சித்திரை மாதம், பவுர்ணமிக்கு இன்னமும் இரு நாட்களே இருந்ததால் நிலவு பெரிதாக அழகாக பிரகாசித்தது. மேகக்கூட்டமே இல்லாமல் வானம் நட்சத்திரங்கள் மினுங்கக் காட்சியளித்தது. பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த சனிக்கிழமை இரவு வந்தே விட்டது. பாடலிபுத்திரத்தில் வீரசிம்மன், கண்வா, மற்றும் மநு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவரும் இரவில் மநு விளக்கை ஏற்றுவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முன்பே திட்டமிட்டு ஒரு யவன வணிகனிடம் சொல்லி மிகவும் விலை உயர்ந்த மதுவை வாங்கி வைத்திருந்தார் கண்வா. சனிக்கிழமை மதியம் மன்னரை சந்தித்து அவருக்காகவே அப்படி சிறப்பான புதிய வகை மது ஒன்றை வரவழைக்க இருப்பதாகவும் பாரதத்தின் தெற்குப் பகுதியில் யவனர்கள் மிக அதிகமாகச் சென்று வியாபாரம் செய்வதால் அங்கிருந்து வரவழைத்திருப்பதாகவும், இன்றைக்கு இரவில் எந்நேரமும் வந்து சேரலாம் என்றும் சொல்லி இருந்தார். யவன தேசத்து மது என்றதுமே மன்னர் தேவபூதி சொக்கி விட்டார். மதுவோடு சேர்த்து உண்ண கோழியை நிறைய மிளகு போட்டு வறுத்து வைக்கச் சொல்லி இருப்பதாக கண்வா சொன்னதும் மன்னரின் கண்கள் கனவில் மிதக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் நடுச்சாமம் கழித்து தான் மது கைக்கு வரும் என்று கண்வா சொன்னதும், எத்தனை நேரம் ஆனால் என்ன? மதுவை ருசிக்க என்ன தடை? என்னை எழுப்பு. இன்று நான் அந்தப் புரத்துக்குச் செல்லாமல் இங்கே உள்ள எனது சயன அறையில் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னது கண்வாவுக்கு மிகவும் வசதியாகப் போய் விட்டது. வீரசிம்மரிடம் விஷயத்தைச் சொல்லி மகாராணியார் தனியாகத்தான் இருப்பார்கள் என்று கூறியதும் மிகவும் தயங்கினார் வீரசிம்மர். பெண்ணைப் போய்க் கொலை செய்வதா? என்ற தயக்கம் அவருக்கு. ஆனால் மநுவின் தண்டனைகளை எண்ணிப் பார்த்த அவர் வாளை மறைவாக எடுத்துக் கொண்டு அந்தப்புரம் நோக்கிச் சென்று விட்டார்.
சரியாக இரவு நடுச்சாமத்தில் மநு விளக்கேற்றினார். அந்த இரவில் அரண்மனையின் மேலே இருந்தும் அமைச்சர்களின் மாளிகையின் மேலே இருந்தும் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு விளக்கு வெளிச்சம் தெரிய பரபரப்பானார்கள்.
சங்கமாதேவியின் கணவனின் தம்பியான பாசீ, திட்டப்படியே தயாராக எடுத்து வைத்திருந்தன் பாலில் விஷத்தைக் கலந்து குழந்தைகளைக் கூட எழுப்பிக் கொடுத்தான். சங்கமா தேவியின் கணவன் குடிக்க மாட்டேன் என்றதும் கலவரம் வர கட்டாயப்படுத்தினான். பிடிக்கவில்லை என்றால் விட்டு விடேன், ஏன் கட்டாயப்படுத்துகிறாய்? என்று எரிந்து விழுந்தாள் சங்கமா தேவி. இந்த நேரத்தில் குருவை கலந்தாலோசிக்க முடியாது. அவரது ஆணை அனைவரையும் தீர்த்துக் கட்டுவது. அண்ணன் பால் குடிக்கவில்லை என்றால் என் வாளுக்கு பலியாக வேண்டியது தான். வேறு வழியில்லை. ஒருவரை விட்டு வைத்தாலும் நான் தொலைந்தேன் என்று தீர்மானம் செய்து கொண்டு அண்ணனையும் அண்ணி சங்கமா தேவியையும் கொல்லும் போது அண்ணன் எதிர்த்து வாள் வீசக் கூடாது என்று மிளகைப் பொடித்து கையில் வைத்துக் கொண்டதோடு, வீட்டில் இருந்த வாட்களையும், கத்திகளையும் அவசர அவசரமாக அகற்றினான்.
அதே நேரம் சுகன்யாவின் வீட்டு சமையற்காரன் ஏற்கனவே இரவு உணவில் விஷம் கலந்து விட்டதால் சுகன்யாவைத் தவிர அனைவரும் இறந்தே போய் விட்டார்கள். ஆனால் இது தெரியாத சுகன்யாவோ ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மநுவின் அனுமதி வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கையில் வாளை ஏந்தியபடி சுகன்யாவின் அறைக்கு வெளியில் நின்றிருந்தான் அந்த சமையற்காரன்.
கண்வாவோ விளக்கு ஏற்றப்பட்டதுமே ஓடிச் சென்று மன்னரை எழுப்பி உப்பரிகைக்குக் கூட்டி வந்தார். மது, வறுத்த கோழி என்று பரிமாறப்பட தன்னை மறந்து குடிக்க ஆரம்பித்தார் மன்னர் தேவபூதி.
வீரசிம்மர் மன்னரின் அந்தப்புரத்தில் மகாராணியார் உறங்கும் அறையின் வாசலில் கையில் வாளோடு தயாராக நின்றிருந்தார். தூக்கக் கலக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணைக் கொல்வது பெரிய வேலையாகத் தோன்றவில்லை அவருக்கு.
இப்படி பாடலிபுத்திரத்தில் மநுவின் ஆட்கள் ஆட்சியைக் கவிழ்த்து தங்களது அதிகாரத்தை நிலை நிறுத்த வேலை செய்யத் தொடங்கிய அதே நேரம், கபிஸ்தலத்தின் எல்லையில் உள்ள ஒரு குடிசையில் மயூரன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சுவர்ணா. அவளது முகத்தில் நிலவின் ஒளி பட்டு தங்கமென பிரகாசித்தது. சற்று தொலைவில் மயூரன் நடந்து வரும் சத்தம் கேட்க உஷாரானாள் சுவர்ணா.
நடுச்சாமம் சரியாக ஒரு நாழிகை கழிந்ததும், மநு விளக்கை அணைத்தார். மின்னல் வேகத்தில் வேலையில் இறங்கினர் அனைவரும்.
சுகன்யாவின் அறைக்குள் நுழைந்த சமையற்காரன் வாளை எடுத்து வீசும் போது சட்டென எழுந்து விட்டாள் சுகன்யா. என்ன ஏது என்று எதுவும் புரியாமல் நின்றவளை இரக்கமே இல்லாமல் நெஞ்சில் குத்தினான் சமையற்காரன். ஆ என்று அலறி தன் கணவனைத் துணைக்கழைத்தாள்...ஆனால் பாவம் அவன் எப்போதோ இறந்து விட்டான் என்று அவளுக்குத் தெரியவில்லை. நெஞ்சில், இடுப்பில், கைகளில் என்று கை போன இடங்களில் எல்லாம் குத்தினான் சமையற்காரன். சிறிது நேரத்தில் துடித்துத் துடித்து இறந்தாள் சுகன்யா. அப்போது கூட அவளது கண்கள் திறந்தே இருந்தன. குரு செய்யச் சொன்னவற்றை எல்லாம் தவறாமல் செய்தான் அவன். சுகன்யாவின் உடல் கொடூரமாக சிதைக்கப்பட்டது. ஆணாதிக்கத்தின் அடிக்கல்லுக்கு முதல் பலியானாள் சுகன்யா.
