நனவினில் நாம் வாட நலிதந்த நடுங்கஞர் கனவினால் அழிவற்றுக் கங்கலும் ஆற்றாக்கால்....
(கலித்தொகை)
தலைவி நனவில் நாம் இழந்தவன் கனவிலும் வாடுகின்றாள், நனவில் காணாத் தலைவனைக் கனவில் கண்டு கைப்பற்ற இயலாது மெல்லிகின்றனர். இத்துயரைச் சொல்லித் தலைவனை வரைய வேண்டுகின்றனர்.
பாகம் -2
உப்புக் காற்றின் குளிர் இதமாய் வந்து மோத ஓடிகொண்டிருக்கும் கழிவேலி தண்ணீர் கடல் போல காட்சி அளிக்க... கழிவேலி என்பது கடலின் கழி முகதிலிருந்து வரும் தண்ணீர் மழை அதிகமா இருக்கும் காலங்களில் கழி முகத்தில் மண்ணை எடுத்து வெளியேற்றினால் தண்ணீர் கடலில் சென்று கலந்து விடும் கடலோர ஊர்களில் வசிப்பவர்களுக்கு இது பற்றி நன்றாகவே தெரியும்....
கழிவேலிக்கு அடுத்து வயல் வரப்பு இங்கே அதிகமாக உளுந்து, வேர்க்கடலை, நெல், கோடை காலங்களில் தர்பூசணி, வெள்ளரி பழங்கள் பயிரிடப்படும்.... தனது நீல வண்ண கவுனை கையில் பிடித்தபடி கால் கொலுசுகள் தெரிய, குண்டு கண்ணங்களுடன், இரட்டை ஜடை போட்டு அதில் மல்லிகைப்பூ வைத்து, துரு துரு விழிகளை அலையவிட்டுக் கொண்டே ஓடுகிறாள்ஐந்து வயது நிரம்பிய குட்டி தேவதை பெண்... தன் குட்டி அதரத்தை திறந்து "மகி மகி" என்று அழைத்துக் கொண்டே செல்ல...
அவள் அழைப்புக்கு உரியவனோ தாழை மரங்களில் ஆரஞ்சும்,சிவப்பும் கலந்த வண்ணத்தில் கால் பந்திணை போன்று பல மலர்களை ஓட்ட வைத்தது போன்ற வடிவத்தில் இருக்கும் தாழை மரத்தின் பழத்தினை பறித்துக் கொண்டு பெரியாதாய் சாதித்த உணர்வில் சிரிப்புடன் திரும்ப "மகி" என்ற உற்சாக குரலுடன் அவனை நெருங்கியவள் அவன் கையில் இருப்பதை வாங்க முயல "அம்மு இருடா நானே கொடுக்குறேன்" என்று சொல்லியவன் தாழை பழத்தினை குட்டி கைகளில் வைத்து பிடித்துக் கொள்ள அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி... "தேங்க் யூ மகி"... தன் மழலை குரலில் சொல்லியவள் அதை தன்னோடு சேர்த்து வைத்து கொள்ள அதை பார்த்த பத்து வயது மகிக்கும் மகிழ்ச்சியே...
"நாம வீட்டுக்கு போலாமா"... என்று கேட்க சரி என்றவன் தாழை வெயிட்டாக இருக்கும் தான் தூக்கி வருவதாக சொல்ல சரி என்றவள் முன்னே துள்ளி குதித்து ஓட இவனும் பின்னே சென்றான்... அவன் திரும்பி வருகிறானா என பார்த்து கொண்டே அவள் செல்ல கண் சிமிட்டி அவளை பார்த்து கொண்டே வேகமாக நடந்து வந்தான் அவளின் மகி...
அவனை பார்த்து கொண்டே சென்றதால் கீழே இருக்கும் கல்லை கவினிக்காமல் செல்ல தடுக்கி கீழே மகி என்ற சத்தத்துடன் விழ... "அம்மா" என்ற அலறளுடன் தூக்கத்தில் இருந்து பதறி எழுந்து அமர்ந்தால் கனலி... தினமும் வரும் கனவு தான் ஆனால் இன்று அவன் முகம் நன்றாகவே தெரிந்தது... இதற்கு முன் வந்த கனவுகளில் முகம் இவ்வளவு பளிச்சென தெரிந்ததில்லை அழகான முகம் சிறு வயதிலேயே அவ்வளவு வசீகரம், ஆளுமை புருவங்கள் அடர்த்தியாக கண்களை எடுப்பாக காட்டியது கூடுதல் அழகு கனவில் கண்ட முகத்தினை நினைவில் நிறுத்தி யோசித்து கொண்டிருந்தாள்...
கனலிக்கு ஒரு விசித்திர பழக்கம் உள்ளது... அவளுக்கு நல்லதோ கேட்டதோ நடக்கும் முன் கனவு வரும்... வேலை காரணமாக காலை எழுந்து கொள்ள மறந்து விடாமல் இருக்க அலராம் வைப்பவள் கெட்ட கனவின் தாக்கத்தில் கண் விழித்து பார்த்தால் அவள் எழுந்து கொள்ள நினைத்த நேரம் இருக்கும்... "சே என்னை எழுப்பி விடுறதுக்கா இப்படி ஒரு கனவு பயந்தே போய்ட்டேன்" என்று நொந்திருக்கிறாள்... ஒரு சில நேரங்களில் மட்டுமே விசித்திரமான பயமுறுத்தும் கனவு வரும் ஆனால் கனலி அதை பெரிதாக நினைப்பதில்லை ஆரம்பத்தில் பயந்து அம்மாவிடம் சொல்லுவாள் அவள் அம்மாவோ இதெல்லாம் பயப்படும்படி எதுவும் இல்லை என்று சொன்னதோடு நெற்றியில் திருநீறு பூசி விட்டு சாமி கும்புட்டு தூங்கு எதுவும் ஆகாது என்று சொல்லி விடுவார்... இவளுக்கும் இதுவே பழகி விட்டது..
கனவில் வரும் முகங்களோ, சம்பவங்களோ தெளிவில்லாமல் இருக்கும் சிறிது நேரத்தில் மறந்தே போகும்.. ஆனால் இன்று வந்த கனவு அப்படி இல்லை அந்த முகம் தனக்கு நன்கு பழகிய முகம் என உள்ளுணர்வு சொல்கிறதே, அந்த அழகிய இடம் தண்ணீர், வயல், தாழை இதெல்லாம் புதிது.. பார்க்கனும்னு தோன்ற இடம் அந்த குழந்தை யாரு பார்க்க கொஞ்சம் என்னை மாதிரி தான் இருந்தது ஒருவேளை நான் தானா, அப்போ அந்த பையன் யாரு? யோசித்து யோசித்து பார்க்க எதுவும் நினைவுக்கு வரவில்லை...இதை யாரிடம் கேட்பது... நம்ம மனசுல இருக்குறது கனவா வரும்னு சொல்வாங்க....நேத்து நாம என்ன நினைச்சிட்டு தூங்க போனோம் யோசித்தவளுக்கு நேற்று என்ன நடந்தது, எங்கு போனோம் என்று யோசித்தவலுக்கு நேற்றைய சம்பவம் கண் முன் தோன்றியது... கனலியும், தாரிகாவும் வேலை முடித்து அலுவலகம் விட்டு வெளியே வந்தவர்கள் "தாரு சூப்பர் மார்க்கெட் போகணும் டி லிஸ்ட் வச்சிருக்கேன் வாங்கிட்டு போய்டலாம்"... "சூப்பர் மார்க்கெட்டா என்னடி லிஸ்ட் கொடு பார்ப்போம்"..
"தனது கைப்பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து கொடுத்தாள் கனலி"... அந்த பேப்பரை கையில் வாங்கியவள் "வரகு, சாமை, சாம்பா கோதுமை, கேழ்வரகு, நாட்டு சக்கரை" படித்து கொண்டே போனவள் "என்னடி இது "... "என்னடி படிச்சியே தெரியலையா"... "இதெல்லாம் சாப்பிடுவீங்களா... நீங்க பேஷன்டா "..."அடிப்பாவி ஆரோக்யமான சாப்பாடு டி இதுல எவ்ளோ வேரைட்டி செய்யலாம் தெரியுமா... செஞ்சி எடுத்துட்டு வந்து கொடுக்குறேன் சாப்பிட்டு சொல்லு"... "ஓ நான் இதெல்லாம் சாப்பிட்டதே இல்லைடி அதான் தெரியல"..... சூப்பர் மார்க்கெட் சென்றவர்கள் தேவையானதை வாங்கி கொண்டு வெளியே வந்தார்கள்....
"கனல் என் அண்ணன் பேட்டரி சர்வீஸ் கொடுத்திருக்கானம் வாங்கிட்டு வர சொல்றான்"... தாரிக்கா வீட்டில் அப்பா மதன்குமார் பிரைவேட் பேங்க் ல வேலை, அம்மா ரேணுகா... ஒரு அண்ணன் கார்த்திக் ஐ. டி ல வேலை... கனலியும் தாரிக்காவும் ஒண்ணா படிச்சவங்க ஸ்கூல், காலேஜ் இப்போ வேலையும் தனியார் நிறுவனம் தான் கவர்மேண்ட் கொடுக்குற ப்ராஜெக்ட் ரெடி பண்ணி தரணும் அதிகமா ஸ்கூல் சம்மந்தமா நிறைய இருக்கும்... இவங்களுக்கு டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ற வேலை தான்...
"கார்த்திக் அண்ணாவா... பேட்டரி எங்க கொடுத்திருக்காங்க"... "அவனோட பிரண்ட் கடையாம் அந்த அண்ணா பேர் நியாபகம் வரலை இரு கேட்கறேன் "... தன் அண்ணனுக்கு அழைத்து பேச அவனும் முகவரியை சொல்ல "கனல் பக்கத்து தெரு தான் டி போகலாமா "..."ம்ம் போலாம் டி "... இருவரும் நடந்து சென்றவர்கள் "யாழினி எலக்ட்ரிகல்ஸ் & பேட்டரி சர்வீஸ்" கடைக்கு முன் வந்தனர் "தாரு நீ போய்ட்டு வாங்கிட்டு வா நான் இங்கயே இருக்கேன் பை இருக்கு அதை எடுத்திட்டு எப்படி வரது "... "சரிடி நான் போய்ட்டு வந்துடறேன்"... தாரிகா சென்றதும் போன் எடுத்து தன் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்க அப்போது எங்கிருந்தோ ஒருவன் பையை தூக்கி கொண்டு வேகமாக ஓடி வந்தவன் கனலியை இடித்து கீழே விழ எதிர்பாராமல் வந்து இடித்ததில் கனலியும் கீழே விழுந்தால்... இடித்தவனோ வேகமாக எழுந்து அவன் எடுத்து வந்த பையை விட்டு விட்டு கனலியின் பையை எடுத்துக் கொண்டு ஓட அதிர்ந்தவள் அவன் பையை எடுத்து கொண்டு இவளும் பின்னாடியே ஓடினால் அங்கே ஒரு சிலர் திருட்டிட்டு போறான் பிடிங்க என்று கத்திக் கொண்டே ஓடி வர வெளியே சத்தம் கேட்டு மிகிரனும் வெளியே வந்தான்...
அங்கிருந்த பெரியவரோ கனலியை காட்டி "பாரு தம்பி பகல்லயே பையை பிடிங்கிட்டு ஓடுறாங்க" என காட்ட... ஒரு பெண் பையை தூக்கி ஓடி கொண்டிருப்பதை பார்த்தவன் "சே எவ்ளோ கேவலமா இருக்காங்க அதுவும் ஒரு பெண் " மனதில் திட்டிக் கொண்டே முறைத்து பார்த்து பிடிக்கலாம் என ஒரு அடி எடுத்து வைக்க அவனின் போன் அலறியது எடுத்து பார்த்தவன் ஒரு கணம் யோசித்தவன் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து கொண்டே கடைக்கு சென்றான்...
இங்கோ கனலி பையை தூக்கி சென்றவனை துரத்திக் கொண்டே சென்றவள் "நில்லுடா " என கத்திக் கொண்டே செல்ல கல் தடுக்கி கீழே விழ அவன் கையில் இருந்த பையை பிடுங்கி கொண்டால் அதற்குள் கூட்டம் கூடி விட இவளும் நடந்ததை கூற பையை தவற விட்டவறோ "கடையில நின்னு பொருள் வாங்கிட்டு பார்த்தா இவன் பையை தூக்கிட்டு ஓடி வந்துட்டான் ரொம்ப நன்றி மா" என்று சொல்ல இவளும் தன் கையிலிருந்த பையை கொடுத்து விட்டு தாரிகாவை பார்க்க வந்தால்....
தாரிகா கடையிலிருந்து வெளியே வந்தவள் "என்ன கனல் ஒரு மாதிரி இருக்க.. என்ன ஆச்சு" என்று பதட்டத்துடன் கேட்க.. பெரு மூச்சு விட்டவள் நடந்ததை கூறி விட்டு "இவ்ளோ கலவரம் நடக்குது நீ வெளியவே வரலையேடி"... "அம்மா போன் பண்ணாங்க வழக்கம் போல அப்பாவோட சண்டை அவங்க பண்ண டென்ஷன்ல கவனிக்கல டி... சாரி சாரி டியர்".... "போடி நான் எவ்ளோ பயந்துட்டேன் கூட உதவிக்கு யாருமே இல்லை... எப்டியோ இதுல இருந்து தப்பிச்சிட்டேன்.. என்னை திருடின்னு நினைச்சிட்டாங்க... எப்டிலாம் பிரச்சினை வருது இனி ரொம்பவே கவனமா இருக்கணும்".. "உன் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாதுடி... இனி உன்னை தனியா விட்டுட்டு போக மாட்டேன்" என்றவள் அழுது விட்டால்... தன் தோழியின் கண்ணீரை பார்த்தவள்... அவளின் கண்ணீரை துடைத்து விட்டு "சரி விடு டி அதான் சரி ஆகிடுச்சே பார்த்துக்கலாம்... நீ போன வேலை முடிஞ்சிதா"...
"இன்னும் கொஞ்சம் வேலை இருக்காம் முடிச்சிட்டு அவங்களே வீட்டுக்கு எடுத்துட்டு வந்து கொடுக்குறாங்களாம்"..
"சரி போலாமா"... இருவரும் கிளம்ப தன்னை யாரோ பார்ப்பது போல இருக்க திரும்பி பார்த்தவள் திகைத்தால்... மிகிரன் முறைத்துக் கொண்டு இவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் கனலி,தாரிகாவின் காது அருகே சென்று "தாரு அங்க பாரு அங்க ஒருத்தன் முறைச்சி பார்க்குறான் டி".. தாரிகா திரும்பி பார்த்தவள் "முகி அண்ணா என்ன ஆச்சு... ஏன் முறைச்சி பார்க்குறீங்க"... இங்கு நடந்ததை பார்த்து கனலியை தவறாக நினைத்திருப்பார் என யூகித்தவள் "இவ என் பிரண்ட் கனலி "... என்றவள் நடந்ததை சொல்ல அவன் முகம் மாறுதல் அடைந்தது... தாரிகா சொன்னதை கேட்டவன் தலையை மட்டும் அசைத்து கிளம்பி விட்டான்...
கனலிக்கோ கோவமாக வந்தது தாரிகாவை இழுத்து கொண்டு வேகமாக நடந்து வந்தவள் "என்னடி இப்படி முறைக்குறான்.. நீ நடந்த எல்லாம் சொன்ன அப்புறம் கூட எதுவும் பேசல யாருடி அது"...
நம்ம பிரண்ட் நித்தியாவோட அண்ணன் டி... அவருக்கு நடந்த கொடுமைங்க அவரை இப்படி மாத்திடுச்சி... ரொம்ப பாவம் டி... அவரை பத்தி தெரிஞ்சா நீ இப்படி கோவ பட மாட்ட.... கனலி குழப்பதுடன் தாரிகாவை பார்த்தால்....
கருத்துக்களை விமர்சனங்களாக தாருங்கள்....

Last edited by a moderator: