அத்தியாயம் 7
கலாவின் முகத்தில் நிறையவே கடுமை. ஆனால் சுவர்ணா அதை கவனிக்கும் நிலையில் இல்லை. மயூரனின் சகோதரி எப்படி மாலாவோடு இப்படி அன்னியோன்னியமாகப் பேசலாம்? என்ற பொறாமை வர முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். மாலாவின் தாய்க்கு எதுவும் தெரியாது என்பதால் அவள் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
"நான் உண்மையிலேயே ஏதோ பூஜை செய்யப் போகிறோம் என்று அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் கலா! அவளை ஏமாற்றுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது" என்றாள் மாலா. அது சுவர்ணாவின் காதில் விழுந்தது. அவளை நோக வைக்க வேண்டும் என்ற அடக்கவே முடியாத உணர்வு தலை தூக்கியது சுவர்ணாவுக்கு.
"என்ன கஷ்டம்? என் அம்மா அளவுக்கு உன் அம்மாவுக்கு அறிவில்லை. சொன்னால் புரிந்து கொண்டு விடுவார்களா என்ன? பிறகு வேறு என்ன செய்வதாம்?" என்றாள் சுவர்ணா கடுமையாக.
மாலாவின் முகம் மாறியது.
"உலகத்தில் உன் அம்மா மட்டும் தான் புத்திசாலியோ? அத்தனை புத்திசாலி பெற்ற மகள் நீ என்றால் இப்படி நாம் சந்தித்துப் பேச வேற யோசனை கொடுத்திருக்க வேண்டியது தானே? என் வீட்டுக்கே வந்து என் அம்மாவையே முட்டாள் என்பாயா நீ? உன் குணம் இப்போது தான் தெரிகிறது." என்றாள் மாலா பதிலுக்கு சூடாக.
"என்ன? அப்படி என்ன தெரிந்து கொண்டாய்? உன் சாயம் வெளுத்து விட்டது என்று சொல்லேன். என்னை ஏன் சொல்கிறாய்?" என்றாள் சுவர்ணாவும் விடாமல்.
கலா எதுவுமே பேசாமல் வெளியில் நடக்கத் தொடங்கினாள். திகைத்துப் போய்ப் பார்த்தாள் சுவர்ணா. ஆனால் சுவர்ணாவின் அம்மா கோமதி அவளைத் தடுத்து நிறுத்தினாள்.
"என்ன செய்கிறாய் நீ சுவர்ணா? ஆண்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ? எது நமது இயல்பான குணம் என்று கேலி பேசுகிறார்களோ, அதையே வெளிக்காட்டுகிறாயே? இரு பெண்கள் சேர்ந்தாலே சண்டை தான் என்று சொல்லும் வாய்ப்பை வழங்கி விட்டாயே சுவர்ணா!" என்றாள் அம்மா.
புரியாமல் பார்த்தாள் மாலா. சுவர்ணாவுக்கு ஆத்திரம் தணியவில்லை. மாலாவைச் சொல்ல வேண்டியது தானே? ஏன் என்னைச் சொல்ல வேண்டும்? அப்படி நான் என்ன செய்து விட்டேன்? என்று மனதில் பொருமினாள். கலா அம்மாவைப் பார்த்து புன்னகைத்தாள். எல்லாரும் சேர்ந்து கொண்டு என்னை வேண்டுமென்றே ஒதுக்கிறார்கள் என்ற எண்ணம் வர கண்ணீரும் வந்தது.
சுவர்ணாவின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றாள் கலா, கோமதி மாலாவை அழைத்துச் சென்றாள். பின்னால் இருக்கும் கிணற்றடியில் கொண்டு வந்து கிட்டத்தட்ட தள்ளினாள் கலா.
"அம்மா! இவள் என்னை இப்படி நடத்துகிறாள். நீயும் பார்த்துக் கொண்டிருக்கிறாயே? உனக்கு என் மேல் பாசமே இல்லையா?' என்று ஓவென அழுதாள் சுவர்ணா. மகளை நெருங்கி அணைத்துக் கொண்டாள் கோமதி.
"நான் பேசிக் கொள்கிறேன் கலா." என்றாள். ஆத்திரம் கொஞ்சமும் குறையாமல் நின்றிருந்தாள் கலா. என்னவோ விஷயம் என்று பெண்கள் உடையை அணியச் சென்ற மயூரனும், ஹரனும் கூட வந்தார்கள். மாலாவின் அம்மா பூஜைக்கான பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்ததால் நல்ல வேளை அவள் வரவில்லை.
