My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

எதிரும் புதிரும் - 37-இறுதி பாகம்

IVNP04

Member
Joined
Mar 12, 2025
Messages
37
இறுதி பாகம்

யாழினி அவள் அம்மா மடியில் படுத்துக் கொண்டு சந்தோசமாய் பேசிக் கொண்டிருக்கிறாள்... "பாரும்மா கடைசியா அந்த ஆதவ்வைப் பிடிச்சதும் எல்லோரும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடணும்னு தான் உங்க எல்லார்கிட்டயும் காலையில வம்பு பண்ணி எழுப்பி விட்டேன்... இப்ப அவனையும் கூட்டிட்டுப் போயிட்டாங்க... என் ப்ரெண்ட்ஸும் ஆதாரங்களைக் கொடுக்க கூடவே போயிருக்காங்க... எப்ப வரப் போறாங்களோ..." என பெருமூச்சு விடுகிறாள்...

அதற்குள் ருக்மணி யாழுவிடம், "அட ஏம்மா இவ்வளவு பீல் பண்ற... மதிய சாப்பாட்டோட ஸ்வீட் சாப்பிடலாம்டா... கவலைப்படாத... " என்கிறார்...

“சரிங்க அத்தை, வாங்க போய் அவனுக்குப் பிடிச்சதா சமைச்சி வைப்போம்... பாவம் புள்ள, இத்தனை நாளா அவனை ஒரு வழி பண்ணிட்டேன்... இனிமேலாவது பாசமா. இருக்கணும்..." என்கிறாள்...

ருக்மணி ரகசியமாய் யாழுவிடம் கேட்கிறார்... "அப்படின்னா நிஜமாவே உங்க ரெண்டு பேர்க்குள்ளயும் எதுவும் நடக்கலயா..?"

. அய்யே மாமியார் கேட்கிற கேள்வியா இது .. "என கன்னத்தை இடிக்கிறாள்...

"சரிடா பதில் சொல்லு... முக்கியமான விஷயம் தெரிஞ்சுக்கதான் கேட்கறேன்... சொல்லேன்டியம்மா..."எனக் கெஞ்சுகிறார்... அவளும் வெட்கத்துடன் தலையசைத்து இல்லை என சொல்கிறாள். ..

ஓ, அப்படியா என யோசிக்கிறார் ருக்மணி... ஒரு வழியாய் எல்லா வேலைகளையும் முடித்து அஸ்வினும், யாழுவின் பிரெண்ட்ஸும் வீடு வந்து சேர்கிறார்கள்... மதியம் பால் பாயாசத்தோடு தடல்புடல் விருந்து நடக்கிறது... எந்த உதவி என்றாலும் எங்களைக் கூப்பிடுங்க என்று கூறி தங்கள் ஊருக்கு புறப்படுகின்றனர் மூவரும்...

நண்பர்களை வழியனுப்பி விட்டு உள்ளே வந்து அஸ்வினைத் தேடுகிறாள்..
ஆசையுடன் தன் கணவனைத் தேடுகிறாள்...

ஆனால் நடப்பதோ வேறு...

ஒரு வழியாய் ஆதவ்வை போலீசாரிடம் கொடுத்துக் கொடுத்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்...

யாழினி கணவனை எங்கே இருக்கிறான் என்று தேடுகிறாள்... அதற்குள் ருக்மணி அவளிடம் வந்து அவனைதானேடா தேடுற... அவன் இந்த ஸ்டேஷன்ல இருந்து வரலயே..." என்கிறார்...

யாழுவுக்கு வருத்தமாகி விடுகிறது... "ஏன்டா மனசுல இவ்வளவு ஆசையை வச்சிகிட்டு, பிறகு ஏன் அவனைப் பார்த்தா சிடுசிடுன்னுப் பேசின..."

