Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,505
90. தேன்சிட்டுகள்
உசிலம்பட்டி, செல்லமுத்து அறக்கட்டளை மருத்துவமனை, மருத்துவர் மீனாவின் அறையில் பரிசோதனைக்காக சித்திரை நிலா உள்ளே சென்றிருக்க, ஆதிசிவாவும், கோதையும் உடன் வந்திருந்தனர்.
ஆதி மருத்துவர் அறையில் அமர்ந்திருக்க, கோதை, வெளியே காத்திருந்தார்.
“ என்னா கோதை, மருமக முழுகாம இருக்காளா? கிறக்கமா தெரியிறா” தூரத்து சொந்தம் ஒரு பெண்மணி, மருத்துவர் அறைக்குள் சென்ற ஆதியையும், சித்ராவையும் பாண்த்து விட்டு விசாரிக்க,
“ அப்படி இருந்தா தான் சந்தோசப் படுவேனே. வீட்டோட அம்புட்டு பேருக்கும் காய்ச்சல். எங்களுக்கு எல்லாமாவது நாலு நாளோட விட்டுடுச்சு. மருமகளுக்கு தான், மாசக் கணக்கா போட்டு, பாடாய் படுத்துது” என சலித்தாள்.
“ ஆமாம், ஆமாம். எங்க பார்த்தாலும், இந்த காய்ச்சல் தான். டாகாடருக்கும், மருந்துக்கும் கொடுத்து மாலலை. உங்களுக்கு என்ன சம்பந்தகார ஆஸ்பத்திரி. சொந்தகார டாக்டரு. ஆக மொத்ததில் செலவு இல்லை” அந்த பெண்மணி நொடிக்க,
“ இதுக்கு ஒரு பொறாமையா? மருந்து, மாத்திரை எல்லாம் நம்ம காசு, பணம் போட்டு வாங்கி சாப்பிட்டா தான் பலிக்குமுண்டு, நாங்க பணத்தை கொடுத்திடுவோம்.” கோதை தகவல் சொல்ல,
“ இதென்ன கொடுமையா இருக்கு. ஏன் பெரியப்பாரு, தம்பி மகளுக்கு செலவு செய்ய மாட்டாரா? அது சரி, தாயும் பிள்ளையும் ஒன்னா இருந்தாலும், வாயும், வயிறும் வேறையிம்பாக. அவுகளும் போட்ட காசை எடுக்கனுமுள்ள” என்று விட்டு செல்ல, கோதைக்கு எரிச்சல்.
“ நரம்பில்லாத நாக்கு, இப்படியும் பேசும், அப்படியும் பேசும்” என அங்கலாய்த்துக் கொண்டிருக்க
“ என்ன ஆத்தா, யாரை வையிறவ” என வந்தார் ரங்கதுரை.
“ எல்லாம் நம்ம சொந்தக்கார பொம்பளை தான்” என அவர் பேசியதைச் சொல்லி,
“ நீங்க, நியாயமான ஃபீஸ் வாங்கினாலும், இதுகளுக்கு எல்லாம் நன்றியே இல்லை சித்தப்பா“ என பொருமினாள்.
“ விடுத்தா. நம்ம திருப்திக்கு நம்ம செய்யிறோம்” ரங்கம் சொல்ல,
“ அதுவும் சரி தான். சித்ராவை நாங்க இப்படியே, கருமாத்தூர் கூட்டிப் போறோம் சித்தப்பா. போன தரம், எனக்கு முடியலையிண்டு காரணம் காட்டி, பெருமாள் பட்டி கூட்டிப் போயிட்டிக. அவனுக்கும் சன்ன அலைச்சல். “ கோதை அடுக்க,
“ சரித்தா, அங்குட்டு ஆளும் பேருமா இருக்கோம், பார்த்துக்குவோம். இங்குட்டு நீ ஒத்தையில கிடந்து சிரமப்பட கூடாதேண்டு தான் கூட்டி போனேன் ” என்றார் ரங்கம்.
“ எனக்கு ஒன்னும் சிரமம் இல்லே சித்தப்பா. முதவும் ஆதி தான் இரண்டு பேரையும் பார்த்துகிட்டான். யாரு வச்ச கண்ணோ, சித்ரா ரொம்ப கஷ்டப் பட்டுடிச்சு.” என அங்கலாய்கக,
“ ஒவ்வொரு தடவையும் பரிட்சை எழுதிட்டு, இப்படி தான் எதையாவது இழுத்து விட்டுக்கும், இந்த தடவை ஒரேதா இழுத்து விட்டுகிச்சு.” என ரங்கமும் தன் பங்குக்கு வருந்தினார்.
சித்ராவுக்கு, கடைசி சிஏ பரிட்சை எழுதிவிட்டு வரும் போதே, காய்ச்சல் அடித்தது. அன்று கையிலிருந்த மாத்திரையை போட்டு சமாளிக்க, அடுத்தடுத்து காய்ச்சல் வருவதும், போவதுமாக இருந்தது. அவர்கள் மருத்துவமனைக்கே அழைத்து வந்து காட்ட, ஒருவாரத்துக்கு பின் டெங்கு என உறுதிபடுத்தி, மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு வாரம் சரோஜாவும், கோதையுமாக பார்த்துக் கொண்டனர். ஆதி, வேலை, வீடு, மருத்துவமனை என அலைந்தான்.
ஒட்டுவாரொட்டியாக கோதைக்கும், வைரல் காய்ச்சல் தொற்ற, சித்ராவை பெருமாள்பட்டி அழைத்துச் சென்றனர். அம்மா, மணைவி என இருவரும் படுத்துக் கொள்ள, அப்பாவுக்கும், மகனுக்கும் அதிகபடி வேலை, அலைஞ்சல் ஆனது.
ஆதிக்கு, கட்டிட வேலையும் ஆரம்பித்து இருக்க, காலையோ, இரவோ, பகலோ ஒரு நடை சித்ராவை பார்த்து விட்டே திரும்பினான்.
“ எல்லாருக்கும், பரிட்சைக்கு முன்னாடி தான் காய்ச்சல் வரும். உனக்கென்ன பரிட்சைக்கு அப்புறம் வந்திருக்கு” ஆதி கேலியாக வினவ,
“ சரியா எழுதி இருக்க மாட்டா. ரிசல்ட் பயத்தில வந்திருக்கும்” என்றான் சாமி துரை.
அண்ணனை முறைத்தவள், “ அதெல்லாம் இல்லை நல்லா தான் எழுதி இருக்கேன். ஆனாலும், எனக்காக ஆதியும் ரொம்ப மெனக்கெட்டாரே, அதுக்கு தான் கொஞ்சம் பயம்” என்றாள்.
“ அப்போ சாமி சொன்னது சரி தான். ரிசல்ட் பயம். ஆனா அதுக்கெல்லாம் அவசியமே இல்லை. உண்மையா உழைச்சு எழுதி இருக்க. வர்றது வரட்டும் “ ஆதி சொல்ல, அதற்கும் மகிழ்ந்து போனாள். ஒன்றரை மாதம், காய்சல், சிகிச்சை, மருந்து, மாத்திரை என ஓடியது.
உடல் மெலிந்து, வாடிய கொடி போல் இருந்தாலும், சித்ராவின் முகம் மலர்ந்தே இருந்தது.
ஆதியின் கனிவான கவனிப்பு அப்படி. டெங்கு வந்து கிடந்தவளுக்கு, அம்மா சரோஜாவும் பார்க்க முடியாமல் படுத்த நாளில், தானே அவளுக்கு உடல் துடைத்து, உடுப்பு மாற்றுவது வரை அத்தனையும் செய்ய அவன் மீதான சித்ராவின் காதல் பன்மடங்கு பெருகி இருந்தது.
மருத்துவ அறைக்குள் தங்கையின் டெஸ்ட் ரிபோர்ட்டுகளை பார்வையிட்ட மீனா, உள்ளறைக்கு கூட்டிச் சென்று பிரத்யேகமாக அவள் உடல் நிலையையும் பரிசோதித்து, “ வலி எதுவும் இல்லையே” என அவள் வாய்மொழியாகவே கேட்டு, பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.
டெங்குவுக்கு பிறகு, வயிற்று வலி என்றும் சித்ரா அவதிப்பட, மீனாவுக்கே சற்று கலக்கம் தான். தங்கையை தன் தீவிர கண்காணிப்பில் வைத்து, சிகிச்சை அளித்தாள்.
“ சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காத கதையா, அவன் மனசு மாறி வர்ற நேரம், நீ படுத்த பாரு. உங்க ஜோடியை என்னண்டு தான் சொல்றது” என சலித்தாள்.
“ அதனால என்னக்கா? நான் தான் அவர் மேல பைத்தியமா திரியிறேன், அவர் என்னை கண்டுக்கவே இல்லையிண்டு, மனசில ஒரு குறை இருந்தது. அதெல்லாம் போயிடுச்சு. இந்த ஒன்றறை மாசத்தில, ஆதி எவ்வளவு கேரிங்க்கா இருந்தாரு” அவள் கண்கலங்க,
“ போதும்டி உன் புருஷன் புராணம். அதை விட அவனுக்கு என்ன வேலை? என் புருஷன் இதுக்கு மேல எனக்கு சேவகம் பண்ணுவான். நீ இதுக்கே பூத்துப் போகாத” எனத் திட்ட,
“ அக்கா” எனச் சிணுங்கினாள்.
“ நிஜமா தான் சொல்றேன். முன்னைக்கு உன் உடம்பு நல்லா தேறி தான் இருக்கு. ஒரு வாரம் லீவை போட்டு, ஹனிமூன் போயிட்டு வாங்க” என்று அறிவுறுத்த,
“ ம்க்கூம், நிற்க கூட நேரமில்லாமல் அலையிறார், இதில ஹனிமூன் ஒன்னு தான் குறை. நீ முதல்ல, மாத்திரையை குறைச்சு குடுக்கா. நாக்கு செத்து போச்சு, ” என சலித்தாள்.
“ வெட கோழியும், வெள்ளாட்டு கறியுமா கொடுத்து, சித்தி உன்னை தேத்தி விட்டிருக்கு. இதில நாக்கு செத்திருச்சு, மூக்கு செத்திருச்சுண்டு கதை வேற” என முன்னறைக்கு அழைத்து வர, ஆதி வேகமாக எழுந்தவன், சித்ராவை கை பிடித்து அழைத்து சேரில் அமர வைத்தான்.
“ அவளென்ன நடக்க கூட முடியாமலா இருக்கா? சும்மா பில்டப் கொடுத்து தள்ளி வைக்காதே. “ மீனா, ஆதியை கடிய,
“ சித்தி, நல்லா ஆயிட்டாங்கிறது சந்தோஷம் தான். அதுக்காக என் பொண்டாட்டியை நான் கவனிக்க கூடாதா? “ ஆதி வாக்குவாதம் செய்ய,
“ அதானே, ஏன்கா உனக்கு பொறாமை? “ சித்ராவும் சிறு நகைப்போடு கணவனுக்கு ஒத்து ஊதினாள்.
