Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,505
19. திருவின் தேவி
வாலாந்தூர் ஆதிசிவன் காமாட்சி அம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா. தங்கள் குலதெய்வம் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டி, சிறப்பாகக் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது பேச்சியம்மாள் கணவர், காலம் சென்ற கருத்தபாண்டி ஐயாவின் கனவு. அவருடைய காலத்தில் பேச்சு வார்த்தையாக மட்டுமே இருந்தது. சிவபாண்டி மந்திரியாகவும் அதற்கு முயற்சி எடுத்தார். இதோ பத்து வருடங்களாக 101 அடி கோபுரத்தைக் கட்டி இப்போது தான் குடமுழுக்கு செய்வதற்கானக் காலம் தகைந்துள்ளது.
பேச்சியம்மாள் உணர்வு ததும்பிய நிலையில், இந்த மூன்று நாட்களாய் வெளியே அதிகம் பேசாமல் அகத்தில் தன் கணவரோடு, தான் மானசீகமாக உரையாடிக் கொண்டிருந்தார். அன்று கலசத்தைக் களவாட வந்தவர்களைக் காட்டிக் கொடுத்தது, கருத்த பாண்டி ஐயா தானே.
"அய்யா சாமி, நீங்களும் அருவமா இருந்து, நம்ம குலசாமி கோவில் கும்பாபிஷேகத்தைப் பார்த்திக்கிட்டு இருக்கீகண்டு எனக்கு விளங்குது. நம்ம மக்களுக்குப் பக்கப்பலமா இருந்து மீதி விசேசத்தையும் முடிச்சு கொடுத்திடுங்க." எனக் கும்பிட்டார்.
பாண்டிக் குடும்பமும், தங்கள் குலதெய்வம் கோவில் கும்பாபிஷேகத்தை தங்கள் வாழ்வின் முக்கிய மைல் கல்லாக எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவு, பக்தி சிரத்தை, அர்ப்பணிப்போடு ஆரம்பம் முதலே கோவில் திருப்பணிகளைச் செய்தனர்.
101 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் பல வருடங்களாகக் கட்டினர். கோவிலின் சானித்தியம், மக்களை இழுத்து வந்தது, சுற்றுப்பட்டி கிராமங்களிலிருந்தும், பங்காளி, சம்பந்தபுரம், உறவினர்கள், நண்பர்களிடமிருந்து போதும் போதும் எனுமளவு பணம் வந்தது. சுற்று வட்டாரப் பஞ்சாயத்துக்கள் கூட லட்சங்களில் நன்கொடை வழங்கினர். கோவிலின் பெரும்பகுதி செலவைப் பாண்டி குடும்பமும், துரை குடும்பமும் ஏற்றது. பங்காளிகள், சுற்றுப் பட்டியில் தங்கள் உறவினர் உள்ள இடங்கள், மற்ற குலதெய்வங்களை வணங்குபவர்கள் என எல்லோருக்கும் தேடி, தேடி பத்திரிகை வைத்தனர்.
இன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர். மதுரை தேனி சாலையில் பல மணி நேரங்களுக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்தது, மாற்றுப் பாதையில் திருப்பி விடப் பட்டது. கோவிலுக்கு வருபவர்களும், வெகு தூரம் முன்பே காரை நிறுத்தி வைத்து விட்டு கால் நடையாக வந்தனர்.
முன்னதாக, நேற்று மாலை, முதலில் கன்யா பூஜை, நடந்தது. நான்கு வயது கவிதர்சினி முதல், பருவம் வந்த மணமாகாதப் பெண்களை வரிசையாக அமர்த்தினர். ராகவி, அழகி, அரசி, ஹரிணி, சுபஸ்ரீ முதல் ராமதுரை மகள் சித்ரா தேவி வரை, கோவிலுக்கு வந்திருந்த எல்லாப் பெண் குழந்தைகளையும் வரிசையாய் அமர்த்தி, அவர்களுக்குச் சிவாச்சாரியார் சொல்லச் சொல்ல பூஜை செய்தனர்.
ஒவ்வொரு கன்னிப் பெண்ணுக்கும் கோதை, சந்தனம் வைத்துக் கொண்டே செல்ல, சுமித்ரா குங்குமம் வைத்துக் கொண்டே வந்தாள். அவர்களுக்கானத் தாம்பூலப் பையை, ஐஸ்வர்யா கையில் கொடுக்க, எல்லா ஆண்களும் பெண்களும் அட்சதை, பூ தூவ, சிவாச்சாரியார்கள் கன்னிப் பெண்களையேப் பாலாம்பிகையாக பாவித்து பூ தூவி சூடம் காட்டினார்.
அதே போல் அடுத்து சந்திரா, கௌசி, அசோதை, சோலையம்மா, செல்வி, சுதா மாமி, சாந்தம்மா, சம்பந்தி வீட்டுப் பெண்கள் என மூத்தோரை முதலில் வரிசையாக அமர்த்தி, மலர், பூமா, தான்வி, சிவப்ரியா, சன்னு ஆகியோர் நலங்கு வைத்தனர். தொடர்ந்து அங்கு வந்துள்ள எல்லாப் பெண்களையும் அடுத்தடுத்தக் குழுவாக அமர்த்தி, தாம்பூலம் வழங்கி நலங்கிட்டு சுமங்கலி பூஜையை நடத்த, ஆண்களையும் வந்து வணங்கச் சொன்னார்கள்.
சிவ பாண்டி, "மாப்பிள்ளை இந்தா புடி." என மகன் நீட்டிய உதிரிப் பூக்களில் ஒரு கையை எடுத்து மாயன் கையில் கொடுத்தவர், தானும் கைகளில் எடுத்துக் கொண்டு, "சம்பந்தி சரி தானே, நீங்க சொல்லுங்க." என, ரகோத்தமனையும் கூட்டுச் சேர்த்துக் கொள்ள,
அவரோ, அம்பிகையைக் கண்ட அபிராமி பட்டர் போல், "இது போல, சுமங்கலிகளை ஒரே இடத்தில் சேவிக்கும் பாக்கியம் எங்கு கிடைக்கும். காமாட்சியம்மன், சீலைக்காரி உங்க குல தெய்வங்கள் தான், நமக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கா." என்றார். அவர்கள் வரிசையில் ரெட்டிகாரு, ராஜா திரு ஆகியோரும் வந்து நின்று கொண்டனர்.
இளைய பாண்டிகளும், மாமன் மச்சினங்களும் கேலியும் கிண்டலுமாக வந்து நின்றாலும், தீபம் காட்டும் போது, அத்தனையும் மறந்து தம் பெண்களைச் சக்தி சொரூபமாகத் தான் வழிபட்டனர்.
பெண்கள் வரிசையில், ஸ்ரீதேவி பத்மாசினியாக வந்து முன்னாள் அமர, சிவாச்சாரியார்களுக்கும், சக்தி உபாசகர்களுக்கும், அவள் ஜென்மங்களைத் தாண்டிய ஒரு சக்தி எனப் புரிந்தது. சிவாச்சாரியாரே அவளுக்குப் பூ போட்டு மந்திரம் சொல்ல, ராஜா திரு தங்கள் குலதெய்வம் ஜக்கம்மாவை மனதில் நினைத்தவாறு, இங்குள்ள தெய்வங்களையும் வணங்கி நின்றார்.
சிவாச்சாரியார், மூத்தப் பெண்களுக்கு "ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை." எனப் பாடல் பாடி துதித்து தீபம் காட்டினார். அங்கு அமர்ந்திருந்தப் பெண்களுக்குமே, அன்று பெண்ணாய் பிறந்ததின் பலன் புரிந்தது போல் இருந்தது. பெண்களை ஆண்கள் வணங்கி, அட்சதை தூவி, சுமங்கலிகளைக் காமாட்சியம்மன் சொரூபமாகத் தீப தூபம் காட்டி வழிபட்டனர்
அங்கு வந்திருந்த பேரிளம் பெண்கள், தம் பெண்டுகள், பெண் மக்களுக்குச் செய்த இந்த பூஜையை மனதார வாழ்த்தினர். எந்தக் குடும்பங்களில் பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கு மலைமகளும், திருமகளும், கலைமகளும் சேர்ந்து வாசம் செய்வர். இதனைப் பாமரனுக்கும் புரியும்படி எடுத்துச் சொல்வதே இந்த பூஜைகள்.
மாலை முதலே ஸ்ரீதேவி பத்மாசினியாக தான் இருந்தாள். தாயார் சிலைகள் கிடைத்து, அதைக் கவர்ந்த கயவர்களும் சிறைப்படுத்தப்பட்டப் பின், சற்று ஓய்வு கொண்டாள். அடுத்த நாள் மாலை வாலாந்தூர் ஆதி சிவன் கோவிலுக்கு உத்தமர் மற்றும் அனுமந்துவோடு வந்து விட்டாள்.
பாண்டி மற்றும் துரை குடும்பங்கள் அவளுக்கு கழுவன் குடும்பமாகவேத் தெரிந்தது. முன் ஜென்ம உறவுகளோடு, இப்பிறப்பில் அதே நினைவோடு உறவாடுவது என்பது யாருக்குக் கிடைக்கும். செம்பதுமத்தின் மனதில் உள்ள குறையைப் போக்க, இறைவன் அவ்வருளை வழங்கி இருந்தான் போலும்.
பாண்டி குடும்பத்தின் தாய்க் கிழவி, பேரரசி பேச்சியம்மாளைப் பார்க்கவும், அவளுக்குப் புன்னகை மலர்ந்தது. அவர் அருகில் சென்று காலைத் தொட்டுக் கும்பிட, “ஆத்தா, மகராசியா இரு” என ஆசீர்வாதம் செய்தவர், அருகில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டு, “ யாரு மக நீயி, எந்த குடும்பம்” எனக் கேட்க,
“உன் குடும்பம் தான் அப்பத்தா, வம்சம் வளரவும், செம்பதுமத்தை மறந்துட்ட பார்த்தியா, சீயான் இருந்திருந்தா, என்னை அடையாளம் கண்டுக்கிட்டு இருப்பாரு” எனக் கண்ணில் துளி நீரோடு, அவர் கையைப் பிடிக்க, பேச்சியம்மாளின் வழமையானப் பேச்சு தொலைந்து, அவள் கன்னம் வழித்துக் கொஞ்சியவர். “சீயாண்டு சொல்றவ, மட்டுப்படலையே” எனவும்,
“மட்டுபடலயிண்டா, உன் பேத்தியில்லையிண்டு ஆகிடுமா” அர்த்தமாகச் சிரிக்க,
“ஆத்தா, நீ சிரிச்சியிண்டா, என் அகம் குளிர்ந்து போகுது. வீட்டு பிறந்த மக சீலைக்காரி அம்சம்” என்றவர், கையில் வைத்திருந்தப் பொங்கல் பிரசாதத்தை ஒரு வாய் ஊட்டி விட, கண்ணில் நீரோடு,
“மனசு நிறைஞ்சுடுச்சு அப்பத்தா” எனக் கட்டியணைத்து முத்தமிட, பேச்சிக்கு மேனி சிலிர்த்தது.
“ஆத்தி, யாரு இது” செல்லம்மாள் வினவ, “பூவு அக்காளைத் தவிர மத்த மருமகளுகங்களை உங்களுக்கு அடையாளம் தெரியாதா? உங்க மகன்கிட்டக் கேட்டுகுங்க” என்றாள். “ஆத்தாடியத்தி, என் மவனுக்குத் தெரியுமா?” என வியந்தார்.
அசோதையிடம், “ஆத்தா” என வாஞ்சையாகப் பேசி அவர் கையிலிருந்த பானகத்தைக் குடித்து, வீரனிடம் ஆசி வாங்கிக் கொண்டவள், முத்து பாண்டி சிவப்பி, பூவு, செல்வ மணி என எல்லாரிடமும் உறவாட, ராஜா திரு பார்த்துக் கொண்டே இருந்தார்.
பேச்சியம்மாள், தான்வியைப் பிடித்து, பத்மாசினியைக் காட்டி, யார் என விசாரிக்க, “உங்கப் பேத்தி தான்” எனப் பூடகமாகச் சொல்ல,
“அது தான், அந்தப் புள்ளையே சொல்லிடுச்சே, எப்படி பேத்திண்டு தான் கேட்டேன். நீ சிரிச்சு பேசிகிட்டு இருந்தவ” என விசாரித்தார்.
“நம்ம குடும்பத்தோட முன் ஜென்ம பந்தம்.” எனச் சுருக்கமாகச் சொல்ல,
“ஆத்தி” நெஞ்சில் கைவைத்த பேச்சியம்மாள், “நெசமாத்தான் சொல்றியா” என்றவர் பார்வை பத்மாசினியைத் தொடர்ந்தது.
மீனா, சக்தி, ரங்கதுரை, நிர்மலா, சன்னு, ராமதுரை மனைவி சரோஜா பிள்ளைகள் சித்ரா, சாமிதுரை ஆகியோர் அங்கே நிற்க, பத்மாசினியாக இருந்த ஸ்ரீதேவி, கடமையாற்ற வந்த ராதா ராணியை, ராஜதுரை இருந்த இடம் இழுத்து வந்து நிறுத்தி, “புள்ளைக் குட்டி புருஷனோடச் சேர்ந்து வாழனுமுன்னு வேண்டிக்கோ. நீ வேண்டினது கிடைக்கும்” என ரகசியம் பேசினாள்.
சுற்றிப் பார்த்தவள், “போடி கிறுக்கி” எனத் திட்ட, “சஞ்சு, சங்கருக்கு அப்பா வேணுமா, வேண்டாமா” என மடக்க, “அதுக்குன்னு இந்த ஆளை சகிச்சுக்க முடியுமா” வினவ,
“நேத்து பூரா அப்பாரு தானே தூக்கிட்டு திரிஞ்சாரு, சும்மா சலிச்சுக்காதே” எனவும், அவள் முறைக்க, “சாமிதுரைக்காக ஓகே சொல்லு ராதாம்மா” எனக் கெஞ்ச, “பார்ப்போம்” என்றாள்.
“நல்லா, உன் எமகாதகனைப் பாரு” என கிசுகிசுத்து சென்றவள்,
ராஜதுரை காதில், ”அப்பாரு, கழுவன் குடும்பம், துரை குடும்பமாகி இருக்கு. உன் ராணியை விடாமல் கெட்டியா பிடிச்சுக்கோ” எனவும், “என்னத்தா” என்றான். எல்லாருடைய பார்வையும் கலசத்தில் இருக்க, ராஜாதுரை, ராதாராணி முறைப்பையும் பார்த்து விட்டு, “உன் ராணியைக் கெட்டியா பிடிச்சுக்கோ” என தன் கையிலிருந்தக் குங்குமத்தை அவனுக்கு வைத்து விட, கன்னி பூஜை செய்த மீனா, சித்ரா வைத்து விட்ட நினைவில் உணர்ச்சிவசப்பட்டவன்,
“அப்படிண்டா சொல்ற, நீ சொன்னா சரி தான். நீயும் ராசாவைக் கதற விடாமல் சீக்கிரம் கல்யாணம் கட்டிக்க” என்றான்.
“அது உங்கள் கையில் தான் இருக்கு, நீங்க சேர்ந்தா தான் நாங்க சேரமுடியும்” எனவும்,
“அப்படியா, கருப்பன் சேர்த்து வச்சுடுவான். நீயும் கும்பிட்டுக்க” என்றான்.
‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என ராஜா திரு நின்ற இடம் சென்றாள்.
“பத்மை, குடும்பத்தினரோடுப் பேசி மகிழ்ந்தாச்சா” வினவ,
“பத்மை அல்ல பதுமம். பாதியில் விட்டுச் சென்றவளைக் குளிர்வித்தேன். அசுவமா நதிக்கரைக்குச் செல்ல வேண்டும் வாசவரே” என்றாள்.
வழக்கம் போல் “ஆகட்டும் தேவி” என்றார். ராஜாவும், பத்மாசினியும் அவர்களுக்கு இட்டப் பணியைச் செய்ய அசுவமா நதியை நோக்கிச் சென்றனர். அவர்களுக்குப் பணி செய்ய, அன்று பார்த்த பளிங்கர்கள், பத்மாசினியோடு வந்த மாமா, அவருடைய காரோட்டி, ராஜாவின் ஆட்கள் என ஒரு கூட்டமே அங்கே காத்திருந்தனர்.
இரவு ராஜா திருவும், பதமாசினியும் நிஷ்டையில் அமர்ந்து இடைவிடாது தியானித்து இருக்க, வல்லபர் நிஷ்டையில் தோன்றி, “மண்ணில் புதையுண்ட வராகன் வெளிப்பட வேண்டுமெனில், அவன் திருமேனியை நீருக்குள் கிடத்தியவள், விரதமிருந்து பூஜை செய்ய வேண்டும். உமது பக்தி, சிரத்தைக்கு மகாவிஷ்ணு அருள் இருந்தால், இதே நதியில் “ஹிரண்ய கர்ப கற்கள்” தோன்றும். அதை வைத்து ஒருமண்டலம் பூஜை செய்ய வராகரூபன் காட்சி தருவான். பூஜையில் வரும் தடங்கல்களையும், சிக்கல்களையும் தீர்த்து, ஒரு மண்டலம் இடைவிடாது பூஜை செய்ய வேண்டும்” என்றார்.
பத்மாசினி கண்ணில் நீர் வழிய, “என் பிழைக்கு, அவசியம் பிராயச்சித்தம் செய்வேன் வல்லபரே, வழிகாட்டியமைக்கு நன்றி” என வணங்க, ராஜா திருவும் அதற்கு உடன்பட்டார்.
ஆனால் “ஹிரண்ய கர்ப கற்கள்” என்பவை மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் சாளக்கிராமம் கற்கள். நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகின்றது.
மஹாவிஷ்னு, தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராமக் கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார் என்பது ஐதீகம் இவை தான் சாளக்கிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். இவை பூஜைக்கு உகந்தவை. இந்த சாளக்கிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கின்றன.
“யார் சாளக்கிராம மூர்த்தியை வைத்து வழிபடுகிறார்களோ, அந்த இடத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே நான் எழுந்தருள்கிறேன். அந்த சாளக்கிராமத்தில் நான் எப்போதும் குடியிருப்பவன். அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளக்கிராமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்குச் சந்தோஷம், சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்பது முன்னொருமுறை ஒரு பக்தனுக்கு மகாவிஷ்ணு அருளியது.
ஒரு சாளக்கிராமக் கல்லை நேபாளத்திலிருந்து தருவிப்பது, ராஜா திருவுக்குப் பெரிய காரியமில்லை. ஒரு பொழுதில் விமானத்தில் கொண்டு வர ஏற்பாடு செய்து விடுவார். ஆனால், அசுவமா நதியில் தோன்றிய சாளக்கிராமக் கல்லை வைத்து வழிபட வேண்டும் என வல்லவர் நிபந்தனை செய்திருக்க, பத்மாசினி அதற்கும் உடன் பட்டாள்.
“ஜென்ம, ஜென்மமாய் நான் ஏழுமலையான் மேல் கொண்டுள்ள பக்தி உண்மை என்றால், நாளை காலை ஆதிசிவன் குடமுழுக்காட்டு செய்யும் நேரம், ஹிரண்ய கர்ப கல் பிரத்தியட்சம் ஆக வேண்டும், இல்லையேல் மாயவன் சித்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும்” எனச் சங்கல்பம் செய்து கொண்டு, ஒற்றைக் காலில் தவமிருக்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் காலை, ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் ராதா ராணி தலைமையில் மேற்பார்வை நடந்தது. பாண்டி குடும்பம், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பைத் தந்தது.
அதுவும், தான்வியும், தங்கபாண்டியனும் அவர்கள் வீட்டு விழா என்பதால், கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொள்ள, ராதா ராணிக்கும் வசதியாகப் போனது.
லட்சம் பேருக்கு மேல் பக்தர்கள் வருவார்கள், சிவபாண்டியன் அழைப்பின் பேரில் முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப் பட்டதால், பாதுகாப்புக்குக் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஒலிபெருக்கியில் சிவாச்சாரியாரில் ஒருவரும், ரகோத்தமனும் மாறி, மாறி கும்பாபிஷேக நிகழ்வுகளை வர்ணித்துக் கொண்டிருந்தனர்.
“ஆதிசிவன், உடனுறை காமாட்சியம்மன் அருள் பாலிக்கும் வாலாந்தூர் கோவில் கும்பாபிஷேகம், நான்கு கால ஹோமம் முடிந்து, சக்திகள் கருவறையில் சேர்க்கப்பட்டு, குடமுழுக்கு காணத் தயாராக உள்ளது.
“இந்த உலகைக் காக்க வல்லான் அந்த ஆதிசிவன், மதுரையம்பதியில் சொக்கநாதனாகவும், மீனாட்சியம்மையாகவும் அருள்பாலிக்கும், நம் அப்பனும், அம்மையும் இங்கு ஆதிசிவனாகவும், அங்காளபரமேஸ்வரி அவள் கருணை வடிவான காமாட்சியாகவும் காட்சி தருகின்றார்கள். இதோ குடமுழுக்கு காணத் தயாராக இருக்கும் அப்பனையும், அம்மையையும் தரிசிக்க, அதோ வானில் கருடன் தோன்றி விட்டான். இன்னும் சற்று நேரத்தில் கடம் புறப்பாடு நடக்க இருக்கிறது. காப்புக் கட்டிய பங்காளி மக்கள், இரு ஓரமும் நின்று சிவாச்சாரியார்கள், கோபுரத்துக்கு, கருவறைக்குச் செல்ல வழியமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.” என அறிவிக்க,
பாண்டிகளின் படை, தயாராக நின்றது. ஏற்கனேவே ஜெயபாண்டி, ஹரீஷ், ஹித்தேஷ் என இளவட்டங்கள் கோபுரத்தில் தான் நின்றார்கள்.
இப்போது கடம் புறப்படத் தயாரானதும், துரை பாண்டி, தங்க பாண்டி கூடவே வர, மாமன் மச்சினங்கலான செல்வ மணி, விருமன், மாதவன், ஹரீஷ், சக்தி ஆகியோர் மாயத்தேவன் தலைமையில் சம்பந்தபுரத்துக்கு உதவிக் கொண்டிருந்தனர். சிவபாண்டி, சந்திரா, ராஜபாண்டி கௌசி மற்ற இரு பங்காளி குடும்பத்தினர் முன்னாள் நிற்க, அவர் தம் குலப் பெண்களும், மருமகள்களும் அவர்கள் பின்னால் நின்றனர்.
கோபுரக் கலசத்தில் ஊற்ற இருக்கும் கலசத்தைச் சிவாச்சாரியாரில் இளையவர் ஒருவரை நியமித்திருக்க, “ஓம், நமச்சிவாய!” என்று சொல்லி மாலையும், கழுத்துமாக நின்ற சிவாச்சாரியார் தலையில் கலசத்தை வைக்க, அருள் வந்து கண்ணீர் மல்கிய அவரைப் பிடிக்கவே நான்கு பேர் தேவைப்பட்டனர், யாகசாலைக்குள் மற்றவர் பிரவேசிக்கத் தடை இருந்ததால், சிவாச்சாரியார்கள் அவரை யாகசாலை விட்டு, வெளியே இழுத்து வர, ஆகிருதியானத் தங்கப் பாண்டியனும், செல்வமணியும் அவரைப் பிடித்துக் கொண்டனர்.
ஒவ்வொரு கலசத்தையும் ஒவ்வொருவர் தலையில் வைத்து, கோபுரத்துக்கு, கருவறைக்கு யார் எங்கு செல்ல வேண்டும் எனத் தலைமை பட்டர் அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
மங்கள வாத்தியம் நாதஸ்வரம், மேளம் இசைத்தபடி அவர்கள் முன்னே செல்ல, கையில் தண்டம் பிடித்தபடி சிவபாண்டியன், சூலம் தாங்கியபடி ராஜபாண்டியனும், ஈட்டி தாங்கியபடி வீரபாண்டியனும், கருப்பன் அருவாள் தாங்கியபடி துரை பாண்டியனும் முன்னாள் நடக்க, ராஜகோபுரத்துக்கு ஏற இருக்கும் சிவாச்சாரியார், தங்கமும், செல்வமும் பிடித்தபடி வர, ஆதிசிவன், காமாட்சியம்மன் விமானங்களுக்குக் கலசங்களைத் தூக்கி வந்த சிவாச்சாரியார்களைச் செல்லம், முத்து, தினேஷ் ஆகியோர் பிடித்துக் கொண்டு வந்தனர்.
“இதோ கடம் புறப்பட்டு விட்டது. வானில் கருடன் வட்டமிடுகிறான். எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கள் ஓம் நமச்சிவாய, ஓம் சக்தி.” என ஒலிபெருக்கியில் திரும்பித் திரும்பச் சொல்ல மக்கள் வெள்ளம் கோசம் எழுப்பியபடி பின் தொடர்ந்தது.
மந்திர கோஷங்களும், வர்ணனைகளும், அங்கு ஆட்கொண்டிருந்த சக்திகளும், பங்கேற்ற ஒவ்வொருவர் மனதிலும் பேரானந்தப் பெருக்கை உண்டு செய்ய, அவரவர் அறிவுக்கு எட்டியவரை, கத்தியும், கதறியும், கூக்குரலிட்டும், குலவையிட்டும், கண்ணீர் பெருக்கியும், கோஷமிட்டும், உணர்வு கொந்தளித்த நிலையிலிருந்தனர்.
சில மாதங்களாக எதற்காகப் பாண்டி குடும்பமும், அவர்கள் பங்காளி குடும்பங்களிலும் உழைத்தார்களோ, இதோ அதன் பலன் கிடைக்கப் போகிறது. சிவாச்சாரியார்கள் குடத்தோடு மேலே ஏறிவிட்டனர். ஏற்றி விட்டவன் இறைவன். அவனருளாளே அவன் தாழ் வணங்கி, அவனைப் போற்றுவோம்.
“ஓம் நமச்சிவாயா” எனக் கட்டுக்கடங்காத கூட்டம் கோசம் எழுப்ப, மேலே கருடன் வட்டமிட, கலச பூஜை செய்து, மூன்று நாட்களாக வேத மந்திரங்கள் ஓதி, இறை சக்திகள் நிறைந்த புனித நீரைக் கலசத்தின் மீது ஊற்றினர்.
“ஓம் நமசிவாயா!” “ஓம் சக்தி!” எனக் கோசம் விண்ணைப் பிளந்தது. மீதி நீரை அங்கு வைக்கப்பட்டிருந்த அண்டா தண்ணீரில் கலந்து விட, மேலே நின்ற பாண்டி குடும்பத்தினர், செம்புகளில் அள்ளி, கூட்டத்தினர் மீது ஊற்றினர். பாண்டி குடும்பத்தின் பேரரசி பேச்சியம்மாள் என்றும் கலங்காமல் அந்தக் குடும்பத்தைக் கட்டிக் காத்தவர், தன் முதுமையையும் பொருட்படுத்தாது, கண்ணைச் சுருக்கி, கும்பாபிஷேகத்தைப் பார்த்தார். கையைத் தலைக்கு மேல் தூக்கி,
“அய்யா கருப்பா, அப்பனே, காட்சியளியம்மா தாயே, தலைமுறை தலைமுறையா உனக்குச் சேவகம் செய்யிறப் பெரும் பேரை இந்தப் பாண்டி குடும்பத்துக்குக் கொடுக்கணும். என் வம்சம், நோய் நொடியில்லாமல் தழைக்கணும். எல்லா நேரமும் நீ தான் அவுகளக் காத்து நிக்கணும்.” என வேண்டிக் கொண்டார்.
அதே நேரம், அசுவமா நதிக்கரையில், மாயவனை மண் மீது காட்சி தரவேண்டி ராஜா திருவும், பத்மாசினியும் ஒற்றைக் காலில் தவமிருந்தனர்.
நிர்மலாவுக்கு, சித்தபண்டூரில் ஒரு கம்பளத்துக்காரர் “அப்பனும், அம்மையும் நீரிலும், விதையிலும் முங்கிக் குளிச்சு, கண்ணு திறக்கும் போது, வராக அவதாரம் எடுத்தவனும், கரை ஏறி வருவான். உன் கேள்விக்கெல்லாம் விடை கிடைக்கும், விதைச்சது விளைஞ்சு நிற்கும், விதிப்படி வினையும் முடியும்.” எனச் சொல்லிச் சென்றிருந்தார், அதன்படி வாலாந்தூர் கோவில் குடமுழுக்கு முன், தாயார் சிலைகள் வெளிப்பட்டு, நிர்மலாவின் பகையும் முடிந்திருந்தது.
வராக அவதாரம் எடுத்தவன், கரை ஏறி வருவது மட்டுமே மீதமிருந்தது. ஆனால் அது பத்மாசினிக்கான பரிட்சையாகிப் போனது. எவ்வளவு தான் கோபம் இருந்தாலும், சித்தம் கலங்கி தெய்வ நிந்தனை செய்யக் கூடாது எனும் பாடத்தை அவள் கற்கும் காலமாக இருந்தது.
ராஜா திரு, கண்ணீர் மல்க, “ஏழுமலையானே, கோவிந்தா, இன்னும் எத்தனை ஜென்மம் தான் எங்களைச் சோதிப்பாய். பிராயச்சித்தம் செய்ய வழி முறையைச் சொன்னவன், அதற்கான ரூபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பது உம் கடமை” என வேண்டிக்கொண்டார்.
இதோ விஷ்ணு சகஸ்ரநாமாவளிகளை இடை விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, பன்னிரண்டு மணி நேரத்துக்கும் அதிகமான தவத்தின் பலனாய், ஆதிசிவன் குடமுழுக்கு ஆகும் நேரம், மேலே கருடன் வட்டமிட, கீழே அசுவமா நதியில் சங்கு சக்ர சாளக்கிராமக் கல் தோன்றியது.
அருகில் நின்ற உத்தமர், “வெங்கட் ரமணா, கோவிந்தா” என கோஷம் எழுப்பி, “அம்மா ஸ்ரீ, உன் தவம் பழிச்சுடுச்சு, பிரபு, மகாவிஷ்ணு அம்சம், உங்களைத் தேடி வந்து இருக்கு. கண்ணைத் திறந்து பாருங்கள். அதோ அங்குக் குடமுழுக்கும் நடக்குது” எனப் பக்தி பரவசமாகச் சொல்ல, அனுமந்து தன் கண் முன் நடக்கும் அற்புதங்களைப் பிரமித்துப் பார்த்திருந்தான்.
ராஜா திரு கண்ணீர் மல்க, கோவிந்த நாமம் சொன்னவர், “பத்மை உன் தவத்துக்கான பலன் கிடைத்தது. இதோ சங்கு சக்ர சாளக்கிராமம்” என உணர்ச்சிவயப்படச் சொன்னார். பத்மாசினி கண் திறந்து ராஜாவின் கையிலிருந்ததைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.
வாலந்தூர் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஹெலிகாப்டர், கோபுர கலசங்களின் மீதும், அங்குக் கூடியிருந்தப் பக்தர்கள் மீதும் உதிரிப் பூக்களைத் தூவியது, அது வட்டமிடும் போது, ஒரு கூடைப் பூக்கள் அசுவமா நதிக்கரையில், ராஜா திருவின் கைகளில் இருந்த ஹிரண்ய கர்ப கல் மீதும் விழுந்து, அரியும், சிவனும் தமக்கு ஒன்றே எனப் பூக்களும் தாம் மலர்ந்த பயனை அடைந்தன. மக்கள் வானிலிருந்து இறைவனே ஆசீர்வாதம் செய்தது போல் மகிழ்ந்திருந்தனர்.
ஒரு மண்டலம் பத்மாசினியின் பூஜை தடையின்றி நடைபெறுமா, மாயவன் மண் மீது வருவாரா?