My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

மையாலுற்றேன் மையல் - நிறைவு

IVNP05

Member
Joined
Mar 12, 2025
Messages
25
மையல் நிறைவு

"நீ இரண்டு பேரும் தனித்தனின்னு எல்லாம் பார்க்கவே இல்லை. கரெக்டா.. இரண்டு பேருமே உன்னைப் பொறுத்தவரைக்கும் அனந்த கிருஷ்ணன் தான். அந்தளவுக்கு அவனை உனக்குப் பிடிச்சுருக்கு. சில விஷயங்கள் நடந்தது நடந்துப் போச்சு. உன்னோட உதாசீனப் பேச்சில வீட்டுல இருக்குறவனும் காயப்பட்டான் தான். இதோ இப்பவும் நீ எடுத்தெறிஞ்சு பேசுறதால அவன் வருத்தப்படுறான் தான். லவ் பண்ணுற பொண்ணுகிட்ட உரிமையாய் அவன் விளையாண்டுட்டான். உனக்கு அவனை பிடிக்கும்தானே.. அந்த பிடித்தத்தை விட்டுட்டு இப்போ ஏன் நடந்ததைப் பிடிச்சுட்டு தொங்கிட்டு கோபப்படுற அபூர்வா. வேண்டாம். உன் தனிமைக்குத் துணையாய் அவன் இருந்தப்போ நீ அவனை விலக்கி வச்சுடலாம்னு எப்பவாவது நினைச்சுப் பார்த்தியா? இல்லைதானே. இப்போ மட்டும் ஏன் விலக்கி வைக்கப் பார்க்குற? வேண்டாம் டி. அவன் கல்யாணத்துக்கு கேட்ட போது நீ இப்படியொரு சிக்கல் இருக்குறதை சொல்லியிருக்கலாம்ல. நீ சொல்லாதது ஏன்? சில கேள்விகளுக்கு விடைகள் தெரிஞ்சுக்கிறதுல இல்லை சுவாரஸ்யம். அந்த கேள்வியோடயே கடந்து போறதுல இருக்கு ஒருவித சுவாரசியம். அப்படிப் பார்த்தால் அவன் ஏன் இப்படிப் பண்ணான்ங்கிற கேள்விக்கான பதிலை அவன்கிட்ட தேடாத. அந்த கேள்வியையே விட்டுட்டு வாழ்க்கையை சுவாரஸ்யமானதா மாத்திக்க பாரு" என்று அவன் சொல்ல அவளோ "பேசிட்டேல்ல கிளம்பு" என்று முறைத்திருந்தாள்

"போடிங்" என திட்டிய படி அவன் வெளியே வர "வொய் ப்ளட் சேம் ப்ளட் அதான டா.." எனச் சொல்ல "அதேதான்" என்று காதினைத் தடவிக் கொண்டான்.

"ப்யூட்டிக்கு கோபம் வருது. விடு கோபம் வராமல் செஞ்சுடலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை" என்று சொன்னவன் "அவளை டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிட்டேன். நைட்டு வீட்டுக்குப் போகட்டும். எதுவா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம். நானும் கிளம்புறேன். பசிக்குது. நேத்து மார்னிங் சாப்பிட்டது" என்று அவன் கொஞ்சம் சத்தமாகப் பேசிவிட்டு இவனிடம் கண் காட்டிவிட்டு சென்றான்.

டிஸ்சார்ஜ் செய்துவிட்டு இனியன் அவளை வீட்டில் டிராப் பண்ணிட அவள் எதுவும் பேசாமலேயே உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

சில நாட்கள் கழித்து அவளது முகத்தில் அறைந்தது அவளுக்கு மட்டுமே உரித்தான தனிமை.

"கிருஷ்! இப்படி நீங்க பண்ணியிருக்கக் கூடாது க்ருஷ். நான் பாவம்னு ஒரு செகண்ட் கூடவா நீங்க யோசிக்கல. உங்ககிட்ட இருந்து சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை" அவள் பாட்டுக்குப் புலம்பினாள்.

"இனி எனக்கு சாப்பாடு செய்ய அதை ஊட்டிவிட யாரும் இல்லை க்ருஷ். எனக்கு நீங்க வேண்டும் க்ருஷ் க்ருஷ்" புராணம் பாடிக் கொண்டிருந்தாள். அவளது விழிகள் இரண்டும் அழுதழுது களைத்துப் போயிருந்தது.

அவன் வீசிய அந்த சிவப்பு நிறச் சட்டை அவள் அறை வாசலின் ஓரத்திலே கிடந்தது. அதை எடுத்து அவன் வாசத்தினை ஆழ்ந்து சுவாசித்தாள்.

"க்ருஷ்.. என்கிட்ட வந்துடுங்க. என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானே" என அவள் அழுது அரற்றியபடியே அந்த சட்டையை தன் மேனியில் போர்த்திக் கொண்டான்.

நேற்றைய நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகம் வந்தது. கண்ணீரும் சேர்ந்தே வந்தது

"க்ருஷ்" என கொஞ்சியபடி அந்த சட்டையின் நுனிப்பகுதியில் முத்தமிட்டாள். அதே சட்டையில் கண்ணீரைத் துடைத்தவள் அந்த வெற்றுத் தரையில் அவன் சட்டையை மட்டும் துணையாகக் கொண்டு படுத்துவிட்டாள்.

அவள் களைப்பிலேயே உறங்கியும் போய்விட்டாள். அவள் உறங்கியிருந்தாலும் அவளுக்குள் இருக்கும் க்ருஷ் பையித்தியம் இன்னும் உறங்கவே இல்லை. அவள் வாய் அசைந்து அசைந்து க்ருஷ் க்ருஷ் என்று குழறி பேசிக் கெண்டிருந்தாள்.

பின்னாடி பைப் பிடித்து ஏறி உள்ளே நுழைந்தவன் வெற்றுத் தரையில் படுத்திருந்தவளைக் கண்டு மனம் வெதும்பிப் போனான்.

அவன் செய்தது தவறுதான். பெண்ணின் மனம் பல விதமான நூதன உணர்வுகளால் நிரம்பியது. அதில் விளையாடிப் பார்த்தது பெருள் தவறுதான்.

அந்த தவறுக்கான தண்டனையை அவன் காலம் முழுக்க ஏற்றுக் கெள்ளத் தயாராகத்தான் இருக்கின்றான். அவளல்லவா அந்த தண்டனையை உடனிருந்து தர வேண்டும். அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தான். இதழ்கள் மட்டும் அசைகிறதே என்று எட்டிப் பார்ந்தான் அவ்விதழ்களுக்கு அருகே செவியைக் கொண்டுப் போய் கேட்க க்ருஷ் என அழைத்தாள் பெண்ணவள்.

அதில் அவனது மனம் ஆறுதல் பெற்றுவிட அபூ என அவள் செவியினோரம் முணுமுணுத்தான்.

"வந்துட்டயா க்ருஷ்"

"உன்னை விட்டுட்டு போனால்தானேடி நான் திரும்ப வர்றதுக்கு. நான்தான் எப்பவுமே உன்கூடத்தானே இருக்கேன்" அவள் தோள்களைப் பற்றி அணைத்துக் கொள்ள அவளும் பட்டென்று விழித்துக் கொண்டாள்.

"நீயா? நீ ஏன் இங்க வந்த.‌முதல்ல வெளிய போ"

அவளது காலின் மீது தலைவைத்தவன் இருகரத்தாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டான்.

"என்னை மன்னிச்சுடு ப்யூட்டி. உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்னு புரியுது. தண்டனை எது வேணும்னாலும் குடு. நான் ஏத்துக்கிறேன்டி. ப்ளீஸ் என்கூட பேசாமல் மட்டும் இருந்திடாத"

"காலை விடுங்க க்ருஷ்"

அந்த பெயரை கேட்டதும் கண்களில் மின்னல் வந்து போனது.

"மன்னிச்சுட்டேன் சொல்லு"

"க்ருஷ் நீங்க பண்ணது தப்புதான் க்ருஷ்"

"தண்டனை குடுடி. மனசார ஏத்துக்கிறேன்"

"தண்டனையா? ம்ம் என்ன தண்டனை கொடுக்கலாம்.. எனக்கு பசிக்குது க்ருஷ்"

"இதோ நொடியில உனக்குத் தேவையானதை செஞ்சு தந்துடுறேன்" கிச்சனுக்குள் சென்றான் அனந்த கிருஷ்ணன்.

அவளுக்குத் தேவையானதைச் செய்துக் கொண்டிருந்தவன் பின்னால் "அனந்தா" என கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தான்.

வெறும் அந்த சிவப்பு நிறச் சட்டை மட்டுமே அவள் மேனியை அலங்கரித்திருந்தது.

எச்சில் விழுங்க பார்த்த அனந்தன் சட்டென கரண்டியை இறுகப் பற்றியபடி அவளுக்கான உப்புமாவைக் கிளறினான்.

'ஏதோ டெஸ்ட் வைக்குறா போலடா. ஸ்டெடியாய் இருந்துடு. இல்லைன்னா பின்னாடி பிரச்சனை ஆகிடும்' என்று நினைத்தவன் "ஒரு பைவ் மினிட்ஸ் ப்யூட்டி. நீ போய் வெளிய வெயிட் பண்ணு நான் கொண்டு வர்றேன்" என்று அவளைத் துரத்தப் பார்த்தான்.

அவன் நிலை புரியாத அவளோ "இல்லை அனந்தா. நான் இங்கேயே இருந்ததுக்கிறேன்" அவனை ஒட்டி அவள் நின்றுக் கொண்டாள்.

"கொஞ்சம் தள்ளி நில்லு ப்யூட்டி" கிண்டியபடியே சொல்ல அவளோ அவன் இடையில் கைவைத்து "இதுவே எனக்கு ஓகேதான் க்ருஷ்" என்றவள் சட்டென "ஆஹ் அய்யோ க்ருஷ் பின்னாடி வலிக்குது" என்று அலறினாள்.

அவன் அறிவானே அந்த காயம் பற்றி.

"ஏய் டேப்லெட்ஸ் வேற இருக்கும் தானே. இரு நான் கொண்டு வர்றேன்"

"நீ கார்ல இருந்தப்போ நடந்துக்கிட்ட அனந்த க்ருஷ்ணனாவே இருக்கலாம்

"வாட்?"

"புரியலைன்னா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது போடா" என்று உதடு சுழித்துவிட்டு அவள் வெளியேறிவிட்டாள்.

அதுவரை அவள் சொன்னது சரியாக புரியாத அவனுக்கு இப்போது அவள் என்ன சொன்னாள் என்பது புரிந்துப் போனது.

"ப்யூட்டி பெயின் கில்லர் கேட்குறாடா" என்று ஓடி அவன் வெளியே வர அவள் அங்கில்லை. டைனிங் டேபிளில் சிவப்பு நிறச் சட்டை மட்டும் அநாதையாக கிடந்தது.

சட்டையும் கழட்டிட்டு எங்க போனாள்? என்று பார்க்க வாசல் கதவு திறந்திருந்தது.

டெம்ப்ட் ஆக்கிவிட்டுட்டு ஓடிட்டா.. திட்டியவன் வாசலில் இருந்து இறங்கி வந்து அவளுக்கு அழைத்தான்.

"இனியன் வீட்டுல இருக்கேன் க்ருஷ்" என்று பதவிசாக அவள் சொல்ல சத்தியமாக அவனுக்குக் கோபம் எல்லாம் வரவில்லை.

அவனும் இனியன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அங்கே அவனின் அம்மா அப்பா இனியன் அவர்களோடு இவளும் அமர்ந்திருந்தாள்.

"வாங்க டாக்டர் சார். சொன்னது போலவே எங்க வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க. வாழ்த்துகள்" இனியனின் அப்பா வாழ்த்திட "தாங்க்ஸ் அங்கிள்" என்றவன் "கையோட கல்யாணத் தேதியைக் குறிச்சுக் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்று வாய் திறந்திட "அவசரப்படாதீங்க டாக்டர். உங்க வீட்டுல இருந்து அப்பா அம்மா வந்து முறைப்படி பேசணும். அடுத்து கல்யாணத் தேதி குறிச்சுடலாம்" என்றதும் "நாளைக்கே கூட்டிட்டு வர்றேன் அங்கிள்" என்றான்.

அவர்களிடம் பேசிவிட்டு உப்புமாவைச் சாப்பிட அவளை அழைத்து வந்தான்.

"ப்யூட்டி" உள்ளே வந்ததும் அவன் குரல் மாறிட "என்ன அனந்த கிருஷ்ணா" அவளும் அவனைப் போலவே பேசிக் காட்டினாள்.

"பெயின் கில்லர் தரட்டுமா ப்யூட்டி"

"வலியில்லையே டாக்டர் சார்"

"வேற வழியே இல்லை.. பெயின் கில்லர் குடுக்கத்தான் செய்வேன்" என்றவன் அவளது இதழ்களை ஆக்ரமித்திருந்தான்.

வலியெல்லாம் குறைந்து அவள் அவன் கைகளிலேயே துவண்டப் பின்னர் தான் அனந்தன் விடுவித்தான்.

"சாரிடி ஓவர் டோஸ் ஆகிடுச்சு. இதுக்கு மேல கல்யாணத்துல தான் பார்க்கணும்" என்று சொல்ல அவள் சிரித்துக் கொண்டாள்.

நாட்கள் கடந்தது.

திருமணம் முடிந்ததற்கு அடையாளமாய் அவள் கழுத்தில் பொன் தாலி இருந்தது.

ஈவினிங் ஒரு எமெர்ஜென்ஸி என்றதும் உடனே கிளம்பிட அவள் மட்டும் அந்த அறையில் தனித்திருந்தாள்.

இரவு நேரம் சென்ற பின்னரே உள்ளே நுழைந்தான்.

அவனைக் கண்டதும் ஓடி வர அவளை விலக்கி நிறுத்தியவன் "குளிச்சுட்டு வர்றேன் ப்யூட்டி. கேஸ் பார்த்துட்டு அப்படிறே வந்துட்டேன்" அவளைத் தாண்டி குளியலறை சென்று குளித்து கருநீல நிறச் சட்டை அணிந்து வர அவளோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இப்படிப் பச்சையாய் சைட் அடிக்காத டி. எனக்கு என்னென்னவோ செய்யுது"

"என்னவோ செய்யுதுன்னு சொல்லிட்டே இருக்கப் போற போல க்ருஷ் நான் தூங்கப் போறேன்" என்றதுமே அவளது முந்தானை அவன் கையில் சிக்கியது.

"பெயின் கில்லர் போட்டுக்கலாமா?"

"போடலாம் போடலாம்" அவளது பாவனையில் சொக்கியவன் அவளுடனே கட்டிலில் சரிந்தான்.

மறுநாள் அவனது டேபிளின் மேல் அபூர்வா என்று கையெழுத்திட்டு அவளது புத்தம் இருந்தது.

"ஆட்டோகிராப் கேட்டீங்க இல்லையா. அதான் போட்டுக் கொடுத்துட்டேன். படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க" எனச் சொல்லவும் எடுத்துப் பார்த்தான்.

மையாலுற்றேன் மையல் என்றிருந்தது.

அந்த தலைப்பே அவனுக்கு கதை சொன்னது.

"நம்மளோட கதையாடி"

"ஓரளவுக்கு நம்மளோடது. மிச்சம் என்னோட கற்பனை" என்றாள்.

"உண்மையிலேயே உன் மையின் மூலமா தான் எனக்குள்ள மையல் வந்தது அபூர்வா. கேட்கவே அது அபூர்வமானதாகத்தான் இருக்கும். பட் பேக்ட் அதுதான். இந்த மையல் எப்பவும் என்னை விட்டுப் போகாது" என்று சொல்லி அவள் நெற்றி முட்டினான்.

"தாங்க்ஸ் பார் த புக். அண்ட் மறக்காமல் ஆட்டோகிராப் வேற போட்டுத் தந்துட்டீங்க. உங்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் குடுக்கணுமே என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

"நான் அனந்தனைப் பார்க்கணும் "

"நான்தான் டி அது"

"இன்னொரு அனந்தனை"

"ஓஹ் அவ்வளவுதானே" என்றவன் சட்டையை கழட்டி வீசிவிட்டு வெறும் ஷார்ட்ஸ் உடன் நின்றான்.

"இவன்தான் அந்த அனந்த கிருஷ்ணன். பார்த்துக்கோடி" எனச் சொல்லவும் அவனை நெருங்கியவள் "லவ் யூ க்ருஷ்" என்றாள்.

"மீ டூ ப்யூட்டி" என கொஞ்சித் தீர்த்தவன் "அனந்தனைக் கூப்பிடுறன்னா பசிக்குதாடி" என்று கேட்டு அவளுக்குப் பிடித்ததைச் செய்துக் கொடுத்தான்.

அனந்த கிருஷ்ணன் அவளது ஆசையை நிறைவேற்ற இன்னொரு அவதாரம் எடுத்தான். அதுவும் அதே பெயரிலேயே. அது தவறுதான் இருந்த போதிலும் அது தவறாகப் பார்க்கப் படவில்லை. அவளுடன் இருக்க ஒரு வாய்ப்பை எடுத்துக் கொண்டான். அவளுக்கானதை எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தது அவன்தானே. அவளை தனிமை அண்டாமல் தாய் போல் காத்து நின்றான். அவளுக்காக பைப் ஏறி அத்தனை கஷ்டம் பட்டாலும் அவளுக்கென்று செய்வதில் அவனுக்கு அத்தனை மனநிறைவு.

அதே நிறைவுடன் அவன் வருங்காலத்திலும் இதே மையலுடன் அபூர்வா சிந்தும் மையினையும் அபூர்வாவிடம் இருந்து சிந்தும் பெண்மையையும் பார்த்துக் கொள்வான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை..

..சுபம்..

அழகான காதல் கதை
நல்ல கற்பனை
இறுதி வரை நம்மையும் சேர்த்து நம்ப வைத்து விட்டான் டாக்டர் அனந்தக் கிருஷ்ணன்.
அத்தனை சஸ்பென்ஸ்.

சிறப்பான ஒரு ரொமான்டிக் திரில்லர்.👌👌👌

கிருஷ்ண லீலைகள் மிகவும் சுவாரஸ்யம்.
பேனா மையை மையக் கருவாகக் கொண்டு மையலை மிகவும் நேர்த்தியாக சித்தரித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

உண்மை தான், எத்தனை டெக்னாலஜி வளர்ந்தாலும் இன்னமும் நம் கற்றறிந்த மனங்களும் அமானுஷ்யங்களை நம்பத் தானே செய்கிறது.

அப்படித் தான் இந்த மையிலிருந்து பிறந்து வந்தவனும். நேர்த்தியானக் கதை சொல்லல்.

பாரதி, சரண் இருவரைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.

கதையின் நாயகன் மிக மிகச் சிறப்பு.
சிற்சிலக் கதாப்பாத்திரங்களே ஆனாலும் யாவரும் தத்தம் பாத்திரங்களை சிறப்புடன் செய்து முடித்து கதையின் நாயகியை அழகாகவே சமாளத்திருக்கின்றனர்.

எப்படியோ தனிமையே தவமாகக் கிடந்த அபூர்வாவிற்கு அழகான அன்பானத் துணை கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.

நிச்சயம் இந்த ஆபூர்வாவைப் பற்றியக் கதையின் ஓட்டம் மிகவும்👏👏👏 அருமை.

அபூர்வமானக் கதை ஓட்டம் தான்.

வாழ்த்துகள் பல கோடி

இன்னும் எழுத்துலகில் சிகரம் தொட்டிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐
💐
 
Last edited:

சக எழுத்தாளரின் கதைக்கு
விமர்சனம் செய்த உங்களுக்கு ஒரு வணக்கம் 🙏

மனம் நிறைந்த விமர்சனம்
இன்னும் நான் படிக்க வில்லை.
ஆனால் உங்கள் விமர்சனம் மூலம் கதையை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும்
நீங்கள் வாழ்த்திய கதையின் ஆசிரியருக்கும்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
அடுத்து தங்கள் கதையைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்பமே அசத்தல்.
விரைவில் விமர்சனம் எழுதுகிறேன்
 
அழகான காதல் கதை
நல்ல கற்பனை
இறுதி வரை நம்மையும் சேர்த்து நம்ப வைத்து விட்டான் டாக்டர் அனந்தக் கிருஷ்ணன்.
அத்தனை சஸ்பென்ஸ்.

சிறப்பான ஒரு ரொமான்டிக் திரில்லர்.👌👌👌

கிருஷ்ண லீலைகள் மிகவும் சுவாரஸ்யம்.
பேனா மையை மையக் கருவாகக் கொண்டு மையலை மிகவும் நேர்த்தியாக சித்தரித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

உண்மை தான், எத்தனை டெக்னாலஜி வளர்ந்தாலும் இன்னமும் நம் கற்றறிந்த மனங்களும் அமானுஷ்யங்களை நம்பத் தானே செய்கிறது.

அப்படித் தான் இந்த மையிலிருந்து பிறந்து வந்தவனும். நேர்த்தியானக் கதை சொல்லல்.

பாரதி, சரண் இருவரைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.

கதையின் நாயகன் மிக மிகச் சிறப்பு.
சிற்சிலக் கதாப்பாத்திரங்களே ஆனாலும் யாவரும் தத்தம் பாத்திரங்களை சிறப்புடன் செய்து முடித்து கதையின் நாயகியை அழகாகவே சமாளத்திருக்கின்றனர்.

எப்படியோ தனிமையே தவமாகக் கிடந்த அபூர்வாவிற்கு அழகான அன்பானத் துணை கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.

நிச்சயம் இந்த ஆபூர்வாவைப் பற்றியக் கதையின் ஓட்டம் மிகவும்👏👏👏 அருமை.

அபூர்வமானக் கதை ஓட்டம் தான்.

வாழ்த்துகள் பல கோடி

இன்னும் எழுத்துலகில் சிகரம் தொட்டிட மனமார்ந்த வாழ்த்துகள்💐💐
💐
ஆஹ்... நன்றி நன்றி.. அழகாக
சொல்லிவிட்டீர்கள். தங்களின் வார்த்தைகள் வெற்றி பெற்ற சந்தோசத்தினைத் தருகிறது.. பாரதி சரண் ம்ஹ்ம்.. அது கதைக்குள்ள அவ எழுதுற கதைதானே அதான் அப்படியே விட்டுட்டேன் 🙃
 
அடுத்து தங்கள் கதையைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஆரம்பமே அசத்தல்.
விரைவில் விமர்சனம் எழுதுகிறேன்
உங்கள்
உள்ளம் நிறைந்த விமர்சனத்தை காண
உற்சாகமாக
உள்ளேன் 💐💐💐
 
உங்கள்
உள்ளம் நிறைந்த விமர்சனத்தை காண
உற்சாகமாக
உள்ளேன் 💐💐💐
தொடங்கி விட்டேன்👍
 
நல்ல கற்பனை. சின்ன வயசில டிவில ஜீபூம்பா பென்சில் வச்சு ஒரு சீரியல் வரும்ல... அந்த தாக்கம் இன்னும் உங்க கிட்ட இருக்குதுனு நினைக்கிறன். சிறப்பு ஆசிரியருக்கு வாழ்த்துகள் :)💐💐💐
 
Back
Top