My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

92. தேன்சிட்டுகள்

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,541
92. தேன்சிட்டுகள்
கருமாத்தூர் ஆதிசிவா இல்லம், சித்ராவுக்கு கார்த்திகை சீர் செய்வதற்காக, ரங்கதுரை, சாமி துரை, சஞ்சனாவோடு, சரோஜாவையும் அழைத்து வந்திருந்தார். செல்வமணி, பூங்குயிலும் சித்ராவை பார்க்க வந்திருக்க, கோதை அனைவருக்குமாக மாலை சிற்றுண்டியை தயாரித்து கொண்டிருந்தாள்.

அந்த காலத்து கார்த்திகை கொண்டாட்டம், சொக்கப்பனை, மாவளி சுற்றுதல் பற்றிய பேச்சு வந்தது.

“ முந்தியெல்லாம் மாசம் பொறக்கவுமே, மாவளி சுத்துறதுக்கு கங்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிடுவோம். சொக்கப்பனை கொளுத்தி, மாவளி சுத்தி, வெல்லபாகுல பிடிச்ச பொறிவிளங்காயை திண்டுக்கே கார்த்திகையை கொண்டாடுவோம். ராமு பக்குவமா மாவளி செய்வான். எல்லாம் முன் ஜென்மம் மாதிரி போயிடுச்சு” என ரங்கதுரை தம்பியை நினைவு கூற, சாமியும், சித்ராவும் உணர்ச்சி வயப்பட்டனர்.

“ ஆமாம்யா, பனைந்தட்டியை பொறுக்கிட்டு வரச் சொல்லி, என்னையும், சின்ன துரையையும் தானே பத்தி விடுவீங்க” என செல்வமணி நினைவு கூற,

“ ஊர் சுத்துற ஆளுகளுக்கு தானே, எது எங்க இருக்குண்டு தெரியும்” என பூங்குயிலும் கணவன் காலை வாரினாள்.

“ அப்ப சித்தப்பாவை ஊர் சுத்திண்டு சொல்றியா சித்தி” ஆதி கோர்த்து விட,

“அதிலென்ன சந்தேகம். இப்பவும் ஊரை சுத்தி வம்பை விலைக்கு வாங்கிட்டு தானே இருக்குது” என பூங்குயில் நொடித்தாள்.

“ இப்ப என்னாத்துக்கு மாமனை நொடிக்கிறவ” என கோதை ரகசியமாக தங்கையை கேட்க, “ அப்புறம் சொல்றேன்” என ஜாடை காட்டினாள்.

“ ஏண்டி, பெரிய மனுசண்டு என்னை நம்பி பஞ்சாயத்துக்கு வர்றாய்ங்கே, அப்புறம் பைசல் பண்ணி விட வேணாமா? “ செல்வம் கேட்க,

“ மாப்பிளை, அதெல்லாம் கரெக்டா தான் ஆத்தா இருப்பாப்ல” என ரங்கம் சப்பை கட்டு கட்டினார்.

செல்லபாண்டியின் மச்சினன் மனோகர், குறித்த இரண்டு மூன்று புதிய பஞ்சாயத்துகள் செல்வமணியிடம் வந்திருந்தன. கோபமாக பேசியவர்களிடம், “ மாமாகிட்ட பேசுறேன்” என சமதானப் படுத்தி வைத்திருந்தான். அந்த இடைவெளியில், புகார் சொன்னவர் பின்புலத்தை ஆராய செல்வமணி அங்கங்கே அலைய, பூவு அது குறித்து தனது சலிப்பை அக்காவிடம் வெளிப்படுத்தினாள்.

பாண்டிக் குடும்பம் ஹரிணிக்கு மருந்து கொடுக்க வளையப் பட்டி சென்று வந்தது, செல்லபாண்டியோடு செக்கானத்துகாரர்களின் நெருக்கத்தினால் வரும் பிரச்சினைகள் என்ற பேச்சுகளோடு அக்காவும் தங்கையும் சுவியம், வடை என செய்தனர். உதவி செய்ய வந்த சரோஜாவை, மகளோடு பேசிக் கொண்டிருக்க சொல்லிவிட்டு தாங்களே பரிமாறவும் செய்தனர்.

கூடத்தில் இன்னும் சொக்கப்பனை பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. விருமனும் கருமாத்தூர் மூணுசாமி முன் கொளுத்தப்படும் சொக்கப்பனையை நினைவு கூர்ந்து, “ ராஜவேலு அண்ணேன் நல்லா மாவளி சுத்தும்.” என மந்திரி குமாரராசாவை குறித்து சொல்ல,

“ அவர் மகன், அதுக்கும் மேல சுத்துவாப்ல” என ஆதி கிண்டலடிக்க,
“ பேச்சு எங்க சுத்துனாலும், கச்சிதமா உதயன்கிட்ட வந்து முடிக்கிற பாரு. உன் மனசில அவர் தாண்டா நிறைஞ்சு இருக்காரு” செல்வமணி நக்கலடிக்க,

“ நல்லா சொல்லுங்க மாமா” சித்ரா பின் பாட்டு பாடினாள்.

ஆதி அவளை முறைக்க, பேச்சை மாற்றும் விதமாக, “மாவளின்டா , என்ன பெரியப்பா?” சித்ரா ரங்கதுரையை கேட்க,

“ஆமாம், சொல்லுங்க, பயங்கர பில்டப் விடுறீங்க” என சஞ்சனாவும் கேட்டது.

“ஏத்தா, சஞ்சனா கேட்டிச்சிண்டா ஒரு அர்த்தம் இருக்கு. நீ இங்கிட்டு பிறந்து வளர்ந்தவ , உனக்கும் மாவளின்டா, என்னெண்டு தெரியாதா?” என்றார் ரங்கம்.

“ அப்பா இறக்கவுமே, மதுரைக்குள்ள போயிட்டோம்ல பெரியப்பா. நானாவது அம்மாச்சி வீட்டுக்கு வந்துட்டு போவேன், அவ அம்மவோடவே தான் இருப்பா” என சாமி விளக்கம் தர, ரங்கத்துக்கு உருகி விட்டது.

“ உங்களையெல்லாம் நினைச்சாவது, நான் கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கலாம். காலம் கடந்து யோசிச்சு என்ன செய்ய?” ரங்கம் புலம்ப,

“ஒன்னும் செய்ய முடியாது. நீங்க ஒருபக்கம், ராஜப்பா ஒருபக்கம் பணம் சம்பாதிக்கிறோம்னு ஃபாரின்ல போயி உட்கார்ந்துக்கிட்டிங்க, நானு அண்ணா, அக்கா எல்லாரும், உங்களை எல்லாம் மிஸ் பண்ணுனது தான் மிச்சம் “ என சஞ்சனா சலித்தது.