"நீ எதற்காக மாலாவின் மனதைப் புண் படுத்தினாய் என்று எனக்குப் புரிந்து விட்டது சுவர்ணா. ஆனால் அது சரியானது தானா? மயூரனை உனக்குப் பிடித்திருக்கிறது என்பதால் அவனது தங்கை உன்னிடம் மட்டுமே நன்றாகப் பேச வேண்டும் என்ற உனது எண்ணம் தான் பொறாமையாக மாறி உன் நெருங்கிய தோழியையே புண்படுத்தும் அளவுக்குக் கொண்டு வந்துள்ளது." என்றாள் அம்மா.
சுவர்ணாவுக்கு கொஞ்சம் வெட்கமாகவும் அதே நேரம் நான் அப்படி நினைத்தால் தவறா என்ன? இவ்வளவுக்கும் அம்மாவை புத்திசாலி என்று தானே பேசினேன். மாலா தானே என் அம்மாவை அவமானப்படுத்தினாள்? ஆனால் அம்மா என்னவென்றால் என்னையே திட்டுகிறார்கள். மாலாவை ஒன்றுமே சொல்லவில்லை. இப்படி எண்ணங்கள் ஓடிய அதே நேரம் மயூரன் எதிரிலேயே அம்மா இப்படி போட்டு உடைத்து விட்டாளே என்று அவமானமாகவும் இருந்தது. தலையைக் குனிந்து கொண்டாள். சூடான கண்ணீரில் அவளது பாதங்கள் நனைந்தன.
"இப்படி அழுது அழுது....இன்னும் எத்தனை யுகங்கள் பெண்களுக்கு கண்ணீரையே பரிசாகக் கொடுக்கப் போகிறாளோ இவள்?" என்றாள் கலா கடுமையாக.
"என்னை விட்டு விடுங்கள். உங்கள் யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை. மாலாவைத்தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் அவளையே உங்கள் மகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். எனக்கு யாரும் வேண்டாம்." என்றாள் பாதி அழுகையும் பாதி கோபமுமாக.
சைகையால் மற்றவர்களை உள்ளே போகச் சொன்னான் மயூரன். அதைப் புரிந்து கொண்டு மற்றவர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே வந்தனர். ஹரன் மட்டும் சற்று தள்ளி நின்று கொண்டான்.
"என்ன சொல்லப் போகிறாய்? நான் செய்தது தவறு! உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்று தானே சொல்லப் போகிறாய்? சொல்லி விட்டுப் போயேன்" என்றாள் சுவர்ணா எரிச்சலாக.
அவளை இதமாக நோக்கினான் மயூரன்.
"ஏன் இத்தனை ஆங்காரம் உனக்கு சுவர்ணா? என் மேல் நீ கொண்டிருக்கும் அன்பு, உன்னை நல்ல மனுஷியாக ஆக்க வேண்டுமே தவிர இப்படி உன் இயல்பை மீறி நீ பேச வைக்கக் கூடாது. எனக்கு உன் மேல் மிகுந்த அன்பு உண்டு என்று தெரியும் அல்லவா? பிறகு ஏன் இப்படி ஒரு கோபம்?" என்றான் மிகுந்த அன்போடு.
அவன் தோளில் சாய்ந்து அழுதாள் சுவர்ணா.
"தவறு தான் மயூரா! உன் சகோதரி என்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக் கூடாது என்று குறுகிய மனத்தோடு எண்ணி விட்டேன். மாலா என்னை மன்னிக்கவே மாட்டாள். உனது சகோதரன் ஹரனை அவள் வ்ரும்புகிறாள் என்பதைக் கூட நான் மறந்து விட்டேன்" என்று கேவினாள். சிறிது நேரம் அவளது தலையைத் தடவிக் கொடுத்தான் மயூரன். பிறகு மெல்ல நிமிர்த்தினான்.
"மீண்டும் தவறு செய்கிறாய் சுவர்ணா! உன் தோழி மாலா, என் சகோதரனை விரும்பவில்லை என்றாலும் கூட நீ பேசியது தவறல்லவா? மயூரன் என்ற ஆணிடம் நீ கொண்ட அன்பு, உன்னை மற்ற பெண்களிடமிருந்து பிரித்து விடக் கூடாது சுவர்ணா! உன்னை முதல் முதலாகப் பார்த்த போதே என் மனதைப் பறி கொடுத்து விட்டேன். அது உனக்கும் தெரியும்." என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தாள் சுவர்ணா. ஒரு அழகிய புன்னகையை வீசினான் மயூரன். அவனது கண்களும் சிரிக்கும் அற்புதத்தை ரசித்தாள்.
"சற்றே யோசித்துப் பாரேன். ஏதாவது ஒரு ஆண், தன் மனைவியின் உறவினர்கள் தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறானா? அதற்காக தன் உற்ற தோழனையே புண் படுத்தும் அளவுக்குப் போவானா? அப்படியானால் ஏன் பெண்கள் மட்டும் அப்படி ஏன் நினைக்க வேண்டும் சுவர்ணா? பெண்களது அளவுக்கு அதிகமான அன்பு பொறாமையாக மாறி விட்டால், அது அவர்களை அடிமைப்படுத்த சொல்லும் முக்கிய காரணமாகி விடுமே? இப்போதே கூட்டத்தில் என்ன பேசினார்கள்? கொஞ்சம் யோசித்துப் பார்! பெண்கள் பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவற்றின் இருப்பிடம் ஆகையால் அவர்களை சுதந்திரமாக விட்டால் குடும்பத்தில் சண்டைகள் தான் வரும் என்றார்கள் அல்லவா? அதைக் கேட்ட பிறகும் நீ இப்படி நடந்து கொள்ளலாமா?" என்றான் மயூரன்.
மென்மையாக அவன் பேசிய வார்த்தைகள் சுவர்ணாவின் மனதில் அம்பு போலப் பாய்ந்தன. தன்னை நினைத்து வெட்கம் வந்தது. ஏன் அப்படி நடந்து கொண்டோம்? இப்போது நினைத்துப் பார்க்கும் போது மிகவும் சிறுமைத்தனமாக உள்ளது. மாலா என்னைப் பற்றி என்ன நினைத்தாளோ? என் கோபம் பொறாமையால் விளைந்தது என்று தெரிந்து தான் கலா வெளியில் செல்ல முயற்சித்தாளோ? சே! மாலா, கலா அம்மா இவர்களுக்கு இருக்கும் பெருந்தன்மை என்னிடம் இல்லையே? இவர்களுக்கு நான் உதவுவதற்கு பதில் பெரிய சுமையாக ஆகி விடுவேனோ? என்று எண்ணினாள் சுவர்ணா.
எதுவும் பேசாமல் மௌனமாக இருக்கும் சுவர்ணாவைப் பார்த்தான் மயூரன்.
"நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேன் சுவர்ணா! நிச்சயம் உனக்கான நான் மன்னிப்புக் கேட்பதோ, தெரியாமல் செய்து விட்டாள் என்று சொல்வேன் என்றோ எதிர்பார்க்காதே! சக மனுஷியாக உன்னை மதிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானம் செய்" என்றான் மயூரன். அவனும் ஹரனும் புழக்கடையில் இருந்த ஒரு அறையில் பெண்களைப் போல உடை மாற்றிக் கொள்ளச் சென்றார்கள். அங்கேயே நின்று கொண்டு யோசித்தாள் சுவர்ணா.
"முதல் முதலாகப் பார்த்த போதே மனதைப் பறி கொடுத்து விட்டேன் என்று சொல்கிறான். நான் இப்படி கேவலமாக நடந்து கொண்டதற்கு கோபிக்கவும் இல்லை, சரி என்று சொல்லவும் இல்லை. ஒரு மனுஷியாக என் உணர்வுகளையும் என்னிடம் நல்ல குணங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவன் செய்கைகள் சொல்கின்றன. இவனைப் போல ஒரு வாழ்க்கைத்துணை கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்." அவள் இந்த ரீதியில் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மனதின் ஏதோ ஒரு கதவு திறந்து உள்ளே வெளிச்சம் பாய்ந்தது போல உணர்ந்தாள் சுவர்ணா.
"அன்றைக்கு என்ன சொன்னான் மயூரன்? நாம் இப்போது செய்ய இருப்பது மிகப்பெரிய காரியம். நம் உணர்ச்சிகளுக்கு இதில் இடம் கொடுக்கக் கூடாது என்றானே? இப்போது நான் என் காதல், என் வாழ்க்கை என்று மட்டும் தானே யோசிக்கிறேன்? என் ஒருத்திக்கு மட்டும் மனைவியை சக மனுஷியாக நினைக்கும் கணவன் கிடைத்தால் போதுமா? மற்ற பெண்களின் நிலையை நான் யோசிக்க வேண்டாமா? இல்லையென்றால் பெண்களே சுயநலமானவர்கள் என்று சொல்லுவது உண்மை என்றாகி விடுமே? இல்லை! இது ஒரு மிகப்பெரிய பணி. இதை முடித்த பிறகே என் மனதின் உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். இது உறுதி." என்று எண்ணிக் கொண்டு உள்ளே போனாள். அதற்குள் மயூரனும், ஹரனும் கூட பெண்ணுடையில் வரவே சிரிப்பு வந்தது.
அங்கே பூஜைக்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்தன. முதலில் மாலாவைத் தேடிப் போனாள் சுவர்ணா.
"என்னை மன்னித்து விடு மாலா! சின்ன புத்தி எனக்கு! சிறு வயது முதல் என் தோழி நீ! உன்னை இப்படிப் பேசி விட்டேனே? அதோடு உன் அம்மாவையும் தரக் குறைவாக....சீச்சீ...தயவு செய்து மன்னித்து விடடி. இனி இப்படி நடக்காது" என்றாள் சுவர்ணா. மாலாவை முந்திக் கொண்டு கலா அணைத்துக் கொண்டாள்.
"இந்த மன முதிர்ச்சி தான் தேவை சுவர்ணா. நிச்சயம் நீ நமது வேலையில் முக்கியப் பங்கு வகிப்பாய்." என்றாள். மனம் முழுக்க சந்தோஷத்தில் நிறைந்திருந்தது சுவர்ணாவுக்கு.
மாலாவின் அம்மாவோடு சேர்ந்து சுவர்ணாவின் அம்மாவும் ஏதேதோ துதிகளைச் சொல்லி அன்னை சக்தியை பூக்கள் கொண்டு அர்ச்சித்தனர். ஆனால் உண்மையான விஷயத்தை எப்படிப் பேசப் போகிறோம்? என்று கவலையாக இருந்தது சுவர்ணாவுக்கு. அதற்கும் வழி கண்டு பிடித்தால் மயூரி.
"அத்தை! காலையில் இருந்து நீங்கள் பூஜைக்காக மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் முழுக்க ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கோமதி அத்தையும் நாங்களும் உணவு சமைப்பதை கவனித்துக் கொள்கிறோம்" என்றான்.
மாலாவின் அம்மா கேதகிக்கு உண்மையிலேயே மிகவும் களைப்பாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. இப்படிச் சொல்லவும் சிலர் இருக்கிறார்களே! என்று மகிழ்ந்தாள்.
"ஆனால் நீங்கள் அனைவரும் சிறு பெண்கள். வீட்டில் இரவு உணவுக்கு 15 பேர் வருவார்களே? அவ்வளவு பேருக்கு சமைக்க முடியுமா?" என்றாள் சந்தேகமாக.
இந்த ஏற்பாடு வேறு யாருக்கும் தெரியாது என்பதால் திடுக்கிட்டார்கள். இருந்தும் கோமதி சட்டென சமாளித்துக் கொண்டாள்.
"அதனால் என்ன அக்கா? நான் கூடவே இருக்கிறேன். உட்கார்ந்த படியே சொல்லிக் கொடுக்கிறேன். பெண்கள் செய்து விடுவார்கள்" என்றாள்.
மகிழ்ச்சியாக தலையசைத்து விட்டு ஒரு அறையில் போய் படுத்துக் கொண்டு விட்டாள் கேதகி. கோமதி கண் காட்ட அனைவரும் சமையற்கட்டில் கூடினார்கள்.
அப்போது தான் முதல் முதலாகப் பார்ப்பது போல கலா, ஹரன் மற்றும் மயூரனை பார்த்தாள் கோமதி.
"பெண்களுக்கு எதிராக ஏன் இப்படி ஒரு சதி நடக்கிறது மயூரா? எதுவுமே தெரியவில்லையா?" என்றாள் நேரடியாக.
"என்ன என்று தெரியவில்லை! ஏன் என்றும் தெரியவில்லை. ஆனால் சில விஷயங்கள் காதில் பட்டது. அவற்றை வைத்துப் பார்க்கும் போது என்னால் ஓரளவு ஊகிக்க முடிகிறது" என்றான் மயூரன்.
அனைவரும் ஆவலோடு அவனைப் பார்த்தனர். அவன் சொன்னதைக் கேட்டதும் பெண்களுக்கு அதிர்ச்சியும் அதே நேரம் கோபமும் வந்தது.