மயூரன் துரோகியாகி விட்டான் என்று அரிஹந்த் சொன்னதும் ஒரு கணம் பூமி சுழல்வது நின்று விட்டது போலத் தோன்றியது சுவர்ணாவுக்கு. காதுகளில் ஞொய்...என்ற சத்தம். கட்டுப்பாடு இல்லாமல் மூளை என்னென்னவோ செய்தது. அவளுக்கு உணர்வு வந்த போது கைகளில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள் முத்துக்குமாரி. அரிஹந்த் அவளது முதுகை நீவிக் கொண்டிருந்தான். கலாவோ முழங்காலில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள்.
"என்ன சொன்னாய் அரிஹந்த்? மயூரன் துரோகியா? யார் சொன்னார்கள்?" என்றாள் சுவர்ணா ஆத்திரமாக.
"நீ பதட்டப்படாதே சுவர்ணா. அவனுக்கு தெரிந்த விஷயங்களை வைத்து ஊகித்திருக்கிறான் அவ்வளவு தான். அது உண்மையாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை" என்றார் மாரிச்சாமி சமாதானமாக.
நடுக்கடலில் கரை காண முடியாமல் தவிக்கும் போது ஒரு சிறு கழி அகப்பட்டாலும் அதனைப் பிடித்துக் கொண்டு கரை சேர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை தோன்றும் அல்லவா அது போல ஒரு நம்பிக்கை வந்தது சுவர்ணாவுக்கு. அப்போது தான் தன் கையில் காயம் உள்ளதையும் அதிலிருந்து ரத்தம் வருவதையும் வலிப்பதையுமே உணர்ந்தாள் சுவர்ணா.
கேள்வியாக அரிஹந்தைப் பார்த்தாள்.
"மயூரனைப் பற்றிச் சொன்னதுமே கொஞ்ச நேரம் நீ பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாய் சுவர்ணா. பிறகு திடீரென ஆவேசம் வந்தவள் போல கத்திக் கொண்டே ஓடி மரங்களை ஓங்கி ஓங்கி அறைந்தாய். கையில் கத்தியை எடுத்துக் கொண்டு என்னென்னவோ பிதற்றியபடி வெட்ட ஆரம்பித்தாய். நாங்கள் அரண்டு போய் விட்டோம். கலா தான் ஓங்கி ஒரு அறை கொடுத்து, உன் தலையில் தண்ணீரை ஊற்றி நிலைக்குக் கொண்டு வந்தாள்" என்றான் அரிஹந்த்.
மயூரனை துரோகி என்ற அரிஹந்த் மீது கடுமையான கோபம் வந்தது சுவர்ணாவுக்கு.
"நீயாக ஏதோ நினைத்துக் கொண்டு என் மயூரனை துரோகி என்று சொல்லி விட்டாயே? ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டாதே! இதுவே கலா துரோகி என்றால் உனக்கு எப்படி இருக்கும்?" என்றாள் சுவர்ணா.
அது வரையில் பேசாமல் இருந்த கலா தலை நிமிர்ந்தாள். அவளது கண்கள் சிவப்பாக நெருப்பு போல ஜொலித்தன.
"நான் துரோகி என்று தெரிந்தால் நிச்சயம் அரிஹந்த் இப்படிப் பித்துப் பிடித்தவன் போல நடந்து கொள்ள மாட்டான். நான் துரோகியாக ஆகவும் மாட்டேன்." என்றாள்.
பித்துப் பிடித்தவள் போலவா நான் நடந்து கொண்டேன்? அது ஏன் என்று கலாவுக்குமா புரியவில்லை? மயூரன் மேல் நான் வைத்திருக்கும் காதல் அவளுக்கு தெரியாதா என்ன? பிறகு ஏன் இப்படிக் குத்திக் காட்டிப் பேசுகிறாள்? என்று எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்தாள்.
"நான் உன்னைப் போல காதலுக்காக வரவில்லையடி. கடமைக்காக வந்துள்ளேன். நீ மயூரனோடு அதிக நேரம் செலவழிக்கலாம், அதோடு அவனுக்குப் பிடித்த கொள்கைக்காக போராடுவது தான் உனது காதலைக் காட்டும் வழி என்று நினைத்து தானே நீ வந்தாய்?" என்றாள் கலா.
கலாவின் வார்த்தைகள் தீயினால் சுட்டது போல சுவர்ணாவின் இதயத்தை எரித்தன. அவள் சொல்வதில் முழுக்க உண்மையும் இல்லாமல் இல்லை. ஜேத்தாவிலிருந்து கிளம்பும் போது மயூரனோடு அதிக நேரம் செலவழிக்கலாம் என்று அவள் நினைத்தாள் தான். அது மட்டுமல்ல, வீட்டுக்குள்ளே இருந்து தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்வது அவளுக்கு அலுத்தும் போயிருந்தது. பெண்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அனைவரும் சொன்ன போது கூட அது ஒன்றும் அத்தனை பெரிய வேலையாக இருக்காது, ஏதோ சிலர் பேசி வருகிறார்கள். நாளடவில் எல்லாம் சரியாகி விடும். அவர்கள் பிரசங்கம் செய்த இடங்களில் நாம் போய் அதற்கு எதிராகப் பிரசங்கம் செய்தால் போதும், அதனால் வீட்டிலிருந்து வெளியேறி பல இடங்களைப் பார்க்கலாம் அதோடு முக்கியமாக மயூரனோடு அதிக நேரம் செலவழிக்கலாம் என்பதே அவளது எண்ணமாக இருந்தது என்பதும் உண்மை தான்.
ஆனால் அந்தப் பயணம் அவளை மிகவும் மாற்றி விட்டது. பல ஊர்களில் சிறு பெண் குழந்தைகளைக் கூட வயதான பெரியவருக்கு பணத்துக்காக கல்யாணம் செய்து கொடுப்பதையும், அந்தக் குழந்தை சில நாட்களிலேயே எப்படியோ இறந்து விடுவதையும் பார்த்தாள். அதோடு கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்கள், புகுந்த வீட்டாரின் காம இச்சைக்கு பலியாகி கர்ப்பமான விதவைகள், அவர்களை வீட்டை விட்டு விரட்டிய அவல நிலை, என்று பல கொடுமைகளை அவள் பார்க்க நேர்ந்தது. அவை சுவர்ணாவின் மனதில் பல மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தன. ஆண்கள் கையில் கட்டுப்பாடு இருப்பதால் தானே 15 வயது குழந்தையை 60 வயது கிழவனுக்கு மணம் செய்து வைக்கிறார்கள்? அந்தப் பெண்ணின் தாய்க்கு அதிகாரம் இருந்தால் அதை அவள் அனுமதித்திருப்பாளா? பணப்பேயாக இருக்கிறாள் தாய் என்றே வைத்துக் கொண்டாலும்! ஊர் சபையில் கற்றறிந்த பெண்கள் இருந்தால் இது போன்ற கல்யாணத்திற்கு அனுமதி கொடுப்பார்களா? இப்படியும் கொடுமை நடக்கிறதே! என்று சூழ்நிலையின் தீவிரம் அப்போது தான் அவளுக்கு நன்கு புரிந்தது. இவற்றை முடிந்த வரை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். போராட வேண்டும். என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அதற்காக மயூரன் மேல் உள்ள காதல் குறைந்து விட்டதா என்றால் இல்லை! மற்ற ஆண்களைப் பார்க்கும் போது மயூரன் அவள் கண்களுக்கு மிகவும் நல்லவனாக, உற்ற தோழனாகத் தெரிந்தான்.
மயூரன் மேல் உள்ள காதலுக்காகத்தான் நீ வந்தாய்! என்று கலா சொன்னதும் சுவர்ணாவின் மனம் கொந்தளித்தது. அந்த கணமே அந்த இடத்தை விட்டுப் போய் விட வேண்டும், இவள் யார்? என்னைக் குற்றம் சாட்ட? என்ற ஆத்திரம் தோன்றியது. ஆனால் அவளது பயண அனுபவங்கள் மனதை பண் படுத்தி இருந்தன. கலாவின் அருகே சென்று அமர்ந்தாள் சுவர்ணா.
"நீ சொல்வதில் தவறு இல்லை கலா. ஆரம்பத்தில் நான் அப்படி நினைத்தேன் என்பது உண்மை தான். ஆனால் பயணம் என்னை மாற்றி விட்டது உனக்குத் தெரியவில்லை. பெண்கள் பல கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுவதற்கு முன்பாகவே கூட கௌதமி பற்றி நினைத்ததும் கேட்டதும் நான் தான் கலா. அப்போது என் மனதில் பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை. ஆனால் இன்று நான் கொள்கைக்காகத்தான் போராடுகிறேன். இத்தனை புரிந்த உனக்கு என் மனதும் புரிந்திருக்கும் என்று நினைத்தேன் கலா. நீ இப்படிச் சொன்னது என் மனதை மிகவும் நோகச் செய்து விட்டது" என்றாள் சுவர்ணா.
கண்ணீரோடு அவளைக் கட்டிக் கொண்டாள் கலா.
"என்னை மன்னித்து விடு சுவர்ணா! நான் அப்படிப் பேசியது தவறு தான். மன முதிர்ச்சி, பக்குவம் என்றெல்லாம் பேசும் நான் உன்னை அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது. மன்னித்து விடு. ஆனால் சுவர்ணா, நீ உன் உணர்ச்சிகளைக் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமடி! பார்! எப்படிக் காயப்படுத்திக் கொண்டு விட்டாய்?" என்று அன்போடு சொல்லி அவளது கட்டுப் போட்ட இடத்தை வருடினாள் கலா. அவளை மீண்டும் அணைத்துக் கொண்டாள் சுவர்ணா. ஆனால் மனதில் உள்ள பாரம் போகவே இல்லை. இன்னமும் அதிகமானது போல இருந்தது. மயூரனைப் பற்றி கலா என்ன நினைக்கிறாள் என்று தெரிந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தாள் சுவர்ணா.
"நீயும் மயூரன் துரோகி என்று நினைக்கிறாயா கலா?" என்றாள் சுவர்ணா.
பேசிய தோழியை ஆழமாகப் பார்த்தாள் கலா. அவளது கண்களில் சோகம், வருத்தம் வேதனை எல்லாமே இருந்தது.
"என்ன நினைப்பது என்றே தெரியவில்லை சுவர்ணா. ஆனால் ஹரனுக்கு ஏதோ ஆபத்து என்று என் உள் மனம் எச்சரிக்கிறது. அவன் உயிரோடு இருக்கிறானா? என்றே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அப்படி நேர்ந்திருக்கும் பட்சத்தில் ஏன் மயூரன் நமக்கு தகவல் தெரிவிக்கவில்லை? அது தான் என் கவலையை அதிகரிக்கிறது சுவர்ணா. அதோடு கோமதி அத்தை எதற்காக வர வேண்டும்? இவையெல்லாமே எனக்கு நல்லதாகப் படவில்லையடி" என்றாள் கலா.
கலா சொல்வதும் உண்மை தானே? நமது திட்டத்தில் என் அம்மா இடம் பெறவே இல்லையே? முத்துக்குமாரியும், மாரிச்சாமியும் சேர்ந்து கொண்டு மயூரனை துரோகி என்கிறார்கள். கலா என் அண்ணன் அப்படிப்பட்டவன் இல்லை என்று அடித்துச் சொல்லாமல் ஹரனைப் பற்றிய கவலை என்கிறாள். ஹரனுக்கு ஆபத்து என்றால் மயூரனுக்கும் தானே ஆபத்து? ஆனால் ஏன் யாருமே அவனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை? அப்படியானால் இவர்கள் அனைவரும் மயூரன் துரோகி என்றே முடிவு செய்து விட்டார்களா? ஆதாரம் எதுவும் இல்லாமல் அப்படி எப்படி உறுதியாக எண்ண முடியும்? அவளது யோசனைகள் நீண்டன.
மயூரன் துரோகம் செய்வான் என்பதை சுவர்ணாவால் நம்பவே முடியவில்லை. ஒரு வேளை செய்திருந்தால் என்று மூளையின் ஓரத்தில் ஒரு சிறிய கேள்வி எழுந்த போது நெஞ்சே வெடித்து விடுவது போன்ற வலி உண்டானது. இதயம் தாறுமாறாகத் துடித்தது. அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லி ஓவென அழ வேண்டும் என்ற ஏக்கம் எழுந்தது.
மன உளைச்சல், ரத்த சேதம் வேறு, களைப்பினால் தன்னையும் மீறி உறங்கி விட்டாள் சுவர்ணா. கலாவால் கண்களை மூடக் கூட முடியவில்லை. முத்துக்குமாரி, அரிஹந்த், மாரிச்சாமி மூவரும் சற்று தொலைவில் இருந்த ஒரு மரத்தடியில் மிகவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அரிஹந்தின் பார்வை கலா மேல் பட்டதும் கண்கள் கனிந்தன அவனுக்கு. எழுந்து அவர்கள் அருகில் சென்றாள் கலா.
"அக்கா! ஹரன் உயிரோடு இருக்கிறானா இல்லையா? தயவு செய்து சொல்லுங்கள். சுவர்ணாவின் எதிரில் உங்களால் பல விஷயங்களைப் பேச முடியவில்லை என்று புரிந்து கொண்டேன். கோமதி அத்தையை ஏன் வரச் சொன்னீர்கள்? மயூரன் எங்கே? ஹரன் என்ன ஆனான்? மயூரனால் ஹரனுக்கு ஆபத்தா?" என்று படபடவென ஆனால் மெல்லிய குரலில் கேட்டாள் கலா. அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான் அரிஹந்த். அதில் காதலோ வேறு உணர்வுகளோ இல்லை. மாறாக துன்பத்தில் பங்கு கொள்ளும் நட்பு இருந்தது.
"மனதைத் தேற்றிக் கொள் கலா. உன் அண்ணன் மயூரன் பாடலிபுத்திரத்துக்குச் சென்று விட்டான் என்று தெரிகிறது. அங்கே உங்களது தந்தை வீட்டில் இருக்கிறான் என்று கேள்வி" என்றான் அரிஹந்த்.
தந்தையைப் பற்றிப் பேசியதுமே தன்னையும் அறியாமல் தன் கைகளை முறுக்கிக் கொண்டாள் கலா. அவள் கைகளோடு சேர்ந்திருந்த அரிஹந்தின் கைகளும் முறுங்கின. ஆ என்றான் அவனையும் அறியாமல். அவனது கைகளை விடுவித்தாள் கலா.
"என் அப்பா, துணை தளபதி வீரசிம்மரின் வீட்டிலா இருக்கிறான் மயூரன்? இதற்கு ஹரன் எப்படி ஒப்புக் கொண்டான்? பாவனனுக்கும், ஆதிவனுக்கு இவை எல்லாம் தெரியுமா? தளபதியின் வீட்டுக்கு ஏன் மயூரன் போனான்? மகன் என்ற முறையிலா? இல்லை அவருக்கும்...இந்த அமைப்புக்கும்...." முடிக்காமல் நிறுத்தினாள் கலா. அவளது புத்திசாதுர்யத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை அரிஹந்தால்.
"மகன் என்ற முறையிலும், அந்த அமைப்பின் வருங்காலக் காவலன் என்ற முறையிலும் தான் போயிருக்கிறான் கலா" என்றார் மாரிச்சாமி.
கலா கேள்விக்குறியோடு பார்க்க எல்லாவற்றையும் விளக்கினார் மாரிச்சாமி.
மாரிச்சாமிக்கும், முத்துக்குமாரிக்கும் தெரிந்த ஒருவன் அந்த முகாமில் சமையல் வேலை செய்கிறான். மூளை கிடையாது என்றாலும் கொஞ்சம் காசு கொடுத்தால் என்ன விவரம் வேண்டுமோ சொல்லி விடுவான். அவன் மயூரனையும் ஹரனையும் பற்றி பல விஷயங்கள் சொன்னான். மயூரனுக்கும், ஹரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்றான் அதோடு மயூரனுக்கு வசதியான வாழ்க்கை, ஏவிய வேலைகளைச் செய்ய வேலைக்காரர்கள், விதம் விதமான உணவு, மது பானம் போன்றவற்றை அனுபவிக்காமல் இத்தனை நாட்கள் வாழ்க்கையை வீணடித்து விட்டோமே? என்று தோன்றி இருக்கிறது. அவனது தாயின் பிடிவாதத்தால் தான் இப்படிப்பட்ட வாழ்க்கையை இழந்தோம் என்று மயூரன் சொல்ல அதற்கு ஹரன் பதில் சொல்ல என்று வாக்கு வாதம் வளர்ந்திருக்கிறது. இத்தனை விஷயமும் சமையற்காரன் மூலமாக மாரிச்சாமிக்கு தெரிய வந்தன. அவந்து பேச்சில் குள்ளன் ஒருவன் இரு சகோதரர்களையும் உளவு பார்த்தான் என்ற வாக்கியம் நம்பிக்கையளித்தது மாரிச்சாமிக்கு.
சமையற்காரன் உதவியோடு குள்ளன் யார்? எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொண்டான் மாரிச்சாமி. அந்தக் குள்ளனுக்கு வறுத்த இறைச்சி என்றால் உயிர். அதைத் தெரிந்து கொண்டு மாரிச்சாமி ஒரு வேலைக்காரனைப் போல உள்ளே சென்று குள்ளனுக்கு வறுத்த இறைச்சி, தேன் இவற்றைக் கொடுத்து விஷயத்தைக் கறந்து விட்டான். இரு சகோதரர்களையும் அவர்களை வேவு பார்க்க அந்தக் குள்ளனை ஆதிவன் தான் நியமித்திருந்தான் என்ற உண்மை தெரிந்தது. இருவருக்கும் இடையே நடந்த வாக்கு வாதங்களை அப்படியே கூறி விட்டான் குள்ளன். மயூரன் முற்றிலுமாக மனம் மாறி விட்டான் என்பதைப் புரிந்து கொண்டு விட்டான் ஹரன். ஆனால் அதற்குள் மயூரன் தன் தம்பி வசதியான வாழ்வை விரும்பவில்லை, அமைப்போடு சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான் மயூரன். அதன் பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? என்று தெரியவில்லை. அதே நாள் இரவு ஹரனுக்கு உடல் நலமில்லாமல் போய் விட்டது. குள்ளன் தான் அவன் கேட்டான் என்று மாவிலையைப் பறித்து வந்து கொடுத்தான். அதில் ஏதோ எழுதி அதை தூக்கி எறிந்து விட்டான் ஹரன். யாரோ வரும் சத்தம் கேட்க குள்ளன் ஓடி விட்டான். ஆனால் அதன் பிறகு ஹரனைக் காணவே இல்லை. மயூரன் மறு நாளே புறப்பட்டு பாடலிபுத்திரம் போய் விட்டான் என்ற விவரங்களைக் கூறினான் குள்ளன்.
இவை அனைத்தையும் சுருக்கமாக சங்கேத மொழியில் எழுதி புறாவின் காலில் கட்டி அனுப்பி விட்டார்கள் முத்துக்குமாரியும், மாரிச்சாமியும். உடனே விரைந்து செயல்பட்ட கோமதி படலிபுத்திரத்துக்கு விரைந்து சென்று விட்டாள். ஏதோ ஒரு முக்கிய விஷயம் தெரிந்திருப்பதாகவும், இன்னும் இரு நாட்களில் வந்து விடுவதாகவும் செய்தி அனுப்பி இருக்கிறாள் என்று அத்தனை விஷயங்களையும் சொல்லி முடித்தார்கள்.
அசையாத கற்சிலை போல அமர்ந்திருந்தாள் கலா.