அங்கே சங்கமாதேவியின் வீட்டில் பாசீ, விளக்கு அணைந்ததுமே கதவைப் படாரெனத் தள்ளித் திறந்து கொண்டு ஓடி, படுத்திருந்தவர்கள் சுதரிப்பதற்குள் அவர்கள் மேல் மிளகுப் பொடியைப் போட்டு சரமாரியாக வெட்டத் தொடங்கினான் ஏன்? எதற்கு? என்று எதுவும் தெரியாமல் அலறியபடி சாய்ந்தனர் சங்கமா தேவியும் அவளது கணவரும். வீட்டில் குழந்தைகளைக் கூட கொன்று விட்டதால் யாரும் ஏன் என்று கேட்க வரவில்லை. அங்கும் இறந்த உடல்களை கோரமாக்கும் பணி நடந்து முடிந்தது.
பாகுநேத்திரன் வீட்டில் அவரது மெய்க்காப்பாளன், ஏற்கனவே தலையணையை அழுத்தி தளபதியின் குழந்தைகளையும் கொன்று விட்டான். தளபதியின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று அவள் எடுத்துக்கொள்ளும் மருந்தில் மநு கொடுத்த விஷத்தைக் கலந்து விட்டதால் அவள் உறங்குவது போலவே இறந்து விட்டாள். மெய்க்காப்பாளனுக்கு உள்ளுக்குள் உதறியது. பாகுநேத்திரனைப் போல சிறந்த வீரர் யாருமே இல்லை. அவர் மட்டும் எதிர்த்துப் போராடினால் தன்னால் பத்து நிமிடம் கூடத் தாக்குப்பிடிக்க முடியாது என்று தெரியும். ஆனால் அவரைக் கொன்றே ஆக வேண்டும் விஷம் கொடுக்கவும் வழியில்லை. ஏற்கனவே யோசித்து வைத்திருந்தபடி தளபதியின் அருமை மகளின் சிறு உடலை எடுத்துக் கொண்டு அவரது அறைக்கதவைத் தட்டினான். எதுவும் புரியாமல் திறந்த அவரது வயிற்றில் வாளைச் செருகினான். பல போர்க்களங்களையும், திடீர்த் தாக்குதல்களையும் சமாளித்துப் பழக்கப்பட்ட பாகுநேத்திரன், எப்போதும் எடுக்கும் படி வைத்திருக்கும் வாளால் மெய்க்காப்பாளனைத் திருப்பித் தாக்கினான்.
"நீங்கள் என்னைத் தாக்கினால் உங்கள் மகளின் ஒவ்வொரு பாகமாக வெட்டி எறிந்து விடுவேன்" என்று சொல்லிக் கொண்டே குழந்தையின் கையை வெட்டினான்.
உணர்ச்சி வசத்தில் செய்வதறியாது நின்றார் தளபதி. என்ன நடக்கிறது? மெய்க்காப்பாளன் ஏன் தன்னை தாக்குகிறான்? என் மகள் இறந்து விட்டாளா? அவளை ஏன் கொன்றார்கள் என்று பல கேள்விகள் இருந்தாலும் சமாளித்துக் கொண்டு மகளின் உடலை நோக்கித் தாவி அதனை தன் மெத்தை மேல் விழ வைத்தார். இதை கொஞ்சமும் எதிர்பாராத மெய்க்காப்பாளன், வாளால் தாறுமாறாகத் தாக்கினான். "உங்கள் மனைவி, குழந்தைகள் என அனைரையும் கொன்று விட்டேன். இனி நீ உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறாய்?" என்று மெய்க்காப்பாளன் சொல்லவும் ஒரு கணம் அப்படியே நின்று விட்டார் பாகுநேத்திரர். அந்த நொடி நேரத்தைப்பயன் படுத்திக் கொண்டு அவரது கைகளை துண்டித்து விட்டான். பிறகு வெகு நேரம் போராடவில்லை பாகுநேத்திரன். ஆனால் மெய்க்காப்பாளனுக்கும் மிக அதிகமான காயங்களைக் கொடுத்து விட்டே கண்களை மூடினார். மிகவும் சிரமப்பட்டு தான் பாகுநேத்திரனின் உடலை அலங்கோலப்படுத்த வேண்டி இருந்தது மெய்க்காப்பாளனுக்கு. ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதற்குள் கண்கள் இருட்ட அப்படியே விழுந்தான் மெய்க்காப்பாளன். அவன் கண்களில் துணை தளபதி பதவி, அதிகாரம், பணம் எல்லாம் வந்து போக கண்களை மூடினான்.
அங்கே அரண்மனை அந்தப் புரத்தில் நுழைந்ததுமே வீரசிம்மர் திடுக்கிட்டார். காரணம் மகாராணியார் மங்கலநாயகி உறங்காமல் விழித்திருந்தது மட்டுமல்ல கையில் வாளையும் வைத்திருந்தார்.
"உன் நடமாட்டத்தைக் கவனித்து விட்டேன் வீரசிம்மா! எதற்காக நான் தனியாக இருக்கும் அறைக்கு வந்தாய்? நிச்சயம் நல்ல நோக்கம் இல்லை! உம் சொல்" என்று மிரட்டினாள்.
இது ஒருவகையில் வீரசிம்மனுக்கு நிம்மதியை அளித்தது. உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை கொலை செய்ய வேண்டியதில்லை அல்லவா? ஆனால் அடுத்த நொடியே தான் எப்பேற்பட்ட இக்கட்டில் சிக்கி இருக்கிறோம் என்றும் புரிந்தது. மகாராணியார் மட்டும் உயிரோடு இருந்தால் மநுவின் திட்டங்கள் எதுவுமே நிறைவேறாது ஆகையால் இந்த அறையிலிருந்து மங்கல நாயகி உயிரோடு வெளியில் செல்லக் கூடாது. நல்ல வேளை இன்று காவலர்கள் அதிகம் இல்லை என்று எண்ணிக் கொண்டவர் பதிலே பேசாமல் தாக்க ஆரம்பித்தார். மகாராணியும் வாள் பயிற்சி பெற்றவள் என்பதால் தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருந்தது. ராணியாரின் உடலில் பல இடங்களில் காயம். வீரசிம்மருக்கும் தான்.
"எதற்காக இந்தத் தாக்குதல் வீரசிம்மா? என்னைக் கொல்வதால் உனக்கு என்ன பயன்?" என்றாள் மங்கல நாயகி வாள் வீசிக் கொண்டே. தன்னையும் அறியாமல் மன்னரும் கண்வாவும் அமர்ந்திருந்த உப்பரிகைப் பக்கம் பார்த்தார் வீரசிம்மர். ஒரு நொடியில் விஷயத்தை ஊகித்த மகாராணி மங்கல நாயகி, என் கணவரை சதிக்கு பலியாக விட மாட்டேன் என்று கத்தியபடியே ஓட முயன்றார். இனியும் தயங்கினால் நல்லதில்லை என்று போர் தர்மத்தைக் கைவிட்டு ஓடிய மகாராணியின் காலை வாரி விட்டார் வீரசிம்மர். கீழே விழுந்தவர் சுதாரிப்பதற்குள் பல இடங்களில் வாளை பதித்து விட்டார் வீர சிம்மர். ஆனால் மகாராணியார் சும்மா இல்லை. "என்னையும் என் கணவனையும் கொல்லத் திட்டமிட்ட நீ உயிரோடு இருக்கக் கூடாது என்று சொல்லியபடி தன் கடைசி மூச்சு அத்தனையும் திரட்டி வீரசிம்மரின் நெஞ்சில் தன் வாளை ஆழமாகச் செருகினாள் மகாராணி மங்கல நாயகி. வீரசிம்மர் தன் இறுதி மூச்சை விட்டார். மகாராணியாரின் கண்கள் நிரந்தரமாக மூடும் முன்பு உப்பரிகையிலிருந்து கீழே விழும் தன் கணவனின் உடலைத்தான் கடைசியாகக் கண்டார்.
