My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

விழியோரத் தேடல் நீ Epi-13(2)

DEEBAS

Administrator
Joined
Dec 13, 2024
Messages
256
தேடல் 13(2)

கவி மஹிந்தனின் கையில் இருந்த போனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் போது மஹிந்தன் தனுசிடம் "என் மனைவி அடுத்தவர்களிடம் வேலை பார்க்கும் நிலையில் இல்லை தனுஷ் என்றவன், இனி அவளை என்னை விட்டு எங்கும் அனுப்புறதாக இல்லை, நீங்கள் என் மனைவிட்ட போனில் பேசுவதை நான் விரும்பலை...” என்று கூறியவன் தொடர்பைத் துண்டித்து போனை கவியிடம் கொடுக்காமல் தானே வைத்துக்கொண்டான்.

மஹிந்தன் தனுசிடம் பேசியவிதமும் சொன்ன வார்த்தைகளும் ழையாவிற்கு மேலும் அவன் மேல் கோபத்தையே கொடுத்தது.

எனவே அவள் கோபத்துடன் “நான் என்ன உங்கள் அடிமையா? இங்கேதான் இருக்கணும் இவர்களுடன் தான் பேசணும் என்று ஆர்டர் போட்டுக் கொண்டு இருக்கிறீங்க?. நான் காரைவிட்டு இறங்க மாட்டேன் என்னை என் வீட்டில் கொண்டு போய் விடுங்கள்” என்று வெடுவெடுவென்று பேசினாள்.

அவள் அவ்வாறு பேசியதும் மஹிந்தன், “நான் பொறுமையா உன்னிடம் சொல்றேன் ழையா எனக்கு நிறைய வேலை இருக்குது, முரண்டு பிடிக்காமல் வா” என்று கூறி அவள் கைபிடித்து இழுத்தான்.

ழையா காரின் சீட்டை பிடித்துக் கொண்டு நான் இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதை பார்த்த மஹிந்தன்.

”கொஞ்சம் முன்னால் தான், என் பனிஷ்மென்ட் எப்படி இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன் என்ன? திரும்பவும், உன் உதட்டிற்கு என் உதடால் தண்டணை கொடுக்கட்டுமா?. என்று கூறிக் கொண்டு அவளை நோக்கிக் குனிந்தான்.

அவன் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்த ழையா தான் சீட்டை பிடித்திருந்த கைகளை எடுத்து வாயை மூடி பின்னால் நகர்ந்து செல்ல முயன்றாள்.

அவளின் செயலை உதட்டில் தவழும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே அலேக்காக அவளை தூக்கி காரைவிட்டு இறக்கிவிட்டவன்,

எப்படி? என்று அவன் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொண்டு அவளை பார்த்து கண் சிமிட்டினான், மஹிந்தன்.

அவன் அவ்வாறு செய்ததற்கு “சகிக்கலை” என்று வார்த்தையை கடித்து துப்பியவள் அவள் இருக்கும் இடத்தை சுற்றிப் பார்த்தாள்.

அவள் சுற்றிப் பார்ப்பதைப் பார்த்த மஹிந்தன் “வீடு எப்படி இருக்கு ழையா உனக்கு பிடிச்சிருக்கா ?” என்று கேட்டான்.

அவள், “ஆமாம் உங்களுக்கு வசந்தமாளிகை சிவாஜி என்று நினைப்போ? நான் ஒன்றும் உங்க மாளிகையின் அழகைய் ரசிக்கவில்லை நான் சுற்றிப் பார்ப்பதே வேறு ஒரு கண்ணோட்டத்தில்” என்று கூறினாள்.

மஹிந்தனுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது, அவன் மனதிற்குள் இப்பத்தான் இவள் பார்முக்கு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு, வெளியில் அவளிடம் வீட்டின் லொக்கேசனைப் பார்க்காமல் வேறு என்ன பார்க்கிற? எப்படி இங்கு இருந்து எஸ்கேப் ஆகலாம்’னா? என்று கேட்டான்.