“ இப்ப என்ன? அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உங்களை கொண்டாடிகிட்டு தானே இருக்காங்க” என சரோஜா துரைகளுக்கு வக்காலத்து வாங்க,

“ ஓகே, ஆனா இன்னும் என்ஜாய் பண்ணி இருக்கலாம். இந்த மாவளி எல்லாம் என்னனு தெரியலையில்லை” சஞ்சு குறை பட,

“ சஞ்சுமா, நானே மாவளி எல்லாம் பார்த்து இல்லை” என்றாள் சித்ரா.

“ நீங்க தீபாவளிக்கு வெடிச்ச பட்டாசுக்கு முன்னாடி, அதெல்லாம் ஒன்னுமே இல்லை ஆத்தா” என விருமன் சொல்ல,

“ ஆனா, மாவளியை நாங்களே தயாரிச்ச சந்தோஷம் இருந்தது” என செல்வமணி நினைவை மலர்த்தினான்.

செல்வமணி, மாமன் துரை பாண்டியோடு சிறுவயதில் பெருமாள் பட்டி வருவதையும், ராமதுரையை உசுப்பேற்றி, மாவளி செய்ய வைப்பது, தங்களை அதட்டி வேலை வாங்குவது, நிர்மலா, செல்ல முத்து அவர்களுக்கு உதவுவது என கதையாக சொல்லவும், சித்ரா ஆசையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

இதுவரை யாரும் ராமதுரையை பற்றி பெரிதாக பேசியது இல்லை. உடல் நலம் குன்றியவன், அற்ப ஆயுளில் சென்றான் என்பது மட்டுமே தகவலாக இருக்க, சாமியும், சித்ராவும் தங்கள் அப்பாவை பற்றிய செய்திகளை ஆர்வமாகவே கேட்டனர். சித்ராவின் “அப்பா” என்ற பிம்பத்தின் மீதான ஏக்கம் அவள் கண்களில் தெரிய, அதை பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு, மின் வெட்டு போல் ஒரு யோசனை ஓடியது. மாவளி மூலம் ராமத்துரையின் நினைவை அடையாளப்படுத்த நினைத்தான்.

“ சித்தப்பா, எதை எதையோ ரீகிரியேட் பண்றாங்க, நாம ஏன், இந்த கார்த்திகைக்கு மாவளி செஞ்சு கொண்டாடக் கூடாது? “ ஆதி, செல்வத்திடம் கேள்வி எழுப்ப,

“ அதெல்லாம் தேவையில்லாத வேலை பேராண்டி” என ரங்கம் சலித்தார்.

“அவரு சொல்றது நல்ல ஐடியா, செய்யலாம்பா. எனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்” என சித்ராவும்,

“ஆமாம், நானும் படிச்சு, படிச்சு டயர்ட் ஆகிட்டேன். எனக்கும் ஒரு ரிலேசக்சேஷன் வேணும்” என சஞ்சுவும் சொல்ல, ரங்கம் யோசித்தார்.

“ மாவளி சுத்த, மாமன் கையிலையும், உடம்புலையும் வலுவு இல்லையில்ல. அது தான் வேண்டாமுண்டு சொல்றாப்ல” என செல்வமணி கிண்டலடிக்க,

“ லந்து, பந்தயம் வச்சுக்குவோமாப்பு, அண்ணன் தம்பி நாங்க நல்லா சுத்துறோமா, மாமன மச்சான் நீங்க நல்லா சுத்துறீங்களாண்டு பார்த்துடுவோம். “ ரங்கம் சவால் விட்டார்.

“ பார்த்துடுவோம்” என செல்வமணியும் சொல்ல, “ மாவளி யார் செய்யிறது? “ என்ற கேள்வி எழுந்தது.

அந்த நேரம் உள்ள வந்த ராஜதுரையிடமும் விவரம் சொல்லப் பட,

“ நம்ம பயலுக எதுக்கு இருக்கானுங்க. தயார் பண்ண சொல்லிடுவோம்” என்றான் ராஜதுரை.

“ மாம்ஸ், நீ பாட்டுக்கு பழக்க தோஷத்தில நாட்டு குண்டு செஞ்சிடாதே” என செல்வமணி கேலி பேச,

“ மாமா, இந்த பிஸ்னஸ் வேறையா” என ஆதியும் கிண்டலடிக்க,

“ அடேய், பேச்சு வாக்கல போட்டு விட்டுறாதீங்க. இருக்கிற கடுப்பில என் பொண்டாட்டி என்னை புடிச்சு ஜெயில்ல போட்டுடுவா” ராஜதுரை சொல்ல,

“ மம்மி அவ்வளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை போப்பா” என்றது சஞ்சனா.

‘அவளா ஒர்த் இல்ல. என்னைக்கு செல்லபாண்டிக்கு சம்மனை அனுப்பி, குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டி விடப் போறாளோ’ என நினைத்தான் ராஜதுரை.

பூங்குயில், செல்வமணியை ஜாடை பேசியது, ராஜதுரை, ராதாராணி நடவடிகக்கை எடுத்து விடுவாளோ என அஞ்சுவது எல்லாமும், எம் எல் ஏ. செல்லபாண்டி சம்பந்தப்பட்ட விசயமாகவே இருந்தது.

முதல் இரண்டு நாள்கள் பரணி தீபம், கார்த்திகை ஆகிய நாள்களில் வீட்டிலும், மலை உச்சியிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கம் இருக்க, அவரவர் வீட்டில் எல்லாரும் வேலையாக இருப்பார்கள். மூன்றாம் நாள், கருமாத்தூர் மூணுசாமி கோவில் மந்தையிலேயே மாவளி சுற்றி, சொக்கப்பனை கொளுத்தி, குல தெய்வ வழிபாடு என ஆதி வழக்கில் மறைந்த பழக்கத்தை கிளப்பி விட்டான்.

அங்காளி, பங்காளி ஊர்காரர்களிடம் பேசி, செலவை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்ல, “அப்புறம் என்ன ஜாமாய்சுடுவோம்” என, ஐம்பது வயதை கடந்த ஆண்கள், ஆர்வமாகவே அந்த விழாவுக்கு தயாராகினர்.

“ஏப்பா, இந்தா இருக்கு சிவகாசி, வண்டியில ஒரு அழுத்து அழுத்துனமுண்டா, மத்தாப்பை வேணுங்கிற மாதிரி செஞ்சு கொடுத்திட போறாய்ங்கே” என ஒருவர் சொல்ல,

“ சிவகாசிக்கு போயிட்டவன். வடக்கம்பட்டிகாரன் செய்யாத வேட்டா? “ என்றார் மற்றொருவர்

“ உன் மாமன்கிட்ட இருக்க பூச்சிபாண்டியே வடக்கம்பட்டி வேட்டு செஞ்சவன் தான். அவனையே புடி” என பெரிசுகள் ஆலோசனை சொன்னார்கள்.

ராஜதுரை கண் அசைவில் ஆதி, கூழன் மேற்பார்வையில், பூச்சி பாண்டி தலைமையில் மாவளி தயாரிக்கும் பணி போர்கால அடிப்படையில் பழைய கால முறைப்படி நடந்தது.

மானூத்து பாண்டி குடும்பத்துக்கும் அழைப்பை விடுக்க, “ மாவளியா?” என சிவபாண்டி முதல், வீரபாண்டி, துரை பாண்டி என மூத்த பாண்டிகள், அவரவர் சிறுவயதில் செய்த வீர சாகசங்களை நினைவு கூற, பேச்சியம்மாள் கருத்தபாண்டி ஐயா நினைவில் லயித்தார்.

ஆதி, மாவளி திருவிழாவுக்காக மெனக் கெட்டதை பார்த்த சித்ரா,
“ உங்களுக்கு இருக்கிற வேலை பளுவுல, இதையும் எதுக்கு இழுத்துக்கிட்டீங்க” சித்ரா கரிசனையாக விசாரித்தாள்.

அவளுக்கு கனமான க்வில்ட்டை போர்த்தி விட்டு, சாய்ந்து அமர்ந்து, செல் போனில் குறிப்பெழுதிக் கொண்டிருந்தவன்,
“மாவளி வச்சாவது எல்லாரும் உங்க அப்பாவை பத்தி பேசுறாங்கல்ல. அந்த நினைவுகளை உங்க இரண்டு பேருக்கும் கொடுக்கத்தான்” எனவும் அவளுக்கு உருகி விட்டது.

“ஹேப்பி ஃபீலிங்க் தான். ஆனா அதை விட, எனக்காக நீங்க யோசிக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு” என அவன் புறம் திரும்பி அவனை ஒட்டி படுக்க,
அவள் சிகையை தடவிக் கொடுத்தவன்,

“ நான் செய்யாமல் யார் செய்வா? கண்டதையும் நினைக்காமல் ரெஸ்ட் எடு. ரிசார்ட்காரர்கிட்ட பேசிட்டேன். அங்கையை வந்து தங்கிக்க சொல்றார். திறப்பு விழா வரை, இங்கையும், அங்கையுமா இருந்துக்குவோம்” என்றான்.

“அழகி, ஹரிணி, உதயன் ஃபங்சன் போட்டோ போட்டிருக்கா பார்த்திங்களா?” சித்ரா கேட்க,

“ நம்ம பார்க்கனும்னு தானே, இந்த சில்லுவண்டுங்க ஸ்டேடஸ் வைக்கிதுங்க” என்றவன்,
“ அதுமட்டுமில்ல, அந்த கொழுப்பெடுத்தவன், அவைய்ங்க போட்டோவை அனுப்பி விட்டு, நீ எப்ப இந்த விசேஷம் வைக்கப் போறேண்டு கேட்கிறான்” என ஹித்தேஷ் கேட்டதாகச் சொல்லி, அலைபேசியை அவளிடம் காட்டினான்.

பதிலாக கூடிய விரைவில் என்ற ஆதி அனுப்பிய பதிலும் அவள் கவனத்தில் பட, “ ஹித்தேஸ் தான் வம்பு பண்ணுதுன்னா, நீங்களும் விட மாட்டிங்க” என்றபடி வெட்கத்தை மறைக்க மறுபும் திரும்பி படுக்க,

“ அந்த பதில் போடுற வரைக்கும் அவன் விடமாட்டான். ஏன் பாசிபிள் இல்லையா என்ன? உன் டாக்டரக்காவும் அதை தானே சிபாரிசு பண்ணுச்சு, நான் எலிஜிபில் மேன் தான்” என்றான் உல்லாசமாக சிரித்தபடி.

“நான் தூங்கிட்டேன் “ அவள் சொல்ல,
“உலகத்திலே முதல் தடவையா, தூங்குறவங்களே, தூங்கிட்டேண்டு பதில் சொல்லி இருக்காங்க பா” அவன் கேலி செய்ய, சிரிப்பில் குலுங்கிய அவள் மேனியே அவனுக்கு பதிலாக இருந்தது.

‘ பசப்பி அடுத்தவன் பொண்டாட்டி. அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவளை நினைக்கலை, ஆனா மறக்கவும் இல்லாமல் மனசில ஏதோ உருத்திக்கே இருக்கு. சித்து, உன்னை சந்தோசமா வச்சுக்கணும், உன் கூட வாழனுமுண்டு தான் ஆசை , வாழ்த்துருவேனாண்டு சந்தேகமாவும் இருக்கு. என்னமோ தெரியலை தள்ளிட்டே போகுது. அந்த நாள், சிட்டுவேஷன் தான் அதை முடிவு பண்ணும்னு நினைக்கிறன். கருப்பா ரெண்டுகெட்டான் வாழக்கைக்கு நல்ல வழி காட்டு’ என ஆதி மனதுக்குள் வேண்ட, சித்ரா எந்த அழைப்புறுதலும் இல்லாமல் கணவனை மனதில் நிறுத்தி தூங்கினாள். கிணற்று நீரை வெள்ளம் கொண்டுபோகாது, ஆதியோடு நல்ல வாழ்வு வாழ்வோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

வளையபட்டி, ஜமீன் இல்லத்துக்கும் கார்த்திகை அழைப்பிதழை அனுப்பி விட்டு, மந்திரி பெரியப்பாவை அலவலகத்தில் சென்று நேரடியாகவே ஆதி அழைத்தான்.

“ நீங்க நல்லா மாவளி சுத்துவீங்கண்டு அப்பா சொன்னாரு” எனவும், சிரித்துக் கொண்ட மந்திரி

“ அதெல்லாம் ஒரு காலம். இப்ப முடியுமோ இல்லையோ, நேரமிருந்தா கட்டாயம் வர்றேன்” என்றிருந்தார்.

அவரின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அந்தகாலத்தில் மாவளி, மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு இவைகள் தான் கன்னி பெண்களை கவர்ந்து இழுக்கும் வீர விளையாட்டுகள். ராஜவேலு துடிப்பான இளைஞனாக எல்லாவற்றிலும் கலந்து கொள்வார். வளையபட்டியில் ஜமீன் கெத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பெரியவர்களின் எண்ணத்துக்கு கட்டுப்பட்டு அமெரிக்கையாக இருப்பவர், கருமாத்தூர் வரும் போது இயல்பாக இருப்பார்.