“ஆரம்பத்துல என் அப்பா , அம்மா, அவன் மூணு பேரும் சேர்ந்து செய்த சதித்திட்டம் எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது... என்னை ஆதவ்கிட்ட இருந்து பிரித்து இவனை கல்யாணம் செய்து வைத்துட்டாங்களேன்னு கோபமா இருந்தேன்..."

“ஆனா கல்யாணம் முடிஞ்சி ரெண்டு நாள் கழிச்சி இவங்க மூணு பேரும் கான்பரன்ஸ் கால் பண்ணிப் பேசினாங்க... அதை நான் தூங்குற மாதிரி நடிச்சுகிட்டே ஓட்டு. கேட்டேன்... அப்பதான் ஆதவ் பற்றிய செய்திகளைச் சொன்னாங்க... அப்பவும் நான் அவங்க சொன்னதை நம்பல... பூஜாவோட சொந்தக்காரப் பெண் ஒருத்தி காணப் போனதும், மூணு பேரும்தான் விசாரிச்சி இருந்து இருக்காங்க... அப்பதான் ஆதவுக்கு அந்த பெண் எழுதிய காதல் கடிதங்கள் கைக்கு கிடைச்சி இருக்கு... பாவம் அந்த பெண் தொலைந்து வருடம் ஆயிற்று... அதில் இருந்தே அவனை உளவு பார்த்து இத்தனை தகவல்களையும் சேகரித்து பிடித்து இருக்காங்க..."

“நான் ஆதவைப் பற்றி யார் எது சொன்னாலும் நம்ப மாட்டேன்னு அவங்களுக்கு நல்லா தெரிஞ்சு போச்சு... அதனால அப்பாகிட்ட போய் மூணு பேரும் பேசி இருக்காங்க ...அதுல இருந்துதான் அப்பாவுக்கு என்னை பத்திரமா பாத்துக்கணும்னு கவலை வந்து விட்டது...பிறகு நடந்தவை தான் உங்களுக்கே தெரியுமே அத்தை... எனக்கு தெரியாமலேயே ரகசியமாய், இரவோடு இரவாய் கடத்திக் கொண்டு வந்து மிரட்டி என் திருமண ஏற்பாடுகளை செய்து முடிச்சிட்டாங்க..."

"சரிடாம்மா உனக்கு தான் திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே உண்மை தெரியும்ல... அப்புறம் ஏன் எல்லாரிடமும் கோபமாகவே இருந்தாள்..." என்கிறார்...

"அத்தை நீங்க என்னை ஒழுங்காக கவனிக்கவில்லையோ... இரண்டு நாள் கழிச்சு அவனை தவிர மற்ற எல்லோரிடமும் ஆசையாகத்தானே இருந்தேன்..."

"அட ஆமாம்ல நீ சொன்ன பிறகுதான் எனக்கும் புரியுது... அது ஏன்டா அவன் மட்டும் என்ன பாவம் செய்தான்... அனிடமும் ஆசையாய் இருக்க வேண்டியது தானே..."

“ம், அசுக்கு, புசுக்கு என சிரிக்கிறாள்... எப்பப் பார்த்தாலும் என்னை ராட்சசி, பிடிவாதக்காரின்னு சொல்லிக்கிட்டே தான இருந்தாங்க, இவங்க மூணு பேரும்... எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா அந்த நேரம்... அதான் அவங்களை நல்லா வச்சி செஞ்சிட்டேன்... அதிலும் என் அம்மாவையும், அப்பாவையும் பார்க்கணுமே... அப்படியே அரண்டு போயிட்டாங்க பாவம்..." என சிரிக்கிறாள்... அதே சஸ்பென்சோடயே ஒரு வழியா ஆதவ்வை புடிச்சி ஜெயிலப் போட்டாச்சு என பெருமூச்சு விடுகிறாள்...

"என்னமோம்மா, இனிமேலாவது என் மகனை நல்லாப் பார்த்துப்ப தானே..."

