நனவினில் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காண தவர்.
... குறள்....
.... பொருள்....
கனவில் தோள் மேல் துயிலும் தலைவன், விழித்ததும் நெஞ்சிற் புகும் விந்தையை வியக்கிறாள்.
பாகம் -5
நித்யாவை பார்த்து விட்டு வந்தவள் வீட்டில் அம்மாவிடம் நித்யாவின் லையை சொல்லி அழுதால். "அழாதடா எல்லாம் சரி ஆகிடும். அவங்க வீட்டு காரர் புரிஞ்சிட்டு வருவாரு. சின்ன வயசு வேற எதோ கோவம் இவங்கள போய் திரும்பவும் பார்த்து பேச சொல்லு உன் பிரண்டையும் பேச சொல்லு அவ புருஷன் கிட்ட குழந்தையை விட்டு பேச சொல்லு சரியா இதுக்கு போய் இப்படி அழுவுற"... கண்களை துடைத்து விட்டவர் உள்ளே செல்ல...
"இத்தன நாள் கழிச்சு பார்த்ததால உடனே எல்லாத்தையும் பேச முடியல நாளைக்கு வேலை முடிஞ்சதும் நேரா நித்திய பார்த்துட்டு அவ வீட்டுக்காரர பத்தி விசாரிக்கணும் முடிஞ்சா நம்பர் வாங்கி அந்த அண்ணாக்கு பேசணும் எப்படியாவது நித்திய சேர்த்து வைக்கணும்... அன்னைக்கு எவ்ளோ கோவமா பார்த்தாரு இன்னைக்கு பாரு பார்வையே மாறி இருக்கு... ஐஸ் கிரீம் வேற அதுவும் நமக்கு பிடிச்ச பிஸ்தா எப்படி தெரியும் அவருக்கு... பார்க்க நல்லா அழகா இருக்காருல ஆனா சிரிக்கவே இல்லை சிரிச்சா இன்னும் நல்லா இருக்கும். நித்தி இப்படி இருக்கும் போது எப்படி சிரிப்பு வரும் நான் ஒரு லூசு இதெல்லாம் புரிஞ்சிக்காம அன்னைக்கு அவர தப்பா நினைச்சிட்டேன்... மனதிற்குள் நினைத்தவளுக்கு தூக்கம் வருவது போல் தோன்ற தூங்கியும் போனால்...
வேலை முடித்து ஆபிஸில் இருந்து வெளியே வந்தவளுக்கு சலிப்பாக இருந்தது தரிகா இன்று வரவில்லை ஹாண்ட் பாக் எடுத்து மாட்டியவள் மெதுவாக நடக்க தொடங்கினால் இன்று வேலையும் அதிகம் என்பதால் தலைவலி வேறு பின்னி எடுக்க தாரு இல்லாததால் டீ குடிக்கவில்லை. எப்போதும் தாருவுடன் ஸ்கூட்டியில் செல்பவளுக்கு இன்று ஆட்டோவோ இல்லை பஸ்சில் செல்ல வேண்டுமே என்று கடுப்பாய் இருக்க டீ குடித்து விட்டு நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்தவள் வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு சென்று அமர்ந்தால் இவளுக்கு பிடித்த ஏலக்காய் டீ வந்தது... வாசம் பிடித்து குடித்தவளுக்கு உற்சாகம் வந்தது. கடையை விட்டு வெளியே வந்தவள் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்க தொடங்கினால் வழியில் பார்க் இருக்கவே கொஞ்ச நேரம் இருந்து விட்டு செல்ல தோன்றியது என்ட்ரி டிக்கெட் வாங்கியவள் உள்ளே சென்று நீண்ட பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தால்..
தன் கண்ணின் மீது விழுந்த முடியை ஒதுக்கி விட்டவளுக்கு யாரோ தன்னை பார்ப்பதை போன்று தோன்ற தன் பார்வையை சுழல விட்டவளுக்கு எதிரில் வந்து நின்றான் பார்ப்பவரை மீண்டும் பார்த்திட வைக்கும் வசீகர அழகு கொண்ட மையல் விழிக்கு சொந்தக்காரன்.. "ஹாய் அம்மு"... செல்ல பெயரில் சொல்லி கண் சிமிட்டி சிரித்தவனை யோசனையோடு பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.... நான் இங்க உட்காரவ உனக்கு பிரச்சனை எதுவும் இல்லைல...
அனுமதி கேட்டு நின்றவனுக்கு மெல்லிய தலை அசைத்தலை கொடுக்க.... அருகில் அமர்ந்ததும் அவன் வாசம் தீண்டியது அவள் முகத்தில்.... முதல் முறையான இப்படி ஒரு தருணம்... வெளிப்படையாய் ஏற்க முடியா விட்டாலும் கள்ளத்தனமாய் ரசித்துக் கொண்டால்... "என்ன அம்மு நான் யார்னு யோசிக்கிறியா இன்னும் என்னை தெரியலையா உனக்கு"... "நீங்க எனக்கு தெரிஞ்சவங்களா இதுக்கு முன்னாடி நாம பார்த்திருக்கோமா, எனக்கு அப்படி எதுவும் நியாபகத்துல இல்லையே"...
"நல்லா யோசிச்சி பாரு அம்மு.. சின்ன வயசுல உங்க பாட்டி வீட்டுக்கு வருவியே, கடலோரம் விளையாடினதுலாம் மறந்துட்டியா... நான் தான் உன் மகி"... மகி இந்த பெயர் அன்னைக்கு கனவுல கூப்டா பெயர் ஆச்சே... அப்போ நிஜமா இதெல்லாம் நடந்திருக்கா எனக்கு ஏன் நியாபகம் இல்லை... ஆனால் நிஜம்னு தோணுதே... என்ன பண்றது இவன் கிட்ட சாரி சாரி இவர் கிட்டயே கேட்கலாமா, பார்த்தா நல்லா குணமா தான் தெரியுது மனதிற்குள்ளே பேசிக் கொண்டவள் அவன் புறம் திரும்ப இவ்வளவு நேரமும் இவளின் அசைவுகளை பார்த்துக் கொண்டே இருந்தவன் இப்பொழுது இவளும் பார்க்க நான்கு விழிகளின் பார்வை நேருக்கு நேர் மோதிக் கொண்டது...
அவனின் பார்வையில் ஜிவ்வென்று இருந்தது சில்லென்ற காற்று உள்ளே புகுந்து வயிற்றை நிரப்ப அதன் குளிர்ச்சி மேலே ஏறிக் கொண்டிருந்தது.... "அம்மு " என்றவன் மயக்கும் குரலுக்கு "ம்ம்" என்று மெல்லிசையை தந்தாள் பதிலாய்.... "நாம சின்ன வயசுல பழகினது மறந்திடுச்சு டா உனக்கு அதான் என்னையே புதுசா பார்க்குற நல்லா யோசிச்சி பாரு, வீட்ல கேட்டு பாரு... நாளைக்கு வரேன்... நீ என்னை நினைச்சி கூப்பிட்டாலும் நான் வருவேன்... டைம் ஆச்சு கிளம்பலாம்"... சொன்னவன் உடனே எழுந்துக் கொள்ள இவளும் எழுந்து நின்றாள். கை அசைத்து கண் சிமிட்டியவன் நொடியில் மறைந்து போனான்.
அவன் பேசியதும் உடனே மறைந்ததும் எங்கே காணோம் என தேடிப் பார்க்க விழிப்பு வந்தது கனலிக்கு.... எழுந்து அமர்ந்தவள் திரும்பவும் கனவு வர ஆரம்பிச்சிடுச்சே... அந்த முகம் இப்போ நினைச்சி பார்த்த தெளிவாக தெரிய வில்லை... ஆனா மகி, அம்மு அந்த பெயர்கள் இதற்கு முன் வந்த கனவிலும் சிறு வயது பசங்களா வந்ததே. அப்டினா இப்போ இவன் சாரி இவர் சொன்ன தெல்லாம் உண்மையா, எனக்கு ஏன் நியாபகம் இல்லை....
கனவுனு சொன்னா அம்மா பயப்படுவாங்க நம்மல திட்டுவாங்க... சும்மா பேசிட்டு இருக்கும் போது பாட்டி ஊர், சின்ன வயசுல போனத பத்தி கேட்போம். தாரு கிட்ட இதை பத்தி பேசுவோம். எழுந்து முகம் கழுவியள் சமையலறைக்கு சென்று ஏலக்காய் தட்டி போட்டு கம கமவென டீ போட்டுக் கொண்டவள் மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டே இயற்கையை ரசித்த வண்ணம் டீ ஒரு சிப் உறிந்தவள் தூரத்தில் தெரிந்த மரங்களை பார்த்தவள் திரும்பவும் டீ ஒரு சிப் என மாறி மாறி குடித்து முடித்து உடம்பில் சிறிது உற்சாகம் ஏற்றிக் கொண்டு தாரிக்காவுக்கு அழைத்தால்....
போனில் கனலி பெயரை பார்த்ததும் தாரிகா எடுக்காமல் முழித்துக் கொண்டிருக்க... "யாருடி போன்ல எடுத்து பேசேன்" நித்யா கேட்க "பேசுமா என்ன சொல்றானு பாப்போம்" நித்யா அம்மா சொல்ல... சக்கரையோ போன் அட்டென்ட் செய்து விட்டான்... "தாரு உன் கிட்ட பேசணும்டி நேர்ல தான் பேசணும் நாளைக்கு வேலை முடிச்சிட்டு கோவில் போலாமா"... "ம்ம் சரி கனல் போகலாம்... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு"... "தூங்கி எழுந்தேன்டி அதான்"... "சரி டி நாளைக்கு பார்க்கலாம் வைக்கிறேன்"... "ம்ம் " என்றதும் போனை வைத்தவள்.
"அம்மா என்ன பேசணும்னு கூப்பிட்டிங்க ஏதோ முக்கியமானதுனு சொன்னீங்க" நித்தி அம்மாவிடம் தாரிகா கேட்க எல்லோரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் "நம்ம மிகிரனுக்கு பொண்ணு பார்த்துட்டேன் அந்த பொண்ணு கூட கல்யாணம் நடக்க நீங்க எல்லாரும் உதவி பண்ணனும்"... தாரிகாவோ "யாருமா அந்த பொண்ணு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கே"... பெரு மூச்சு விட்டவர்கள் "நம்ம கனலி தான் அவளை பார்த்ததும் ரொம்ப பிடிச்சிருக்கு நம்ம மிகிரனுக்கு அவ தான் பொருத்தமா இருப்பா உங்க உதவியோட தான் அவளை சம்மதிக்க வச்சி மிகிரனையும் சம்மதிக்க வைக்கணும்"...
"என்னம்மா சொல்றீங்க கனலியா" அதிர்ச்சியானவள் நித்யாவை பார்க்க "என்னை ஏண்டி பார்க்குற எனக்கே இது பெரிய அதிர்ச்சி தான் ஆனால் அண்ணாவோட வாழ்க்கைக்காக செய்யலாம்னு தோணுது"... "புரியுது நித்தி அம்மாவோட ஆசையும் நியாயம் தான் ஆனால் நாம எப்படி ரெண்டு பேரையும் சம்மதிக்க வைக்கிறது கனல் கூட எப்படியாவது பேசி சரி பண்ணிடலாம் மிகி அண்ணா நினைச்சாலே பயமா இருக்கே"…..
"கனலி வந்தது பார்த்தத்துல இருந்தே எனக்கு தோணிடுச்சி இந்த கோவக்காரன சம்மதிக்க வைக்குறது கஷ்டம் தான் ஆனால் இவங்க ரெண்டு பேரையும் லவ் பண்ண வச்சிட்டா கல்யாணம் பண்ணிடலாமே "... என்னது அண்ணனுக்கு லவ்வா மூன்று பேரும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியாய் குரல் கொடுக்க "ஏன் இப்படி கத்துறீங்க... இவங்கள அடிக்கடி சந்திக்கிற மாதிரி பைக் போற மாதிரி பண்ண வச்சிட்டா கரெக்டா நடக்கும்ல"... இதெல்லாம் சினிமாவுக்கு தான் சரியா வரும் நிஜத்துல நடக்குமா தாரிகா தவிப்புடன் கேட்க.. நித்யாவோ "எப்படிமா இதெல்லாம்"...
"நான் கிளம்புறேன் இதுக்கெல்லாம் நான் உதவி பண்ணேனு தெரிஞ்சது அதோட நான் அவ்ளோ தான்"... சக்கரை பயந்து சொல்ல... கம்முனு இருடா நீ பயந்து எங்களையும் பயமுறுத்தாத... இங்க பாருங்க என்னோட நிலையில இருந்து பாருங்க பொண்ணு இப்படி இருக்கா பயனும் கல்யாணம் வேணான்னு சொல்றான் நான் என்ன பாவம் செஞ்சோன்னு எனக்கு பிறந்ததுங்க ரெண்டும் சந்தோஷம் இல்லாம இருக்குங்க இதுக்கு மேல இதெல்லாம் பார்த்துட்டு நான் இருக்கணுமா" கண்கள் கலங்கி தளர்ந்து பேச... என்ன சொல்வதென்று தெரியவில்லை மூவருக்கும்...
அழாதமா என மூவரும் கண்ணை துடைத்தவர்கள்... நாங்க உதவி பண்றோம் அழாதீங்க என்று ஆறுதல் கூற... சக்கரையோ "என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணன் கிட்ட அடி வாங்குனா கூட பரவால்ல அவர் சந்தோஷமா இருக்கனும் அதுக்காக செய்றேன் சொல்லுங்கம்மா என்ன பண்ணனும்"... அவர்களோ மற்ற இருவரையும் கேள்வியாய் பார்க்க "நாங்களும் சம்மதிக்கிறோம்" என்று சொன்னதும் சிறிது சிரித்தவர்....
முதல்ல கனலிக்கு மிகிரன் மேல லவ் வர வைக்கணும் அதுக்கு அவங்கள அடிக்கடி தனியா சந்திக்க வைக்கணும் அவனை பத்தி கொஞ்சம் பெருமையா சொல்லணும். நித்யா நீ தாண்டி இதை செய்யணும் உன் மேல அந்த பொண்ணு அவ்ளோ பாசம் வச்சிருக்கா அத அப்படியே அவன் மேல திருப்பனும்"...
"கேட்க நல்லா தான் இருக்கு எப்படி செய்றதுனு நினைக்கும் போது கை, கால்லம் ஒதுருது"... தாரிகா சொன்னதுக்கு நித்யாவும் தலை அசைத்தால்... "அட என்னம்மா நீங்க எவ்ளோ படம் பார்த்திருக்கோம் அதுல ஒரு சீன முயற்சி பண்ணி பாப்போம் "... சொல்லியவன் யோசிக்க ஆரம்பிக்க மற்றவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர்...
முதலில் தாரிகா "நான் நித்யாவை பார்க்கணும்னு கனலை நாளைக்கு கூட்டிட்டு வரேன், சக்கர நீ அண்ணன் எங்க இருக்காருன்னு எங்களுக்கு சொல்லு, நித்யா நீ யாழினியை சாக்கு சொல்லி அண்ணனை வீட்டுக்கு வர வச்சிடு, அம்மா நீங்க உடம்பு சரி இல்லைனு சொல்லி மிகிரன் அண்ணாக்கு கொடுக்குறதுக்கு கனலி கிட்ட கொடுப்போம் அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்குனு அவங்களுக்கு தெரியாம நாம பார்ப்போம். என் ஐடியா ஓகேவா "...
"பரவால்லயே உனக்கு கூட மூளை இருக்குடி சூப்பர்"... நித்யா, தாரிகாவை கட்டி பிடித்து கொஞ்ச... தாரிகாவின் யோசனையை நாளை செய்வதற்காக சந்தோஷமாக கிளம்பி சென்றனர். இவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க கனலி ஏற்கனவே முடிவெடுத்து விட்டாலே...
அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

Last edited by a moderator: