IVNP08
Active member
- Joined
- Mar 13, 2025
- Messages
- 117
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு
" ஆயா கொஞ்சம் ரைட்.. ஹான் அப்படி தான்..இங்க.. இங்க.. பாருங்க.. லைட்டா சிரிங்க.. ஹான் அவ்வளவு தான்.. அப்பறம்..."
" ஏன்டே இந்த அலம்புலே பண்ணுறீங்க...காடு வா..வாங்குது..வூட்டு போ..போங்குது..நேத்து சமைஞ்ச கொமரியாட்டம்..இந்தா பாடு படுத்துறீங்க.." என கண்ணீர் விடாத குறையாக அழுது கொண்டு இருந்த வடிவு எதிரே இருந்த கேமரா மேன்'னை முறைத்தது...
"இந்தா வள்ளீ யென்னையா ரூம்புக்கு கூட்டி போத்தா.." என எழ போனவரை...
" இரு வடிவு ஒரேயொரு போட்டோதேன்...ப்ளீஸ்..ப்ளீஸ்..." என கெஞ்சிய ஆரவள்ளி.." சீக்கிரம் எடுங்க... பாவம் ஆயா..." என துரிதபடுத்தினாள்...
" அவ்வளவு தான் மேம்.. இரண்டாவது நிக்குறம்மா கொஞ்சம் சிரிங்க மிலிட்டரி ஆள் எடுக்குற மாறி இவ்வளவு விரப்பு.." என கேமரா மேன் பாரிஜாதத்தை கேலி செய்ய.. மற்றவர்கள் சிரித்தனர்...
" அவ அப்படி தான்..சிரிச்சா முத்து வுழுந்துடும்..." என கேலி செய்த மணிமாறனை..முறைத்த பாரிஜாதம்.." எப்ப பார்த்தாலும் ஈஈஈனு இளிச்சிட்டு இருக்க நா என்ன ஒங்களேமேரி பைத்தியமா..இந்தப்பா நா போகவா போட்டோ எடுக்குறீயாஆஆ.." என கண்களை உருட்டியது...
" அவ்வளவு தான்..அவ்வளவு தான்..மேம்.. ஆரா மேம் பேபியே கொஞ்சம் சைடா காட்டுங்க.. எஸ்.. கரெக்ட்.. கரெக்ட்.. ஸ்மைல் ஆல்..." என கேமரா மேன் கேமரா.. ஐந்து தலைமுறையாக வடிவு முதலில் அமர்ந்திருக்க அவருக்கு பின்னால் பாரிஜாதம்..அவருக்கு பின்னால் முருகேஸ்வரி அவருக்கு பின்னால் ஆராவள்ளி கையில் ஆறுமாத குழந்தை மையூரன் தூக்கி கொண்டு நிற்க க்ளிக் என்று படம் பிடித்தது...
ஒரு வருடத்திற்கு முன்பாக மைரா ஃபேஷன் டிசைனிங் கம்பெனியில் இருந்து ஆரவள்ளிக்கு அழைப்பு வந்தது.. புதிதாக ஆரம்பிக்க இருக்கிற பாலிவுட் படத்திற்கு ஆடையலங்காரம் மைரா ஃபேஷன் சைன் பண்ணி இருப்பதாகவும்..அது புராதான கதையை மையமாக கொண்ட படம் என்பதும் குறிப்பிட்டு ஒரு மாதத்தில் ஆரம்பிக்க போவதாகவும் மும்பை கிளம்பி வர வேண்டியிருக்கும் என்பதை கூறியிருந்தனர்...
சஷ்டியிடமும் பகிர்ந்து கொள்ள வாழ்த்தியவன் மகிழ்ச்சியாக சென்று வருமாறு கூற.. குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தனர்..
சஷ்டி ஆரவள்ளியை அழைத்து சென்றவனை மிஸஸ்.மைரா மல்ஹோத்ரா சந்தோஷமாகவே வரவேற்றார்.." நோ ப்ராப்ளம் மிஸ்டர்.சஷ்டி..உங்க மனைவி பாதுகாப்புக்கு நா கேரண்டி..
தைரியமா விட்டு போங்க.. நான் பாத்துக்கிறேன்..." என தைரியம் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார்..
கிட்டதட்ட பத்து மாதங்கள் ஆரவள்ளிக்கு அவர் டீமோடு வேலை செய்ய இருந்தது..எம்.டி என்ற கர்வம் இல்லாமல் அனைவரிடமும் நட்பாக தட்டிக் கொடுத்து சொல்லி தரும் மைரா மேம் மீது ஆரவள்ளிக்கு மரியாதை அதிகரித்து சென்றது.. அதுவும் ஆரவள்ளி மீது ஸ்பெஷல் கவனிப்பு தான்..சிறிது நாட்களிலே அவளின் பேச்சு திறமையால் நட்பு வட்டத்தை பிடித்து விட்டாள்..வேலை செய்ய வந்தாளோ இல்லை வெக்கேஷன் என்ஜாய் பண்ண வந்தாளா என்பது அவளுக்கே சந்தேகம் அப்படி ஜாலியாக வேலை போனது..டிவியில் பார்த்த பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது மட்டும் இல்லாமல் தன் கையால் வடிவமைத்த ஆடையை அவர்கள் அணிந்து நின்ற போது..அட அட..அடடா அந்த உணர்வை கூற வார்த்தையில்லை..!
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆரவள்ளி ஊருக்கு வந்து சென்றாலும் சஷ்டி இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அவளை வந்து பார்த்து விட்டு சனி ஞாயிறு இருவரும் ஊரை சுற்றி விட்டு செல்வான்.. ஏக்கத்தையும் காதலையும் மெசேஜ் போன் கால் மூலம் தீர்த்துக் கொள்ள டீன்ஏஜ் காதலர்கள் போலயே தொலைதூர காதலை அனுபவித்தனர்...
நன்றாக வேலையை முடித்து கொடுத்து விட்டு ஆரவள்ளி வைரவேல் பவனம் வந்து சேரும் போது.., மையூரன் குட்டி அவள் வயிற்றில் இரண்டு மாதங்கள் சமத்தாக உதித்து இருந்தது.. சர்ப்ரைஸ் கொண்டு வருகிறேன் என்பதை மட்டும் சஷ்டியிடம் கூறி இருக்க..ஆவலாக எதிர்பாத்தவனிடம் தனியே வெட்கமும் நாணமுமாக கூறி முடிக்க தூக்கி கொண்டாடி விட்டான்..
குடும்பமே அகமகிழ்ந்து போயினர்..வடிவு கண்ணீர் மல்க இருவரையும் ஆசிர்வதித்தார்.. செந்தில்நாதன் மாணிக்கத்தை எல்லாம் கையில் பிடிக்க முடியாதளவு சந்தோஷத்தில் மகிழ்ந்தனர்.. விஷயம் அறிந்து பாரிஜாதம் கூட கிளம்பி வந்து வாய்க்கு ருசியாக ஆக்கி போட்டு கவனித்து கொண்டார்...
இடையே அகிலனுக்கு அட்சயா என்ற பெண்ணுடன் சிறப்பாக திருமணம் முடிந்திருந்தது.. அவள் வீட்டை பார்த்துக் கொள்ள.. பாரிஜாதம் ஜாலியாக தாய் வீட்டில் பொழுதை கழித்து கொண்டு இருந்தார்..முருகு மாணிக்கம் கூட அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது எட்டி பார்ப்பதோடு சரி மற்றபடி வைரவேல் பவனமே கலகலவென்று குட்டி சஷ்டியை வரவேற்க ஆவல் காட்டியது...
சஷ்டியா இது எனுமளவுக்கு ஆரவள்ளியை தாங்கு தாங்கென்று தாங்கினான்..காலை மாலை அவளை வாக்கிங் தவறாமல் அழைத்து செல்வது..
மருத்துவமனை அழைத்து செல்வது.. அவள் தூங்கும் வரை அவள் மறுக்க மறுக்க காலை பிடித்து விட்டு தூங்க வைப்பது.. அவன் பேச பேச உள்ளிருக்கும் குட்டி குதிக்க ஆரம்பித்து விடும்.." அப்பன் பேசனா போதும் எங்குருந்துதேன் இவனுக்கு இப்புடி ஒரு குஷி வருமோ..சப்பா என்னா ஒதை அடேய் வெளியே வா ஒனக்கு இருக்கு..." என ஆரவள்ளி அதட்ட அது அடங்காது எட்டி உதைக்க கலகலவென்று கணவன் சிரிப்பான்..
இடைப்பட்ட காலத்தில் தங்கமயில் அழகுவோடு மற்றவர்களும் பொட்டிக் நன்முறையில் பார்த்துக் கொண்டு ஆரவள்ளிக்கு உதவினர்..
ஆரவள்ளியை தினமும் ஒரு முறையாவது மயிலும் அழகும் எட்டி பார்த்துவிட்டு சென்றிடுவார்கள்.. மாதம் நெருங்க சஷ்டி வீட்டோடு இருக்க சொல்லி விட்டான்...
ஐப்பசி மாத பௌர்ணமி நன்நாளான்று நிலவை ஒத்த ஆண் மகவை ஆரவள்ளி சுகப்பிரசவத்தில் ஈன்றெடுக்க..
குடும்பமே அந்த முருகன் பிறந்து விட்டதாக கொண்டாடி மகிழ்ந்தனர்..
வைரவேல் முருகனுக்கு சிறப்பு பூஜை ஊருக்கே ஒரு வாரம் அன்னதானம் என்று தாத்தனுங்க கலக்கி கொண்டு இருக்க..ஒரு மாத சம்பளம் போனாஸாக
' ஸ்பைசி ஸ்பைர்..' ஊழியர்களுக்கு சம்பளதோடு இனிப்பு முதலியவை கொடுத்து சஷ்டி மகிழ்ந்தான்...
வெகு வருடங்களுக்கு பிறகு குழந்தை சத்தம் வைரவேல் பவனம் முழுக்க எதிரொலித்தது...
குழந்தையை சொந்தபந்தம் பார்க்க வருவதும் போவதுமாக இருக்க.. மோதல் காதலில் முடிந்த தங்கமயில் அழகு சுந்தரம் காதல் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தது..ஒரு முடிவுக்கு வந்திருந்தது...
'வசதியில்லை என்றா மறுக்கிறீர்கள்..எனக்கு பிறகு எங்களின் நிலம் நாங்க மகனாக நினைக்கும் அழகு சுந்தரத்திற்கு தான்' என்று திடீரென சின்னையன்..
தங்கமயில் பெற்றோர் குழந்தையை பார்க்க வந்தவர்களிடம் போட்டு உடைக்க.. மற்றவர்கள் அதிர்ந்து போயினர்..
ஆரவள்ளியே இதை எதிர்பார்க்கவில்லை..அழகுவை பற்றி சொல்ல தேவையில்லை வார்த்தையின்றி கண்கலங்க நின்றிருந்தவன் சின்னையனை கட்டிக் கொண்டு அழுந்தான்.. அங்கோர் பாச போராட்டம் நடக்க..
" பொறவு என்னப்பா ஆவுற வேலைய பாருங்க.."என செந்தில்நாதன் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்...
பகலெல்லாம் நன்றாக தூங்கி விட்டு இரவு கொட்ட கொட்ட முழித்து பவனத்தை அலற வைப்பது சஷ்டி மகனின் வேலையானது..
கை நோக தூளியை ஆட்டி தூங்க வைத்தால்..''நா இன்னும் தூங்கல மம்மி..'என்று சிரிக்கும் ஆரா பெத்த முத்து..தந்தையவன் தோள்மீதே போட்டு தட்டி தூங்க வைக்க வேண்டும் இல்லையெனில் இரவு அனைவருக்கும் சிவராத்திரி தான்..
வைரவேல் பவனத்தின் செல்ல இளவரசனை யாராவது ஒருவர் தூக்கி கொண்டே அலைய வேண்டும் ஐந்து மாதத்தில் அப்படி ஒரு வாலு தனம்..மண்டி போட்டு கொண்டே ஒடியதை பிடித்து வைப்பது ஆராக்கு பெரிய டாஸ்க் ஆனது..அப்பனை ஆத்தாளை போலவே மையூக்கும் வடிவு என்றால் அத்தனை ப்ரியம்..
" தங்கபுள்ள எங்கஏஏ..." எங்கு அவர் குரல் கேட்டாலும் அத்தனை வேகமாக மண்டியிட்டு ஓடி வந்து விடும்..
அவனுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் போது ஆரா வேலை செய்த அந்த பாலிவுட் படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆடையலங்காரத்திற்க்கான விருது கிடைத்து இருப்பதாக செய்தி வந்து சேர்ந்தது..அது மட்டுமா மைரா மேம் வீட்டுக்கு வந்து குழந்தையும் அவளையும் பார்த்து சென்று ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார்..
தமிழ்நாட்டில் இருந்து சிறப்பாக பாலிவுட் படத்தில் ஆடையலங்காரத்தில் கலக்கி கொண்டு இருக்கும் ஆரவள்ளியை பிரபல மீடியா ஒன்று இன்டர்வியூ எடுக்க வந்திருந்தது...
வடிவு ஐந்து தலைமுறையை கண்டவர் என்பதில் தொடங்கி ஆரவள்ளி பொட்டிக்...மொத்த குடும்பமும்..வீடு..
தோப்புதொரவுகள்..
மற்றும் மயில் அழகு நீலவேணி காளியம்மா மல்லிகா முதலியவர்களை க்ரூப் போட்டு எடுத்து கொண்டனர்...
மதியத்துக்கு மேல் இன்டர்வியூ வைத்துக் கொள்ளலாம் என கூறியிருக்க காலை முழுதும் போட்டோ சூட் முடிய.. ஆரவள்ளி சஷ்டி இருவரையும் உக்கார வைத்து இன்டர்வியூ எடுத்து கொண்டு இருந்தனர்..மையூ குட்டி சமத்தாக அப்பனின் மடியில் அமர்ந்து இருந்தது...
ஆரவள்ளியிடம் கேள்விகள் முடிய இறுதியா சஷ்யிடம் கேட்ட கேள்விக்கு..ஒரே வரியில் மொத்த கேள்விகளையும் தூக்கி சாப்பிடும் விதமாக...
" I am very proud to be
Mr. Aravalli.." என கூறியபடி அவளை தோளோடு அணைத்து வெண்பற்கள் தெரிய சிரித்த மாமனை..காதலாக நோக்கியது ஆரவள்ளியின் விழிகள்..!

சுபம்

Last edited: