Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,505
48. தேன்சிட்டுகள்
ஆதி, சித்ரா ஜோடி அந்தமான் பறந்திருக்க, ஹரிணி, உதயன் ஜோடிக்கு மானூத்திலும், துரைபாண்டி இல்லத்திலும் இன்றைய பொழுதை கழித்தனர்.
ஹரிணியின் ஆசைக்கு இணங்க, அவள் தோழிகளான அத்தை மக்கள், அழகி, அரசி இருவரும் தங்கள் பயணத்தை தள்ளி போட்டு, விடுப்பு எடுத்து மானூத்து வருவதாக திட்டம் . அரசி மாமாக்கள் இருவரோடு மானூத்து வந்திருக்க, அழகியை இறக்கி விட செல்வமணி வந்தான்.
அடுத்த நாள் கறி விருந்துக்காக பாண்டி இல்லமே அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது.
உதயனிடம் செல்லபாண்டி, மலர் மற்றும் அவள் குடும்பமும், மாப்பிள்ளை என்பதையும் தாண்டி , அவர்கள் வசதி, பதவியை மனதில் வைத்து உச்ச பட்ச மரியாதை தர, மற்ற பாண்டிக் குடும்பத்தினர் ஹரிணி மாப்பிள்ளை என்ற உரிமையில் இயல்பாகவே பழகினர்.
உதயனுக்கு அதிகாலையில் விழித்துப் பழக்கம், ஹரிணியோ அதுக்கு நேர் எதிர். பள்ளி, கல்லூரி நாட்களில் அரை மணி நேரம் முன் எழுந்து, அரக்க, பறக்க ஓடுபவள் லீவு நாள் எனில், அப்பத்தா சத்தம் கேட்கும் வரை அசைய மாட்டாள். புது வீட்டுக்கு வந்த பிறகு, மலரின் அழைப்புகள் அவளை எட்டியதே இல்லை.
முன்னதாக முன் இரவில் அவன் கை பட்டத்துக்கே, அரண்டு கண்ணை மூடி தூங்கியவள், காலையில் அவனையும் எழ விடாமல், கை காலை அவன் மேல் குறுக்காக போட்டு தூங்கிக் கொண்டிருக்க, கண் விழித்தவனோ இமைக்க மறந்து மனையாளை பார்த்திருந்தான். தன் சிறு அசைவும் அவளை உசுப்பிவிடும் என அசையாமல் அவளில் லயித்து இருக்க, நேரம் போனது தெரியவில்லை.
புதுமண ஜோடி என, வீட்டினரும் எழுப்ப சங்கடப் பட்டு, அவர்கள் திருப்பள்ளி எழுச்சிக்காக காத்திருக்க, வலையபட்டியிலிருந்து, தொழிற்சாலை பற்றிய விவரம் கேட்க, சன்முகன் அழைப்பில் உதயனும் நடப்புக்கு வந்தான்.
ஒரு நாளில் அவன் அலைபேசி அழைப்பு மணி பழகியிருக்க, ஹரிணி அரண்டு, பிரண்டு கண் விழிக்க, அவனும் அதே நேரம் எழ முயல, இருவரும் இன்னும் எசகுபிசகாக சிக்கிக் கொள்ள, இரசாயன மாற்றத்தில் ஹரிணி தினறி போனாள்.
தன் கால் வலியும் மறந்து, “ ஸாரி, ஸாரி” என பதறி பெட்டிலிருந்து கீழே இறங்க, இத்தனை நேரம் இரத்த ஓட்டமின்றி இருந்த கால் ஊண்ட முடியாமல் துவண்டது.
“ஹனி” நொடியில் பாய்ந்து அவளை பிடித்தவன், “எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என கடிய,
அவன் முகம் பார்க்கவும் தயங்கியவளாய் , “ இல்லை, சாரி. ரெஸ்ட் ரூம் போகனும். போன் அடிக்குது” என தந்தி வார்த்தைகளாய் சொல்லி , அவனை விட்டு ஓடி, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
இரவில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றதிலிருந்தே இலகுவாக, அவனோடு ஒண்டியிருக்க
“ஸ்வீட்டிடி . இவ்வளவு தானா நீயி” என சிரித்துக் கொண்டவன், மனையாளின் மனதை மாற்றுவது எளிது என நம்பிக்கை கொண்டான்.
மீண்டும் போன் சிணுங்க,” அண்ணா” என மகிழ்ச்சியோட அலைபேசிக்கு செவி கொடுத்தான்.
“ தொல்லை பண்ணிட்டேனா தம்பி” வினையமாக ஆரம்பிக்க,
“ நோ இஸ்யூஸ் அண்ணா, சொல்லுங்க” என உதயன் குரலும் துள்ளலாக வர , பேச வேண்டியதை பால்கனியில் நின்று பேசினான்.
குளியலறை புகுந்த ஹரிணி, “ஐயோ, அசிங்கமா போச்சே, நேத்து அவ்வளவு பில்டப் விட்டுட்டு, இன்னைக்கு கட்டிக்கிட்டு கிடக்குறியேடி ஹரிணி, என்ன நினைபாரு. உனக்கு கொஞ்சம் கூட கன்ட்ரோலே இல்லைடி ” என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், கல்லூரிக்கு கிளம்பும் வழக்கத்தில், காலை கடன்களை முடித்து, ஷவருக்குள்ளும் தஞசம் புகுந்திருந்தாள். வெளியே வந்து அவன் முகம் காணவும் அசிங்கமாக இருந்தது. அவன் தான் பார்வையிலேயே அத்தனையும் உணர்த்தி விடுகிறானே.
பேசி முடித்து வந்த உதயன், இயற்கை உபாதை உந்த, “ ஹனி சீக்கிரம் வர்றியா” என கதவை தட்ட, சுய உணர்வு பெற்றவள், அப்போது தான் மாற்றுடை எடுத்து வராததை நினைத்து வெட்கி, மருமகனுக்காக ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல், டவல், பாத் ரோப் எல்லாம் வாங்கி வைத்திருந்த வீட்டினரின் புண்ணியத்தில் அதை சுற்றிக் கொண்டு எட்டிப் பார்க்க,
உதயன் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினான், ஏற்கெனவே மூணு மணிநேரம் லேட்.
அவன் வந்துவிடுவானோ என குளியலறை கதவை வெளியே பூட்டி விட்டு, கைக்கு கிடைத்த, ஸ்கர்ட் டாப்ஸை அணிய, டவலும் கிடைக்க பெறாத உதயன், “ ஹனி” என கதற, அவசரத்துக்கு எந்த கபோர்டில் டவள் உள்ளதென அறியாத ஹரிணி, தனது முக்கால் டவுசர் ட்ராக் பேண்ட் ஒன்றையே கொடுக்க ஓடி கதவை தட்ட,
“ லாக் ஓப்பன் பண்ணுடி மங்கூஸ்” என்றான. “ அய்யோ” என தலையிலடித்தபடி திறந்து, ட்ராக்கை நீட்டினாள்.
“டவல், பாத்ரோப் ஈரமா போச்சு, எந்த கபோர்ட்ல இருக்குனு தெரியலை. உங்க சூட்கேஸ் லாக் ஆகியிருக்கு, ப்ளீஸ் இதை போட்டு வாங்க” தலை குனிந்தபடியே சொல்ல,
“ ஹலோ, ஈரமா இருந்தாலும் அந்த டவளையே குடு. உன் ஹிப் சைஸ் எனக்கு எப்படி பத்தும்” என்றான்.
டவுசரோடு நிற்கிறானோ என கண்ணை மூடிக் கொண்டு ஓடியவள், திரும்பி வரும் வரை அப்படியே நின்றவன்
“ நேரா பார்த்து கொடுக்கனும்” என நிபந்தனை விதிக்க,
மெல்ல விழி உயர்த்தியவள், ஈர ட்ராக்கோடு, வெற்று மேனியாய் அவன் நிற்பதை பார்க்க, நினைவுகள் கோவையில் இருந்த போது, தீம் பார்க்கில் ஆதியோடு சிரித்து விளையாடிய வாட்டர் கேம்ஸை நினைவு படுத்தின. அது தெரிந்த பின்னர் தான் திருமண வேலைகள் சூடு பிடித்து, அவள் படிப்பும் தடைபட்டு , உதயனுக்கு மனைவியாகி நிற்கிறாள்.
ஆதியோடு, நேற்று கடைசியாய் அவன் சொன்ன வார்த்தைகளும் அவள் காதில் எதிரொலிக்க, பாத்ரோபை அவன் மீது எறிந்து விட்டு, ஓடிச் சென்று அவளின் ஆஸ்தான வட்ட வடிவ ஒற்றை ஷோபாவில் தஞ்சம் புகுந்தாள்.
‘தான் வற்புறுத்தியது அவளுக்கு பிடிக்கவில்லையோ’ பதறிப் போனான் உதயன்.
“ ஹனி” என அவளை நோக்கி செல்லப் போனவன், சற்று நிதானித்து, ட்ரஸ்ஸிங் ரூமில் வைக்கப்பட்டிருந்த அவன் பெட்டியிலிருந்து, ஜீன்ஸ், டீசர்டை உருவி போட்டிக் கொண்டு அவளிடம் விரைந்தான்.
கதவு தட்டும் ஓசையும், மலரின் ஹரிணி என்ற அழைப்பும், அழுது கொண்டுருந்தவளை எழுப்பியது. சட்டென கண்ணை துடைத்து, தன்னை சீராக்கி கொண்டவள், இயந்திரதனமாக கதவை நோக்கி சென்றாள். அவளின் ஒவ்வொரு செய்கையையும் உன்னிப்பாக கவனித்தான் உதயன்.
“ மணி ஒன்பதரை ஆச்சுடி. மாப்பிள்ளை டான்னு எட்டுமணிக்கெல்லாம் சாப்பிடுவார்னு, அவுங்க வீட்டில சொன்னாங்கலாம். வளரு சொன்னா” என ஆரம்பித்த மலர், அவள் உடையை பற்றிய விசாரணையும் செய்ய,
“ இப்ப சாப்பிட வரவா? இல்லை சிங்காரிச்சுக்கவா. எதையாவது ஒன்னை சொல்லித் தொலை” என வார்த்தையை கடித்து துப்ப,
“ மாப்பிள்ளை கூட்டிட்டு சாப்பிடவா. அப்புறம் டிரஸ் பண்ணிக்குவ. அப்பாவும் வெயிட் பண்றாரு. என்னனு தான் புகுந்த வீட்டில போயி வாழபோறியோ” என வசை பாட, அம்மாவின் முகத்துக்கு நேரே பட்டென கதவை அடைத்தாள்.
“ ஹரிணி” என உதயன் அதட்ட, அதே வீரியத்தோடு திரும்பியவள், “ என்ன” என்பது போல் பார்த்து நிற்க,
“அவுங்க உன் அம்மா. எதுக்கு இவ்வளவு ஹார்ஷா நடந்துக்குற” என்றான்
“ அம்மாவா?” இளக்காரமாய் சிரித்தவள், “ வேண்டாம் விடுங்க. உங்களுக்கு மாமியார், மாமனார் மேல இருக்க மதிப்பை நான் கெடுக்க விரும்பலை” என்றவள்.
பின் ஏதோ நினைவு வந்தவளாக, உதயன் எதிரே வந்து ,” இரண்டு நாளா நமக்குள்ள எதுவும் நடக்கலை. நான் ஆதி மாமாவை லவ் பண்ணவ தான், மனசை தான் அதுகிட்ட தொலைச்சேன். உங்களுக்கு சந்தேகம் இருந்தா…” என அவள் அடுத்த வார்த்தை சொல்லும் முன், ரௌத்திரமானவன்,
“ ஷெட் அப். அடுத்து ஒரு வார்த்தை பேசினாலும், அறைஞ்சுடுவேன். ஆதி உன் கடந்த காலம். என்னை பார்க்கும் முன்னே, உன் வாழ்க்கையில எத்தனை க்ளவுட்ஸ் பாஸாகி இருந்தாலும், ஐ டோண்ட் கேர். உன் மேல பொழியிற மழை நான் மட்டும் தான். நீ என் பொண்டாட்டி, அது எப்பவுமே மாறாது. என் மனசுல தேவதையா தான் இருக்க. நீயா உன்னை தரம் தாழ்த்திக்காத.” என உரும, அவனின் கோபத்தை பார்த்து விக்கித்து நின்றாள்.
அவளறியாமல் கண்ணிலிருந்து நீர் தாரை தாரையாக கொட்ட, பேச்சு மறந்து நின்றாள். அவசர குடுக்கையாய் வார்த்தைகளை கொட்டுபவள், அவளுக்கு மேல் அதட்டி யாரும் பேசிவிட்டால் அடி பணிந்து விடுவாள். அதே விதத்தில் மறுமொழியின்று நிற்க, உதயனுக்கு மனம் பொறுக்க வில்லை,
“ ம்பச்” என தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன்,
“ அழாத. நீ எனக்கானவள், அது தான் விதி உன்னை என்கிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கு. எப்ப உன் மனசு ஏத்துக்குதோ, அப்ப நம்ம வாழ்க்கையை தொடங்குவோம். ஓகே டீல்” எனறு கேட்க,
“ சரி” என தலையை ஆட்டினாள்.
“ ஆனா, உன் மனசை ஜெயிக்க, நான் ட்ரை பண்ணிட்டே தான் இருப்பேன். சின்ன சின்ன அணைப்பு, முத்தம் எல்லாம் அதில சேர்ந்தது தான்” என கண் சிமிட்டி, அவளை அணைத்தபடி கூட்டிச் செல்ல, மார்க்கமாய் பார்த்தபடி அவனோடு நடந்தாள்.
செல்லபாண்டி வீட்டில், நேற்று விட்டதை இன்று பிடிப்பது போல் தடபுடலான காலை உணவு தயாராகி இருந்தது. மலர் குடும்பத்தினர் செக்காணம் சென்றிருக்க, செல்லபாண்டி அண்ணன் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தான். பாண்டி இல்லத்திலிருந்து அப்படி எல்லாம் வந்துவிட மாட்டார்கள்.
வழக்கமான விசிட்டாக ஜெயபாண்டி வந்து பார்த்து விசாரித்து விட்டு போக, பூபேஷ், சர்வேஷும் அக்காள் கணவனை கண்டு சென்றனர்.
புதுமண தம்பதியரை காண, மருதுபாண்டி, சுமித்ரா இனிப்போடு வந்திருந்தனர். தான்வி, கௌசிக் நேற்றே கிளம்பியிருக்க, தங்கபாண்டி, ராகவியும், ஹரிணியின் ஆசைக்காக அரசி வந்து சேர, காலை விருந்து கலகலப்பாகவே இருந்தது.
“ ஏத்தா, பட்டு சீலையை கட்டி , நகையெல்லாம் போட்டு இருக்கலாம்ல. புது பொண்ணுண்டு ஆளுக, வரப் போக இருப்பாங்க. சின்ன புள்ளையாட்டம் பாவாடை சட்டையில இருக்கவ” என செல்லபாண்டி கேட்க, உதயன் மனைவியை ஆராய்ந்தான். பதில் சொல்லவும் பிடிக்காதவளாக பூரியை உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தாள்.
“ பெரியப்பா, நம்மாத்துல இருக்கும் போது எதுக்கு ஃபார்மாலிடீஸ். ஃப்ரியா இருக்கட்டும் விடுங்கோ” ராகவி பெரிய மனுசியாக சொல்ல,
“ ஆமாம் மாமா, மதினிக்கு நான் ஹெல்ப் பண்றேன்” என்றது அரசி.
“ இப்ப தானே எந்திரிச்சு இருக்கு, விடுண்ணேன்” என ஜெயாவும், மருது, தங்கமும் அவள் சார்பாக பேசினர்.
“ ஹரிணி சாப்பிட்டு வா, லைட் வெயிட்டா, டிசைனர் சேரியை கட்டி விடுறேன்” என சுமி அழைக்க,
“ ஓகே சித்தி” என்றாள்.
“ சேரி ட்ரேப்பிங்கு ஆள் ஏற்பாடு பண்ணுமோ” உதயன் யோசனையாக கேட்க, பெற்றவர்கள் முழித்தனர்.
“ நீங்க பழகிக்கிங்க. பல வித்துல உபயோகமா இருக்கும், டைம் சேவிங்கும் கூட” என தங்கம் கேலியாக சொல்ல,
“ கொழுந்தனாரே, அவர் உங்க மருமகன். செல்வம் அண்ணன்கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க” சுமி கண்டிக்க,
“ மரியாதை குடுத்து தள்ளி வைக்காதீங்க ப்ளீஸ்” என்றான் உதயன்.
“ அதானே, ஏன் செல்வம் மாம்ஸை பெரியப்பா செய்யாத லந்தா?” மருது கேள்வி எழுப்ப,
“ அப்பா தனி ரகம். அவர் லந்தை குடுத்தா எல்லாரும் சாதரணமா எடுத்துக்குவாங்க. அதையே நம்ம பேசினோம்னா ஒரண்டைம்பாங்க” என்றான் செல்லபாண்டி.
“ அவரவர் முகராசி. ஏன்டா தங்கம் கலெக்டரம்மாக்கு டவாலி வேலை பார்ப்ப தெரியும். இதுவுமா” என மருது அதிசயிக்க,
“ அதெல்லாம் அப்பா வந்துட்டா, அம்மா ரொம்ப பண்ணுவா” என்றது ராகவி.
“ அப்படியா கண்ணு” மருது தம்பி மகளிடம் பக்குவமாய் கேட்க, ராகவி கதை அளந்தது.
தங்கம் “அம்மா, மகளுக்குள்ள ஃபைட் ஓயாது. இவளுக்கு நான் வெஜ் செஞ்சு கொடுத்து சமாதானம் பண்ணிடுவேன். “ என்று மட்டும் தங்கம் சொல்ல,
“ அப்போ, அவஙகளுக்கு சேலை வாங்கி கொடுத்துடுவீங்களா” உதயன் ஆர்வமாக கேட்க,
“ நோட் த பாயிண்ட் மாப்பிள்ளை. நம்ம சேலை வாங்கி கொடுத்து, அவுங்க திருப்தி ஆக மாட்டாங்க. அதுவும் என் தம்பிக்கு செலவு பண்ற உரிமை எல்லாம் கிடையாது. சர்வீஸ் மட்டும் தான் பண்ணுவான்” என மருது கிண்டலடிக்க,
“ அதில எவ்வளவு கேரிங்க் இருக்கு. நீங்களும் தான் இருக்கீங்களே, நீ என்ன வேணும்னாலும் வாங்கிக்க, என்னை கூப்பிடாதேன்னு” சுமி குறைப்பட,
“ அதுக்குண்டு உங்களோட துணி கடைக்கும், நகை கடைக்கும் வரமுடியுமா” என பேச்சு ஓட,
“ உங்க வீட்டில எப்படி” என உதயனை பார்த்து கேட்டனர்.
“ எல்லாமே அம்மா பார்த்துக்குவாங்க” அவன் சொல்ல,
“ நம்ம இனம் தான் “ என்றான் மருது.
செல்லபாண்டி வீட்டில் டிபன் முடித்து, சகோதரர்கள் முன்னே பாணடி இல்லம் செல்ல,
அரசி இருந்ததால், ஹரீஷ் அங்கேயே சுற்றி கொண்டு இருந்தான்.
“ ஹரீஷ், சித்தப்பா கூப்பிட்டாண்டா” என செல்லம் ஏதோ சொல்ல வர,
“ மாமா கூட வந்துட்டு, அப்புறம் அந்த வேலையை பார்க்கிறேன்” என்றுவிட, உதயனை அழைத்து வரும் பொறுப்பை அவனிடம் கொடுத்து விட்டு முன்னே சென்றனர்.
சுமி, சேலைகட்டிவிடும் சாக்கில், ஹரிணியின் வாயை பிடுங்க, “ அவுங்க எதுக்குமே என்னை ஃபோர்ஸ் பண்ணலை சித்தி. நான் ஆதி மாமாவை லவ் பண்ணதும் அவுங்களுக்கு தெரியும்” என்றாள்.
“ ஆத்தி” என நெஞ்சில் கை வைத்த சுமி, “ இனிமே தான் ஹரிணி நீ கவனமா இருக்கனும்”என அறிவுரைகளை சொல்ல, சற்று அசட்டையாகவே இருந்தாள். உதயன் மீது அவளுக்கு நாட்டம் வந்த பின்பு தான் சுமி சொல்வதும் புரியும்.
முத்து வேலை பார்க்க ஆள் இல்லையென்று புலம்பியது, தங்கத்தின் கவனத்துக்கு வந்திருக்க, நாளைய ஏற்பாடுகளை கவனிக்க அண்ணனும், தம்பியுமாக வந்திருந்தனர்.
உடலோடு ஒட்டி துவளும் டிசைனர் சேலை, அடர் பீட்ரூட் வண்ணத்தில், அள்ளி இறைத்த கற்கள் பதித்து, டிசைனர் வேலைபாடுடைய ப்ளவுஸ், பூசிய அவள் உடலை கச்சிதமாக எடுத்துக் காட்ட, சேலைக்கு பொருத்தமாய் வைர நெக்லஸ், தோடு அணிந்திருந்தாள். ஃப்ரி ஹேர் விட்டு மல்லி சூடி, ஆடியில் பார்த்துக் கொண்டவள்,
“ ஆழகா தாண்டி இருக்க ஹரிணி. செம மேட்ச். இந்த செயின் தான் எக்ஸ்ட்ரா. மாமன் பார்த்தான் மயங்கி விழுந்தான்” என கண்ணடித்து ஹார்ட் சிம்பல் வைதத்து, செல்ஃபி க்ளிக்கியவள், பழக்க தோஷத்தில் முதல் வேலையாக ஆதிக்கு அனுப்பியும் விட்டாள்.
“ ஹனி, மாத்திரை போட்டியா” என உதயன் குரல் கேட்கவும் தான் பெரிய செயின் தாலி என்பது நினைவு வந்தது.
“ இதோ, போடனும்” அலைபேசியை மறைத்தது விட்டு, அவன் புறம் திரும்ப, மாத்திரை, க்ளாஸ் தண்ணீர் இரண்டையும் கையில் ஏந்தி மெய் மறந்து தான் நின்றான்.
“ தாங்க்ஸ்” என வாங்க வந்தாள்.
“ ஆ, காட்டு” என அவனே தண்ணீரை ஊற்றி மாத்திரையும் போட்டு விட, மந்திரித்த கோழி போல் சொல் பேச்சு கேட்க,
“ யூ லுக்ஸ் காட்ஜியஸ்” அவள் கன்னத்தில் முத்தமிட, இதயம் ஒரு நொடி நின்று துடித்து, புரையும் ஏறியிருந்தது. இருமி, செறுமி தலையை தட்டி, முதுகை வருடி விட்டான்.
“ என் சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காதுன்னு சொன்னீங்க” என அழமாட்டாமல் கேட்க,
“ மெயின் ஷோக்கு தான் உன் பர்மிஷன் வேணும். டீஸர், ட்ரைலரெல்லாம் காட்டிட்டு தான் இருப்பேன்.” என கண் அடிக்க,
“ அச்சோ” என அந்த பக்கம் திரும்பிக் கொண்டாள்.
காலை விமானத்தில் சென்னைக்கு பறந்த ஆதி சிவா, சித்ரா ஜோடிக்கு நன்பகல் பனிரெண்டுக்கு , அந்தமான் விமானம். பயண நேரம் சரியாக இருக்க, சென்னை விமான நிலையத்தில் காலை உணவை முடிக்க கேண்டீன் சென்றனர்.
ஆதி ஃப்ளைட் மோடிலிருந்த அலைபேசியை சாதா மோடுக்கு மாற்ற, சரிமாக வந்து விழுந்தது ஹரிணியின் செல்ஃபி.
“ திமிரை பார்த்தியா? என்னை வெறுப்பேத்தவே அனுப்பி விட்டுருக்கா.” என சித்ராவிடம் காட்ட,
‘இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இவ வேற’ என சித்ரா மனதில் நொந்துக் கொள்ள,
“ பெரிசா அவ புருஷன், என் பொண்டாட்டினு பேசினான். பொண்டாட்டியை கண்டிக்க துப்பில்லையோ. இரு அவனை வச்சுக்குறேன்” என ஆதி, உதயனுக்கு போன் போட, அழைப்பு சென்று கொண்டே இருந்தது.
ஹரிணி இருவரிடமும் மாட்டிக் கொள்வாளா? பொறுத்திருந்து பார்ப்போம்.