"கனவினில் வந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் நீ இப்பொழுது நேரிலும் வந்து விட்டாயா, இருக்கிறாய் பக்கத்தில் நான் தான் புரியாமல் வேறு எங்கோ தேடிக் கொண்டிருக்கிறேன்"
..... கனலியின் காதல் மொழி....
பாகம் -13
ஷேக்ஸ்பியரின் புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றவள் அதை படித்துக்கொண்டிருக்க அவள் நினைத்ததோ கனவுகள் பற்றியும், உண்மையில் கனவில் வருவது நடக்குமா என்பதை தெரிந்து கொள்ள ஆனால் மிட் நைட் காஃபி ட்ரீம்ஸல் இருப்பதோ, முழுக்க முழுக்க காதலும் அதை சுற்றி பின்னப்பட்ட குட்டி குட்டி கிளைக் கதைகள், மருந்தின் மூலம் நிகழ்வை கனவாக மாற்றி நம்ப வைக்கும் ஜாலம் என குழப்பங்கள், தீர்வுகள், நகைச்சுவை என மாறுபட்டு இருந்தது சிறிது படித்தவள், சிக்மன்ட் ப்ராய்டின் மனிதர்களின் வளர்ச்சி ஆய்வை பற்றிய புத்தகம், இதிலும் அவளுக்கு ஆர்வம் இல்லை, புத்தகத்தை மூடி வைத்து கண் மூட, இமைகளுக்குள் விழிந்தான் வசியம் வைத்து மனதை கொள்ளை கொள்ளும் மிகிரன், அதிர்ந்து கண் திறந்தவளுக்கு அவனை பார்க்க சென்றதால் தான் நினைவில் வருகிறான் என்று அவளாகவே முடிவு செய்து கொண்டாள்.இனிமேல் அவரை பார்க்க போக கூடாது, மனசுல ஒருத்தரோட நினைவு கனவா வந்து இம்சை பண்ணிட்டு இருக்கு, எனக்காக அவர் வாழ்ந்துட்டு இருக்காரு இல்லைனா என்னை தேடி அலைஞ்சு கனவுல வருவாரா, எவ்ளோ அன்பு, காதல், பாசம் என் மேல அவரோட முகம் அந்த சிரிப்பு எனக்கான ஏக்கம், சிரிப்பு அவர் கனவுல தான் தொட்டாரு இப்போ கூட அதை என்னால உணர முடியுது
அவரோட கண்ணு ஆண்களோட பார்வைக்கு காந்த சக்தினு சொல்றது உண்மை தான், அந்த சிரிப்பு நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கலாம்.
அந்த கன்னம் லேசான தாடி, கத்தி போல கூறான மூக்கு அதுக்கு கீழ அழகான மீசை பிடிச்சி இழுத்து பார்க்க தோணும்.
என்னை பத்தி எல்லாம் சொல்றாரு, எனக்கு பிடிச்சது லாம் அவருக்கு எப்படி தெரியும்.
எனக்கு தான் ஏதோ பிரச்சனை, மறந்துட்டு இருக்கேன். எவ்வளவு யோசிச்சாலும் நியாபகம் வர மாட்டுது. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு கண்டிப்பா அவர கண்டு பிடிப்பேன் மனதில் உறுதி எடுத்தவள். புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடியில் இருந்து கீழே வந்தவள்
"அம்மா பசிக்குது"
"என்னடி பண்ண இவ்ளோ நேரம், வா இட்லியும், கார சட்னியும் செஞ்சி இருக்கேன் சாப்பிடு" தட்டில் வைத்து கொடுக்க, அவளும் சாப்பிட ஆரம்பிக்க, கனலியின் கைபேசி அழைக்க, எடுத்து பார்த்தாள், நித்யா
"சொல்லுடி நித்தி"
"....."
"அம்மா நித்யா உன் கிட்ட பேசணுமா" அம்மாவிடம் கைபேசியை கொடுத்து விட்டு கனலி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"நித்யா சொல்லு மா"
"அம்மா பேசணும்னு சொன்னாங்க பேசுங்க ஆண்ட்டி"
"கொடு மா பேசுறேன்"
"வணக்கம் ங்க, நான் நித்யாவோட அம்மா பேசுறேன், நல்லா இருக்கீங்களா"
இரண்டு முறை பார்த்து பேசி இருக்கிறார்கள், கனலி அடிக்கடி நித்யா, அவர்களின் அம்மா, குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க, அவர்களின் மீது நல்ல மதிப்பு தான், அன்று கனலியை பத்திரமாக அழைத்து வந்து விட்டு விட்டு, பேசி விட்டு போனதும் இருவருக்கும் இவர்களின் ஜோடி பொருத்தம் கண்டு திருமணம் செய்து வைக்க ஆசையும் வந்தது, இவர்கள் இதைப் பற்றி தான் பேச வருகிறார்களோ, மனதில் நினைத்தவர்
"நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க"
"நல்லா இருக்கேன் மா, ஏற்கனவே கனலி கிட்ட குல தெய்வம் கோவிலுக்கு போறத பத்தி சொல்லி வச்சிருந்தேன் அதான் சனிக்கிழமை போய்ட்டு தங்கிட்டு மறு நாள் சாமிக்கு படையல் போட்டு வந்துடலாம், நீங்களும் வரீங்களா, தாரிகா
வீட்லயும் பேசிட்டேன் வராங்க"
"நல்ல விஷயம் தானே நாங்களும் வரோம், கனலி எப்பவோ சொல்லிட்டா போய் தான் ஆகணும்னு"
பரவால்லயே நம்ம மருமகள் சமத்து தான் நமக்கு வேலை வைக்காம அவளே சொல்லி வச்சிருக்கா "சனிக்கிழமை சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பிடலாம், ரெடியா ஆகிடுங்க நாங்க வந்து கூப்டு போறோம்"
"கண்டிப்பா மா"
கனலி சாப்பிட்டு வந்து, "என்னமா பேசுனாங்க"
"வர சனிக்கிழமை குல தெய்வம் கோவிலுக்கு போக கூப்டாங்க"
"ஓ அதுவா சூப்பர் மா, சொல்லி வச்சிருந்தாங்க, கண்டிப்பா போகணும்"
"போகலாம் டி, அப்பா கிட்ட பேசிடறேன்"
சனிக்கிழமை மாலை இரு வண்டிகளில் புறப்பட்டனர். மிகிரனும், கனலியும் இயல்பாக இருக்க மற்றவர்கள் தான் இருவரையும் எப்படி சேர்த்து வைப்பது என்று தீவிர யோசனையில் இருந்தனர்.
மிகிரன் தான் காரினை ஓட்டிக் கொண்டே கனலியை பார்த்துக் கொண்டே வந்தான். லாவண்டர் நிற பாவாடை தாவணி, ஏன் கடவுள் இவளை இவ்வளவு அழகாக படைத்தானோ, சிறிய வயதில் இருந்ததற்கும், இப்பொழுது இருப்பதிற்கும் எவ்வளவு வித்தியாசம், சீக்கிரமே அந்த கனவிலிருந்து அவளை மீட்டு எனக்குள்ளே வைத்தக் கொள்ள வேண்டும்.
இந்த பயணம் கண்டிப்பாக மாற்றத்தை இருவருக்கும் கொண்டு வரும் மனதில் உறுதியாக இருந்தான். அவளோ இவனை பார்க்காமல் ஏதோ யோசனையில் இருந்தாள். வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.
நித்யாவோ "அண்ணா யாழினிக்கு பசிக்குதாம் அங்க டீ கடையில, நிறுத்துங்க"
"யாழு குட்டி பசிக்குதாமா"
"ஆமா மாமா"
"ம்ம் சரி மா, இதோ கடை வந்திடுச்சு"
இறங்கியவன் எல்லாருக்கும் டீ வாங்கி வந்தான், யாழினிக்கு பால், பிஸ்கட் வாங்கி வந்தவன் கொடுக்க, கனலியிடம் கொடுக்க அவளும் வாங்கிக் கொண்டாள்.
குடித்து முடித்ததும் மீண்டும் தொடர்ந்தது அவளைப் பார்த்து கொண்டே இருந்த இந்த பயணம் அவனுக்கு புது வித உணர்வுடன் இருந்தது ஆனால் வழக்கம் போல் எந்த உணர்வையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இறுக்கத்துடன் இருந்தது அவன் முகம்
ஒன்றரை மணி நேர பயணம் ஊத்துக்காடு எல்லை அம்மன் கோவில். ஊரின் எல்லையில் திடீரென தோன்றிய ஊற்று, அதிசயித்து ஊர் மக்கள் பார்க்க, அதில் இருந்து வெளி வந்தது அம்மனின் சிலை, ஊற்றிலிருந்து தோன்றியதால் அவ்வூரும் ஊற்றுக்காடு என வழங்கி பின் ஊத்துக்காடு என்றாகியது.
சக்தி வாய்ந்த அம்மன், சித்திரை மாதத்தில் தெப்ப திருவிழா, மாட்டு வண்டிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாய் வரும். இரவு குளத்தில் தெப்ப ஊர்வலம் அம்மனை காண்கயில் காண கண் கோடி வேண்டும்.
காரிலிருந்து இறங்கியவர்கள் கோவிலை நோக்கி நடந்தார்கள். ஏற்கனவே பூஜைக்கு சொல்லி வைத்திருக்க, கோவிலில் எல்லாம் தயாராகி இருந்தது. இன்று அருள் வாக்கு சொல்லும் நாள் அதனால் தான் இன்று வந்தது. கோவிலுக்கு பக்கத்தில் அருள் வாக்கு சொல்வதற்கு இடமும் கட்டப்பட்டு இருந்தது. இயற்கை எழிலுடன் இருக்கும் அந்த இடம் மனதிற்கு இதம் அளிப்பதாய் இருந்தது.
ஊர் மக்கள் கூடி இருக்க, சிவப்பு வேட்டி அணிந்து, எலுமிச்சை மாலை சூடி ஐம்பது வயதுடைய ஒருவர் அருள் வாக்கு சொல்லி க் கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் கணவன், மனைவி பயத்துடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அருள் வாக்கு சொல்பவர் யாரை அழைக்கிறாரோ அவருக்கு தான் சொல்லுவார். அது வரை காத்திருக்க வேண்டும், சில சமயம் அழைக்காமலும் இருப்பார், அடுத்த வாரம் மீண்டும் வந்து காத்திருப்பார்கள். இது காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
20 நிமிடங்கள் கடந்திருக்க, மிகினையும், கனலியையும் அழைத்தார். அங்கு இருந்த அனைவருக்குமே அதிர்ச்சி தான். இருவரின் மீதும் குங்குமத்தை தூவி ஆசீர்வதித்தவர், "இருவரும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள், இருவருக்கும் இந்த கோவிலில் நாளையே திருமணம் நடக்க வேண்டும். இது இந்த எல்லை அம்மனின் வாக்கு "
அம்மனின் அருள் வாக்கு கேட்டு மிகிரன், கனலி மட்டுமே அதிர்ச்சி, மற்றவர்களுக்கோ ஆனந்தம், கோவிலுக்கு வந்ததே திருமணத்தப் பற்றி பேசுவதற்கு தான், இங்கோ திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று சொன்னதில், இவர்களின் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டு இருக்குறது அதனால் தான் நடத்தி வைக்கிறார். நித்தியும், தாரிகாவும், கனலியிடம் சென்று அணைத்தக் கொண்டனர்.
அருள் வாக்கு சொல்லி விட்டு அவர் கோவிலுக்குள் சென்று விட கூட்டமும் கலைந்தது. இவர்கள் இருவரின் குடும்பங்கள் மட்டும் இருக்க, மிகரனோ "அம்மா நான் வெளிய கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன், நீங்க கோவிலுக்கு போய்ட்டு இங்க வந்துடுங்க நானும் வந்துடறேன்"
"சரி பா போய்ட்டு வா"
கனலிக்கு தான் குழப்பம், இங்கே எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாய் இருக்கிறார்களே, இவரோ இன்னும் இயல்பாய் இருக்கிறார், முதலில் இவரிடம் பேச வேண்டும் பிறகு மற்றவர்களிடம் பேசிக் கொள்ளலாம் நினைத்தவள் "அம்மா நான் அவர் கிட்ட பேசிட்டு வந்துடறேன்" சொல்லக் கொண்டே அவன் பின்னே சென்றாள் இல்லை இல்லை ஓடிக் கொண்டிருந்தால்...
மிகரனின் அம்மா கனலியின் அம்மாவிடம் "நானே இதப்பத்தி பேச தான் வந்தேன் அதுக்குள்ளே கடவுளே முடிச்சு வச்சிட்டாரு, எனக்கு ரொம்ப சந்தோஷம், உங்களுக்கு இதுல விருப்பமா" தயக்கத்துடன் கேட்க
சிரித்தவர்"நாங்களும் இத தான் நினைச்சிட்டு வந்தோம், எங்களுக்கு சம்மதம், ரொம்ப சந்தோஷமும் " என்றிட
"என் மருமகள் தான் இப்போ ரொம்ப குழம்பி போய் இருக்கா, அவனை தேடி தானே போறா இதுக்கு மேல என் பையன் பார்த்துப்பான்.
கோவிலின் பின் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தான் மிகரன், கனலியும் பின்னே நடந்து சென்றவள், அவனின் வேகத்திற்கு போக முடியாமல் நின்றவள்"மிகரன் " கத்தி அழைக்க,
முதுகுக்கு பின்னே கேட்ட குரலில் நின்று, திரும்ப, மூச்சு வாங்கிக் கொண்டு நின்றிருந்தவளைக் கண்டு புருவம்
இடுங்க பார்த்தவன் கேள்வியாய் நோக்க,
"உங்க கிட்ட பேசணும் " என்றாள்
அவள் சொன்னதும் தனது கைக் கடிகாரத்தை பார்த்தவன் "என்ன சொல்லு"
என்ன சொல்லா, நிஜமாகவே நான் என்ன பேசப் போறனு, தெரியாதா, நினைத்தவளுக்கு வார்த்தைகள் வருவேனா என்று அடம் பிடிக்க
அவனோ திரும்பி நடந்தான்.
"மிகிரன் ப்ளீஸ்"
அவள் தன் பெயரை முதன் முதல் சொல்லி அழைக்கிறாள் அதுவும் கெஞ்சலாக, இவள் கூறியதும் இந்த பெயர் இவ்வளவு அழகா, எனக்கு மட்டும் தான் இப்படி எண்ணமா, அந்த மகிழ்வை வெளியே காட்டாமல்
"எனக்கு டைம் ஆச்சு முக்கியமான வேலை இருக்கு, கூட வா வேலை முடிச்சிட்டு பேசலாம்" சொல்லியவன் வேகமாக நடக்க, இவளோ மீண்டும் அவன் பின்னே நடந்தாள்.
சிறிது தூரம் போனதும் தோட்டம் நிறைந்த வீடு தெரிந்தது. அதான் முன்னே நின்றவன் உள்ளே சென்று வரவேற்பரையில் இருந்த நாற்காலியில் அமர சொல்லி கை காட்டினான்.
உள்ளே செல்ல முற்பட்டவன் " பேசிட்டு வந்திடறேன் காத்திட்டு இரு, பின்னாடி தோட்டம் இருக்கு அங்க போகுறதா இருந்தாலும் போ, நான் வந்துடறேன் " சொல்லிவிட்டு சென்று விட்டான்.. கொஞ்சம் உட்காரலாம் அப்புறம் தோட்டத்துக்கு போகலாம் என்று நினைத்தவளுக்கு வெளியே சத்தம் கேட்க பின்னாடி சென்றாள் பக்கத்து வீட்டின் பின் பக்கம் மிகிரன், சற்று முன் பார்த்த ஒருவன் மற்றும் பல பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்..
தோட்டத்தில் இன்னும் கொஞ்சம் சென்று பார்க்க அங்கே பேசியது தெளிவாக கேட்டது. கனலியின் வயதையொத்த பெண் அழுது கொண்டிருக்க அவளின் அப்பா மிகிரனிடம் " தம்பி இவ தான் என் பொண்ணு அனிதா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தோம் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போனாங்க ஆனால் இவ வேற ஒருத்தர பிடிச்சிருக்குனு சொன்னா விசாரிச்சா சொந்தக்கார பையன் தான் பொண்ணு விருப்பப்படியே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஏற்கனவே பொண்ணு பார்த்துட்டு போன மாப்பிள்ளை வீட்ல நிலைமையை எடுத்து சொன்னோம். அவங்க இங்க வந்து கலாட்டா பண்றாங்க" சொல்லிவிட்டு மிகிரனைப் பார்க்க
இறுகிய முகத்துடன் அவரைப் பார்த்து "பிரச்சனை பண்றவங்க யாரு, எங்க இருக்காங்க".. கொஞ்சம் தள்ளி நின்று இருந்தவர்களை கை காட்ட, அவர்கள் அருகே சென்றவன் பிரச்சனை செய்யும் பையனை அழைத்து " என்ன பிரச்சனை சொல்லுங்க " இயல்பாகவே கேட்டான்....
" அண்ணா நாங்க தான் முதல்ல பொண்ணு பார்க்க போனோம், இப்போ வேற இடம் பார்த்துட்டோம்னு சொல்றாங்க, அதான் நேர்ல பேசிட்டு போக வந்தோம், அப்பா கொஞ்சம் கோவமா பேசிட்டாரு " அவன் கண் பார்த்து பேசுவதிலே உண்மை தான் பேசுகிறான் என்று புரிந்து கொண்டவன்
அவனின் அப்பாவையும் அழைத்து " உங்க நிலைமை புரியுது, அவங்க பொண்ணு சொந்தத்துல ஒருத்தர விரும்புறாங்க அது தெரிஞ்சிக்காம இவர் உங்கள வர வரழைச்சிட்டாரு, ரெண்டு பேரோட விருப்பமும் இரண்டு குடும்ப உறவும் இணைய போறாங்க, நீங்க அதை மதிச்சு அவங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, உங்கள பார்த்தா நல்ல குணமா தெரியுது. பொண்ணு பெத்தவரு என்ன செய்றதுனு தெரியாம தவிக்கிறாரு
" கைகளை பிடித்து பேச, அந்த பெரியவரும் யோசித்தவர் " சரிங்க தம்பி எனக்கும் புரியுது, ஏதோ அவசரத்துல பேசிட்டேன் அவங்க நல்லா இருக்கட்டும் என் ஆசிர்வாதம் உண்டு. என் பையனுக்குனு பொண்ணு இல்லாமலா போய்டும் நாங்க வேற இடம் பார்த்துக்குறோம் " என்றவர் தன் மகனையும் கூட வந்த ஆட்களையும்
அழைத்துக் கொண்டு செல்ல...
பெண்ணின் அப்பாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் அப்போது தான் நிம்மதியே வந்தது. மிகிரனைப் பார்த்து கை கூப்பியபடி நன்றி சொல்ல, பதறி அவரின் கைகளை பிடித்தவன் " நீங்க எவ்ளோ பெரியவங்க ஏன் இப்டி பண்றீங்க, என் தங்கச்சி வயசு தான் இவளுக்கும்,நல்லா இருக்கணும்னு நான் ஆசை படறேன். இப்போவாது பொண்ணு மனசு புரிஞ்சிகிட்டு பிடிச்ச மாப்பிள்ளையை கட்டி வைக்க நினைக்குறீங்களே அதுவே போதும்"
நான் போய்ட்டு வரேன் என்றவன் வேகமாக வந்து விட்டான். அவன் நடையின் வேகமே சொல்லியது அவன் இயல்பாக இல்லை என,
அவனின் குடும்பத்தை பற்றி நன்கு அறிந்த கனலிக்கு தெரியுமே நித்யாவின் நியாபகம் வந்ததை, சிறுது நேரம் பொறுத்து அவரை பார்க்கலாம் என்று நினைத்தவளுக்கும் நித்யாவின் வாழ்வை எண்ணி கண் கலங்க தான் செய்தது, அதை சரி செய்வது பற்றி தான் முடிவெடுத்து விட்டாளே. பிரச்சனையை நாசுக்காக எடுத்து சொல்லி புரிய வைத்து சரி செய்ததோடு பெண்ணின் விருப்பம் இல்லாமல் திருமணம் நடை பெற கூடாது என்று நினைப்பவன் தன்னை பற்றி சிந்திக்காமலா இருப்பான்.
அவனின் குணம் தெள்ள தெளிவாக தெரிகிறது. குடும்பத்தில் இருப்பவர்களின் சந்தோஷம், நித்யாவின் வாழ்க்கை சரி செய்ய தான் கூட இருப்பது அவசியம் என்பது புரிந்தாலும் தன் கனவில் வருபவனை என்ன செய்வது மறக்க முடியவில்லையே கனவில் வருபவன் மிகிரனாக இருக்க வாய்ப்பு இருக்குமா யோசித்தவளுக்கு இரு முகத்தையும் ஒப்பிட்டு பார்த்தாள்.
உயரம் சரி தான் ஆனால் கனவில் வரும் மகியின் முகம் வசீகரம் சிரிப்பு ஒன்று போதுமே, மிகிரனோ அத்தி பூத்தார் போன்ற சிரிப்பு பற்கள் கூட வெளியே தெரியாது. முகத்தில் தாடி இல்லை இல்லை தாடிக்குள் முகம் மறைந்து கிடக்கும்.
தன்னை பற்றிய அக்கறை இல்லை ஒருவேளை இதை சரி செய்து பார்த்தாள் தெரிந்து விடுமே முதலில் தாடியை எடுக்க சொல்ல வேண்டும் அவரை எப்படி சம்மதிக்க வைப்பது யோசித்தவள். முதலில் அவனிடம் பேச வேண்டும் முடிவெடுத்தவள் மிகிரனைத் தேடி சென்றாள்.
வீட்டில் தேடி விட்டு மீண்டும் தோட்டத்திற்கு வர அவளின் தேடுதலிற்குறியவனோ அங்கே முல்லை கொடியின் பந்தல் பக்கத்தில் முதுகைக் காட்டி நின்று கொண்டிருந்தான். கைகள் கட்டி பந்தலில் சாய்ந்து நிற்க இவளோ அவனின் அருகில் சென்று எப்படி அழைப்பது கோவமாக இருப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்க
"ம்ம்க்கும் " என்று குரல் கொடுக்க அவனோ திரும்பவே இல்லை. இது வேலைக்காகாது என்று நினைத்தவள்
" மிகிரன் மிகிரன் " என்று அழைக்க திடீர் அழைப்பில் சட்டென திரும்பியவன் தோள் பந்தலில் இடிக்க நேற்று இரவு பூத்த பூக்கள் இருவர் மீதும் விழுந்தது..
சற்று முன் இருந்த இறுக்கம், குறைந்த உணர்வு இருவருக்கும். இவளைப் பார்த்தான் அவள் பேச வேண்டும் என்று சொன்னதன் நினைவு வர " சொல்லு எதோ பேசனும்னு சொன்னியே " கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்திருந்தது புரிந்தது. தலை ஆட்டியவள்
" உங்களுக்கு பிடிக்கலையா " என்றாள் அவன் முகம் பார்க்காமல்
அவனோ இவள் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். தன் வலி, வேதனை, இறுக்கம் குறையும் முகம் இது தானே.
எதை பிடிக்கலையானு கேட்குற, என் முகத்தை பார்த்து பேசு " என்றிட
தயக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் இப்போது தான் பக்கத்தில் அவன் முகம் பார்க்கிறாள். கம்பீரம், வசீகரம் ஆனால் உணர்வின்றி பொலிவு குறைந்து இருந்தது. அவனைப் பார்த்துக் கொண்டே கால்களை நகர்த்தி வைக்க கால் இடறி விழப் போனவளை வேகமாக வந்து பிடித்துக் கொண்டான் அவள் பந்தல் பக்கம் சாய இவன் பந்தலில் சாய்ந்து அவளையும் தன்னோடு இழுத்துக் கொண்டான் பிடிமானத்திற்கு அவன் இடையில் பிடித்து சாய்ந்து நின்று கொண்டாள். அவனும் அவள் இடையில் கை வைத்து பிடித்துக் கொள்ள. விழாமல் இருந்ததில் நிம்மதி யுற்றவள் மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டாள்...
அவள் அவனின் நினைவு வந்து அவளாக வரும் வரை காத்திருக்க நினைத்தான் சற்று முன் நடந்த சம்பவம் தன் குடும்ப பிரச்சனையை நினைவு படுத்த அவனும் எத்தனை நாட்கள் தான் உள்ளே வலியையும் வெளியே இறுக்கத்தையும் சுமந்து கொண்டிருப்பது இறக்கி வைக்க ஆள் தேடி அலைய இதோ தன் சிறு வயது முதல் நேசம் வளர்த்த பைங்கிளி தன் எதிரே ஆறுதல் தேடி செல்லும் மனது சொன்னால் கேட்குமா தன் இணையை தழுவிக் கொண்டது...
விழிகளில் கண்ட ஈர்ப்பு காந்தமாய் ஈர்த்துக் கொண்டது. அவனின் வேதனை நிறைந்த கண்களில் தன் விழிகளை கலக்க விட்டவள் பார்த்துக் கொண்டே இருக்க " என்ன பேசணும் சொல்லு " என்றான் குரலில் கொஞ்சம் மென்மை கலந்திருந்தது.
