My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சுவர்ணரேகா - ஒரு அழிவின் தொடக்கம் பிற்பகுதி...

IVNP18

Member
Joined
Mar 21, 2025
Messages
58
அரிஹந்தும் முத்துக்குமாரியும் பாடலிபுத்திரத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தனர். நகரத்துக்குள் நுழையும் போதே போதே மன்னரும் இதர அமைச்சர்களும் அவர்களது குடும்பமும் பெண்களை அடக்கி வைக்காத பாவத்தால் கொடூரமாக தெய்வத்தால் தண்டிக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என்ற செய்தி எங்கும் பறை அறைந்து தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த இருவரும் நாம் வருவதற்குள் திட்டத்தை நிறைவேற்றி விட்டார்களே என்று மனம் உடைந்து போனார்கள். ஏற்கனவே மயூரனின் துரோகம், கலாவின் மனம் கொடூரமாக மாறியது இவை தவிர கருணையோ, இரக்கமோ இல்லாத மனிதர்கள் என்று மக்கள் மத்தியில் வாழவே பிடிக்காத மனநிலை வந்து விட்டது அரிஹந்துக்கு. ஆகையால் அங்கிருந்து நேராக தான் ஆனந்தனோடு போய்ச் சேர்ந்து புத்த பகவானின் சேவையிலும் அவரது கொள்கைகளைப் பரப்புவதிலும் காலம் கழிக்கப் போவதாகவும் முத்துக்குமாரி தங்கள் விருப்பப்படி செய்யலாம் என்றும் கூறி விட்டுச் சென்று விட்டான். மிகவும் மன வேதனையோடு முத்துக்குமாரி அனைவரும் தங்கி இருந்த இடத்துக்கு வந்தாள்.

ஆம்ரபாலியின் மாளிகையில் இருந்து திரும்பி வந்த மாரிச்சாமியும், கோமதியும் அங்கே சுவர்ணாவையும் கலாவையும் காணாமல் திகைத்துப் போனார்கள். சுவர்ணா காரணம் இல்லாமல் இங்கிருந்து செல்ல மாட்டாள், நிச்சயம் அவள் மேற்கொண்ட வேலை முடிந்ததும் இங்கே தான் வருவாள், கலாவும் வருவாள் ஆகையால் நாம் இங்கே காத்திருப்பது தான் நல்லது என்று தீர்மானமாகக் கூறி விட்டாள் கோமதி. பாடலிபுத்திரத்திலிருந்து முத்துக்குமாரியும் அங்கே தான் வருவாள் என்பதால் மாரிச்சாமியும் அங்கேயே காத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடியே முத்துக்குமாரி நான்காம் நாள் வந்து சேர்ந்தாள். அரிஹந்த் இனி குடும்ப வாழ்க்கைக்கு திரும்பப் போவதில்லை என்ற முடிவைக் கேட்டு கோமதி கலங்கினாள். ஆனால் தான் பெற்ற மகன், உலகத்தில் நல்ல கருத்துக்களைப் பரப்ப தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து விட்டானே! என்ற பெருமையும் எப்போது வேண்டுமானாலும் அவனைப் போய்ப் பார்த்து வரலாமே? என்று அவள் மனம் ஆறுதல் அடைந்தது. ஆனாலும் மநுவின் கொள்கைகள் மட்டுமே சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்ற உண்மையை அவர்களால் தாங்கவே முடியவில்லை.

முத்துக்குமாரி வந்து இரண்டு நாட்கள் கழித்து சுவர்ணா, கலா மற்றும் உத்திரன் வந்தானர். மகளை மீண்டும் உயிரோடு பார்த்ததில் பெரும் சந்தோஷம் அடைந்த கோமதி ஓடிப் போய்த் தழுவிக் கொண்டாள். கலாவும் என் மகள் போல என்று அவளையும் மிகுந்த அன்போடு அணைத்துக் கொண்டாள். உத்திரனைப் பார்த்ததுமே ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது என்று ஊகித்துக் கொண்டார்கள். பாடலிபுத்திரத்தில் மநுவின் சதி அரங்கேறி விட்டது என்றும், இனி கண்வா தான் மன்னன், மநு வைத்தது தான் சட்டம் என்பதையும் அப்போது தான் சுவர்ணாவும், கலாவும் அறிந்தனர். எப்படியாவது பெண்கள் அடிமைப்படுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டனர் கலாவும் சுவர்ணாவும்.