அரண்மனை உப்பரிகையில் மன்னருக்கு மிகவும் பணிவாக மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்வாவின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் வந்தது. "நீயெல்லாம் ஒரு மன்னன்! மனைவியை அடக்கி வைக்கத் துப்பில்லாத நீ! இந்நாட்டு மன்னனா? ஒழிந்து போ!" என்று சொல்லி கண்வா ஒரே வெட்டாக மன்னரின் கழுத்தை வெட்ட ரத்தம் பீறிட்டு அடித்தது. உண்மையிலேயே கண்வா தன்னை வெட்டி விட்டானா? என்று நம்ப முடியாமல் தவித்தார் தேவபூதி. கண்களில் ஆச்சரியம், ஏமாற்றம் ஏளனம் எல்லாம் தெரிய தள்ளாடியது மன்னரின் உடல். "மங்கலா எங்கே? அவளை என்ன செய்தீர்கள்?" என்று கேட்டுக் கொண்டே தன் வாளைத் தேடினார் மன்னர். அதனை சாமர்த்தியமாக ஏற்கனவே வாங்கி வைத்து விட்டதால் கைகளாலேயே கண்வாவைத் தாக்கத் தொடங்கினார் மன்னர் தேவபூதி. கழுத்தில் ஆழமான வெட்டு, ஆனாலும் அவரது கைகளில் வலு குறையவில்லை. தன்னைக் கொன்றே விடுவார் என்று அஞ்சிய வசுதேவ கண்வா சுற்றிலும் பார்த்தார். அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தது உயரமான உப்பரிகையில். தள்ளாடிக் கொண்டிருந்த மன்னனை தன் காலால் உதைத்துக் கீழே தள்ளினார் கண்வா. மன்னர் கீழே விழும் போது மங்கலா என்று கத்தியபடி விழுந்தார். பிறகு எந்தச் சலனமுமே இல்லை.
மநு திட்டமிட்டபடி எல்லாமே நடந்து விட்டது. இனி மநு எழுதியது தான்சட்டம். பெண்கள் அடிமைகள் தான் என்று எண்ணியபடியே எதுவுமே தெரியாதவர்கள் போல அனைவரும் தத்தம் வீடு நோக்கிச் சென்றனர்.
அங்கே கபிஸ்தலத்தில் தூரத்தில் மயூரன் வருவதைக் கண்டு எச்சரிக்கையானாள் சுவர்ணா. உள்ளே நுழைந்த மயூரன் சுவர்ணாவைக் கண்டதும் அசந்து போனான். நேற்று அவன் பார்த்த சுவர்ணாவா இது? அழுக்கும் நாற்றமுமாக இருந்தவள் பன்னீரில் குளித்த ரோஜா போல மின்னினாள். ஆவலோடு அவளை அணைத்தான் மயூரன்.
"என்ன இது மயூரா?" என்றாள் சுவர்ணா சிணுங்கலாக.
"உன் அழகு பல மடங்கு பிரகாசிக்கிறது சுவர்ணா. விளக்கின் ஜோதியைப் போல உள்ளது உன் முகம்." என்றான் மயூரன்.
"விளக்கு வெளிச்சத்தைத் தேடி வந்த விட்டில் பூச்சி நீ மயூரா" என்று ஒரு குரல் கேட்க திரும்பினான். கலா நின்றிருந்தாள். அவள் முகத்தில் கோபம் அக்கினியாக எரிந்தது.
பயத்தில் இரண்டடி பின் வாங்கினான் மயூரன். "நீ...நீ கலா....உனக்கு...."
"பைத்தியம் என்று எண்ணி நிம்மதியாக இருந்தாய் இல்லையா மயூரா? என் ஹரன் எங்கேயடா? அவனை ஏன் கொன்றாய்? நீ மனிதன் தானா?" என்றாள் கலா. அவளது குரல் உணர்ச்சி மிகுதியால் நடுங்கியது.
