"கண்டு கொண்டேன் என்னவனை, உணர்ந்து கொண்டேன் உயிரின் துடிப்பை, புரிந்து கொண்டேன் வாழ்வின் எதிர்காலத்தை, தாமதமாகினாலும் உன் அருகில் தானே இருந்தேன் என்னை எடுத்துக்கொள் தயக்கமின்றி"
..... கனலி யின் காதல் வரிகள்....
பாகம்-24
கனலி இரவெல்லாம் அழுதவள் மாத்திரைப் போட்டுக் கொண்டு காலையில் உறங்க ஆரம்பிக்க, இதோ அள்ளிக் கொண்டு வந்து விட்டான். 10 மணி நேர பயணத்தில் ஊட்டியை வந்தடைந்தவன் புக் செய்யப்பட்ட அறையில் கனலியை படுக்க வைத்தவன். குளித்து விட்டு, தேநீருடன் அறையின் வெளியே அமர்ந்து ஊட்டியின் அழகை ரசித்துக் கொண்டிருக்க,
தூக்கம் தெளிந்து எழுந்தவளின் சத்தத்தில் உள்ளே வந்தவன் கை கட்டி மனைவியை முறைத்திருக்க, அவளோ ஓடி வந்து இறுகக் கட்டிக் கொண்டாள். இவனோ அமைதியாய் நிற்க, " மகி " என்றாள் மென்மையாக
மகி என்ற அழைப்பில் புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து விட்டது என் பைங்கிளிக்கு, ஏன் செல்ல வேண்டும். என்ற கேள்வி தான் கண்டிப்பாக வீட்டில் யாரும் இவளை எதுவும் சொல்லி இருக்கபோவதில்லை, சிவா தன் மேல் இருக்கும் பாசத்தில் நண்பன் ஏமாந்து விடுவானோ என்ற எண்ணத்தில் தெரிந்தவற்றை உளறி விட்டான்.
அவனுக்கு தெரியாதே இவர்களின் காதல் ஆண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பந்தம் என்று, இருவருமே அவர்களின் காதலை மனதிலே சுமந்து கொண்டு, பார்க்காமல், பேசாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களை பிரிப்பது யாராலும் முடியாது ஏன் அவர்களே நினைத்தாலும் முடியாது. அலைகள் கரையினை அடிப்பது போல் வரிசையாய் கேள்விகளும், ஆதங்கமும், கேள்விகளும் தன்னை தாக்க கோவத்தை கட்டுக்குள் கொண்டு வர கொஞ்சம் திணறி ப் போனான் இவளிடம் மட்டும்
" தெரிஞ்சிகிட்டியா " கோவம் குறையவில்லை இன்னும்
"நீங்க கிளம்புனா அன்னைக்கு நைட்டே நியாபகம் வந்துடிச்சி மகி, செந்தில் அண்ணா பழைய போட்டோ எடுத்துக் கொடுத்தாரு, மச்சமும் பார்த்துட்டேன் " நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் மீசைக்கு அருகில் இருக்கும் மயக்கும் மச்சத்தினை வருட, அந்த வருடலில் சிலிர்த்தவனின் கோவம் எங்கோ ஓடி ஒளிந்துக் கொண்டது.
இன்னும் அவளிடம் கேட்க வேண்டியது நிறைய இருக்கிறதே, இதற்குள் அவள் வந்து அணைத்து கொண்டதும் மச்சத்தை வருடுவதும் அவன் கோவத்தை தணித்திடுமா என்ன
அவள் கையினை பிடித்து அவள் வருடலை தடுத்தான். அவள் கண்களால் கெஞ்சினால். மறுப்பாக தலை அசைக்க இன்னொரு கையினால் தொட வர, கைகள் இரண்டினையும் பிடித்துக் கொள்ள, வசமாய் மாட்டி க் கொண்டாள் வண்ணக்கொடி
அவனின் நெருக்கம் இத்தனை நாட்கள் எப்படியோ இன்று வேறு விதம் அல்லவா, ஆசையாய், ஏக்கமாய் நினைத்த பொருள் அருகில் வரும் போது தொட்டு பார்த்து இது எனக்கானது என்ற எண்ணம் வருமே, அதில் மனமும், உடலும் சிலிர்த்து போகும். கத்தி அழைத்திட தோன்றும்.
முத்தங்கள் நூறு வைத்து தன் இதயத்தில் வைத்து பதுக்கிட தோன்றும் அந்த உணர்வில் தான் கனலியும் இருக்கிறாள். பொருளுக்கே இப்படி என்றால், இவன் அவளவன் ஆகிற்றே
"அப்புறம் ஏன் போன" புருவங்கள் உயர்ந்து அவளைப் பார்த்து கேட்க, இரண்டு வில்கள் மாறி மாறி அம்பு விடுவது போல் அவளுக்கு தோன்ற, அவன் பிடித்திருந்த கைகளை விடுவிக்க நெளிந்தால்,
"எதுக்கு நெளியுற கையை விட்டா மறுபடியும் என்னை விட்டு ஓடறத்துக்கா"
திட்டுவான் என்று தான் கண்களை மூடிக் கொண்டாள் அவனோ என்னை விட்டு செல்ல பார்க்கிறாயா என்று கேட்டதும் தான் விட்டு சென்றது அவனுக்கு பிடிக்கவில்லை, இப்போது கூட தன்னை விடாமல் அல்லவா பிடித்து வைத்து வம்பு செய்து கொண்டிருக்கிறார்
என் மேல் கோவம் போய் விட்டதா, ஆசையாய் தன் இமை க் குடைகளை மெல்ல திறந்தாள், அவனும் அவள் பார்வையை எதிர் கொண்டு கைகளின் பிடியை தளர்த்த, அதை விடாது பிடித்துக் கொண்டவள் அவனை நெருங்க, நிறுத்து பதில் சொல்லிட்டு வா என்பதாய் தன்னை பின்னோக்கி இழுத்துக் கொண்டான்.
"நான் கோவமா அங்க இருந்து வரலைங்க, நீங்க இல்லாம இருக்க முடியலை, சிவா அண்ணா பேசவும் என்ன செய்றதுன்னு புரியல,
நைட் தான் உங்களை பத்தி உணர்ந்தேன் அப்போ எப்படி இருந்துச்சி தெரியுமா, உங்களை பக்கத்துல வச்சிக்கிட்டே எங்கயோ தேடிட்டு இருந்தேன். அன்னைக்கு கிராமத்துல மல்லி கொடி மேல சாஞ்சுட்டு என்னை உங்க கூட சாய்ச்சு வச்சிருத்தீங்களே அப்பவும் இப்டி தான் தோணுச்சு,
என்னால தான் புரிஞ்சிக்க முடியல, உங்க பக்கம் சாய்ற மனச பிடிச்சி வச்சிக்கிட்டேன். நீங்களே எந்த சந்தோஷமும் இல்லாம, கஷ்டப்பட்டுகிட்டு, குடும்பத்தையும் காப்பாத்திட்டு போராட்டிட்டு இருக்கீங்க, உங்களுக்கு என்னை மாதிரி பிரச்சனை இருக்குறவ வேணாம்னு தோணுச்சு,
அவனைப் பார்க்க இவளைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லட்டும், எல்லா சந்தேகங்களும், கேள்விகளும் இன்றோடு தீர்ந்து போகட்டும் என்பதே அவனின் எண்ணம்
"நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னது என்னால நம்பவே முடியல, உங்களுக்கு பொண்ணுங்கள பிடிக்காது, வெறுப்பா பார்ப்பீங்கனு தாறு சொன்னா"
"அம்மா, தங்கச்சி, யாழினி பாப்பா இவங்கல்லாம் பொண்ணுங்க இல்லையா"
"அது வேற இது வேற "
"என்ன வேற"
"அச்சோ உங்களுக்கு எப்படி சொல்றது, அதாவது காதல், கல்யாணம் அந்த மாதிரி பிடிக்காதுன்னு "
"ஓ அப்டி"
"அப்டி தான் சொன்னாங்க, நீங்களும் மூஞ்ச உர்ருனு வச்சிருப்பீங்க, அப்போ அப்டி தானே தோணும்" அவள் உதடுகள் அசைந்து சொல்வது அவனுக்கு வேறு எங்கும் பார்க்க தோன வில்லை
"இங்க ஒருத்திக்கு மட்டும் தான் இடம்" தன் பரந்து விரிந்த நெஞ்சினில் கை வைத்து சொல்ல, அவன் யாரை சொல்கிறான் என்று தான் புரியுமே, அவளின் இளஞ்சிவப்பு இதழ்கள் மெல்ல விரிந்து சிரிக்க அதில் மாட்டிக் கொண்டு தவிப்பது அவன் தானே
"அந்த ஒருத்தி தான் யார்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சே, நீங்க ஏன் சொல்லல" சின்ன மூக்குகாரிக்கு கோவமும் வர
கோவத்தில் சிவந்து துடிக்கும் நாசியோடு உரசிட தோன்றியது, இதற்குள் அவளிடம் இறங்கி போக கூடாது என்ற எண்ணம், விரளோ அவனையும் மீறி வருடி, சுண்டி விட,
அவன் செயலில் அவள் அதிர்ந்து போனாள், "சொல்லி இருக்கலாம் தான், நம்பி இருப்பியா சொல்லு, நீ தான் கனவுல இருந்தியே, நான் இல்லைனு மட்டும் உறுதியா இருந்த"
சரியாக தன் மனதை புரிந்து கொண்டு பேசுபவனிடம் என்ன சொல்வது
"ரொம்ப யோசிக்காத, நான் அப்போ சொல்லி இருந்தாலும், தாடி எடுங்க, மச்சம் காட்டுங்கனு அதையே தான் சொல்லிட்டு இருந்திருப்ப, ஆனா"
உள்ள புகுந்து பார்த்த மாதிரியே சொல்றாரே, அது என்னவோ உண்மை தான், நான் தான் லூசு மாதிரி வேற எங்கயோ தேடிட்டு இருந்தேனே
"ஆனா... ஏன் நிறுத்திடீங்க"
"என் நெருக்கம் உனக்கு பிடிச்சதுனு புரிஞ்சது, நீயா என்னை உணர்ந்து வரணும்னு நினச்சேன்"
பதில் சொல்லவில்லை அவள் இன்னும் ஏன் விலகி இருக்கிறான் என்று தான் நினைத்தாள்.
" அம்மு " என்றான் மென்மையாக
" மகி" என்றன அவள் உதடுகள் யோசிக்காமல்
" நான் வர வரைக்கும் காத்திருக்க முடியாதா, என் மேல நம்பிக்கை இல்லையா " கோவமும், வருத்தமும் இருந்தது பேச்சில் இதை எதிர்பாராதவள், அமைதியாய் இருக்க,
“சொல்லு “ என்றவன் அவள் மென்மையான கையினை பிடித்து இழுக்க , அவன் இழுத்த வேகத்தில் பூக்குவிலாக அவன் நெஞ்சில் மோதியவள் பார்த்த பார்வையில் கட்டுண்டவன், ஒரு விழியினை உயர்த்தி கண்ணால் கேட்க
“நான் உங்களை விட்டு போய்ட்டேனு நினைச்சிட்டீங்களா மகி” அவள் வார்த்தைகளின் கள்ளத்தனம் ஏதோ உணர்த்த
பொய் கோவத்துடன் ”சும்மா அந்த லெட்டர் எழுதுனியா”
“ஓ அந்த லெட்டரா, ஆமா சும்மா தான் எழுதுனேன். நீங்க மட்டும் தாடி எடுக்கிறேன்னு சொல்லிட்டு ஏமாத்தலை அது போல தான் இதுவும்” சொல்லிவிட்டு அவனின் அழகிய மீசைக்குப் பக்கத்தில் தன்னை வசீயம் செய்து மயக்கும் மச்சத்தினை தன் ஒற்றை விரல் கொண்டு வருடியவள் கண் அடித்து சிரிக்க,