"ஆமா அத்தை, இனிமே தான் அவனை ஆசையா, அன்பா, பத்திரமா , என் உள்ளங்கையில வச்சிப்
பாத்துக்கணும்..." என்கிறாள் காதலுடன்...

அவள் சொல்லும் தோனியை வைத்தே புரிந்துக் கொள்கிறாள் ருக்மணி... நான் உன்னை ஒன்னு கேட்பேன்... நீ மறைக்காம பதில் சொல்லணும் சரியா...

அவர் என்ன கேட்கப் போகிறார் எனப் புரியவும் அமைதியாய் ம், கேளுங்க அத்தை என்கிறாள்...

உங்க ரெண்டு பேருக்குள்ளயும் இதுவரை எதுவும் நடக்கலைதானே... அவளும் தலை குனிந்த படியே ஆமா அத்தையும், இங்கேயே கொஞ்ச நேரம் இருந்து அடுப்பைக் கவனி... இதோ வந்துடுறேன் என ஹாலுக்குப் போய் ஜோசியரிடம் போன் பேசுகிறார்... பிறகு அகிலாவிடம் தனியே பேசி விட்டு வரவும், நித்யா அதற்குள் சமையலை பொறுப்பாய் முடித்திருந்தாள்...

அதோடு போலீஸ் ஸ்டேசனில் இருந்து பசியோடு வந்த நால்வருக்கும் முதலில் சாப்பாடு பரிமாறுகிறார்கள்... யாழுவின் பிரெண்ட்ஸும் ஊருக்குக் கிளம்புகிறார்கள். ..

அடுத்ததாய் யாழுவின் பெற்றோரும் ஊருக்குக் கிளம்புகிறார்கள்... நாளை மறுநாள் ரிசப்சன் வேலை இருப்பதால் கிளம்புவதாகச் சொல்லவும் அவள் சோகமாகிறாள்...

அகிலா நித்யாவிடம், " என்னம்மா உன் கணவனைப் பிரிந்து எங்களோட வரணும்னதும் சோகமா ஆகிட்டியாடா.. என்கிறார்...

"என்னம்மா புதுசா ஒரு கதை சொல்ற... நான் அஸ்வின் கூட இனிமேதான் நிறைய பேசணும்... நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து வர்றோம்மா..." என சிணுங்குகிறாள்...

“இல்லடா இந்த ஆதவ் பயலால போட்டது போட்டபடி வந்தாச்சு... இனிதான் எல்லா வேலையும் செய்யணும்... அதனால உன்னை திரும்ப அழைக்க வரமுடியாது... அதனாலதான் இப்பயே கூப்பிடுறேன்.." என அகிலா உளறிக் கொட்டுகிறார்...

"அப்படின்னா அவனையும் கூட்டிட்டுப் போவோம்மா..."

"இல்லடா அஸ்வினும் கிளினிக்கை கவனிக்கவேயில்ல. அதனால ரிசப்சன் அன்னிக்கு காலையில வந்துடுவான்டா ..."என சமாதானப் படுத்தி அனுப்புகிறார் ருக்மணி...

ஒரு வழியாய் மனமே இல்லாமல் அஸ்வினிடம் சொல்லிக் கொண்டு கிளம்புகிறாள் யாழினி...

ஊருக்குப் போனதிலிருந்து இருவரும் போனைக் கீழே வைக்கவேயில்லை... ஒரே கொஞ்சல், குலாவல்தான்...

“ஏன்டி இவ்வளவு நாளா என்னை திட்டி, அடிச்சிகிட்டு இருந்த... இப்பதான் எல்லா பிரச்சினையும் முடிஞ்சி ஒரு வழியா நாம ராசிக்குறோம்... இப்ப பார்த்து நம்மள பிரிச்சிட்டாங்களேடி ...எனக்கு உன்னை பார்த்துக்கிட்டே இருக்கணும் போல தோணுது. கைக்கு எட்டியது வாய்க்கு கிடைக்கல பாருடி..."எனப் புலம்பித் தள்ளுகிறான் ...