திகைத்துப் போய் சுவர்ணாவைப் பார்த்தான் மயூரன். அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. கண்களில் இருந்து நெருப்பு வருகிறதோ என்று சந்தேகப்பட்டான் மயூரன். ஆனாலும் சமாளித்துக் கொண்டான்.
"இதெல்லாம் என்ன? நான் யார் தெரியுமா? என் மீது கையை வைத்து விட்டு உங்களால் உயிரோடு கபிஸ்தலத்திலிருந்து போய் விட முடியுமா? சுவர்ணா நீ ஒரு மோசக்காரி, என்னைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றி அழைத்து வந்திருக்கிறாய் இல்லையா? கலாவும் நடித்திருக்கிறாள். ஏன் எதற்கு?" என்றான் மயூரன்.
அவனை நெருங்கி வந்த சுவர்ணா ஓங்கி அறைந்தாள். நிலை தடுமாறிச் சாயும் முன்பே கலா அவனை அறைந்தாள்.
"உங்கள் இருவருக்கும் பைத்தியம் பிடித்து விட்டது. என்னை விட்டு விடுங்கள் இல்லையென்றால் நான் கத்தி ஊரைக் கூட்டி விடுவேன். " என்றான் மயூரன்.
ஜேத்தாவில் தான் சந்தித்த அதே மயூரனா இது? இவனையா காதலித்தோம் என்று வெறுப்பு தோன்ற அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள் சுவர்ணா.
"உத்திரா! உத்திரா எங்கே போய் விட்டாய்? இந்தப் பைத்தியங்கள் என்னை அடிக்கின்றன! வா இங்கே" என்று கத்தினான் மயூரன். நிதானமாக உள்ளே நுழைந்தான் உத்திரன். "நீயும் இவர்களுடன் தான் சேர்ந்திருக்கிறாயா? நல்ல உணவு, வேலை எல்லாம் தருகிறேன். இவர்களைப் பிடித்து வைத்துக் கொள்" என்றான் மயூரன்.
தன் உடன் பிறந்த சகோதரன் பேசப் பேச கலா மூச்சு விடவே சிரமப்பட்டாள். என் அண்ணனா? என்னோடு ஒன்றாக விளையாடி, ஒரே தாய் மடியில் படுத்த என் அண்ணனா? என்று நம்ப முடியாமல் தவித்தது அவள் உள்ளம். சுவர்ணா கலாவின் அருகே சென்று அவளது தோள்களை உலுக்கினாள். சட்டென சுதாரித்துக் கொண்டாள் கலா. மயூரனைக் கண் மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தாள். அவனது உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. கை கால் வயிறு என்று எல்லா இடங்களிலும் நல்ல அடி.
"எதற்கு என்னை இப்படிச் சித்திரவதை செய்கிறீர்கள்?" என்று கத்தினான் மயூரன். அருகே நெருங்கி வந்தாள் சுவர்ணரேகா. அவளைப் பார்த்தாலே நடுக்கமாக இருந்தது அவனுக்கு.
"எதற்கு என்று உனக்குத் தெரியாது?" என்றாள். அவளது குரலில் அப்படி ஒரு அசாதாரண அமைதி.
பயத்தில் நாக்கு உலர தடுமாறினான் மயூரன்.
"தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறாது. பெரிய பெரிய ஆழமான சதிகள் இதில் உள்ளன. ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த இரு பெண்களால் மநுவின் அமைப்பினரை தடுத்து நிறுத்த முடியுமா? என்னோடு சேர்ந்து விடுங்கள். நேரத்திற்கு உணவு, வகை வகையான உடைகள், ஏவிய வேலையச் செய்வதற்கு வேலைக்காரர்கள், விரும்பிய நகைகள் என்று எல்லாமே கிடைக்கும். உங்கள் போராட்டத்தைத் தூக்கி வீசுங்கள்" என்றான் மயூரன்.
