Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,541
மதுரை மத்திய சிறைச்சாலை, கருப்பு நிற ஸ்கார்ப்பியோ, புது மாடல் ஜீப், மற்றொரு டாடா சுமோ என வாகனங்கள் சீறிக் கொண்டு வந்து வாசலில் நிற்க, அதிலிருந்து வெள்ளை வேட்டி, கதர் சட்டை, அரைகிலோ நகையைக் கழுத்து, கைகளில் அணிந்து கொண்டு, குங்குமம் கூலிங்கிளாஸ் சகிதமாய், தெனாவெட்டான பார்வையோடு நாற்பத்தைந்து மதிக்கத் தக்க எமகாதகன் ராஜதுரை இறங்கினான். ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, லேவாதேவி என பண விவகாரம் தான் தொழில்.
இன்று, அவனது அண்ணன், மூன்று கொலைகள் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையை, அனுபவித்து ஜெயிலில் நன்னடத்தை காரணமாக இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பின் வெளியே வருகிறான். நடுவே, அப்பா இறந்ததற்கு பரோலில் கூட வரவில்லை. தன்னை எப்போதாவது பார்க்க வரும் தம்பிகளோடு வெளியுலக தொடர்பை முடித்துக் கொண்டவன், இன்று விடுதலையாகி வெளியே வருகிறான்.
ரங்கதுரை, ஐம்பதைக் கடந்த வயது, வெள்ளை, கருப்பு, கலந்த கலவையாக,பெப்பர் ஸ்ப்ரேயாக சிகையும், தாடியும் இருக்க, அடர்ந்த சுழித்த புருவங்கள், இடுங்கிய கண்கள், அழுத்தமானதாக உலகை வெறுத்த முகமாகவே இருந்தது. அவனைப் பார்க்கவும், தெனாவெட்டாகத் திரியும் ராஜதுரையே, கண் கலங்கி, அதை மறைத்து, குரல் கம்ம, “வா அண்ணேன்!“ எனக் கட்டிக் கொண்டான்.
தம்பியின் அன்பில் நெகிழ்ந்த அண்ணன், செருமி குரலைச் சீர்படுத்திக் கொண்டு, “நான் தான் இப்படி இருக்கேண்டா, நீயும் ஏண்டா. மனசுக்கு பிடிச்சவளா கட்டி செட்டிலாயிருக்க வேண்டியது தானே?" என வினவ, “நமக்கெல்லாம் எவேண்ணே பொண்ணு குடுப்பான், நமக்கு வாரிசா தான் ராமு அண்ணன் பசங்க இருக்கானுங்கள்ல, விடுங்க.” எனத் தேற்ற,
“மதனி, நம்மளை சேர்த்திட்டு தான் அடுத்த வேலை பார்க்கும். சரி விடு.” எனவும், “இந்தாங்க அண்ணேன், இது செல்போன். இந்த வண்டி உங்களுக்காக எடுத்தது.” என புது மாடல் ஜீப்பைக் காட்ட, “இதெல்லாம் அந்த காலம்டா, வயசான கிழவனுக்கு எதுக்கு?” என்றவன், அதில் ஏறி அமர்ந்து கொள்ள, உசிலம்பட்டியை நோக்கி ஜீப் சென்றது.
“பரவாயில்லைடா, குடும்பம் தான் இல்லை, ஆளும் பேரையும் சேர்த்து வச்சிருக்க. உனக்காக எதுவும் செய்வாய்ங்கலா, இல்லை கூலிக்கு மாரடிக்கிறவைங்களா?“ என வினவ, “ரெண்டும் கலந்து இருப்பானுங்க. நான் ஒருத்தன்கிட்டயும் பீலிங்ஸ் வச்சுக்கிறதில்லை.” என்றான்.
“பாண்டிக் குடும்பம் எப்படி இருக்காய்ங்க?" எனவும், “நீதான் அவைங்களை நினைச்சுக்கே இருப்ப, உன் கூட்டாளி துரை அண்ணன் கூட, உன்னை விசாரிக்காது.” என குறை பட்டபடி, போனை நீட்டி , “அவைங்க குடும்ப போட்டோவே இருக்கு.” என விவரம் சொல்ல,
ரங்க துரை ஒவ்வொருவர் போட்டோவாக பார்த்தான்.
“நீ தான் சாதிமானா, அதை பிடிச்சுக்கே இருக்க, ராஜபாண்டி அண்ணன் மகன் தங்கத்தை பாரு, அய்யருட்டு பொம்பளையை கட்டியிருக்கான். பாண்டி குடும்பமும், பைசாபவருண்டு, பத்து வருசத்துக்கு முன்னாடியே மாறிட்டாய்ங்கே. கலப்பு கல்யாணத்தை ஜாம், ஜாம்னு நடத்துனாய்ங்க.“ என இருபது வருட கதையையும் அண்ணனுக்குச் சொல்லிக் கொண்டு வர, அவனும் அமைதியாகவே கேட்டு வந்தான்.
இன்னும் ரங்கதுரைக்கு தேவையான செய்தி வரவில்லை. முத்துப்பாண்டி, ஐஸ்வர்யா, கொக்குளம் சம்பந்தம் வரை சொன்னவன், இளக்காரமாகச் சிரிப்போடு, “ஆனாலும் பாண்டியம்மா அத்தை, இன்னைக்கும் டெரர் தான். செல்வமணி, மருமகளை அன்பு மகனுக்கு கட்டி வைக்கலாம்னு திட்டத்தைப் போட, சாதி கெட்டவளைக் கட்ட, எம்பேரன் தான் இளிச்சவாயாண்டு கேட்டுருச்சு.” எனக் கதை சொல்லி, மீனாவின் படத்தைக் காட்ட
“இது செல்லக்குட்டி மகளா?” என ஆர்வமாகக் கேட்டான் ரங்கதுரை.
ராஜதுரைக்கு கோபம் பலியாக வந்தது, “இன்னும் என்ன செல்லக்குட்டி, அந்த பொம்பளையால தான், நீ இந்த கதியிலிருக்க, அதை நியாபகம் வச்சுக்க. அந்த ரெண்டு அவு **** களும் ஒழுக்கமா இருத்திருந்தாளுங்கண்டா, நம்ம குடும்பமும், பாண்டி குடும்பம் மாதிரி செல்வாக்கா வாழ்ந்திருப்போம்.” என வாயை விட, “வண்டியை நிறுத்து, நான் இறங்கிக்கிறேன். என்னை பார்க்க, பார்க்க உனக்கு கோபம் தான் அதிகமா வரும்.” என ரங்கதுரை சொல்லவும், “இல்லைண்ணேன், இனிமே ஒரு வார்த்தை பேசலை வா.” என அழைத்துச் சென்றான்.
செல்வமணியின் வீடு, முதல் நாள் தும்மலான்பட்டி சென்று வந்த மீனா, அதை பற்றிய நினைவிலேயே உழன்றாள். நேற்று, காரில் சென்று இறங்கும் போது, அந்த ஓட்டு வீட்டில், கயிற்றுக்கட்டிலில் கிழிந்த நாராக படுத்திருந்தார், அம்மாசி கிழவன், அவன் மனைவி அங்கம்மாள் அருகிலிருந்து கஞ்சியை கொஞ்சம் கொஞ்சமாக புகட்டிக் கொண்டிருந்தார்.
இவளை பார்க்கவும் அந்த தள்ளாத நிலையிலும் அவசரமாக எழ முயற்சிக்க, சந்தனம் வந்து, தன் தாத்தாவை தூக்கி உதவினான். இவளுக்கு பார்க்கவும் மனதை வருத்தியது, “படுத்தே இருங்க.” என பதறியபடி முன்னேறினாள்.
கஞ்சி போட்ட காட்டன் சேலை, கழுத்தில் அமெரிக்கையாய் சின்ன செயின், ஒரு கையில் தங்க வளையல், மற்றொன்றில் சில்வர் கோட்டட் வாட்ச், ஒரு பை சகிதம் இறங்கினாள் .
