செய்தால் பின் விளைவுகள் பயங்கரமாக் இருக்கும்..!!“ என்று கவிழையாவுடன் நட்புக்கரம் நீட்டி அதில் தன் அண்ணனையும் இணைக்க முற்பட்டாள். .
மதுராவிற்குத் தெரியும் ழையாவிற்கு தன் அண்ணனின் மேல் கோபம் இருக்கும் என்றும் தன் அண்ணன் ழையாவின் அன்பைப்பெறுவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக அவளை கல்யாணம் முடித்துள்ளான்
எனவே இருவருக்கும் இடையில் உள்ள உறவு சரிவர இருக்காது .இந்த நிலையில் தன் அண்ணியின் மனதில் உள்ள ரணத்தை அன்பினால் குணப்படுத்தினால் தான் தன் அண்ணனுடைய வாழ்வு மலரும்.
மேலும் தன் அண்ணனுக்கு ஐஸ்வர்யா மாதிரியான பெண்ணுடன் கல்யாணம் முடிவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.
ஆனால் அவளின் அம்மா சுபத்ராதான் அவர்களின் குடும்ப எஸ்.வி.எம் நிறுவனத்திற்காக இக்கல்யாணம் முடிவதை அவள் தடுக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தன் அண்ணன் கல்யாணம் முடித்துவிட்டதாக கூட்டிவந்த ழையாவை பார்த்தவுடனே மதுராவிற்கு அவளை பிடித்துவிட்டது .
எனவே கவிழையா மனதில் இருக்கும் காயத்தினை, தன்னால் முடிந்தளவு ஆற்றினால்தான் அவள் தன் அண்ணனுடன் மனதளவில் நெருங்கவைக்க முடியும்.
அதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என முடிவெடுத்திருந்தாள் மதுரா.
மஹிந்தன் தன் தங்கை மதுரா ழையாவிடம் இணக்கமாக பேசுவதையும் அதில் தன்னையும் இணைக்கப் பார்ப்பதையும் கண்டு தன் தங்கையை மெச்சுதளுடன் ஓர் பார்வைப் பார்த்து, ழையா அறியாமல் தன் கட்டை விரலை தூக்கி காண்பித்து சூப்பர் என்று சைகை செய்தான்.
“கூட்டணியெல்லாம் பலமாக இருக்கிறது மதுரா என்ன செய்ய என் தங்கையும் என் மனைவியும் சேர்ந்துகொண்டு தாக்கினால் நான் அடங்கித்தானே ஆகணும்” என்றவன்,
---தொடரும்---