My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

கண்ணும் கண்ணும் உறவாட! 28 (நிறைவுப் பகுதி)

IVNP24

Active member
Joined
Mar 24, 2025
Messages
79
அத்தியாயம் 28 (நிறைவுப் பகுதி)

அலுவலகம் முடிந்து இருந்த களைப்பை எல்லாம் தலையை உலுக்கி உதறிக் கொண்டு உற்சாகமாய் வீட்டிற்குள் நுழைந்தான் பரத்.

“ஸ்ருதி எங்க ம்மா?” பரத் அன்னையிடம் கேட்க,

“ஸ்ரீமதியோட பின்னாடி தோட்டத்துல இருக்கா பரத். ரொம்ப நேரமா உன் பொண்ணு அழுகை. போய் பாரு!” என்றதும் சிரித்தவன் அறைக்கு சென்று சிறியதாய் குளியலை முடித்துக் கொண்டு பின்பாக்க சென்றான்.

ஆறு மாத குழந்தையை தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டு ஸ்ருதி நடக்க, அங்கிருந்த செடி கொடகளை கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னை தோளில் இருந்த ஸ்ரீமதி.

“அப்பா வந்தாச்சு!” என்ற குரலுக்கே அப்படி புன்னகைத்து திரும்பி இருந்தது குழந்தை.

“வந்துட்டீங்களா? ஹப்பா! என் டர்ன் ஓவர். பிடிங்க!” என அவன் கைகளில் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல ஸ்ருதி முயல,

“நில்லு ஸ்ருதி! எங்க போற?” என்றவன் தன் முகத்தில் கைவைத்து சிரித்து தன்னை தேடியதை அதன் பாஷையில் கொஞ்சும் குழந்தையுடன் ரசித்து விளையாடினான்.

“எவ்ளோ சேட்டை தெரியுமா? வீட்டுக்குள்ள இருக்கவே கூடாதாம். இங்க இருந்தா தான் அழாம இருக்கா!” என குறையாய் ஸ்ருதி சிரிக்கும் குழந்தை கன்னம் கிள்ளி சொல்ல,

“அப்படியா? வா பார்ப்போம்?” என உள்ளே அழைத்து வந்து சோஃபாவில் மகளுடன் அவன் அமர, அவனோடு விளையாட கைகளையும் காலையும் ஆட்டியது குழந்தை.

“பார்த்தியா சேட்டைய? இவ்வளவு நேரமும் இவளை உக்காரவே விடலை இவ. இப்ப சிரிப்பை பாரு!” என்றார் ராஜேஸ்வரியும்.

“அப்பா மாதிரியே புள்ளைக்கும் என்னை பொம்மை மாதிரி டீஸ் பண்ணிகிட்டே இருக்கனும்!” என்று சொல்லி ஸ்ருதி அவனுக்கான காபியை கொண்டு வந்து வைத்தாள்.

“அம்மா அப்பாக்காக சேர்வ் பன்றாங்க டா அம்மு!” என குழந்தையிடம் சொல்லி பரத் ஸ்ருதியைப் பார்த்து கண்ணடிக்க,

அதே நேரம் காலிங் பெல் சத்தம் கேட்கவும் மூவருமாய் வாசல் பக்கம் பார்க்க, வந்து நின்றிருந்தாள் ப்ரியா.

“க்கா!” என்ற ஸ்ருதி அதிர்ந்தவள் தயங்கி திரும்பி திரும்பி கணவனைப் பார்க்க, அவனும் ஸ்ருதியை தான் அப்பொழுது பார்த்தான்.

ப்ரியாவுடன் வேலனும் வெளியே நின்றிருந்தார்.

“உள்ள வாங்க!” என மகனை நினைத்தாலும் வாசலில் நிற்க வைக்க முடியாதே என அழைத்து விட்டார் ராஜேஸ்வரி.

“எப்படி இருக்க ஸ்ருதி?” என்ற ப்ரியாவை பார்த்து நின்ற ஸ்ருதி இன்னும் பேசவில்லை.

