My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன் - பாகம் -14

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
" வந்துவிட்டேன் உன்னிடம் நீ தான் உணராமல் இருக்கிறாய்.... சீக்கிரம் வந்து விடு, உன் நெருக்கம் இன்றி சுவாசிக்கவும் மறந்து போகிறேன் அடிக்கடி என் உயிரே "
.... மிகரனின் காதல் மொழி....


பாகம்-14
குட்டி முல்லை பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தவனை அதிர்ந்து பார்த்தவள் அந்த சிரிப்பில் அவன் பால் ஈரக்கப்பட்டால்,

" தாரிகா அப்புறம் சக்கரை " அவள் சொன்னதை நினைத்தப் பார்த்தவன் தாரிகா உதவியதில் ஆச்சர்யம் இல்லை, தோழி கூடவே இருப்பவள் ஆனால்

"சக்கரையா இது எப்போ " உண்மையிலேயே அதிர்ச்சி தான் அவனுக்கு தெரியாதே அவன் குடும்பமே இதில் உடந்தை என

சக்கரையை சொல்லி விட்டோமே இவருக்கு கோவம் வந்து அவனை திட்டி, அடித்து வேலையை விட்டு நீக்கி விட்டால் என்ன செய்வது பயம் வந்து விட " அது நீங்களா இருக்கும்னு சந்தேகம் அதான் சக்கரை கிட்ட போன வாரம் கோவில்ல பார்க்கும் போது சொன்னேன். என் முகம் டல்லா இருந்தது அதான் அவன் விடாம கேட்கவும் சொல்லிட்டேன். அவனும் உங்க முகத்தை பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னான். அவனாலயும் கண்டுபிடிக்க முடியல " வருத்தம் இழைந்தோடியாது அவள் குரலில்

" ம்ம் அப்புறம் அதான் அன்னைக்கு மதியம் வித்யாசமா நடந்துகிட்டனா அவன். ஆமா என்ன இருக்கு என் முகத்துல

சொல்லு நானே இருக்கா இல்லையானு சொல்லிடுறேன் "..

அவன் கேட்டதும் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். மீசைக்கு பக்கத்தில் அவளின் பார்வை இருக்க, தன் முகத்தையே உற்று பார்க்கும் பார்வையை வைத்தே உணர்ந்து கொண்டான் முகத்தில் தான் ஏதோ ஒரு அடையாளம் சொல்ல போகிறாளோ, என்னவாக இருக்கும். எனக்கு தெரிந்த வகையில் என் முகத்தில் எதுவும் சிறப்பாக இல்லையே, சரி அவளிடமே கேட்போம் அவனுக்கும் எதிர்பார்ப்பு என் முகத்தில் என்ன தான் இருக்கிறது.

" கன்னத்துல மச்சம்" என்றவள் அவன் முகம் நோக்கி கையை எடுத்துச் சென்று தாடியை இழுத்தாள்...

எதிர்பாரா செயலில் அதிர்ந்தவன் " உண்மையான தாடி தான்" மச்சம் தானா கனவில் அவ்வளவு நெருக்கமாக என்னை பார்த்திருக்கிறாள் இருந்தாலும் என் முகம் ஏன் அவளுக்கு நினைவில் இல்லை. கனவில் வேறு யாரையேனும் பார்த்து விட்டாளே பதறிப் போனான். இப்போது தாடி அதிகம் வைத்திருப்பதால் அடையாளம் காண முடியவில்லையோ, எப்படி இவளுக்கு அது நான் தான் என்று புரிய வைப்பது.

அப்புறம் மச்சம் இருக்குற வேறு யாரையாவது கூட்டிட்டு வந்துட போறா, வேற வழி கண்டு பிடிக்கணும். மச்சம் இருப்பது தெரிய வேண்டாம் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்து விட்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம். நாளைக்கே திருமணத்தை நடத்திடலாம் அப்புறம் எங்கயும் போக முடியாது என் கூடவே இருப்பா, பொறுமையா மச்சம் பார்த்து கண்டு பிடிக்கட்டும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் கூட பிடித்து தான் இருந்தது.

" இந்த தாடிய எடுத்துருங்களேன் கனவுல வர முகமானு தெரிஞ்சிக்கணும் " சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டு ஒற்றை விழியை மூடி மறு விழியால் ஆடவனை பார்க்க, உள்ளுக்குள் அவள் செயலை ரசித்தவன் வெளியே அழுத்தமான பார்வையை அவள் மீது வீசியவன்

"தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்வ என்னை கல்யாணம் பண்ணிக்குவியா ".. சொல்லிவிட்டு அவள் என்ன பதில் சொல்வாள் என்று அவளை ஆர்வமாக பார்த்தான்.

என்ன இவருக்கு இப்படியெல்லாம் கூட பேசத் தெரியுமா என்று திகைத்தவள் முதலில் இவர் தாடியை எடுக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் இவளுக்கு இப்போதைய தவிப்பெல்லாம் கனவில் வந்த முகம் இவன் முகமா என்பதே முகத்தில் தாடி இல்லை என்றால் இந்நேரம் கூட கண்டுபிடித்து விடலாம் இவனோ தாடிக்குள் அல்லவா முகத்தை வைத்திருக்கிறான்.

" ம்ம் சம்மதம் முதல்ல தாடி எடுத்திட்டு வந்து காட்டுங்க " அவன் முகம் பார்த்து கூறவும்

இவளின் பதிலில் திகைப்புற்று அவன் காண, இவளோ அவனிடம் இருந்து விலகி நின்று கொண்டாள். தன்னிடம் பேச பயந்து நிற்பவள் பேசியதோடு தன்னை அடையாளம் காண இவள் செய்தது இப்போது தன்னிடமிருந்து விலகியது எல்லாம் நினைத்து பார்த்தவனுக்கு' தேறிட்டா ' மனதிற்குள் மெச்சியவன்.

என்னை கண்டு பிடிக்க என் ஆளையே வேவு பார்க்க வச்சிருக்கா, இப்போ தைரியமா தாடி எடுக்க சொல்லுறா, கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றா, நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க ரெடியா, ஏன் இப்டி குழும்பி நம்மளையும் குழப்புறா, உள்ளுக்குள் பொறுமியவன்

" நிஜமா கல்யாணம் பண்ணிக்க சம்மதமா " என்றிட தலையை மட்டும் ஆட்டினால்,"வாயை திறந்து சொல்லு" கோவம் கலந்து வார்த்தை வர

"சம்மதம், ஆனா"

"என்ன இழுக்குற"

"உங்க தாடி"

"கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயே தாடியை எடுத்துட்டு பார்த்துக்கோ"
அவன் சொல்லியதில் "பே" என பார்த்து வைக்க

"போலாமா டைம் ஆச்சு" கேட்டக் கொண்டே நடக்க
கனலியும் தலை ஆட்டியவள் நடக்க தொடங்க மிகிரனும் சேர்ந்து நடந்தான்.

இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த அவர்களின் உறவுகளுக்கு மகிழ்ச்சியே. கனலியை இழுத்துக் கொண்டு ஓடினார்கள் நித்யாவும், தாரிகாவும். மூச்சு வாங்கி நின்றவர்கள். பின்பு சிரித்தும் கொண்டனர்.

" ஏன்டி இப்படி இழுத்துட்டு வரீங்க " கனலியின் பேச்சுக்கு முறைத்த தாரிகாவ கண்களால் அமைதி படுத்திய நித்யா

" கனல் எனக்கு ரொம்ப சந்தோஷம். அண்ணாவை பார்த்தாலே பயந்து ஓடுவ இப்போ ரெண்டு பேரும் ஒன்னா போய்ட்டு பேசிட்டு இப்போ ஒன்னா நடந்து வரீங்க, ரெண்டு பேருக்கும் அவ்ளோ பொருத்தம். தேங்க்ஸ் டி அண்ணி " சிரிப்புடன் கூறியவளை ஆச்சர்யமாக பார்த்தனர் தோழிகள் இருவரும்.

" என்னடி இப்டி பார்க்குறீங்க "... நித்யா கேட்க

" நீ சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா " இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல, நித்யாவோ வெட்க புன்னகை சிந்தினாள்.

கனலியோ தான் கூடவே இருந்தாள் கண்டிப்பாக தன் தோழியின் நிலை மாறும் குடும்பம் மகிழ்ச்சி அடையும். மிகிரன் தன் தங்கையின் வாழ்வுக்காக சந்தோஷத்தைதியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர். கனவை மறந்து விடுவது தான் நல்லது. மிகிரன் அவனை நினைத்தாலே இப்பொழுது புதிய உணர்வு தலை தூக்குகிறது.

வெயிலில் அலைந்து திரிபவர்களுக்கு திடீரென பெய்யும் புது மழை போல் இளஞ் சாரல் வீசி செல்கிறது அவனது நெருக்கம், ஸ்பரிசம், பார்வை, தீண்டல், பேச்சு, சிரிப்பு தன் மனம் முழுவதும் இன்று நிறைத்து விட்டான். தோழிகளிடம் சொல்ல தயக்கம், வெட்கம் போட்டி போட

கனலியின் மௌனம், வெட்கம் அவர்களுக்கும் புரிந்து போனது, மிகிரனை இவளுக்கு பிடித்து விட்டது. அவர்கள் இருவரும் நடந்து வந்த விதம் அப்படி தான் நினைக்க வைத்தது.

மிகிரனும், கனலியும் நடந்து வருவதை

பார்த்த பெரியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரு வீட்டினரும் பூசாரியிடம் பேசி நாளை கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்ய, மிகரனை அழைக்க

மிகரனின் அம்மா விஜயலக்ஷ்மி"என்ன பா மிகரா பூசாரி திடீர்னு சொல்லவும் ஒன்னும் புரியல ஏற்கனவே எங்களுக்கும் இந்த எண்ணம் இருந்தது இன்னைக்கு கோவிலுக்கு உங்க கல்யாணத்தை பத்தி பேச தான் கூப்பிட்டேன். எப்படி ஆரம்பிக்கலாம்னு கொஞ்சம் தயக்கம், என் வேண்டுதல் அம்மனுக்கு புரிஞ்சது அதான் அவங்களாவே நடத்தி வைக்க முடிவு பண்ணிட்டாங்க,

அதை ஆமோதிப்பதாய் அருகில் வந்தவர்கள், அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் வந்தப்பவே உங்க ஜோடி பொருத்தம் பார்த்து முடிவு பண்ணோம் எப்படி கேட்குறதுன்னு எங்களுக்கும் தயக்கம் தான். இப்போ தான் தெரியுது இது கடவுளோட விருப்பம். நாங்களும் பேசிட்டோம் நாளைக்கே கோவில்ல கல்யாணத்தை முடிச்சிட்டு ஊர்ல போய் வரவேற்பை சிறப்பாக நடத்திக்கலாம். உங்களோட முடிவ சொல்லுங்க, அனைவரின் எதிர்பார்ப்பும் மிகரனின் சம்மதம் என்ற ஒற்றை சொல்லிற்கு காத்திருக்க

மிகிரன் பற்றி கனலியின் அப்பாவிற்கு தெரியும் அவன் தொழிலில் வளர்ச்சி அடையவும் வங்கி மூலம் லோன் வாங்கவும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறாரே, அவனிடம் பேசியதில் ரொம்ப பிடித்து போக தன் ஆசை மகளை திருமணம் செய்து வைக்கவும் முழு மனதோடு சம்மதித்து விட்டார்.

"எனக்கு சம்மதம், இங்க கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாட்டை பிரண்ட் கிட்ட சொல்லி பண்ண வச்சிட்டேன். இங்க ஒரு வீடு வாங்கிருக்கேன் அங்க தான் நைட் தங்க போறோம்"

மகனின் சம்மதம் என்ற வார்த்தையில் சிரித்தவர் மிகிரன் அருகில் வந்து நெட்டி முறிக்க, சிரித்தான் அவனும் மற்றவர்களுக்கும் சந்தோஷமே,

யாழினியோ தன் அம்மாவிடம் விவரம் கேட்டு கொண்டவள் சிரித்து தன் மகிழ்வை வெளிப்படுத்த,

இப்பொழுது கனலியின் முடிவு
என்னவாக இருக்கும் சம்மதம் சொல்வாளா, வாரத்தையில் சொல்லி விட்டாள் மனதுக்கு எந்த குறையும் இருக்காது இவளின் சம்மதமும் கல்யாணத்திற்கு முக்கியமே,

"கனலி என் பயன் வார்த்தையில சம்மதம் சொல்லிட்டான், நீயும் சொல்லிட்டீனா எங்களுக்கு மனசு நிறைவா இருக்கும்"

மிகிரனை தவிர அனைவரையும் பார்க்க

"போலாம் வாங்க நேரமாச்சு"

இரவு மிகிரன் அனைவரையும் தான் வாங்கி வைத்திருக்கும் வீட்டிற்கு அழைத்து வந்தான். கனலிக்கு மட்டும் அதிர்ச்சி இவர்களின் நெருக்கமான சந்திப்பு இங்கு தானே நடந்தது நண்பனின் வீடு என்று தான் நினைத்தாள் இப்போது தன் வீடு என்றதும் வந்த அதிர்ச்சி, இன்னும் தாடி எடுக்கவில்லையே என்ற கோவமும் சேர்ந்து கொண்டது.

அவள் அவன்புறம் திரும்பவே இல்லை. எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டே இவளையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஏன் தன்னை ஒரு முறை கூட பார்க்கவில்லை, கோவமோ, பயந்துட்டு இருந்தவ இப்போ கோவப்படுறா, "ம்ம் இதுவும் நல்லா தான் இருக்கு, சும்மா சீண்டி பாப்போம் என்ன பண்ணுவா, பேசி தானே ஆகணும்"

"நித்யா சாப்பிட்டு உன் பிரண்டஸ் கூட்டிட்டு பின்னாடி வா தோட்டம் இருக்கு" பின்னாடி சென்று விட்டான்.

மிகரனின் நண்பன் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருந்தது. இட்லி, சப்பாத்தி, குருமா, சாம்பார் அனைவரும் சாப்பிட, கனலியோ சாப்பிடாமல் தோட்டதையே பார்த்துக் கொண்டிருக்க

"என்ன டி சாப்பிடாம பார்த்துட்டு இருக்க"

"அது எதுவும் இல்லை" இட்லியை பிட்டு வாயில் போட்டவளுக்கு இறங்கவே இல்லை. "

இதைக் கவனித்த நித்யா "என்னடி என் கிட்ட சொல்ல என்ன தயக்கம், அண்ணன கூப்பிடவா"

எல்லோர் முன்னாடியும் நித்யா கேட்டு விட, சங்கடத்தில் நெளிந்தவள், "ஏன் டி" என்ற ரீதியில் பார்த்து வைக்க

"அண்ணா பின்னாடி தான் இருக்காரு, நீ அவர் கூட போய் சாப்பிடு, நான் எடுத்துட்டு வரேன்" ஒரு தட்டில் இரண்டு இட்லி, சப்பாத்தி எடுத்து வைத்தவள், குருமா, சாம்பார் கிண்ணத்தில் எடுத்தக் கொண்டு செல்ல, வேறு வழி இல்லாமல் கனலியும் சென்றாள்.

முதற் கனவே முதற் கனவே மறுபடி ஏன் வந்தாய் பாடலை சீட்டி அடித்துக் கொண்டிருக்க, அந்த இரவு நேரம் குயில் பாடும் பாட்டினை போல் இனிமையாக இருந்தது. இது நான் தானே பாடணும் கனவு எனக்கு தானே வந்தது நினைத்துக் கொண்டே சென்றாள்.

மிகரன் வானில் இருக்கும் வெண்ணிலவை பார்த்து பாடிக் கொண்டே மல்லிகை பந்தலில் நின்று கொண்டிருந்தான். அங்கே இரு நாற்காலிகள் இருந்தது

"அண்ணா"

நித்யாவின் குரலில் திரும்பி பார்த்தவன் இருவரையும் பார்த்து விட்டு "என்ன நித்யா" பார்வை இருவரின் கையில் இருந்த தட்டில் இருந்தது

"நீ சாப்பிடலயே அதான் அண்ணிக்கும் சாப்பிட பிடிக்கல, இரண்டு பேரும் இங்கயே சாப்பிடுங்க, நான் மத்தவங்களுக்கு பறி மாறிட்டு வரேன்"

முதல் முறை நித்யாவின் அண்ணி அழைப்பில் மயக்கம் வராத குறை, இதில் இவருடன் கோர்த்து விட்டு செல்பவளை முறைத்து கொண்டிருந்தாள் கனலி

கனலியின் முறைப்பை பார்த்து சிரித்துக் கொண்டே நித்யா சென்று விட,

அடுத்து அவளின் நிலையை பார்த்து சிரிப்பது மிகரனின் முறை ஆகி விட,

கனலியின் தட்டினை வாங்கியவன், அவள் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் வாயில் ஊட்டி விட, சாப்பிடு என்று கண் காட்டியவன் அவனும் சாப்பிட ஆரம்பித்தான். அவளுக்கு ஒரு வாய், இவனுக்கு என்று மாறி மாறி சாப்பிட்டு முடிக்க,

அவளின் மௌனத்தை கலைக்க இவனே பேசவும் செய்தான்.

"கனலி"

அவன் அழைப்பில் தானாகவே "ம்ம்" என் றாள்

"என்ன கோவம்" மிகரன் கேட்க

இல்லை என்பதாய் தலை அசைக்க, அவனுக்கு தெரியுமே

"உன் கோவம் எதுக்குன்னு தெரியும் சொல்லட்டா, சற்று நிறுத்தி உனக்கு வந்த கனவு பத்தி சொன்ன, அதுக்கு நான் எதுவும் சொல்லல அதானே"

எப்படி தான் நம்ம மனசுல இருக்குறத சரியா சொல்றாரோ தெரியல, நினைத்தவள், அமைதியாய் இருக்க

"உன் அமைதியே சொல்லுது, உன் நிலைமை புரியுது, எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும், கொஞ்சம் காத்திரு எல்லா பதிலும் கிடைக்கும், என்னை நம்புறியா, நான் உன் பிரச்சனையை சரி பண்ணுவேன்"

இருள் நிறைந்து மல்லிகையின் மனம் நாசியில் புகுந்து மனதை மயக்கிக் கொண்டிருக்க, வெண்ணிலவோ அந்த இடத்தையே தன் ஒளியினால் இன்னும் அழகாக்கிட, எப்போதும் இறுக்கத்துடன், கோவமாய் பேசுபவன் இன்று மெல்லிசை போல் இனிக்க பேசினால் ஏற்கனவே அவனின் புது நடவடிக்கையில் திணறியவள் இப்பொழுது அவன் வசம் சென்று விட்டாள்.

அவன் அவளின் அருகில் வந்து நிற்க, ஒற்றை விரல் கொண்டே முகத்தை நிமிர்த்தி பார்க்க செய்தவன், மெல்லிய சிரிப்பை உதிர்க்க, அவளும் சிரித்தாள். கண்களால் கேட்டான் தன் மீதுள்ள நம்பிக்கையை அவளும் மீன் விழியால் பதில் உரைக்க,

மகி மகி ஓயாமல் அழைக்கும் சிறு வயது நினைவு, அவளுடன்விளையாடியது, பஞ்சு மூட்டை போல் தூக்கிக் கொண்டு சுற்றியது, அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்தது, பாதி சாப்பிட்டு போதும் என இவனிடம் கொடுத்தது அதை பெரிய பிரசாதம் போல் உண்டது, தன் மடியில் தூங்கியது, கன்னத்தில் முத்தம் என்ற பெயரில் எச்சில் ஆக்கியது, கை பிடித்து கொண்டே ஊர் சுற்றியது அனைத்தும் வந்து போக, அந்த இனிய நினைவுகளில் மூழ்கி மீண்டு வந்தவன்

தன்னவளை இன்னும் நெருங்கி பிறை நுதலில் முத்திரை பதித்து, தன் நெஞ்சில் சாய்த்து வெண்ணிலவை பார்க்க செய்திட, இருவரின் பார்வையில் வெண்ணிலா வெட்கம் பூசி செந்நிலவாய் மின்ன, மேகத்திடம் தன்னை ஒளித்து வைக்கும் படி கேட்டு நிற்க, குளிர் காற்று மோதி கரு மேகங்களும் நிலவின் ஆசையை நிறைவேற்ற,

"எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு கையோடு
சிக்காமல் காற்றை வைத்தவன்
யாருஇதை எண்ணி எண்ணி
உலகமே வியக்கிறேன் எட்டாத
உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு"

மிகிரன் விசிலடித்து பாட

"நீங்க ரொம்ப நல்லா விசிலடிக்கிறீங்க"
கனலி சிரிப்புடன் கூற

"அடி உலகை ரசிக்க
வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு"

அவனின் விசில் சத்தத்தின் அர்த்தம் உணர்ந்தவள் அவனை தள்ளி விட்டு வீட்டிற்குள் ஓடி விட, அவளின் ஓட்டத்திற்கு காரணம் தன் மீது கொண்ட நாணம், ஆசை எல்லாம் சேர்ந்து தான் தன் முகத்தை, நெருக்கத்தை எதிர் கொள்ளும் திரணின்றி ஓடுகிறாள் என்பதில் இத்தனை நாளைய வலி, ஏக்கம் மறைந்து எங்கோ ஒளிந்து கொண்டது மூரல்கள் மின்ன சிரித்துக் கொண்டவன் அவள் சென்ற வழியிலேயே சென்றான்.

மிகிரன் தன் நண்பனுடன் தங்கிக் கொள்வதாக சொல்லி சென்றான். புது இடம், திடீர் திருமணம் பற்றிய சிந்தனை, கனவில் வருபவனின் நினைவு என குழப்பத்தில் படுத்திருந்தவளுக்கு அழைப்பு வந்தது மிகிரனிடமிருந்து அழைப்பை ஏற்றவள் அமைதியே சொல்லியது கோவத்தை, " கனலி கோவமா இருப்பேன்னு தெரியும் இங்க தாடி எடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க ஊருக்கு போனதும் எடுக்குறேன், உன் குழப்பம் எல்லாம் சரி பண்றேன் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ " என்றவன் அழைப்பை தூண்டித்தான்.

பக்கத்தில் படுத்திருந்த தோழிகள் இருவரிடமும் நடந்தவற்றையும், மனதின் குழப்பங்களையும் சொல்ல,

நித்யா " கனல் அண்ணன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி பேசி இருக்க, அப்புறம் என்ன அவர் எல்லாம் தெரிஞ்சவரு, அவரே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்காரு, நீ யோசிச்சு பாரு இது கடவுளோட முடிவு, "

தாரிகாவோ " எனக்கென்னவோ கனவுல வந்தவரு மிகிரன் அண்ணாவா இருக்குமோனு தோணுது"

இருவரின் பேச்சிலும் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வது நல்லது, ஒருவேளை கனவில் வந்தவர் இவர் தானோ கூட இருந்தே கண்டுபிடிக்கலாம், அவர இன்னைக்கு நெருங்கி வந்தாரே, அது அந்த தருணம் நினைத்து பார்த்தவளுக்கு உடல் சிலிர்த்தது. அப்படியே படுத்தவள் மிகரன் தந்த பேச்சில் நம்பிக்கையில் அவன் நினைவுகளுடன் உறங்கியும் போனாள்.

விடியலில் எழுந்தவர்கள் கோயிலுக்கு கிளம்பினர். கனலிக்காக புடவை, ஒப்பனை பொருட்களை நண்பன் மூலம் கொடுத்தனுப்ப, தோழிகள் இருவரும் சிரிப்புடன் கனலியிடம் கொடுத்தனர். அலங்காரம் முடிந்து கண்ணாடியில் பார்க்க வைக்க, கனலியே வியந்து தான் போனாள். எப்படி தான் இவருக்கு மட்டும் எல்லாம் தெரியுதோ, மயக்கிடுறாரு

"அப்போ நீ மயங்கிட்டியா" மனசாட்சி கேள்வி கேட்க, அதை திட்டி அடக்கியவள்

கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து விட்டு காத்திருக்க, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் நண்பனிடம் பேசிக் கொண்டே வருபவனின் தோற்றம் வசீகரித்தது. கனலிக்கோ தாடி எடுத்திருந்தா சூப்பரா இருக்கும் என்று நினைத்தவள், தன் நினைப்பை நினைத்து தன்னையே கடிந்து கொண்டாள்.

இரு குடும்பங்கள், ஊரில் உள்ள சிலர், கோயில் பூசாரி வைத்து மிகிரன், கனலியின் கழுத்தில் தாலியைக் கட்டி, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான். உள்ளுக்குள் ஒரு இதமான உணர்வு இம்சை செய்தது. வெளிக்காட்டிட தான் முடியாத நிலைமை கொஞ்ச காலம் என்று தனக்கு சமாதானம் சொல்லிக் கொண்டவன். " அம்மா எப்போ கிளம்புறது வேலை நிறைய இருக்கு "


" என்னடா இவ்ளோ நேரம் அமைதியா இருந்தியேன்னு பார்த்தேன், கிளம்பலாம்டா " சிரிப்புடன் சொன்னவர், " நித்யா எல்லாம் எடுத்து வச்சிக்கோ கிளம்பலாம் "...

" சரி மா "

காரில் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். நித்யாவை ஆரத்தி எடுக்க சொல்ல அவளோ தயங்கினாள், கனலியின் அம்மா வற்புறுத்தி எடுக்க சொல்ல, அண்ணனையும், அண்ணியையும் ஆரத்தி எடுத்து நெற்றியில் வைத்தவள் மகிழ்வுடன் கனலியை உள்ளே அழைத்துச் சென்றாள்.

பால், பழம் கொடுக்க மிகிரன் அருந்தி விட்டு மனைவியிடம் நீட்ட தயக்கத்துடன் பெற்றுக் கொண்டவள் அருந்தி விட்டு மிகிரனைப் பார்க்க அவனோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
திருமணம் நடந்த செய்தி அறிந்து ஓடி வந்த சக்கரை கோவித்துக் கொள்ள, " டேய் எங்களுக்கே தெரியாது டா ஒரே நாள்ல நடந்திடுச்சு, வரவேற்பு வைப்போம் கூட இருந்து நீ தான் பார்த்துக்கணும் " என்று மிகிரன் கூற

" நீ சொல்லனுமா அண்ணா, நான் இல்லாம எப்படி " அடுத்து அவன் பார்வை கனலியிடம் போக

" அண்ணி " என்றவன் கொஞ்சம் பக்கத்தில் நின்று "அண்ணி, அண்ணன் தான் அவரா " யாருக்கும் கேட்காத வண்ணம் கேட்க,

" குழப்பமா இருக்கு, நீ தான் உதவி பண்ணனும் கண்டுபிடிக்க " அவளும் மெல்ல சொன்னாள்.

"பார்த்துக்கலாம் அண்ணி" சிரிப்புடன் சொல்ல, மிகரனை பார்த்து இனி இவர் தான் என்னும் எண்ணத்துடன் அறைக்குள் நுழைந்தாள்...

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top