My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன் - பாகம் 12

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
என் எண்ணத்தில் வண்ணம் சேர்த்த நிலவே உன்னைக் காணவே தினமும் வருகிறேன் கனவுலகிற்கு....

..... கனலியின் கனவு மொழி....

பாகம் -12

கோவிலை விட்டு கடைக்கு வந்த சக்கரை மிகிரனிடம் நல்ல பெயர் எடுக்க அவன் வருவதற்குள் அனைத்து வேலை களையும் முடித்து வைக்க, அவனுக்கோ என்னைக்கும் இல்லாமல் இன்று புதிதாய் தெரிய அவனுக்ku சந்தேகம்

"என்ன சக்கரை திட்டு வாங்கிட்டு அப்படியும் அரை, குறையா செஞ்சு வைப்ப இன்னைக்கு புதுசா வேலைலாம் சரியா செஞ்சு முடிச்சிருக்க என் முகத்தை வேற உத்து உத்து பார்க்குற என்ன இதெல்லாம் "......

"ஏன்னா இப்டி பேசுற எனக்கும் நீ சொல்றத செய்ய ஆசை தான் ஏதோ ஒன்னு தடங்களா வந்துடும் இன்னைக்கு அம்மா சொன்னாங்கனு கோவிலுக்கு போய்ட்டு நல்லா வேண்டிட்டு வந்தேன் அதான் நீங்க வரதுக்குள்ள முடிச்சி வைக்கலாம்னு செஞ்சா சந்தேக படறீங்க ".....

சக்கரை ஒன்னும் வேலை தெரியாதவன் இல்லையே கொஞ்சம் விளையாட்டுத் தனம் அவ்ளோ தான், ஒருவன் எப்பவும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே மாற்றம் வர தானே வேணும் இதுவும் நல்ல மாற்றம் தானே

"சரி டா ஒன்னு சொல்ல கூடாது உடனே சரிக்கு சமமா சண்டை போட வந்துடிவியே, இப்டியே இரு வேலை கத்துக்கோ சரியா "....

"ம்ம் சரிண்ணே "....

"ம்ம் " என்றவன் பேட்டரி ஒன்றிணை சரி பார்த்துக் கொண்டிருக்க அதில் இருந்த தூசி அவன் கைகளில் ஒட்டிக் கொண்டது அதை பார்க்காமலே முகத்தை துடைக்க தாடியிலும் தூசி, அதை பார்த்த சக்கரை ஓடி வந்து துடைத்து விட்டான் அதே சாக்கில் மீசை பக்கத்தில் மச்சம் இருக்கா என்று பார்த்தான் முகத்தில் தாடி இருந்தால் பார்த்து விடலாம் தாடியில் அல்லவா முகத்தை வைத்திருக்கிறான் எப்படியோ மச்சம் சிறிது தெரிவது போல் இருந்தது இதற்கு மேல் பார்த்தால் தொக்காக மாட்டி விடுவோம் என்பதால் கை கழுவி வருகிறேன் என வெளியே வந்தவன் போனில் அழைத்தான் கனலிக்கு

இதற்காகவே காத்திருந்தவள் போல உடனே அழைப்பை ஏற்றவள் "சக்கரை சொல்லு டா என்ன ஆச்சு "....

"அக்கா மச்சம் லைட்டா தெரியுது, தாடிக்குள்ள போய் தான் பார்த்தேன் எனக்கென்னமோ அண்ணன் தான் உன் கனவுல வர மகியா இருக்கும்னு தோணுது, அண்ணன் தாடி எடுத்தா கண்டிப்பா நீ அவர் அழகுல மயங்கிடுவ"...

"டேய் போதும் நிறுத்து அழகுல மயங்கிடுவேனாம் ல பேசிட்டே போற நான் கண்டு புடிக்குறேன் இரு உன் அண்ணன் கடைல தான் இருப்பாரா, எவ்ளோ நேரம் இருப்பாரு, நான் ஆபீஸ்ல பெர்மிஷன் கேட்டுட்டு வரேன்"...

"வேலை முடிஞ்சுடுச்சி வெளியே போய்ட்டு திரும்ப வருவாரு நான் வந்ததும் சொல்றேன் "...

"ம்ம் சரி டா வச்சிறேன்"...

வேலையை பார்த்து கொண்டே தாருவிடம் நான் சாப்பிட்டு முடிச்சதும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்டி தல வலிக்குது

"சரி டி நான் பார்த்துக்கறேன்".… இரவு சரியாக தூங்குவது இல்லை, சரியாக சாப்பிடுவதும் இல்லை கோவமாக சென்றவன் இவளின் தூக்கம், பசி எடுத்து சென்று விட்டான் திட்டினாலும் அவனை கண்டு பிடிக்க வேண்டும் இத்தனை வருட அவன் காதலுக்கும், பாசத்திற்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் நினைத்துக் கொண்டே அமர்ந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கியும் போனால்..

சக்கரை சொன்னது போல கனலிக்கு மிகிரன் கடையில் இருப்பதை சொல்ல தலைவலி தாங்க முடியவில்லை ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடறேன் கொஞ்சம் சமாளிச்சிக்கோ என சொல்லியவள் மிகிரனை பார்க்க கடைக்கு வந்தால், பேட்டரிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான் இவள் உள்ளே போனதும் பார்த்தவன் சக்கரையிடம் விவரம் கேட்க

"அவங்க உங்க கிட்ட தான் பேசணும்னு வந்திருக்காங்க"....
அவ எதுக்கு என்னை பார்க்கணும், அன்னைக்கு வீட்ல விட்டுட்டு வந்தோம் அதுல எதனா பிரச்சனையா இருக்குமா, எதுக்கு நாம தேவை இல்லாம யோசிச்சிட்டு, அதான் வந்துட்டாளே சொல்லட்டும் என்னனு,
"சரி வர சொல்லு "....
பக்கத்தில் வந்து குரலை செருமியவள் "உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் "....

கனலியின் மென்மையான குரல் அவன் செவிகளை தீண்ட க திரும்பியவன் அவள் முகம் பார்த்தான். குழந்தையின் முகத்தைப் போன்று இருந்தது பளிச்சென இருந்தால் பால் போன்ற நிறம் குட்டி கருப்பு பொட்டு, முகத்தை சற்று குனிந்தார் போல இருந்தது என்னிடம் பேச தயங்குகிறாள் ஆனால் சொல்லவும் வேணும் அப்படி இருந்தது இவளின் நிலை, ஆரஞ்சு நிற சுடி தார் இன்னும் அவளை அழகாக காட்டியது

"என்ன கேட்கணும் " இயல்பாக தான் கேட்டான், இவளுக்கோ பயம் தொற்றிக் கொண்டது அவனின் குரலில் கோவம் இருப்பதாய் இவளே நினைத்துக் கொண்டாள்

"அது வந்து " அவள் பேச தயங்குவதை புரிந்தவன் உட்கார வைக்கலாம் என்று நினைத்து அவள் பக்கத்தில் நாற்காலியின் மேல் உள்ள பேட்டரியை எடுக்க, அந்த சத்தத்தில் மிரண்டவள் கால் தடுமாறி மிகிரன் மேல் சாய அவசரமாக பேட்டரியை வைத்தவன் திரும்பவும் அவள் மேல் சாய்ந்தவளின் திடீர் அதிர்ச்சியில் பக்கத்தில் பிடிக்க எதுவும் இல்லை என்பதால் அவனும் பின்னோக்கி சாய இருவரும் கீழே விழ மிகிரனின் மேல் விழுந்து அவன் கன்னத்தில் படர்ந்த தாடியின் மேல் இவளின் முகம் மோதியது அதிர்ச்சியில் விலகி

"சாரி சாரி சாரி " கூறியவள் அவன் முகம் பார்க்க அப்போதும் எந்த உணர்வும் காட்டாது இருந்தான். எழுவதற்கு முயலும் நேரம் மச்சம் நியாபகம் வர அவன் மேல் படுத்திருப்பதை மறந்து விட்டு இரு கைகளால் அவன் முகத்தை பிடித்தவள் மீசை, தாடியை ஒதுக்கி பார்க்க முயல திடீரென நியாபகம் வந்தவள் அவன் முகம் பார்க்க இவள் என்ன செய்கிறாள் என அவனும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் "அச்சோ இவர் என்ன அமைதியா பார்த்துட்டு இருக்காரு" மனதிலே நினைத்தவள் நாம இவர் மேல படுத்திருக்கோமே உடனே விலகி எழுந்திருக்க.....

ஆபிஸில் சேரில் அமர்ந்து கொண்டே தூங்கியவள் பதறி எழுந்தால் "சே கனவா, அதுவும் அவர் மேல விழுந்து அய்யோ, ஏன் இப்டிலாம் கனவு வருது திரும்பி பார்த்தால் யாரும் பார்க்கல, உஃப் என பெரு மூச்சு விட்டவள் இப்போ நாம கடைக்கு போகலாம்னு இருந்தோம் ஒரு வேளை கனவுல நடந்தது நிஜமாவே நடந்துடுமா, என் மகி இவரா கண்டிப்பா இருக்காது. எதுக்கும் போய்ட்டு கான்பார்ம் பண்ணனும் "...

தனக்குள்ளே பேசி முடிவெடுத்தவள் தாருவிடம் சொல்லி விட்டு அவசரமாக ஆட்டோ பிடித்து மிகிரனின் கடைக்கு வந்தாலள்...

கடையின் வாசலில் நின்று கொண்டு போன் பேசுவது போல சக்கரை யாரையோ பார்த்துக் கொண்டுருந்தான் இரண்டு முறை குரல் கொடுத்தும் அவன் இவளை பார்க்கவில்லை, இவனை வந்து பார்த்துக்கலாம் முதல்ல வந்த வேலையை பாப்போம், கடையின் உள்ளே சென்றால் மிகிரன் பேட்டரி பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்....

குரலை செருமியவள் "நான் உங்க கிட்ட பேசணும்"... அவன் வேலையை கவனிப்பதில் மும்முரமாக இருக்க இவள் பேசியதை கவனிக்க வில்லை அதற்குள் அவனுக்கு போனில் அழைப்பு வரவே எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் இவளும் அவன் வருவான் என்று எதிர் பார்த்து காத்திருக்க சிறிது நேரம் கழித்து சக்கரை உள்ளே வந்து
"என்ன அக்கா, எப்போ வந்த என்னை பார்க்காமலே உள்ளே வந்துட்ட " அவன் சொன்னதும் இவள் அவன் அருகே வந்து தலையை கொட்டியவள்

"டேய் நீ லவ் பண்றியா" இந்த கேள்வியை எதிர் பார்க்காதவன் முழித்துக் கொண்டே தலையை தேய்த்துக் கொண்டவன்

"எப்படி கா தெரியும் "...

"எப்படி தெரியுமா, நான் வந்து பார்த்தது, கூப்பிட்டது எதையுமே தெரியாம போன் பேசுற மாதிரி பார்த்துட்டு இருந்தியே அதான் கெஸ் பண்ணேன், அப்போ நான் நினைச்சது சரி தான்"...

"அய்யயோ நீங்க சும்மா கேட்டீங்களா, நான் தான் உளறிட்டேனா "... அவன் பேச்சில் சிரித்தவள்.... கைப்பையில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்து விட்டு

"போடா சக்கரை நான் வந்து பார்த்து பேசுறேன் அவர் கவனிக்காமலே போன் பேசிட்டே கிளம்பிட்டாரு, என்னாலே அவர நிறுத்த முடியல, பார்த்தாலே பயமா இருக்கு, குரல் வர மாட்டுது " பேசிக் கொண்டே கண்கள் கலங்கி விட்டது.

"அக்கா உனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல, நான் சொன்னாலும் நம்ப மாட்ற உனக்கு எங்க அண்ணன பிடிக்கலையா "...

"டேய் பிடிக்குறது, பிடிக்கலைனு இல்லை... அவர் மேல மரியாதை இருக்கு, நித்யா நல்லா இருக்கனும், பாவம் இவரும் அவ மேல எவ்ளோ பாசம் வச்சிருக்காங்க, ஆனா என் விஷயம் வேறடா சின்ன வயசுல இருந்தே என் மேல அன்பு வச்சி இத்தனை வருஷம் காத்திருந்து கனவுல வந்து சொல்றாரு, எனக்கு தான் எல்லாம் மறந்து போச்சு, எதுவும் புரிய மாட்டுது, இவர் என் கிட்ட பேசுனது கூட இல்லை, விடு டா இனி நான் தேட போறது இல்லை மகி க்கு நான் வேணும்னா வரட்டும் என் கண் முன்னாடி வரட்டும், சரி நான் கிளம்புறேன் "... அதை சொல்லி முடித்ததும் கண்ணில் கண்ணீர் இப்பவோ, அப்பவோ கீழே வரும் நிலையில் இருக்க

அவள் உடைந்து அழுகிறாள் என்பது தெரிகிறது அவள் பேச்சில்

"அக்கா அழாத உன் நல்ல மனசுக்கு சீக்கிரமே மாமா வருவாரு, நான் சொன்னது நடக்கும் பாரு, வா ஆட்டோ பிடிச்சி கொடுக்குறேன் போய்ட்டு போன் பண்ணு"

சொல்லியவன் ஆட்டோ வர வழைத்து ஏற்றி விட்டவன் மிகிரனின் அம்மாவிற்கு அழைத்து கனவு, கனவில் நடந்த காதல் கதையினை சொல்லாமல் மச்சம் பற்றி மட்டும் கேட்க அவரும் சிறியதாக இருந்தது இப்போ அவன் தாடியில் எதுவும் தெரியவில்லை என்று கூற இவனுக்கு மட்டும் உறுதியாக புரிந்தது இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ பிறந்தவர்கள் நிச்சயம் சேருவார்கள் என்று நம்பிக்கை கொண்டான், கனலியிடம் பேசியதை அம்மா, நித்யா, தாருவிடம் சொல்லி இந்த பிரச்சனையை சீக்கிரம் சரி செய்து இருவரையும் சீக்கிரம் சேர்க்க சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான் ...

கனலி நேராக அலுவலகம் செல்லாமல் போனில் அரை நாள் விடுப்பு சொல்லியவள் நூலகம் சென்றவள் சிறிது நேரம் புத்தகம் வாசித்து விட்டு தெளிவுடன் வெளியே வந்து கடையில் ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை காவியம் 'எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்', மற்றும் சிக்மண்ட் பிராய்டின் உளவியல் சம்மந்தமான புத்தகம் வாங்கி கொண்டு கிளம்பினால் வீட்டிற்கு...

வீட்டிற்கு வந்து தாருவிடம் பேசி விட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தவள், டீ போட்டு எடுத்துக் கொண்டு, அம்மாவிடம் சொல்லியவள் மாடியில் அமர்ந்து கொண்டு புத்தகத்தை படிக்க தொடங்கினால் ஆர்வமாய்....

குல தெய்வம் கோவிலில் மிகிரனையும், கனலியையும் பார்த்து பூசாரி இவர்கள் ஒன்றாக வாழ பிறந்தவர்கள், சீக்ரம் திருமணம் நடத்தி வைக்க சொல்லி அருள் வாக்கு சொல்ல, இவர்கள் இருவர் மட்டும் முழித்துக் கொண்டு நிற்க மற்ற அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்...

என்ன நடந்திருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்... படித்துவிட்டு விமர்சனங்கள் கருத்துக்களை கூறுங்கள்....
 
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top