அந்த சிரிப்பினில் கோவம் கரைந்து போன கனலியின் மன்னவன் இரு பக்கமும் கை கொடுத்து அள்ளித் தூக்கியவன் தன் முகம் நெருக்கத்தில் நிறுத்தி, “போட்டோ எப்போ டி பார்த்த” காந்த விழி பார்வையில் பார்த்துக் கொண்டே கேட்க
அவன் செயலில் உறைந்தவள் வெய்யோனின் வெம்மை மொத்தமாக குத்தகை எடுத்தது போல் வீசும் அவன் மூச்சுக் காற்றின் தீண்டலில் தடுமாறி, அவன் சட்டையினை பிடித்து கொண்டு “செந்தில் அண்ணன் கிட்ட உதவி கேட்டேன், யாருக்கும் தெரியாம எடுத்துக் கொடுத்தாரு மாமா” எப்படியோ சொல்லிவிட்டாள், ஆனால் அவனின் ஊடுருவும் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் கண் மூடிக் கிடக்க,
அல்லி மலர் ஒன்று முடிக் கிடப்பது போல் அவள் இமை மூடிய விழிகளில் சுவாசக் காற்றை இதழ் குவித்து ஊதி விட, தளிர் மேனியாளின் உடல் சிலிர்த்து அடங்க, அந்த சிலிர்ப்பு இவன் உடல் உணர்ந்து, “கண்ணைத் திறடி “ கிறக்கமாக ஒலித்த அவன் குரலில் விழி திறக்க,
“எப்போ தெரிஞ்சிக்கிட்டீங்க நான் தான் உங்க அம்முனு” கண்கள் படபடவென அசைத்து கேட்க
“நீ அன்னைக்கு நைட் பிரச்சனைல மாட்டிக்கிட்டியே, நியாபகம் இருக்கா”
“அன்னைக்கா, அதான் அவ்ளோ கோவமா” தலை அசைத்துக் கேட்டிட
“ம்ம்” என்றான் ஆனால் பார்வையோ வேறு விதமாய் மாறியது,
அவளின் முகம் அருகினில் செல்ல, அந்திப் பொழுது முல்லை மொட்டுக்கள் மெட்டினை திறந்து மணம் வீசும் இதமான நேரம் தூங்கி எழுந்த முகம் தான் ஒப்பனையின்றி பொலிவாக தான் இருந்தது. மீன்கள் நீந்தும் விழியில் oru எதிர்பார்ப்பு, புருவத்தை ஒட்டி நிற்கும் பொட்டினை சரி செய்தவன் களைந்த கார்குழலை தன் பார்வையினால் சிவந்து இருக்கும் காது மடலில் ஒதுக்கி
"போய் பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு வா, பசிக்குது சாப்பிடலாம்"
தான் இன்னும் தூங்கு மூஞ்சியாகவே இருப்பது புரிய, தலையில் அடித்துக் கொண்டவள், வேகமாக குளியலறை நோக்கி ஓடினாள்.
அவளுக்கான உடையை குளியலறையில் வைத்திருந்தான். உணவினை போன் மூலம் ஆர்டர் செய்தவன் அவளுக்காக காத்திருந்தான். தான் வாங்கி வந்த சில்வர் நிற புடவையில் அந்த வெள்ளி நிலவே இறங்கி வந்தது போல் இருந்தவளை கண்களால் அருகே அழைக்க
ஓடி வந்து அவனை இருக கட்டிக் கொண்டாள். சுகமான அணைப்பு அவனும் அணைத்தான். இருவரும் கண்கள் மூடி லயித்திருக்க,
"சாப்பிடலாம்" புலாவ், பன்னீர் மசாலா அவளுக்கு ஊட்டி விட்டவன் அவனும் சாப்பிட, அவள் அவனுக்கு ஊட்டி விட, சிரித்துக் கொண்டே சாப்பிட்டனர்.
அவளுக்கு அவனுடன் நிலவை ரசிக்க ஆசை வர, அவன் கையினை பிடித்து கொண்டு பால்கனி சென்றாள். ஊட்டியின் அழகு இன்னும் மகிவினை தர,
"ஊட்டி வர வரைக்கும் தூங்கி இருக்கேன். நிஜமாவே இது ஊட்டி தானா கனவு மாதிரி இருக்கு"
"இன்னும் கனவுல தான் இருக்கியாடி"
"இந்த கனவு எனக்கானது, நமக்கானது, இதுல யாரும் வந்து பிரச்சனை பண்ண மாட்டாங்க" நெஞ்சில் சாய்ந்து வெண்ணிலவை ரசிக்க, அவனும் ரசித்தான் அவன் வெள்ளி நிலவை
நெஞ்சில் சாய்ந்து இருந்தவள் "போதைப் பொருள் பிரச்சனை முடிஞ்சது, எவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கீங்க உங்களை நினச்சா பெருமையா இருக்குங்க, முதல்ல பயம் இருந்துச்சி அப்புறம் உங்க மேல எனக்கு இருந்த நம்பிக்கை நீங்க சரி பண்ணுவீங்கன்னு தோணுச்சு அப்புறம் நித்யா, செந்தில் அண்ணா சேர்ந்தாச்சு, தாரிகாக்கு தான் மாப்பிள்ளை தேடணும், இன்னும் சிங்கிளா சுத்திட்டு இருக்கா, சக்கரை கூட கடை பக்கத்துல யாரையோ பார்த்து பார்த்து சிரிக்கிறான் விசாரிக்கனுங்க"
" சிவா, சக்கரை முக்கியமா மாப்பிள்ளை இவங்க எல்லாரும் தான் இந்த கும்பலை பிடிக்க கஷ்டப்பட்டாங்க, சிவாவும், தாரிக்காவும் விரும்புறாங்க, உனக்கு இதுல பிரச்சனை எதுவும் இல்லையே"
"நிஜமாவாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம், பாவம் சிவா அண்ணா உங்க மேல இருக்குற பாசத்துல பேசிட்டாரு, எனக்கு போன் பண்ணி அழுத்துட்டாரு, நான் எவ்வளவு சொல்லியும் அழுகையை நிறுத்தலை, ரொம்ப சங்கடமா இருந்தது"
"நானும் பேசிட்டேன் இப்போ சரி ஆகிட்டான்"
"ஊருக்கு போனதும் முதல் வேலை இதாங்க, அப்டியே சக்கரைக்கும்"
"அதுவும் பார்த்து pesiyachu அவனுக்கு பிடிச்ச பொண்ண"
"எப்படிங்க நான் சொல்ல வரத நீங்க செஞ்சி முடிச்சிடுறீங்க"
சிரித்தவன் "இப்போ நாம இங்க வந்த வேலையை பார்க்கலாமா"
கன்னக் கதுப்புகள் மருதாணி பூசியது சிவந்து கொள்ள, அவளை தன் பக்கம் திருப்ப, அவன் நெற்றியோடு நெற்றி முட்டியவளின் நாசியும் சேர்ந்தே ஒட்டிக் கொள்ள, நான்கு இதழ்களும் துடித்தன தன் இணையுடன் சேர்ந்து இன்பம் பறிமாறிக் கொள்ள, அவளை சுமந்துக் கொண்டே அறையின் உள்ளே சென்றவன் அவளின் பின்னங்கழுத்தில் தன் கையினை எடுத்துச் சென்று சுருளான கூந்தலை சேர்த்து அழுத்தி பிடித்தவன் இதழ்களின் இடைவெளியை குறைத்து இன்பம் கூட்டிட இவர்களை கண்டு வெள்ளி நிலவும் நாணம் ஏந்தி மேகத்தினுள் மறைந்து போனாள்.
இனி நித்தமும் அவனாகிப் போனான் அவளுக்கு....
......... முற்றும்..........