அங்கம்மாள், “ஆத்தா மீனாட்சி, வா ஆத்தா, உன்னை பார்க்கனுமுனு தான் துடியா துடிச்சாரு.” என தன் கணவரின் அருகில் அழைத்துச் செல்ல, கார் ட்ரைவர், அவளது மெடிக்கல் கிட்டை கொண்டு வந்து வைத்து விட்டு, நேரமாகுமா என கேட்க, தான் கொண்டு போய் விடுவதாக சந்தனம் காரை அனுப்பப் சொன்னான். வரும் போதே, சக்தி பிரியன் பேசி விட்டதால், “நீங்க போங்க, என்னை பிக் அப் பண்ண ஆள் வரும்.” என அனுப்பி விட்டாள்.
தன மெடிக்கல் கிட்டை எடுத்து, தாத்தாவைப் பரிசோதித்தவள், மருத்துவராக அறிவுரைகளைச் சொல்லி, “சத்து ஊசி போடுறேன். எந்திரிச்சு உட்கார்ந்துருவீங்க.” என நம்பிக்கை தர,
“ஆத்தா, மகராசி, நீ வந்து என்னை தொட்டு வைத்தியம் பண்ணியே, இதிலையே என் கட்டை கைலாசம் போயிடும். உன் அப்பன் இருந்திருக்கணும் பூரிச்சு போயிருப்பான்.” என அவர் கண் கலங்க,
“இந்தா சும்மா இரு, பச்ச புள்ளை மனசைக் கெடுத்து விடாதே, அது இருக்கிற இடத்திலையாவது நிம்மதியா இருக்கட்டும்.” என்ற அங்கம்மாள், “என்ன ஒன்னு என் மவன், கபிலன் பெயரை சொல்ல நீ ஒருத்தி இருக்கியே, அதை நினைச்சு மனசை தேத்திக்கிறோம்.” என ஆசுவாசப் பட
“நீ தான் அம்மாச்சி மெச்சிக்கணும், நம்ம மாமா பெயர், டாக்டரம்மா இன்ஷியல்ல கூட கிடையாது. செல்லமுத்து மீனாட்சி தான் அவுக.” என சந்தனம் இடைச் சொருக,
அவனை முறைத்த மீனாட்சி, “உன் மாமன், முறையா கல்யாணம் பண்ணி, எங்க அம்மாச்சி வீட்டுக்கு விருந்துக்கு வந்துட்டு போனார் பாரு. எனக்கு இன்சியல் கொடுக்க. என் அம்மாச்சியும், மாமாவையும் குறைச்சலா பேசின, இந்த பக்கமே திரும்ப மாட்டேன்.” என அவள் கோபமாகப் பேசவும், “இல்லத்தா , இல்லை, இல்லை.” எனப் பெரியவர்கள் சமாதானம் செய்தனர்.
“நாளைக்கு காலையில், பதினோரு மணி போல, நான் வேலை பார்க்கிற ஆஸ்பத்திரிக்கு, கூட்டிட்டு வாங்க, புல் செக்கப் பண்ணிடுவோம்.” என்றவள், காசை பற்றி கவலைப் பட வேண்டாம் என்றவள், தன் கைப்பையிலிருந்து பணத்தையும் எடுத்துக் கொடுக்க, அவர்கள் வாங்க மறுத்தனர்.
“உங்க மகன் கொடுத்தா, வேண்டாம்னு சொல்லிடுவிங்களா, வாங்கிங்கங்க. உங்களைப் பார்க்கிற கடமையும் எனக்கு இருக்கு.” என வலுக் கட்டாயமாக் கொடுத்தாள் .
இவள் பேசி முடிக்கும் போதே, சக்தி பிரியன் வந்து விட்டான். வேறு எதுவும் பேசாமல் அவளுக்காகக் காத்து நிற்க, அங்கம்மாளுக்குத் தான், அது யாரோ, என்னவோ, பேத்தி வந்து போனதைச் சொல்லிக் கொடுத்து விடுவார்களோ என்ற பயம்.
மீனா அவனைக் கண்டு கொள்ளாமல் விடை பெற, சந்தனம் வேண்டுமென்றே தன் வண்டியைக் கொண்டு வந்து அவளுக்கு முன் நிறுத்தினான். சக்திக்கு அங்கு கோபம் கொப்பளித்தது, ஆனாலும் இவள் என்ன செய்கிறாள் பார்ப்போம் என நிற்க, மீனா சந்தனத்தை ஓர் முறை முறைத்தவள், விடு விடுவென வந்து சக்தியின் வண்டியில் ஏற, அங்கம்மாள், அவள் மெடிக்கல் கிட்டை தர, சக்தி வாங்கி முன்னே வைத்துக் கொண்டான்.