ஒரு கார்த்திகை திருநாளில் கருமாத்தூர் மூணுசாமி கோவிலில் பெண்கள் கோவிலில் விளக்கேற்றி திரிய, ஆண்கள் சொக்கப்பன கொளுத்தி, மாவளி சுற்றி வீரசாகசம் செய்து கொண்டிருந்தனர்.

உள்ளிருக்கும் மருந்து கங்கு தீரும் வரை, பற்ற வைத்த தீயால் பொறி பறக்கும். மாவளியில் கட்டப்பட்டிருக்கும் கயிறை பிடித்து சுற்றுவதால் கங்கு மத்தாப்பு போல் சிதறி, சங்கு சக்கரம் போல் சுழன்று சுற்றும். லாவகமாக சுற்றாவிட்டால், சுற்றுபவர் முகத்தில் வந்து அடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

முதல் ஆளாக ராஜவேலு லாவகமாக சுமார் பத்து நிமிடங்களுக்கு மாவளியை சுற்ற, அவரின் கை வலிமையை ஊரே பாராட்டினர். அடுத்தடுத்து இளவட்டங்கள் தங்களால் இயன்ற வரை சுற்றி, கன்மாய்க்குள் தூக்கி போட்டனர். இதில் விருமனும் அடக்கம்.

அடுத்ததாக ஒருவர் சுற்றிய மாவளியின் கயிறு அறுந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் திசையில் சென்றது, பெணகள் சிதறி ஓடினர். அமுதா கைகளில் பூஜை கூடையை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களும் இருந்தது. மாவளி நேரடியாக அவளை தாக்கியிருந்தால், விபத்து உறுதி. இமைக்கும் நேரத்தில் இடையில் புகுந்த ராஜவேலு நெருப்பு பிழம்பாக வந்த மாவளியை கையால் தட்டி திசை மாற்றி விட்டு தடுமாறி நின்ற அமுதாவை கீழே விழாமலும் பிடித்தார்.

அவள் விழி விரித்து பார்க்க, தீ கங்கு பட்டதில் அவர் முகம் வலியை காட்டியது. சட்டென அவர் கையை பார்த்தவள்,
“ என்னங்க” என மடி தாங்கி பாட்டிலில் வைத்திருந்த குளிர் நீரை மெல்ல ஊற்றினாள்.

அதற்குள் ஆட்கள் ஓடி வர, “ விணுமனும், “ அண்ணேன்” என ஓடிந்தார். அமுதா,கோவிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை காட்டி, “ வாழை மரத்தை வெட்டிட்டு வாங்க” என பதட்டமாக சொல்ல, விருமன் ஓடினார்.

ராஜவேலுக்கு வலியில் கண்கள் சொருக, “ இங்க பாருங்க, கொஞ்சம் தண்ணீர் குடிங்க” என புகட்டியும் விட்டாள்.

“ என்னால தான், உங்களுக்கு இப்படி ஆச்சு” என புலம்ப, அவர் இல்லை என மறுத்தார். விருமன் வாழையை வெட்டி வந்து
அதன் சாரை உள்ளங்கையில் பிழிந்தார்.

“ மோதிரத்தை கழட்டுங்க. சங்கடமா இருக்கும்” என அமுதா சொல்ல, வலியோடு தானே கழட்டி அவள் கைகளில் தந்தார்.

ஒரு வண்டியை அமர்த்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அமுதாவுக்கு உடன் சொல்ல முடியாத வருத்தம். கட்டுப் போட்டு வந்த ராஜவேலு ஒருவாரம் கருமாத்தூரில் அம்மாச்சி வீட்டில் தான்ஸ தங்கினார்.

அடுத்த நாள் விசாரித்து விட்டு, மோதிரத்தை திருப்பி தர அமுதா வர,” உன்கிட்டையே இருக்கட்டும். பிறகு வாங்கிக்கிறேன்” என்றார். அன்று ஆரம்பித்த பழக்கம், ஒருவருடம் கழித்து, நடையாய் நடந்து, கரையாய் கரைத்து, அமுதாவையும், இரு வீட்டினரையும் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அன்பின் சின்னமாய் உதயன் பிறந்தான். அதன் பின் இரண்டு, மூன்று கருச் சிதைவு, ஏழு வருடங்கள் கழித்தே மீண்டும் கருவுற்றறார்.

அதன் பின் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேற, அப்பாவை போலவே மகனுக்கும் இந்த ஊர் அமுதாவை பற்றிய நல்ல நினைவுகளையும், அதையும் தாண்டி துர் சம்பவங்களையும் நினைவு படுத்துவதாக அமைய, மனநிலை பாதிக்கப்பட்ட மாமனாரை கூட அதற்கான மருத்துவ மனையில் சேர்த்து விட்டு இந்த ஊருக்கு வருவதையை தவிர்த்திருந்தார்.

ஆதிசிவா ஏற்பாடு செயதிருக்கும் இந்த விழாவில் மீண்டும் மாயகுறும்பன் வரவாரா? ஜெயா, செல்வமணி கண்ணில் படுவாரா? மந்திரியின் வாழ்வில் நடந்த கருப்பு பக்கங்கள் பாண்டி குடும்பத்துக்கு தெரிய வருமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.
 
மாவளியின் விளக்கம் நன்று

இப்போதும் முக்கியாமான திருப்பம் அதன் வழியாக நடக்கும்போல
 
😁.இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
 
அய்யா செல்வமணி.. நீ தான் உன் மாமன் மக சஞ்சனாவுக்கு மாவளி சுத்தி காட்டு.. பிள்ளை பாவம் பார்த்தது இல்லையாமே... இந்த குயிலுக்கும் வயசு ஆகிடுச்சு...

கலெக்டர் அம்மா கிட்ட MLA மாட்டுவரா... அடங்கப்பா ராஜதுரை நீ கலெக்டர் அம்மாக்கு ரொம்ப பயந்தவன் தான்... அந்த பிள்ளை கண்ணுல விரல விட்டு ஆட்டுறவன் தான நீ.. இப்போ என்ன பங்காளி இலைக்கு பாயசம் கேக்குற... வீட்டுக்கு அடங்காத மாடு ஊருக்கு அடங்குதா னு பாப்போம்... அப்புறம் யாரு தான் பூனைக்கு மணியை கட்டுறது... இப்புடியே விட்டா இந்த செல்லப்பாண்டி கருத்தபாண்டி தாத்தா பெயரை கெடுத்து விட்டுருவன்..

ஆத்தா குயிலு இப்போ எதுக்கு மாமன் மேல கடுப்புல திரியுற...இப்புடியே மாமனை முறைச்சுக்கே திரிஞ்சா அப்புறம் சஞ்சனா விட்டு பெட்ரோல் bulk வீட்டுக்கு சாப்பாடு கூடை குடுத்து விட்ருவோம் பாத்துக்கோ... நாரதர் கலகம் நன்மைக்கே னு சொல்ற மாதிரி செல்வமணி எது செஞ்சாலும் அது உன் பாண்டி குடும்பத்து நன்மைக்கே.. பாக்கலாம்...
ராஜவேலு யோசிக்கிறதா பார்த்தா இவங்களுக்கு பரம்பரையா இந்த பிரச்சனை இருக்கும் போலவே.. இவைங்க ஜாமின் குடும்பமா இல்ல பைத்தியக்கார குடும்பமா னு தெரியலயே... அய்யா பெரிய போலீஸ் மதுரைக்கு டூட்டி மாத்தி வந்து உங்க அண்ணன் சம்பந்தம் பண்ணிருக்க வீடு எப்புடி என்னனு விசாரிச்சு பைசல் பண்ணி விடு... உன் மாமன் செல்வமணி ஆரம்பிச்சா நீ முடிக்கணும்... அதுதானே law... கலகாலத்துல வந்து சேருப்பா... ஆத்தா சின்ன கலெக்டர் அம்மா ராகவி எங்க இருக்க.. பொங்கல் லீவுக்கு ஊருக்கு வாங்க...
 
அருமையான பதிவு 🤩🤩
மாவளி திருநாள் ஆதி _ சிட்டு சேரும் நாளாக அமையுமா....??!!
 
92. தேன்சிட்டுகள்
கருமாத்தூர் ஆதிசிவா இல்லம், சித்ராவுக்கு கார்த்திகை சீர் செய்வதற்காக, ரங்கதுரை, சாமி துரை, சஞ்சனாவோடு, சரோஜாவையும் அழைத்து வந்திருந்தார். செல்வமணி, பூங்குயிலும் சித்ராவை பார்க்க வந்திருக்க, கோதை அனைவருக்குமாக மாலை சிற்றுண்டியை தயாரித்து கொண்டிருந்தாள்.

அந்த காலத்து கார்த்திகை கொண்டாட்டம், சொக்கப்பனை, மாவளி சுற்றுதல் பற்றிய பேச்சு வந்தது.

“ முந்தியெல்லாம் மாசம் பொறக்கவுமே, மாவளி சுத்துறதுக்கு கங்கு ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சிடுவோம். சொக்கப்பனை கொளுத்தி, மாவளி சுத்தி, வெல்லபாகுல பிடிச்ச பொறிவிளங்காயை திண்டுக்கே கார்த்திகையை கொண்டாடுவோம். ராமு பக்குவமா மாவளி செய்வான். எல்லாம் முன் ஜென்மம் மாதிரி போயிடுச்சு” என ரங்கதுரை தம்பியை நினைவு கூற, சாமியும், சித்ராவும் உணர்ச்சி வயப்பட்டனர்.

“ ஆமாம்யா, பனைந்தட்டியை பொறுக்கிட்டு வரச் சொல்லி, என்னையும், சின்ன துரையையும் தானே பத்தி விடுவீங்க” என செல்வமணி நினைவு கூற,

“ ஊர் சுத்துற ஆளுகளுக்கு தானே, எது எங்க இருக்குண்டு தெரியும்” என பூங்குயிலும் கணவன் காலை வாரினாள்.

“ அப்ப சித்தப்பாவை ஊர் சுத்திண்டு சொல்றியா சித்தி” ஆதி கோர்த்து விட,

“அதிலென்ன சந்தேகம். இப்பவும் ஊரை சுத்தி வம்பை விலைக்கு வாங்கிட்டு தானே இருக்குது” என பூங்குயில் நொடித்தாள்.

“ இப்ப என்னாத்துக்கு மாமனை நொடிக்கிறவ” என கோதை ரகசியமாக தங்கையை கேட்க, “ அப்புறம் சொல்றேன்” என ஜாடை காட்டினாள்.

“ ஏண்டி, பெரிய மனுசண்டு என்னை நம்பி பஞ்சாயத்துக்கு வர்றாய்ங்கே, அப்புறம் பைசல் பண்ணி விட வேணாமா? “ செல்வம் கேட்க,

“ மாப்பிளை, அதெல்லாம் கரெக்டா தான் ஆத்தா இருப்பாப்ல” என ரங்கம் சப்பை கட்டு கட்டினார்.

செல்லபாண்டியின் மச்சினன் மனோகர், குறித்த இரண்டு மூன்று புதிய பஞ்சாயத்துகள் செல்வமணியிடம் வந்திருந்தன. கோபமாக பேசியவர்களிடம், “ மாமாகிட்ட பேசுறேன்” என சமதானப் படுத்தி வைத்திருந்தான். அந்த இடைவெளியில், புகார் சொன்னவர் பின்புலத்தை ஆராய செல்வமணி அங்கங்கே அலைய, பூவு அது குறித்து தனது சலிப்பை அக்காவிடம் வெளிப்படுத்தினாள்.

பாண்டிக் குடும்பம் ஹரிணிக்கு மருந்து கொடுக்க வளையப் பட்டி சென்று வந்தது, செல்லபாண்டியோடு செக்கானத்துகாரர்களின் நெருக்கத்தினால் வரும் பிரச்சினைகள் என்ற பேச்சுகளோடு அக்காவும் தங்கையும் சுவியம், வடை என செய்தனர். உதவி செய்ய வந்த சரோஜாவை, மகளோடு பேசிக் கொண்டிருக்க சொல்லிவிட்டு தாங்களே பரிமாறவும் செய்தனர்.

கூடத்தில் இன்னும் சொக்கப்பனை பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. விருமனும் கருமாத்தூர் மூணுசாமி முன் கொளுத்தப்படும் சொக்கப்பனையை நினைவு கூர்ந்து, “ ராஜவேலு அண்ணேன் நல்லா மாவளி சுத்தும்.” என மந்திரி குமாரராசாவை குறித்து சொல்ல,

“ அவர் மகன், அதுக்கும் மேல சுத்துவாப்ல” என ஆதி கிண்டலடிக்க,
“ பேச்சு எங்க சுத்துனாலும், கச்சிதமா உதயன்கிட்ட வந்து முடிக்கிற பாரு. உன் மனசில அவர் தாண்டா நிறைஞ்சு இருக்காரு” செல்வமணி நக்கலடிக்க,

“ நல்லா சொல்லுங்க மாமா” சித்ரா பின் பாட்டு பாடினாள்.

ஆதி அவளை முறைக்க, பேச்சை மாற்றும் விதமாக, “மாவளின்டா , என்ன பெரியப்பா?” சித்ரா ரங்கதுரையை கேட்க,

“ஆமாம், சொல்லுங்க, பயங்கர பில்டப் விடுறீங்க” என சஞ்சனாவும் கேட்டது.

