My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

முரண் அத்யாயம் 9

Joined
Mar 22, 2025
Messages
95
நரசிம்மன் இல்லம்.

வேணி ஹாலில் அமர்ந்து இருந்தாள்.

ம்மா. வேணி என்று வீட்டின்னுள் வரும்போது நரசிம்மன் அழைத்தார்.

அப்பா வாங்க இருங்க குடிக்க காபி எடுத்து வரேன் என்று சென்றாள்.

காபியோடு வேணி வர.

உனக்கு ஏன்டா இந்த வேலை ஆமா உங்க அம்மா எங்க.

அம்மா கோவில் போயிருக்காங்க பா. வரநேரம் தான் என்றாள்.

சரி அவ வரும்போது வரட்டும். நான் கொஞ்சம் உன் கிட்ட பேசணும் டா என்றார்

என்ன பா சொல்லுங்க.

படிப்பை முடிச்சுட்ட அப்புறம் என்ன பிளான் டா.

அப்புறம் என்ன பா. கொஞ்சநாள் வேலைக்கு போகணும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும் என்றாள்.

அதில்லை வேணி. உனக்கொரு கல்யாணம் பண்ணிட்டேன்னா என்னோட கடமை முடிஞ்சுடும் நல்ல நல்ல வரனா வருது. இன்னைக்கு கூட ஒரு வரன் இருக்குறதா ப்ரோக்கர் சொன்னார் டா.

ப்ரோக்கர் சொன்னதுக்குகாக எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது பா. நான் கொஞ்ச நாள் பிரீ யா இருக்க நினைக்குறேன் என்றாள் வேணி.

அது சரி. எவ்ளோ நாள் பிரீயா இருக்க போற. காலகாலத்தில் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சுருக்காங்க னு பாக்குறவங்க சொல்றதுக்கா. என்று சொல்லிக்கொண்டு வேணியின் அம்மா உள்ளே வந்தாள்.

போச்சு டா என்று நரசிம்மன்.

என்ன அப்பாவும் பொண்ணும் நான் இல்லாம ரகசியம் பேசுறீங்க??.

இப்போ உனக்கு என்ன பிரச்சனை மரகதம். படிப்பு முடிஞ்சுதே அடுத்து என்ன பண்ணப்போறேன்னு குழந்தை கிட்ட பேசிகிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீ அறகுறையா கேட்டுட்டு சண்டைக்கு வேற வரே என்றார்.

ம்க்கும்.. அதுக்கு உங்க மகாராணி என்ன சொல்ராங்க.

கொஞ்சநாள் போகட்டும் நான் வேலைக்கு போய்ட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லுது.

ம்ம்.. இப்பவே வயசு இருப்பத்திநாலு ஆகுது இன்னும் எப்போ. அறுபது வயசுலேயா என்றார் மரகதம்.

அம்மா நான் கொஞ்சநாள் அப்பாக்கு ஹெல்ப் பண்ணிட்டு தான் மேரேஜ் பண்ணிக்குவேன் என்றாள் வேணி.

அதெல்லாம் இல்லை வயசு இருக்கும்போது தான் கல்யாணம் நடக்கணும். ஒழுங்கா சரினு சொல்லு.

அடடா என்ன இங்க பஞ்சாயத்து. நான் ஒருத்தன் இருப்பதையே நீங்க எல்லாம் மறந்து போயிடுறீங்க என்றப்படி நரேன் உள்ளே வந்தான்.

தோ.. வந்துட்டே வாலில்லாத வானரம் என்றாள் வேணி.

ஓ.. அப்போ நான் வானரம் என்றால் நீ நம்ம அப்பாவையும் அம்மாவையும் வானரமனு சொல்றியா அக்கா என்றான்.

அடப்பாவி.. நான் எப்போ டா அப்படி சொன்னேன்.

பின்ன நான் குரங்கு னா என்னை பெற்ற இவர்கள் யாரு??

எப்பா.. உன் அறிய கண்டுபிடிப்புக்கு ஒரு கும்பிடு ஆளை விடு என்றாள் வேணி.

சரி சரி மன்னிச்சுட்டேன். இப்போ இங்க என்ன பஞ்சாயத்து.என்றான் பெரிய மனிதனை போல்.

அது ஒன்னும் இல்லை டா நரேன். இந்த மகாராணி க்கு இப்போ கல்யாணம் வேணாமாம். அதான் என்றார் மரகதம்.

அதுக்கு ஏன் இவ்ளோ பேசுறீங்க??. அவ வேணாம்னு சொன்னா விட்டுட வேண்டியது தானே.!

இப்போ தான் என் செல்ல தம்பி னு நிரூபிக்குற டா என்று தம்பியை வேணி பாராட்ட.

இரு இன்னும் நான் முடிக்கல என்று. அவளுக்கு கல்யாணம் வேணம்னா எனக்கு பண்ணுங்க உங்களுக்கு நானும் பையன் தான் என்றான்.

எடு அந்த கட்டையை. ஆளபாரு கணக்கு இல்லாம அரியர் வெச்சுகிட்டு துரைக்கு கல்யாணம் கேக்குது கல்யாணம் என்று நரசிம்மன் நரேனை அடிக்க துரத்தினார்.

