My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மனதில் மலர்ந்த மல்லிகை - 29

IVNP20

Member
Joined
Mar 22, 2025
Messages
32

அத்தியாயம் 29

சிறிது நேர ஓய்விற்குப் பிறகு கதிர்வேலும் மாறனும் மதிய உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். இருந்தாலும் கதிர்வேலை அந்த ஊருக்கு திரும்பவும் அனுப்புவதற்கு மணிமேகலைக்கு வருத்தமாகத்தான் இருந்தது.

அந்த பயம் அவள் முகத்தில் தெளிவாக தெரிய, லேசாக தோளுடன் அணைத்து "அத்தை, எதை நினைத்தும் கலங்காதீர்கள். எப்படி நாங்கள் போகிறோமா! அப்படியே பத்திரமாக வருவோம், சரியா?" என்று மென்மையாக கூறினான் மாறன்.

"இருவரும் பத்திரமாக வந்து விடுவீர்கள் என்று அறிவுக்கு தெரிகிறது மாறா, ஆனால் மனதிற்கு ஏதோ ஒரு விதம் பயம் இருந்து கொண்டே இருக்கிறது. இத்தனை வருடங்கள் அங்கே பயத்துடனே வாழ்ந்தேன் அல்லவா? அது குறைய கொஞ்ச நாட்கள் ஆகத்தான் செய்யும்!" என்று லேசாக வேதனையாக புன்னகைத்தார்.

அவளின் கூற்றில் மரகதம் கண்கள் கலங்கிவிட தன் தோழியை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். "எதை நினைத்தும் வருந்தாதே மணி எல்லாம் சரியாகிவிடும்" என்றார்.

"அம்மா, அத்தையையும் மல்லிகாவையும் பத்திரமா பாத்துக்கோங்க" என்று மல்லிகா என்று சொல்லும் பொழுது சிறிது அழுத்தத்தையும் சேர்த்துக் கொடுத்தான்.

தன் தந்தையும் அத்தானும் எங்கோ கிளம்புவதைக் கண்டு தன்னையும் அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று நினைத்த மகிழன் அவர்களையே துருதுருவென்று பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனின் பார்வையிலேயே அதை உணர்ந்த மாறன் "குட்டி மச்சான் நீ இங்க பத்திரமா அம்மாவையும் அக்காவையும் பார்த்துக்கோ. நாங்க போய் ஒரு வேலை இருக்கு அதை முடிச்சுட்டு வருகிறோம், சரியா?" என்றான்.

தனக்கு பொறுப்பு கொடுத்ததும் மகிழ்ந்த மகிழன் சரி என்று புன்னகையாக தலையசைத்தான்.

"கவனமா பார்த்து போயிட்டு வாங்க" என்று பொதுவாக கூறிய சாமிக்கண்ணு "அவன் திரும்ப வெளியே வராதபடிக்கு செய்து விடுப்பா" என்று கதிர்வேலை பார்த்தார். அவனும் சரி என்று தலையசைத்து மாறனுடன் கிளம்பினான்.

"இன்று தானே வந்தார்கள்? அதற்குள் ஏன் மீண்டும் செல்கிறார்கள்?" என்று கேட்ட ஊர் மக்களுக்கு
"சில வேலைகளை முடிக்க வேண்டியது இருக்கிறது, அதை முடித்துவிட்டு பத்திரமாக வருவார்கள்" என்றார் மணிவண்ணன்.

மறுநாள் காலையில் அவர்கள் குவாரிக்கு செல்லும் பொழுது அந்த இடமே பரபரப்பாக இருந்தது. பத்திரிகைக்காரர்களும் காவல்துறையினரும் நிரம்பி வழிந்தனர். எப்படியாவது குடிசைவாசிகளிடமிருந்து செய்திகள் சேகரித்து விடலாம் என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களை கட்டுப்படுத்துவது காவல்துறைக்கு பெரிய வேலையாக இருந்தது.
மாறனும் கதிர்வேலும் வந்ததும், கதிர்வேலைக் கண்டு சீனு வேகமாக அவனிடம் ஓடி வந்தான்.

"என்ன சார்? அதுக்குள்ளே வந்துட்டீங்க? ஒரு வாரம் கழிச்சு வருவீங்க என்று எதிர்பார்த்தேன்!" என்றான்.

"உங்களையெல்லாம் இங்கே அப்படியே விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி அங்கே போய் சந்தோஷமாக இருக்க முடியுமா? எல்லோருமே இந்த இடத்தை விட்டு அவரவர் சொந்த இடத்திற்கு சென்றால்தான் என்னால் நிம்மதியாக இருக்க முடியும்? என்று கூறினார் கதிர்வேல்.

ஐஜிக்கு போன் செய்த மாறன், என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டு முதல் முறையாக பத்திரிக்கையாளர்கள் முன் பேட்டி கொடுக்க தயாராக சென்றான். அவனின் ஒரு புறம் மோகன் செல்ல மறுபுறம் திருநாவுக்கரசு நின்றான்.

பத்திரிக்கையாளர்கள் முன் நின்ற மாறன், "என் பெயர் மாறன். நான் மங்களாபுரத்தை சேர்ந்தவன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"நீங்கள் தான் கல்லாடன் மீது புகார் கொடுத்தவரா? உங்களுக்கும் கல்லாடனுக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது பகை இருக்கிறதா?" என்று பல கேள்விகள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிளம்பியது.

"இப்படி ஆளாளுக்கு பேசினீர்கள் என்றால், என்னால் பதில் சொல்ல முடியாது" என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு "நான் சொல்வதை எல்லாம் சொல்லி விடுகிறேன். அதன் பிறகு நீங்கள் கேள்வி கேளுங்கள்" என்று சொல்லிவிட்டு, கல்லாடனை பற்றிய உண்மைகள் அனைத்தையுமே ஒவ்வொன்றாக கூறினான்.

அவன் கூற கூற அங்கிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இப்படிப்பட்டவனையா இத்தனை நாள் ஊருக்குள் நடமாட விட்டோம் என்று. "கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது, ஆள் கடத்தல், பல பெண்களை சீரழித்தல் மட்டுமல்லாமல் இதுவரை ஐந்து கொலைகளையும் செய்திருக்கிறான்" என்று அனைத்தும் கூறி, அதற்குறிய சாட்சியங்கள் ஒவ்வொன்றையும் எடுத்து காண்பித்தான்.

அங்கிருந்த கல்லாடனின் அடியாட்கள் சிலருக்கு கூட, இது புதுச் செய்தியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சரியில்லாதவன் தான் என்பது அவனது ஆட்கள் எல்லோருக்குமே தெரியுமே தவிர, கொலைகள் செய்திருப்பது இதுவரை அவர்கள் யாருக்குமே தெரியவில்லை.

அவர்கள் இது எல்லாம் கட்டுக்கதை என்று கோஷமிட, கல்லாடனை பற்றி அனைத்தும் அறிந்த தயாளன் போலீஸ் அடியில் அனைத்து உண்மையையும் கூறிவிட்டான் என்றார் காவல்துறை அதிகாரி.

பத்திரிக்கையாளர் முன் கூறிய அனைத்தையுமே காவல்துறையினருக்கும் சமர்ப்பித்த மாறன், "தன் மாமா, எந்த நேரத்திலும் என்றைக்கு என்றாலும் வந்து சாட்சி கூறுவார். அது மட்டும் அல்ல. குவாரியில் நடந்தவற்றையெல்லாம் கூறுவார்" என்றான்.

அதுபோல பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கும் நஷ்ட ஈடாக அவர்களுக்கு தேவையான பணத்தை வாங்கிக் கொடுக்கும்படி காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டான்.

கல்லாடனின் வீட்டின் முன் ஊர் மக்கள் கூடி நின்று, குவாரியில் வேலை பார்த்தவர்களுக்காக போராட தொடங்கினர். அவனது தந்தைக்கும் அக்காவிற்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அவர்களது வக்கீலை கேட்கும் பொழுது, கல்லாடன் செய்த அனைத்து குற்றங்களுக்கும் உரிய சாட்சிகளையும் கோர்ட்டில் சமர்ப்பித்து விட்டார்கள். அவரக்கு ஜாமீன் கிடைப்பது கூட கடினம் தான்" என்றார். பின்னர்"பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்தால் ஓரளவு தண்டனையில் இருந்தாவது தப்பிக்க முடியும்" என்று ஆலோசனையும் கூறினார்.

அவனது தந்தைக்கும் வேறு வழியும் இல்லை.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், இத்தனை வருடங்கள் வேலை பார்த்ததற்கான கூலி மற்றும் அவர்களை கஷ்டப்படுத்தியதற்கு என்று ஒரு நல்ல தொகையை அனைவருக்குமே வழங்கினார்.

அதை பெற்றுக்கொள்ளும்படி கூறினான் கதிர்வேல். இப்பணத்தை வைத்து உங்கள் ஊருக்குச் சென்று ஏதாவது தொழில் செய்து வாழுங்கள் என்று ஒவ்வொருவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தான். சீனுவும் அவன் மனைவியும் தங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கதிர்வேலிடம் பிரியா விடை பெற்று சென்றார்கள்.

அங்கிருந்த அனைவருக்கும் தேவையான உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர் மாறனும் கதிர்வேலும்.

அவர்கள் அனைவரும் பத்திரமாக அங்கிருந்து கிளம்பிய பிறகு மோகனின் தந்தையிடம் "அங்கிள், நீங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து கல்லாடன் இனி வெளியில் வர முடியாது என்று நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அவனது குவாரியை கவனித்துக் கொள்ளுங்கள்" என்றான்.

"பொறுப்பான மகனாக நீங்கள் மோகனை வளர்த்திருக்கிறீர்கள். அவனிடம் உங்களின் நல்ல குணமும் தெரிகிறது. இங்கு இனிமேல் நிச்சயம் இதுபோல் நடக்காது என்று நம்புகிறேன். எதற்கும் நீங்கள் கவனமாக இருங்கள். இவ்வளவு செய்திருக்கிறான் என்றால் நிச்சயம் எதிரிகளும் நிறைய இருப்பார்கள். அவர்களால் உங்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்து விடாமல் கவனமாக இருங்கள். அவன் செய்த தவறுகளை எல்லாம் சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள்" என்று அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிவிட்டு தன் மாமாவுடன் தங்களது ஊருக்கு கிளம்பினான் மாறன்.

அங்கிருந்த பத்து நாட்களும் மருமகனின் செயல்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருந்த கதிர்வேலுக்கு, மாறனை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அதை மறைக்காமல் அவனை அணைத்து பாராட்டினார்.
"மணிவண்ணன் உன்னை நல்ல விதமாக வளர்த்திருக்கிறான் மாப்பிள்ளை" என்று.

"என்னைச் சுற்றி உங்களைப் போல் எல்லோரும் நல்லவராக இருக்கும் பொழுது, நானும் உங்களை போல தானே மாமா இருப்பேன்" என்று கூறியதை கேட்டு மேலும் நெகழ்ச்சி அடைந்தான் கதிர்வேல்.

- தொடரும்..
 
அருமை
 
Back
Top