“ஏத்தா, சஞ்சனா கேட்டிச்சிண்டா ஒரு அர்த்தம் இருக்கு. நீ இங்கிட்டு பிறந்து வளர்ந்தவ , உனக்கும் மாவளின்டா, என்னெண்டு தெரியாதா?” என்றார் ரங்கம்.

“ அப்பா இறக்கவுமே, மதுரைக்குள்ள போயிட்டோம்ல பெரியப்பா. நானாவது அம்மாச்சி வீட்டுக்கு வந்துட்டு போவேன், அவ அம்மவோடவே தான் இருப்பா” என சாமி விளக்கம் தர, ரங்கத்துக்கு உருகி விட்டது.

“ உங்களையெல்லாம் நினைச்சாவது, நான் கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கலாம். காலம் கடந்து யோசிச்சு என்ன செய்ய?” ரங்கம் புலம்ப,

“ஒன்னும் செய்ய முடியாது. நீங்க ஒருபக்கம், ராஜப்பா ஒருபக்கம் பணம் சம்பாதிக்கிறோம்னு ஃபாரின்ல போயி உட்கார்ந்துக்கிட்டிங்க, நானு அண்ணா, அக்கா எல்லாரும், உங்களை எல்லாம் மிஸ் பண்ணுனது தான் மிச்சம் “ என சஞ்சனா சலித்தது.

“ இப்ப என்ன? அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு உங்களை கொண்டாடிகிட்டு தானே இருக்காங்க” என சரோஜா துரைகளுக்கு வக்காலத்து வாங்க,

“ ஓகே, ஆனா இன்னும் என்ஜாய் பண்ணி இருக்கலாம். இந்த மாவளி எல்லாம் என்னனு தெரியலையில்லை” சஞ்சு குறை பட,

“ சஞ்சுமா, நானே மாவளி எல்லாம் பார்த்து இல்லை” என்றாள் சித்ரா.

“ நீங்க தீபாவளிக்கு வெடிச்ச பட்டாசுக்கு முன்னாடி, அதெல்லாம் ஒன்னுமே இல்லை ஆத்தா” என விருமன் சொல்ல,

“ ஆனா, மாவளியை நாங்களே தயாரிச்ச சந்தோஷம் இருந்தது” என செல்வமணி நினைவை மலர்த்தினான்.

செல்வமணி, மாமன் துரை பாண்டியோடு சிறுவயதில் பெருமாள் பட்டி வருவதையும், ராமதுரையை உசுப்பேற்றி, மாவளி செய்ய வைப்பது, தங்களை அதட்டி வேலை வாங்குவது, நிர்மலா, செல்ல முத்து அவர்களுக்கு உதவுவது என கதையாக சொல்லவும், சித்ரா ஆசையாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

இதுவரை யாரும் ராமதுரையை பற்றி பெரிதாக பேசியது இல்லை. உடல் நலம் குன்றியவன், அற்ப ஆயுளில் சென்றான் என்பது மட்டுமே தகவலாக இருக்க, சாமியும், சித்ராவும் தங்கள் அப்பாவை பற்றிய செய்திகளை ஆர்வமாகவே கேட்டனர். சித்ராவின் “அப்பா” என்ற பிம்பத்தின் மீதான ஏக்கம் அவள் கண்களில் தெரிய, அதை பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு, மின் வெட்டு போல் ஒரு யோசனை ஓடியது. மாவளி மூலம் ராமத்துரையின் நினைவை அடையாளப்படுத்த நினைத்தான்.

“ சித்தப்பா, எதை எதையோ ரீகிரியேட் பண்றாங்க, நாம ஏன், இந்த கார்த்திகைக்கு மாவளி செஞ்சு கொண்டாடக் கூடாது? “ ஆதி, செல்வத்திடம் கேள்வி எழுப்ப,

“ அதெல்லாம் தேவையில்லாத வேலை பேராண்டி” என ரங்கம் சலித்தார்.

“அவரு சொல்றது நல்ல ஐடியா, செய்யலாம்பா. எனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்” என சித்ராவும்,

“ஆமாம், நானும் படிச்சு, படிச்சு டயர்ட் ஆகிட்டேன். எனக்கும் ஒரு ரிலேசக்சேஷன் வேணும்” என சஞ்சுவும் சொல்ல, ரங்கம் யோசித்தார்.

“ மாவளி சுத்த, மாமன் கையிலையும், உடம்புலையும் வலுவு இல்லையில்ல. அது தான் வேண்டாமுண்டு சொல்றாப்ல” என செல்வமணி கிண்டலடிக்க,

“ லந்து, பந்தயம் வச்சுக்குவோமாப்பு, அண்ணன் தம்பி நாங்க நல்லா சுத்துறோமா, மாமன மச்சான் நீங்க நல்லா சுத்துறீங்களாண்டு பார்த்துடுவோம். “ ரங்கம் சவால் விட்டார்.

“ பார்த்துடுவோம்” என செல்வமணியும் சொல்ல, “ மாவளி யார் செய்யிறது? “ என்ற கேள்வி எழுந்தது.

அந்த நேரம் உள்ள வந்த ராஜதுரையிடமும் விவரம் சொல்லப் பட,

“ நம்ம பயலுக எதுக்கு இருக்கானுங்க. தயார் பண்ண சொல்லிடுவோம்” என்றான் ராஜதுரை.

“ மாம்ஸ், நீ பாட்டுக்கு பழக்க தோஷத்தில நாட்டு குண்டு செஞ்சிடாதே” என செல்வமணி கேலி பேச,

“ மாமா, இந்த பிஸ்னஸ் வேறையா” என ஆதியும் கிண்டலடிக்க,

“ அடேய், பேச்சு வாக்கல போட்டு விட்டுறாதீங்க. இருக்கிற கடுப்பில என் பொண்டாட்டி என்னை புடிச்சு ஜெயில்ல போட்டுடுவா” ராஜதுரை சொல்ல,

“ மம்மி அவ்வளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை போப்பா” என்றது சஞ்சனா.

‘அவளா ஒர்த் இல்ல. என்னைக்கு செல்லபாண்டிக்கு சம்மனை அனுப்பி, குடும்பத்துக்குள்ள சண்டையை மூட்டி விடப் போறாளோ’ என நினைத்தான் ராஜதுரை.

பூங்குயில், செல்வமணியை ஜாடை பேசியது, ராஜதுரை, ராதாராணி நடவடிகக்கை எடுத்து விடுவாளோ என அஞ்சுவது எல்லாமும், எம் எல் ஏ. செல்லபாண்டி சம்பந்தப்பட்ட விசயமாகவே இருந்தது.

முதல் இரண்டு நாள்கள் பரணி தீபம், கார்த்திகை ஆகிய நாள்களில் வீட்டிலும், மலை உச்சியிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கம் இருக்க, அவரவர் வீட்டில் எல்லாரும் வேலையாக இருப்பார்கள். மூன்றாம் நாள், கருமாத்தூர் மூணுசாமி கோவில் மந்தையிலேயே மாவளி சுற்றி, சொக்கப்பனை கொளுத்தி, குல தெய்வ வழிபாடு என ஆதி வழக்கில் மறைந்த பழக்கத்தை கிளப்பி விட்டான்.

அங்காளி, பங்காளி ஊர்காரர்களிடம் பேசி, செலவை தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்ல, “அப்புறம் என்ன ஜாமாய்சுடுவோம்” என, ஐம்பது வயதை கடந்த ஆண்கள், ஆர்வமாகவே அந்த விழாவுக்கு தயாராகினர்.

“ஏப்பா, இந்தா இருக்கு சிவகாசி, வண்டியில ஒரு அழுத்து அழுத்துனமுண்டா, மத்தாப்பை வேணுங்கிற மாதிரி செஞ்சு கொடுத்திட போறாய்ங்கே” என ஒருவர் சொல்ல,

“ சிவகாசிக்கு போயிட்டவன். வடக்கம்பட்டிகாரன் செய்யாத வேட்டா? “ என்றார் மற்றொருவர்

“ உன் மாமன்கிட்ட இருக்க பூச்சிபாண்டியே வடக்கம்பட்டி வேட்டு செஞ்சவன் தான். அவனையே புடி” என பெரிசுகள் ஆலோசனை சொன்னார்கள்.

ராஜதுரை கண் அசைவில் ஆதி, கூழன் மேற்பார்வையில், பூச்சி பாண்டி தலைமையில் மாவளி தயாரிக்கும் பணி போர்கால அடிப்படையில் பழைய கால முறைப்படி நடந்தது.

மானூத்து பாண்டி குடும்பத்துக்கும் அழைப்பை விடுக்க, “ மாவளியா?” என சிவபாண்டி முதல், வீரபாண்டி, துரை பாண்டி என மூத்த பாண்டிகள், அவரவர் சிறுவயதில் செய்த வீர சாகசங்களை நினைவு கூற, பேச்சியம்மாள் கருத்தபாண்டி ஐயா நினைவில் லயித்தார்.

ஆதி, மாவளி திருவிழாவுக்காக மெனக் கெட்டதை பார்த்த சித்ரா,
“ உங்களுக்கு இருக்கிற வேலை பளுவுல, இதையும் எதுக்கு இழுத்துக்கிட்டீங்க” சித்ரா கரிசனையாக விசாரித்தாள்.

அவளுக்கு கனமான க்வில்ட்டை போர்த்தி விட்டு, சாய்ந்து அமர்ந்து, செல் போனில் குறிப்பெழுதிக் கொண்டிருந்தவன்,
“மாவளி வச்சாவது எல்லாரும் உங்க அப்பாவை பத்தி பேசுறாங்கல்ல. அந்த நினைவுகளை உங்க இரண்டு பேருக்கும் கொடுக்கத்தான்” எனவும் அவளுக்கு உருகி விட்டது.

“ஹேப்பி ஃபீலிங்க் தான். ஆனா அதை விட, எனக்காக நீங்க யோசிக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு” என அவன் புறம் திரும்பி அவனை ஒட்டி படுக்க,
அவள் சிகையை தடவிக் கொடுத்தவன்,

“ நான் செய்யாமல் யார் செய்வா? கண்டதையும் நினைக்காமல் ரெஸ்ட் எடு. ரிசார்ட்காரர்கிட்ட பேசிட்டேன். அங்கையை வந்து தங்கிக்க சொல்றார். திறப்பு விழா வரை, இங்கையும், அங்கையுமா இருந்துக்குவோம்” என்றான்.

“அழகி, ஹரிணி, உதயன் ஃபங்சன் போட்டோ போட்டிருக்கா பார்த்திங்களா?” சித்ரா கேட்க,

“ நம்ம பார்க்கனும்னு தானே, இந்த சில்லுவண்டுங்க ஸ்டேடஸ் வைக்கிதுங்க” என்றவன்,
“ அதுமட்டுமில்ல, அந்த கொழுப்பெடுத்தவன், அவைய்ங்க போட்டோவை அனுப்பி விட்டு, நீ எப்ப இந்த விசேஷம் வைக்கப் போறேண்டு கேட்கிறான்” என ஹித்தேஷ் கேட்டதாகச் சொல்லி, அலைபேசியை அவளிடம் காட்டினான்.

பதிலாக கூடிய விரைவில் என்ற ஆதி அனுப்பிய பதிலும் அவள் கவனத்தில் பட, “ ஹித்தேஸ் தான் வம்பு பண்ணுதுன்னா, நீங்களும் விட மாட்டிங்க” என்றபடி வெட்கத்தை மறைக்க மறுபும் திரும்பி படுக்க,

“ அந்த பதில் போடுற வரைக்கும் அவன் விடமாட்டான். ஏன் பாசிபிள் இல்லையா என்ன? உன் டாக்டரக்காவும் அதை தானே சிபாரிசு பண்ணுச்சு, நான் எலிஜிபில் மேன் தான்” என்றான் உல்லாசமாக சிரித்தபடி.

“நான் தூங்கிட்டேன் “ அவள் சொல்ல,
“உலகத்திலே முதல் தடவையா, தூங்குறவங்களே, தூங்கிட்டேண்டு பதில் சொல்லி இருக்காங்க பா” அவன் கேலி செய்ய, சிரிப்பில் குலுங்கிய அவள் மேனியே அவனுக்கு பதிலாக இருந்தது.

‘ பசப்பி அடுத்தவன் பொண்டாட்டி. அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவளை நினைக்கலை, ஆனா மறக்கவும் இல்லாமல் மனசில ஏதோ உருத்திக்கே இருக்கு. சித்து, உன்னை சந்தோசமா வச்சுக்கணும், உன் கூட வாழனுமுண்டு தான் ஆசை , வாழ்த்துருவேனாண்டு சந்தேகமாவும் இருக்கு. என்னமோ தெரியலை தள்ளிட்டே போகுது. அந்த நாள், சிட்டுவேஷன் தான் அதை முடிவு பண்ணும்னு நினைக்கிறன். கருப்பா ரெண்டுகெட்டான் வாழக்கைக்கு நல்ல வழி காட்டு’ என ஆதி மனதுக்குள் வேண்ட, சித்ரா எந்த அழைப்புறுதலும் இல்லாமல் கணவனை மனதில் நிறுத்தி தூங்கினாள். கிணற்று நீரை வெள்ளம் கொண்டுபோகாது, ஆதியோடு நல்ல வாழ்வு வாழ்வோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

வளையபட்டி, ஜமீன் இல்லத்துக்கும் கார்த்திகை அழைப்பிதழை அனுப்பி விட்டு, மந்திரி பெரியப்பாவை அலவலகத்தில் சென்று நேரடியாகவே ஆதி அழைத்தான்.

“ நீங்க நல்லா மாவளி சுத்துவீங்கண்டு அப்பா சொன்னாரு” எனவும், சிரித்துக் கொண்ட மந்திரி

“ அதெல்லாம் ஒரு காலம். இப்ப முடியுமோ இல்லையோ, நேரமிருந்தா கட்டாயம் வர்றேன்” என்றிருந்தார்.

அவரின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அந்தகாலத்தில் மாவளி, மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு இவைகள் தான் கன்னி பெண்களை கவர்ந்து இழுக்கும் வீர விளையாட்டுகள். ராஜவேலு துடிப்பான இளைஞனாக எல்லாவற்றிலும் கலந்து கொள்வார். வளையபட்டியில் ஜமீன் கெத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பெரியவர்களின் எண்ணத்துக்கு கட்டுப்பட்டு அமெரிக்கையாக இருப்பவர், கருமாத்தூர் வரும் போது இயல்பாக இருப்பார்.

ஒரு கார்த்திகை திருநாளில் கருமாத்தூர் மூணுசாமி கோவிலில் பெண்கள் கோவிலில் விளக்கேற்றி திரிய, ஆண்கள் சொக்கப்பன கொளுத்தி, மாவளி சுற்றி வீரசாகசம் செய்து கொண்டிருந்தனர்.

உள்ளிருக்கும் மருந்து கங்கு தீரும் வரை, பற்ற வைத்த தீயால் பொறி பறக்கும். மாவளியில் கட்டப்பட்டிருக்கும் கயிறை பிடித்து சுற்றுவதால் கங்கு மத்தாப்பு போல் சிதறி, சங்கு சக்கரம் போல் சுழன்று சுற்றும். லாவகமாக சுற்றாவிட்டால், சுற்றுபவர் முகத்தில் வந்து அடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

முதல் ஆளாக ராஜவேலு லாவகமாக சுமார் பத்து நிமிடங்களுக்கு மாவளியை சுற்ற, அவரின் கை வலிமையை ஊரே பாராட்டினர். அடுத்தடுத்து இளவட்டங்கள் தங்களால் இயன்ற வரை சுற்றி, கன்மாய்க்குள் தூக்கி போட்டனர். இதில் விருமனும் அடக்கம்.

அடுத்ததாக ஒருவர் சுற்றிய மாவளியின் கயிறு அறுந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் திசையில் சென்றது, பெணகள் சிதறி ஓடினர். அமுதா கைகளில் பூஜை கூடையை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களும் இருந்தது. மாவளி நேரடியாக அவளை தாக்கியிருந்தால், விபத்து உறுதி. இமைக்கும் நேரத்தில் இடையில் புகுந்த ராஜவேலு நெருப்பு பிழம்பாக வந்த மாவளியை கையால் தட்டி திசை மாற்றி விட்டு தடுமாறி நின்ற அமுதாவை கீழே விழாமலும் பிடித்தார்.

அவள் விழி விரித்து பார்க்க, தீ கங்கு பட்டதில் அவர் முகம் வலியை காட்டியது. சட்டென அவர் கையை பார்த்தவள்,
“ என்னங்க” என மடி தாங்கி பாட்டிலில் வைத்திருந்த குளிர் நீரை மெல்ல ஊற்றினாள்.

அதற்குள் ஆட்கள் ஓடி வர, “ விணுமனும், “ அண்ணேன்” என ஓடிந்தார். அமுதா,கோவிலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை காட்டி, “ வாழை மரத்தை வெட்டிட்டு வாங்க” என பதட்டமாக சொல்ல, விருமன் ஓடினார்.

ராஜவேலுக்கு வலியில் கண்கள் சொருக, “ இங்க பாருங்க, கொஞ்சம் தண்ணீர் குடிங்க” என புகட்டியும் விட்டாள்.

“ என்னால தான், உங்களுக்கு இப்படி ஆச்சு” என புலம்ப, அவர் இல்லை என மறுத்தார். விருமன் வாழையை வெட்டி வந்து
அதன் சாரை உள்ளங்கையில் பிழிந்தார்.

“ மோதிரத்தை கழட்டுங்க. சங்கடமா இருக்கும்” என அமுதா சொல்ல, வலியோடு தானே கழட்டி அவள் கைகளில் தந்தார்.

ஒரு வண்டியை அமர்த்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அமுதாவுக்கு உடன் சொல்ல முடியாத வருத்தம். கட்டுப் போட்டு வந்த ராஜவேலு ஒருவாரம் கருமாத்தூரில் அம்மாச்சி வீட்டில் தான்ஸ தங்கினார்.

அடுத்த நாள் விசாரித்து விட்டு, மோதிரத்தை திருப்பி தர அமுதா வர,” உன்கிட்டையே இருக்கட்டும். பிறகு வாங்கிக்கிறேன்” என்றார். அன்று ஆரம்பித்த பழக்கம், ஒருவருடம் கழித்து, நடையாய் நடந்து, கரையாய் கரைத்து, அமுதாவையும், இரு வீட்டினரையும் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் அன்பின் சின்னமாய் உதயன் பிறந்தான். அதன் பின் இரண்டு, மூன்று கருச் சிதைவு, ஏழு வருடங்கள் கழித்தே மீண்டும் கருவுற்றறார்.

அதன் பின் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேற, அப்பாவை போலவே மகனுக்கும் இந்த ஊர் அமுதாவை பற்றிய நல்ல நினைவுகளையும், அதையும் தாண்டி துர் சம்பவங்களையும் நினைவு படுத்துவதாக அமைய, மனநிலை பாதிக்கப்பட்ட மாமனாரை கூட அதற்கான மருத்துவ மனையில் சேர்த்து விட்டு இந்த ஊருக்கு வருவதையை தவிர்த்திருந்தார்.

ஆதிசிவா ஏற்பாடு செயதிருக்கும் இந்த விழாவில் மீண்டும் மாயகுறும்பன் வரவாரா? ஜெயா, செல்வமணி கண்ணில் படுவாரா? மந்திரியின் வாழ்வில் நடந்த கருப்பு பக்கங்கள் பாண்டி குடும்பத்துக்கு தெரிய வருமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.
Next episode update pannunga pa
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top