“ஸ்ருதி உன்கிட்ட தான் கேட்குறாங்க!” ராஜேஸ்வரி சொல்ல,

“ம்ம் நல்லாருக்கேன் க்கா!” என்றவள் மீண்டும் கணவனைக் கண்டாள்.

“ஓகே பேசிட்டு இருங்க!” என சொல்லிவிட்டு குழந்தையை ஸ்ருதி கைகளில் கொடுத்துவிட்டு மேலே சென்றுவிட்டான் பரத்.

ஒரு வார்த்தை வந்தவர்களிடம் பேசவில்லை என்பதைவிட, அமைதியாய் செல்கிறானே என தான் ஆச்சர்யமாய் கண்டார் ராஜேஸ்வரி.

இவள் சென்றதால் தானே அவ்வளவு பேசி கிட்டத்தட்ட மிரட்டி ஸ்ருதியை கொண்டுவர வைத்திருந்தான் என வேலனுமே மிரண்டு தான் வந்திருந்தார் அவன் என்ன சொல்வானோ என.

ப்ரியா தான் விடாப்பிடியாய் அழைத்து வந்தது.

“உக்காருங்க க்கா!” என்ற ஸ்ருதி பார்வை அவ்வபோது மாடிக்கு சென்று வந்தது.

அலுவலகம் சென்று வந்து இத்தனை நாட்களில் தனியே அறைக்குள் என அவன் அடைந்ததே இல்லை. குழந்தையுடன் முழுக்க முழுக்க விளையாடி அவளைப் பற்றி ஸ்ருதி அன்னையிடம் பேசி என தூங்க செல்லும் வரை இங்கேயே அவர்களுடனே தான் அமர்ந்திருப்பான்.

“நெக்ஸ்ட் வீக் எனக்கு மேரேஜ் ஸ்ருதி! அதான் உன்னை இன்வைட் பண்ணிட்டு போக வந்தேன்!” என்ற ப்ரியாவை ஆச்சார்யமாய் தான் கண்டாள் ஸ்ருதி.

“நான் காபி கொண்டு வர்றேன்!” ராஜேஸ்வரி சொல்ல,

“இல்ல ஆண்ட்டி! டைம் இல்ல!” என்றாள் ப்ரியா.

அவ்வளவு பிரம்மாண்டாமாய் அன்று திருமண ஏற்பாடு செய்தது இவளுக்காக தானே? மீண்டும் அதுவும் இந்த வீட்டிற்கே வந்து அழைப்பதை சாதாரணமாய் எடுக்க முடியவில்லை ஸ்ருதிக்கு.

“ப்ரியா குடுத்துட்டு வா கிளம்பலாம்” வேலன் சொல்ல,

“இருங்க ப்பா!” என்ற ப்ரியா,

“உன்னோட பேபியா? ரொம்ப அழகா இருக்காங்க!” என்ற ப்ரியா,

“மேரேஜ் லைஃப் எப்படி போகுது ஸ்ருதி?” என கேட்க,

“ஹ்ம்!” என்று மட்டும் தலையசைத்தாள்.

“தெரியுமே! ஏதோ கடமைக்குன்னு வாழ்ந்துட்டு இருப்ப இல்ல? அதுக்காக தான் வேண்டாம்னு நான் சொன்னதே! அதே வாழ்க்கை உனக்கு!” என்றவள் சொல்லில் ஏளனம் இருந்ததோ?

“என்ன சொல்றிங்க க்கா?” ஸ்ருதி கேட்க,

“ப்ச்! அதெல்லாம் இப்ப எதுக்கு? மேரேஜ்க்கு வந்துடு!” என்றவள் பத்திரிக்கையை நீட்ட,

“ஒரு நிமிஷம் க்கா!” என்று சொல்லிவிட்டு,

“பரத்!” என சத்தமாய் ஸ்ருதி அழைக்க, வேகமாய் வெளி வந்திருந்தான் அவன்.

இப்படி பொதுவில் எல்லாம் அழைப்பவள் இல்லையே மனைவி! அவனுக்கு தெரியாததா என கேள்வியுடன் அவன் வர, அவளின் அந்த அழைப்பில் புருவங்கள் உயர பார்த்து நின்றாள் ப்ரியாவும்.

“என்னாச்சு ஸ்ருதி?” பரத் மேலிருந்தே கேட்க, ராஜேஸ்வரிக்கும் ப்ரியாவின் பேச்சு பிடிக்கவில்லை. கூடவே ஸ்ருதி என்ன செய்கிறாள் என்றும் புரியவில்லை.

“இவங்களுக்கு மேரேஜ்ஜாம். இன்வைட் பண்ண வந்திருக்காங்க. அப்புறம்!” என ப்ரியாவைப் பார்த்த ஸ்ருதி,

“நான் கடமைக்கு வாழுறேனாம். அதுவும் அவங்க குடுத்த வாழ்க்கையாம்!” ஸ்ருதி சொல்ல,

“வாட்?” என்றான் அத்தனை கோபமாய். ராஜேஸ்வரி, வேலன் என பக்கென்று ஆனது இவர்களுக்கு.

நிச்சயம் அமைதியாய் எல்லாம் அவனுக்கு பேச தெரியாது. இவர்களை பார்த்ததற்கே கோபம் கொள்வான் என நினைத்திருக்க, இந்த பேச்சு இப்பொழுது தேவையா என்று தான் தோன்றியது.

“யாருக்கு யார் வாழ்க்கை கொடுக்குறது? சென்ஸ் இல்ல?” என சட்டைக் கையை மடித்துக் கொண்டு வேகமாய் படிகளில் அவன் இறங்கி வர, இத்தனையை ஸ்ருதியிடம் எதிர்பார்க்கவில்லை ப்ரியா.

உமா சொல்லியதை வைத்து தானாய் ஒன்றை கற்பனை செய்து ஸ்ருதியை மட்டம் தட்டி, தான் வேண்டாம் என்றவன் முன்னே சென்று நிற்க நினைத்து ப்ரியா வந்திருக்க, இப்பொழுது அனைத்தும் தலைகீழ்.

“என்ன வேணும் உங்களுக்கு?” என அப்பொழுதும் வேலனிடம் தான் கேட்டான் பரத்.

“இல்ல தம்பி ஸ்ருதிக்கு பத்திரிக்கை வைக்கணும் சொன்னா. அதுக்காக தான் வந்தோம்!” என்ற வேலன் பயத்தில் குரல் உள்வாங்கி இருக்க,

“ப்ரியா என்ன பேசிட்டு இருக்க நீ? இதுக்கா வந்த?” என பெண்ணிடம் கேட்க,

“இவரை என்னனு நினச்சு நீங்க அன்னைக்கு அந்த முடிவு எடுத்தீங்களோ எனக்கு தெரியாது. ஆனா நான் இப்ப வாழற வாழ்க்கை உங்க கனவுல கூட கிடைக்காது. அது என்னோட வாழ்க்கை. என் வீட்டுக்காரர் எனக்கு குடுத்த வாழ்க்கை. நீங்க யாரு எனக்கு வாழ்க்கை குடுக்க?” என கோபமாய் ஸ்ருதி கேட்க, வேலனே ஸ்ருதியின் பேச்சை எதிர்பார்க்கவில்லை என்பதாய் தான் பார்த்தார்.

“ஸ்ருதி! என்னம்மா நீ? அவ தான் புரியாம பேசுறா?” வேலன் சொல்ல,

“அடங்கி போனு சொல்றிங்களா பெரியப்பா. உங்க பேச்சை கேட்டு கல்யாணம் பண்ணினேன். நல்ல எண்ணத்துல தான் நீங்க பண்ணி வச்சீங்களா?” என அவரையுமே அவள் கேட்க, விக்கித்து நின்றுவிட்டார் அவர்.

“நான் என் வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். சம்மந்தமே இல்லாம திடிர்னு வந்து தேவை இல்லாம பேசினா… என் சுயமரியாதை என் புருஷன் மரியாதை எல்லாத்தையும் நீங்க பேசுனா… நான் கேட்டுட்டு இருக்கணுமா பெரியப்பா?” என்றாள் ஸ்ருதி.

“இவனை கட்டிக்கிட்டு…” என்று ப்ரியா சொல்லும் முன்பே பரத் கண்கள் சிவந்து உடலில் இறுக்கம் பரவ, பளார் என ஒரு அறையை வாங்கி இருந்தாள் ப்ரியா ஸ்ருதியிடம் இருந்து.

“ஸ்ருதி!” என வேலன் கோபமாய் முன்வர,

“என்ன தெரியும் உனக்கு? ஒரு வார்த்தை பேசின…” என்ற ஸ்ருதி,

“நீ ஒரு நல்ல வாழ்க்கையை இழந்துட்ட பொறாமைல பேசுறனு எடுத்துக்கட்டுமா?” என ஏளனமாய் ஸ்ருதி கேட்டவள் அருகே வந்த பரத்,

“ஸ்ருதி!” என அவள் தோளில் கையிட்டு, “ஏன் பிரஷர் எடுத்துக்குற? பாப்பாவை தூங்க வை போ!” என்றான்.

“ஆமா! நீ உள்ள போ ஸ்ருதி!” ராஜேஸ்வரியும் சொல்ல,

“இவங்களை வெளில போக சொல்லுங்க த்தை!” என்ற ஸ்ருதி,

“அப்பப்போ உங்களை நான் நினைச்சுப்பேன். ஆனா இவ்வளவு மோசமா இருப்பிங்கனு நினைச்சதே இல்ல!” என வேலனை கூறிய ஸ்ருதி,

“நீங்க எனக்கு எப்பவும் தேவை இல்லை. இந்த கல்யாணத்தையாவது ஒழுங்கா பண்ணிக்கோ!” என ப்ரியாவை சொல்லிவிட்டு விறுவிறுவென மாடி ஏறி சென்றுவிட்டாள்.

உமா பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு வந்துவிட்டது வெகு தாமதமாய் தான் புரிந்தது ப்ரியாவிற்கு.

“நீ போனது நல்லதா போச்சு. ஸ்ருதி வந்த அப்புறம் தான் என் பையன் வாழ்க்கை ரொம்ப சந்தோசமா சரியான வழியில போய்ட்டு இருக்கு. இவ்வளவு நடந்த பிறகும் இன்னும் கை நீட்டாம அவன் நிக்கிறதே ஸ்ருதிக்கு அவன் குடுக்குற மரியாதை தான்!” என்றார் ராஜேஸ்வரியும்.

“ஆனா அதுக்காக பார்த்துட்டே இருக்கவும் மாட்டான். கிளம்புங்க!” என நேராய் அவர் சொல்லிவிட,

“உன்னால இன்னும் நான் என்னென்ன அசிங்கப்படணுமோ!” என சொல்லி தான் ப்ரியாவை அழைத்துக் கொண்டு சென்றார் வேலன்.

“ப்ச்! இதெல்லாம் என்ன ஜென்மங்களோ!” என்ற ராஜேஸ்வரி,

“நீ போய் ஸ்ருதியை பாரு!” என்று சொல்ல, தலையசைத்து சென்றான் பரத்.

குழந்தையை தொட்டிலில் உறங்க வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து சிறு புன்னகை இதல்களில் தவழ, மனைவி அருகே வந்து அமரவும் அவள் கால்களை நீட்டிட, அவள் மடியில் படுத்துக் கொண்டான்.

“என்ன ஸ்ருதி அவ்வளோ கோபம்?” பரத் கேட்க,

“என்ன சொல்லிட்டு போறானு பார்த்தீங்க தானே?” என்றாள் அவனிடமும் கோபமாய்.

“தப்பா எதுவும் சொன்னாங்களா அவங்க? எனக்கு தெரியலையே!” பரத் சொல்ல,

“உங்களை…” என்றவளை,

“அப்படி இருந்தவன் தானே நான்?” என்றான்.

“பேசாம இருக்கமாட்டீங்களா நீங்க? நான் போறேன் போங்க!” என எழுந்து கொள்ள இருந்தவள் இடையை இறுக்கமாய் பரத் கட்டிக் கொள்ள,

“பரத்!” என நெளிந்தாள் அவள்.

சட்டென நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, சிவந்தவள் திரும்பிக் கொண்டாள்.

“பரத்னு நீ கூப்பிடுறது ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருக்கு ஸ்ருதி!”

“அது தானே உங்க பேரு?”

“ஆனா நீ எப்பவும் கூப்பிடுறது இல்லை தானே?” என்றதும் அவள் யோசிக்க,

“உரிமையா நீ கூப்பிட்டது எவ்வளவு நேரம்னு நான் சொல்லவா?” என உல்லாச குரலில் அவன் கூற, அவளும் கேள்வியாய் பார்த்தாள்.

“ஃபர்ஸ்ட் அந்த மால் இஸ்ஸுஸ் அன்னைக்கு. பரத்னு அழுதுட்டே என்னை ஹக் பண்ணின. லைஃப் டைம் மறக்க முடித்த மொமெண்ட்!”

“அது பயத்துல வந்தது!”

“ஆனாலும் உரிமையோட வந்துச்சே!” என்றவன்,

“செகண்ட்! டெலிவரி டைம்” என கண்களை மூடிக் கொண்டான். அந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியானதோ அவ்வளவு பயமும் வரும் இப்பொழுதும்.

“தேர்ட்?” ஸ்ருதி கேட்கவும் கண் விழித்தவன்,

“இப்ப கொஞ்ச நேரம் முன்ன வீடு அதிர கூப்பிட்டியே உன் சிஸ்டர் முன்னாடி!” என்றதும் தான் அவளுக்கும் நியாபகம் வந்தது தான் அழைத்தது.

“ஐ லவ்டு இட்!” என்றான் அவள் கன்னம் கிள்ளி முத்தம் வைத்து.

“அப்புறம் இப்போ! என் கைக்குள்ள! நான் இப்படி பண்ணும் போது!” என மீண்டும் இடையை தன்னோடு வளைக்க,

“ச்சோ! விடுங்க!” என்றவள் சத்தத்தில் குழந்தை சிணுங்க,

“போச்சு!” என்றவளை எழ விடாமல் தானே சென்று தொட்டிலை பரத் ஆட்டிவிட, புன்னகையுடன் பார்த்து அமர்ந்தாள் ஸ்ருதி.

மீண்டும் குழந்தை உறக்கத்திற்கு செல்ல, அவனும் தன் இடத்திற்கு வந்துவிட்டான்.

“அந்த பொண்ணு சொன்னதுல கோபப்பட என்ன இருக்கு? ஆனா சந்தோஷப்படுவேன்!” என்றதும் அவள் முறைக்க,

“நிஜமா ஸ்ருதி. என் கேரக்டர் பிடிக்காம என்னை ஒரு பொண்ணு அவாய்ட் பண்ணது கூட புரியாம இருந்த நான்…. இப்ப ஸ்ருதியால தானே மனுஷனா இருக்கேன்?“ என்றான் அவள் கழுத்தை வளைத்து நெற்றி முட்டி.

“ஆமா ஆமா சொன்னாங்க! அவ்வளவு எல்லாம் இல்ல!” என்றவள்,

“உலகத்துல நிறைய பேர் இப்படி தான் எதுவுமே தெரியாம இருக்காங்க. அவங்க எல்லாம் கடைசி வரை மனைவியை புரிஞ்சிக்க போறதில்ல. அப்படியே லைஃப் போயிடும். உங்களை மாதிரி புரிஞ்சிக்கிட்டவங்க தான் ரொம்ப ரேர்!” என்றாள் அவன் மூக்கைப் பிடித்து ஆட்டி.

“ம்ம்ம் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. ரைட்?” என்று சிரித்தவனுடன் தானும் இணைந்து கொண்டாள் ஸ்ருதி.

“நீ தினம் தினம் புதுசு புதுசா எனக்கு நிறைய கத்து குடுத்துட்டு இருக்குற ஸ்ருதி. நீ இல்லாம நான் இவ்வளவு தூரம் வந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் அதே கம்பெனில அதே பிரஷரோட, அதே பதவிக்கு பிரெஸ்டிஜ் இஸ்ஸுஸ் பார்த்துட்டு ஒரு மிஷினா தான் இருந்திருப்பேன்!”

“ஆனா மனசு வச்சா தான் மாற தோணும். உங்களுக்கு மனசு இருக்கே!” ஸ்ருதி சொல்ல,

“அதுல நீயும் இருக்கியே!” என்றான் அவள் கன்னம் கிள்ளி போதாமல் அவளோடு இணைந்து.

இனி இவர்களுக்குள் புரிதலுக்கு அளவில்லை பிரிதலுக்கு வேலையும் இல்லை.

சுபம்.
 
சூப்பர்.
இருவாச்சி நாவல் பெட்டி வலைப் போட்டி கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
நன்றி sis🙏🏻🙏🏻
 
சூப்பர் ஸ்டோரி 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐
 
கதை எப்படி இருந்துச்சுனு கேட்டால் "மிதமான தென்றல்" என்பது என் பதில். வெற்றிகரமாக கம்ப்ளீட் செய்ததற்கு பாராட்டுகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐:)(y)
 
Thank u sis❤️
 
கதை சூப்பர். பரத் யதார்த்தமானவன் ஸ்ருதி முதலில் பொறுத்து கொண்டாலும் பின்னர் அவன் நடந்து கொள்வதை புரிய வைப்பது சூப்பர் அம்மாவும் அக்காவும் சப்போர்ட் பண்ணுவது பிரிவு அவனுக்கு பரி மறாமல் இருப்பது குழந்தை உணர நினைக்கும் போது ஆபிஸில் பிரச்சினை வரும் போது மாற்றம் ஏற்பட ஸ்ருதி சித்தி டூ மச் . ஓடிப்போன கல்யாண பெண் வாங்கி கட்டியது . ஸ்ருதி ஆபத்தில் இருக்கும் போது அவன் உணர்வு செம. பரத் ஸ்ருதி செம. பரத் குழந்தை பிறக்கும் போது கூட இருந்தது செம .கணவன் மனைவி அன்பு புரிந்தால் வாழ்க்கை அழகுதான். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
 
Thank u sis
 
"தான் செய்வதும் சொல்வதும் மட்டுமே சரி" என உலகில் நிரம்ப பேர் வாழ்கிறார்கள் பாலின பேதமின்றி.

தன்னவள் , தன்னவன் தானே என மனதைப் புரிந்துக் கொண்டு பெரும் சினத்தால் சண்டைச் சச்சரவுகள் வரின் அதனை புறந்தள்ளி விட்டு சிறு சிறு ஊடல்கள் கூடல்கள் என கணவன் மனைவி ஒருயிராய் அமைந்து விட்டேலே போதும் இல்வாழ்க்கை தேனில் நனைந்த பலாச்சுளையாக இனித்திடும்.

"ஊடல் காமத்திற்கின்பம் அதற் கின்பம்
கூடி முயங்கப் பெறின் " - வள்ளுவம் (1330)

இந்தப் பேருண்மையை அழகாக எடுத்து இயம்பி இருக்கிறார் ஆசிரியர் இக்கதையின் வாயிலாக.

காட்டாற்று வெள்ளமாக கரை புரண்டு திக்கு தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த பரத்தை நேசமிகு பாச அணையால் கட்டுப்படுத்தி அவனோடு சேர்ந்து சிறப்புற இல்வாழ்க்கை நடத்தி நம் மனதில் அரியாசனம் இட்டு அமர்ந்திருக்கும் கதையின் நாயகி ஸ்ருதிக்கும், இன்றையச் சூழலில் அனைவருக்கும் தெரிய வேண்டிய வாழ்க்கைச் சூட்சுமங்களை நமக்கு படம்பிடித்துக் காட்டி இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துகள் பல கோடி.

" மனைவி ஒரு மந்திரி" - அற்புதம்.

வெற்றி வாகை சூடிட வாழ்த்துகள்
 
Very hapieee to see this beautiful review.. Thank u sis❤️❤️
 
அருமையான குடும்பக்கதை ❤️👌
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் சிஸ் 💐
 
Back
Top