My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

80.தேன்சிட்டுகள்

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,585
80.தேன்சிட்டுகள்
துரைக் குடும்பம், கடந்த நான்கு வருடங்களாகவே தீபாவளியை விமரிசையாக தான் கொண்டாடி வருகின்றனர்.

ராஜதுரை ஒற்றையாய் திரிந்த போதே இந்த நல்ல நாள், பெரிய நாளில் தான் குடும்பத்துக்காக அதிகம் ஏங்குவான். ராதா ராணி , பிள்ளைகள் முதற்கொண்டு சரோஜா குடும்பமும், ரங்கதுரையுமே அப்படித் தான்.

மீனாவும், பூங்குயில் வரும் முன், மாமா, அம்மாச்சியோடு ஏனோ, தானேவென்று தான் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

பூங்குயில் வந்த பிறகு, அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம். செல்லம்மாள் மறந்திருந்த முறைகளையும் கடைபிடித்து, பலகாரம் சுடுவது, எண்ணெய் குளியல், கறி விருந்து என பாண்டிக் குடும்பம் போன்றே கொண்டாட, செல்வமணி வேண்டியதை நாலு பங்காக வாங்கி போடுவான். இப்போதெல்லாம் கோவைக்கு படிக்கச் சென்றிருக்கும் அழகி வீட்டுக்கு வருவதையே மணிக்குயில் இல்லம் பண்டிகையாக கொண்டாட, தீபாவளியை விடுவார்களா, நகை, விதவிதமான துணிமணி என அழகியை தாங்கத் தான் செய்தார்கள்.
துரை குடும்பத்தில், ராதாராணி வந்த பிறகு, கொண்டாட்டங்கள் இரட்டிப்பு சந்தோஷத்தோடு ஆரம்பித்தன. அப்பாவும், மகளும் ராதாவிடம் வம்பிழுத்து , கத்த வைத்து, சண்டை சமாதானம், கொஞ்சல், குழாவல் என கூத்தடித்தே பண்டிகையை சிறப்பிப்பார்கள்.

இந்த முறை, சித்ரா, ஆதியின் தலை தீபாவளியை முன்னிட்டு, ஒருவாரம் முன்பே, சேலை, துணி மணி, பலகாரம், பாத்திரம் என மகளோடு சேர்த்து மாமியார் கோதைக்கும் வைத்துக் கொடுத்து அழைப்பு விடுத்தனர்.

“ முதல்நாளே வந்திடனும். இங்க எதுவும் செஞ்சுட்டு இருக்காதீங்க” என துரைகள் அன்புகட்டளையிட,

“ இங்க வேலை செய்யிறவுக, ஆளுங்க வரப் போக இருப்பாக சித்தப்பா. அவுகளுக்கெல்லாம் தீபாவளி அன்னைக்கு பலகாரம்கொடுக்கனும். உங்க மகளும், மருமகனும் வந்துட்டு வரட்டும். “ என்றாள் கோதை.
“ நீயும் எங்க மகள் தானே ஆத்தா” என ரங்கம் கேட்க, கோதைக்கும் மகிழ்ச்சி, நெகிழ்ச்சியோடு,
“ இல்லையிண்டு யார் சொன்னா, மதியம் சாப்பிட வந்திடுறோம்பா” என சம்மதம் சொன்னாள்.

சித்ரா மும்முரமாக பரிட்சைக்கு படித்து வருவதால், காலையில் வருவதாக ஆதி சொல்ல,
“ இரண்டு நாள் கழிச்சு தானே பரிட்சை வருது. அதெல்லாம் எங்க மகள் எழுதிடும்.” என ராஜதுரையும்,

“பரிட்சை வரும், போகும். தலைதீபாளிங்கிறது வாழ்க்கையில ஒரு தடவை தான். அதுஅதை அனுபவிக்கிற காலத்தில அனுபவிச்சிடனும் பேராண்டி” என ரங்கமும் சொல்ல “ முதல் நாள் இரவைக்கே வந்து சேரனும். இல்லையிண்டா நாங்க தூக்கிட்டு போக வந்துடுவோம்” என்றனர். சொன்னது போலவே ராஜதுரைஐன கருமாத்தூர் சென்று கையோடு அழைத்தும் வந்து விட்டான்.

