" வானத்தை வெறித்துக் கொண்டிருந்தேன் சிறிது நேரம் அனல் வீசிய என் கண்களில் என்ன உணர்ந்ததோ காற்று, அனலை மேகத்திடம் அனுப்பி குளிர் தென்றலை அனுப்பி விட அதன் தழுவலில் கண்கள் மூடி நின்றேன் "
பாகம் - 16
யாழினியின் பள்ளியில் நுழைந்தவன் அங்கே குழந்தகளின் அலறல் சத்தமும், பெற்றோர்களின் அழுகை சத்தமும் ஆங்காங்கே வண்டிகள் வேகமாக செல்வதுமாய் இருக்க
பதட்டத்துடன் அங்கே இருந்தவர்களிடம் விசாரிக்க அவர்கள் சொன்ன பதிலில் பதறி யாழினி வகுப்பிற்கு சென்றான்.
அது இரு பாலர் படிக்கும் பள்ளி, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தான் கூல் லிப் எனப்படும் போதை மருந்தை பயன்படுத்த, மாணவிகளுக்கு தெரியாமல் கொடுத்துள்ளனர், மிட்டாய் என்று சாப்பிட, சாப்பிட்ட பின்னே அதன் வீரியத்தில் மயக்கமும் வந்துள்ளது.
வகுப்பில்
யாழினியை பார்த்தவன் அவள் எழுதிக் கொண்டிருந்ததை பார்த்த பின்பே அவன் மனம் நிம்மதி அடைந்தது. வகுப்பாசிரியையிடம் விசாரிக்க
" பெரிய பசங்க அதாவது பதினொன்றாம் பன்னிரண்டு, வகுப்பு மாணவர்கள் செய்த செயலால் தான் இப்படி ஒரு பிரச்சனை, யாழினிக்கு எந்த பிரச்சனயும் இல்லை, நீங்க தாராளமாக குழந்தயை அழைத்து செல்லலாம் " ஆசிரியை சொல்ல யாழினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தவன், பள்ளியின் எதிரில் நின்றிருந்தவன் முகம் நினைவில் வர, கைபேசியை எடுத்தவன்
" அங்கு பார்த்தவனின் அடையாளத்தை சொல்ல " மறு முனையில் என்ன சொல்ல பட்டதோ
" ம்ம் அவன் தானு தோணுது "
"........"
"நானே வரேன், நாளைக்கு "
கனலியால் மென்மைக்கு மாறியவன் முகம், இப்போது இறுக்கத்திற்கு மாறியது.
கனலி, நித்யாவிடம், செந்திலின் எண்ணையும், ஊரில் உள்ள செந்தில் நண்பனின் எண்ணையும் வாங்கியவள். முதலில் செந்தில் எண்ணுக்கு அழைக்க, அணைத்து வைக்கப்பட்டதாக சொல்ல, நண்பனின் எண்ணுக்கு அழைத்தாள், ஆனால் பேசியது பெண்ணின் குரல்,
" நான் கனலி, செந்திலோட மனைவி நித்யா இருக்காங்களே அவளோட அண்ணி பேசுறேன் " தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.
" ஓ அப்டியா, நான் செந்தில் அண்ணனோட பிரண்ட் வாசு
வைஃப் சுசீலா, நித்யா எப்படி இருக்கா, எவ்ளோ வருஷம் ஆச்சு பார்த்து "
" ம்ம் இருக்கா, இனிமேலும் அவ நல்லா இருக்கணும்னு நினச்சா, நீங்க உதவி பண்ணுவீங்களா?? "
" என்ன இப்படி சொல்லிடீங்க, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ நாங்களும் எவ்ளோ பேசணும், செந்தில் அண்ணா வீட்ல தான் விடல, எங்களையும் திட்னாங்க, அதுக்கு அப்புறம் தான் அமைதியாகிட்டோம், நித்யா வீட்டு இடத்துல குடோன் கட்டி எதோ காளான் முட்டை மூட்டையா கொண்டு வராங்க, யார் யாரோ வராங்க எதோ தப்பு பண்றாங்கனு தெரியுது, அதான் பயமா இருக்கு, இப்போ என்ன பண்ணனும் சொல்லுங்க "
" ஓ என்னவா இருக்கும் போலீஸ் ல சொல்லலாமா , செந்தில் அண்ணா இப்போ எங்க இருக்காரு, போன் நம்பர் வேணும், மத்தத நான் பார்த்துக்குவேன் "
கொஞ்சம் தயங்கியவள் " போலீஸ் அவங்களுக்கு உதவி பண்றாங்க, அவரோட வீட்ட நினச்சா தான் பயமா இருக்கு, அண்ணன் தனியா நெல்லூர்ல இருக்காரு "
" நம்பர் மட்டும் கொடுங்க போதும், உங்களை நான் சொல்லவே மாட்டேன், நித்யாவும், அண்ணனும் சேர்ந்து வாழனும் ப்ளீஸ் "
" அச்சோ ப்ளீஸ்லாம் சொல்லாதீங்க, நம்பர் அனுப்பிட்டேன். அவங்க சேர்ந்து வாழ்ந்தாலே போதும் "
" தேங்க்ஸ் சுசி, தேங்க்யு சோ மச், இந்த உதவிய மறக்க மாட்டேன், வாசு அண்ணா இல்லையா "
" நைட் ஷிப்ட் போய்ட்டு வந்து தூங்குறாரு, எழுந்ததும் சொல்றேன், ரொம்ப சந்தோஷ படுவாரு "
" ம்ம் வைக்குறேன் மா " கைபேசியை அணைத்தவள் மிகிரனிடம் சொல்ல வேண்டும் நினைத்தவள், முதலில் செந்தில் எண்ணுக்கு அழைத்தாள்.
அழைப்பு முடியும் தருவாயில் ஏற்றவன் " ஹலோ " என்றான் சோர்ந்த குரலில்,
" நீங்க செந்தில் தானே, நான் கனலி, நித்யா அண்ணன் மிகிரனோட மனைவி "
ஆமா செந்தில் தான். மிகிரனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா " அதிர்ச்சி தெரிந்தது வார்த்தைகளில்
"நேத்து தான் ஆச்சு, அவசரமா நடந்த கல்யாணம் "
" ம்ம், சொல்லுமா எனக்கு கால் பண்ணிருக்க" கொஞ்சம் பதட்டமாய் வந்தது வார்த்தைகள் இம்முறை
" நான் நேரிடையாக கேட்கிறேன் அண்ணா, நித்யா கூட வாழ உங்களுக்கு சம்மதமா "
"நிஜமாவா எனக்கு அந்த கொடுப்பணை இருக்கா "
" ஏன் அண்ணா இப்படி பேசுறீங்க, நீங்க நினச்சா முடியும், இப்போ சொல்லுங்க, நான் நித்யாவ கூட்டிட்டு வரேன், எங்க இருக்கேனு சொல்லுங்க "
" நித்யாக்கு விருப்பமா மா, என்னை மன்னிப்பாளா, அப்பா, அம்மா எதனா பண்ணிட்டா, அவங்க நல்லா இருக்கணும்னு தான் சொத்தை எல்லாம் கொடுத்துட்டு ஒதுங்கி தனியா இருக்கேன் "
" ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க, மிகிரன் இருக்காரு அவர் பார்த்துக்குவாரு, நீங்க யாருக்கும் பயப்படாதீங்க, நான் அவர பேச வைக்கட்டுமா அப்போ நம்புவீங்களா "
" நீ சொல்றதெல்லாம் நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல மா, இவ்ளோ நாள் என்னோட வேண்டுதல் வீண் போகல, நானே வரேன்மா இனி நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்"
பயமா இவர் யாருக்கு பயப்படணும், நாம நினைச்சதுக்கும் இவர் பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் தெரியுதே செந்திலின் பேச்சில் குழம்பியவள்
"என்ன அண்ணா சொல்றீங்க, என்ன பயம் தெளிவா சொல்லுங்க அப்போ தான் முடிவெடுக்க முடியும். இத்தனை வருஷம் பிரிஞ்சி இருந்துடீங்க, உங்களுக்கு தேவதை போல குழந்தை இருக்கா, நித்தி பாவம் ணா உங்களயே தான் நினைச்சிட்டு இருக்கா"
"என் நித்யாவ பத்தி எனக்கு தெரியாதா, நான் தான் மா பாவி" செந்திலின் அழுகை குரல் கேட்கவே அதில் பதறி
"ப்ளீஸ் அண்ணா அழாதீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு, இனி எல்லாம் சரி ஆகிடும்"
"கண்டிப்பா மா, என் மச்சான் கிட்ட நேர்ல தான் பேசணும் இங்க நடக்குற அநியாயத்தை சொல்லணும், அவர் தான் இதை எல்லாம் தீர்த்து வைப்பாரு"
"ரொம்ப சந்தோஷம் அண்ணா, அவர் கிட்ட பேசுறேன், அவரையும் பேச சொல்றேன், சாப்டீங்களா "
" மனசு நிறைஞ்சி இருக்கு, இனி சந்தோஷமா சாப்பிடுவேன் மா, நான் கிளம்பும் போது உனக்கு சொல்றேன் மா "
மகிழ்ச்சியாக அம்மாவிடம் சென்றவள் நடத்தை கூறினாள், அவரும் மகிழ்வினை தெரிவிக்க, கணவனுக்காக காத்திருந்தாள்.
வெளியே பைக் சத்தம் கேட்க, வேகமாக ஓடினாள், வண்டியை விட்டு இறங்கியவன் தன் மனைவி தன்னைக் காண சிரிப்புடன் வருவதைப் பார்த்து, இறுக்கம் கொஞ்சம் குறைந்து இயல்புக்கு வந்தவன், மனையாளைப் பார்த்து என்ன என்பதாய் வினவ,
" உள்ள வாங்க சொல்றேன் "
குடிக்க தண்ணீர் கொடுத்தாள், வாங்கி குடித்தவன் முகம் இயல்பாய் இல்லை என்பது புரிய
" என்ன ஆச்சுங்க, உள்ள வரீங்களா " அம்மாவிடம் சொல்லி விட்டு கை பிடித்து அழைத்து சென்றாள் அவனும் மறுப்பின்றி சென்றான்.
கட்டிலில் அமர வைத்தவள் தானும் அருகில் அமர்ந்து
" என்ன ஆச்சுங்க சொல்லுங்க "
யாழினி பள்ளியில் நடந்ததை சொல்ல " அய்யோ இப்படி கூடவா நடக்கும், நம்ம பாப்பா நல்லா இருக்காளா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்களா, நம்ம வீட்டுக்கு போலாமாங்க "
"யாழினி நல்லா இருக்கா, இங்க வந்துட்டு உடனே கிளம்புனா நல்லா இருக்காது. திடீர்னு கல்யாணம் ஆனாலும் அவங்க நிலைமையும் யோசிக்கணும், உனக்கும் இங்க இருக்க ஆசை இருக்கும்ல, நீயும் எனக்கு முக்கியம் அம்மு " அவனையும் மீறி நேசம் வெளிப்பட
" நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் "
சொல்லு என்பதாய் கண் அசைக்க
சுசீலாவிடம் பேசியது செந்திலிடம் பேசியதைக் கூற, போதைப் பொருள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு காளான் பற்றி சொன்னதும், பள்ளியின் அருகே பார்த்தவனது முகம், செந்திலின் அப்பாவிடம் வேலை செய்பவன் என்று உறுதிப் படுத்தியவன் தெளிவடைந்து, செந்திலும் வருவதாக சொல்ல, தன் மனைவியின் செயலில் மகிழ்ந்தவன் சட்டென கனலியை இறுக அணைத்துக் கொண்டான். அவளும் அணைத்துக் கொண்டாள். அவளின் முகத்தை கையில் ஏந்தியவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தான்.
விழி விரித்து பார்த்துவளை இவனும் பார்த்து
"அம்மு என்ன சொல்றதுன்னு தெரியல, அவ்ளோ சந்தோஷமா இருக்கு, மனசுல குழப்பமா இருந்தது, உன்னால தெளிவாகிட்டேன், தேங்க்ஸ் அம்மு தேங்க்ஸ் "
" வரும் போது உங்க முகமே சரி இல்லை, இப்போ தான் நல்லா இருக்கு, சிரிச்சா அழகா இருக்கீங்க, பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு "
அவளின் இடையில் கையை வைத்து வருடிக் கொண்டே, அவள் நெளிவதை ரசித்தவன், தன் மீசையும், தாடியும் அழுந்தியதால் அவளின் கன்னத்தில் சிவந்து காணப்பட்ட இடத்தை பார்த்தவன் " வலிக்குதா " என்றான்
" இல்லையே " நெளிந்து கொண்டு தலை ஆட்டியதைப் பார்த்து
" ஏன் இப்படி நெளியுற அம்மு " தெரிந்தும் கேட்டான்.
"அது " சொல்ல தயங்க
" நீயும் இப்படி பிடிச்சுகிட்டா சரியாகிடும் " அவள் கைகளை தன் இடுப்பின் மீது சுற்றி வைத்துக் கொண்டான். அவளும் பிடித்துக் கொண்டவள்.
" முன்னலாம் உங்க முகம் உர்ருன்னு இருக்கும், சிரிக்கவே தெரியாதோனு யோசுச்சி இருக்கேன். இப்போ உங்க கண்ணுல வேற தெரியுது "
" என்ன தெரியுது, நீ கூட பயந்தாக்கொல்லியா இருந்த, இப்போ அப்டியா இருக்க " புருவம் உயர்த்தி கேட்டான் அழகாய்
" என் மேல நீங்க வச்சிருக்குற காதல் அதான் நான் தைரியம் கொடுக்குது, ஒரே ஒரு குறை தான் "
" என்ன அம்மு குறை "
அவன் மீசைக்கு அருகில் தொட்டவள் " இந்த தாடிய எடுங்களேன், உங்க முகமே தெரியல அது மறச்சி வச்சிருக்கு "
சிரித்தவன் அவளை இன்னும் நெருக்கி
" பிடிச்சிருக்கா " மையல் பார்வையில் கேட்க
அவன் கன்னங்களை இரு கைகள் கொண்டு வருடியவள் " ம்ம் " என்றாள்
இன்னும் நெருக்கியவன் இதழுடன் இதழ் சேர்க்க ஆசை கொண்டான். அவளுக்கு பிடித்திருக்கிறது, இன்னும் பழைய நினைவு வரவில்லையே, கட்டுப் படுத்தியவன்,
" ஊருக்கு போகணும் கனலி, பிரச்சனைகளை சரி பண்ணனும், நித்யாவ, செந்திலோட வாழ வைக்கணும், நம்ம சொத்துக்களை மீட்கணும், அது வரைக்கும் பொறுத்துக்கோ"
அவன் பேசியதில் சிரித்தவள்
"நீங்க எதையோ மறைக்குறீங்க, ஆனால் சொல்லணும்னு நினைச்சு தவிக்குறீங்க, எனக்கு புரியுதுங்க, நீங்க சொல்ற வரைக்கும் காத்திருப்பேன். நானும் ஏதோ நினைப்புல இருந்துட்டேன் பக்கத்துல இருந்தும் உங்கள உணரல, இப்போ உங்க நெருக்கம், எனக்காக சிரிக்குற இந்த சிரிப்பு" அவன் முகத்தை தன் விரல்களில் பிடித்து இழுத்து
"இந்த சிரிப்பான முகம், என் கிட்ட மட்டும் தான், இந்த பார்வை எதையோ சொல்லுது, மொத்ததுல நீங்க என்கூட இருக்கும் போது வேற மிகரனா தெரியுறீங்க"
அவள் பேச்சு பணிக்கட்டியில் உறைந்து இருக்கும் குளிரை அவன் உள்ளத்தில் பதுக்கி வைக்க, இதமாய் உணர்ந்தான். எப்படி பிரச்சனைகளை சமாளிக்க போகிறோம் என்று யோசித்துக் கொண்டே வந்தவனுக்கு கனலியின் பேச்சு தீர்வினை தந்தோடு, அவள், அவனை உணர்ந்து கொண்டதே அவனுக்கு மகிழ்வு தானே
இதற்கு மேலும் கட்டுப்படுத்திக் கொண்ட உடலும், மனமும் அவளை இன்னும் நெருக்கம் கொள்ள தூண்டி விட, அவளிடம் இனி அவனுக்கு என்ன தயக்கம், தன் உணர்வினை, மனதினை எவ்வளவு அழகாய் கவனித்து எந்த தடையும் இன்றி உரைத்து விட்டாளே என் இதய ராணி....
அவன் பார்வை ரோஜாவின் நிறத்தை தாங்கி இருக்கும் அவள் பூவிதழினை நோக்கி தன் அழுத்தமான இதழ்களை கொண்டு செல்ல, அவனின் நோக்கம் அறிந்த பாவையோ மீன் போன்ற தம் விழிகளை மூடிக் கொண்டாள் நாணம் கொண்டு....
என்ன நடக்கும் மிகிரன், கனலியை நெருங்கினானா அவள் அவனை ஏற்றுக் கொண்டாளா அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்