சுவர்ணாவும், கலாவும் தங்கள் உடைகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் அவசரமாக மூட்டை கட்டிக் கொண்டு தங்கள் இருப்பிடத்திலிருந்து வெளியே நடந்தார்கள்.
"நில்லுங்கள்" என்று ஒரு குரல் கேட்க பயம் என்பதே சிறிதும் இன்றி "முன்னால் வா! உத்திரா! பின்னால் நின்று பேசாதே" என்றாள் சுவர்ணா.
முன்னால் வந்து நின்றான் உத்திரன். அவனது பார்வை அவர்கள் கையில் வைத்திருந்த மூட்டையிலும் முகங்களிலும் மாறி மாறி நிலைத்தது.
"எங்கே போகிறீர்கள் என்று கேட்க மாட்டேன். நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லத்தான் உங்களை நிறுத்தினேன்." என்றான் உத்திரன்.
பேசிய அவனைக் கூர்ந்து பார்த்தாள். குழந்தைத்தனமான முகம் நிச்சயம் இல்லை. அதிக உயரமும் இல்லை. ஆனால் அவன் முகத்தில் நேர்மையும், கருணையும் தெரிந்தது. தலையை உதறிக் கொண்டாள் சுவர்ணா. அரிஹந்தின் தோழர்களில் ஒருவன். இவனைப் பற்றி அதிகம் தெரியாது. நாங்கள் போவதோ ஒரு பெரிய லட்சியத்தை நோக்கி. இவனை எப்படி நம்புவது? மிகவும் நம்பிய மயூரனே துரோகி ஆகி விட்டான் என்னும் போது இவன் என்ன பெரிய ஆளா? கொஞ்சம் பணத்தை அந்த அமைப்பினர் காட்டினால் போதும் உடனடியாகக் கட்சி மாறி விடுவான். இவனை அழைத்துச் செல்வதும், தேளை துணி மூட்டைக்குள் வைத்து எடுத்துச் செல்வதும் ஒன்று என்ற முடிவுக்கு வந்தாள் சுவர்ணா.
"நாங்கள் கலாவின் வீட்டுக்குப் போகிறோம் உத்திரா! நீ எங்களுடன் வர வேண்டாம். அதை நாங்கள் விரும்பவில்லை" என்றாள் சுவர்ணா. கலா எதுவுமே பேசாமல் இருந்தாள். வைஷாலி சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நீண்ட தொலைவு சென்று விட வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். இப்போது அனாவசிய தாமதம் என்று எரிச்சல் பட்டாள் கலா.
"நீங்கள் அங்கே செல்லவில்லை என்று தெரியும் சுவர்ணா. பார்ப்பதற்கு நான் கொஞ்சம் முட்டாள் போலத்தான் தெரிவேன். ஆனால் அத்தனை முட்டாள் இல்லை. நேற்றிலிருந்து நான் உங்களை கவனித்து வருகிறேன். நீங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் ஏதோ திட்டம் போட்டிருக்கிறீர்கள். அதை செயல்படுத்தத் தான் செல்கிறீர்கள். அதனால் தான் சொல்கிறேன் நானும் உடன் வருகிறேன். உங்களுக்கு என்னால் ஆன உதவியைச் செய்வேன். என்னை நம்புங்கள்" என்றான்.
"பேசிப் பேசி நேரத்தை வீணாக்காதே சுவர்ணா. இவன் மேல் அந்த செந்தட்டிப் பொடியைப் போட்டு விட்டு வா. இவன் சொறிந்து முடிப்பதற்குள் நான் வெகு தூரம் போய் விடுவோம்." என்றாள் கலா கொடூரமாக. கொஞ்சமும் பயப்படாமல் நின்றிருந்தான் உத்திரன்.
"என் மேல் செந்தட்டிப் பொடியைப் போடுவதால் ஆண்கள் மேல் உனக்குள்ள கோபம் தணியும் என்றால் அப்படியே செய் கலா. உன்னை என் சகோதரி மாதிரி நான் நினைத்திருக்கிறேன். நிச்சயம் என்னால் ஹரனின் இடத்தை நிரப்ப முடியாது. ஆனால் உன் மன வேதனைக்கு மருந்தாக என்னால் இருக்க முடியும். உங்கள் இருவரின் ஆவேசமும், கோபமும் நியாயமானது தான். ஆனால் வெறும் ஆவேசம் மட்டுமே போதாது கலா. திட்டமிட வேண்டும். அதற்கு தான் நான் உன்னோடு வருகிறேன் என்கிறேன். என்னை நம்புவது உங்களுக்குக் கடினம் தான். கடினம் என்ன? முடியவே முடியாது தான். என்னைப் பற்றிக் கூறுகிறேன், பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள்" என்றான் உத்திரன்.
"இங்கேயே நின்று கொண்டு இவன் கதையைக் கேட்டால் நேரமாகி விடும், இவனையும் அழைத்துச் செல்வோம், நம்ப முடியாது என்று தெரிந்தால் செந்தட்டிப் பொடியைப் போட்டு விட்டு நாம் நம் வழியில் செல்லலாம்" என்று மெல்லிய குரலில் கலாவின் காதில் சொன்னாள் சுவர்ணா. அப்படியே செய்வதாக முடிவாகி மூவரும் கிளம்பினார்கள்.
சற்று நேரம் மௌனமாக வந்த உத்திரன் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினான். அதைக் கேட்கக் கேட்க இரு பெண்களின் கண்களிலும் ஆத்திரம், அழுகை, வலி என எல்லாம் கலந்து வந்தன.
உத்திரனின் தாய் சுபலா சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். அவளை அதே போன்ற ஒரு குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார் அவளது அப்பா. சுபலாவுக்கு அவளது மாமன் மகனான நந்தன் மேல் ஈர்ப்பு, அவனுக்கும் அப்படியே தான். ஆனால் நந்தனின் அப்பா சவரம் செய்யும் வேலையைச் செய்து வந்ததால் அந்தக் குடும்பத்தில் பெண் கொடுத்தால் தங்கள் கௌரவம் குறைந்து விடும் என்று தாமீகரன் என்பவனுக்கு கல்யாணம் செய்து வைத்தார் சுபலாவின் அப்பா. புகுந்த வீடு மிகவும் பழைமையான பழக்க வழக்கங்களையும், அப்போது அவற்றை செயல்படுத்தச் சொல்லும் அமைப்புக்கும் உண்மையாக இருந்த குடும்பம். அதனால் சுபலா சமையலறைக்கும், படுக்கையறைக்கும் மட்டுமே உரியவளனாள். கல்யாணமான 2ஆம் ஆண்டு சுபலாவின் கணவன் தாமீகரன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். பிறகு தான் ஆரம்பித்தது சுபலாவின் கொடுமையான காலம். கணவன் இறந்து ஒரு ஆண்டு முடிந்து நந்தனைக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கேட்டு ஊர்ச்சபையில் விண்ணப்பித்தாள் சுபலா. நந்தனும் விண்ணப்பித்திருந்தான். ஆனால் அதற்கு அனுமதி மறுத்து விட்டது ஊர்ச்சபை. பெண்ணுக்கு ஒரு முறை தான் கல்யாணம், மீண்டும் மீண்டும் கல்யாணம் செய்தால் அவள் வேசி என்று சொல்லி ஒப்புதல் அளிக்கவில்லை. சுபலா தனியே வாழ்வதாகவும், தன் கணவனின் பங்கைப் பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டாள். அதையும் மறுத்து சொத்து பிரிக்கப்படக் கூடாது, அவள் புகுந்த வீட்டில் தான் வாழ வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது ஊர்ச்சபை. வேறு வழியின்றி புகுந்த வீட்டில் வாழத் தொடங்கினாள் சுபலா.
சுபலாவின் கணவனுக்கு இரு அண்ணன்கள், ஒரு தம்பி. அவர்கள் சுபலாவை தங்கள் இச்சைக்கு இணங்க அழைக்க மறுத்தாள் சுபலா. ஆனால் அவர்கள் விடவில்லை. மூன்று ஆண்களும் சேர்ந்து அவளை வலுக்க்கட்டாயமாக பலாத்காரம் செய்தனர். இது ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல...வீட்டுப் பெண்களை கல்யாணம், அல்லது கோயில்களுக்கு அனுப்பி விட்டு இது தொடர்ந்தது. கொடுமை சகிக்க முடியாமல் சுபலாவின் மனநிலை கலங்கி அவள் பைத்தியம் பிடித்தவள் போல ஆகி விட்டாள். இந்த நிலையில் அவள் கர்ப்பம் என்று தெரிய வந்தது. தங்கள் மேல் பழி வந்து விடக் கூடாது என்பதற்காக நந்தனுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டு அதனால் உருவான கரு என்று பொய்ப்பழியைச் சுமத்தினார்கள் சுபலாவின் புகுந்த வீட்டு ஆண்கள். எதையும் மறுக்கும், அல்லது எதிர்க்கும் மனநிலையில் சுபலா இல்லை. ஒரு பொம்மை போல இருந்தாள். ஆனால் வாய் மட்டும் ஏதேதோ பிதற்றியபடி இருந்தது. பைத்தியம் பிடித்து விட்ட, நடத்தை கெட்ட பெண்ணை வீட்டில் வைத்திருக்கத் தேவையில்லை. அவர்கள் இஷ்டம் போலச் செய்யலாம் என்று ஊர்ச்சபையின் சொல்ல, சுபலா வீட்டை விட்டு விரட்டப்பட்டாள்.
நான்கு மாத கர்ப்பத்தோடு ஊரில் அருகாமையில் உள்ள காடுகளில் சுற்றி சுற்றி வந்தாள். பசி தாங்காமல் அவள் ஓலமிடும் போதெல்லாம் அவளுக்கு ஒரு வாய்ச் சோறு கொடுக்கக் கூட யாரும் இல்லை. நல்ல வேளையாக அந்தப் பகுதியில் வசித்த சில காட்டுவாசிகள் கண்களில் சுபலாவும் அவளது அவல நிலையும் பட்டது. அவர்கள் அவளது நிலையைக் கண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுக்கு வேண்டியவற்றை செய்தனர். காட்டுவாசிகளின் அன்பும், கள்ளமில்லாத தன்மையும் சுபலாவை மெல்ல மெல்ல சரியாக்கியது. 10ஆம் மாதம் உத்திரன் பிறந்தான். உத்ரம் என்றால் வடமொழியில் விடை என்று அர்த்தம். தன் வாழ்க்கையின் கேள்விக்கு விடையாக வந்தவன் என்பதால் உத்திரன் என்று பெயர் சூட்டினாள் சுபலா. மகன் வளரும் போதே அவனிடம் தான் அனுபவித்த வேதனைகளைச் சொல்லி, பெண்களுக்கு ஒரு போதும் மன வேதனையோ, உடல் வேதனையோ கொடுக்காதே மகனே! நீ யார் மகன் என்றே எனக்குத் தெரியாது. உன்னை தந்தையில்லாதவன் என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் தவறே செய்யவில்லை. அவர்கள் செய்த தவற்றுக்கு நான் தண்டனை அனுபவித்து விட்டேன். இனியும் என்னைப் போல பெண்கள் உருவாகக் கூடாது. அதற்கு நீ என்ன செய்ய வேண்டுமோ செய்" என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாள். அதனால் உத்திரன் மனதளவில் மிகவும் உறுதியானவனாக, பெண்களுக்கு யாரேனும் தவறு செய்தால் அவர்களை தட்டிக் கேட்பவனாக வளர்ந்தான். அப்போது தான் அரிஹந்தின் நட்பு கிடைத்தது. அவர்களது புனிதப் பணியில் தானும் ஈடுபடுவதாகக் கூறி இணைந்து கொண்டான்.
"இப்போது சொல்லுங்கள் கலா, சுவர்ணா! என்னை நம்பலாமா வேண்டாமா? என்று" என்றால் பேசி முடித்த உடன்.
சுவர்ணாவின் அப்பா எப்போதோ ஒரு முறை அரிஹந்திடம் இவர்களைப் பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது அவளுக்கு. உத்திரன் போல தந்தையின் பெயர் தெரியாதவனோடு பேசாதே! பழகாதே என்று அரிஹந்தை அப்பா மிகவும் கண்டித்தார். அவரது பேச்சில் பேச்சில் சுபலா, உத்திரன் என்ற பெயர்கள் அடிபட்டன. ஜேத்தாவிலிருந்து 10 கல் தொலைவில் உள்ள மீமாரி என்ற கிராமத்தில் தான் இது நடந்தது என்றும், சுபலா போன்ற பெண்கள் இருப்பதால் தான் நாடே கெட்டுப் போகிறது என்றும், காமத்தை அடக்க முடியாத பெண் என்ன பெண்? விதவை என்று கடவுள் ஆக்கி விட்டால் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து இப்படித் தவறான உறவு வைத்துக்கொள்வது அசிங்கம் என்று அப்பா உறுமிக்கொண்டிருந்தார். அப்போது உண்மை தெரியாததால் அரிஹந்தும் அம்மாவும், அந்தப் பெண்ணுக்கு மறு கல்யாணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவள் ஏன் இப்படி வழி தவறிப் போகப் போகிறாள்? என்று சொன்னதும் அதற்காக அப்பா அவர்களை தண்டித்ததும் நினைவு வந்தது. அந்த சுபலாவின் மகனா உத்திரன்? அவர்கள் வாழ்க்கையில் இத்தனை கொடூரங்களா? பாவம் அந்த அன்னை! அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? சமூகத்திலும், வீட்டிலும் அவளை வேசி என்று முத்திரை குத்தி மனநோய் பிடித்த நிலையில் வெளியில் தள்ளி இருக்கிறார்களே? நினைக்க நினைக்க மனம் வலித்தது சுவர்ணாவுக்கு. கலாவுக்கும் அதே நிலை தான். அவளும் கேள்விப்பட்டிருந்தாள்.
மௌனமாக நடந்தார்கள் மூவரும். உத்திரனை நம்பலாம் என்று உள் மனது சொல்லியது. கலாவும் சுவர்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"இப்போது உன் அம்மா எங்கே?" என்றனர் இருவரும் ஒரே குரலில்.
வானத்தை நோக்கிக் கை காட்டினான் உத்திரன்.
"என் அம்மா உடலால் அனுபவித்த வேதனை, மனதால் அனுபவித்த வேதனை இவைகள் அவளைக் கொன்று விட்டன. இறுதி வரையிலும் கூட அவளால் சாதாரண மனுஷியைப் போல வாழ முடியவில்லை. பல நாட்கள் திடீரென்று அலறுவார்கள். இது பாதுக்காப்பான இடம் தான் அம்மா என்று நம்பிக்கை கொடுத்து மெல்ல சமாதானப்படுத்துவோம். பாவம்! அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாத அவமானத்துக்கும், கொடுமைக்கும் ஆட்பட்டதால் நோய்வாய்ப்பட்டாள். அவள் இறந்து ஒரு ஆண்டாகிறது." என்றான்.
மீண்டும் மௌனமாக நடந்தனர்.
"நீங்கள் என்னை நம்ப வேண்டும் என்பதற்காக மட்டும் நான் இதைச் சொல்லவில்லை சுவர்ணா. ஒரு குடும்பத்தில், அல்லது சமூகத்தில் ஆண்கள் போடுவது மட்டும் தான் சட்டம் என்ற நிலை வந்தால் என் தாய் போல பல பெண்கள் உருவாகலாம். அதைத் தடுக்கும் பணியில் தான் நான் தீவிரமாக இறங்கி இருக்கிறேன். என் தாயின் முகத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான் என்பதால் இது போன்ற பெண்களை என்னால் அடையாளம் காண முடியும் சுவர்ணா. அவர்களை எல்லாம் கொடுமைகளில் இருந்து மீட்டு கயா, வைஷாலி போன்ற நகரங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மடங்களில் சேர்த்து விடுவேன். ஏதோ என்னால் முடிந்த உதவி. அத்தகைய மடங்களுக்கு அன்னை கவுதமியும், ஆம்ரபாலி விமலா போன்றவர்களும் பொருளுதவி செய்கிறார்கள். அதனால் தான் நான் நமது போராட்டத்துக்கும் அவர்களிடம் பொருளுதவி கேட்கச் சொன்னேன்." என்றான் உத்திரன்.
அவன் மேல் மதிப்பு உண்டானது இரு பெண்களுக்கும். பெரிய பெரிய போர்கள் செய்யவில்லை, போராட்டம் நடத்தவில்லை. ஆனால் தன்னால் ஆன உதவியாக தவிக்கும் உயிர்களை மீட்டு மறு வாழ்வு கொடுக்கிறானே? பாராட்டப்பட வேண்டியவன் தான் என்று நினைத்துக் கொண்டாள். இவனை நம்பலாம் என்ற எண்ணம் வலுப்பட்டது.
கலாவும் ஒப்புதல் தர, மூவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர். தங்கள் திட்டத்தை, தாங்கள் செய்ய நினைக்கும் காரியத்தை மெல்லிய குரலில் சுவர்ணாவும், கலாவும் சொல்லி முடித்தனர். அவர்கள் பேசும் வரை அமைதியாக இருந்தவன் சில திருத்தங்களைக் கூற அவர்களும் கலந்தாலோசித்து விட்டு ஒப்புக்கொண்டனர். மீண்டும் பயணம் தொடங்கியது. வயிற்றில் பசி இருந்தாலும் மூவரின் மனதும் செய்யப் போகும் வேலையிலேயே இருந்தது. அதை தங்கள் உயிரைக் கொடுத்தாவது செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டனர்.
சுவர்ணா, கலா, உத்திரன் மூவரும் பசியோடும் தாகத்தோடும் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் ஆம்ரபாலியின் மாளிகையில் உண்ண முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர் கோமதியும் மற்றவர்களும்.