DEEBAS
Administrator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 256
தேடல் – 16(1)
பேட்டிமுடிந்து வந்தபோது தன் தம்பி வருண் ஹாலில் தனக்காக காத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த கவி,
வருண் என்று ஓடிச்சென்று தன் தம்பியை இருக்கையில் உட்காரவைத்து தானும் அருகில் உட்கார்ந்து,
“எப்படா வந்த? வீட்டில் அம்மா அப்பா எப்படிடா இருக்கிறாங்க?” என்று கேள்விகளைத் தொடுத்தாள்.
அவர்களின் எதிர் சோபாவில் வந்து அமர்ந்த மஹிந்தன் “ஒவ்வொரு கேள்வியாக கேளு ழையா, பாவம் வருண், இப்படியா கேள்வி கேட்டே பயப்பட வைப்ப!” என்று கூறியவன், வெல்கம் டு அவர் ஹோம் வருண்” என்றான்.
வருணைப் பார்க்கும் வரையில் மஹிந்தனுடன் பிணக்கு மறந்து சற்று ஒன்றி இருந்தவள்., வருணைப் பார்த்ததும் யார் டா நீ! என்ற ரீதியில் ஓர் பார்வையை மஹிந்தனின் மேல் வீசிவிட்டு,
“உனக்கு குடிக்க ஏதாவது கொடுத்தார்களா?” என்று தம்பியிடம் கேட்டுவிட்டு வருண் பதில் சொல்ல முயலும் போதே
“காயத்திரி அக்கா, என் தம்பிக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வாங்க” என்று குரல் கொடுத்தாள்.
அவளின் அந்த செயல் வருணுக்கு சற்று நிம்மதியும் மஹிந்தனுக்கு தன் தம்பியை அவள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளி என்ற முறையில் கவனித்ததால் முகத்தில் புன்னகையும் வந்தது
“இப்ப நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலச்சொல்லுடா” என்று கூறினாள்.
வருணுக்கும் அவன் அம்மாவுக்கும், கவி மஹிந்தனின் வீட்டில் எப்படியிருக்கிறாளோ? என்ற கவலையில் .இரவு முழுவதும் நிம்மதியான உறக்கம் இல்லாமல் தன் அம்மாவுடன் பூஜை அறையிலேயே உட்கார்ந்து இருந்தவனுக்கு இங்கு வந்ததும் கவி மஹிந்தனின் அருகில் அழகான உடையணிந்து அவனின் கை பிடித்து நின்று கொண்டு இருந்த நிலையைப் பார்த்தவுடனே கொஞ்சம் நிம்மதி பிறந்தது
மேலும், தன்னை வீட்டின் எஜமானி இடத்தில் இருந்து கவனித்ததும், தன் அக்கா வாழ்ந்துவிடுவாள் என்ற பூரண நம்பிக்கை பிறந்தது .
எனவே சிரிப்புடன்,”நான் இங்கு வந்து அரைமணி நேரம் ஆகிடுச்சு நீ பேட்டி கொடுக்கும் போது டிஸ்டப் பண்ணக் கூடாதுனு தான் நான் இங்கு உட்கார்ந்து இருக்கிறேன்
வீட்டில் அம்மா, அப்பா எல்லோரும் நல்லா இருக்கிறாங்க.. அம்மாவிற்கு உன்னை பார்க்க இங்கு வர ஆசைதான்.
ஆனால்! நேற்று அங்கு வந்த சாரின் தங்கை நம் வீட்டிற்கு வந்து சாரின் அம்மா அப்பாவிடம் பேசி நல்லபடியாக உங்கள் ரிஷப்சனை நடத்தி விடலாம் அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருக்கும் படி சொன்னதால் வரலை” என்றான் .
“இந்தா, அம்மா உன்னிடம் கொடுக்கச் சொல்லி இந்த இரண்டு சூட்கேசுகளையும் கொடுத்தாங்க. என்று கூறியதும் என் டிரஸ் எல்லாம் கொடுத்து விட்டிருக்காங்களா?” என்றவளுக்கு கண் கலங்கியது .
அவள் கண் கலங்குவதை திசைதிருப்பும் வகையில் “டிரஸ் மட்டுமில்லை, நீ ஆசையாக சாப்பிடுவாய் என்று உளுந்தவடையுடன் தொட்டுக்கொள்ள சட்னியும் உனக்கு அம்மா தந்துருக்காங்க” என்றான்.
தன் கையில் இருந்த சின்ன பேக்கை கொடுத்தவன் இதில் உன்னுடைய நகைகள் எல்லாம் இருக்கிறது என்றவன் குரலிலும் சற்று கலக்கம் தெரிந்தது .
அப்பொழுது புயல்போல வேகத்தில் உள்ளே வந்த சுபத்ராவை பார்த்து திகைப்புடன் யார் இவர்கள் என்று யோசனையுடன் கவிழையா பார்க்க,
தன் அம்மாவை அப்பொழுது அங்கு எதிர் பார்க்காத மஹிந்த் அவரின் கண்களில் தெரிந்த கோபத்தை கண்டவன் சற்றே சஞ்சலம் அடைந்தான்.
ஆனால் மறுநிமிடம் அதை புறம் தள்ளி “மாம்...!” என்று அவரின் கோபத்தை ஆட்சேபிக்கும் வகையில் குரல் குடுத்தபடி எழுந்தான்,
மாம் என்று கூறிக்கொண்டு எழுந்தவனை மேலும் பேசவிடாமல் சுபத்ரா பொரிந்தாள்
“நான் உன்னுடைய மாம்னு இப்போ என்ன பார்த்தபிறகு தான் உனக்கு ஞாபகம் வருதா மஹிந்த்?” ,
என்றவள் கவிழையாவை பார்த்துக்கொண்டே வருணிடம் “உன் அம்மா இவளுக்கு கொடுத்துவிட்ட நகைகள் எல்லாம் இப்பொழுது அவள் போட்டிருக்கும் ஒரு நெக்லஸ் வேல்யுவுக்கு கூட பெறாது” என்றவள்,
கவிழையாவிடம் “ம்.... உன்பேரு? என்று யோசனை செய்வதுபோல் முகத்தில் பாவனை காட்டி எனக்குத்தெரியாதே” என்று அலட்சியமாக கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த மஹிந்தனின் அருகில் தோரணையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் .
அவள் புயல் போல் வந்த வேகமும் தன் தம்பியை அலட்சியமாக பார்த்த பார்வையும் பின் அமர்ந்த தோரணையும் கண்ட கவிழையாவிற்கு ஆத்திரம் வந்தது .
கவிழையா மஹிந்தனை முறைத்துக் கொண்டே கோபமாக பேசத் தொடங்கப்போகும் முன் மஹிந்தன் வாய் திறந்தான் .
“மாம் ஷி இஸ் மை வொய்ப். டோன்ட் பர்கட் இட், என்மனைவிக்கு அவள் அம்மா வீட்டில் கொடுதுவிட்ட நகைகள் நான் வாங்கி கொடுத்ததைவிட கண்டிப்பாக உயர்ந்ததுதான். அது அவர்கள் பாசத்துடன் கொடுத்துவிட்டது .
மல்ட்டிமில்லினியர்சின் வீடுகளைப்போல் பகட்டுக்கு வாங்கிக் கொடுக்கும் நகை போல் கிடையாது” என்று கூறியவன்,
“சாரி ழையா.. மாம் இப்படி ஹார்ஷாக பேசுபவர்கள் கிடையாது. அதுவும் என்விசயத்தில் இதுவரை இப்படி நடந்து கொண்டது கிடையாது
உங்களுக்கு என்ன ஆச்சு…!?” என்று தன் அம்மாவைப் பார்த்து தன் கேள்வியாய் முடித்தான் .
அவன் பேசப்பேச அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுபத்திராவுக்கு முகத்தில் இறுக்கம் கூடியது .
“ உனக்கு என்ன ஆச்சு மஹிந்த? அதுக்கான பதிலை முதலில் சொல்லு நான் இதுவரை உன் விசயத்தில் தலையிட்டதில்லை காரணம், நீ இதற்கு முன்” என்று.... கவிழையாவை கைகாண்பித்து,
“இதுபோல நம் ஸ்டேடஸ்க்கு பங்கம் வருவது போல செய்ததில்லை சோ! உன் மீது கோபம் கொண்டு கேள்வி கேக்கும் அவசியம் எனக்கு வந்ததில்லை..
பட், இப்போ நீ செய்த இந்த காரியத்துக்கு என்னால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்?” என்றார்.
அதுவரை கவிழையாவை தன் அம்மாவிற்கு தெரியாமல் கல்யாணம் செய்ததற்கு தான் கோபமாகப் பேசுவதாக நினைத்தவன், இப்பொழுது தன் கௌரவத்திற்கு பங்கம் வந்ததாக சுபத்ரா கூறியதும் கோபம் பொங்கியது .
“மாம்... என்ன சொன்னீங்க? என் ழையாவ கல்யாணம் முடித்தது உங்களுக்கு கௌரவக்குறைவா?
அந்த ஐஸ்வர்யாவின் எவனோ ஒருவனின் குழந்தைக்கு என்னைக் கல்யாணம் முடித்து அப்பன் ஆக்கப்பார்த்தாள்’ அவளை நான் கல்யாணம் செய்தால் உங்களின் கௌரவம் பிரகாசமாய் ஜொலித்திருக்குமோ?” என்றான்.
“பின், இங்கப் பாருங்க மாம்.. இதுவரை என்னுடைய படிப்பு மற்றும் என்னுடைய பிஷ்னச எல்லாமே என்னுடைய விருப்பம் போல்தான் நடந்தது..
அதேபோல் என்னுடைய வாழ்கையில் என்னுடைய மனைவியாக யார் வரணும்றதை நான் தான் முடிவு செய்வேன்.
என்னுடைய பெர்சனல் வாழ்கையில் புதிதாக நீங்கள் இண்டர்பியர் ஆவதை நான் விரும்பலை மாம்..
என் மேரேஜை ஏத்துக்கிட்டு ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்தால் நமக்குள் ரிலேஷன்சிப் நல்ல படி தொடரும். இல்லாவிட்டாலும் என்னுடைய ரிஷப்சன் நல்லபடியாக நடக்கும். ஆனால் அது நீங்கள் இல்லாமல் நடக்கும்” என்று கூறிக்கொண்டு இருக்கும் போது அங்கு உள்ளே வந்தார் விஸ்வநாதன் .
வந்தவர் “எப்படி மஹிந்த்? உன் கல்யாண ரிஷப்சன் நானும் உன் அம்மாவும் இல்லாமல் நடக்கமுடியுமா?” என்றவர்
சுபத்ராவை பார்த்து “உன்னை நான் என்னச்சொன்னேன் அவசரப்படாதே மெதுவா பொறுமையா பேசலாம் என்றுதானே சொன்னேன்”, என்றார்.
பின் கவிழையாவைப் பார்த்து “என்ன மருமகளே உன் வீட்டிற்கு வந்திருக்கிறேன் முதலில் உன்னை பார்க்கிறேன் என்னிடம் ஆசிர்வாதம் வாங்கணும் வரவேற்று உபசரிக்கணும் என்றும் தோனலையா?” என்று சூழ்நிலையை எளிதாக்க முயன்றார் .
அவர் அவ்வாறு சொன்னதும் தான், அவர் வந்தபின்னாலும், பெரியவர் என்ற மரியாதைக்கு எழுந்துநிற்க மறந்து சுபத்திரா பேசிய பேச்சில் உறைந்து அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்
அவசரமாக அவள் எழுந்து நிற்பதற்கும் மஹிந்தன் அவள் அருகில் வந்து அவள் கைபிடித்து கூட்டிக்கொண்டு ப்ளீஸ் என்று கண்களால் பேசியவன்
தன் தந்தையின் காலில் ஆசிர்வாதம் வாங்கப் போனான் அவர்களைத் தடுத்த விஸ்வநாதன் பொறுங்கள் என்றவன், சுபத்திரா என்று தன் மனைவியை அருகில் அழைத்தார்
முகச் சசிணுங்கலுடன் அவர் அருகில் வந்து சுபத்ரா நின்றவுடன் கவிழையாவுடன் கைப்பிடித்தபடி தன் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் .
பின் உட்காரவும் “இது வருண் ழையாவுடைய தம்பி டாட்” என்று வருணை அறிமுகப்படுத்தியதும், வருணைப் பார்த்து “என்னப்பா படிக்கிற?” என்று கேட்டார்.
அதற்கு, “நான் டுவல்த் படிக்கிறேன் அங்கிள் ’ என்று தான் படிக்கும் பள்ளியின் பெயரையும் சேர்த்துக் கூறினான் .
அப்படியா? என்று கூறிக்கொண்டிருக்கும் போதே காயத்திரி அனைவருக்கும் பருக பானம் தாயாரித்துக் கொண்டுவந்து கொடுத்தாள்
எடுத்துகோ வருண் என்று கூறியவர், “வீட்டில் அம்மா அப்பாவை கேட்டதாகச் சொல் இன்னும் ரெண்டு நாள்குள்ள நானும் ஆண்ட்டியும் ரிசெப்ஷன் தேதி முடிவு செய்து முறைப்படி பேச உங்க வீட்டிற்கு வருவதாகச் சொல்” என்றவர்,
“மஹி, உன் தங்கை மதுரா போன் பண்ணி அம்மா இங்க கோபமாக வந்திருப்பதாக சொன்னளா அதனால, நான் என் வேலைகளை அப்படியே பாக்டரியில் போட்டுவிட்டு வந்துவிட்டேன்,
அதனால நானும் உன் அம்மாவும் இப்போ கிளம்புகிறோம். மேல என்ன செய்யலாமென போனில் பேசிடுகிறேன்”, என்றவர் தன் மனைவியுடன் கிளம்புவதற்கு விடைபெறும் பொழுது,
“கவிழையா, ஹின்தான் உன்கிட்ட இதுவரை நடந்தது கொண்டவிதத்தை மதுரா என்னிடம் சொன்னாள். அவன் செய்ததது எனக்கும் வருத்தம் தான்.
பெண்கள் விசயத்தில் என் மகன் மிகவும் கண்ணியமானவன்ற பெருமை எனக்கு இருந்தது ஆனால் நான் அவனுக்குத் தேர்ந்தேடுத்தப் பெண் தவறானவள்.
அதனாலோ என்னவோ அவன், தனக்கு ஏற்ற மனைவியாக உன்னை இக்காட்டான நிலைமையில் நிர்பந்தப்படுத்தி தேர்ந்தெடுத்து வரும்படியான நிலைமை ஏற்பட்டுருச்சு. .அதனால் உன் மனசு கஷ்டமாயிருக்கும்.,
இருந்தாலும் இனிமேல் என் மகனால் உன் காயத்தை ஆற்றமுடியும். அவன் முழுவதுவும் கெட்டவன் இல்லை அதை நீ போகப் போகத் தெரிந்துகொள்வாய்.நீ புத்திசாலிப் பெண் என நினைக்கிறன்” என்று கூறியவர். சிறு தலையசைவுடன் தன் மனைவியுடன் வெளியேறினார் .
அவனது பெற்றோர் போனதும் மஹிந், “ஹாய் பேபி இரண்டு பேர் வீட்டிலும் கிரீன் சிக்கனல் கிடைச்சிருச்சு.”
என்று குஷியுடன் கூறிக்கொண்டு மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் வருணுடன் உட்கார்ந்திருந்த ழையாவின் அருகில் அவள் கழுத்தில் கையைப்போட்டவாறு நெருங்கி அமர்ந்தான் .
வருண் இருக்கும் போதே அவ்வாறு தன் அருகில் அவன் அமர்வதை விரும்பாத ழையா அவன் தன் கழுத்தின் மேல் போட்டிருந்த கையை எடுத்துவிட முயன்று கொண்டே அவனைப் பார்த்து முறைத்தாள்.
ஆனால் அவளின் செய்கையை கவனிக்காதது போல் அழுத்தி தன் கையை அவள் மீது போட்டபடி வருணிடம் பேச்சுக்கொடுத்தான் மஹிந்தன்.
“அப்போ உன் அம்மா சுட்ட வடையை ழையாவுக்கு மட்டும் தான் கொடுத்துவிட்டாங்களா? நீ கொண்டு வந்திருக்கும் அத்தனையும் என்னை பார்க்கவைத்து ழையா சாப்பிட்டால் அவளுக்கு வயிறு வலி வந்துவிடும்” என்றவன்,
காயத்திரி என்று குரல் கொடுத்ததும் ஓடிவந்தவளிடம் “இதில் உள்ள வடைகளில் இரண்டை மட்டும் ஒரு ப்ளேட்டில் வைத்து எடுத்துவந்து மேடத்தோட தம்பிக்கிட்ட கொடு.
மற்ற எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து என்னிடம் கொடு எனக்கு பயங்கர பசி” என்று கூறிக்கொண்டு, அர்த்தத்துடன் ழையாவைப் பார்வையிட்டவாறு சொன்னான் .
தன் அக்காவின் அருகில் வம்பிழுத்துக்கொண்டே அமர்ந்திருந்த மஹிந்தனைக் கண்டதும், வருணும் சூழ்நிலையை இயல்பாக்கும் நோக்கத்துடன்
“அது எப்படி என் அக்காவிற்கு குடுக்காமல் நீங்களே சாப்பிட்டால் உங்களுக்கு மட்டும் வயிறு வலிக்காதா? என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவன் வைத்திருந்த போன் ஒலி எழுப்பியது,
எடுத்தவன், அம்மாதான்! என்று கூறிக்கொண்டு “சொல்லுங்கம்மா அக்காநல்லா இருக்கிறாள் நீங்கள் பயப்படவேண்டாம் அவளிடம் பேசுறீங்களா என்று கூறிவிட்டு, அக்கா, இந்தா... அம்மா! பேசுறாங்க?” என்று போனை ழையாவிடம் கொடுத்தான்.
அவன் அப்படி சொல்லிக்கொண்டு இருக்கும் போது மஹிந்தனின் தொலைபேசியும் அழைத்தது.
சொல்கதிர் என்ற மஹிந்த் அவன் சொன்ன விஷயத்தை கேட்டதும் கொஞ்சம் சீரியசானது அவன் முகம், “நீ காருடன் வாசலில் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து காத்திரு. நாம் இருவரும் அங்கபோய் நிலைமையை சமாளிக்கலாம்” என்று தொடர்பைத்துண்டித்தவன்.
---தொடரும்---