"ஆமாடா இந்த கிழடுங்கள்லாம் ரொம்ப மோசம்டா... இனிமே ரிசப்சன் அன்னிக்கு தான் நாம மீட் பண்ணலாம்... "என அவளும் பீல் பண்ணுகிறாள்...

போன் பேசிப் பேசி எப்போது தூங்கினார்களோ தெரியவில்லை இருவரும் ... அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் கடிகாரமுள்ளே நகராமல் நின்றதைப் போல் தெரிகிறது அவர்களுக்கு...

ருக்குவுக்கு மகனைப் பார்க்க பாவமாகவும் இருக்கிறது, சிரிப்பாகவும் இருக்கிறது... வேறு வழியின்றி மகனிடம் உண்மையைச் சொல்கிறார்... "நாங்க நல்ல நேரம் பார்த்து சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்தா, நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு இத்தனை நாள் பிரிந்து இருந்துட்டீங்க... அதனால தான் ஜோசியர்கிட்ட நல்ல நாளை பார்க்கச் சொன்னேன் ... அவர் நாளை மறுநாளுக்கும்,மறுநாள் தான் நல்ல நாளா இருக்குன்னு சொல்லிட்டாரு... அதாவது உன் ரிசப்ஷன் முடிஞ்சி மறுநாள்தான்... அன்னைக்கு தான் நம்ம வீட்டுல நம்ம ஊர்க்காரர்களுக்கு கறி விருந்து வைக்கிறோம்... அதுவரைக்கும் ரெண்டு பேரும் போன் பேசி நேரத்தை ஓட்டுங்க.. "என சிரிக்கிறார்...

"நீ முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கன்னு தான் உன்கிட்ட இந்த ரகசியத்தை சொன்னேன். நான் சொன்னதை எல்லாம் யாழினிகிட்ட சொல்லிடாதடா... உடனே கிராமத்து ஆளுங்கன்னு கிண்டல் பண்ணுவா..." என அன்பு எச்சரிக்கை கொடுக்கிறார்...

"ஆமாமா அவ கிண்டல் செய்தாலும் செய்வா..." என சிரிக்கிறான்...

ஒரு வழியாய் ரிசப்ஷன் கோலாகலமாய் நடந்து முடிகிறது... வந்தவர்கள் அனைவரும் திருமண ஜோடியை வாழ்த்துகிறார்கள்... ஜோடிப் பொருத்தமும் பிரமாதம் என அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்...

"சரி ரிசப்ஷன்தான் முடிந்து விட்டதே... இன்று இரவு இங்கேயே தங்குவான்..." என்ற அவளுடன் காத்திருக்கிறாள் யாழினி... ஆனால் அவளிடம் நாளைக்கு கறி விருந்து வேலையை கவனிக்க வேண்டும்... அதனால் ஊருக்குச் செல்வதாக சொல்லி விட்டு தன் பெற்றோருடன் கிளம்புகிறான்...

மறுநாள் தன் பெற்றோருடன் வந்து இறங்கிய யாழினி , கோபத்தில் அஸ்வின் பக்கமே திரும்பவில்லை... 'பெரிய இவனா இவன்... நான் அவனை பழி வாங்கினேன்னு, அவன் திருப்பி என்னைப் பண்றானாமா ...இனி கிட்ட வரட்டும்.. பிறகு இருக்கு அவனுக்கு..., எனப் பொருமுகுகிறாள்...

'எல்லாரும் அங்கே ஹால்ல இருக்குறப்ப இவ மட்டும் தனியா இங்க என்ன பண்றா..., என அவளைத் தேடிக்கொண்டு வருகிறான் அஸ்வின்...

அவனைப் பார்த்ததும் கோபத்தில் அடிக்கத் தொடங்குகிறாள்... "அடியே நான் என்னடி பண்ணட்டும்... இன்னிக்கு தான் நல்ல நாளாம் நம்ம சாந்தி முகூர்த்தத்துக்கு..." கூறியபடியே கதவைத் தாழிடுகிறான்...

"சாரா எங்கடி உன் அண்ணனும், அண்ணியும்... ரொம்ப நேரமா ஆளையே காணோமே..." என ருக்மணி எதார்த்தமாய் கேட்கிறார்...

"அவங்க ரெண்டு பேரும் அந்த ரூம் கதவை தாழ் போட்டு ரொம்ப நேரம் ஆகுதும்மா... அப்படி என்னதான் பேசுறாங்களோ..." என்ற படியே கலையரசியிடம் சாரா ரகசியமாய் கேட்கிறாள்... "கிழவி இன்னிக்குதான் முதல் ராத்திரியம்ல அவங்களுக்கு... ஒரு வேளை முதல் பகல் நடக்குதோ என்னவோ. " என நையாண்டி செய்கிறாள்...

"இருக்கும்டி, இருக்கும்... அன்னிக்கு தான் நைட்லாம்பைப் போட்டு கண்ணும் தெரியல... ஒன்னும் தெரியல.. இன்னிக்கு மிஸ் பண்ண மாட்டேன் பாருங்கடி... "என அவர்கள் ரூமை. நோக்கிப் போகிறார்...

அங்கு கிண்டலும், கேலியுமாய் பேசி சிரித்தபடி இருவரும் ... அவள் சடையைப் பிடித்து இழுத்து விளையாடுகிறான் அஸ்வின்...

"போடா ரெட்டை ஜடை போட்டப்பயும் இப்படிதான் விளையாடுன... இப்பவும் அதே விளையாட்டு தானா..." என சிரிக்கிறாள்...

சோகமாய் தன் பேத்திகளிடம் போனவர் , "அடச்சே, இதுங்க சுத்த வேஸ்ட்டுடி... சின்னப் பசங்க மாதிரி சடையை பிடிச்சி இழுத்து விளையாடிகிட்டு இருக்கான்டி. உன் அண்ணன்..." என தலையில் அடித்துக் கொள்கிறார்..

அதைக் கேட்டு அனைவரும் சிரிக்கிறார்கள்... யாழினி, அஸ்வினி வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சிதான்... இனி சந்தோசமே நிலவட்டும்...

முழுவதும்..
 
Last edited by a moderator:

எதிரும் புதிரும்! தலைப்புக்கு ஏற்றார் போல் டாம் &ஜெர்ரி தான் நாயகன் நாயகி பாத்திரம்.

கலையரசி பாட்டியின் கலகலப்புக்கு பஞ்சம் இல்லை கதையின் சுவாரசியம் கூட்ட பாட்டியின் சேட்டை அருமை.தன்னுடைய பொறுப்புகளை முடித்து விட்டு பிள்ளைகளோடு பிள்ளையாக இருப்பது சிறப்பு.

கட்டாய கல்யாணம் என்று இருந்த நாயகி உண்மை அறிந்து கொடுத்த ட்விஸ்ட் செம.

அகிலா கோபி ருக்மணி சாரா தாரா மற்ற நண்பர்கள் அனைவருக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்.

ஆதவன் பெரிய வில்லன் போல் இருந்து விட்டு கடைசியில் கிழவி கையில் அடி வாங்கிய காட்சி சூப்பர்.

தன் குடும்பத்து பெண் பாதிக்க விடக்கூடாது என்று இவர்கள் செய்த திருமணம் அதே குடும்பத்துக்காக நாயகி கொடுத்த இன்ப அதிர்ச்சி மற்ற பெண்கள் பாதிக்க கூடாது என்பதற்க்காக நண்பர்கள் செய்த உதவி மிகவும் அருமை.

மேலும் எழுத்து பயணம் சிறக்க வாழ்த்துக்கள் எழுத்தாலரே 💐💐
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top