“ உங்களை பார்த்து, எனக்கு பொறாமை? இது தான் இந்த வருஷத்தோட பெரிய ஜோக். ஹாஹாஹா. உங்களை மாதிரி, நாங்க ஒட்டி ஒட்டாமல் இருக்க ஜோடி இல்லை. நகமும், சதையுமா வாழற ஆதர்ஷ தம்பதி. என் புருஷன் நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான் தெரிஞ்சுக்க” மீனா டயலாக் அடிக்க, சித்ரா கலகலவென நகைக்க,
“ கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டாரா? இது அடிமைதனத்தில வராதா? ஆண்களை கொடுமைபடுத்தும் பெண்ணியம். ஐ சபோர்ட் சக்தி அண்ணா. வேண்டும், வேண்டும் நியாயம் வேண்டும்” ஆதி கோஷமிட,
“ நீ, உன் அண்ணனை சப்போர்ட் பண்றியா? அவனே என் பக்கம் தான் இருப்பான்” என்ற மீனா,
“ பிகாஸ், வீ மேட் ஃபார் ஈச் அதர். எங்கே, இதை வாரத்தையை உன் பொண்டாட்டிக்காக சொல்லு பார்ப்போம்” மீனா, ஆதியை நோக்கி சவால் விட, சித்ரா ஆர்வமாக கணவனைப் பார்த்தாள்.
“ இப்போ வரைக்கும் ஓகே தான். காரியம் யாவிலும், ஒருத்தருக்கு ஒருத்தர் கையை கொடுத்தாச்சு. காதலாகி கசிந்துருகிட்டு அந்த டயலாக்கை சொல்லிக்கிறோம். சரி தானே சிட்டு” என மணைவியை நோக்கி அவன் கண்சிமிட்ட, அவள் செங்கொழுந்தானாள்.
“ டப்பா மண்டையன் பேச்சுலையே கவுத்திபுடுறான்டி.” எனவும் ஆதி முறைக்க,
“ என்னா லுக்கு, அவ ஹெல்தியா தான் இருக்கா. உடல் நலத்தை பேணியாச்சு. இனி மனநலத்தை நீ பார்த்துக்கோ. எங்கையாவது ஹில் ஸ்டேசன் கூட்டிட்டு போ” என அறிவுறுத்த,
“ எனக்கும் ஆசை தான். ஆனா வேலை நெட்டி முறியுதே. ஜல்லிகட்டு அரங்கத்தை பொங்கலுக்கு திறக்கனுமுண்டு சொல்றானுங்க. டே அண்ட் நைட், நான் ஸ்டாப்பா வேலை நடக்குது. வழக்கமான நேரத்தை விடவும், வரற்துக்கு இன்னும் லேட்டாகும். இன்னைக்கே சித்தி ரிபோர்ட்டுக்காக தான் வந்தேன்” அவன் தன் வேலையை பற்றி சொல்ல,
“ நோ ப்ராப்ளம் ஆதி. நீங்க வேலையை பாருங்க.” சித்ரா கணவனுக்கு ஆதரவாக பேசினாள்.
“ அலைய முடியலைனா, அங்குட்டே ஒரு வீட்டை பாரு, அந்த ஏரியாவே ஹில் ஸ்டேசன் மாதிரி தான் இருக்கும்னு ஹரிணி சொன்னா” எனவும்,
“ குடும்பத்தை பிரிச்சு, தங்கச்சிக்கு தனிகுடித்தனம் போக ப்ளான் போட்டுக் கொடுக்குற. என்னா ஒரு வில்லத்தனம். இரு எங்கம்மா வெளியே தான் இருக்கு. கூப்பிட்டு விடுறேன்” ஆதி வேடிக்கையாக மிரட்டினான்.
“ அக்கா, எனக்கு தனிக்குடித்தனம் போற ஐடியா எல்லாம் இல்லை. நீங்க பேசாமல் இருங்க” சித்ரா அழமாட்டாமல் சொல்ல,
“ டேய், நான் உன்னை தனி குடுத்தனமா போகச் சொன்னேன். ஏதோ ரிசார்ட் இருக்கு, அதை டெவலப் பண்ணி தரச் சொல்றாய்ஙகண்டு நீ தானடா சொன்ன. அதை தான் ஞாபகப் படுத்தினேன். போறப் போக்குல, என் அயித்தமாரு பூரா பேத்தையும் எனக்கு எதிரியாக்கி விட்டுருவான் போல. நீ கிளம்பு சாமி” என கும்பிடு போட,
“ ரொம்ப பயந்தவ தான் இந்த டாக்டரம்மா, நாங்களும் நம்பிட்டோம். பெரிய கார்த்திகைக்கு மருமக வீட்டில விளக்கேத்தனுமுண்டு அம்மா சொல்லுச்சு. அதுக்கு தான் கூட்டிட்டு போறோம். நீ சொன்னதையும் யோசிக்கிறேன்” என சித்ராவை அழைத்துச் செனறான் ஆதி.
வளையபட்டி ஜமீன் இல்லம், ஹரிணி புகுந்த வீட்டுக்கு வந்தும், ஒன்றரை மாதம் ஓடியிருந்தது. ஹரிணிக்கு சிசு வளர்ந்து வயிறு மேடிட ஆரம்பித்திருந்தது. இந்த ஒன்றரை மாதத்தில், ஹரிணியும் வீட்டினரோடு சகஜமாக பழகியிருக்க, உதயன் பதட்டமில்லாமல் இருந்தான். அவன் பார்வையில் கண் முன்னே சிசு வளர்ந்ததால் அதனை இயல்பாகவே ஏற்று, ஹரிணியிடமும் பாசமாக இருக்க, ராஜவேலு, ராஜேஸ்வரி இருவருக்குமே மன நிம்மதி.
ஹரிணி தினமும் ஒருமுறை அம்மா, அப்பத்தாக்கள், சின்னம்மாக்கள், மீனா அக்கா என எல்லோரிடமும் பேசி விடுவாள். அதுவும் வயிறு மேலிட ஆரம்பிக்கவும், அரிப்பு கிளம்ப, மீனாவுக்கு போனடித்து புலம்பினாள்.
“ அதுக்குண்டு இ ஆயில், கிரீம் எல்லாம் இருக்கு, அனுப்பி விடுறேன். போட்டுக்கோ. அடுத்த செக்கப் இங்க தானே வருவீங்க” எனவும்,
“மதுரைக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு போகலாம்கிறாரு” என இழுத்தாள்.
“ ஜமீன் பரம்பரைக்கு எங்க ஆஸ்பத்திரி சின்னதா தான் தெரியும். அது சரி, உனக்கு எங்கே வசதியோ அங்க பார்த்துக்கோ” மீனா சொல்ல,
“கோவிச்சுகிட்டியா அக்கா” என்றாள் கவலையாக.
“அட, இல்லைடி. அவுங்க திருப்திக்கு, சீனியர் டாக்டர்கிட்ட பார்த்துக்க, மறக்காம உன் கேஸ் ஹிஸ்டரியும் எடுத்துட்டு போ” என அறிவுரை வழங்க,
“சரிக்கா, பிரசவம் உன்கிட்ட தான் பார்த்துக்குவேன். உன்னையண்டா உரிமையா திட்டலாம்” ஹரிணி சிரிக்க,
“ தேவை தாண்டி. மதுரைல பார்த்தாலும், ரிபோர்டை எனக்கு அனுப்பி விடு.” என போனை வைத்திருந்தாள்.
சொன்னது போலவே, அடுத்த செக்கப்பை மதுரையின் பெரிய மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டில் இரண்டு நாள் தங்கி பார்த்தனர். மகளுக்காக மலரும், மலருக்கு துணைக்கு, மனோகரும், அவன் மனைவி வளர்மதியும் வந்து சேர, ஹரிணி நல்லவிதமாகவே நடந்து கொண்டாள். உதயனுக்கு தான் மனோகரை பார்க்கவும் எரிச்சல் வந்தது. ஆனாலும், அவன் வெளிப்படையாக காட்டிக்கொள்ள வில்லை.
“வணக்கம் தம்பி, ஆபீசு, பேக்டரி, வீடுண்டு உங்களை பிடிக்கவே முடியலை, ரொம்ப பிசியா இருக்கீங்க. அம்புட்டு பிசியிலையும், என் மருமக்களுக்காக ஆஸ்பத்திரி வந்திருக்கிங்களே, அங்க நிக்கிறிங்க நீங்க” என பெருமையாகவே பேச“வராமல் எப்படி, அவுங்க ஜமீன் வாரிசு நம்ம ஹரிணி வயித்தில வளருதில்ல” என வளர பதில் தர, உதயன் அமர்த்தலாகவே நின்றான்.
மலர் ஹரிணியிடம், உடல் நலனை விசாரித்து, “அப்பா, ரவைக்கு வாரேண்டு சொல்லியிருக்காரு” என்று சொல்ல, வராத போனை பிடித்துக் கொண்டு உதயன் வெளியே நடந்தான், மனோகரும் இது தான் சரியான சமயம் என அவன் பின்னோடு சென்றான். தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது அவன் முறைப்பு என்ன செய்யும், விஷயம் பாண்டி குடும்ப பஞ்சாயத்தில் வரும் முன்பு சரி செய்ய வேண்டும். இல்லையேல் மனோகரோடு சேர்த்து, செல்லப்பாண்டிக்கும் சரியாக ரிவிட் அடிப்பார்கள்.
ஹரிணிக்கு தெரியாமல் மறைக்க முயன்றாலும், ஸ்கேனுக்கு சென்ற போது மலரும், வளரும் உடன் வர, தனி இடத்தில் வைத்து உதயன், மனோகரிடம் கோபமாக பேசியதை பார்த்து விட்டாள். ஆனாலும் அப்போதைக்கு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. மூன்றாம் நாள், மலரும், செல்லபாண்டியுமாக வந்து மகளை ஜமீன் இல்லத்தில் விட்டு விட்டு தான் கிளம்பினர்.
இந்த முறை உதயன், மாமனாரிடமும் அவ்வளவு கனிவாக நடந்து கொளள்வில்லை. ஹரிணி அதையும் கவனித்து, அவர்கள் சென்ற பின், உதயனிடம் கேட்க,
“ அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என மழுப்பி விட்டு, அலுவல் அறைக்குள் சென்று விட்டான்.
நிறைய புத்தகங்கள், பைல்கள், கனிணி என இருக்கும் அந்த அறையை பார்த்தாளே ஹரிணிக்கு அலர்ஜி. அதோடு கணவனின் வேலையில், இடையூறு செய்யக் கூடாது என்ற, புகுந்த வீட்டினரின் அறிவுரைப்படி, அந்த நேரம் டிவி, அலைபேசி என பொழுதை போக்கிக் கொண்டு இருப்பாள்.
உதயன் இது போல் வேலையில் மும்முரம் செலுத்தும் நாள்களில், அதை முடித்த கையோடு வந்து, மனைவியை கவனிகக்கும் வேலையையும் அதிகபடியாக செய்து விடுவான். ஆனால் அன்று வெகு நேரம் அலுவல் அறையிலேயே இருக்க, காத்திருந்த ஹரிணி கண் அயர்ந்தும் விட்டாள்.
அவள் உறங்கிய பின்,அருகில் வந்து படுத்த உதயன், “ உன்னைய என்கிட்ட இருந்த பிரிக்க நினைக்கிறவன் யாரா இருந்தாலும், சரியான பாடம் சொல்லிக் கொடுக்காமல் விடமாட்டேன்” என சூளுரைத்து, அவளை தன் கைவளைவில் இழுத்துக் கொள்ள, சிறு சிணுங்களோடு அவளும் அவன் ஆளுகைக்குள் வந்திருந்தாள்.
உதயனிடம் இருக்கும் மர்மம் என்ன? ஹரிணிக்கு தெரிய வரும்போது என்ன நடக்கும் ? பொறுத்திருந்து பார்ப்போம்.