தாங்கள் எதற்காகச் சென்றோம்? எங்கே சென்றோம்? என்ற விவரங்களை கூறினாள் சுவர்ணரேகா. கோமதியும் மற்றவர்களும் பயந்தே போனார்கள். அதிலும் கோமதியால் தன் மகளா? மென்மையாகப் பேசி, எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்த குழந்தை சுவர்ணாவா ஒரு கொலை செய்திருக்கிறாள்? அதுவும் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறாள் என்றால் அவள் மனம் எப்பர்ப்பட்ட ஆழமான உணர்வுகளைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்! மயூரன் கண்டிப்பாக சாக வேண்டியவன் தான் என்று அவள் நினைத்தாலும் மகளை ஒரு கொலைகாரியாக கோமதியால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அந்த உண்மையை மறக்க முடிவெடுத்து மகளுக்கும் மகள் போலக் கருதும் கலாவுக்கும் அவர்களது சேவைகளில் உதவி செய்து கொண்டு அவர்களுடனே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள் கோமதி. அரிஹந்த் நிச்சயம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட மாட்டான் என்று கலா ஓரளவு ஊகித்திருந்தாலும் அவன் அதை செயலாற்றியதும் அவள் உள்ளம் வருந்தி அழுதது. ஆனாலும் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள் கலா. அரிஹந்த் போனற மென்மையான மனம் படைத்தவனால் தான் செய்த கொலையை அங்கீகரிக்கவே முடியாது என்பதாலும் அவனுக்கு இந்த விஷயம் தெரியாமல் போனதே நல்லது என்ற முடிவுக்கு வந்தாள் கலா. இறந்து போன ஹரனின் நினைவாக கலா, சுவர்ணா இருவரும் இணைந்து கயாவிலும் மற்ற இடங்களிலும் பெண்ணடிமைக்கு எதிரான அமைப்பை உருவாக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களது இஷ்டம் போல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதற்கு ஆம்ரபாலி அளித்த பணம் பயன் படட்டும் என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

முத்துக்குமாரியும், மாரிச்சாமியும் திருமணம் செய்து கொண்டு, சுவர்ணாவுக்கும் கலாவுக்கும் உதவியாக அவர்கள் அமைப்பில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். எல்லாவற்றுக்கும் கூடவே நின்று உதவினான் உத்திரன். அவன் மனதில் சுவர்ணாவின் மேல் உள்ள காதல் வளர்ந்து கொண்டே வந்ததே தவிர குறையவில்லை. அவர்களோடு இன்னொருவனும் வந்து இணைந்து கொண்டான். அவன் ஜேத்தாவைச் சேர்ந்தவன். ஹரனின் நெருங்கிய நண்பன். கலாவை சிறு வயது முதலே நேசித்தவன். பெயர் சுஜேன். இரு இளைஞர்களும் தங்கள் காதலை மனதிலேயே வைத்து சொல்வதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலப்போக்கில் சுவர்ணாவும் கலாவும் நிச்சயம் மனம் மாறுவார்கள், அவர்கள் மனதில் காதல் மீண்டும் மலரும் என்று நம்பினார்கள் உத்திரனும் சுஜேனும். கலாவும் சுவர்ணாவும் கடமையில் மூழ்கி பல பெண்களைக் காப்பாற்றினார்கள். அவர்கள் மனதில் காதல் மலர்ந்ததா? திருமணம் செய்து கொண்டார்களா? என்பது காலத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

மநுவின் சட்டம் நடைமுறைக்கு வந்து பாரதத்தில் எப்படிப்பட்ட வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்பதால் அதற்கு விளக்கம் தேவையில்லை. 3000 ஆண்டுகள் கழித்தும் இன்னமும் பெண்கள் தங்கள் சம உரிமைக்கும், போகப்பொருளாகப் பார்க்கப்படாமல் இருப்பதற்கும் நடத்தி வரும் போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தி வரும் பெண்கள் அனைவருமே சுவர்ணரேகா தான். அவர்களுக்கு உதவும் நல்ல மனமுள்ள ஆண்கள் அனைவருமே உத்திரன் தான்.
 
அருமையான கதை. சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்
 
மிக்க நன்றி! எனது ஆராய்ச்சிகள் வீண் போகவில்லை. மீண்டும் நன்றி...
 
சிறப்பான கதைக்களம், அருமை... அருமை... வாழ்த்துக்கள் 💐 💐 💐
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top