My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன் - பாகம் -22

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
"நீ இல்லாத இந்த பொழுது எப்படி கடப்பேன் உலகமே எனக்கு எதிராய் இருப்பது போல் மாயத்தோற்றம் தர மருண்டு நிற்கிறேன் தாங்கிக் கொள்ள வருவாயா"

.... கனலியின் காதல் மொழி...

பாகம்-22

....

இறுக்கமான சூழலில் இரவு கடந்தது, மிகிரனின் கைபேசிக்கு பல முறை அழைத்தும் அவன் எடுக்கவே இல்லை. காலையில் கனலியைப் பார்க்க தாரிகா வந்திருந்தாள். வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தவள் வந்ததும் தோழிகளைப் பார்க்க வந்து விட்டாள். சிவா ஹாலில் அமர்ந்து செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்க,

தாரிகாவைப் பார்த்ததும் பார்வையை மாற்றவே மறந்து போனான். அவன் விழி ஈர்ப்பில் பாவையும் ஈர்க்கப்பட, செந்தில் வந்து தோளைத் தட்டி நிகழ் உலகிற்கு மீட்டு வந்தான்.அசடு வழிந்தவன் சிரிக்க இவனோ தலையில் அடித்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்தான்.

"ஏன்டா நல்லா இருந்த புருஷன், பொண்டாட்டி யை பிரிச்சிட்டு இங்க நீ மட்டும் ரூட் விட்டுட்டு இருக்கியா"

"நான் பொய் சொல்லலையே உண்மைய தானே சொன்னேன்"

"என்ன உண்மை "

"என்னடா மிகிரன் அப்பா செத்தது அதனால மிகிரன் எவ்ளோ கஷ்ட பட்டான் தெரியுமா, அவனோட படிப்பு, கனவு, உங்க வாழ்க்கை, அம்மாவோட சந்தோஷம், இந்த வீட்டோட நிம்மதி இப்படி எல்லாம் போச்சு இதுக்கு காரணம் கனலி அப்பா, அந்த நிலம் அவர் பேர்ல தான் இருந்தது, நான் உண்மையை தெரிஞ்சிக்கிட்டு தான் பேசுறேன்"

"கனலி அப்பா பேர்ல பத்திரம் இருக்கலாம் அவர் அந்த ஊர்ல இல்லை. அவங்க அண்ணன் தான் இருந்தாரு அவரே தம்பியோட சொத்தை ஏமாத்தி எழுதி வாங்கிட்டாரு, அவர் தான் இவரோட பேர யூஸ் பண்ணி தப்பு பண்ணிருக்காரு, எங்க அப்பா, ச்சே சொல்லவே அருவருப்பா இருக்கு அப்பன்ற தகுதிய அவன் இழந்துட்டான் அவன்லாம் ஒரு ஆளுன்னு அவன் சொல்றத நம்பிட்டு தங்கச்சியை இப்டி பேசிட்டியே"

செந்தில் சொல்வதை யோசித்தவன் "இப்டி கூட நடக்குமா டா"

"பணம், சொத்துக்காக பெத்தவங்க, கூட பொறந்தவங்களையே கொல்ற காலம் டா இது, என் வாழ்க்கையில என்ன நடந்துதுன்னு உனக்கு தெரியும்ல என்னை பெத்தவங்க தான இத செஞ்சாங்க"

"இப்போ தான் டா புரியுது உங்க அப்பன் சொன்னதை போய் நம்பிட்டேன் டா, தங்கச்சி பாவம் டா, நான் ரொம்ப பேசிட்டேன்"

"இப்போ புரிஞ்சி என்ன பண்றது கனலி சொல்ல சொல்ல கேட்காம துணிலாம் எடுத்துட்டு வீட்டை விட்டு கிளம்பிட்டா, மச்சான் வந்து கூப்டா வருவாலாம், தன் அப்பா மேல எந்த தப்பும் இல்லைனு நிரூபிச்சிட்டு தான் இந்த வீட்டு மருமகளா வருவாளாம்"

"இது எப்போடா நடந்தது"

"நைட் தான் டா நீ தான் தூங்க போய்ட்டியே"

"ஏன்டா சொல்ல மாட்ட, அங்க எவ்ளோ கஷ்ட பட்டோம், மறைஞ்சி இருந்து அவங்க எல்லாரையும் பார்த்துட்டே, போலீஸ்க்கு தகவல் கொடுத்துட்டு, சாப்பிடல, தூங்கலை தெரியுமா"

"அது எல்லாம் புரியுது, எல்லா உதவியும் பண்ணிட்டு, கடைசில புரிஞ்சிக்காம தங்கச்சிய நோகடிச்சிட்ட"

"இப்டி ஆகும்னு நினைக்கல டா, இப்போ என்ன பண்றது, மிகிரன் வந்தா தங்கச்சிய காணாம என்ன பண்ணுவானோ, நினைச்சாலே பயமா இருக்கு"

"எனக்கே அதான் ஒன்னும் புரியல, மச்சான் போனுக்கு நிறைய தடவ ட்ரை பண்ணிட்டேன். கால் போகல"

"நானும் நிறைய முறை ட்ரை பண்ணிட்டேன், எங்க இருக்காருன்னு தெரியல, எங்க வாழ்க்கையை சரி பண்ணவருக்கு எந்த பிரச்சனை யும் வந்துடக் கூடாது கல்யாணம் ஆகி 2 நாள்ல அங்க வந்துட்டாரு, அதுக்குள்ளே இவ்ளோ பெரிய பிரச்சனை கடவுளே எப்படியாவது இந்த பிரச்சனை யை சரி பண்ணி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிடு"

"வாடா நாம தங்கச்சி வீட்டுக்கு போய்ட்டு பேசி கூட்டிட்டு வந்துடுவோம்"

"சரி வா பேசி பாப்போம்" செந்திலும், சிவாவும் கிளம்பி கனலி வீட்டுக்கு நித்யாவுடன் பேசிக் கொண்டே, யாழினியுடன் விளையாடிக் கொண்டிருக்க, சிவாவோ ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். , கனலியை பார்க்க சென்ற தாரிகா அறையில் அவள் இல்லாமல் போக,

"ஆன்ட்டி கனலி ரூம் ல இல்லையே எங்க போனா"

அவரால் என்ன பதில் சொல்லி விட முடியும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சென்ற மருமகளை நினைத்தவர் அமைதியாய் இருக்க

நித்யாவோ "தாரிக்கா இப்டி வா டி" தனியே அழைத்து சென்றவள் நடந்ததை சொல்ல, "முட்டாள் டி அவ, மிகிரன் அண்ணா பத்தி எனக்கே தெரியும் அவர் இதெல்லாம் நம்ப மாட்டார்னு, அதுவும் இல்லாம அண்ணன் இல்லாத நேரம் அவசரப்பட்டு கிளம்பி போகலாமா இவ"

"அம்மா, நான், மாமா எவ்ளோ சொல்லி பார்த்துட்டோம் அவ கேட்கவே இல்லை. அண்ணன் போன் வேற போகல, இப்போ அண்ணன் வந்து கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு தெரியல"

இவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு மிகிரன் சென்றது பத்திர பதிவு அலுவகத்திற்கு, கனலியின் பெரியப்பா பணத்துக்காக தம்பியின் சொத்தை போலி கையெழுத்து போட்டு மிகிரன் அப்பாவிற்கு விற்க, அதை கண்டுபிடித்து கனலியின் அப்பாவிடம் சேர்த்திருக்கிறார். செந்தில் அப்பா, அம்மாவின் கேவலமான பேச்சுக்களால் மனம் வருந்தியவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருக்க அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். தன் மாமனாரிடம் விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டவன் வருவதற்குள் கனலி அவசரப்பட்டுவிட்டாள்.

