My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன் - பாகம் -21

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
"யார் என்ன சொன்னாலும் நீ எப்படி என்பது எனக்கு தெரியுமே, கவலை பட தேவை இல்லை, நான் இருக்கும் வரை"


.... மிகிரனின் காதல் வரிகள்...


பாகம்-21

செந்திலையும் நித்யாவையும் பிரித்த பிறகு, செந்திலுக்கு நரசிம்மனின் மகளை திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினர்.



நரசிம்மன் போதை காளான் மட்டுமின்றி குழந்தைகள் கடத்துதல், கள்ள சாராயம், என பலவித கடத்தல் தொழிலில் ஈடுபட்டவனுக்கு இரண்டு மனைவிகள் ஒன்று பெற்றோர்கள் பார்த்து வைத்தது மற்றொன்று இவன் விரும்பியது.



நெல்லூரில் தான் விரும்பிய மல்லிகாவை திருமணம் முடித்து அவளுக்கு வீடு வாங்கி கொடுத்தவன் யாருக்கும் தெரியாமல் தான் வந்து செல்வான். மல்லிகாவிற்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் பெண்ணின் மீது மிகுந்த பாசம் நரசிம்மனுக்கு



தான் கேடு கெட்ட செயல்கள் செய்து சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்திற்கும் ஒரே வாரிசான பெண் ஸ்ரேயா மேல் உயிரையே வைத்திருந்தான்.



நரசிம்மன் ஊரிலேயே மிகுந்த செல்வாக்கானவன் ஓரிரு முறை செந்தில் நிலத்திற்காக நரசிம்மனை சந்தித்து பேச நெல்லூரில் வீட்டிற்கு வர வழைத்திருந்தான் அப்போது ஸ்ரேயா, செந்திலப் பார்க்க இவனோ அவளை பார்க்கவே இல்லை.



எல்லோரும் தன் அழகில் ஜொள்ளு விடா குறையாக பார்க்க செந்திலின் பார்வை தன் மேல் விழாமல் இருக்கவும் அதுவே அவன் மேல் அவளுக்கு ஆசை வர காரணமாய் அமைந்தது.



அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்ல ஏற்கனவே அவன் வைத்திருக்கும் நிலத்தின் மீது ஆசை இருந்தவருக்கு தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்றி athan மூலம் நிலத்தை அடைய திட்டம் தீட்டினார்.



அதற்குள் செந்திலுக்கு திருமணம் ஆகி விட என்ன செய்வது என்ற யோசனையில் இருக்க அந்த கேடு கெட்டவனுக்கு பிறந்ததால் அவளுக்கும் கேடு கெட்ட புத்தி தானே வரும்



"அப்பா எனக்கு செந்தில் தான் venum, கல்யாணம் ஆகி இருந்தா என்ன அவளை துரத்தி விட்டுட்டு எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க" என்று சொல்லி விட



" கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லியும் விட மாட்றனா அவன் மேல எவ்ளோ பாசம் வச்சிருப்ப, எப்படியாவது அந்த பொண்ணை துரத்தி விட்டுட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் " அப்பாவின் சொல்லில் மகிழ்ந்தவள்,



அப்பாவின் ஆலோசனப் படி செந்திலின் அப்பா, அம்மாவிடம் நெருங்கி பழகி தன் எண்ணத்தை வெளிப்படுத்த



முதலில் தயங்கிவர்கள் அவர்களின் பணத்திலும் நடிப்பிலும் ஊரில் நரசிம்மனுக்கு கிடைக்கும் மரியாதை யிலும் மயங்கி இருவரின் கைப்பாவயாகினர்.



நித்யாவின் மீது பழி சுமத்தி பஞ்சாயத்த்தில் நிற்க வைத்து வீண் பழியை சுமத்தி துறத்தி விட, செந்தில் கோவமாக எதிர்த்து பேசினான்



நித்யாவை வேறு ஒருவருடன் தொடர்பு படுத்தி பொய்யாக போட்டோ எடிட் செய்து அதை செந்திலிடம் காட்ட அதிர்ந்து போனான்.



பொய் என்று தெரியும் நித்யாவைப் பற்றி பிறர் சொல்லியா தெரிய வேண்டும். ஆனால் எதற்கு தன் மனைவி மீது பழியை போடா வேண்டும் அதற்க்கு பெற்றவர்கள் உதவ வேண்டும் என்பது தான் புரியவில்லை.



நித்யாவின் போட்டோவைக் காட்டி மிரட்டவும் பஞ்சாயத்த்தில் அமைதியாக இருந்தவன் வீட்டில் வந்து சண்டை போட



நரசிம்மனும், ஸ்ரேயாவும் வந்தனர். நரசிம்மன் தெரியும் யார் இந்த பெண் கேள்வியாய் பார்க்க



அவன் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தவள் "பார்த்தீங்களா பா, இப்போ கூட என்னை அவருக்கு தெரியவே இல்லை, புதுசா பார்க்குறாரு, அவர் பொண்டாட்டி மட்டும் தான் தெரியும் போல"



பொண்டாட்டி என்றதும் அதில் கோவப்பட்டவன் "ஹேய் யார் டி நீ, என் பொண்டாட்டி பத்தி பேசுற, இந்த சதி வேலைக்கெல்லாம் நீயும் உடந்தையா"



செந்திலின் சொல்லில் சிரித்தவள் "உடந்தையா இதை செஞ்சதே நான் தான்"



"என்ன செஞ்சதே நீயா, யார் நீ எதுக்காக இப்படி பண்ற" கோவம் தலைக்கேற அவள் கழுத்தினை நெறிக்க, நல்ல வாட்ட சாட்டமான இரு அடியாட்கள் வந்து செந்திலை பிடித்து கொள்ள,



ஸ்ரேயாவும், நரசிம்மனும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து செந்திலப் பார்த்து



"இங்க பாரு உன்னோட கோவம் எங்களை ஒன்னும் செய்யாது, நான் நரசிம்மன் பொண்ணு ஸ்ரேயா, உன்னை எங்க வீட்ல ரெண்டு தடவை பார்த்திருக்கேன். நீ ஒரு முறை கூட என்னை பார்க்கல, அது தான் என்னை திரும்பி பர்க்க வச்சது.நீ எல்லார் மாதிரி சாதாரணமா இருந்திருந்தா நான் உன்னை விட்ருப்பேன். இப்போ நான் நினைச்சபடி நடந்திடுச்சு இனி உனக்கு வேற வழி இல்லை" தன் கையில் இருந்த போனை ஆட்டியபடி சொல்ல



கோவத்தில் கைகள் முறுக்கி நின்றவன் தன்னை பிடித்திருந்த இருவரையும் கோவத்தில் தள்ளி விட்டு அவள் கையில் இருந்த போனை பிடுங்கிக் கொண்டு அவள் கழுத்தினை இறுக்கி சுவற்றோடு சேர்த்து அழுத்தியவன் பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தருகே கொண்டு சென்றான்



நரசிம்மனோ அதிர்ந்து



"செந்தில் என் பொண்ணை விட்டுடு"



செந்திலின் அப்பாவோ "செந்தில் விடு டா"



செந்திலின் அம்மாவோ"டேய் அவங்க பெரிய இடம் அவங்கள பகைச்சிக்காத, ஸ்ரேயாவ கட்டிக்கோ டா உன் மேல பாசமா இருக்கா "



"வாய மூடுங்க இல்லை ஒரே சொருவு சொருவிடுவேன்" அவன் கோவத்தில் மிரண்டு போயினர்.



"இந்த போனல மட்டும் தான் அந்த போட்டோஸ் இருக்கா வேற எங்கனா இருக்கா" பிடித்திருந்த கத்தியை அழுத்தி கேட்க



மூச்சு வாங்க சிரமப் பட்டவள் " இ ல் ல்லை" என்றவுடன் ஒரு கையினால் போனில் இருந்த சிம்மை கழட்டி உடைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன் அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவன் தள்ளி விட்டு கதவை சாத்தி விட்டு வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.



இரண்டு நாளில் நரசிம்மனின் ஆட்கள் செந்திலை கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். திருமணத்திற்கு சம்மதம் கேட்க, அவனோ சம்மதிக்கவில்லை. அவர்களிடமிருந்து தப்பித்து போக இவன் வெளியே சென்றாள் ஆபத்து என்று புரிந்தவர்கள் வண்டியை ஏற்றி கொல்லப் பார்க்க இவனோ தப்பித்து வேறு ஒருவரின் உடலை போட்டு விட்டு இவனின் சட்டை, அடையாளமய் போன் அனைத்தையும் வைத்து விட்டு மறைந்து இருந்தான்.



நண்பன் சிவா மூலமாக உதவிகளை பெற்றவன் கனலி மூலம் வெளியே வந்து விட்டான். அடைத்து வைத்திருக்கும் பொழுது அவனை துன்பறுத்தி சூடு வைத்ததை சட்டையினை திறந்து காட்ட அங்கு இருந்த அனைவருக்கும் கண்கள் கலங்கி விட்டது.



மிகிரனோ செந்திலை அணைத்துக்கொண்டான். அவனுமே கலங்கி விட்டான்.



இவற்றை எல்லாம் பார்த்து கொண்டிருந்த
செந்திலின் அப்பாவோ " எங்களை பிடிச்சு கொடுத்ததால எல்லாம் சரி ஆகிடுச்சுனு நினைக்காத இனிமேல் தான்டா இருக்கு பிரச்சனையே உன் மாமனார் சாவுக்கு காரணம் நாங்க இல்லை, உன் பக்கத்துல இருக்கானே மிகிரன் அவன் பொண்டாட்டியோட அப்பன் தான்டா காரணம், பாதி சொத்து அவன் பேருக்கு எழுதி வச்சிருக்கான்டா உன் மாமா போய் அவன்கிட்ட கேளுடா " என்றதும் அனைவருக்கும் அதிர்ச்சியே"



கோவப்பட்ட மிகிரன் அவரை நெருங்கும் முன் செந்தில் நெருங்கியவன் " மாட்டிக்கிட்டோம்னு பழியை வேற ஒருத்தர் மேல திருப்புறியா உன்னை " அடிக்க போக மிகிரன் தடுத்தவன் இவங்க சொல்றாங்கன்னு நம்பிடுவோமா, வாங்க போகலாம்" என்றவன் தன்னிடம் இருந்த ஆதாரங்களை ஓப்படைத்து விட்டு புகார் எழுதி கொடுத்து விட்டு,



"சார் உங்களை நம்பிதான் இந்த ஆதாரத்தை எல்லாம் கொடுத்துட்டேன். எங்க குடும்பகத்துக்கு பண்ண கொடுமையை கூட மன்னிச்சுடுவோம். ஆனால் சின்ன பசங்கள படிக்க விடாம போதைல சிக்க வச்சு, பொம்பளை பசங்க கூட இதுக்கு அடிமை ஆகிட்டாங்க,

கூட இருக்குற பசங்களையும் சேர்த்து தப்பான வழியில கூட்டிட்டு போக வைக்குற இவங்களை என்ன பண்றது சார், அன்னைக்கு ஸ்கூல்ல பொம்பள பசங்க மயங்கி வீழ்ந்ததும், அவங்கள பெத்தவங்க துடிச்சி அழுத சத்தம் இன்னும் என்னை விட்டு போகல இவங்களுக்கு கொடுக்குற தண்டனை பெருசா இருக்கணும் இனி இந்த போதை மருந்து தயாரிக்குற அதை விக்கிற எண்ணம் இவனுங்களுக்கு வரவே கூடாது, உங்களை தான் சார் முழுசா நம்பி இருக்கோம். "



"மிஸ்டர். மிகிரன், நீங்களும் உங்க நண்பர்களும் சேர்ந்து இவ்வளவு பெரிய ஆளுங்கள பிடிக்க உதவியா இருந்திருக்கீங்க. போதை மருந்து பற்றி எவ்வளவு விழிப்புணர்வு கூட்டம், ஊடகங்கள் மூலமாவும் தெரிய படுத்துறோம் அப்படியும் நடக்குது. இவனுங்கலாம் மனித இனமே இல்லை. நீங்க கவலையே படாதீங்க, இவங்களுக்கு கொடுக்க போகும் தண்டனை கண்டிப்பா பெருசா இருக்கும். என்டிபிஎஸ் சட்டத்தின் பிரிவு 37 போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பிணையில் வெளிவர முடியாதவை. குற்றம் சாட்டப்பட்டால் வாரண்ட் இல்லாமல் கூட கைது செய்யப்படலாம். வெளியே வரவும் முடியாது. தண்டனைகள் மிக கடுமையாகக இருக்கும்.ஆன்டி நார்கோடிக் டாஸ்க் போர்ஸ் கண்காணிப்பாளர் அஜய்குமார் சொல்ல, அவருக்கு நன்றி சொல்லி,



வெளியே வந்தவன் அனைவரையும் காரில் ஏற்றி விட்டு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன் என்றவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.



வீட்டிற்கு வந்தவர்கள் செந்தில் அப்பா சொன்னதை தவிர்த்து அனைத்தையும் கூற அதிர்ச்சி அடைந்தவர்கள். போதை மருந்தைகளினால் நடக்கும் விபரீதங்களை நினைத்து வருந்த, கனிலிக்கோ, தன் கணவன் வரவில்லை என்ற ஏமாற்றத்தில் முகம் வாடினாள். சிவாவோ கனலியையும், அவளின் அப்பாவையும் தவறாக புரிந்துக் கொண்டு



" உங்க அப்பாவால தான் மிகிரன் அப்பா இறந்திருக்காங்க, இவ்வளவு பிரச்சனையும் உங்களால தான், அதான் மிகிரன் வரல " சிவாவின் பேச்சில் அதிர்ச்சியோடு கண்ணீருடன் பேச்சின்றி நின்றவள், அனைவரையும் பார்க்க மிகிரனின் அம்மாவோ,



" அப்படி எல்லாம் நடந்திருக்காது அவன் பிரச்சனை வரணும்னு பொய் சொல்லி இருக்கான். கனலி அப்பா பத்தி எனக்கு தெரியும் ரொம்ப நல்லவர். அவர் நிறைய பேருக்கு உதவி செய்றவரு, பொறுப்பான பதவில இருக்காரு. அவர் கூட பிறந்தவங்களே அவர் சொத்தை பிடிங்கிட்டு இவர நம்ப வச்சு ஏமாத்தி இருக்காங்க, அவர் எங்க கிட்ட சொல்லி வருத்தப் பட்டாரு.

கண்டிப்பா ஏதோ சதி வேலை நடந்திருக்கு, மாப்பிள்ளை யோட அப்பா நாம நல்லா இருக்க கூடாதுன்னு தான் பொய் கதை கட்டி இருக்காரு நீயும் இத நம்பிட்டு கனலிய கஷ்டப் படுத்தாத, மிகரன் பார்த்துக்குவான்"

ஆனால் "சிவாவோ இல்லைம்மா உங்களுக்கு தெரியல அவங்க சொல்றத நம்பிட்டு ஏமாந்து போகாதீங்க, மிகிரனுக்கு கஷ்டமா இருந்திருக்கும் அதான் வரல, என் நண்பன் பாவம் இன்னும் எவ்வளவு துரோகத்தை பார்க்க போறானோ"

சிவாவின் பேச்சில் இன்னம் வலி உணர்ந்தவள் "அத்தை என்னை நம்புங்க அப்பா இப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டாரு ப்ளீஸ் அத்தை, அவர் கிட்ட சொல்லுங்க, அவர் நம்பிட்டாரா அதான் வரலையா"

கனலியின் கண்ணீரில் பதறியவர் அவளிடம் வந்து கண்ணீரை துடைத்து விட்டு "நான் நம்புறேன் மா உன் புருஷனும் நம்புவான். வருவான் அது வரைக்கும் எந்த தப்பான முடிவும் எடுக்காத"

"முடியல அத்தை, அவர் ஏன் இன்னும் வராம இருக்காரு, சிவா அண்ணா சொல்ற மாதிரி அவர் நம்பிட்டாரா அத்தை"

செந்தில், நித்யா, சக்கரை என எல்லாரும் ஆறுதல் சொன்னாலும் கனலி அழுகையை நிறுத்த வில்லை. வாசலை பார்த்துக் கொண்டே இருந்தவள் மிகி ரனுக்கு அழைக்க, அவன் போன் அணைத்து வைத்திருப்பதாக தகவல் வர சிறிது நேரம் அறைக்கு சென்று யோசித்தவள் தன் துணிகளை எடுத்து பையில் வைத்தவள் வெளியே வந்து "அத்தை அவர் வந்து என்னை கூப்டு வரட்டும், என் அப்பா எந்த தப்பும் செய்யலன்னு நிரூபிச்சிட்டு இந்த வீட்டு மருமகளா வரேன்" என்றவள் யாரின் பேச்சையையும் கேட்காமல் வெளியே சென்று விட்டால்.

மிகிரன் ஏன் வீட்டிற்கு வரவில்லை. மிகி ரனின் அப்பாவின் மரணத்திற்கும் கனலியின் அப்பாவிற்கும் என்ன சம்மந்தம் மிகிரன், கனலி ஒன்று சேர்வார்களா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top