மஹிந்தன் அவ்வாறு கேட்டதும் கவிழையாவின் வாய் அதற்குப் பதில் கூறவில்லை என்றாலும் அவள் முழியே ஆம் அப்படித்தான் என்று பதில் கூறியது.

அவளுடைய முகத்தை பார்த்தவன் உன் வாய் பேசாட்டாலும் உன் கண் எனக்கு பதில் சொல்லிடுது பேபி “நோ வே டு எஸ்கேப்” என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் கவிழையா அவனுடன் நடந்துகொண்டே “என்னைய காணாமல் எனது அப்பாவிற்கு திரும்ப எதுவும் உடம்பிற்கு முடியாமல் போய்விட்டால், நீங்கள் எவ்வளவு பெரிய ஆளானாலும் சும்மா விடமாட்டேன்” என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் “இப்பொழுது எதுக்கு உனக்கும் எனக்கும் இடையில் உன் அப்பாவை வைக்கிற? .எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை நீ இப்படி என்னையும் என் அந்தஸ்த்தையும் பார்த்து துச்சமாக நினைப்பதுவும் நான் உன்னை விரும்புவதற்கு ஒரு காரணம்.

ஓ கே பேபி, உனக்கு உன் அப்பாவின் உடல் நலமாக இருக்கணும் அப்படித்தானே? நீ யாரோ ஒரு மஹிந்தனின் வீட்டில இருக்கிறனு உன் அப்பாவுக்குத் தெரிந்தால் தானே அவர் வருத்தப்பட்டு உடல் பாதிப்படைவார்.

தன் மகள், அவனின் கணவன் மஹிந்தனின் வீட்டில் இருக்கிறாள்னு தெரிந்தால் சந்தோசத்தில் அவர் உடல் நல்ல நிலைமைக்குத் திரும்பும்” என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் கவிழையா கோபத்துடன் “உங்க அந்தஸ்த்தையும் பணத்தையும் பார்த்து ஒன்றும் என் அப்பா சந்தோசப்பட மாட்டார் உங்களுக்கு உங்களின் மேல் ஓவர் ஸெல்ப் கான்பிடன்ஸ், நீங்கள் என் கணவர்னு தெரிந்தாலும் என் அப்பா வருத்தம்தான் படுவார்” என்றாள்.

அவனுடன் பேசிக்கொண்டே அந்த மாளிகையின் வாசலுக்கு வந்தபோது அந்த வீட்டின் தோட்டத்தில் பராமரிப்புக்காக ஓர் நடுத்தரவயது தம்பதிகள் குடியிருந்தனர் அந்த வீட்டில் இருந்த காயத்திரி கையில் ஆரத்தி சுற்றும் தட்டுடன் வந்தாள்.

அவள் “அய்யா அம்மாவோடு ஒரு நிமிடம் சேர்ந்து வாசலில் நில்லுங்களேன் நான் ஆரத்தி சுத்திய பிறகு அம்மா வலது கால் வைத்து உள்ளே போகலாம்” என்றாள்.

உடனே மஹிந்தன் கொஞ்சம் தள்ளி நடந்துவந்த ழையாவின் கையை எட்டிப்பிடித்து தன் அருகில் இழுத்து நிற்கவைத்து அவள் தோளின் மேல் தன் கையை சுற்றிப் போட்டான்.

இப்பொழுது ஆரத்தி எடுங்கள் என்று புன்னகையுடன் காயத்திரியைப் பார்த்துச் சொன்னான்.

தன் முதலாளி தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே அவ்வாறு பேசியதை பார்த்த காயத்திரிக்கு ஆச்சரியமாக் இருந்தது.

ஏனெனில் கவிழையாவின் உருவப்படம் அந்த வீட்டின் ஹாலில் பெரிதாக டிசைன் செய்யப்பட்டு மாட்டுவதற்காக எடுத்து வந்து நடு ஹாலில் வைத்திருந்திருந்தனர்.

அப்போது அந்த போட்டோவின் மீது, அதில் அருகில் நின்று வேலையாட்களுக்கு பருக வழங்கப்பட்ட தேநீரை பருகிய ஓர் பணியாளன் காலி பேப்பர் கப்பை வைத்தான்.

மாடியில் இருந்து இறங்கிவந்த மஹிந்தன் அவன் வைப்பதை பார்த்துக்கொண்டு வேகமாக இறங்கிவந்து “ஏய்... அதை முதலில் எடு” என்று கையை அந்த படத்தினை நேக்கி காட்டி கோபமாகச் சொன்னதும் அப்பணியாளன் அந்த கப்பை பயத்துடன் எடுத்தான்.

அவன் எடுத்த போது அந்த படத்தில் அக்கப்பின் கீழ்படிந்திருந்த தேநீரின் வட்டமானதடம் இருந்ததைப் பார்த்தவுடன் அப்பணியாளன் தன் தோளில் போட்டிருந்த துண்டினால் அந்த தடத்தை துடைத்தான்.

அதனைப் பார்த்த மகிந்தனுக்கு மேலும் கோபம் வந்து அவ்வேலையாளின் கன்னத்தில் ஓருஅறை விட்டான்.

“என் ழையா படத்தின்மேல் இப்படி செய்ய உனக்கு எப்படி தைரியம் வந்தது?. இதில் இருப்பது யார் தெரியுமா? என்னுடைய ஒய்ப்”

என்று கூறி தன் பாக்கெட்டில் வைத்திருந்த கைக்குட்டையால் அந்த படத்தின் முகத்தை தானே நன்றாக் துடைத்து ஒரு விரலை நீட்டி அவனைப் பத்திரம் என்று கூறிவிட்டு வெளியில் சென்றான்.

அந்த சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த காயத்திரி அப்படத்தில் இருந்த உருவம் நேரில் இன்று அங்கு வந்ததைப் பார்த்தவள் அது தன் முதலாளியின் மனைவி என்று தெரிந்து கொண்டாள்.

மேலும் அவள் முதல் முதலாக அங்கு வந்ததும் அவளுக்கு ஆரத்திசுற்றி வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

எனவே பயத்துடன்தான் அவள் தன் முதலாளியைப் பார்த்து ஒருநிமிடம் வாசலில் நில்லுங்கள் ஐயா, ஆரத்தி எடுக்க வேண்டும் என்று கூறினாள்.

ஆனால் அதற்கு தன் முதலாளி சிரிப்புடன் தன் மனைவியுடன் நின்றதும் ஆச்சரியமாகி ஆரத்திசுற்றியவளிடம் தட்டில் பணத்தை போட நினைத்தவன் கவிழையாவிடம்...

“பேபி என்னிடம் கார்டு தான் இருக்குது ரூபாய் இல்லை என்று கூறி அவள் கையில் இருந்த அவளின் ஹேண்ட்பேக்கை பறித்து அதன் உள்ளே வைத்திருந்த ஐந்து நூறு ரூபாய்த் தாள்களையும் மொத்தமாக காயத்திரியிடம் கொடுத்தான்.

அவன் கொடுத்ததும் அதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டு அம்மா வலதுகாலை எடுத்து உள்ளே வைத்து வாங்கள் என்று கூறினாள் காயத்திரி.

மஹிந்தனின் செயலில் கடுப்பான ழையா அதனை வெளியில் காயத்திரி முன் காட்டாமல் அவளிடம் சிரித்தது போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

காயத்திரி அவ்விடத்தை விட்டுப் போனபின் மஹிந்தனின் புறம் திரும்பி “என்னுடைய ரூபாயை எப்படி என் அனுமதியில்லாமல் நீங்கள் எடுக்கலாம்?” என்று குறைந்த குரலில் பல்லைக் கடித்தபடி கூறினாள்.

அவள் கூறியதைகேட்ட மஹிந்தன் “இனி உன்னிடம் உள்ள எல்லாமே எனக்கு தான் சொந்தம்” என்று கூறினான்.

அவன் எல்லாவற்றிலும் என்று கூறும் போது அழுத்தமாக அவளை மேலிருந்து பாதம்வரை கண்களினால் கபளீகரம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டே வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கூறினான்.

அவனின் பார்வையையும் அலுத்தமான வார்த்தையையும் கண்ட ழையாவிற்கு திரும்ப அவனிடம் பதிலுக்கு மல்லுக்கட்டிப் பேச வார்த்தைவர மறுத்து,

படபடப்புடன் துடிக்கும் தன் நெஞ்சத்தின் ஓசையை சமப்படுத்துவதற்காக தன் கீழுதட்டை தன் பற்களால் மடித்து கடித்தபடி மஹிந்தனின் பார்வையை தவிர்க்கும் நோக்குடன் வேறு புறம் பார்ப்பது போல் பாவனை செய்தாள்.

மஹிந்தனுக்கு அவளின் நடுக்கத்தை பார்த்து மனதிற்குள் இப்படி என்னை பார்த்து இவள் நடுங்குவதை எப்படி மாற்ற...? என்ற யோசனை செய்து கொண்டு இருக்கும் போது அவனுக்கு தெரியாத நம்பரில் இருந்து அவன் மொபைலுக்கு அழைப்பு வந்தது.

அதனை அட்டன்செய்து காதில் வைத்து “ஹலோ…” என்று கூறியதும்...

“நான் வருண் பேசறேன், இது மிஸ்டர் மஹிந்தனின் போன் தானே ?” என்று கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் மஹிந்தன் மனதிற்குள் ரொம்...ப வேகமாகத்தான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு தான் பேசுவது ழையாவின் காதில் விழாதவாறு சற்றுத்தள்ளி வந்து “ம்.....சொல்லு வருண் நான்தான்” என்றான்.

அது மஹிந்தன் என்று தெரிந்தவுடன் வருண் கோபத்துடன் “என் அக்கா ஏன் இன்னும் வீட்டிற்கு வரலை?

அவளுக்கு ஆபீசில் லேட் ஆகும் என்றால் என் அப்பாவிடம் போனில் தகவல் சொல்லியிருப்பாள்.

மணி 6:15ஆகியும் இன்னும் ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிந்து கொள்ள அவள் நம்பருக்கு அப்பா போன் செய்தார்கள் அது ஸ்விட்ச் ஆப் னு வருது.

உடனே அவர்கள் உடல்நிலையும் பொருட்படுத்தாமல் ஆபீசுக்கு வந்து பார்க்க கிளம்பினாங்க. நான்தான் தடுத்து, நான் பார்த்துவிட்டு வருறேனு வெளியில் வந்து பப்ளிக் போனில் உங்களோடு பேசுறேன்” என்றான்.

அவன் பேசியதை கேட்ட மஹிந்தன் “இன்னும் பத்தே நிமிசத்துல அன்னைக்கு ஆஸ்பத்திரியில் என்னுடன் பார்த்தாயே கதிர் அவன் உன் அக்கா என் வொய்ப் என்ற ஆதாரத்தை காட்டவும், இப்போது அவள் என்னுடன் தான் இருக்கிறாள் என்ற விஷயத்தை கூறவும் உன் வீட்டிற்கு வருவான்.அதனால் நீ நேராக உன் வீட்டிற்குப் போ” என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் “நீங்கள் வலுக்கட்டாயமாக என் அக்காவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டால் மட்டும் என் அக்காவின் கணவனாகி விட முடியாது .இன்னைக்கு மாலைமுரசு நாளிதழில் வந்த செய்தியையும் படத்தையும் நான் இப்பொழுதுதான் இந்த பூத்தில் வாசலில் இருந்த கடையில் உள்ள பேப்பரில் பார்த்தேன்” என்று கூறி மேலும் மஹிந்தனிடம் கோபமாகப் பேசப் போனவனை,

“கொஞ்சம் அடங்கு வருண் நாளை காலையில் வரும் பேப்பரில் ழையா என் மனைவின்னும் எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடக்கவிருந்த கல்யாணம் நின்றுபோச்சுன்னும் செய்தி வரும்.

எங்களுக்கு நடந்த திருமணத்திற்கு உன் அப்பாவின் சாட்சிக் கையெழுத்துதான் முதலில் இருக்கு.

நீ புத்திசாலி என்று நினைத்தேன் ஆனால் உனக்கு என் பலமும் அந்தஸ்த்தும் தெரிந்த பின்பும் ழையாவை கல்யாணம் செய்திருப்பது நானென தெரிந்தும் இப்படி பேசுவது சரியில்லை.

இப்பொழுது நீ வேகமாக சென்று உன் அப்பாவிடம் போய் நான் நல்லவன், வல்லவன், உன் அக்காவிற்கு ஏற்ற புருஷனு சொல்லு.

உன் அக்கா இந்தியாவில் கோடீஸ்வரன் மற்றும் “தி கிரேட் பிசினஸ் மேன் மஹிந்தனின் மனைவி என்ற பெரிய இடத்தில் உள்ளதன் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அவரை ரிலாக்ஸ்டாக்கு,

அப்படி செய்யாவிட்டால் உன் அப்பாவிற்கு உடலுக்கு முடியாமல் போய்விடும்” என்று கூறினான்.

மஹிந்தனின் பேச்சில் சற்று அதிர்ந்தவன் பின்பு தன் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மிஸ்டர் “மஹிந்தன் உங்களின் அராஜகத்திற்கு ஒருநாள் முடிவு வரும்” என்றான்.

என் அப்பாவின் உடல் நிலையை நினைச்சு வீட்டுக்கு இப்போ அவரைப் பார்க்கப் போகிறேன்.

நான் உங்களுக்கு பயந்து என் அப்பாவை சமாதானப் படுத்தப் போவதாக நினைக்கவேண்டாம்” என்று இயலாமையுடனும், வருத்தத்துடனும் கூறினான்.

வருணின் பேச்சு தன்னுடைய அதிரடிப் பேச்சினால் சற்று நிதானத்திற்கு வந்ததை அறிந்த மஹிந்தன் தானும் சற்று பொறுமையாப் பேச ஆரம்பித்தான்.

“வருண் நான் கொஞ்சம் ஹார்ஸாக பேசிட்டேன், நான் என்னசெய்ய இப்படி அதிரடியாகப் பேசியதால் தான் நீ கொஞ்சம் அடக்கி என்னிடம் பேசுற.

நீ என்ன? இன்னும் என்னை மிஸ்டர் மஹிந்தன்னு கூப்பிடுற? நாம ரொம்ப சொந்தமாகிட்டோம் எனவே மாமானு கூப்பிடு..

நான் இப்பொழுது சொல்வது சத்தியமான உண்மை வருண் நான் ழையாவை மனதார விரும்பி கல்யாணம் முடிச்சுகிட்டேன்.

உன் அக்காவை என்னிடம் கொண்டுவர செய்த செயல்கள் வேண்டுமென்றால் தவறானதாக இருக்கலாம் ஆனால் நான் ழையாவிற்கு சரியான கணவன் என்பதை போகப்போக புரிந்து கொள்வாய்” என்றவன்.

“நான் உன் அக்காவிடம் போனை கொடுக்கிறேன் உன் அப்பா நல்லாயிருக்கிறார் என்று சொல்லு. ,வீட்டிற்குப் போய் உன் அப்பாவை அவளிடம் பேசச்சொல்றேன் என்று அவளிடம் சொல்லு”, என்று கறார்குரலில் கூறிக்கொண்டு சென்று போனை ழையாவிடம் நீட்டி ...

“உன் தம்பி பேசுகிறான்” என்று அவனின் மொபைலைக் கொடுத்தான் .

---தொடரும்---
 
Back
Top