மிகிரன் பத்திரத்தின் நகல், கனலியின் பெரியப்பா நாகராஜன் பெயருக்கு மாற்றப்பட்ட சொத்து விவரம் போலியாக கையெழுத்து போட்டது என அணைத்து ஆதாரங்களையும் எடுத்து கொண்டு ரெஜிஸ்டர் ஆபீஸி லிருந்து வெளியே வந்தவன் தன்னுடைய போனை பார்க்க, சார்ஜ் இல்லாமல் இருந்தது பக்கத்தில் உள்ள கடையில் சார்ஜ் போட்டவன் பிரச்சனை யில் சாப்பிடவும் மறந்திருந்தான்.

இப்பொழுது மாலை ஆகி விட, தன் மாமனாரின் மேல் சுமத்திய பழியை போக்கி, கனலியிடம் சிறு வயதில் இருந்தே துளிர்த்து இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கும் தங்களின் காதலை சொல்லி அவளின் மகிழ்வை பார்க்க வேண்டும்.

இவ்வளவு ஆண்டுகள் மறைத்து வைத்த காதலை அவளிடம் காட்ட வேண்டும். கனலியின் அப்பாவிடம் திருமணத்திற்கு முந்நாள் பேசியது நினைவுக்கு வந்தது....

கோவிலில் திருமண பேச்சு நடந்து முடிந்த பின் இரவு கனலியின் அப்பாவை தனியே அழைத்தவன் திருமணம் பற்றி பேச

"சொல்லுங்க மாப்பிள்ளை கூப்பிடீங்களே" அவரின் மாப்பிள்ளை என்ற அழைப்பே இவருக்கு சம்மதம் என்பது புரிந்து போனது

"மாமா நான் உங்க கிட்ட நிறைய விஷயம் சொல்லணும், இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா, தெரியாதானு யோசிச்சிட்டு இருந்தேன் சொல்லிடறது தான் நல்லது அதான்"

அவனின் தயக்கம் அவருக்கு வியப்பையே அளித்தது எதையும் விரைவாய் செய்து முடிப்பவன், அவன் தயங்கி பார்த்தது இல்லை அவனைப் பற்றி விசாரித்தது மட்டுமின்றி கொஞ்ச நாட்கள் பழகியதில் புரிந்தும் வைத்துள்ளார்.

"என்ன மாப்பிள்ளை சொல்லுங்க தயக்கம் வேணாம்"

" மாமா, அத்தையோட அம்மா ஊரு இடைக்கழிநாடு தானே "

"ஆமா உங்களுக்கு எப்படி தெரியும், ரொம்ப வருஷம் ஆகிடுச்சு மாப்ள அந்த ஊருக்கு போய், கனலிக்கு அடி பட்டுச்சு அதுல இருந்தே போறது இல்லை அங்க"

"எனக்கு தெரியும் மாமா, அவளுக்கு அடி படும் போது நானும் கூட தான் இருந்தேன்"

அதிர்ச்சியாக மிகிரனைப் பார்த்தவர் "அப்போ அந்த மகி நீங்களா"

"ஆமா மாமா நான் தான்"

"ஹாஸ்பிடல்ல டாக்டர் கேட்டாங்க, மகிய கூட்டிட்டு வந்தா அவ சரி ஆகிடுவான்னு, நானும் ஊருக்கு வந்து தேடுனேன் அங்க இல்லை, விசாரிச்சதுல ஊருக்கு போய்ட்டிங்கன்னு சொன்னாங்க, எவ்வளவோ முயற்சி பண்ணேன் கண்டு பிடிக்க முடியல, ஒரு பக்கம் ஹாஸ்பிடல், விட்டுட்டும் வர முடியலை ஊர்ல சொத்து தகராரு, அப்டியே வருஷங்கள் போய்டுச்சு, அடிக்கடி கனலிக்கு தெரியாம டாக்டர் கிட்ட செக்கப் கூட்டிட்டு போவேன், கனவு விஷயம் தான் எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தோம். ஆனால் கொஞ்ச நாளா அவளுக்கு கனவு இல்லை.

எங்களுக்கும் குழப்பம் தான் டாக்டர் சொன்னாங்க ஒரு வேளை கல்யாணம் பணிகிட்டவர நேசிக்க ஆரம்பிச்சதுல பழசு மறந்திருக்கும் அதோட சேர்ந்து கனவும் மறைஞ்சிடுச்சின்னு, அப்புறம் தான் எங்களுக்கு நிம்மதியா இருந்தது"

"அவ கனவுல பார்த்தது சின்ன வயசு மகி அதான் என்னை பார்த்ததும் அடையாளம் தெரியல, ஆனால் அவ மனசு என்னை உணர்ந்தந்திருக்கு, அவளால அதை புரிஞ்சிக்க முடியல, இதை அவ யோசிச்சி இருந்தா என்னை அவளுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கும்"

"அம்மாவோட ஊர் தானே அது, மகாராஜா பூபதி, அன்னபூரணி அம்மாவும் அந்த ஊர்ல செல்வாக்கும் ரொம்ப மரியாதையான குடும்பம் அவங்களுது, அவங்களுக்கு பிறகு தான் சொத்து பிரச்சனை, கடன் சேர்ந்து அந்த ஊரை விட்டே போய்ட்டாங்கன்னு கேள்வி பட்டேன்"

"நிஜம் தான் மாமா பணம், சொத்து தான் இங்க உறவுகளை தீர்மானிக்குது. ஒவ்வொரு வருஷமும் ஸ்கூல் லீவ் க்கு வந்துடுவேன் அதுவும் என் அம்முக்காக"

"நீ எதையும் மறக்கலையே பா, ஒரு தடவ தான் உன்னை சின்ன வயசுல உங்களை பார்த்தது, வீட்டுக்கு வந்ததும் மகி, மகின்னு உங்களை பத்தியே வாய் ஓயாம சொல்லுவா, அதுலயே உங்களை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி"

"எங்களை புரிஞ்சிகிடீங்களே ரொம்ப சந்தோஷம் மாமா, உங்களுக்கு எப்படி புரிய வைக்குறதுன்னு ரொம்ப யோசயனையா இருந்தது நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு"

மிகிரனின் கைகளை பிடித்து கொண்டவர், "உங்களை சின்ன வயசுல பிரிச்சிட்டேன், விளையாட விட்ருந்தாலே அவளும் அடம் பிடிச்சி அழுதுருக்க மாட்டா, அடியும் பட்ருக்காது"

"இனி அவளை பத்திரமா பார்த்துக்குவேன் மாமா, இனி அவ என்னை முழுசா உணர்ந்துடுவா, எனக்கு அவளோட மாற்றம் நல்லாவே புரியுது"

"ரொம்ப சந்தோஷம் மாப்ள" மனம் நிறைந்த உணர்வுடன் சென்றார்.

அந்த நினைவை மீட்டவன் கனலியை பார்க்கும் ஆசையோடு ஊருக்கு வந்து கொண்டிருந்தான்

மிகிரன் வீட்டில் சிலிண்டர் போடும் ஆள் வெளியே செல்லும் நேரம் உள்ளே வந்த சக்கரை அவன் மேல் மோதி கீழே விழுந்தவன், " ஐயோ, அம்மா " கத்தியபடி எழுந்து உள்ளே வர, அவனைப் பார்த்து சிரிப்பு வந்தது அனைவருக்கும்.

"என்ன சக்கரை டிடக்டிவ் வேலை பார்த்தியாமே, சூப்பர் டா, சிபிஐ ல சேர்ந்துட்டேன்னு சொன்னாங்க " தாரிகா சொல்ல

"அட போ அக்கா, நீ வேற உயிரோட வருவேன்னு நினைக்கவே இல்லை, இதுல நீங்க " கேள்வி கேட்டு அதை கிளருறீங்க,

"அப்டி என்ன சோக கதை சொல்லேன் கேட்போம்"

சக்கரையும் சொல்ல, சோகமும், வலியும் சேர்ந்து அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்ததோடு, அவர்களை கொல்லும் கோவமும் வந்தது.

சக்கரையின் சோக கதை அடுத்த அத்தியாயத்தில் கேட்கலாம்
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top