ராஜதுரை பட்டாசை ஏகமாக வாங்கி குமித்து இருக்க, முதல் நாள் இரவிலிருந்தே வானவேடிக்கைகளை விட ஆரம்பித்து விட்டனர்.
காரையாம்பட்டி துரைபாண்டி இல்லத்தில் புது வரவான வரகுணபாண்டியன் பத்து நாள் பிளையாக இருக்க, வேட்டு சத்ததில் அவனுக்கு தூக்கிப் போட்டது. சன்னு அணைத்து வைத்துக் கொண்டபோதும், அதிர்வில் உடல் தூக்கி போட, தினேஷ் பாண்டி, செல்வம் மக்களுக்கும் சேர்த்து வெடி போட தடை போட்டான்.

“ என்னா மாமா, பயந்தாகோலி பயலை பெத்து வச்சிருக்க” என மதி, மகி கிண்டலடிக்க,
“ பிச்சு புடுவேன். அவன் வளர்ந்து வந்து உங்க வீட்டுக்குள்ளையே வெடி போடுவான் பாருங்கடா” எனவும்,

“ சரி போ அழுவாத. நாங்க தாத்தா வீட்டுக்கு போயி வெடி போட்டுக்குறோம்” என்றனர்.

அவர்கள் மானூத்து சென்று மாமன் மகன்களோடு வெடி போட திட்டமிட, “ பேராண்டிகளா, நம்ம வீட்டுக்கு வாங்க. வேணுங்கிற வெடி பொடுங்க” என ரங்கம் அழைப்பு விடுக்க,
“ வந்துட்டா போச்சு” என பைக்கை எடுத்துக் கொண்டு பெருமாள்பட்டி, மானூத்து என திரிந்தனர்.
“ அடேய், லைசன்ஸ் இல்லாமல் வண்டியை ஓட்டாதீங்கடா, போலீஸ் பிடிக்கும்” என பூங்குயில் எச்சரிக்க,

“ அதெல்லாம் மந்திரி தாத்தா பேரைச் சொல்லி எஸ்ஸாகிடுவோம்” என பறந்தனர். அவர்களின் ஆதி அண்ணனும் துரை இல்லத்தில் இருக்க, மதி, மகி,பூபேஸ், சர்வேஸையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு துரை இல்லம் சென்றனர்.

சாமிதுரை பொறுப்பாக ஏற்பாடுகளை கவனிக்க, சங்கர்துரையும், சஞ்சனாவும் இவர்களோடு போட்டி போட்டு வெடி போட்டனர்.

சன்னுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை அறிந்தும் சாந்தம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் ஜெக்கா ரெட்டிககு வர முடியாமல் போனது. அதனால் பேரனுக்கான பரிசு பொருட்களோடு சிண்ட்டுவை அனுப்பி வைத்திருந்தனர். நிர்மலா, இந்த வருட தீபாவளியை சிண்ட்டு தங்களோடு கொண்டாடட்டும் என கேட்டுக் கொள்ள,

“ அவனை கேட்டுக்கம்மா, எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று விட்டார் ரெட்டி.

சிண்ட்டு என்ற சிம்ம ராஜ் மோகன் ரெட்டி, சாந்தம்மாவுக்கு பிள்ளையை தாங்கும் சக்தி இல்லாததால், செயற்கை முறை கருத்தரிப்பில் உயிர்த்து நிர்மலாவின் கருப்பையில் வளர்ந்தவன்.

குண்டூர் வல்லபாபுரத்தில் இருக்கும் வரை, நிர்மலா அவனை உரிமை கொண்டாடியதே இல்லை. சன்னு அவனை தம்பி என பாசமாக பாவித்த போதும், அவனது அம்மம்மாவின் போதனையால் இவர்களை வெறுக்கவே செய்தான்.

கிருஷ்ண புஷ்கரம் என்ற நதி பூஜை சமயம் நடந்த நிகழ்வுகளுக்கு பின்பே, இவர்கள் மீது பாசம் வந்தது.

சிண்டுவின் பெரியப்பா மகன் ஜெகதீசன், தினேஷ் பாண்டியின் உற்ற நண்பன். அவன் அழைப்பின் பேரில், கிருஷ்ணபுஷ்கரத்துக்கு சென்ற போது தான் எதிர்பாராத விபத்தாக ராஜசந்திரிகாவை சந்தித்து வெறுப்பும், விருப்புமாக அவர்கள் காதல் மலர்ந்தது.

அந்த விதத்தில், சிண்ட்டு, தினேஷ்பாண்டி இடையே நல்ல புரிதலும், பிணைப்பும் இருந்தது.

‌இரண்டு நாள் முன்பு வந்தவன், நிர்மலா கேட்டுக் கொள்ளவும், அக்கையா, பாவாவோடும் அவர்கள் மகன்களோடும் நேரம் செலவளிக்க முடிவெடுத்தே துரைபாண்டி இல்லத்தில் தங்கினான்.

துரை சகோதரர்கள், சிண்ட்டுவை நிர்மலாவின் மகனாகவே பாவித்தனர். தீபாவளிக்கு, மற்றவர்களுக்கு உடை எடுத்தது போலவே நிர்மலாவோடு சேர்த்து சிண்டுவுக்கும் எடுத்து கொடுத்து, தீபாவளியை தங்கள் இல்லத்தில் கொண்டாடவும் அழைப்பு விடுத்திருந்தனர்.

“ மாப்பிள்ளை” என்ற அவர்கள் அழைப்பும், உரிமை பாராட்டலும் சிண்டுவுக்கும் பிடித்தே இருந்தது. கணினி துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவன், தினேஷ், ஜெகதீஷ் போல அதே துறைக்கு போகவே விரும்பினான்.

சாந்தம்மாவின் உடல் நிலை காரணமாக, ஜெகன் மோகனும் சோர்ந்து போக, நானாவுக்கு துணையாக தங்கள் தொழிலை பார்த்துக் கொள்கிறான்.

நான்கு வருடத்தில், சில பல முறை வந்து சென்றதால், இங்குள்ளவர்களோடும் நன்றாகவே பழகி இருந்தான்.

நிர்மலா, உடன்பிறந்தவர்களோடு தீபாவளி கொண்டாடட்டும் என சன்னுவும் அவளது மகனும் இன்று அவர்களை பார்த்துக் கொள்ளும் வேலையிலிருந்து விடுப்பு கொடுத்திருக்க, சிண்டுவோடு அவரும் முதல் நாள் இரவே துரை இல்லத்தில் தங்கினார்.

துரை இல்லம், எந்த பண்டிகையாக இருந்தாலும், தங்களுக்கு பழக்கம் இருக்கிறதோ இல்லையோ, மற்றவர் போல் விமரிசையாக கொண்டாட பழகி இருந்தனர்.

நவராத்திரியில் நான்காவது வருடமாக மணிக்குயில் இல்லத்தில் செல்லமுத்துவை தெய்வமாக வைத்துக் கும்பிட, ராதாராணியும் மூத்தவளை நினைத்து வைத்து கும்பிடுகிறாள். இதில் ரங்கதுரைக்கு பரம திருப்தி.

தங்கள் பெற்றவர்களின் திதி, ராமதுரையின் திதியையும் கூட முறைப்படி கோவிலில் வைத்துக் கொடுக்க, சரோஜாவுக்கும் திருப்தி.

சாமிதுரை பொறுப்பான தலைமகனாக, பெரியப்பா, சித்தப்பாக்களுக்கு துணையாக காரியம் யாவிலும் கை கொடுத்தான். மூன்று வருடமாக கார் கம்பெனி ஒன்றில் வேலை மார்க்கெட்டிங்க் பிரிவில் வேலை செய்ய, கார்களை பற்றிய அறிவு நன்றாக இருந்தது.

விரைவில் அவனுக்கு கார் ஷோ ரூம் மற்றும் மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்துக் கொடுப்பதற்கான முயற்சியில் துரை சகோதரர்கள் இறங்கி உள்ளனர். மகனும் வாழ்க்கையில் நல்லபடியாக செட்டிலாகிவிடுவான் என்ற நம்பிக்கை சரோஜாவுக்கும் வந்திருந்தது. துரை குடும்பத்தில் மூத்த பெண்மணியாக பொறுப்பாகவே வீட்டை கவனித்துக் கொண்டார்.


இன்று இதோ, அதிகாலை கங்காஸ்நானத்துக்கு, துரை குடும்பம் அதிகாலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டிருந்தது. ராதாராணி, நல்லெண்ணெய்யை, அழகான குட்டி, குட்டி கிண்ணத்தில் நிறைத்து, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தாம்பாளத்தில், சாமி அறையில் வைத்திருந்தாள். சாமி விளக்கேற்றி கும்பிட்டு விட்டு, பழைய துரை இல்லத்தின் முற்றத்தை அலங்கரித்து தீபாவளியை சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.

முதலில் புது மாப்பிள்ளை, பெண்ணை அமர வைத்திருந்தனர். சித்ரா இலகுவான சேலையிலும், ஆதி வெள்ளை வேஷ்டி, அங்கவஸ்திரம் போட்டு அமர்ந்திருந்தான்.

இருவருக்குமாக நிர்மலா சொல்லச் சொல்ல, ராஜதுரையும், ராதாராணியுமாக நலுங்கு வைத்து, தலையில் எண்ணெயும் வைத்துவிட, பெரியவர்கள் பூக்களை தூவி ஆசீர்வாதம் செய்தனர்.

சாமி துரை, சங்கர் துரை மச்சினன்கள் இருவருமாக ஆதியின் உடம்பில் எண்ணெய் தடவி விட,

“ டேய் மச்சினங்களா, சம்பிங்க், ஹேட் மசாஜ் எல்லாம் பண்ணுவிங்களா” என்று கேட்க,

“ செஞ்சுட்டா போச்சு” என்றனர்.

“ நான் செஞ்சு விடுறேன்” என சஞ்சனா வர, சித்ரா அவளை முறைத்தாள்.

“ மாம்ஸ், உங்க படிப்ஸ் ரொம்ப தான் முறைக்குது. பொறாமையோ?” என ஆதியிடம் ரகசியம் பேச,

“ அப்படி தான் போல, இப்பவெல்லாம் அடிக்கடி முறைக்கிறா” ஆதி வேண்டுமென்றே கொழுந்தியாளோடு குழாவ, “ரொம்ப்தாதான்” என கோனை வலித்தாள்.

சஞ்சனா எண்ணெய் கிண்ணத்தை தூக்க வர,

“ எண்ணெய் வேண்டாம், நலுங்கு வையி” ரங்கத்தையும், சிண்டுவையும் அமர்த்தி நிர்மலா எண்ணெய் வைத்துக் கொண்டிருந்த நிர்மலா.

“ இது நல்ல ஐடியாவா இருக்கே”

என சஞ்சனா சந்தன கிண்ணத்தை எடுக்க,

“ மாமா பாவம்” என்றான் சங்கர் துரை.

“ அதெல்லாம் பொறுப்பா நடந்துக்கும்” சாமிதுரை தங்கைக்கு சப்பகட்டு கட்ட,

“ நீங்க தான மெச்சிக்குங்க” என்றான் சங்கர்.

சஞ்சுவின் லீலைக்காக காத்திருகக்க, சித்ராவுக்கு சமத்தாக நலங்கு வைத்த சஞ்சு, ஆதியின் கை, கண்ணம், தோள் பட்டையில் அப்பி விட,

“ சஞ்சுமா” என சித்ரா முறைத்தாள்.

“ உனக்கு பொறாமையா இருக்கா, நான் அப்படி தான் தடவுவேன்” என கை நிறைய எடுத்து அப்ப,

“ ஆத்தா தாயே, உனக்கு நான் தான் கிடைச்சேனா” என அவன் கதற,

“ ஆமாம், சக்தி மாமா வரலைல” என்றாள்.

“ அண்ணன் அனுபவஸ்தர் எஸ்ஸாகிட்டார் “ என்றவன்,

“ அங்கபாரு உன் அயித்த மகனை, உட்கார வச்சிருக்காங்க. அங்க தடவு” என ஆதி, சிண்டுவை கோர்த்து விட, நிர்மலா அப்போது தான் மகனுக்கு எண்ணெய்யை வைத்து முடித்திருந்தார்.


சஞ்சனா “ நீங்க மட்டும் தப்பிக்க முடியுமா” என சிண்ட்டுவின் இரண்டு கன்னத்திலும் சந்தனத்தை அப்பி விட,

சிண்ட்டு,” ஏய்” என முகத்தை சுளித்தான்.சஞ்சனாவின் முகம் கூம்பி விட்டது.



“ சஞ்சு, ஸே ஸாரி டூ ஹிம்” என ராதாராணி அதட்ட,

நிர்மலா மகனின் தோளில் அழுத்தி விட்டு, “ இப்ப என்ன? அத்தை மகனுக்கு தானே வச்சுச்சு. ஒன்னுமுல்ல சஞ்சமா” என நிர்மலா சமாதானப்படுத்த, அத்தையம்மாவின் கையை உதறிவிட்டு, உள்ளே ஓட,

“ நீ ஒருத்தி” என ராஜதுரை மகள் பின்னோடு சென்றான்.

சித்ரா, ஆதியை ஆட்சேபனையாக பார்க்க, “ நான் என்ன புள்ளை பண்ணேன்.” என்றான் ரகசியமாக.

“ ஆத்தா, ஒன்னுமில்லைடா” என்ற ரங்கம், “ அது விளையாட்டு பிள்ளை மாப்பிள்ளை” என சிண்ட்டுவிடம் விளக்கம் தர,

“ சாரி மாமையா , நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை. அதனால அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன், ஸாரி அத்தையா” என ரங்கதுரை, ராதாராணி இருவரிடமும் சொன்னான்.

“ அவ கொஞ்சம் அதிக பிரசிங்கி தான். ஆள் வளர்ந்த அளவு, இங்கிதம் தெரியாது. எக்ஸ்ட்ரீம்லி சாரி” என ராதாராணி வருந்த,

“ ராதா, சிண்ட்டு அவளுக்கு உரிமையான அத்தை மகன் தானே, அத்தை புள்ளை, மாமன் புள்ளை இப்படி விளையாடிக்கிறது சகஜம் தான். நீ பெரிசு பண்ணாத” என்ற நிர்மலா,

“ நீ வா சிண்ட்டு, நான் தண்ணீர் ஊத்தி விடுறேன்” என அழைத்தார்.

“ நானே குளிச்சிக்கிறேன் அம்மா” அவன் சொல்ல,

“ நல்லா இருக்கே. இன்னைக்கு நான் தான் ஊத்தி விடுவேன். பிள்ளையை குளிப்பாட்டுற சுகம் மருமகள் வர்ற வரை தானே” என்ற நிர்மலா,

“ சித்து, நீயும் ஆதிக்கு தேஞ்சு குளிக்க ஊத்திட்டு, அப்புறம் குளி” என்றார் .
“ நானா” அவள் அதிர,
“ தாய்க்கு பின் தாரம். போ, குளிக்க ஊத்து. அடுத்து ஒவ்வொருத்தரா குளிக்கலாம்” என்றார் நிர்மலா.
சாமி, சங்கர் இருவரையும் சரோஜா பார்த்துக் கொள்ள, ராஜதுரை மகளை சமாதனம் செய்து அழைத்து வந்திருந்தான்.


“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” ராதா மகளை திட்ட, சஞ்சு அம்மாவையும், ஓரக் கண்ணால் சிண்ட்டுவையும் முறைத்தது.

“ ஸே, ஸாரி டூ ஹிம்” ராதா அதட்ட,
“ ஏய் விடுத்தா. நல்ல நாள் அதுவுமா, புள்ளையை அழுக வைக்கிறவ” என ராஜதுரை மகளுக்கு வக்காலத்து வாங்க,

சஞ்சனா, நேராக சென்று சிண்ட்டு முன் நிற்க, அவள் ஸாரி சொல்ல போகிறாள் என பெரியவர்கள் நினைக்க,

“ சஞ்சு, நோ. மாமா, அவ கோக்கு, மாக்கா ஏதாவது செயவா. பீ கேர்ஃபுல்” என சங்கர்துரை குரல் கொடுக்க, சிண்ட்டு சுதாரிக்கும் முன்,

“ நான் அப்படி தான் செய்வேன். ஐ ஹேவ் ஏ ரைட்ஸ்” என சிண்டுவை பார்த்து கண் அடித்து விட்டு, அவன் ஒரு கண்ணத்தில் மஞ்சளும், மற்றொன்றில் குங்குமமும் தடவியவள், அவன் சுதாரிக்கும் முன் ஓடி, சித்ராவோடு செல்லும் ஆதியின், முகத்திலும், மஞ்சள், குங்குமத்தை பூச,
“ஏய் வாலு, உன்னை ” என ஆதி அவளை பிடிக்க முயல, சித்ராவை அவன் மீது தள்ளி விட்டு , மஞ்சள், குச்குமம் டப்பாவை எடுக்க ஓடினாள்.
பேலன்ஸ் தவறி ஆதி மீது சித்ரா விழ, அவன் மேல் ஒட்டியிருந்த மஞ்சள் குங்குமம் அவள் மேல் எசகு பிசகாக ஒட்டியது.

“ சங்கரு, அவ கிட்ட வாங்கு. இல்லையிண்டா தீபாவளியை ஹோலி பண்டிகை ஆக்கிடுவா” என ராதாராணி சத்தம் கொடுக்க, அண்ணன்கள், அப்பா, அம்மா, பெரியப்பா என எல்லோர் மேலும் மஞ்சள், குங்குமத்தை வீசிய படி திரிந்தாள்.

“ ஆத்தி, ஆட்டங்காளியால இருக்கா” என்ற நிர்மலா, “ இந்த பாத்ரூம்ல இரு ராஜா, நான் துண்டு எடுத்துட்டு வாறேன்” என நிர்மலா அகல, பின்கட்டில் சிண்ட்டு, தனக்குள் சிரித்தபடி நின்றான்.

சாந்தம்மா திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி கொண்டே தான் இருக்கிறார். இரண்டு அம்மாக்களுக்கும் பேச்சே இது தான். இத்தனை நாள் பிடிக் கொடுக்காதவனுக்கு சஞ்சு மேல் ஓர் ஆர்வம் தோன்ற, வயது வித்தியாசத்தையும் யோசித்தான்‌.

“ எங்க பிடிங்க பார்ப்போம்” என சஞ்சு ஆட்டம் காட்ட, தனியாக சிண்ட்டுவிடம் தான் சிக்கினாள். அவன் மீதே வந்து மோத, விழாமல் பிடித்து நிறுத்தியவன், உணர்வுகள் உந்த, இடையோடு அவளை அணைத்து, தன் உயரத்துக்கு தூக்கியவன், “ மாமா மகள் மேல எனக்கும் உரிமை இருக்குல்ல” என தன் கண்ணத்தில் இருந்ததை அவள் கண்ணத்தில், உராய, சஞ்சனாவுக்குள் இருந்த பெண்மகளை அது தீண்டியது. அவன் ஓங்கு தாங்காக ஆறடிக்கு இருக்க, இவள் அவனருகில் புள்ளிமானாக இருந்தாள்.
“ விடுங்க” அவள் நெளிய, அவன் பிடி இருகியது.
“ சஞ்சு” என்ற ராதாவின் குரலில் அவனை விடுத்து ஓடிச் சென்று ராஜதுரை அருகில் சமத்தாக அமர்ந்து கொண்டாள்.

ஆதி உடலில், சங்கரும், சாமியுமாக நன்றாக எண்ணெய் தேய்த்து இருக்க, சீயக்காய், ஷாம்பூ, பாடி வாஷ் என போட்டு அவன் மேனியை பளபளக்க வைப்பதே சித்ராவுக்கு பெரிய வேலையாக இருந்தது. பின்கட்டிலிருந்த மறறொரு பாத்ரூமுக்கு ஆதியை கைபிடித்து அழைத்துச் செல்ல,
“ அய்யா சாமி” என பார்வையற்றவன் போல் பாசாங்கு செய்ய, “ சும்மா வாங்க” என அவன் கையில் அடித்தாள்.

“ சாமிக்கு எண்ணெய் காப்பு சாத்த உன் அண்ணன், தம்பிங்க என்கிட்ட ட்ரயல் பார்த்து இருக்காய்ங்கே” என குறைபட்டபடி நடக்க, சின்ன துரைகளும் சிரித்தனர்.

குளியல் அறைக்குள் அழைத்து வந்திருந்தவள், “ சீயக்காய் போட்டு தேய்ச்சிட்டா, பளபளண்டு தான் இருப்பிங்க” என்றாள் சித்ரா நமட்டு சிரிப்போடு.
“ ஏய், என்ன லந்தா?” என அவன் திரும்ப, முதுகில் தடவ போன சீயக்காய் முகத்தில் பட்டது.

“ ஆ” என அவன் கத்த,
“ கொஞ்ச நேரம் திரும்பாமல் தான் உட்காருங்களேன்” என கடிந்தவள், அவசரமாக தண்ணீரை எடுத்து ஊற்ற, சீயக்காய் கண்ணுக்குள் சென்று அது வேலையை காட்ட ஆரம்பித்தது.


“ ஏய் கண்ணு எரியிது புள்ளை” என கத்த,
“ கத்தாதீங்க ஆதி. வெளியே தான் எல்லாரும் நிக்கிறாங்க” என ஹஸ்கி குரலில் சொல்ல,

“ நிண்டா, நிண்டுகட்டும். கண்ணு எரியிதுண்டா கத்த தான் செய்வேன். தீபாவளிண்டு மாமியார் வீட்டுக்கு கூட்டியாந்து கொடுமை படுத்துறாய்ங்களே” என அவன் கத்த,

“ மாப்பிள்ளை, நான் வேணா வந்து தண்ணி ஊத்தி விடவா” ராஜதுரை கதவை தட்டினான்.

“ புண்ணியமா போகுது, உங்க மக கிட்ட இருந்து காப்பாத்துங்க மாமா” என ஆதி சத்தம் கொடுக்க,

“ பொண்டாட்டிண்டா அப்படி தான் மாப்பிள்ளை” என ராஜதுரை அனுபவ உரை ஆற்ற,

“ நீ சும்மா வா, அவ பார்த்துக்குவா” என ராதா, ராஜதுரையை பிடித்து இழுத்து சென்றாள்.
“ சித்ரா, மகனுக்கு பக்குவமா தேய்ச்சு விடு” என்றார் நிர்மலா.

தயக்கமாக அவன் மேனியில் பட்டும் படாமலும் தேய்த்துக் கொண்டிருந்தவள்,அதன் பின் அழுத்தி தேய்க்க, அதற்கும் ஆதி ஆர்பாட்டம் செய்ய, ஜலகிரீடை சிறப்பாகவே நடந்தது.

நிஜமான கருப்பனசாமி வெளியே தான் உட்கார்ந்து இருந்தது. முற்றத்திலேயே ஸ்டூல் போட்டு ராஜதுரை அமர்ந்திருக்க, ராதாராணி அவனுக்கான சவரஸ்டனைகளை ஆரம்பிக்க, அடுத்து அவன் அலப்பறைகள் ஆரம்பமானது.

பாண்டிக் குடும்பத்திலும், ஜெயா,முத்துவின் மகன்கள் வழக்கமான அலப்பறையோடு தீபாவளியை ஆரம்நித்திருக்க, உதயனுக்கு செல்லபாண்டி வீட்டில், கங்கா ஸ்நானம் நடந்தது.

சக்திப்ரியனுக்கு விடிய விடிய வியாபாரம் நடக்கும். அதனால் காலையில் சற்று தாமதமாகவே தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பிக்கும். காலையில் இரண்டு மருத்துவ குடும்பமும், கொக்குளம் சென்று பாண்டியம்மாளுக்கு ஒரு அட்னன்ஸ் போட்டு விட்டே, காரையாம்பட்டி பக்கம் வருவார்கள்.


நான்கு வீடுகளுக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கவென இளையவர்கள் கார்களில் பறந்த வண்ணம் தான் இருப்பார்கள்.

ஹரிணி கால் சரியாகி, மசக்கையாகவும் இருக்க, இன்று மாலை வளையபட்டி செல்கிறாள். திருமணம் முடித்து பாலும் பழமும் சாப்பிடக் கூட துரை இல்லம் வரவில்லை.
உதயனுக்கும், ராஜதுரைக்குமான வியாபார தொடர்பும் வளர்ந்திருக்க, இன்று மதிய விருந்துக்கு ராஜதுரை உதயன் தம்பதிக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

“ சாப்பிட வர முடியுமான்னு தெரியலை. ஆனால் கட்டாயம் ஹரிணியை கூட்டிட்டு வர்றேன்” என உதயன் வாக்கு தந்திருக்க, அவர்கள் வரவை எதிர் நோக்கி துரை இல்லம் காத்திருந்தது.

வீட்டுக்கு வரும், உதயன், ஹரிணியை ஆதி வரவேற்பானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
 
ஆத்தா அழகி.. கோயம்புத்தூர் ல என்ன படிக்கிறிங்க..ஒரு ஆத்திரம் அவசரம் ன வராதுக்கே 5 மணி நேரம் ஆகுது.. நம்ம மதுரை ல இல்லாத படிப்பா... சட்டு புட்டுன்னு முடிச்சிட்டு மேல் படிப்புக்கு மருதைக்கு வந்துடு...
ஆத்தா சஞ்சனா... ஆந்திரா மருமகள் ஆக போறாளா... சூப்பர்... உங்க அப்பா ராஜதுரை அம்புட்டு துலவுல உன்ன கட்டி கொடுப்பரா... பாப்போம்... கல்யாணத்துக்கு முன்னாடியே சின்டு க்கு தல தீபாவளி தான்... துரை இல்லம் தீபாவளி சும்மா பட்டாசா இருக்கே...
அடேய் ஆதி... என்னப்பா ஹனுமார் விரதம் முடிஞ்சுதா... தாத்தா @ மாமனார் வீட்ல தல தீபாவளி கொண்டாட்டம் இப்போ வரைக்கும் நல்லா தான் போகுது.. உன் மாமன் மக மரிகொழுந்து வந்தா என்ன நடக்க போகுதோ...
ஆத்தா சித்ரா... சூதனமா இரு.. உன் புருஷன் வளையப்பட்டி காரிகிட்ட ஒரண்ட இழுக்கமா பார்த்துக்கோ.. இருந்து இருந்து இப்போ தான் அவளே ஜமீன் வீட்டுக்கு போறா... ஒரு உசுரா வந்தவ இரு உசிரா போறா... பார்த்துக்க..

 
Last edited:
I am unable to read 80th chapter.
And seems nothing can be seen from today morning
Why
தீபா senbagam ப்ரொபைல் ல ignore option கிளிக் ஆயிடுச்சான்னு check பண்ணுங்க
 

Attachments

  • Screenshot_2025-12-02-12-39-25-883_com.android.chrome.jpg
    Screenshot_2025-12-02-12-39-25-883_com.android.chrome.jpg
    299.8 KB · Views: 6
தீபா senbagam ப்ரொபைல் ல ignore option கிளிக் ஆயிடுச்சான்னு check பண்ணுங்க
யாருடையதில் இக்னோர் கிளிக் ஆகியிறுக்கும். நான் இதுவரை இப்படி பிரச்சினை சந்தித்தது இல்லையே
 
I am unable to read 80th chapter.
And seems nothing can be seen from today morning
Whywill check

I am unable to read 80th chapter.
And seems nothing can be seen from today morning
Why
Refresh செய்து பாருங்கள். சைட் வேலை நடக்கிறது. அதனால் சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும்
 
யாருடையதில் இக்னோர் கிளிக் ஆகியிறுக்கும். நான் இதுவரை இப்படி பிரச்சினை சந்தித்தது இல்லையே
Unga profile sister... Kila attach agiruka screen shot la parthingana follow, ignore send direct message nu 3 option irukum athula ignore option theriayma touch pannita unga updates avangaluku visible agathu.. Thirupi athe option touch pannita ok agidum...
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top