" இப்படியே பேசனுமா " நித்யாவின் அண்ணன் என்ற உணர்வில் மட்டுமே பார்த்தவளுக்கு திருமணம் என்ற அதிர்ச்சியே பெரியதாக இருந்தது அவனிடம் பேசி அவனின் மன நிலையை அறிய வந்தவள் தன் மனதில் இருக்கும் குழப்பத்தை சரி செய்ய தவித்துக் கொண்டிருப்பவளுக்கு இப்போதைய அவனின் நெருக்கமும், பார்வையும், பேச்சும் புதிய உணர்வுக்கு கூட்டிச் சென்றது.
" எனக்கு நல்லா வசதியா தான் இருக்கு " இயல்பாகவே பேசினான். இவளுக்கு தான் அவஸ்தையாகவே இருந்தது. நன்றாக பந்தலில் சாய்ந்து கொண்டவன் அவன் பிடியை விடாமலே சற்று நிமிர்த்தி தன் முன்னே நிற்க வைத்து கொஞ்சம் பந்தலில் சாய்த்தவன் " இப்போ பேசு " என்றான்.. முன்னே இருந்ததுக்கு இது கொஞ்சம் பரவாயில்லை, கையை இடையில் இருந்து எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு...
அவனுக்கு அவள் மேல் உள்ள உரிமை, நேசம் குடும்பமே திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்ட பிறகு இவளிடம் எதற்கு சம்மதம் இவளுக்கு எப்போ நியாபகம் வருதோ வரட்டும் என்று துணிந்து விட்டான் மிகிரான்.
" என்ன செய்தாலும் விட போவது இல்லை என்பது போல் இருந்தது அவன் பிடி. சீக்கிரம் பேசிவிட்டு நகர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தவள்.
"அது எனக்கு கனவு வரும் அடிக்கடி சின்ன வயசுல விளையாடினது, பேசுனது ஆனால் நியாபகத்துல இருக்காது சொன்னாலும் வீட்ல திட்டுவாங்க நான் சொல்லாம மறச்சிடுவேன். இப்போலாம் அடிக்கடி ஒருத்தர் கனவுல வராரு நல்லா பேசுறாரு. என் பக்கத்துல தான் இருக்கேனு சொல்றாரு, ஆனால் யாருனு தெரியல கனவுல தெரியுற முகம் கண் விழிச்சா தெளிவா தெரியல. தாரிகாவுக்கு தெரியும். அது
யாருனு கண்டு பிடிக்கணும் "...
இவனுக்கு புரிந்து விட்டது அவள் கனவில் வருவது தன் முகம் தான் இவளால் தான் உணர முடியவில்லை. சீக்கிரமே இவளுக்கு பழைய நினைவுகள் வந்து விடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது ஆனால் அதையும் மீறி எதோ ஒரு பிரச்சனை இருக்கிறது அதை தான் கண்டு பிடிக்க துடித்துக் கொண்டிருக்கிறான். வேறு என்ன சொல்கிறாள் பாப்போம் என்று மனதில் பேசிக் கொண்டவன்.
" ம்ம் கண்டு பிடிச்சி என்ன பண்ண போற " மென்மை இல்லாமல் ஒலித்தது அவன் குரல்...
அவன் பேச்சில் முழித்தவள் " கனவுல வந்து பக்கத்துல இருக்கேன் பாருன்னு சொல்றாரு அதான் கண்டு பிடிக்கலாம்னு ஐடியா பண்ணோம்"
அவள் அவளுக்கு உதவியர்கள் பெயர்ப் பட்டியலை சொல்ல, மிகிரனுக்கோ சிரிப்பு வர, இது வரை அவன் சிரித்ததை முதன் முறை பார்த்தவள் அவளை அறியாமல் ரசிக்க, அவள் பார்வையில் தெரிந்த மாற்றத்தை கண்டவன் வலது கண்ணினை அடித்து சிரிக்க, அவனின் புது அதிரடியில் மீன் போன்ற விழிகளை இன்னும் பெரிதாக்கி பார்த்தாள் அதிர்ச்சியில்....
இவர்களின் காதல் காட்சிகள் இன்னும் தொடரும் அடுத்த அத்தியாயங்களில்.....

Last edited: