Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,451
71. தேன்சிட்டுகள்
துரைபாண்டியன் விசயத்தை விடுவதாக இல்லை, முழு வீச்சில் பஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருந்தார். கோடி ரூபாய் ஒப்பந்தத்தை விட்டு விட்டு வந்திருக்கானே என்ள ஆதங்கம் அவருக்கு.*கோதை நீ சொல்லுத்தா, நாங்க மாப்பிள்ளையை மதிப்பு குறைவா என்னைக்காவது நடத்தி இருக்கமா” துரை பாண்டியன் கேட்க,
“ அவன் கிடக்குறான் சின்னப் பய, அவன் சொல்லை நீங்கப் பெரிசா எடுத்துக்காதீங்க சித்தப்பா” என்றாள் கோதை.
“ உனக்கு உன் பிறந்த வீடு தான்மா முக்கியம். புருஷனை சொன்னா என்ன? புள்ளையை சொன்னா என்ன? “ ஆதி நேரடியாகக் கோதையைக் கேட்டு விட,
“பாருங்க மாமா” எனக் கணவனிடம் , அவள் கண்ணீர் வடிக்க,
“ ஆதி, எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசாத, அது நல்ல பழக்கம் இல்லை.” என விருமன் கண்டித்தார்.
“ எனக்குக் கஷ்டமா இருக்குப்பா. உங்களைக் கிள்ளுக் கீரையா அந்தாள் ட்ரீட் பண்ணும் போது. எனக்கு வலிச்சது. பொண்ணு கட்டிக் கொடுக்காட்டி போறாய்ங்கே. என்னை கட்டிக்க ஒருத்தி வராமலா போயிட்டா. ஆனால் சொல்ற முறையிண்டு ஒன்னு இல்லையா. பூ வைக்கிற அன்னைக்கு, அவ நேரா வந்து ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அப்படியே விலகி வந்திருப்பேன்பா. அவ சம்மதமில்லாம நடக்குதுண்டு தான் எதிர்த்தேன். அதை விட்டுட்டு அந்த வீட்டில் இருந்து என்னை குண்டுகட்டா இல்ல என்னைத் தூக்கி போட்டாய்ங்கே குப்பை மாதிரி . யாரு கேட்டா” என ஆங்காரமாகப் பேச, பாண்டிகளுமே வருந்தினர். அன்று நடந்த ரசாபாசம் அவர்களே எதிர்பாராதது. அதற்காக ஜெயா, எத்தனையோ முறை ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டிருந்தான்.
“ என்ன சாமி, இப்படி சொல்லிபுட்ட. நான் கேட்டேன் ஐயா” என அசோதை அழுதபடி வந்து அவன் கையை பிடிக்க,
“ சந்தோஷம் அம்மாச்சி. உங்களுக்காவது என் மேல பாசம் இருந்ததே.” என உருக்கமாகப் பேச,
“ நீ எங்க மூத்த பேரன் ஐயா, உன்னை விட்டுக் கொடுப்பமா” எனக் கேட்க,
“ அதெல்லாம் எல்லாருமே விட்டு கொடுத்திட்டிங்க அம்மாச்சி. இங்க இருக்க அத்தனை பேரும் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டவுங்க. என்னன்னமோ ட்ராமா போட்டு, எப்படி எப்படி, ஒவ்வொருத்தர் கல்யாணத்தையும் நடத்தி வச்சாங்கண்டு, நான் கண் கூட பார்த்திருக்கேன். அப்படி நான் விரும்பினவளையும் கட்டி வைப்பாங்கண்டு நம்பினேன். அது தான் நான் செஞ்ச தப்பு” எனக் கலங்க,
“ ஆதி ப்ளீஸ் “ என சித்ரா அவன் கையை பிடித்தாள். “ இன்னைக்கு ஒரு நாள் பேசிக்கிறேன் சித்து. இன்னைக்கு தடுக்காத” என்றான்.
“ ஹரிணி ஜாதகம் சேரலையே ஐயா, அதினால தானே எல்லாரும் அமைதியா இருந்தோம்” வீரன் சொல்ல,
“ அது எல்லாமே ஃபேக் தாத்தா. புரட்சி கல்யாணங்களை செஞ்சு வச்ச வீடு, ஜாதகத்தைப் பார்த்து மறுத்துச்சுண்டா நம்ப முடியுதா. எல்லாம் காசு பணம் அந்தஸ்து படுத்தின பாடு. அவ ஜாதகம் என்னோட ஒத்துப் போகலையிண்டு சொன்னாய்ங்கல்ல, சரி, அப்படியே இருக்கட்டும். உதயமாக ராசாவோடு ஒத்து போச்சா. அப்புறம் ஏன் அவனைக் கட்டின நாளிலிருந்து உன் பேத்தி நொண்டிகிட்டு உட்கார்ந்து இருக்கா. ஜமீன் வாரிசு, இவளை கட்டனுமுண்டு அவன் ஜாதகத்தை மாத்தி கொடுக்கலையிண்டு என்ன நிச்சயம்? “ ஆதி வரிசையாகக் கேட்க, எல்லாருமே அதிர்ந்தனர்.
“ நீ வேற குண்டை தூக்கி போடாதடா” என செல்வமணிச் சொல்ல,
“ அந்த துரோகி எப்படியோ போறா. என்னை ஏமாத்தினதுக்கு அவளுக்குக் கிடைக்கிற தண்டனை “ ஆதி சொல்ல,
“ அப்படிச் சொல்லாத ஆதி. அவளும் சூழ்நிலை கைதி” என மீனா அவனைத் தேற்ற,
“ சக்தி அண்ணனுக்கும் உனக்கும் இடையில வராத பிரச்சினையா. ஆனா ஊண்டி நிண்டிங்கல்ல. அது தான் லவ்வு. இவ சரியான பச்சவூந்தி, எப்படியோ போயி தொலையிறா. அவளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.” எனவும்,
“ திரும்ப, திரும்ப அப்படிச் சொல்லாத ஆதி, பெண் பாவம் பொல்லாதது” எனக் கோதை மகனைக் கண்டிக்க,
“ என்னை பெத்த ஆத்தா, எல்லாரைப் பத்தியும் யோசி. ஆனா உன் மகனைப் பத்தி மட்டும் யோசிக்காத” எனவும்,
“ உனக்கு வாழ்க்கை நல்லா தான் அமைஞ்சிருக்கு. உன் பிடிவாதத்துக்கு அதிரடியா நடந்தாலும், எல்லாரும் கூடி நல்ல முறையில, நல்ல பொண்ணை தான் கட்டி வச்சிருக்காங்க. நீ தான் தேவையில்லாமல் பழசை பிடிச்சு தொங்கிட்டு இருக்க. நமக்கு எந்த பகையும் வேண்டாம். சித்ராவோட சந்தோஷமா குடும்பம் நடத்து போதும்” எனக் கோதை வேண்ட,
“ அதெல்லாம் வந்துருவாப்ல ஆத்தா. நீ விசனப் படாத.” என்ற ராஜதுரை,
“ நீயும் எமோஷனல் ஆகாத மாப்பிள்ளை. எது கிடைக்கனுமுண்டு இருக்கோ. அது கிடைக்கும். மொட்ட பயலா திரிஞ்ச எங்களுக்கே தொலைஞ்ச குடும்பம் கிடைச்சிருக்கு. உனக்கென்ன ராசாதி ராசாவா கொடி நாட்டலாம்” என ராஜதுரை , மருமகனின் தோளில் கைப் போட்டு தேற்ற,
“ நீங்க இருக்க தகிரியத்தில தாண்டா, எங்களைப் போட்டுப் பார்க்கிறான்” துரை பாண்டி குற்றம் சுமத்தினார்.
“ என்னா அண்ணேன். நீங்களே இப்படி சொல்றீங்க” எனத் துரை சகோதரர்கள் இருவரும் வருந்த,
“ பின்ன என்ன. தங்கம் எப்படி ஃபீல் பண்ணான் தெரியுமா” என்றார் துரை பாண்டி.
ராஜதுரை ஆதிக்குக் கண்ணைக் காட்ட, அவர் கையை பற்றிய ஆதி,
“ நான் சுயமரியாதையோட வாழணுமுண்டு நினைக்கிறேன் தாத்தா. தங்கம் மாமாக்கு தெரிஞ்சவருண்டா கூட, அவர் சிபாரிசில் தான் காண்ட்ரேக்ட் கிடைச்சது, அவர் போட்ட பிச்சையிண்டு பேசுவாங்க. இது எதுக்கு. நீங்க வீடு கட்ட சான்ஸ் கொடுத்ததையே, சொந்தக்கார பயண்டு கை தூக்கி விட்டமுண்டு தான் எம் எல் ஏ சொன்னாரு. நான் கொஞ்சம் சுயமரியாதையோட இருந்துக்குறேன் தாத்தா” என்றான்.
“ அப்ப சான்ஸ் கொடுத்தமுண்டு சொல்றது கூட, உன் சுயமரியாதையை கெடுக்குமுண்டு சொல்றியா. பாண்டி குடும்பம், செஞ்ச உதவியைத் தம்பட்டம் அடிக்கிறோம் . அது தானே சொல்ல வர்ற” என துரை பாண்டி கோபம் மாறாமல் கேட்க,
“ நான் அப்படிச் சொல்லலை. என் திறமையை பத்தின கமெண்ட்ஸை, என்னோட ப்ளஸ், மைனஸை நீங்களோ, தினேஷ் மாமாவோ, ரங்கம் தாத்தாவோ, இந்த டாக்டர்களோ, சின்னதுரை மாமாவோ, அத்தையோ சொன்னா கூட நான் ஏத்துக்குவேன். என் வெப்சைட்லையே போட்டுக்குவேன். ஏன்னா நீங்க எல்லாரும் என் க்ளைண்ட்ஸ். வீடு, ஆஸ்பத்திரிண்டு உங்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கேன். ஆனா அனைனக்கு உங்க எம்எல்ஏ எங்களை தரமிறக்கி தான் சொன்னார். கூட இருந்தவுங்களை கேளுங்க. அந்த நிலைமை எனக்கு வேண்டாம். நான் யாருக்கும் கடமை பட்டவனாவும் இருக்க விரும்பலை” என்றான்.
“ தங்கம் உன்னைச் சிபாரிசே பண்ணலையே, எம்டியா கண்டு பிடிச்சிருக்காரு. நீ முறுக்கிக் கிட்டு வந்தது, அவர் மனசில பட்டு, தங்கத்துக்கே போனடிச்சு சொல்லி இருக்கார். நான் சிபாரிசே பண்ணலையே சித்தப்பா. ஆதி ஏன் வேண்டாமுண்டு சொன்னான். என் மருமகண்டு சொல்றது அவனுக்கு அவ்வளவு கேவலமாண்டு கேட்கிறான். நானே கேட்கிறேன், பொண்ணு கட்டிக் கொடுக்கததுனால பாண்டி குடும்பம் உன் சொந்தம் இல்லையிண்டு ஆயிடுமா” துரைப் பாண்டி கேட்க, அவர் கேட்ட பாயிண்டை விடுத்து,
“ தாத்தா ப்ளீஸ், இன்னொரு தடவை உங்க வீட்டு பொண்ண கொடுக்கலையிண்டு பெருமையா சொல்லிக்காதீங்க. அது என் பொண்டாட்டியைக் காயப் படுத்துது. நான் கேட்டவுடனே, யோசிக்காமல் எனக்குச் சம்மதம் சொன்னவ. உங்களுக்கு உங்க பேத்தி ஓவியமா இருக்கலாம். எனக்கு என் பொண்டாட்டி ரெஸ்பெக்ட் முக்கியம்” ஆதி சொல்ல,
“ அது மட்டும் யாரு. அதுவும் எங்க வீட்டுப் புள்ளைத் தாண்டா” என்றார் துரைபாண்டி.
“ இருக்கட்டும். அவகிட்ட அந்த கொம்பு இல்லைல. “ எனவும்,
“ நல்லா சொல்லுடா தம்பி. “ என சிவப்ரியா, செல்வி, செல்வமணி மூவருமே ஆமாம்சாமி போட,
“எங்களை விட நாலு பங்கு கொம்பு நீ தாண்டா வளர்த்து வச்சிருக்க. அம்மாளையே பதம் பார்க்கிற அளவுக்கு வளர்த்து வச்சிருக்க” எனப் பூங்குயில் அக்காள் மகனைச் சத்தம் போட,
“பெத்த புள்ளையை விட, கட்டினவரை விட, பிறந்த வீட்டையும், அண்ணன் தம்பியையும் தானே தூக்கி வச்சுகுறீங்க. அப்புறம் நான் தான் எங்க அப்பா, சித்தப்பாவுக்கும் சேர்த்து பேசனும்” என்றான்.
“ இல்லையிண்டா உன் சித்தப்பனுக்கு பேசவே தெரியாது” என பூவு திட்ட,
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஜெயபாண்டி,
“ நீ எங்களை வித்தியாசமா பார்த்தாலும், நாங்க உன்னை மருமகனா தான்யா பார்க்கிறோம். சித்ராவும் எங்க பொண்ணு தான். எங்க பெண்ணும் துரோகி எல்லாம் கிடையாது. அந்த குணம் எங்க வம்சத்துக்கே இல்லை.” எனும் போதே கண் கலங்க, ஆதிக்கும் கலங்கியது.
“ உங்களுக்கு இல்லை மாமா. உங்க அண்ணனை அந்த லிஸ்ட்ல சேர்க்காதீங்க. அவருக்குப் பதவி வெறி பிடிச்சு ரொம்ப காலம் ஆச்சு. சொந்ததில முதல் பலி நாணு. ஊருக்குள்ள எத்தனை பேரோ.” என்றான்.
“ஆதி, அது நமக்குத் தேவையில்லாத பேச்சு” எனச் செல்லப்பாண்டி குறித்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்த விருமன், துரை பாண்டியிடம் ,
“நீங்க எல்லாம் இல்லாமல் நான் இல்லை மாமா. தொழிலையும் என்ன தூக்கி விட்ருக்கீங்க. அதை ஒத்துகிறதுல எனக்கு எந்த கௌரவ குறைச்சல் இல்லை. அவன் இள இரத்தம். அப்பனைப் பெரிய ஆளுண்டு நினைக்கிறான்” என விருமன் அடக்கமாகப் பேச,
“நீங்க எப்பவுமே பெரிய மனுஷன் தான் மாப்பிள்ளை. எங்களோட எல்லா இடத்துலையும் தோள் கொடுத்து நிண்டு இருக்கீங்க. இனியும் அப்படி தான். இப்பவும் ஆதி, முன்னேற வேண்டிய வயசு கோபத்தில் வாய்ப்பை தவற விடுறானேங்கிற ஆதங்கம் தான்” என்று சொல்ல,
“புரியுது மாமா. நம்ம சொல்றதை சொல்லுவோம், எடுத்துக்கிட்டா நல்லது.” விருமன் வருந்த,
“ மனசு இருக்கிறதை கொட்டிட்டாருல்ல, இனி தெளிவு வந்துரும், விடுங்க” என வீரன் எல்லாரையும் சமாதானம் செய்தார்.
ஜெயாவுக்கு, உதயனைப் பத்தி ஆதி சொன்னது மனதில் உறுதிக்குக் கொண்டே இருந்தது, தனிமையில் அழைத்து,
“ உதயன் ஜாதகமுண்டு ஏதோ சொன்னியே, அது நிசமா” என்று கேட்க,
“ அது உறுதியா தெரியாது. ஆனா உன் மவளை, கன்னம் வச்சு தான் தூக்கி இருக்கான். சூதானமா இருந்துக்குங்க. நான் ஏமாந்ததை வச்சு சொல்றேன்” என எச்சரிக்க,
“நல்லா தான் மாப்பிள்ளை வச்சுக்குறாப்ல” எனச் சந்தேகம் கேட்க,
“ உன் மகள் கிட்ட நல்ல பேர் எடுக்க என்னவேனுமுண்டாலும் செய்வான். வேற ஏதோ முன்கதை இருக்கு. அது மட்டும் உறுதி.” என ஆதி அடித்துச் சொல்ல, ஜெயபாண்டியின் மனமும் , அதை ஆராய வேண்டும் என்றது.
உதயன் பாம்பா, பழுதா என்றால் நிச்சியம் பழுது இல்லை. பாம்பு எனில் எப்படிப் பட்டவன். காலம் தான் பதில் சொல்லும்.