Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,505
பாண்டிக் குடும்பம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன்.
மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வியல் என விரிவதே கதை.
பாண்டி குடும்பத்தை ஆதாரமாக வைத்து முதலில் புனையப்பட்டது மனச தாடி என் மணிக்குயிலே .அதனைத் தொடர்ந்து, அதன் இரட்டை கதையாக, சமகாலத்தில் நடக்கும், " தான்வி கல்யாண வைபோகமே" கதையை எழுதினேன்.
பாண்டிக் குடும்பம், மேலும் பல தொடர்கள் எழுதும் வாய்ப்பு உள்ள கதையாகவே அமைந்தது. அதனால் அதன் மூன்றாம் பாகமாக " மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே" என்ற மூன்றாவது புனைவையும் கொடுத்தேன்.
இந்த மூன்று கதைகளுமே வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. பொதுவாக இந்த கதைகளை, தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ வாசிக்கலாம் .ராகம் தேடும் வானம்பாடிகளையும் அந்த வரிசையில் வருவது தான்.
கருத்தப்பாண்டியன் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். விவசாயம், தரகு தொழில்கள், சாதீய,அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பம்.
1.இவரது மூத்த மகன் சிவபாண்டியன், அப்பாவின் வழியில் தொழில், அரசியல் இரண்டையும் பார்த்தவர். சட்டமன்ற உறுப்பினர் , மந்திரியாக இருந்தவர், இப்போது அவர் கட்சி ஆட்சியில் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினராகமட்டும் இருக்கிறார். எதிர் வரும் தேர்தலில், தங்கள் செல்வாக்கை மேலும் உயர்த்தி, பகுதி மக்களின் சாதிய செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதே அவருடைய எண்ணமாக இருந்தது. இவரது மனைவி சந்திரா, கணவரின் காரியம் யாவினும் கை கொடுத்து, பொறுப்பு மிக்க பெரிய குடும்பத்து மருமகளாய், பேச்சி அம்மாளுக்குப் பிறகு, பாண்டி குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் எதார்தவாதி.
செல்லப்பாண்டி- மலர் - சிவபாண்டியன் மூத்த மகன், ஹரிஸ், ஹரிணி என இரு மக்கள், மேல்நிலை படிப்பில் இருக்கின்றனர். அப்பா, அம்மாவை அடி ஒற்றி பயணிப்பவர்கள். செல்லப்பாண்டி மூன்றாவது முறையாக ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறான்.
ஜெயபாண்டி- பூமா, இவர்களுக்கு இரண்டு மகன்கள். தரகு, விவசாயம் இரண்டும் பார்ப்பவன். பூபேஷ், சர்வேஷ் என பள்ளி செல்லும் சிறுவர்கள்.
அடுத்தது செல்லம்மாள், அல்லி குண்டத்தில் காத்தமுத்து என்பவருக்கு வசதியான வீட்டில் மணமுடித்துக் கொடுக்க, காத்தமுத்துவின் தவறான பழக்க வழக்கங்களால் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு ஒருவனிடம் கத்திக் குத்துப் பட்டு இறந்து போனார். கைம்பெண்ணாக இருந்த செலலம்மாள், தனது அம்மாவின் சுள்ளென்ற வார்த்தையில், பிறந்த வீட்டில் அண்டாமல், சிறிய அளவில் ஹோட்டல் நடத்தித் தன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டார்.
செல்லமுத்து, செல்வ மணி என ஓர் மகளும், மகனும் உண்டு. செல்லமுத்து கலப்புமணம் புரிந்து வெளியூர் சென்றுவிட்டாள். மகள் ஓடியதில் செல்லம்மாள் ஒடிந்து போனார். கலப்பு மணத்தை எதிர்த்தவர்களும் , முன்பகை கொண்டவர்களுமாக இரண்டு வருடம் கழித்துத் தாயைக் காண வந்த, செல்லமுத்துவையும், அவள் கணவனையும் கள்ளிக்காட்டிற்குக் கடத்தி வெட்டி சாய்க்க, அவளின் ஒரு வயது மகளை, தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என வளர்க்க ஆரம்பித்தார்.பிறந்த வீட்டிலிருந்தே எதிர்ப்பு வந்த போதும் அசைந்து கொடுத்தாரில்லை.
இவரின் மகன் தான் செல்வ மணி, இவனுக்குப் பத்து வயதாக இருக்கும் போது, அவன் தந்தை கொலைசெய்யப் பட, அது முதல் தனது தாய்க்கு உதவியாக இருந்தவன், தத்தி முத்தி பத்தாவதைத் தாண்டினான். அதன் பிறகு ஐடிஐ படித்தவன், படிப்பை முடித்தானோ இல்லையோ தொழிலைக் கற்றுக் கொண்டான். தனது அக்காளுக்கு நேர்ந்த கொடுமையையும் பார்த்தவன் திருமணத்தை வெறுத்தான்.
ஆனால் சிறுவயதிலிருந்து அவன் மனதில் தேவதைப் பெண்ணாக இருந்த மாமன் மகள் பூங்குயிலை , இக்கட்டான சூழலில் கரம் பிடித்து மணிக்குயிலாக ஆக்கிக் கொண்டான், இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பருவமடையக் காத்திருக்கும் மதியழகி என்ற மகளும், மதி வேந்தன், மகிழ்ந்தன எனப் பள்ளி செல்லும் மகன்களும் இருக்கின்றனர். தன் அக்காள் மகள் மீனாவையும், தன மகளாகவே வளர்த்து, மருத்துவ படிப்பையும் படிக்க வைத்திருக்கிறான்.
கருத்த பாண்டியின் மூன்றாவது மகன், ராஜபாண்டியன், குவாரி காண்ட்ரேக்ட், ரியல் எஸ்டேட் எனக் கொடி கட்டிப் பறக்கும் வியாபார காந்தம். இவர் மனைவி கௌசல்யா கணித பேராசிரியையாக இருந்து ஒய்வு பெற்றவர். இரண்டு மகன்கள், மருது பாண்டி, தங்கப்பாண்டி, அனுராதா என்ற ஓர் மகளும் உண்டு. மதுரைக்கு அருகிலேயே துவரிமான் பகுதியில் பெரிய வீடு கட்டி வசிக்கிறார்.
இதில் மருது பாண்டி அப்பாவோடு தொழில் பார்க்க, அவன் மனைவி சுமித்திரா, ஆசிரியையாக இருந்தவள், தற்போது முழு நேர மனையாள் ஆகிவிட்டாள் ,மகன் ஹிதேஷ் பாண்டி மேல்நிலை கல்வி பயில்கிறான்.
இரண்டாவது மகன் தங்கப்பாண்டியன் ஐ.பி.எஸ் , காதலாகிக் காத்திருந்து உடன் படித்த அய்யங்கார் வீட்டுப் பெண்ணான, தான்வி ஐ ஏ எஸ் , போராடி கலப்பு மணம் முடித்தான். கௌசிக் பாண்டியன், ராக சுதா என இரு மக்கள், பள்ளி செல்லும் வயதில் உள்ளனர்.
அனுராதா திருமணமாகி கணவன் மாதவனுடன் மதுரையில், கார், மோட்டார் விற்பனை தொழில் செய்து, அப்பா வீட்டுக்கு அருகிலேயே வீடு கட்டி வசிக்கிறாள், அவளுக்கும் பள்ளி செல்லும் அரசி என்ற மகளும், கிருஷ் என்ற மகனும் உண்டு.
நான்காவது வீரபாண்டியன்- அசோதை. இந்தக் குடும்பத்தின் விவசாய நிலங்கள் அத்தனையும் இவர் கட்டுப் பாட்டில் தான் உள்ளது. நல்ல உழைப்பாளி. மூத்தவர் சொல்லைத் தட்டாத வெள்ளந்தி மனிதன். இவர்களுக்கு இரண்டு மகள்கள், பூங்கோதை, பூங்குயில், ஒரு மகன் முத்துப் பாண்டி,
பூங்கோதை, கருமாத்தூரில் ஹார்டுவேர்ஸ் கடை விருமனுக்கு கொடுத்திருக்கிறார்கள், ஒரு மகன், ஆதி சிவா, சிவில் என்ஜினியரிங் முடித்திருக்கிறான்.
அடுத்து பூங்குயில், அத்தை மகன் செல்வமணியை மணமுடித்து , மூன்று பிள்ளைகள் பெற்று, உசிலம்பட்டியிலிருந்து, மானூத்து வரும் வழியிலேயே பெரிய வீடு கட்டி வசிக்கின்றனர். தொடர் பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார்கள்.
முத்துப் பாண்டி, மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தவன், தனியாக கம்பெனி ஆரம்பித்து தொழில் செய்கிறான். தோழிகள் இரு பிரியாக்களில் ஒருத்தியைக் காதலித்து, அவள் பிரிவில் தேவதாஸாகத் திரிந்து, மற்றொரு பிரியாவான சிவப்ரியாவை மணமுடித்து, பிள்ளை குட்டிகளோடு நிறைவாய் வாழ்கிறான்.
ஐந்தாவது சோலையம்மா, செல்லம்பட்டியில் மாயத்தேவன், எனும் செல்வாக்கு மிக்கவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர் . இவர்கள் மூத்த மகன் வாசுதேவன், பொறியியல் முடித்தவன் காவல்துறை தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிகிறான். சரயு என்ற மனைவியும், சரண் தேவா, சத்யதேவா என்ற பள்ளி செல்லும் மகன்களும் உண்டு .
மகள் அனுசுயாவை ,வேறு ஒரு பெரிய வீட்டில், ஜெயபிரபு என்பவருக்கு மனம் முடித்து கொடுத்தனர், வெகு நாள் கழித்துப் பிறந்த , பள்ளி செல்லும் ஒரு மகள் இருக்கிறாள்.
ஆறாவது மகன் துரைப் பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர், மனைவி செல்வி . மகள் ஐஸ்வர்யா, மாமன் மகனான , ஹரீஷ் விருமாண்டியை மணமுடித்து, வெளி நாட்டில் இருக்கிறாள். மகன் தினேஷ் பாண்டி, கணினி மென்பொறியாளனாக, வெளிநாட்டில் பணிபுரிகிறான்.
துரை பாண்டி செல்வி இருவரும், தன பிள்ளைகளுக்காக அவர்களோடே வெளிநாடு சென்றவர்கள், ஒரு கட்டத்தில் சொந்த ஊர் திரும்பி விட்டனர். மகனை ஊருக்கு வரவழைத்து, இங்குள்ள பெண்ணை மணம் செய்விக்க, பிரதானப்பட்டுக் கொண்டு இருக்க, அவன் திருமணத்தில் நாட்டமில்லாதவனாக உலக நாடுகளைச் சுற்றி வருகிறான்.
தினேஷ் பாண்டிக்குப் பெண் கொடுக்க, சாதி சாணத்தில் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இருபத்தி சொச்சம் வருடங்களுக்கு முன் , செல்லம்மாள் மகள் செல்வமுத்துவின் வேற்று சாதி மணம் , அவள் உயிரையே காவு வாங்கியிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பான தங்கப் பாண்டியன் கலப்பு மணம் , பாண்டிக் குடும்பத்தின் சாதீய செல்வாக்கை அவ்வப்போது உரசிப் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும் மருமகள் ஐ ஏ எஸ் அதிகாரி, செல்வாக்கானவர் என்பதால், சற்றே அடக்கி வாசித்தனர். அடுத்து , பாண்டி குடும்ப வாரிசுகளான முத்துப் பாண்டி, மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு திருமணங்கள் தெய்வாதீனமாகச் சொந்தத்தில் நடந்ததில், பழைய பகைமை மாறி, உறவு மலர்ந்திருந்தது.
தற்போது திருமணத்தை வெறுக்கும், தினேஷ் பாண்டி ,வெளிநாட்டிலிருந்து பெண்ணை அழைத்து வருவானா, தாய் மண்ணில் பெரியவர்கள் சொல்லும் பெண்ணை மணம் முடிப்பானா , யாரிடம் சிக்கப் போகிறான்.
சென்ற தலைமுறையில் பாதைமாறிய, செல்வமுத்துவின் மகள் மீனா, தாய்மாமன் செல்வ மணியிடம் வளர, அவளை மணமுடிக்க உறவுகள் முன் வருமா…. ராகம் தேடும் வானம்பாடிகளாய் … விண்ணில் பறப்பவை , கூடு சேருமா… பார்ப்போம் .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை புவியியல் ஆதாரமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள, பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூர்களைக் கதை மாந்தர்களின் வசிப்பிடமாக வைத்து, உறவுமுறை, சொந்தங்களைப் புனைந்துள்ளேன்.
மானூத்துப்பட்டி என்ற கிராமத்தை, பூர்வீகமாகக் கொண்டு, அந்த பகுதியில் செல்வாக்கோடு வாழ்பவர்கள் பாண்டிக் குடும்பத்தினர். அவர்கள் பங்காளிகள், சம்பந்த புறம் உறவுகள், பழக்கவழக்கம் ,வாழ்வியல் என விரிவதே கதை.
பாண்டி குடும்பத்தை ஆதாரமாக வைத்து முதலில் புனையப்பட்டது மனச தாடி என் மணிக்குயிலே .அதனைத் தொடர்ந்து, அதன் இரட்டை கதையாக, சமகாலத்தில் நடக்கும், " தான்வி கல்யாண வைபோகமே" கதையை எழுதினேன்.
பாண்டிக் குடும்பம், மேலும் பல தொடர்கள் எழுதும் வாய்ப்பு உள்ள கதையாகவே அமைந்தது. அதனால் அதன் மூன்றாம் பாகமாக " மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே" என்ற மூன்றாவது புனைவையும் கொடுத்தேன்.
இந்த மூன்று கதைகளுமே வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. பொதுவாக இந்த கதைகளை, தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ வாசிக்கலாம் .ராகம் தேடும் வானம்பாடிகளையும் அந்த வரிசையில் வருவது தான்.
பாண்டிக் குடும்பம் கதாபாத்திரங்கள்.
கருத்தபாண்டி- பேச்சியம்மாள் , இந்த பாண்டிக் குடும்பம் என்ற ஆலமரத்தின் ஆணி வேர்கள். அவர்களுக்கு, நான்கு ஆண் இரண்டு பெண்மக்கள் என ஆறு பிள்ளைகள்.கருத்தப்பாண்டியன் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். விவசாயம், தரகு தொழில்கள், சாதீய,அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பம்.
1.இவரது மூத்த மகன் சிவபாண்டியன், அப்பாவின் வழியில் தொழில், அரசியல் இரண்டையும் பார்த்தவர். சட்டமன்ற உறுப்பினர் , மந்திரியாக இருந்தவர், இப்போது அவர் கட்சி ஆட்சியில் இல்லாததால் சட்டமன்ற உறுப்பினராகமட்டும் இருக்கிறார். எதிர் வரும் தேர்தலில், தங்கள் செல்வாக்கை மேலும் உயர்த்தி, பகுதி மக்களின் சாதிய செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்வதே அவருடைய எண்ணமாக இருந்தது. இவரது மனைவி சந்திரா, கணவரின் காரியம் யாவினும் கை கொடுத்து, பொறுப்பு மிக்க பெரிய குடும்பத்து மருமகளாய், பேச்சி அம்மாளுக்குப் பிறகு, பாண்டி குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் எதார்தவாதி.
செல்லப்பாண்டி- மலர் - சிவபாண்டியன் மூத்த மகன், ஹரிஸ், ஹரிணி என இரு மக்கள், மேல்நிலை படிப்பில் இருக்கின்றனர். அப்பா, அம்மாவை அடி ஒற்றி பயணிப்பவர்கள். செல்லப்பாண்டி மூன்றாவது முறையாக ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறான்.
ஜெயபாண்டி- பூமா, இவர்களுக்கு இரண்டு மகன்கள். தரகு, விவசாயம் இரண்டும் பார்ப்பவன். பூபேஷ், சர்வேஷ் என பள்ளி செல்லும் சிறுவர்கள்.
அடுத்தது செல்லம்மாள், அல்லி குண்டத்தில் காத்தமுத்து என்பவருக்கு வசதியான வீட்டில் மணமுடித்துக் கொடுக்க, காத்தமுத்துவின் தவறான பழக்க வழக்கங்களால் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு ஒருவனிடம் கத்திக் குத்துப் பட்டு இறந்து போனார். கைம்பெண்ணாக இருந்த செலலம்மாள், தனது அம்மாவின் சுள்ளென்ற வார்த்தையில், பிறந்த வீட்டில் அண்டாமல், சிறிய அளவில் ஹோட்டல் நடத்தித் தன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டார்.
செல்லமுத்து, செல்வ மணி என ஓர் மகளும், மகனும் உண்டு. செல்லமுத்து கலப்புமணம் புரிந்து வெளியூர் சென்றுவிட்டாள். மகள் ஓடியதில் செல்லம்மாள் ஒடிந்து போனார். கலப்பு மணத்தை எதிர்த்தவர்களும் , முன்பகை கொண்டவர்களுமாக இரண்டு வருடம் கழித்துத் தாயைக் காண வந்த, செல்லமுத்துவையும், அவள் கணவனையும் கள்ளிக்காட்டிற்குக் கடத்தி வெட்டி சாய்க்க, அவளின் ஒரு வயது மகளை, தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என வளர்க்க ஆரம்பித்தார்.பிறந்த வீட்டிலிருந்தே எதிர்ப்பு வந்த போதும் அசைந்து கொடுத்தாரில்லை.
இவரின் மகன் தான் செல்வ மணி, இவனுக்குப் பத்து வயதாக இருக்கும் போது, அவன் தந்தை கொலைசெய்யப் பட, அது முதல் தனது தாய்க்கு உதவியாக இருந்தவன், தத்தி முத்தி பத்தாவதைத் தாண்டினான். அதன் பிறகு ஐடிஐ படித்தவன், படிப்பை முடித்தானோ இல்லையோ தொழிலைக் கற்றுக் கொண்டான். தனது அக்காளுக்கு நேர்ந்த கொடுமையையும் பார்த்தவன் திருமணத்தை வெறுத்தான்.
ஆனால் சிறுவயதிலிருந்து அவன் மனதில் தேவதைப் பெண்ணாக இருந்த மாமன் மகள் பூங்குயிலை , இக்கட்டான சூழலில் கரம் பிடித்து மணிக்குயிலாக ஆக்கிக் கொண்டான், இவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பருவமடையக் காத்திருக்கும் மதியழகி என்ற மகளும், மதி வேந்தன், மகிழ்ந்தன எனப் பள்ளி செல்லும் மகன்களும் இருக்கின்றனர். தன் அக்காள் மகள் மீனாவையும், தன மகளாகவே வளர்த்து, மருத்துவ படிப்பையும் படிக்க வைத்திருக்கிறான்.
கருத்த பாண்டியின் மூன்றாவது மகன், ராஜபாண்டியன், குவாரி காண்ட்ரேக்ட், ரியல் எஸ்டேட் எனக் கொடி கட்டிப் பறக்கும் வியாபார காந்தம். இவர் மனைவி கௌசல்யா கணித பேராசிரியையாக இருந்து ஒய்வு பெற்றவர். இரண்டு மகன்கள், மருது பாண்டி, தங்கப்பாண்டி, அனுராதா என்ற ஓர் மகளும் உண்டு. மதுரைக்கு அருகிலேயே துவரிமான் பகுதியில் பெரிய வீடு கட்டி வசிக்கிறார்.
இதில் மருது பாண்டி அப்பாவோடு தொழில் பார்க்க, அவன் மனைவி சுமித்திரா, ஆசிரியையாக இருந்தவள், தற்போது முழு நேர மனையாள் ஆகிவிட்டாள் ,மகன் ஹிதேஷ் பாண்டி மேல்நிலை கல்வி பயில்கிறான்.
இரண்டாவது மகன் தங்கப்பாண்டியன் ஐ.பி.எஸ் , காதலாகிக் காத்திருந்து உடன் படித்த அய்யங்கார் வீட்டுப் பெண்ணான, தான்வி ஐ ஏ எஸ் , போராடி கலப்பு மணம் முடித்தான். கௌசிக் பாண்டியன், ராக சுதா என இரு மக்கள், பள்ளி செல்லும் வயதில் உள்ளனர்.
அனுராதா திருமணமாகி கணவன் மாதவனுடன் மதுரையில், கார், மோட்டார் விற்பனை தொழில் செய்து, அப்பா வீட்டுக்கு அருகிலேயே வீடு கட்டி வசிக்கிறாள், அவளுக்கும் பள்ளி செல்லும் அரசி என்ற மகளும், கிருஷ் என்ற மகனும் உண்டு.
நான்காவது வீரபாண்டியன்- அசோதை. இந்தக் குடும்பத்தின் விவசாய நிலங்கள் அத்தனையும் இவர் கட்டுப் பாட்டில் தான் உள்ளது. நல்ல உழைப்பாளி. மூத்தவர் சொல்லைத் தட்டாத வெள்ளந்தி மனிதன். இவர்களுக்கு இரண்டு மகள்கள், பூங்கோதை, பூங்குயில், ஒரு மகன் முத்துப் பாண்டி,
பூங்கோதை, கருமாத்தூரில் ஹார்டுவேர்ஸ் கடை விருமனுக்கு கொடுத்திருக்கிறார்கள், ஒரு மகன், ஆதி சிவா, சிவில் என்ஜினியரிங் முடித்திருக்கிறான்.
அடுத்து பூங்குயில், அத்தை மகன் செல்வமணியை மணமுடித்து , மூன்று பிள்ளைகள் பெற்று, உசிலம்பட்டியிலிருந்து, மானூத்து வரும் வழியிலேயே பெரிய வீடு கட்டி வசிக்கின்றனர். தொடர் பெட்ரோல் பங்க் வைத்திருக்கிறார்கள்.
முத்துப் பாண்டி, மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தவன், தனியாக கம்பெனி ஆரம்பித்து தொழில் செய்கிறான். தோழிகள் இரு பிரியாக்களில் ஒருத்தியைக் காதலித்து, அவள் பிரிவில் தேவதாஸாகத் திரிந்து, மற்றொரு பிரியாவான சிவப்ரியாவை மணமுடித்து, பிள்ளை குட்டிகளோடு நிறைவாய் வாழ்கிறான்.
ஐந்தாவது சோலையம்மா, செல்லம்பட்டியில் மாயத்தேவன், எனும் செல்வாக்கு மிக்கவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர் . இவர்கள் மூத்த மகன் வாசுதேவன், பொறியியல் முடித்தவன் காவல்துறை தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிகிறான். சரயு என்ற மனைவியும், சரண் தேவா, சத்யதேவா என்ற பள்ளி செல்லும் மகன்களும் உண்டு .
மகள் அனுசுயாவை ,வேறு ஒரு பெரிய வீட்டில், ஜெயபிரபு என்பவருக்கு மனம் முடித்து கொடுத்தனர், வெகு நாள் கழித்துப் பிறந்த , பள்ளி செல்லும் ஒரு மகள் இருக்கிறாள்.
ஆறாவது மகன் துரைப் பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர், மனைவி செல்வி . மகள் ஐஸ்வர்யா, மாமன் மகனான , ஹரீஷ் விருமாண்டியை மணமுடித்து, வெளி நாட்டில் இருக்கிறாள். மகன் தினேஷ் பாண்டி, கணினி மென்பொறியாளனாக, வெளிநாட்டில் பணிபுரிகிறான்.
துரை பாண்டி செல்வி இருவரும், தன பிள்ளைகளுக்காக அவர்களோடே வெளிநாடு சென்றவர்கள், ஒரு கட்டத்தில் சொந்த ஊர் திரும்பி விட்டனர். மகனை ஊருக்கு வரவழைத்து, இங்குள்ள பெண்ணை மணம் செய்விக்க, பிரதானப்பட்டுக் கொண்டு இருக்க, அவன் திருமணத்தில் நாட்டமில்லாதவனாக உலக நாடுகளைச் சுற்றி வருகிறான்.
வானம்பாடி -முன்னுரை
பாண்டிக் குடும்பம், மூன்றாம் தலைமுறையில் , கடைக்குட்டி தினேஷ் பாண்டி . இவனுக்கு மட்டுமே திருமணம் செய்ய வேண்டியுள்ளது.தினேஷ் பாண்டிக்குப் பெண் கொடுக்க, சாதி சாணத்தில் கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே இருபத்தி சொச்சம் வருடங்களுக்கு முன் , செல்லம்மாள் மகள் செல்வமுத்துவின் வேற்று சாதி மணம் , அவள் உயிரையே காவு வாங்கியிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பான தங்கப் பாண்டியன் கலப்பு மணம் , பாண்டிக் குடும்பத்தின் சாதீய செல்வாக்கை அவ்வப்போது உரசிப் பார்த்துக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும் மருமகள் ஐ ஏ எஸ் அதிகாரி, செல்வாக்கானவர் என்பதால், சற்றே அடக்கி வாசித்தனர். அடுத்து , பாண்டி குடும்ப வாரிசுகளான முத்துப் பாண்டி, மற்றும் ஐஸ்வர்யா என இரண்டு திருமணங்கள் தெய்வாதீனமாகச் சொந்தத்தில் நடந்ததில், பழைய பகைமை மாறி, உறவு மலர்ந்திருந்தது.