My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

வானம்பாடி-21

Deepa senbagam

Moderator
Joined
Dec 13, 2024
Messages
1,585

வானம்பாடி-21

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா!
திருமகள் மணம் நாடும் ஸ்ரீநிவாஸா!
ஏழு மலைவாசா!
பாற்கடல் பள்ளி கொண்ட பரந்தாமா!
அலர்மேல் மங்கையின் மணவாளா!
வெங்கட ரமணா,கோவிந்தா!
கோவிந்தா, ஹரி கோவிந்தா !

என மலை எங்கும் அவன் நாமம் எதிரொலிக்க, பக்தர் கூட்டமும் பரவசமாக, கோவிந்தா, கோவிந்தா என உச்சரித்துக் கொண்டே கால் நடையாக மலை ஏறினர். இந்தக் கூட்டத்தில் நம் பாண்டிக் குடும்பமும், செல்லம்மாள் தலைமையில் கோஷமிட்டபடி மலை ஏறியது தான் சிறப்பு.

ஆம் சென்னையிலிருந்து ஒரு வேன் நிறைய, கருத்தப் பாண்டி ஐயா, பேச்சியம்மாள் பெற்ற மக்களும், மருமக்களுமாகப் பேரன் பேத்தி, கொள்ளு பேரன் பேத்தியோடு தான்வியின் பெற்றோர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரகோத்தமன், அவர் மனைவி சுதா ஆகியோரோடு தரிசனத்துக்குக் கிளம்பினர். கிளம்பும் முன்னமே தங்கப் பாண்டியனுக்கு அழைப்பு வர, திருப்பதியில் இணைந்து கொள்வதாக அறிவித்து விட்டே சென்றிருந்தான்.

சாலை மார்க்கமாகக் கிளம்பிய பாண்டிக் குடும்பம், வரும் வழியில் சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் பள்ளி கொண்ட ஈசனை வழிபட்டே கீழ் திருப்பதி வந்து சேர்ந்தனர்.

கீழ் திருப்பதியில் முதலில் கோவிந்த ராஜ பெருமாளையும், திருச்சானூர் சென்று அலர்மேல் மங்கையான, பத்மாவதி தாயாரை வழிபட்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாகவே திருமலையை அடையலாம் என அப்பா, மகள் அந்நாள், இந்நாள் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் திட்டமிட்டு, அங்கங்கே ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்க, செல்லம்மாள் நடந்தே தான் மலை ஏறவேண்டும் என ஆரம்பித்தார்.
என்ன அலிபேரியிலிருந்து பதினோரு கிலோமீட்டர். அதுவும் 3800 படிகள், குறைந்தது ஆறுமணி நேரம் ஆகும், “அக்கா, இதெல்லாம் நடக்கிற காரியமா. வண்டிலையே போகலாம் அக்கா.” என ராஜன் சொல்லவும், “நடக்கிற காரியம் தான் தம்பி, நானா நடக்கப் போறேன், அந்த ஏழுமலையானே மலை ஏத்தி விடுவார்.“ எனப் பதில் தர, அக்காவின் நம்பிக்கையில் குறுக்கிட அவருக்கு மனமில்லை, கௌசி தான், "அதுக்கில்ல மதினி, ரொம்ப தொலைவு, மலை செங்குத்தா ஏறணுமேன்னு கவலை படுறாங்க." எனவும், "புரியுது கௌசி. அப்படியாவது மனசு இரங்கி, இந்த சாமிங்க, மீனாவுக்கு வரம் கொடுக்கட்டும். அவளை நல்ல படியா கரை சேர்த்துட்டா போதும், என் சுமை இறங்கிடும்." என முகத்தை துடைக்க, "கவலை படாத அக்கா, இங்க வந்துட்டு போற பலன், மீனாவுக்கு கல்யாணம் நடந்திரும் பாரு." என சோலையம்மாளும் அக்காவை தேற்றினார்.

“செல்லம், வேண்டுதல் சரி. அதை நீயே தான் செய்யனுமுண்டு என்ன. உனக்கு பதிலா, உன் மகன் செய்யட்டும். செல்வம் மாப்பிள்ளையை கூட்டியாந்து இந்த வேண்டுதல் நிறைவேத்திக்கலாம். நீ சும்மா வேன்ல தானே வா.” என சிவபாண்டியும், தங்கையை வற்புறுத்த,

“நான் சிந்துப்பட்டி பெருமாள் கோவில்லையே வேண்டிகிட்டது. எதோ உங்க புண்ணியத்தில் கைகூடுது அண்ணே. மறுத்து சொல்லாதீங்க. எனக்கு ஒன்னுமாகாது.” எனவும், "சரி சொன்னா கேட்க மாட்ட, சூதானமா போயிட்டு வா. செல்லம், மருது, அத்தை கூட போங்க." என பெரிய தலைகளையே செல்லம்மாள் ஒத்துக்கொள்ள வைக்க, மற்றவர் என்ன செய்ய முடியும்.

செல்லம்மாளோடு யாரெல்லாம் மலை ஏறுவது எனப் பேச்சு வர, “பெரியம்மாவை, நான் கூட்டிட்டு வரேன். நீங்கல்லாம் வேன்ல வாங்க.“ என வாசுதேவன் ஆரம்பிக்க, “அக்காளை மட்டும் எப்படி விடுறது, நானும் வாரேன்.” என வீரன் சொல்ல, “மாமா, தினேஷுக்கு கல்யாணம் கூடனுமுண்டு நானும் வேண்டியிருக்கேன். நானும் வாரேன்.” என செல்வி சொல்லவும், “அது தான் நான் போறேன்ல, நீயும், அண்ணனும் வேன்ல ஏறுங்க.” என துரை அண்ணனை அனுப்ப பார்த்தார்.

“நல்லாத்தான், உங்க அண்ணே , அக்காளை அப்படி தனியா விட்டுட்டு வந்துருவாராக்கும், ஊருக்கு போகவும் அவுங்க மருமக பிலு, பிலுண்டு பிடிச்சுக்க மாட்டா. பூவுக்கு பயந்துக்கிட்டுண்டாலும் போவார்." என அசோதை சொல்ல,

“என் மகள் வையுமுண்டா போறேன். அக்கா சம்பந்தி ஆனது அப்புறம். பிறந்ததிலிருந்து எனக்கு அக்காவாக்கும்.” என வீரன், “அப்படியா மாமா, இது எனக்கு தெரியாமல் போச்சே!” என அசோதை கேலி பேசவும், வீரன் முறைக்க ஓரகத்திகள் சிரித்தனர்.

“புருஷன் கூட பொறந்த நாத்தனாருண்டா, உங்க கண்ணுக்கெல்லாம், ஒரண்டை இழுக்கும் போது மட்டும் தானே தெரியும்.” என சிவபாண்டி சொல்லவும், “அப்படி எத்தனை தடவை நாங்க ஒரண்டை இழுத்து நீங்க வந்து சமரசம் பண்ணி விட்டிங்களாம்?“ எனச் சந்திரா கணவரைக் கடிந்துக் கொள்ள, “என் அக்கா, தங்கச்சிங்க வாயை தொறந்தாலே, அது எதுடா சாக்குண்டு பார்த்துக்கே இருந்து, அதை பேசிப்பேசியே, மனுசரை கொன்டு கொலை அறுப்பீங்களே. அதுக்கு பயந்து தானே, ஆம்பளைங்க வெளியே சுத்திக்கே இருக்கோம். என்ன சம்பந்தி நான் சொல்றது சரிதானே?” என ரகோத்தமனையும் பேச்சில் இழுக்க, அவர் அதிர்ந்தார். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தது என்று,

“என்னை கேக்குறேளா, அது அக்கா, தங்கச்சியே சம்பந்தியாவும் ஆயிட்டா சிரமம் தான். அவா செய்யறதுக்கெல்லாம் நம்ம தலை உருளும்.“ என மனைவியைப் பார்த்துக் கொண்டே சொல்ல, “அடுத்த தரம், உங்க அக்கா, என்னண்ட எதுனா சொல்லுவா இல்ல, அப்போ உங்களண்டை அனுப்பி விடுறேன். நீங்களே சமாளிச்சுக்குங்கோ." என தான்வியின் அம்மா சொல்லவும், "உணர்ச்சி வசப்பட்டு மாட்டின்டனோ!" என சுயபச்சாதாபம் பட்டுக்கொள்ள மற்றவர்கள் சிரித்தனர்.

“வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.” என்ற மாயன், ஏற்கனவே பெரிய பேரன் சரண் தாத்தாவை சரிக்கட்டி வைத்திருந்ததால், சத்தமில்லாமல் நடைப் பயணத்துக்குத் தயாராகி இருந்தார்.

அதைப் பார்த்த ராகவி, தானும் செல்வேன் என அடம் பிடிக்க, “ஒரு மணி நேரம், டேன்ஸ் ஆடுறதே, கால் வலிக்கிதுன்னு சொன்னையோ இல்லையோ, இது சிக்ஸ் ஹௌர்ஸ் ஆக்கும். பேசாத வேன்ல ஏறு.” என்ற தான்வி, அதட்ட சரண் நமட்டு சிரிப்பில் ராகவி கொதி நிலைக்குச் செல்ல, வழக்கம் போல் சுமிம்மா தான் மகளை சமாளித்தாள். தான்வி தான் செல்லம்மாள் உடன் வருவதாகச் சொல்ல,

“தான்வி, நாங்களாவது மலை ஏறிட்டு வந்தா ரெஸ்ட் எடுப்போம். உனக்கு அதுவும் கிடையாது. வேலைக்கு போகணும். நீ மாமா, அத்தை எல்லாரையும் கூட்டிட்டு போ. நானும் மலர் அக்காவும் பெரியம்மாவோட போறோம்.” என சுமித்ரா சொல்லவும், அவர்கள் கணவன்மார், செல்லமும், மருதுவும் தங்கள் மனைவி மாரை வேனில் செல்ல சொல்லிவிட்டு, தாங்கள் நடப்பதாகச் சொல்ல, "அங்க லக்கேஜ் இறக்கனும். வாசு எங்க கூட வரான்ல போதும். நீங்க போங்க.” என துரை மகன்களை அனுப்பி விட்டு, செல்லம்மாளுடன் பெண் துணையாகச் செல்வியும், வீரன், துரை, மாயன், வாசு, சரண் என அறுவர் மட்டும் படி ஏறினர்.

மானுத்துப்பட்டி பாண்டியன் இல்லத்தில், செல்வமணி, “அடியே குயிலு, உன் மாமியா செய்யிற வேலையைக் கேட்டியா, இந்த வயசான காலத்தில இதுக்கு எதுக்கு இந்த வேலை.” எனக் குறை பட, "இப்ப, என் மாமியாளை என்னத்துக்கு குறை சொல்ற, திருப்பதிக்கு தானே போயிருக்கு." என் பூங்குயில் வினா எழுப்ப, செல்லம்மாள் அம்மா படி வழியாக மலை ஏறுவதைச் சொன்னான்.

“அம்மாச்சிக்கு ப்ரெஸ்ஸர் இருக்குதே!” என மீனாவும் பதற, அதெல்லாம் மலை ஏற ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் ஆச்சு, நல்லா தான் நடக்குறேண்டு எங்கிட்டையே சொல்லுது.” எனக் குறை பட.

“அடேய் பேராண்டி, என் மகள் வைராக்கியத்துக்கு பொறந்தவடா. அதெல்லாம் நல்ல படியா ஏறிடுவா." எனவும், "அது யாரு வைராக்கியம்?" என சிவப்பி வம்பிழுக்க, "அடியேய் கொக்குளத்துக்காரி, நீ என்ன சொல்லவரண்டு தெரியுதுடி. என் புருசனுக்கு இன்னொரு பேர் வைராக்கியம்." என பதிலடி கொடுக்க, "அம்மாச்சி, நேரம் காலம் தெரியாமல் சின்ன புள்ளைகிட்ட ஒரண்டை இழுப்ப." என செல்வம் நொந்துக் கொள்ள, "ஏலே பேராண்டி, அவள் வேணா உனக்கு மகள் முறையா இருக்கலாம். அனால் சின்ன புள்ளையிண்டு சொல்லாதே, எனக்கு மூத்த பெரிய கிழவி." என்ற பேச்சி, "உன் அம்மா மட்டுமா ஏறுறா?“ என விவரம் கேட்டுக் கொண்டவர்,

“இந்த தகிரியமெல்லாம், பேச்சியம்மா மக்களுக்குத் தான் வரும்.” எனப் பெருமைப் பட்டுக் கொள்ள, “ஏய் கிழவி ரொம்ப பீத்திக்காதே, பாண்டியம்மா பெத்த மகள், செல்வி அத்தையும் தான் ஏறுது.” எனச் சிவப்பி வக்கணை பேசினாள். இவர்கள் வம்பிழுத்து பேசிக் கொண்ட போதும், செல்வமணி அதில் கலக்காமல் கவலையோடு இருப்பதை பார்க்கவும்,

“மாமா, இப்படி வெசனப் பட்டுக்கே இருக்கிறதுக்கு, பிள்ளைகளை கூட்டிகிட்டு, சிந்துபட்டி பெருமாள் கோவிலுக்காவது போயிட்டு, எல்லாரும் நல்லபடியா ஏறனுமுண்டு கும்புட்டுக்கிட்டு வருவோம். அந்த சாமி அங்கிருந்து திருப்பதி பக்கம் சந்திரகிரி கோட்டையிலிருந்து வந்தது தானாம். இங்க கும்பிட்டா அங்க கும்பிட்ட மாதிரி தானே!“ எனப் பூங்குயில் சொல்லவும், செல்வம் முகம் தெளிந்தது.

“என் பொண்டாட்டி, ஐடியா மணி தாண்டி. குறுக்கால போனா பக்கம் தான். நடந்து போயிட்டு வந்திடுவோமா?" என வினவ, "ரொம்ப உணர்ச்சி வசப் படாதே, நீயும், நானும் மட்டும் நடக்கிறது விட, குடும்பத்தோட போயி வேண்டிக்கிறது நல்லது." என எடுத்துச் சொல்ல, "அதுவும் சரி தான். பிள்ளைகளைத் தயார் பண்ணு. அம்மாச்சியையும் கூட்டிட்டு போவோம்.” என பேச்சியம்மாளையம் அழைக்க, “நானா?” என அவர் யோசித்தார்.

“பேச்சியம்மாள் மக்களுக்கு இருக்கிற தகிரியம், பேச்சியம்மாளுக்கு இல்லையோ?” என சிவப்ரியா கிண்டலடிக்க, “எனக்கு இல்லாத தகிரியமா, என் பிள்ளைகளுக்காக நான் வேண்டிகிறேன்.” என அவரும் கிளம்ப, ஜெய முத்துவையும் வரச் சொல்லி, மூன்று கார்களில் கிளம்பினர்.

இன்று மதியம் வல்லபாபுரத்தில், தங்கபாண்டியன், கார்த்திகா வந்து தன்னை தமிழில் பேசி அழைக்கவும், “குற்றம் சுமத்தினது எங்க ஆளுங்களா இருந்தாலும், அதில் ஒரு விக்டிமும், சாட்சி சொன்ன பொண்ணும் உங்க ஆளுங்க, தமிழ்.” என வெங்கி சொன்னது தான் நினைவில் வர, “நீ அங்க சமாளி. நான் வந்துடுறேன்.” என கார்த்திகா காட்டிய வழியில் பக்கவாட்டிலிருந்த அறைக்குள் வரவும், வரி கோடுகளாய் கன்னம் சிவந்த தடத்தோடும், அழுது வீங்கிய கண்களோடும் நின்ற சந்திரிகாவைப் பார்க்கவும், தங்கத்துக்கே சங்கடமாகத் தான் இருந்தது. மீனாவின் வயதை ஒத்த பெண். ஒரே சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

அவளுக்கு அப்பா, அம்மா இருவரும் இல்லை. இவளுக்கு அம்மாவாவது மிஞ்சி இருக்கிறார். ஆனால் அதுவே வாழ்க்கை போராட்டத்தில் பெரிய பிரச்சனையாகி, ஆதரவு தேடும் இடத்தில் வைத்துள்ளது.

அம்மாவாவது இருக்கிறாரே . தங்களுடையதும் கலப்பு மணம் தான், என நினைக்கும் போதே, சின்னுவின் இடத்தில் ராகவியை வைத்துப் பார்க்கவும் கூட மனதில் தைரியம் வரவில்லை.

அந்த நேரம், தான்வியின் நேர்மையும், காத்திருப்பும், தன் குடும்பத்தோடு ஒத்துப் போக அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் நினைத்துப் பார்த்தவன், “அவரவர் வாழ்க்கை, அவரவர் கையில் தான்." என சற்று முன் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னது நினைவில் வந்தது.

ரெட்டிகாருவுக்கு இவள் வளர்ப்பு மகளாக இருந்த போதும், அவருடைய தந்தை பாசத்தில் எந்த குறையும் இல்லை. ஏன் அவர் மனைவி கூட, இந்த மகளுக்காகத் தன் முன் கை ஏந்த வந்தாரே. இந்த மக்கள் சொல்வது போல் நிர்மலாவோடு, ரெட்டிகாருவுக்கு தவறான உறவு முறை இருந்தால், அவர் மனைவியும், அப்பா, அம்மாவுமே எப்படி ஆதரிப்பார்கள். நேர்மையான உறவு இருந்தும், இந்த பெண் ஏன் வருந்துகிறாள் என அவளைப் பார்த்த சில நொடிப்பொழுதில் அவளைப் பற்றிய ஆராய்ச்சி ஓட, தன்னையே எக்ஸ்ரே பார்வையால் துளைத்தெடுக்கும் , காவல் அதிகாரி அதுவும் தினேஷின் அண்ணன் முன் நிற்கமாட்டாமல், சந்திரியும் தலை கவிழ்ந்தே நின்றவள், இதுவும் சரிப்பட்டு வராது, பேசித்தான் ஆகவேண்டும், எனத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச முயன்றாள்.

“நான், சந்திரிகா, சன்னு.” எனச் சொல்லும் பொழுதே கண்ணீர் துளிர்க்க, “தப்பே நடக்காத போது எதுக்கு அழுகணும்?“ எனத் தங்கம் கூர் பார்வையோடு வினவினான். இவளது நாடகம் தானோ என போலீஸ் மூளை ஆராய்ச்சியில் இறங்கியது.

ஆனால் அவள் “அது நீங்க ஒரு பொண்ணா இருக்கனும், இல்லையினா டீனேஜ் பொண்ணோட அப்பாவா இருக்கனும். அப்பத் தான் புரியும்.“ எனத் தைரியத்தைக் கூட்டி மீண்டும் துளிர்த்த கண்ணீரை மீண்டும் துடைக்கவும், “ஸோ, உன் அப்பாவுக்கு தெரிஞ்சது தான் பிரச்சனை. மத்தபடி உன்னை, எந்தம்பியோட சேர்த்து வச்சு பேசினதெல்லாம் உனக்குப் பிரச்சனை இல்லை.“ எனச் சந்தேகமாகவே கேட்டான்.

“தப்பே நடக்காத போது, எதுக்கு அழுகணும்னு நீங்களே கேட்டிங்களே, அது தான் பதில். என் அம்மாவை நானகாருவோட சேர்த்து வச்சு பேசாத பேச்சா. இரண்டு பேருகிட்டையும் தப்பே இல்லாதப்ப எதுக்கு பயப்படணும்னு எங்க அம்மா சொல்லுவாங்க.

அதோட அர்த்தத்தையும் இன்னைக்கு தான் புரிஞ்சுகிட்டேன். நீங்க உங்க தம்பியை கூட்டிட்டு போங்க. நானகாருகிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றாள்.

“இந்த உறுதி, உங்க இரண்டு பேர் மேலையும் தப்பு இல்லைனு நான் நிரூபிச்சதுனால, உன் நடிப்பு எடுபடாதுங்கிறதால வந்ததா?” எனத் தங்கம் தாட்சண்ணியம் பார்க்காமல் கேள்வி எழுப்ப, சிறுத்துப் போன முகத்தோடு அவனைப் பார்த்தவள், “உங்க வீட்டு பொண்ணுங்களா இருந்தாலும் இதே கேள்வியைத் தான் கேட்பிங்களா.” என்றவள் சிறிது நேர மௌனத்துக்குப் பின் ,

“நானாகாருவுக்காக, அவங்க ஏற்பாடு செஞ்ச மாப்பிள்ளையையும் கல்யாணம் பண்ணிக்க ரெடியா தான் இருந்தேன். ஆனால் மனசுக்குள்ள அது நடக்காதுன்னு தோணிக்கிட்டே இருந்தது. அதே மாதிரி எல்லாம் நடக்கவும், இந்த இடத்திலிருந்து வெளியேற, இதை ஒரு வாய்ப்பா தான் பார்த்தேனே ஒழிய, உங்க தம்பியை கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கலை.

நானாகாரு என்னை உங்க தம்பிக்கு கட்டாய படுத்திக் கல்யாணமே செய்து வச்சிருந்தாலும், அவரோட உங்க வீட்டுக்கு வந்திருக்க மாட்டேன். “ என உறுதியாகச் சொன்னாள்.

“அதெப்படி, ரெட்டிகாரு, அப்படியெல்லாம் மகளை ஓட்டிவிடுறவரா தெரியலை. இரண்டு நாள் என் தம்பியோட பழகினதில், அவன் வசதி தெரிஞ்சிருக்கும், பழி சுமத்தி ஒட்டிக்கலாம்னு பார்த்திருப்ப!” என அவளைக் குற்றம் சாட்ட, “உங்க சொத்து யாருக்கு வேணும். என் நானாகாருகிட்ட இல்லாத சொத்தா. இப்போ கேட்டாலும் இந்த பண்ணையவே என் பேரில் எழுதித் தருவார். அந்த பயத்தில் தான் அந்த கிழவி, இந்த நாடகமே நடத்தியிருக்கு.

அதுல எனக்கு மட்டும் பாதிப்பு வந்திருந்தா கூட பரவாயில்லை, நானகாரு என்னை அப்படிப் பார்த்திருக்க வேண்டாம்.“ என உடலைக் குறுக்கி கை கட்டி நின்று , ஒரு கையால் தன முகத்தை மூடிக் கொள்ள, ஒரு அப்பாவுக்காக மகளின் வேதனை, அந்த காக்கி சட்டைக் காரனையும் நெகிழத் தான் வைத்தது. முகத்தை அழுந்த துடைத்து தன்னை சமாளித்துக் கொண்டவள்,

“சரி அது என் பிரச்சனை விடுங்க. நான் என்ன சொன்னாலும் நீங்களும் நம்ப மாட்டீங்க. நீங்க என்ன சொன்னாலும் இந்த மக்கள் உங்களை விடமாட்டாங்க.

கல்யாணத்துக்குச் சம்மதிக்கிற மாதிரி சம்மதிச்சிட்டு, பெரியவர்களை கூட்டிட்டு வரோம்னு சொல்லிட்டு கிளம்பிடுங்க. நீங்கத் திரும்ப வர வேண்டிய சூழ்நிலை வராமல் நான் பார்த்துக்கறேன்.” என அவள் யோசனை சொல்ல, “அதுக்கென்ன அர்த்தம்?” எனத் தங்கம் அவளைக் கூர்ந்து நோக்கினான்.

“கவலை படாதிங்க, தற்கொலை பண்ணிக்க மாட்டேன். எங்கம்மா இது போல நிறையச் சூழ்நிலையைக் கடந்து வந்தவங்க. நானும் கடந்து வந்துடுவேன்.” என சன்னு தீர்க்கமாகச் சொன்னாள்.

“பாண்டிக் குடும்பம் வாக்கு கொடுத்தா அதுக்கு கட்டுப் படுவோம், மீற மாட்டோம். பொய்ச் சத்தியம் எல்லாம் எங்களால செய்ய முடியாது.“ என்ற தங்கப் பாண்டியன், "எதுக்கு இந்த யோசனை சொல்லிக் கொடுக்கிற, உனக்கு என் தம்பியை பிடிக்கலையா?” என வினவவும், அவன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அவளிடம் செம்மை பூத்து, சட்டென அடுத்த கணம் மறைந்தது.

“அவருக்கு என்னைப் பிடிக்காது. சந்திச்ச நிமிஷத்திலிருந்து சண்டை தான். நீங்கத் தானே சொன்னீங்க, உங்க வீடு ஆட்களும் என்னை ஏத்துக்க மாட்டாங்க. உங்க தம்பியோட ஆதரவும் இருக்காதுன்னு. அப்புறம் எதுக்கு அவர் வாழ்க்கையில் நான் வரணும். நீங்க ஒப்புக்கு, கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லிட்டு கிளம்புங்க. நீங்க வாக்கு மீறுனதாவும் இருக்காது. அதுக்கு நான் கேரண்ட்டி.“ என அவள் உறுதி தந்தாள்.

மீண்டும் ஒரு உசிலம்பட்டியிலிருந்து ஒரு போன் கால், ஆனால் தங்கம் விசாரிக்கச் சொன்னதின் பெயரில், ஒரு உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட். அதைக் கவனமாகக் கேட்டவன், எந்த அப்டேட் இருந்தாலும், வாய்ஸ் மெயில் போடுங்க. நான் பார்த்துக்கறேன்.” எனக் கட்டளை பிறப்பித்தவன், அடுத்த நகர்வுகளை மனதில் திட்டமிட்டு சந்திரியை நிமிர்ந்து பார்த்தவன்,
"நீ தான் பாண்டி குடும்பத்துக்கு மருமகளா வரணும்னு விதி இருந்தா, அதை மாத்த யாராலும் முடியாது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம்னும் தெரியாது . பார்க்கலாம்.” என்று விட்டு, விட்ட குறை, தொட்ட குறை என இதைத் தான் சொல்வார்களோ, முடிந்த அத்தியாயங்கள், மீண்டும் தொடர்கிறதே என்ற யோசனையோடு முன் பகுதிக்குச் சென்றான்.

சந்திரிகா சொன்னது போல், ராடகொண்டா ஆட்கள் அவ்வளவு எளிதாக இந்தப் பிரச்சனையை விடுவதாக இல்லை. மீண்டும் ஒரு பெண்ணுடைய மானப் பிரச்சனை என அதிலேயே உறுதியாக நிற்க, அண்ணனுக்கும் தம்பிக்கும் பதிலாக, நிர்மலா மறுத்துப் பேசினார்.

“என் மகளை, இந்த பையனுக்கும் கொடுக்க முடியாது. அந்த ஊருக்கும் அனுப்ப முடியாது. இதுக்கு விளக்கம் கேட்காதீங்க. இப்பவும் நான் இங்கே வந்ததுக்கான காரணம் அப்படியே தான் இருக்கு. நானும், என் மகளும் இங்க இருக்கிறது தான் உங்க எல்லாருக்கும் பிரச்சனைனா , நாங்க இங்கிருந்து கிளம்பிடுறோம். இரண்டு நாள் மட்டும் அவகாசம் கொடுங்க.” என நொண்டிய காலோடு, கை கூப்பி நிர்மலா மன்றாட, அவளின் காரணம் தங்கப் பாண்டியனுக்குப் புரிந்தது.

மற்றவர்களுக்குத் திமிரான பதிலாகத் தான் தோன்றியது. ஜெகனும், சாந்தம்மா ஏன் சிண்ட்டுவும் கூட, நிர்மலா இங்கிருந்து கிளம்பிடுறோம் எனச் சொன்ன வார்த்தை பிடிக்கவில்லை.

“இவளுக்காகத் தான் பேசினோம். தன் இனத்தோட சேர்ந்து, நம்ம முகத்தில் கரியை பூசுரா. எப்படியோ போகட்டும் . இவள் வெளியேறினா சரி தான்.” என சிண்ட்டுவின் அம்மம்மா நிர்மலாவுக்கு எதிராகக் கூட்டத்தைத் திருப்ப, ஆளாளுக்கு ஒன்று பேசினர். ஜெகனின் பெற்றவர்கள், “என்னமா இது?” என வருந்தினர்.

தங்கம், ரெட்டிகாருவுடன் தனியாகப் பேச வேண்டும் என வெங்கியிடம் சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்ல, அவன் தன் சின்னநைனாவிடம் காதோடு சில விஷயங்களைச் சொல்ல, அவரும் அதிர்ந்தவராகத் தங்கத்தைப் பார்த்து விட்டு,
“நீங்க எல்லோரும் எனக்காகக் கூட நின்றதில் ரொம்ப சந்தோசம். பொண்ணோட அம்மாவே எதிர்ப்பு சொல்லும் போது, நாம என்ன செய்ய. என் பொண்ணுக்கு விவாகம் பேசுகிற உரிமை இல்லைனு எனக்கு இப்போ தான் புரியுது. உங்க எல்லோரையும் இழுத்து விட்டுட்டேன், தப்பு தான் மன்னிச்சுக்குங்க.“ என அவர் கை கூப்பிக் கேட்கவும், “நானாகாரு, அப்படியெல்லாம் சொல்லாதீங்க.” என சன்னு தான் அவரை கட்டிக்கொண்டு அழுதாள். “உன் அம்மா, அப்படி தான்டா சொல்லிட்டா.“ என நிர்மலாவை பார்த்து முறைத்தபடி சொல்ல, அவர் சிலை போல் நின்றார்.

"அப்புறம் என்ன, அந்த பையன் மேல குத்தம் இல்லைனு சொல்லியாச்சு, இந்த பொண்ணு விஷயத்திலும் இனமே தலையிட மாட்டோம். சொன்னது மாதிரியே, அம்மாவும் மகளும் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பிடனும்.” எனத் தீர்ப்பு சொன்னது போல் சொல்லி சிண்ட்டுவின் அம்மம்மா, கூட்டத்தைக் கலைக்க, சாந்தம்மா, தன் அம்மாவை முறைத்தார். மற்றவர்களுக்கும் இந்த கிழவி தான் ஏதோ செய்துள்ளது என்ற சந்தேகம் வந்தது. ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஜெகனுக்கு மாமியார் குணம் தெரியும், அதையும் மீறி தான் வளர்ப்பு மகளுக்கு நல்லது செய்ய பார்த்தார். அனால் நிர்மலாவின் பேச்சு எல்லாவற்றையும் கெடுத்தது. ஜெகனின் பெற்றோர்களுக்குமே வருத்தம் தான், ஆளாளுக்கு ஒன்று சொல்லிவிட்டு, பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து கிளம்பினர்.

தினேஷ் பாண்டி, நடந்தவற்றைப் பார்த்தபடி நின்றவன் ரெட்டிகாருவிடம், “நீங்கக் கட்டாயப்படுத்தி, உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சிருந்தீங்கன்னா, என்னால அதை ஒத்துக்கிட்டு இருக்கவே முடியாது. நிச்சயமா, எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமா தான் ஆகியிருக்கும். அதுபோல எதுவும் நடக்கலை. கடவுளுக்கு நன்றி. ஆனால் என்னால உங்களுக்கு ஏற்பட்ட மனக்கஷ்டத்துக்கு நான் உண்மையாவே வருத்தம் தெரிவிச்சுக்கிறேன்.” என அவர் கையை பிடித்துப் பேசவும்,

“நாங்க என்னதான் கட்டாயப் படுத்தினாலும், கல்யாணத்துக்கு அப்பா, அம்மா, உங்கவீட்டு பெரியவங்க சம்மதம் வேணும்னு சொன்னதிலேயே, நீங்க உயர்ந்துட்டீங்க தம்பி. உங்களை மாதிரி ஒருத்தர், மருமகனான வரணும்னு எந்த பொண்ணை பெத்த தகப்பனும் விரும்புவான். எனக்குக் கொடுத்து வைக்கலை. நாங்க கடுமையா பேசியிருந்தா அதை மறந்திடுங்க." என அவரும் பேச, ஜெகதீசனுக்கும் நிம்மதி.

தினேஷ் பாண்டி, பெரும் பழியிலிருந்து விடுபட்டவன் போல், சற்று தள்ளி நின்ற ராஜசந்திரிக்காவின் பக்கம் மறந்தும் திரும்பாமல், அண்ணனிடம் சென்றவன், “தேங்க்ஸ் அண்ணேன்.“ எனத் தங்கத்தைக் கட்டிக்கொண்டான்.

“விடுறா தம்பி, உன்னை தெரிஞ்சு தான் பறந்து வந்தேன். ஐஸுக்கு நடந்ததையே ஏத்துக்க உனக்கு எவ்வளவு வருஷம் ஆனதுன்னு எனக்குத் தெரியும்.” எனக் கட்டிக்கொள்ள, “பொம்பளை பிள்ளைகூட இவ்வளவு பீல் பண்ணலை, இவன் என்ன இப்படி இருக்கான்?” என்றான் வெங்கடேஷ். "அது தான் தினேஷ். அவன் ரொம்ப சென்சிடிவ்!" என்றான் தங்கம்.

இந்த பேச்சு காதில் விழுந்தும் சன்னு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதே கேள்வியைத் தங்கம் கேட்டதற்கு அவள் பதில் தந்துவிட்டாள். தன் நானகாரு, தன்னை அப்படிப் பார்த்து விட்டாரே என்று தான் அழுதிருந்தாள். தினேஷ் பாண்டியோடு தன்னை சேர்த்து வைத்துப் பேசியதை பற்றிப் புலம்பல் இல்லை, அதிலேயே தன் தம்பியை அவளுக்கு எவ்வளவு பிடித்தம் எனப் புரிந்திருந்தது. “நான், லக்கேஜ் எடுத்திட்டு வரேன், கிளம்பலாம் அண்ணேன்.“ என அவன் மாடிக்குச் செல்ல, ஜெகதீசனும், சிண்ட்டுவும் கூடவே சென்றனர்.

தங்க பாண்டியன், ஜெகன்மோகன், வெங்கடேஷ் மட்டும் தனி ஆலோசனை செய்தனர். தங்கம் சொன்னதைக் கேட்டு, ஜெகனும் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார். “என்னை விட, உங்களுக்கு சிச்சுவேஷன் நல்லாவே புரியும். அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க?” என தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்த தங்கத்திடம் ஜெகன்மோகன் கேட்டு நிற்க, மடமடவென தங்கம் தன திட்டத்தைச் சொன்னான்.

“இது சரியா வருமா, அங்க பாதுகாப்பு இல்லைனு நீருமா சொல்றாளே?” என ஜெகன் கேள்வி எழுப்ப, “வெங்கடேஷ் ரெட்டி மேல எங்க வீட்டு ஆட்களுக்கு எப்பவுமே நல்ல மதிப்பு உண்டு. அவனுடைய தங்கச்சியை, எங்க வீட்டில் பாசமா, மரியாதையா வச்சுக்குவாங்க, எங்க வீடு, பெரிய வீடு, தங்கச்சி வீடு, எல்லாமே பாதுகாப்பானது தான். நீங்கக் கவலை படாதீங்க. உங்க மகள் எங்க பொறுப்பு.” பூடகமாகச் சொல்ல, “என் பொண்ணு, சின்ன தேவதா, பங்காரு தல்லி, கவனமா பார்த்துங்க. நான் நீருமாவை பார்த்துக்கறேன்.” என ஜெகனும், தங்கத்தின் திட்டத்துக்கு ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு, “வந்தது தான் வந்துட்ட, கிருஷ்ணா புஷ்கரத்தில் நீராடிட்டு போ. இன்னும் பத்து நாள் இருக்கு, கலெக்ட்டரம்மாவையும், பசங்களையும் கூட்டிட்டு வா.” என வெங்கடேஷ் அழைப்பு விடுக்க, “கலெக்டரம்மா, இப்போதைக்கு பாண்டி குடும்பத்து மருமகளா முழுசா மாறியிருக்கா. அவங்க சாமி தரிசனம் பண்ணி நல்லபடியா மதுரையில் போயி இறங்கிற வரை, அவளுக்கு வேற சிந்தனையே இருக்காது.” என மனைவியைப் பற்றிப் பேசியவன்,

கிருஷ்ண புஷ்காரலுவில் தம்பியோடு ஒரு முறை நீராடி விட்டு, மாலை வானூர்தியைப் பிடித்து, நேராகத் திருப்பதி சென்றடைய, கீழ் திருப்பதி தரிசனம் முடித்திருந்த பாண்டிக்கு குடும்பம் மலை ஏறிக் கொண்டிருந்தது. தங்கப் பாண்டியன், வானூர்தி விட்டு இறங்கவும் தன் அலைபேசியை உயிர்ப்பிக்க, தான்வியிடமிருந்து செய்தி வந்திருந்தது.

செல்வி, மலை ஏறும்போதே மகன் இன்னும் வந்து சேர வில்லை என் புலம்ப, “கோவிந்தா, கோவிந்தாண்டு சொல்லிக்கே வா. மருமகனும் வந்து சேர்ந்திடும். உன் வேண்டுதலுக்கு ஒரு வழி பிறக்கும்.” என செல்லம்மாள், ஐந்நூறு படிகளைக் கடந்திரு ஓரத்தில் அமர்ந்திருந்த பொழுது தம்பி மனைவியிடம் சொல்ல, செல்வியும், “நீங்கச் சொன்ன, சரி தான்மா. கோவிந்தா, மலையப்பா பெருமாளே, என் மகனை நல்லபடியா என்கிட்டே கொண்டு வந்து சேர்த்திடு.” என வேண்டிக் கொள்ள, அடுத்த பத்தாவது நிமிடம், தங்கமும், தினேசும் அவர்கள் முன் நின்றனர். செல்வி உணர்ச்சி வயப்பட்டு மகனை அணைக்க, அவனும் பாண்டி குடும்பத்திற்குத் தேடித் தர இருந்த எத்தனை பெரிய அவப்பெயரிலிருந்து தப்பித்து வந்துள்ளோம் என உணர்ச்சி வயப் பட்டவனாக இருந்தான்.

பாண்டிக் குடும்பம் அடுத்த நாள் ஸ்ரீனிவாச கல்யாணம் தரிசனத்துக்காக முன் பதிவு செய்து வைத்திருந்தனர். நித்திய கல்யாணத்தைத் தரிசிக்கும் தினேஷ் பாண்டியன் வாழ்வில் அந்த மலையப்ப சுவாமி நடத்த இருக்கும் மாயம் என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Rerunல்ல படிச்சாலும் lovely
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top