ஒருபக்கம் வேணி அடப்பாவி எனக்கு சப்போர்ட் பண்றேன்னு பார்த்தா இன்னும் டிகிரி முடிக்கல கல்யாணம் கேக்குதோ?? என்று துரத்தி போனாள்.

சரி..சரி நிறுத்துங்க..இப்போ கடைசியா என்ன சொல்ற வேணி என்று முடித்தார் மரகதம்.

அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு குழந்தை சொல்லுது இல்லை மரகதம். எனக்கும் என் குழந்தை என் கூட இருக்க ஆசையா இருக்கு நம்ம வரன் பாப்போம். உடனே அமஞ்சுடுப்போகுதா என்ன அது ஒரு பக்கம் போகட்டும் இவ நம்ம கம்பனி க்கு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணட்டும் என்ன வேணி என்று தீர்ப்பு சொன்னார் நரசிம்மன்.

தோ.. நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு இல்லை இப்போ எல்லாரும் போய் வேலைய பாருங்க என்று அவனும் உள்ளே ஓடினான்.
*************************
மகாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் டென்ஷனோடு அமர்ந்து இருந்தார்.

டேபிலில் முந்தைய நாள் கடற்கரையில் நடந்த கொலையின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இருந்தது அத படித்து விட்டு தான் டென்ஷனாக இருந்தார்.

கான்ஸ்டெபிள் கண்ணா உள்ளே வந்து. சார் கூப்பிட்டீங்களா என்றார்.

யோவ் என்ன இது ஒரு கைரேகையும் கிடைக்கல. உடம்பில் எந்த இன்ஜுரியும் இல்லை ஆனா அலுங்காம தொலை உறிச்சி இதயத்தை பிச்சி எடுத்து இருக்கு. அதுவும் அவங்க கையில் கொடுத்துட்டு போயிருக்கான்.

அதான் சார் ஒன்னும் புரியல என்றார் கான்ஸ்.

உனக்கு புரிஞ்சா தான் அதிசயம். ஆமா மோப்ப நாய் என்ன சொல்லுச்சு.

அதுவா சார். கொலை நடந்த ஸ்பாட் கிட்ட இருந்து ஸ்மெல் பண்ணிக்கிட்டு ஒழுங்கா தான் போச்சு திடிர்னு அங்கு உள்ள மீனவ குப்பத்துக்குள்ள வேகமா ஒடிச்சு போய் பார்த்தா அங்கு கருவாடு புதைச்சு இருக்கு அத தோண்டி எடுத்துட்டு அங்கேயே படுத்துக்கிச்சு சார்.

சுத்தம் கேஸ் நல்லா விளங்கிடும் என்றார் இன்ஸ்பெக்டர்.

சார். அந்த மணிபர்ஸ் கிடைச்சுதே என்றார்.

யோவ். அந்த ஆளு கிடைச்சாலும் ஒன்னும் தேறாது போல வேணா பாரு அவன் அந்த பர்ஸ் மிஸ் பண்ணிட்டேன்னு ஈஸியா சொல்லிட்டு போயிடுவான். அதுவும் இல்லாம அவன் ஒரு துப்பரிவாளன்.

அப்படினா இந்த கேசை எப்படி குளோஸ் பண்றது சார்.

எதுக்கும் அந்த குமார தூக்கிட்டு வாங்க துப்பரிவாளன் கிட்ட எதாவது துப்பு கிடைக்குத்தாணு பாப்போம்.
*************************
விளையாட்டு ஊஞ்சலில் பணிக்கரின் தலையை வீட்டின் முன்னாடி திருஷ்டிக்கு கட்டும் பூசணியை போல தொங்க விடிருந்தாள் பைரவி.

அதை பார்த்த வீட்டு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனர்.

முதலில் சுதாரித்தது மார்த்தாண்டம் தான். இது எப்படி இங்க வந்தது இந்த வாச்மேன் என்ன பண்ணிட்டு இருந்தான் என்று கேட்டார்.

உடனே வாச்மேன் ஐயோ சார் சாத்தியமா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கூட நான் ரவுன்ஸ் வந்தேன் அப்போ இது இல்லைங்க இப்போ எப்படி வந்ததுன்னு தெரியலங்க என்றான்.

பூபதி சரி இவ்ளோ பெரிய வீட்டுக்குள்ள யார் வந்தாலும் தெரியும் நீங்க சரியா பாக்கல தூங்கிட்டியா என்றார்.

சார். ஒருத்தர் முன்னாடி எப்பவும் இருப்போம் ஒருத்தர் தான் ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை வீட்டை சுத்தி வருவோம் இது ஒரே மர்மமா இருக்கு என்றான்.

உடனே மார்த்தாண்டம் பூபதி அவனை விடு அந்த தலையை எடுத்து போட ஆளை வரச்சொல்லிடு நம்ம இப்போ பணிக்கர் வீட்டுக்கு போகணும் என்றார்.

அப்பா என்ன சொல்றிங்க போலீஸ் ல சொல்ல வேணாமா???

அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் சொல்றதை மட்டும் செய் என்று உள்ளே சென்றார்.

அப்பா இது யாரோடது என்றான் முரளி.

அது நம்ம குடும்ப ஜோசியர் தலை. எவனோ நம்ம பிஸ்னஸ் எதிரி நம்மள மாட்டிவிட இப்படி செஞ்சு இருக்காங்க. நீ உள்ள போ நான் தாத்தா சொன்னதை செஞ்சுட்டு வரேன் என்றார்.

வீட்டின்னுள் இன்னும் பயத்தின் பிடியில் தான் இருந்தாள் மார்த்தாண்டம் மருமகள்.

பூபதி தன்னோட அப்பா சொன்னதை செய்து விட்டு உள்ளே சென்றார்.

ஹாலில் அமர்ந்து யோசனை செய்தார் மார்த்தாண்டம். இப்போ என்ன செய்யுறது. அவளை கட்டினவன் வம்சம் இதோட அழிஞ்சு போச்சு. அப்போ கட்ட சொன்ன என்னோட வம்சம்...

கடைசி உசிரு வரை மிஞ்சாது விஜய் அண்ணா. என்று இவரின் காதுக்குள் ஒரு குரல் கேட்டது.

அதிர்ச்சியில் எழுந்தே விட்டார். ஏற்கனவே பயத்தில் இருந்த அவரின் மருமகள் வேகமாக எழுந்ததை பார்த்து ஓட்டம் எடுத்தாள் தன் அறைக்கு.

சே.. இவ வேற என்று தலையில் அடித்து கொண்டார் மார்த்தாண்டம்.

மகன் வந்ததும் இருவரும் பணிக்கர் இல்லம் நோக்கி சென்றனர்.

பணிக்கர் வீடு. அவர் மனைவி மக்கள் எல்லாம் கேரளாவில் இருந்தனர் இவர் மட்டும் இந்த மாதிரி வேலை செய்வதற்கு இந்த வீட்டில் தனியாக இருந்தார்.

கேரளத்து பாணியில் பெரிய தூலகட்டு வீடு தான் அவரின் வீடு. முன்னாடி வராண்டாவை தாண்டி உள்ள சென்றார்கள் மார்த்தாண்டம் மற்றும் பூபதி.

அங்கு கூடத்தின் ஒரு துணில் பணிக்கரின் உடம்பு கட்டி போட்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள் காணாட்டது. அவரை ஒட்டு துணி இல்லாமல் வெறும் உடம்பு தான் இருந்தது தலையை காணவிலை.

மார்த்தாண்டம் அருகில் சென்றார். உடலை சுற்றி பணிக்கர் சீடர்கள் கண்களில் பீதியோடு நின்று இருந்தார்கள்.

மார்த்தாண்டதை பார்த்து அழுத்தனர். அவரோட குடும்பத்துக்கு தகவல் போயாச்சா என்றார்.

ஆமா அய்யா. சொல்லிட்டோம் அவங்க வந்துகிட்டு இருக்காங்க.

சரி உடம்பை இறக்கி கிழ கிடைத்தி நாங்க கொண்டு வந்த தகளையை அதோட வச்சி மூடுங்க மீதிய அப்புறம் பாப்போம். உங்களுக்கு என்ன சேரணுமோ நெறையவே கிடைக்கும் கவலை படாதீங்க என்றார் மார்த்தாண்டம்.

பின் அணைத்து காரியமும் வேகமாக நடந்தது.

அப்பா இவரை யாரு இப்படி பண்ணிருப்பா என்றார் பூபதி.

சொல்றேன் பா. இப்போ இத பாப்போம் என்றார் மார்த்தாண்டம்.

நீ என்ன பண்ணாலும் இந்த பைறவியை ஒன்னும் பண்ண முடியாது மார்த்தாண்டம் பாப்போம் நீயா நான் என்று பைரவி ஆன்மா கறுவிக்கொண்டு நின்றது.

தொடரும்...
 
அடப்பாவி மார்த்தாண்டம் கண்ணு முன்னாடியே இவ்வளவு கோரமா ஒரு உயிர் போய் இருக்கு..நீ இவ்வளவு சாதாரண இருக்க...😳...அப்ப பைரவி சாபம் பழிக்கும் காலம் வந்து விட்டது போலயே...
குமாரு 🕵️‍♂️ எங்க இருக்கீங்க 😂..
சூப்பர் ❤️✨
 
அடப்பாவி மார்த்தாண்டம் கண்ணு முன்னாடியே இவ்வளவு கோரமா ஒரு உயிர் போய் இருக்கு..நீ இவ்வளவு சாதாரண இருக்க...😳...அப்ப பைரவி சாபம் பழிக்கும் காலம் வந்து விட்டது போலயே...
குமாரு 🕵️‍♂️ எங்க இருக்கீங்க 😂..
சூப்பர் ❤️✨
அருமை மா மிக்க மகிழ்ச்சி 😍
 
பணிக்கர் தலையில்லா முண்டமாகிட்டார். மார்த்தாண்டத்தின் நிலை என்னவாகப் போகின்றதோ?
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top