Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,585
வானம்பாடி -25
திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும், இது சும்மா வந்த வார்த்தை இல்லை. ஒவ்வொருவர் வாழ்விலும், அவர் விரும்பிய மாற்றம் வந்திருக்க அதனால் வந்த அனுபவம் பொதிந்த வார்த்தை.
வாஸ்து, அறிவியல் ஆராய்ச்சி, நம்பிக்கை என எந்த நோக்கில் பார்த்தலும், திருமலையும், திருப்பதி வேங்கடவனும், அத்தகைய சக்தியும், தெய்வீகமும் பெற்றவர்கள். நம் முன்னோர்கள், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும், வழிபட என சில இடங்களை, கோவில்களை, தெய்வங்களைச் சிறப்பானதாகச் சுட்டிக் காட்டி, அதற்கு ஒரு புராணம், செவி வழி கதைகள் வழியாக நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.
அங்குச் செல்லும் பக்தன், அந்தந்த சக்தியை, பாக்கியத்தை பெற்றுவிடும் எண்ணத்தில் தான் அந்த குறிப்பிட்ட தளத்துக்குச் செல்கிறான். அந்த எண்ணங்கள் வலுப் பெற்று, அதை நிறைவேற்றுவதற்கான ,அல்லது நிறைவேறுவதற்கான சக்தியை அங்கிருந்து பெற்று வருகிறான்.
திருப்பதி பெருமாளைப் பங்குதாரராக்கி, தொழிலை ஆரம்பித்தால், அவர் பார்த்துக்கொள்வார், என்ற இறை நம்பிக்கையில் சற்று ஆபத்தான முடிவுகளையும் துணிந்து எடுப்பார்கள். அதுவும் நேர்மறை சிந்தனையோடு அந்த செயலை செய்யும்போது, பலன் இரட்டிப்பாகிறது.
ஒரு நகைச்சுவை காட்சியை, பார்க்கும் நமக்கும் சிரிப்பு தொற்றுகிறது, மகிழ்ச்சியான தருணங்கள், பகிரப்படும் பொழுது, இன்னும் இரட்டிப்பு சந்தோசத்தைத் தருகிறது. அது போல் தான் இறைவனின் பேரருள்.
"தாத்தா, அது தான் பெருமாளை சேவிச்சாச்சுல்ல, பிறகு எதுக்கு, இங்க உட்கார்ந்து இருக்கோம்." என ராகவி, எங்கும் அசையமாட்டாமல், பொறுமை இழந்து, கேட்க, "ராகவி, ரொம்ப அபூர்வமா, இந்த சேவைக்கு, டிக்கெட் கிடிச்சுருக்குடி. செத்த நாழி அமைதியா இரு." என சுதா பாட்டி கெஞ்சிக் கொண்டிருக்க, "நான் அப்பத்தாட்ட போறேன்" என வழியில் இருந்த வாசு, சரயு மேல் தாவி, சரண் தேவாவை, ஒரு மிதி, மிதித்து விட்டு, "சாரி ஆண்ட்டி!" என சரயுவிடம் மன்னிப்பை கோரி, "ராகவி, பார்த்து வா." என்ற, குரலுக்கு செவி மடுத்து, ராஜன், கௌசியிடம் செல்ல, "இங்க வா, அம்மாட்ட உட்கார்ந்துகோ." என சுமி அழைக்க, "அடுத்து உங்களாண்ட தான் வருவா. வெயிட் பண்ணுங்கோ." என தான்வி சொல்லவும், "நமக்கே உட்கார முடியலை, அதுங்க என்ன பண்ணும்?" என மலர் காலை நீட்டி மடக்க, செல்லபாண்டி முறைத்தான்.
"தாத்தா, இந்த கதையாவது சொல்லுங்கோ." என கௌசிக், ரகரோத்தமனை கேட்க, "ஆமாம் சம்மந்தி, காத்திருக்க நேரம், சாமி கதையை கேட்டா, புண்ணியமா போகும், ஒன்னை அவுத்து விடுங்க." என்றார் சிவபாண்டி.
"ஏன் மச்சான், அவர் என்ன இடுப்புலயா கட்டி வச்சிருக்காரு. சொல்லுங்கண்டு கேளுங்க." என மாயன் திருத்த, "கதையிண்டா அவுத்து தான் விடணும்." என வீரபாண்டி அண்ணனுக்கு ஜல்ரா அடித்தார். "உங்க கதை தான் மச்சான் அவுத்து விடுறது. அவர், படிச்சவர், புராணம் சொல்லுவார்." என மாயன் சொல்ல, "உன் பேச்சுல, சம்பந்தி கதையவே மறந்திட போறார்." என ராஜன் சொல்ல, "உங்க வம்சம் மாதிரி இல்லை, உங்க சம்பந்தி மெத்தப் படிச்சவரு, சாமி நீங்க ஆரம்பிங்க." என்றார் மாயன்.
"அப்பாவை பாரு, மச்சினங்களை பார்க்கவும் தான் பேச்சு விளையாடுது." என சரயு, வாசுவிடம் சொல்ல, "என்கிட்டே மட்டும் தான் பேசமாட்டார். மத்த எல்லார்கிட்டயும் இப்படி தான்." என்றான் வாசு. "நீ மட்டும், பாசமா அப்பான்னு பேசிடுறீயாகும். இன்னும் பயந்திட்டு தான் இருக்க?" என காலை வார, "அது, ஜென்மத்துக்கும் மாறாது. மாப்பிள்ளை எப்பவுமே மனசு விட்டு பேச மாட்டான்." என்ற துரைபாண்டி, மகனின் வருகையை பார்த்துக் கொண்டே இருந்தார்.
ரகோத்தமன் கதாகாலேட்சபத்தை ஆரம்பித்து இருந்தார்.
"கோபமான பிருகு முனிவர், பெருமாள் மார்பில் எட்டி உதைக்கிறார்." எனவும் சத்யதேவா, கௌசிக், செல்லம்மாள், சோலையம்மா ஆர்வமாக கேட்க, "பகவானும் பேசாமல் இருக்கார். இதைப் பார்த்த ஸ்ரீ, கோவிச்சுட்டு போறா. கோவிச்சுட்டு போன சகதர்மிணி, அவரின் இதயக்கமலத்தில் வீற்றிருந்த ஸ்ரீ. அந்த ஸ்ரீ அவரிடத்தில் தங்கி இருந்ததால் தான் அவருக்கு ஸ்ரீ வசிக்குமிடம், ஸ்ரீனிவாசன் என்ற பெயர் வந்தது. அப்படிப் பட்ட அம்மை அலர்மேல் மங்கையாக அவதரிச்சு, திருச்சானூரில் வளர்ந்து வரா, ஸ்ரீநிவாசன், யசோதையின் மறுபிறப்பான வகுளா தேவி ஸ்ரீனிவாசனுக்காக, ஆகாச ராஜனிடம் பெண் கேட்கிறாள். கல்யாணம் பண்ண காசு வேணுமே தேவர்கள் யோசனையில் குபேரன் கிட்ட கடன் வாங்கி கல்யாணம் பண்ணுகிறார்.
ஸ்ரீ தேவி, அவரிடத்தில் வந்து சேரும் போது இருக்கும் மகிழ்வு, பக்தன் என்ன கேட்டாலும், வரமாக அருள்வார். திருமலையில் தினமும் திருமணம் முடித்து, நித்திய கல்யாணனாக அகம் மகிழ்ந்து இருக்கார், அந்த நேரத்தில் பெருமாள் கிட்ட வரம் கேட்க, வாரி வழங்கிடுவார்.
தொழில் தொடங்க காசு வேணுமா, அவரை பாட்னர் ஆக்கிட்டா, தன்னால காசு வந்து சேர்ந்திடும். ஆனால் கணக்கு சரியா வச்சு, அவர் பங்கைக் கொண்டு வந்து, இங்க போட்டுடனும். உடல் உபாதை இருக்கா, இந்த மலையில் தங்கி, பத்த நாள், பெருமாள் சேவை செஞ்சு, இயற்கை காற்றை சுவாசிச்சு, மூலிகை, துளசி தீர்த்தம் வாங்கி குடிச்சுட்டு, கோவிந்தா, கோவிந்தான்னுட்டு அவன் நாமம் சொல்லிட்டு போனாலே போரும், உடலும், மனசும் பிரெஷ் ஆகிடும். பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்.” என, ரகோத்தமன், ஸ்ரீனிவாச நித்திய கல்யாண மணடபத்தில் , சேவைக்காகக் காத்திருக்கும் சமயம், பேரன் பேத்திகளுக்கு போரடிக்காமல் இருக்க, கதாகாலட்சேபம் செய்ய, பாண்டி குடும்பமும், அவர்களோடு இருந்த மற்றவர்களும் கேட்டனர்.
இன்னும் மலையப்ப சுவாமி எழுந்தருள அரை மணி நேரம் இருந்தது. அதற்குள் வசதியான இடம் பார்த்து அமர்ந்திருந்தனர். அதற்குள் ரகோத்தமன், திருப்பதி சம்பந்தப் பட்ட, அத்தனை கதைகளையும் சொல்லிக் கொண்டிருக்க, “ஏண்டா தங்கம், தினம் வீட்டில இப்படி கதா காலட்சேபம் நடக்குமா?” என மருது, அரண்டவனாகக் கேட்க, “பின்னே, ரிட்டையர் ஆனதிலிருந்து, தானியோட பெரியப்பா ஜட்ஜா இருந்தாரே?” என அடையாளம் சொல்லி, “ அண்ணன், தம்பி இரண்டு பேரும் இப்படி தான் கிளம்பிடுவாங்க. வீட்டில வந்து கதை சொன்னா, கௌசி கேட்பான், உன் மக, எதாவது சாக்கு சொல்லிட்டு ஓடி வந்திடும்.“ எனத் தங்கம் பதில் தர, “நம்ம மகள், நம்ம மாதிரி தானே இருக்கும்.” என அவன் சிலாகிக்க, சுமித்ரா முறைத்தாள்.
“இவளே இப்படி முறைக்கிறா, நல்ல வேளை, உன் பொண்டாட்டி அங்க உட்கார்ந்திருக்கு. ஆமாம் அந்த பொண்ணு யார், நம்ம வீட்டில் வந்து தங்கப் போகுதுன்னு சொல்றாங்க. இதெல்லாம் சரி பட்டு வருமா?” என மருது, தங்கம் வாயைப் பிடுங்கினான். தங்கம் முறைக்கவும், “அது இல்லடா, நீயி முக்கியமான வேலையிண்டு போனா, தினேஷோட வந்த. உன் பிரெண்டு அந்த பொண்ணோட வந்திருக்கார். ஏதோ இடிக்கிதே?” எனத் தூண்டி துருவ, “நீ எப்ப இவ்வளவு யோசிக்க ஆரம்பிச்ச. பொதுவா இதெல்லாம் கண்டுக்க மாட்டியே.” எனச் சந்தேகமாகக் கேட்டான்.
“நானா எங்க கேட்டேன். ஜெயா பேசினான். சாமி பார்த்தீங்களானு கேட்டான், விவரம் சொன்னேன், அவன் தான் சந்தேகம் கேட்டான். சொல்றதுன்னா சொல்லு, இல்லை உன் ரகசியத்தை நீயே வச்சுக்க.” என அலட்சியமாக இருக்க, தங்கம் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்க, “சொல்ல மாட்டியா?“ என மீண்டும் கேட்டான்
“நீ தானே, என் ரகசியத்தை என்னையவே வச்சுக்க சொன்ன. வச்சுக்குறேன்.” எனத் திரும்பிக் கொள்ள, “மருது, தொனதொனன்னு பேசாமல் சாமியைக் கும்பிடு. செல்லத்தைப் பார்த்து கத்துக்க.” என கௌசி மகனைத் திட்ட, செல்லப்பாண்டி மலையப்ப ஸ்வாமி எப்போது எழுந்தருள்வார், எனப் பரம பக்தனாகப் பார்த்திருந்தான்.
“யாரு, எங்கண்ணன் தானே, பக்தி, ஏன்மா, எந்தந்த நிலமெல்லாம் அவன் பேருக்கு வரணும், என்ன காரியமெல்லாம் ஆகணும்னு வேண்டிக்கிட்டு இருக்கும்.” என எரிச்சல் பட, “நீயும் வேண்டு, உனக்கும் பிஸ்னஸ் இருக்குல்ல?” எனவும் தங்கம் சிரித்தான். ஆனால் அவன் பார்வை, உள்ளே வந்த பெப்பர் ஸ்பிரே ஜோடிகளிடம் இருந்தது.
சற்று முன்னர், வெங்கி அறைக்கு, கணவனும் மனைவியுமாகச் சென்று, சந்திரியைப் பேட்டி காண சென்றனர். வெங்கியின் மனைவிக்கு, இவர்கள் பரிச்சயம் ஆதலால், “வாங்க அண்ணையா, வாங்க வதின.“ என வரவேற்க, தான்வியும் தலையசைப்போடு சிரித்தாள். கண்கள் சந்திரியை அளவெடுத்தன. தங்கம், தூங்கிக் கொண்டிருந்த நண்பனை, ஒரு அடி போட்டு எழுப்பி விட்டு, சந்திரிகா, தான்வி இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தான்.
சந்திரிகா பதட்டமாக இருக்க, அவள் அருகில் சென்ற தான்வி, “பயப்படாத. உன்னைப் பார்க்க எங்க குடும்பம் ஆவலோட தான் இருக்காங்க. நீ அங்க தயக்கம் இல்லாமல் வந்து தங்கலாம்.“ எனச் சொல்லவும், சந்திரிக்கு கண்கள் கலங்கியது. உதட்டைக் கடித்து பதட்டத்தைச் சமாளித்தவள், “குண்டூர் பண்ணை வீட்டிலருந்து கிளம்பனும்னு தான், நானகாரு சொன்னதுக்கு சம்மதிச்சு வந்துட்டேன், எனக்குச் சென்னையிலேயே வேலை வாங்கி கொடுங்க. நான் அங்கயே இருந்துக்குறேன்.“ எனச் சந்திரி கேட்கவும், அங்கிருந்த நால்வருக்கும் சங்கடமாகப் போனது.
“வழி நெடுக, இதையே தான் சொல்லிட்டு வந்தா. கல்யாணமாகாத பொண்ணு, புதுசா ஒரு குடும்பத்தில் இருக்கிறது ரொம்ப கஷ்டம். இவள் எந்த உரிமையில் அங்க போயி இருப்பா. ஏன் அண்ணையா இந்த முடிவு எடுத்திங்க?” என வெங்கடேஷ் மனைவி கேட்கவும், “அது அவசியமான முடிவுமா.” என்றான் தங்கம்.
“இங்க பாரு சந்திரி, நீ பயப்படாதே. அங்க எல்லாரும் உன்ன மேல பாசமா தான் இருப்பாங்க. உன் வயசு பொண்ணுங்க இருக்கு, உனக்கிட்ட நல்லா பழகுவாங்க. அதுவும் கோல்டு சொல்லிட்டாருன்னா போதும், அவா அம்மாவெல்லாம் உன்னை தலையில் தூக்கி வச்சுக்குவா.” எனச் சொல்ல, சந்திரியின் முகம் தெளியவே இல்லை.
“உங்க தம்பிக்கு என்னைப் பிடிக்காது, என்னை பார்த்தவுடனே ஏதாவது சொல்லிட்டா, என்னால தாங்க முடியாது. நான் எங்கேயாவது போயிடுறேன், அதுவும் உங்களுக்குப் பிரச்சனை தான். ப்ளீஸ் என்னை எங்கையாவது வேலையில் சேர்த்து விடுங்க. இல்லைனா உங்கள் வீட்டில் சமையல் வேலை, வீட்டு வேலைக் கூட செய்யிறேன்.” என அவள் முகத்தை மூடிக் கொண்டு அழுவும், தான்வி அவளை அணைத்துக் கொண்டவள்,
"கோல்டு, இப்படி இருக்க மனநிலையோட இவளை மானூத்து அனுப்புறது சரியில்லை. நாம அங்க இருந்தாலும் பரவாயில்லை. இவளோட முழு உண்மையும் தெரிஞ்சு, ஆறுதல் சொல்ற மாதிரி ஒரு ஆள் அங்க இருக்கனும். என்னைக் கேட்ட, நீங்கத் துரை மாமாவை கூட்டிட்டு வாங்கோ. அவர் சம்மதிச்சா மானூத்துக்கு போகட்டும். இல்லைனா, நான் வச்சுக்குறேன். எனக்கு ஒரு தங்கை இருந்தா பார்த்துக்க மாட்டேனா, அது மாதிரி பார்த்துக்கறேன். அவ அப்பாகிட்டையும் நான் பேசுகிறேன்.” எனத் தீர்மானமாகச் சொன்னாள்.
“தனு, நம்ம வீட்டில வச்சுக்க தெரியாமல் இல்லை, ரெட்டிகாருவுக்கும் வேற எங்கேயும் அனுப்பத் தெரியாமலா, இப்படி அனுப்பி விடுறார். இந்த பொண்ணு, நம்ம வீட்டில் இருக்கிறது தான் பாதுகாப்பு.” எனவும்,
“அப்போ, துரை மாமாவை கூப்பிடுங்கோ. இல்லை தினேஷை கூப்பிடுங்கோ.” என்றாள்.
“அவன் வேண்டாம், சித்தப்பாவையே வர சொல்றேன்.” என போனை எடுக்கும் பொழுதே, “என்ன தங்கம், என்ன விஷயம்?” என உள்ளே வந்தார் துரை பாண்டியன், ஏற்கனவே தரிசனத்தின் போதே, வெங்கடேஷை பார்த்து விட, அவன் சொன்ன விவரங்கள் அடிப்படையில் அவருக்கு நிறையச் சந்தேகம் இருந்தது. தரிசனம் முடித்து வரவும், தங்கத்தைத் தனியாகப் பார்த்துப் பேச வேண்டும் என நினைத்து, இவர்கள் பின்னாடியே வர, போலீஸ்கார மூளை, கேட்க வேண்டியதைக் கேட்டு விட்டே உள்ளே வந்தது.
அழுதபடி நின்ற சந்திரிகாவைப் பார்க்கவும் அவருக்கு யோசனை ஓடியது.
தங்கம் துரையிடம் , “இது தான் அந்த பொண்ணு, இவங்க அப்பா தான் தரிசனத்துக்கு ஏற்பாடு செஞ்சார். வெங்கியோட கசின் . சந்திரிகா.” என அறிமுகம் செய்தவன், அவளிடம் “தினேஷோட அப்பா.” எனச் சொல்லவும், கட்டுப்பாட்டை இழந்தவள், “அவர் மேல ஒன்னும் தப்பில்லை, உங்க பையன் மேல ஒன்னும் தப்பில்லை. நானாகாரு ஏதோ யோசிச்சு அனுப்பி விட்டார். எனக்கு வலுக்கட்டாயமா, உங்க வீட்டுக்கு வர விருப்பமில்லை. என்னால தான் இந்த நிலைமை. என்னை மன்னிச்சிடுங்க.” என அவள் , துரை முன் சென்று கை கூப்பி அழவும், தங்கம், “சுத்தம்.” என்றான். “விடுங்கோ, அவள் மனசில இருக்கிறது வெளியே வரட்டும்.“ என்றாள் தான்வி.
அவள் கூப்பிய கையை பிடித்துக் கொண்டவர், “தங்கம், இந்த பொண்ணு என்னடா சொல்லுது, யாரு இது, என்ன நடந்தது?” என வினவியவர், "எதுவா இருந்தாலும், வயசு பொண்ணு இப்படி அழுகக் கூடாது வா. உட்காரம்மா, நீலு” என வெங்கடேஷ் மனைவியைப் பார்த்துக் கேட்டு விட்டு, சந்திரியை அங்கிருந்த பெஞ்சில் உட்கார வைத்து, தானும் அமர்ந்து அவளுக்குத் தண்ணீர் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.
“குடிச்சுட்டு மெல்ல சொல்லு, ஒன்னும் அவசரம் இல்லை.” என்றபடி, தங்கத்தைக் கேள்வியாகப் பார்க்க, சன்னு தலையைக் குனிந்திருக்க, வெங்கடேஷ் மனைவியும், தான்வியும் அவளை முதுகில் தட்டி சமாதானம் செய்துக் கொண்டிருந்தனர்.
அந்த இடைவெளியில் தங்கம், துரையின் காதில், நிர்மலாவின் மகள் என்பதை ரகசியமாகச் சொல்லி விட்டு, சந்திரிகா மன்னிப்பு கேட்டதற்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னவன், “இந்த பெண்ணும் அதுல விக்டிம் தான். இவங்களை பிடிக்காதவங்க செஞ்ச வேலை. நான் தான் ரெட்டிகாருகிட்ட, இங்க அனுப்பி விடச் சொன்னேன். நம்ம தாத்தா இருந்தா, என்ன செய்வாரோ அதைத் தான் சித்தப்பா செஞ்சேன். அந்த பொண்ணு, வேற வேலை வாங்கி கொடுங்க. நான் போறேங்குது. நீங்க சொல்றதுல தான் இருக்கு." எனத் தங்கம் பேச்சை முடித்தான்.
துரைபாண்டியனே ஒரு நிமிடம் முழித்தார், “நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியது தான். அதில சந்தேகமே இல்லை. பெரிய அண்ணன், அவங்க நைனாவுக்கு வாக்கு கொடுத்திருக்காருல்ல, அது பிரச்சனை இல்லை.” என்றவர், சன்னுவிடம் திரும்பி, “உன்னை என் மகனுக்குப் பிடிக்காது. பிடிக்காதவன் வீட்டில எப்படி தங்கிறதுண்டு யோசிச்சு, வேண்டாம்கிற. அப்படி தானே. ஆனால், அவன் சம்பந்தம் இல்லாமலே நீ?” என அவர் ஆரம்பிக்க, “சித்தப்பா.” என் அழுத்தமாக அழைத்த, தங்கம், அவரை தனியே கடத்தி சென்று, “அந்த பொண்ணுக்கு, அவங்க அம்மா எந்த ஊருன்னு தெரியாது. இந்த பொண்ணு இங்க வர்றதும் அவுங்க அம்மாவுக்குத் தெரியாது." என விஷயங்களை விளக்கவும்,
“கடைசில, இது என் தங்கச்சி மகள் தானே, உன் தம்பிக்கு கட்டுற முறை தான்.“ என யோசிக்க, “ரெட்டி நல்லா சீர் செய்வார், நமக்கு அந்தஸ்துக்குத் தோதா இருக்கும்.” எனத் தங்கம் கிண்டலடிக்க, “ஆமா டா." என்றார் துரை.
“சித்தப்பா, சீரியஸா பேசுங்க. இந்த பொண்ணு யாருன்னு வேற யாருக்கும் தெரியக் கூடாது. அவங்க அம்மா, கூடப் பொறந்தவனை போடுறதுக்கே ஆள் அனுப்பியிருக்கு, அது தெரிஞ்சு ராஜதுரை, அவன் அக்காளைத் தேடுறான். துரை குடும்பம், குடி வேந்தன், யாருக்கு தெரிஞ்சாலும் பிரச்சனை தான்.
கண்டுபிடிச்சு , பிரச்சனை தேடி வரட்டும்.“ எனத் தங்கம் தன் திட்டத்தைச் சொல்லவும், துரைபாண்டியன் யோசித்தார்.
"என்ன சித்தப்பா, இந்த பிரச்ச்னையில நாம ஏன் தலையை கொடுக்கணும், இந்த பொண்ணு தேவையான்னு யோசிக்கிறீங்களா?" என வினவவும், "இல்லைடா, நம்மளே அப்படி யோசிக்க கூடாது. இந்த புள்ளையையாவது நாம காப்பாத்தணும்." என்றார்.
“நேத்து உண்மை தெரிஞ்சு, இந்த பொண்ணை பார்க்கவும், நம்ம ராகவி மாதிரி தோணுச்சு சித்தப்பா. அது தான் ஆடி போயிட்டேன்." என தங்கம் சொல்லவும், "ச்சீ வாயை மூடு. எல்லாம் நம்ம நடந்துகிறதுல தாண்டா. இந்த மீனாவையே, எம்புட்டு செலவழிச்சு மாப்பிள்ளை டாக்டர் ஆக்கி விட்டுருக்கான் பாரு. அது தான், நம்ம." எனவும், "உங்க மருமக கிட்ட வந்து, ஆதரவா நாலு வார்த்தை சொல்லுங்க. நீங்க இருக்கத் தைரியத்தில ஊருக்கு வரும்” என்றான். “உன் தம்பியை நம்பி, நான் எப்படி டா வாக்கு கொடுப்பேன்.“ என்ற துரை புலம்ப, “ இல்லைனாலும், தங்கச்சி மக, மருமகள் தானே, அதை சொன்னேன்னு சொல்லிக்கலாம்.“ என தங்கம் யோசனை சொல்லவும், இருவருமாக உள்ளே வந்தனர்.
சந்திரிகா அவர் முகத்தையே பார்க்க, “ஆத்தா, அப்படியெல்லாம் பாவமா பார்க்காதே, தினேஷ் வீட்டுக்கு நீ வரவேணாம், எங்க வீட்டுக்கு, நீ வா.“ என மானூத்து, துவரிமான் என இரண்டு இடங்களில், தங்கள் குடும்பம் இருப்பதை சொன்னவர், “உன்னை மானூத்துக்குத் தான் கூட்டிட்டு போறோம். அங்க எங்க அம்மா இருக்காங்க.” என விவரம் சொன்னவர். “என் மகன் அங்க கெஸ்ட்டா தான் வருவான். நீ கவலைப் படாதே. நீ இந்த மாமையாவை நம்பி வா.“ என அழைப்பு விடுத்தார்.
‘மாமா, அப்ப சந்திரிகாவை மருமகளா ஏத்து கிட்டிங்களா?” என தான்வி கேட்கவும், “ஏன்மா, உன் கொழுந்தனைப் பத்தி தெரிஞ்சிருந்தும் இப்படி கேட்கிற. அவன் சரியான காட்டுப் பய, அவன் அம்மாச்சியைக் கொண்டு பிறந்திருப்பாண்டு நினைக்கிறேன். காதல் கிலோ என்ன விலைனு கேப்பான். அவனை வச்சுக்கிட்டு நான் எங்குட்டு கேரண்ட்டி கொடுக்க?” என அவர் சொல்லவும், அங்கிருந்த எல்லோருமே சிரிக்க, சன்னுவுக்கும் நகைப்பு எட்டிப் பார்த்தது.
“நிஜமா ஆத்தா. நீ அவன்கிட்ட போயி சிக்கி இருக்க பாரு. உலகமெல்லாம் சுத்துனதுக்கு, வேற ஒருத்தனா இருந்தா எப்பவோ செட்டில் ஆகியிருப்பான். இப்பவும் கல்யாணத்தை எப்படித் தட்டி கழிக்கிறதுண்டு தான் யோசிப்பான். எங்கூட்டுல, இவன் லவ் மேரேஜ் , நான் லவ் மேரேஜ். என் மகள் லவ் மேரேஜ்.” என அவர் அடுக்க, “சித்தப்பா அதெல்லாம் லவ் மேரேஜ்ன்னு சொல்லிக்காதிங்க. சொந்தத்துக்குல்லையே செஞ்சதில என்ன பெரிய லவ் மேரேஜ். எங்களை மாதிரி இருக்கணும்.“ என தான்வியை பார்த்து அவன் கண் சிமிட்ட, அவள் அழகு காட்டினாள்.
“இன்டெர் காஸ்ட் மேரேஜ் தான் லவ் மேரேஜ்னா, நான் ஒத்துக்க மாட்டேன்டா. பாண்டியம்மா மகள், வீட்டை விட்டு ஓடி வந்து என்னை கல்யாணம் கட்டிக்கிச்சு பாரு. அது தான், சரித்திர புகழ் வாய்ந்த லவ் மேரேஜ்." என தற்பெருமை பேச,
“மாமா, அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். கல்யாணத்துக்கு நாழியாகிறது, தினேஷை கூப்பிடுங்கோ.” என தான்வி சொன்னதில், “தான்வி, என்ன, நீ இவ்வளவு பாஸ்டா இருக்க.“ என வெங்கடேஷ் அதிர, பாண்டிகள் இரண்டும் பேச்சற்று நிற்க, சந்திரி அரண்டு போனாள்.
“ஐயோ, ராமா, நான் அப்படிச் சொல்லலை, ஸ்ரீனிவாச நித்யகல்யாணத்துக்கு போறதுக்கு நாழியாகிடுத்து. சந்திரிகா நம்ம ஆத்துக்கு வரதுக்கு தயக்கம் இல்லாமல் இருக்கனும், தினேஷைப் பார்க்கிறதை நினைச்சு பயந்துண்டே இருப்பா. அதனால் தினேஷையும் நேரா கூப்பிட்டு வச்சு, பேசிடுவோம்னு சொல்ல வந்தேன்.” என தான்வி விளக்கவும், "ஒரு நிமிசத்தில , மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வரவழைச்சுட்டமா. ஆனாலும் உன் கொழுந்தனுக்கு அப்டி கல்யாணம் பண்ண தான் உண்டு." என்றார் துரைபாண்டி.
ஆனால் “நோ, வேண்டாம், ஊர்ல வந்து தெரிஞ்சுக்கட்டும். நான் என்ன பிளான் போட்டாலும், அதை மாத்தணும்னு நினைக்காதே.” எனத் தங்கம் சண்டை கட்ட, “நீங்க தான் புரியாமல் பேசுறேள். செத்த முன்ன, அந்த பொண்ணு என்ன சொன்னா. அவன் எதாவது சொல்லி, இவ எங்கையாவது போயிட்டானா. பொம்மனாட்டி, பயங்கர எமோஷனல். ரிஸ்க்கே வேண்டாம். நீங்க தினேஷை மட்டும் வரச் சொல்லுங்கோ.” என தான்வி கட்டளையிட,
“மருமகள் சொல்லறதிலையும் பாயிண்ட் இருக்குடா.” எனத் துரை மகனை அழைக்க, சந்திரிகா பதட்டமாகி, வெங்கடேஷ் மனைவிக்குப் பின்னால் மறைந்து கொண்டாள் .தங்கம் அவளைக் கண்ணால் காட்டி, “இதுக்குத் தான் சொன்னேன்.” என நயன மொழி பேச, “நீங்க இருங்க. நான் பார்த்துக்கறேன்.” என தான்வி பதில் சொன்னாள்’