My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன் - பாகம் -17

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
"நெருக்கத்தில் உயிர் வதைக்கிறாய், நான் விலகிட முடியா நிலையில், இன்னும் நீ உணரவில்லையா"



.... கனலியின் காதல் வரிகள்...



பாகம்-17



அவனின் நெருக்கம் இவளை எதோ செய்தது, முத்தம் தர நெருங்கியது உணர்ந்து இவளும் எதிர்பார்த்தால், அவனின் தயக்கம் ஏமாற்றம் அளித்தாலும், இருக்கும் பிரச்சனைகளை முடித்து வரட்டும் என்று வருத்தத்தை மறைத்தவள், அவனின் செயல்களுக்கு உறுதுணையாக இருக்க உறுதி கொண்டாள் அவன் மனம் புரிந்தவளாக



அதில் சிரித்தவன் " வா போகலாம், சாப்பிட்டு கிளம்பனும், வாசு, செந்தில் நம்பர் எனக்கு அனுப்பு, வீட்டுக்கு போய்ட்டு சொல்லிட்டு கிளம்பனும், நீ தான் இங்க பார்த்துக்கணும் எனக்கு பதில், உன்னை நம்பி விட்டுட்டு போறேன்" தனக்கான வேலை செந்தில் இருக்கும் இடத்தில் தான் அங்கே சென்றாள் செந்திலை பார்த்து பிரச்சனகளை அறிந்து கொண்டு, பிறகே அதற்கான தீர்வினை யோசிக்க வேண்டும்,



நித்யாவிடம் எப்படியாவது செந்திலை சேர்த்து விட்டால் போதும், அம்மாவும் மகிழ்வார்கள். இனி நான் நிம்மதியாக என் கனலியிடம் காதல் வாழ்க்கையை வாழ வேண்டும். இன்னும் எவ்வளவு பிரச்சனகள் வரப் போகிறதோ, வந்தால் என்ன என் கண்மணி இருக்கிறாளே, அனைத்தையும் சரி செய்ய மனதோடு பேசியவன் சிந்தனையை களைத்தது அவள் குரல்,



" நான் பார்த்துக்கறேன் நீங்க கவலை படாதீங்க "



" பிரச்சனை முடிச்சிட்டு உனக்கு பிடிச்ச மாதிரி வருவேன் " வசியச் சிரிப்பை வீசினான்.



" காத்திருப்பேன் " அவளும் சிரித்தால்.



சாப்பிட்டு முடித்ததும். மிகிரனின் வீட்டுக்கு சென்றனர். வேலை இருப்பதாக மட்டும் சொன்னவன் இரண்டு நாட்களுக்கு தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.



செந்திலுக்கு அழைத்து பேசியவன் குறிப்பிட்ட இடத்தில் வருமாறு சொல்லி விட்டு ஊரில் உள்ள நண்பனுக்கு அழைத்து தான் வந்து கொண்டு இருப்பதாகவும் அவனையும் அந்த இடத்திற்கு வருமாறு சொல்லி விட்டு காரில் கிளம்ப.



நித்யாவும், மிகரனின் அம்மாவும் புரியாமல் பார்க்க, யாழினியோ "மாமா வெளிய கிளம்பிடீங்களா, என்னையும் கூட்டிட்டு போங்க"



தன் கழுத்தக் கட்டிக் கொண்டு குட்டி தேவதை கேட்க



"செல்லக்குட்டி மாமா முக்கியமான வேலையா வெளிய போறேன், சீக்கிரம் வந்துடுவேன், உனக்கும் உங்க அம்மாவுக்கும் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு"



"நிஜமாவா மாமா, பெரிய சர்ப்ரைஸா"



"ஆமாடா செல்லம்"



யாழினியின் கன்னத்தில் முத்தம் வைத்தவன், ஓரக் கண்ணில் தன் மனையாளப் பார்க்க, அவளும் அதே நேரம் பார்த்து கன்னத்தை வருடிக் கொண்டாள். கண்களாலே அவளுக்கு தகவல் தெரிவித்தவன்.



"நித்யா முக்கியமான வேலையா போறேன், திரும்பி வர லேட் ஆகலாம் ஆனா உனக்கான ஒன்னு சீக்கிரம் உன்கிட்ட திரும்பி வரும் அதை நீ எந்த தடையும் சொல்லாம ஏத்துக்கணும், இனிமேல் தான் உனக்கான வாழ்க்கை ஆரம்பிக்க போது, இதுக்கு முன்னாடி இருந்ததை எல்லாம் மறந்துடு, மனுஷங்களையும் சேர்த்து தான் சொல்றேன், புதிய உறவு அதை ஏத்துக்குற பக்குவத்துக்கு மனச தயார் பண்ணிக்கோ"



அண்ணனின் வார்த்தைகளில் குழம்பி தான் போனாள், முதலில் அண்ணன் சொல்லும் போது செந்திலாக இருக்குமோ என்று ஒரு நொடி அவளுக்கு எண்ணம் போனது, ஆனால் அடுத்த நொடியே இது எப்படி நடக்கும் இத்தனை வருடங்கள் வராதவர், இப்பொழுது வந்து விடுவாரா, அவர் வர நினைத்தாலும் அவரின் அம்மா, அப்பா நிச்சயமாக அவரை வர விடுவார்களா,

ஆனால் அண்ணன் புது உறவு என்று சொல்கிறாரே, யாரை சொல்கிறார். வெளியே கிளம்பும் போது இங்கே வைத்து கேட்பது சரி இல்லை. அண்ணன் கிளம்பட்டும் கனலியிடம் பேசிக் கொள்ளலாம். மனதில் நினைத்தக் கொண்டவள்

"சரி அண்ணா" அவளின் தலையில் கை வைத்து விட்டு அம்மாவிடம் சென்றான்.

"அம்மா பார்த்துக்கோங்க, போன் பேச வாய்ப்பு கிடைச்சா பண்றேன். நீங்க பயப்படாதீங்க, அங்க டவர் கிடைக்குமா தெரியல"

"பார்த்து பத்திரமா போய்ட்டு
வா, இங்க உனக்காக ஒருத்தி உன்னையே எதிர்பார்த்துட்டு வாசலை பார்த்துட்டு சாப்பிடாம கூட இருப்பா"

தன்னை சொல்லும் மாமியாரை பார்த்தவளுக்கு வெட்கம் வர தலையை குனிந்து கொண்டாள். அதை பார்த்துக் கொண்டே காரில் ஏறி கை அசைத்து விட, வெளியே வந்து நின்று கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.



செந்திலும், மிகிரன் சொன்ன இடத்தில் வந்து தான் வந்து விட்டதை தெரியப்படுத்த, சிறிது நேரம் காத்திருந்த பின் மிகிரனும், மிகிரன் நண்பன் சிவாவும் வந்தனர். செந்திலைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தலை முடி அதிகம் வளர்ந்து, முகத்தில் தாடி, உடல் இளைத்து அடையாளம் காண முடியா நிலையில் இருக்க, இத்தனை வருடங்கள் கவனிக்காமல் இருந்து விட்டோமே, நித்யாவிடம் மனம் விட்டு பேசி இருந்தால் இவர்களின் வாழ்வு இத்தனை வருடங்கள் வீணாகி இருக்காது என்ற குற்ற உணர்ச்சி மேலேழ, அவன் அருகில் சென்று

"


ஏன் மாமா இப்படி இருக்க, எனக்கு உண்மையை சொல்லி இருக்கலாமே, நானும் உங்க மேல இருக்குற கோவத்துல யோசிக்கவும் இல்லை, உங்கள பார்க்கவும் இல்லை, மன்னிச்சுடுங்க " கைகளை பிடித்து பேச



செந்திலோ திருமணம் ஆனதிலிருந்து ஒரு வார்த்தை பேசாதவன், இன்று உரிமையாக மாமா என்று அழைத்ததும், பேசியதும், இத்தனை நாளின் வலிகளும், வருத்தங்களும் எங்கோ சென்று மறைந்தன.

" மிகிரா " என்றவன் கண்கள் கலங்கி அணைத்துக் கொண்டான் மச்சானை, ஆதரவாக முதுகை தட்டிக் கொடுத்து



" வேணாம் மாமா வருத்தப்பட்டதுலாம் போதும், இனி நீங்க நித்யா கூட சந்தோஷமா இருக்கனும்"



" நீங்க சொல்றது சரி தான் மச்சான். எப்போ கல்யாணம் ஆச்சு, தங்கச்சி போன் பண்ணலைனா, இன்னும் பயந்துக்கிட்டு இருந்திருப்பேன் "



" நித்யாவோட பிரண்ட் தான். அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, அது மட்டும் இல்லை எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும். ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ தான் பார்த்தேன். கோயிலுக்கு போன இடத்துல சாமிக்கு அருள் வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லவும், பண்ணிக்கிட்டோம்"



" ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா, நல்லா இருப்பீங்க மச்சான் " கல்யாணத்திற்கு அழைக்காதது இருவருக்குமே அந்த நேரத்தில் வருத்தம் தர, இருவருமே அதை புறம் தள்ளி பிரச்சனகளை எப்படி தீர்ப்பது என்ற ஆலோசனை செய்தில் கவனத்தை திசை திருப்பினர்.



" தேங்க்ஸ் மாமா, முதல்ல நீங்க சாப்பிடுங்க பேசலாம்,உங்க உதவி தேவைபடுது, அங்க எதோ தப்பா நடக்குது உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க, மீதியை நாங்க பார்த்துக்குறோம் "



மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அருகே இருந்த சிவாவின் வீட்டுக்கு சென்றார்கள்.



"என் அப்பா, அம்மா நல்லவங்க இல்லை மச்சான், என் அப்பாவுக்கு தெரிஞ்சவர் மூலமா காளான்ல இருந்து போதை மருந்து, கூல் லிப் இன்னும் நிறைய போதை மருந்து தயாரிக்குறாங்க, அதுக்கு தான் மாமா இடத்தை மிரட்டி வாங்கி குடோனா பயன்படுத்துறாங்க, இது எனக்கு தெரிஞ்சதும் தான் நித்யா கிட்ட இருந்து என்னை பிரிச்சி, மிரட்டி போதை மருந்தை எனக்கு கொடுத்து சங்கிலியால கட்டி போட்டு வச்சிருந்தாங்க, நித்யாவ எதுவும் பண்ணிடக் கூடாதுனு தான் அமைதியா இருந்தேன். அவன் பொண்ணையும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணாங்க, அவங்க பேசின வீடியோ ஆதாரம் இருக்கு அதை வச்சி மிரட்டி தப்பிச்சி வரும் போது தான் அக்சிடன்ட் ஆக, நான் செத்துட்டன்னு நினைச்சிட்டாங்க, என் பிரண்ட் வாசு தான் காப்பாத்தி பார்த்துக்கிட்டான்"



செந்தில் சொல்வதைக் கேட்டவன் கோவத்தின் உச்சியில் இருந்தான். அவர்களைக் கொல்லும் வெறி வந்தது. " மாமா இடம் மட்டும் சொல்லுங்க, அந்த வீடியோ அனுப்புங்க, நானும், சிவாவும் பார்த்துக்குறோம், நீங்க நம்ம வீட்டுக்கு போய்டுங்க, எதனா பிரச்சனைனா நாங்க வரவரைக்கும் நீங்க தான் அங்க சமாளிக்கணும்"



"உங்கள விட்டுட்டு எப்படி நான் போறது, நானும் வரேன் மச்சான் " அவனுக்கும் கோவம் இருக்கிறதே.



" நீங்க அனுபவிச்ச கஷ்டம் போதும், நித்யா, யாழினி கூட இருங்க, உதவி தேவைப்பட்டா நானே கூப்பிடுறேன் அப்போ வாங்க போதும், இந்த கார் எடுத்துக்கோங்க, நான், சிவா வண்டியை எடுத்துட்டு கிளம்புறேன் "



மிகிரனை கட்டி அணைத்தவன் " பத்திரம் மச்சான் அப்புறம் " என்றவன் அவன் காதில் ரகசிய வழி ஒன்றை சொல்ல, " இது போதும் மாமா நான் பார்த்துக்குறேன், நீங்க கிளம்புங்க "



செந்தில் தன் மனைவி, மகளை பார்க்க போகும் ஆசையில் செல்ல, மிகிரனோ இத்தனை வருட பிரச்சனைகளை , தன் கோவத்தினை தீர்த்துக் கொள்ளும் வழி நோக்கி சென்று கொண்டிருந்தான்.



கனலிக்கு மிகிரன் செந்தில் வருவதைப் பற்றி சொல்லி இருந்ததால் அவள் யாரிடமும் சொல்லாமல், நித்யாவை மட்டும் ஏதோ காரணம் சொல்லி புது புடவை, பூ என அலங்காரம் செய்ய வைத்து செந்திலின் வரவுக்காக காத்திருந்தாள்.



இரவு 9 மணியை நெருங்க நித்யாவின் வீட்டிற்கு வந்தவன் தயங்கி வாசலில் நின்று கொண்டு, கனலிக்கு குறுஞ்செய்தி அனுப்ப, அவளோ உள்ளே வருமாறு பதில் அனுப்பினாள். செந்தில் உள்ளே வர முதலில் பார்த்தது என்னவோ யாழினி தான். "அப்பா" என்று அழைத்து அவனிடம் ஓட



பிறந்தது முதல் பார்க்காமல் இருந்தவனுக்கு தன் மனைவி தன்னை மறக்கவில்லை என்பதில் அவளின் மேல் அன்பும், மரியாதையும் இன்னும் அதிகரித்தது. மிகிரன் வாங்கிக் கொண்டு போக சொன்ன பொருட்களை குழந்தையிடம் கொடுத்தவன், தூக்கி கொஞ்சி முத்தமிட்டான், " ஏன் பா இவ்ளோ நாள் வரல, வெளிநாட்டுக்கு போனியாமே, அம்மா சொன்னாங்க, போட்டோ தான் காட்டுனாங்க "யாழினியும் தன் அப்பாவை கொஞ்சி முத்தமிட இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தாள் நித்யா.



" அப்பாவை மன்னிச்சுடுமா, வேலை அதிகமா இருந்ததா, அதான், வேலை முடிச்சிட்டு உங்களைப் பார்க்க தான் ஓடி வந்துட்டேன், இனி உங்க கூட தான் இருப்பேன், எங்கயும் போகமாட்டேன் "



" நிஜமாவா பா "



குழந்தையிடம் பொய் சொல்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் கண் கலங்கியவன் " நிஜமா செல்லம் " என்றான் உடைந்த குரலில்



நித்யாவின் அம்மா " வாங்க மாப்பிள்ளை, எப்படி இருக்கீங்க, உட்காருங்க, நித்யா சாப்பிட எடுத்துட்டு வந்து கொடு" மகளை தோளில் தட்டி இயல்பாக்க, அவளோ ஆசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள், கனலி காபி எடுத்து வந்து



" அண்ணா வாங்க" என்று அமர சொல்லியவள் முதலில் தண்ணீர் குடித்து, பிறகு காபி கொடுத்தாள். கனலி தன் மாமியாரிடம் சொல்லி இருந்ததாள் வருத்தம் இருப்பினும் அவர்களால் கொஞ்சம் இயல்பு நிலையில் இருக்க முடிந்தது.



ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்துக் கொண்டே காபியை பருகியவன், " நித்யா " பயந்து கொண்டே தான் கூப்பிட்டான். அவன் குரலில் விழித்தவளுக்கு அழுகை வர வேகமாக அறைக்குள் ஓடி விட்டாள். செந்திலும் மனைவியை சமாதானப் படுத்த எழுந்தவன் " செல்லம் இந்த பொம்மையை வச்சு விளையாடிட்டு இருங்க, அப்பா சீக்கிரமா வந்துடறேன் " சொல்லியவன் கனலியிடம் அனுமதி கேட்க

" யாழு வா நாம விளையாடலாம் " அவளை விளையாட்டு பொருட்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டி சென்றாள்.

அறைக்கு சென்ற நித்யாவை பார்த்துக் கொண்டே நின்றிருந்தவன், வெறித்து பார்க்க, "அவள் உன் மனைவி, இத்தனை வருட பிரிவு, அழுவாள், திட்டுவால், ஏன் அடிக்க கூட செய்வாள் வாங்கிக்கொள் இது உனக்கான இரண்டாவது வாய்ப்பு கெட்டியாக பிடித்துக் கொள் என்று மனம் எச்சரிக்கை செய்ய, வேகமாக ஓடினான் நித்யா இருக்கும் அறைக்கு...

ரெண்டு பேரும் சமாதானம் ஆவார்களா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top