"மிக அருமையான பேச்சு மயூரா! சுயகௌரவமே முக்கியம் என்று வசதியான வாழ்வை வெறுத்து உழைத்து வாழ்கிறார்களே? அந்த அன்னையின் மகனா நீ? உனது சுயநலத்துக்காக எத்தனை பேரை பலி கொடுப்பாய்? இதே ஊரில் ஒரு மாதம் முன்னால் ஒரு இளம் விதவை மறு மணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாள் என்று உன் ஆட்களைக் கொண்டு அவளை தெருவில் எரித்துக் கொன்று அன்னை காளியின் சாபம் என்றாய்! சொந்த சகோதரனைக் கொலை செய்தாய், இதுவா மயூரா நீ விரும்பும் வாழ்க்கை? உன் படுக்கையில் பிணங்கள் இருக்கின்றன. நீ நல்லவன் என்று நம்பி உன்னைக் காதலித்தாளே சுவர்ணா! அவளைக் கூட நீ நினைத்துப் பார்க்கவில்லையே?" என்றான் உத்திரன்.
இவர்களுக்கு அத்தனை உண்மையும் தெரிந்து விட்டது. தன்னை இங்கே வரவழைத்ததே கொலை செய்யத்தான் என்று புரிந்தது மயூரனுக்கு. ஆனால் இன்னும் ஒரு தினங்களில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம், மகத நாட்டுக்கே தலைமைத் தளபதியான வீரசிம்மரின் மகன் என்ற மரியாதை, தனக்கும் பெரிய பதவி என்று ஆசைப்பட்ட அவனது மனம் சாவை விரும்பவில்லை.
"இப்போதும் நான் சுவர்ணாவைக் காதலிக்கிறேன் உத்திரா. அதனால் தானே அவள் அழைத்ததுமே வந்தேன். என் மனதில் நீ எப்போதுமே இருப்பாய் சுவர்ணா! உன்னைத் தவிர வேறு யாரையும் என் மனம் விரும்பாது. நான் தலைமைப் பதவியில் இருந்தாலும் உன் நினைவாகவே இருந்தேன் சுவர்ணா. உனக்கு வசதியான வாழ்க்கை அளிக்க வேண்டும் என்று தான் நான் விரும்பினேனே தவிர வேறு ஒன்றும் இல்லை." என்று பரிதாபமாகக் கூறினான் மயூரன்.
கேட்டு விட்டு சுவர்ணா அமைதியாக நின்றாள். கலாவால் அதற்கு மேலும் கோபத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
"என்னடி கேட்டுக் கொண்டிருக்கிறாய்? இவன் சொல்வது அத்தனையும் பொய்! நம்பாதே! பசப்பு வார்த்தைகள் கூறி உன்னை ஏமாற்றப் பார்க்கிறான்." என்று கத்தினாள் கலா.
மெல்ல கலாவின் அருகே சென்றவள் கலாவின் கையில் ஒரு வாளைக் கொடுத்தாள். இன்னொரு வாளை தான் எடுத்துக் கொண்டாள். சுவர்ணா என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாள் என்று புரிய, மயூரனை நெருங்கினாள்.
"இது உன் சொந்த சகோதரனை கொலை செய்ததற்கு" என்று கலா அவனது கைகளில் ஆழமாகக் கீறினாள். ஓவென ஓலமிட்டான் மயூரன்.
"இது பொய் சொல்லி எங்களை ஏமாற்றப் பார்த்ததற்கு" என்று சொல்லிக் கொண்டே சுவர்ணா அவனது மார்புக்குக் குறுக்காக கீறினாள். ரத்தம் பீய்ச்சி அடித்தது. உத்திரன் அவன் கீழே விழாமல் பிடித்துக் கொண்டான். கண்கள் இருண்டன மயூரனுக்கு. எத்தனை ஆசைகள்? எத்தனை கனவுகள்? எல்லாம் இவர்களால் நாசமாகப் போகிறது. விடக் கூடாது. கத்தினால் யாரேனும் வருவார்கள். என்னை அனைவருக்கும் தெரியும். பார்த்து விடுகிறேன் என்று எண்ணி "கொலை கொலை செய்கிறார்கள்! காப்பாற்றுங்கள்!" என்று கத்தினான்.
சிரித்தான் உத்திரன். ரத்த வெள்ளத்துக்கு நடுவே அவன் சிரித்தது பயங்கரமாக இருந்தது.
"எவ்வளவு கத்தினாலும் ஊருக்குள் கேட்காது மயூரா! அதனால் தான் நாங்கள் காற்று எதிர்ப்பக்கம் அடிக்கும் திசையைத் தேர்ந்தெடுத்தோம்." என்றான்.
"உன் உளவாளி முன்னால் பைத்தியம் போல அமர்ந்திருந்தேன். நீயும் வந்து பார்த்து விட்டு சகோதரி என்ற பாசமே இல்லாமல் போய் விட்டாய் மயூரா! அப்போதே நான் முடிவு செய்து விட்டேன் என் அன்னை ஈன்றது இரட்டைக் குழந்தைகளை மட்டும் தான். அதில் ஒருவனை வஞ்சனையால் ஒரு கேவலமான மனிதன் கொன்று விட்டான். நீ என் அன்னைக்குப் பிறந்தவனே அல்லடா" என்று சொல்லி மேலும் கீறினாள். வலி பொறுக்க முடியாமல் அலறினான் மயூரன்.
காயங்கள் ஆழமாக இருந்தாலும் இதயத்திலோ, உடலின் முக்கியமான பாகங்களிலோ அவர்கள் வாளைச் செலுத்தவில்லை என்பதால் வலியும் ரத்தப்பெருக்கும் மிக அதிகமாக இருந்ததே தவிர உயிர் போகவில்லை. வலி, பயம், அவமானம் எல்லாம் சேர மயூரன் தன்னை விட்டு விடும்படி கெஞ்சினான். அவனது கெஞ்சலைக் கேட்கக் கேட்க சுவர்ணாவின் கோபம் அதிகரித்ததே தவிரக் குறையவில்லை.
"எங்களால் வெற்றி பெற முடியாமல் போகலாம் மயூரா! நீயும் உனது அமைப்பினரும் வருங்கால பாரத நாட்டை பெண்ணடிமை நாடாக உருவாக்கலாம். ஆனால் அதற்காக நாங்கள் பேசாமல் இருப்போம் என்று மட்டும் நினைக்காதே! தீய சக்தி இருக்கும் இடங்களில் எல்லாம் அன்னை காளி அவதாரம் செய்து அவைகளை அழிப்பாள். என்னைப் போல, கலாவைப் போல, என் தாயைப் போல பலப் பல பெண்கள் இனியும் வருவார்கள். பெண்ணடிமைக்கு எதிராகப் போராடுவர்கள்." என்றாள் சுவர்ணா.
மயூரனுக்கு நினைவு தப்பத் தொடங்கியது. கண் முன் உலகமே சுழன்றது, உடலில் வலி குறைந்தால் போதும் போல இருந்தது. என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கலாவின் கால்களில் விழுந்தான் மயூரன். எட்டி உதைத்தாள் கலா. குடிசையின் நடுவில் அவன் கிடந்தான்.
"இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம் சுவர்ணா. விடியும் முன் நாம் இங்கிருந்து செல்ல வேண்டும். உம் ஆகட்டும்" என்றாள் கலா.
கையில் வாளை ஏந்தி மயூரனது நெஞ்சில் ஆழமாகப் பதித்தாள் சுவர்ணா. ஆ என்ற அலறலோடு அவனது உடல் சில விநாடிகள் முறுக்கிக் கொண்டு துடித்து பின் மெல்ல மெல்ல அடங்கியது.
ரத்தம் சொட்டும் வாளோடு காளியைப் போல நின்றிருந்தாள் சுவர்ணா, அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகி மயூரனின் ரத்தத்தோடு கலந்தது.