அவர் பார்வையை உணர்ந்து, “கவலை படாதீங்க, உங்க பேத்திக்குச் சேவகம் பார்க்கிறது தான் என் வேலை. நான் பார்த்துக்கறேன்.” என சமாதானம் சொல்ல, சந்தனத்துக்குத் தான் எரிச்சல். மீனா அதற்கு மேல், “இப்போ கிளம்புவியா, இல்லை இன்னும் பேச வேண்டியது பாக்கி இருக்கா?” எனச் சொல்லால் சுட, சக்தி வண்டியை முறுக்கினான்.
அவன் வேகத்தில், இவள் அவன் மீதே மோத, அவனை இறுக்கிப் பற்றியவள், “ஒழுங்கா ஓட்டு, இல்லையிண்டா குதிச்சுருவேன் பார்த்துக்க.” என சீற,
“மெல்ல போனா, வேகமா போ'ண்டு சொல்றவ, வேகமா போனா, மெல்ல போ'ண்டு சொல்றவ, நான் என்ன நீ வச்ச ஆளா?” வேண்டுமென்றே அவன் இடக்குப் பேச,
“நீதான், கொஞ்சம் முன்ன அப்படிச் சொன்னவன்.” என்றவள். ஒரு நிமிஷம் நிறுத்து என அவசரமாகச் சொல்லவும், என்னமோ ஏதோ என அவன் நிறுத்திய இடம், சரியாக துரை இல்லம் முன்பு.
“மீனு குட்டி, அவசரத்துக்கு ஒதுங்கனும்னாலும், அங்குட்டு போவோம்டி, இவய்ங்கே வில்லங்கமானவய்ங்க.“ என பேச அவனை முறைத்தவள்.
“நீ தானே, நான் வச்ச ஆளாண்டு கேட்ட, நான் அந்த டெரர் பீஸையே லிப்ட் கேட்டு போயிக்கிறேன்.” என அப்போது தான் வெளியே வந்த ராஜதுரையை பார்த்து சொல்ல,
“அடியே, அந்தாளு யாருன்னு தெரியாத, என்னத்தையாவது செய்யாதே.” எனப் பதட்டத்தில் வண்டியை அவள் பின்னே உருட்டி வர, ராஜதுரை பார்வையில் இவர்கள் பட்டனர். அவனுக்கு இவர்களை அடையாளம் தெரிந்தது.
“அங்க என்ன சத்தம், அடேய் யார் நீயி? என்ன அந்த புள்ளையை விரட்டிக்கிட்டு இருக்கவன்.” என அவன் சத்தம் கொடுக்க, மீனா ஓர் நமட்டு சிரிப்போடு, சக்தியோடு விளையாடும் நோக்கில், “ஆமாம் சார், என்னை கடத்திட்டு வரான்.” எனச் சொல்ல,
“பார்த்தா அப்படி தெரியலையே, அந்த பயல தான் நீ கடத்துற மாதிரி தெரியுது. டேய் நீ அந்த மளிகை கடை, கொக்குளத்துக் காரன்தானே?” என வினவ,
‘அட பாவி, இவனுக்கு நம்மளை அடையாளம் தெரியாதுன்னு நினைச்சா, ஜாதகம் முதற்கொண்டு வச்சிருப்பான் போல!’ என மனதில் புலம்பியவன்,
“ஆமாண்ணேன், இது நான் கட்டிக்க போற புள்ளை. சின்ன சண்டை, வேனுமுண்டே கோர்த்து விடுது.” என அவள் கையை பற்றிக் கொண்டு, “வரோம் அண்ணேன்.“ என மீனாவை கடத்த, “அடேய் முறை தெரியாதவனா இருக்க, உனக்கு நான் மாமண்டா.“ என்றான் ராஜதுரை .
“ரொம்ப முக்கியம். இருக்கிற மாமனெல்லாம் பத்தாது.“ என மீனாவை கடத்திக் கொண்டு பறந்தவன், வழி நெடுக அவளை அர்ச்சனை செய்து கொண்டே வர, “நல்ல ரோடு, ஜிலு ஜிலுண்டு காத்து, மெதக்குற மாதிரி இருக்கு, பின்னாடி செமையா ஒரு பொண்ணு, என்ஜாய் பண்ணுவியா, அதை விட்டுட்டு சும்மா லொட லொடங்கிற.“ என அவள் திட்டவும்,
“இருடி உன்னை ஒரு வழி ஆக்குறேன்.” என இல்லாத மேடு பள்ளத்தில் தேடி ஏற்றி இறக்க, மீனா சக்தியோடு ஐக்கியமானாள்.
இன்று அம்மாசி கிழவனை மருத்துவ மனைக்கு அழைத்து வரச் சொல்லி இருப்பதால், சற்று முன்னதாகவே, தனது ஸ்கூட்டியில் கிளம்ப, செல்வமணி, “மீனா, அத்தை சொல்லியிருப்பாளே கொஞ்ச நாளைக்கு உன் வண்டியில் போக வேண்டாம், நானே கூட்டிட்டு போறேன்.”எனச் சொல்ல,
“ஏன் மாமா எப்பவும் அம்மாச்சி சொல்லுமே, அது மாதிரி என மேல நம்பிக்கை இல்லையா. நான் என் அம்மாவை மாதிரி போகமாட்டேன் மாமா.” என அவள் கண் கலங்க, செல்வத்துக்கு விதிர் விதிர்த்துப் போனது.
“மீனாகுட்டி, நான் உன்னை அப்படியே நினைக்கலை டா, வேற எதுவும் ஆபத்து வருமோண்டு தான் சொன்னேன்.” என மருமகள் தலையில் கையை வைத்து வாஞ்சையாய் தடவிக் கொடுக்க,
“எனக்கு அப்பா, அம்மாண்டு கற்பனையில் கூட, நீயும் அத்தையும் தான் மாமா வருவீங்க, நீங்க வளர்த்த புள்ளை அப்படி போக மாட்டேன் மாமா.” என சொல்லி அழ, “குயிலு, இந்த மீனாகுட்டி என்னா சொல்லுது பாருடி.” என மருமகளை கட்டிக்க கொண்டு அவனும் அழுதான்.
“அடியேய், சும்மாவே உன் மாமன் நொந்து கிடகேண்டு பூஸ்டுல வருது, நீ வேற ஏத்தி விடாதே. அப்புறம் பூஸ்ட் வீட்டுக்கே வந்துடும்.” என சூழலை இலகுவாக்க பூங்குயில் சொல்ல,
“ஏண்டி, எங்களை எமோஷனலா பீல் பண்ணவாவது விடுறியாடி. அதுக்குள்ள, அதுகிட்ட போட்டு கொடுக்குற.” என செல்வம் சோக கீதம் வாசிக்கவும், மாமனின் கண் இமையை இழுத்து, நாடி பிடித்து பார்த்து, முழு மருத்துவராகியிருந்த மீனா, “ஏன் மாமா இப்படி பண்ற, குடும்பம் நடத்தினா செல்வமணி மாதிரி நடத்தணும்னு நாலு பேர் புகழ்ந்து சொல்லனும். இனிமே இதுமாதிரி செஞ்செண்டு வையி, அப்புறம் இருக்கு உனக்கு!" என அவள் மிரட்ட.
“ஏண்டி, நீ ஒருத்தி பாத்ததுண்டு மகளிரணி மொத்தத்தையும் என் பக்கம் திருப்பி விடுறியா?” என செல்வம் பூவிடம் சண்டையிட, “என்கிட்டே பேசு மாமா!" என மீனா வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
இதில் நேரம் ஓடிக் கொண்டிருக்க, யாரை வாழ்க்கையில் பார்க்கவே கூடாது எனச் செல்வம் சங்கல்பம் எடுத்தானோ அவன், சிறையிலிருந்து நேராக, தன் வீட்டுக்குக் கூட செல்லாமல் செல்வமணி வீட்டுக்குத் தான் வந்தான்.
என்ன ஆகும் பொறுத்திருந்து பார்ப்போம்.