.
மாறன் கூறியதை அங்குள்ளவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டு, கதிர்வேலை குடும்பத்துடன் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பும்படி கூறினார்கள்.
கதிர்வேலும் அனைவரிடமும் விடை பெற, மணிமேகலை கல்யாணியை அணைத்து விடுத்து, "ஊருக்கு சென்றதும் எங்கள் வீட்டிற்கு நீ கண்டிப்பாக வரவேண்டும்" என்று கூறினார்.
பின்னர் அவர்களின் இரண்டு வயது மகளையும் முகம் எல்லாம் முத்தம் கொடுத்து கொஞ்சி, அங்கிருந்த எல்லோரிடமும் பிரியா விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.
பயணத்திற்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார் மணிமேகலை.
இத்தனை நேரம் அனைவரையும் பார்த்த மாறன், மல்லிகாவை மட்டும் பார்க்கவே இல்லை. இப்பொழுது அத்தையின் கையை பிடித்துக் கொண்டு வரும் நங்கையை கண்டு அப்படியே சிலையென ஒரு நொடி சமைந்து நின்றான்.
எட்டாவது படிக்கும் பொழுது அவளை தொலைத்தான். இன்று பருவ மங்கையாக அவளை பார்த்ததும் அவன் மனதிற்குள் ஒரு மென்மையான, சுகமான உணர்வு பரவியதை உணர்ந்தான். அவன் அசையாமல் நின்றதை கண்டு
சாமிக்கண்ணு "என்னப்பா, போகலாமா?" என்று அவன் தோள் பற்றி கேட்டதும் தான் அவன் சுய உணர்வுக்கு வந்து,
"போகலாம் தாத்தா" என்று இவர்கள் கிளம்புவதற்காக தயாராக வைத்திருந்த வேனில், "அத்தை நீங்கள் முதலில் ஏறுங்கள்" என்று அத்தையிடம் சொன்னாலும் அவன் பார்வை மல்லிகாவையே பார்த்து இருந்தது.
அவள் தன்னை ஒரு நொடியாவது பார்ப்பாள், அத்தான் என்று அழைப்பாள் என்று அவள் முகத்தையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ தன் பாதத்தையே பார்த்துக் கொண்டு, மெதுவாக அம்மாவின் கை பிடித்தபடி அவளின் பின்னாடியே வேனில் ஏறி அமர்ந்து விட்டாள்.
மகிழன் அனைவருக்கும் மகிழ்ச்சியாக டாட்டா சொல்லி தாயின் கூடவே வண்டியில் ஏற, சாமிக்கண்ணுவும் கதிர்வேலும் எல்லோரிடமும் விடைபெற்று, "பத்திரமாக இருங்கள் என்றும் தைரியமாக இருங்கள்" என்றும் கூறிவிட்டு, "நான் விரைவில் வருகிறேன்" என்று சொல்லி வண்டியில் ஏற,
மாறன் மோகன் மற்றும் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு, மோகனிடம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு வேனில் ஏறினான்.
நீண்ட நாள் கழித்து வேனில் பயணிக்கிறார்கள். மகிழன் முதல் முறையாக ஒரு மோட்டார் வாகனத்தில் பயணிக்கிறான். அவன் மிகவும் உணர்ச்சி பூர்வமாக ஒவ்வொன்றையும் பார்த்து, இது என்ன? இது என்ன? என்று கேள்விகளால் மாறனை துளைத்தான்.
அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், அப்பப்ப அவனது பார்வை மல்லிகாவை தீண்டின. இதை கதிர்வேலும் சாமிக்கண்ணும் கவனித்தனர். ஆனால் மல்லிகாவோ நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
வேனில் ஏறியதும், அவளுக்கு அன்று கல்லாடன் அவர்களை அழைத்துக் கொண்டது வந்ததுதான் நினைவிற்கு வந்தது. அதில் பயந்து அப்படியே தன் தாயை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளின் செய்கையில் அவளின் நிலை உணர்ந்த மணிமேகலை, அவளை மென்மையாக அணைத்து, "நாம நம்ம ஊருக்கு போகிறோம் டா. உன் மாமாவை பார்க்க போகிறோம். பயப்படாதே!" என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.
மல்லிகாவின் உடல் நடுங்குவது தெளிவாக தெரிந்தது.
அதைக்கண்டு கதிர்வேல் வேதனை அடைந்தான். அதைவிட பல மடங்கு வேதனையை உணர்ந்தான் மாறன்.
அது கல்லாடன் மீது கோபமாக திரும்பியது. அவனை கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது. 'அவனை வெளியேவே விடக்கூடாது, அவன் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே இருந்து மடிய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்' என்று நினைத்துக் கொண்டான்.
யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அந்தப் பயணம் அமைதியாக இருந்தது. மகிழன் சத்தத்தை தவிர, வேறு எந்த சத்தமும் இல்லை. மகிழனுக்குத்தான் எதிரில் வரும் வண்டிகள், தங்களை முந்திச் செல்லும் வண்டிகள் என்று ஒவ்வொன்றையும் கண்டு முதலில் பயந்தாலும், பின்னர் ஆச்சரியமாக ஒவ்வொன்றையும் பார்க்க ஆரம்பித்தான்.
இயற்கை உபாதைக்காக இடையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்க சொன்னான் மாறன். மல்லிகாவோ இருக்கையை விட்டு அசையவே இல்லை. "ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுட்டு போகலாம், வா மல்லிகா!" என்றான், முதல் முறையாக அவள் பெயரை உச்சரித்து. அவள் முகத்தையே பார்த்தான். அவளோ நிமிர்ந்து கூட பார்க்காமல் அம்மாவிடம் தலையை மட்டும் மறுப்பாக ஆட்டி,
"எனக்கு எதுவும் வேண்டாம்மா" என்றாள் மெதுவாக.
அவளையே வேதனையாக பார்த்துக் கொண்டிருந்த மாறனின் தோளில் கையை போட்ட கதிர்வேல் "அவள் யாருடனுமே பேசமாட்டாள் மாப்பிள்ளை. இங்கு வந்ததிலிருந்து ரொம்ப அமைதியாகி விட்டாள். அதான் நீ வந்துட்டியே! இனிமேல் எல்லாம் சரியாக போய்விடும். உன் அப்பா தன் மருமகளை இப்படியே விட்டு விடமாட்டான்" என்று நண்பனை பற்றி சொல்லும் பொழுதே அவனது முகம் புன்னகை சூடியது.
மகிழனுக்கு சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்று அங்குள்ளவற்றை காண்பிக்க, அது எதுவுமே அவனுக்கு தெரியவில்லை. எல்லாவற்றையுமே அவன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க, அவனின் செயலில் கதிர்வேலின் உள்ளம் ரத்தக்கண்ணீர் வடித்ததை அவன் மட்டுமே அறிவான்.
மகிழனின் செயலிலே மாறனுக்கும் அவனது நிலைமை புரிந்து விட்டது. மென்மையாக உணவான இட்லியை மட்டும் வாங்கிக் கொடுத்தான். அவனும் அதை விரும்பி சாப்பிட்டான். பெரியவர்கள் சூடாக குடித்துவிட்டு, மணிமேகலைக்கும் வாங்கிக் கொடுத்தார்கள். அவள் மல்லிகாவையும் வற்புறுத்தி குடிக்க வைத்தாள். அரை மணி நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது.
பெரியவர்கள் யாருமே வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்க வில்லை. அதுபோல் மாறனும் இவர்கள் இத்தனை வருடம் பட்ட கஷ்டத்தை பற்றி கேட்கவில்லை. மௌனமாகவே அவர்கள் பயணம் இருந்தது.
விடியற் காலையில் அவர்கள் ஊரின் எல்லைக்குள் இவர்களது வண்டி நுழைந்ததும் தெரிந்த பள்ளிக்கூடத்தை கண்டு பரவசம் ஆனான் கதிர்வேல்.
பின்னர் ஊருக்குள் சென்ற வண்டி, அம்மன் கோயிலை சுற்றி மாறனின் வீட்டின் முன் நின்றது. காலையில் வாசல் தெளிப்பதற்காக கதவை திறந்து கொண்டு வந்த மரகதம் தங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் வண்டியை குழப்பமாக பார்த்தார்.
அதில் இருந்து மாறன் இறங்கியதும் "மாறா! நீ கல்யாணத்துக்கு போறேன்னுதானே சொன்னே? இப்போ வேன்ல வர்ற? உன் நண்பர்கள் வந்து இருக்கிறார்களா? என்று சொல்லிக் கொண்டே அவனின் பின்னால் எட்டி பார்த்தார்.
வேனில் இருந்து இறங்கிய கதிர்வேலை பார்த்தார் மரகதம். ஒரு நொடி அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படியே அசைவின்றி நின்றுவிட்டார்.
மாறன் வந்து "அம்மா" என்று அவள் தோளை தொட்டதும், கையில் இருந்த வாலியை பொத்தென்று கீழே போட்டு, "அண்ணா" என்று கத்தினார்.
அவளது குரல் கேட்டு மணிவண்ணன் வேகமாக எழுந்து வாசலுக்கு வர, மகனின் அருகில் நிற்கும் கதிர்வேலை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்து, வேகமாக வந்து அவனை அணைத்துக் கொண்டான் "மச்சான்" என்று.
"எப்படி இருக்க மச்சான்?" என்று கேட்ட கதிர்வேலிற்கு பதில் கூட சொல்ல முடியமல் திணறினான் மணிவண்ணன். அவன் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் கதிர்வேலின் சட்டையை நனைக்க,
"மச்சான் என்னை பாரு" என்று தன்னிடம் இருந்து விலக்க பார்த்தான். ஆனால் மணிவண்ணனின் இறுக்கம் அதிகமாகியது. அதிலேயே அவனது இத்தனை வருட தேடலை உணர்ந்து கொண்ட கதிர்வேல், அவனது முதுகை மென்மையாக தடவி விட்டு "வந்துட்டேன்டா" என்றான்.
நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க மெதுவாக வண்டியில் இருந்த சாமிக்கண்ணு நண்பர்களின் பாசத்தை கண்டு கண்கலங்கிய படியே வண்டியிலிருந்து இறங்கினார்.
"அப்பா" என்று மரகதம் ஓடிச் சென்று அவரை அணைத்துக் கொண்டார். பின்னால் வண்டியை பார்க்க அங்கு கலங்கிய கண்ணுடன் அமர்ந்திருந்தார் மணிமேகலை.
"மணி" என்று வேகமாக வண்டியில் ஏறி மணிமேகலையை அணைத்து அழ ஆரம்பித்து விட்டார்.
இவ்வளவு நேரம் உறங்கிக் கொண்டிருந்த மல்லிகா திடீரென்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்து தாயை அணைத்துக் கொண்டாள். தன் மகளை ஒரு கையால் அணைத்து கொண்டு, "அண்ணி, உங்களிடமே வந்துவிட்டோம் அண்ணி" என்று அழுதார் மணிமேகலை.
"அத்தை, அதான் எல்லோரும் நலமாக வந்து விட்டீர்கள் அல்லவா? பின் ஏன் அழுகிறீர்கள்? அம்மா, நீங்கள் அவர்களை அழைத்துக் கொண்டு முதலில் வீட்டிற்குள் வாருங்கள்" என்று சொல்லிக்கொண்டே, பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் மகிழனை தூக்கிக்கொண்டு இறங்கினான்.
மணிமேகலை தன் மகள் மல்லிகாவை அணைத்தபடியே வண்டியிலிருந்து இறங்க,
"ஒரு நிமிடம் எல்லோரும் இங்கேயே நில்லுங்கள்" என்று வேகமாக வீட்டிற்குள் ஓடி சென்று ஆரத்தி எடுத்துட்டு வந்தார் மரகதம்.
அனைவரையும் குடும்பமாக நிற்க வைத்து, ஆரத்தி சுற்றி, திருஷ்டி கழித்து, 'இனி யாருக்கும் எந்த கெடுதலும் வரக்கூடாது' என்று கடவுளை வேண்டிக் கொண்டு அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் மரகதம்.
- தொடரும்..
அத்தியாயம் 26