
ஆழ்கடல் -27
ஒருவழியாக சேலையை எடுத்து முடித்ததும் திருமணத்திற்கென பிரபலமான ஆடை வடிவமைப்பாளரிடம் ஆடைக்கான அளவும், டிசைனும் கொடுத்தனர்.
"அம்மா கிராண்டா வெட்டிங் செய்ய வேணா, எல்லா அரேஞ்ச்மெண்டையும் நான் பாத்துக்கிறேன் நம்ம ரிலேட்டிவ்ஸ் ,என்ட் ஃபிரண்ட்ஸ் மட்டும் இருந்தா போதும்,". " ஏப்பா? “எனக்கான ஃப்ரீடம் கூட இல்லாம போயிடும் ப்ளீஸ் ரைட் டூ அண்டர்ஸ்டாண்ட் மீ "என்றான். "அப்போ சமுத்ராட பேரண்ட்ஸ்" என்று கேட்க "அம்மா அவளுக்கு வயசான அப்பா மட்டும்தான் அவர் சம்மதத்தோட நான் வெட்டிங் நடக்கும் என்று சமுத்ரா பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அதன் பின் திருமணத்துக்கான வேலைகளும் வேகமாக நடைபெற்றது. அன்று ஞாயிற்றுக்கிழமை காலை அழகான தாமரை வண்ண மேன்பட்டில், அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் அழகாக தயாராகி சமுத்ரா மண மேடையை நோக்கி வந்தாள். சௌராவிற்கோ இந்த சாஸ்திர சம்பிரதாயத்தில் நம்பிக்கை இல்லாவிடினும் தாய்க்காகவும், தாரத்துக்காகவும் இதை செய்கிறான்.. மேடையில் சௌராவின் அருகில் அவள் அமர சௌராவோ அவளை ரசனையாக பார்த்துக் கொண்டான்.
முதன் முறை அவளை சேலையில் பார்க்கிறான் குடும்பப் பாங்கான அழகோடு இருந்தாள்.
ஐயர் மந்திரங்களை ஓதி, தாலியை சௌராவை நோக்கி நீட்ட அவனும் தாலியை பெற்று அனைவரும் அர்ச்சனை தூவ தன்னவள் கழுத்தில் கட்டி தன் சரிபாதியாக்கிக் கொண்டான்.
தன்னவனின் கரத்தில் தாலியை வாங்கிக் கொண்டவள் நிமிர முதல் வரிசையில் சண்டகோனும், ப்ர்னுஷான், ஜோசித், டேனியல் , ரெஜினா, மேஷாக் கிங்ஸ்லி அமர்ந்திருந்தனர்.
அவள் இதழ்களில் மகிழ்ச்சியில் விரிய சௌராவின் இதழ்களிலும் புன்னகை, அதனைத் தொடர்ந்து, விருந்தும் தடல் புடலாக நடந்தது சண்டகோனிடம் இருவரும் வர அவரும் இருவரையும் அனைத்து தனது வாழ்த்தை தெரிவித்தார். மேஷாக் ,ரெஜினா டேனியல், கிங்ஸ்லி என அனைவரும் வாழ்த்துத் தெரிவித்ததோடு சிறிய பரிசு பொதியையும் கொடுத்தனர்.
“டேட் இவர் தான் சண்டகோன் சமுத்ராட அப்பா என அறிமுகப்படுத்தினார் சண்டக்கோனுக்கும் சௌராவின் இவ் ஆடம்பரமே காட்டியது அவனது செல்வச் செழுமையை.ப்ரனுஷாக்கும் அதே எண்ணம் தான். சௌராவிற்கு தன் மகள் மீது எவ்வளவு அன்பு இருந்தால் தங்களது மர்மத்தீவிற்கு அவளை தேடி வந்திருப்பான் எனும் எண்ணம் தான் அங்கிருந்த அனைவரிடமும்.
பின் இரவு நடைபெறும் பார்ட்டியிலும் கலந்து கொண்டனர் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது சஞ்சய் அனைத்திலும் கலந்து கொண்டாலும் ஒரு பார்வையாளர் மட்டுமே.
இரு தினங்களுக்கு முன் சஞ்சை, சௌராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. "ஹாய் டா எப்படி இருக்க,வேர்க் எல்லாம் எப்படி போகுது? எனக் கேட்டான் சௌரா. சௌரா இயல்பாய் பேச இன்னும் குற்றம் உணர்வாகிவிட்டது சஞ்சைக்கு “ரியலி சாரி, அப்பா அடுத்த மீடிங்ல உன்ன அடுத்த வாரிசா இண்ட்ரடியூஸ் பண்ணனும்னு சொன்னாரு, கோபம் இருந்தது உண்மை தான் ஆனா முகேஷ், அங்கிள் அப்படி செய்வார்னு எதிர்பார்க்கல, என்ன தான் இருந்தாலும் அவர் கூட நான் இருந்திருக்கக் கூடாது. "என்ன மன்னிச்சிடு" என்றான்.
"சில் ப்ரோ" எனக்கு இந்த ராயல் குரூப்ல இன்ட்ரஸ்ட் இல்ல, இத என்கிட்ட நேர்லயே சொல்லி இருக்கலாம், ஃப்ரீயா விடு, என்று சொல்ல.... "சஞ்சைக்கோ சௌராவின் பேச்சு மேலும் குற்றவுணர்வாகி போனது, அனைத்தையும் யோசித்துக் கொண்டிருக்கும் போது, சஞ்சையருகில் வந்த அதிதி "சஞ்சய் வாங்க டான்ஸ் பண்ணலாம்" என்றாள்.
அவள் சத்தத்தில் தன்னுணர்விற்க்கு வந்தவன், அவளைப் பார்க்க அவ்ளோ அழகா புன்கைத்தாள்.அப்போது அழகிய காதல் பாடல் ஒலித்தது.
அனைவரும் தங்கள் இணையுடன் ஆடிக் கொண்டிருந்தனர். சிவ் ராவும் தனது காதல் மனைவி சாவித்திரிராவுடன் உடலை இசைக்கு ஏற்ப ஆட்டி ஆடிக் கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து பார்ட்டியும் நிறைவுக்கு வர அனைவரும் வாழ்த்தி விடைபெற்று கிளம்பினர்.
சமுத்ராவின் உறவினர்கள் ஸ்ரீலங்கா, தாய் இல்லை, தந்தை மட்டும் எனத்தான் அனைவருக்கும் கூறப்பட்டது. அவளது தமிழ் உச்சரிப்பு சில இடங்களில் வித்தியாசமாக இருப்பதால் யாரும் அதனை பெரிதாக எடுக்கவில்லை ஸ்ரீலங்கா என நம்பி விட்டனர். " அப்பா ரெண்டு நாள் இருந்து மும்பையை சுற்றிப் பார்த்துட்டு போங்களேன்" என்றாள் சமுத்ரா, "இல்ல ஷாம் , காலைல ப்பிளைட் அங்கிருந்து பிளார்க் பேர்ள தான் போனும் என்றார் அதனைத் தொடர்ந்து “என்ன ஜோஷித் அடுத்த உன்னோட வெட்டிங் தானே என்றாள் ஷாம்.
சமுத்ரா மீது ஒருதலைக் காதலைக் கொண்டிருந்தான் ஜோசித். அவளுக்கும் திருமணம் முடிந்தாகிவிட்டது முடிந்ததை மனதில் வைத்து என்ன செய்வது கடந்து விட வேண்டியது தான் அவனின் மனநிலையும் அது தான்
அன்றிறவு சௌராவின் அறையில் தான் இருந்தாள், சமுத்ரா அவனுடைய அறையில் நான்கு, ஐந்து குடும்பம் தங்கக் கூடியதாக இருந்தது அவ்வளவு பெரிய அறை....
"செம டையட் இருக்கு ஸ்வீம் பண்ண போறேன் வரியா" இந்த நேரத்திலா?" " ம்ம்" என்றான் தனது தளத்திலிருந்த நீச்சல் குளத்தில் இறங்கினான் சிறிது நேரம் நீந்தியதும் மேலே வர சமுத்ரா, அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
இரவு உடை மாற்றி இருப்பாள் போலும் கழுத்தில் தாலியும், நெற்றியில் குங்குமப் பொட்டும் என இருந்தவளை ரசனையாக பார்த்தவன், அவள் முன் வந்து நின்று தலையை சிலுப்ப முடியில் இருந்த நீர் அவள் மேல் தெறித்து அவனை முறைத்துப் பார்த்தவளை கையில் ஏந்தியவன் அவளோடு இரண்டறக் கலந்தான்....
.ரெஜினாவிற்கும், மேஷாக்கின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்தது."ஷாம் நெக்ஸ்ட் வீக் நாங்க அவுஸ்ரேலியா போறம், இனி அங்க தான் ரெஸ்டாரன்ட் ஓபன் பன்ற ஐடியா இருக்கு "என்றாள் ரெஜினா." "வாவ் செமபா கங்ராஸ்ட்" என வாழ்த்தை தெரிவித்தாள். சில நாட்களின் பின் அவர்களை அவுஸ்ரேலியாவிற்கு வழியனுப்ப ஏர்போர்ட் வந்தனர் சௌராவும் சமுத்ராவும்," ப்ரோ ஏதும் கெல்ப் வேணும்னா,ஹால் பண்ணு , என இருவரையும் அனைத்து வழியனுப்பினர்.
அன்று இரவுணவின் போது சௌரா, "வெர்க் வந்திருக்கு நாளைக்கு லண்டன் கிளம்பனும்" என்றான். "இன்னும் கொஞ்ச நாள் இருந்து போகலாமே" என்றார் சாவித்திரி,சமுத்ராவோ சௌராவைப் பார்க்க, "மாதத்துக்கு ஒருமுறை வாரம் " என்றான்.சிவ்ராவும் சௌராவை தடுக்கவா முடியும் "சேஃபா போய்டு வாங்க" என்றார். உணவை முடித்து அறைக்கு வந்தவர்கள் தங்களது உடைகளை அடுக்கினர் அதனைத் தொடர்ந்து மறு நாள் காலை இருவரும் லண்டன் புறப்பட்டனர்.
"போகும் முன் சௌரா நல்ல புள்ளடா, பத்திரமா பார்த்துக்க" என்றார் சௌராவிடம் சாவித்திரி. அவனும் சிரித்தபடி இருவரும் விடைபெற்று லண்டன் செல்லாது இடையிலேயே மற்றோரு விமான நிலையத்தில் இறங்கியவர்கள் கரேபியன் தீவை நோக்கி பயணித்தனர்
ஆம் பெர்மியூடைவை நோக்கி அவர்களது பயணத்தை தொடங்கினர். இக்காதல் ஜோடி சில நாள் மும்பையிலும் லண்டனிலும், பெர்மியூடாவிலும் என அவர்கள் வாழ்க்கை சுவாரசியமாக மாறியது. அதனை மேலும் சுவாரசியமாக்கும் விதமாக சமுத்திரா கருவுற்றாள்
சில வருடங்கள் கழித்து "நேத்ரா ஓடாத என தனது இரு வயதான மகளை துரத்திக் கொண்டு சென்றாள் சமுத்ரா, நேத்ராவோ குடு குடு என ஓடி சௌராவின் காலை கட்டிக்கொண்டாள். அவனும் குனிந்து மகளைத் தூக்கியவன், அவள் கன்னத்தில் முத்தமிட,குட்டி பேபியோ "குத்துது" என்று அவன் தாடி,மீசை இழுத்து சிணுங்கினாள்
முச்சிரைக்க தன் முன் வந்து நின்ற சமுத்திராவிடம் "எத்தன தரம் ஓட வேணாம்னு சொல்றது பேபி" என மனைவியின் முகத்தில் வழிந்தத வியர்வையை தன் கைக்குட்டியால் ஒற்றியவன், "நேத் பேபி.... மம்மி பாவம்ல்ல, குட் கேர்ள்லா சாப்பிடுங்க சாப்பிட்டா டாடி ஈவினிங் பீச்சுக்கு கூட்டி போவேன்" என்றான். குழந்தையும் சம்மதமாக தலையாட்டி தாயிடம் தாவியது.
தாயின் நீல விழிகளைக் கொண்டு பிறந்த குட்டி தேவதை மீது பாசம் கொஞ்சம் அதிகம்." "கெப்டன் என தன் முன் நின்ற டேனியலை பார்த்தவன் " ப்ர்னுஷானுக்கு இப்போ எப்படி இருக்கு" " இப்போ பரவால" என்றான்.
காற்றழுத்த பகுதியில் கப்பலொன்றை ஆட்களோடு கடத்த முயன்ற போது அதில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்திருந்தான் ப்ர்னுஷான். ஒரு மாதத்திற்கு முன் சண்டகோன் மரணத்தை தழுவியிருந்தார்.அவர் இறப்புச் செய்தியை கேள்விப் பட்டு, மனைவி, பிள்ளைகளுடன் மர்மதீவுக்கு வந்த சௌரா இன்னும் நாடு திரும்பவில்லை.இப்போது மொத்த தீவும் சௌரா மற்றும் டேனியலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
யாரும் அறியாத உண்மை" ப்ர்னுஷான் பலமுறை கப்பல் விமானங்களை கடத்த முற்படும் போதெல்லாம் டேனியலின் மூலம் அது சௌராவுக்கு தெரிவிக்கப்பட ஏதோ ஒரு வகையில் தடுத்துக் கொண்டிருந்தான். இப்போது ப்ரனுஷானின் போக்கு அதிகமாவே, ஆழ் கடலில் அவனை எதிர்த்து அடித்திருந்தான் சௌரா.
ஆழ்கடலில் ஆயிரத்தில் ஒருவனான இவன் கொள்ளையடிப்பதிலே தனக்கான கட்டுப்பாட்டையும், கோட்பாடுகளின் வைத்திருப்பவன் "கொள்ளையடி கொன்று குவியாதே என்பதே தனது தாரக மந்திரமாகக் கொண்டிருந்தான், ப்ர்மிஷானிடம் பல முறை சொல்லியும் அதை தவற விட்டதால் அவனுக்கு இந்நிலை
சிவ்ராவும், சாவித்திரிராவும் அனாவிற்கு வரன் தேடுகின்றனர். சஞ்சை முழு நேர பிசினஸ்மேன் ஆகிவிட்டான். அவனுக்கும் அதிதிக்கும் இரண்டு வயதில் ஆதவ் எணும் ஆண் குழந்தை உண்டு.
அன்று மாலை மனைவியையும் மகளையும் கடற்கரைக்கு அழைத்து வந்தான் சௌரா.நேத் பேபி கடற்கரையில் விளையாட சௌராவின் தோளில் சாய்ந்திருந்தாள் சமுத்ரா.தூரத்தே ப்ளாக் பேர்ள் கம்பீரமாக நங்கூரமிடப்பட்டிருந்தது.
காதல் எனும் கடலில் தன் மனைவி மற்றும் குழந்தையோடு நீந்திக் கொண்டிருந்தான் சௌரா.
" பேபி லண்டனுக்கு எப்ப போறது " என சமுத்ரா கேட்க "லண்டன் இல்ல லவ்லேஸ் தீவுக்கு" என்றான் கண் சிமிட்டி ..... ஆம் ஷாமின் முதுகில் வரையப்பட்டிருந்த டாட்டூவின் ரகசியத்தை கண்டுபிடித்துள்ளான். இதைக் கண்டுபிடிக்கவே அவனுக்கு பல மாதங்கள் தேவைப்பட்டது, அத் டாட்டூ லவ்லேஸ் எனும் தீவினை காட்டியது. அதாவது ஜாக் ஸ்பேரோவின் புதையலுக்கான வரைபடமே அது.

ஆழ்கடல் பயணம் கரையை அடைந்தது,
சௌராவின் தலைமையில் புதையல் வேட்டைக்கு தயாராகின்றனர்.
புதையல் வேட்டை தொடரும்...
முற்றும்...........
Last edited: