Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,641
111. தேன்சிட்டுகள்.
பெருமாள் பட்டி, துரை இல்லத்திலிருந்து, ரங்கதுரை, ராஜதுரை, ராதாதராணி, சாமிதுரை, சரோஜா சஞ்சனா ஆகியோர் இரண்டு கார்களிலும், ராஜதுரை ஆட்கள் குட்டி யானை டெம்போ வேனில், வெங்கல பாணை உருளி, குண்டான், கரண்டி பித்தளை சாமான்கள், பச்சரிசி, வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ், கரும்பு, காய்கறிகள், தேங்காய், பழம், வெற்றிலை அடங்கிய தாம்பூல தட்டு, பட்டு வேஷ்டி, சட்டை, சேலை என தடபுடலாக எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தனர்.வரும் வழியிலேயே காரையாம்பட்டியில் மணிக்குயில் இல்லத்தில் செல்லமமாள், பூங்குயிலுக்கு பிறந்த வீட்டு பொங்கல் சீராக துணிமணியும், பொங்கல் சாமான்களையும் கொடுத்தனர்.
முன்னிரு வருடங்களும், “ அது தான் வீரன் கொண்டு வந்து கொடுக்கும்ல” என செல்லம்மாள் சொல்லிப் பார்த்தார்.
“ இருக்க்ட்டும் அக்கா, ஒருத்தருக்கு இரண்டு பேரு சீர் செய்யக் கூடாதுண்டா இருக்கு? “ ரங்கதுரை கேள்வி எழுப்ப, அவரும் சரி என்று விட்டார்.
இந்த முறையை ஆரம்பித்து வைத்ததும் செல்வமணி தான். “முத்து அக்கா இருந்தா, பிறந்த வீட்டு சீர் செய்வேன்ல, இப்ப சரோஜாக்கா, ராதா தங்கச்சிக்கு செஞ்சுட்டு போறேன்” என சிலையாக நிற்கும் செல்லமுத்து, ரங்கதுரைக்கும் சேர்த்தே துணி மணி எடுத்து வந்து முறை செய்ய, அவர்களும் பதிலுக்கு செய்ய ஆரம்பித்திருந்தனர்.
மணிக்குயில் இல்த்துக்கு பக்கத்து வீட்டில் இருக்கும், ராஜசந்திரிகாவுக்கும் துரை சகோதரர்கள், நிர்மலா சார்பாக பொங்கல் சீரை கொடுத்து, புதிய வரவான வருண் பாண்டியன், முன்னவன் தீரன் பாண்டியனையும் கொஞ்சி அளவலாவி விட்டே சென்றார்கள். சஞ்சனாவுக்கு தான் கிளம்ப மனமே இல்லை. அகிலை பார்க்கலாம் என கிளம்பி இருந்தது.
உசிலம்பட்டியில் மீனாவுக்கு பொங்கல் சீர் செய்து விட்டு, ராதாவின் கட்டாயத்தின் பேரில் அந்த ஜோடியையும் அழைத்துக் கொண்டு, கருமாத்தூர் ஆதி இல்லதுக்கு கிளம்பினர்.
“ ராஜப்பா, என்ன சித்தி என்னையும் கட்டாயம் வரனுமுண்டு கட்டளை போட்டுருக்கு? எதுவும் பஞ்சாயத்தா? எங்க ஓரண்டை இழுத்த? “ மீனா, சித்தப்பாவை கேட்க,
“புதுசா நான் ஒன்னும் செய்யலை ஆத்தா. அம்புட்டும் வழக்கம் போல தான் நடக்குது” என ராஜதுரை சிரிக்க,
“ அப்ப ஒரண்டை இழுக்கிறது உன் சின்ன மருமகனோ? செல்வம் மாமாவும் வர்றதைப் பார்த்தா, அப்படி தான் தெரியுது” என தன் யூகத்தைச் சொல்ல
“ உன் கண்ணுள இருந்து எதாவது தப்புமா? வா என்னா பஞ்சாயத்தை கூட்டுறாண்டு பார்ப்போம்” என ராஜதுரையும், சம்பந்திகளை ஆழம் பார்க்க தயாராகவே வந்தான்.
மதிய விருந்து அனைவருக்கும் கருமாத்தூரில் கோதையின் கை பக்குவத்தில் உதவிக்கு ஆட்களை வைத்துக் கொண்டு, மாமியாரும், மருமகளுமாக செய்கின்றனர். செல்வமணி, பூங்குயிலுக்கும் அழைப்பு இருக்க, அக்காவுக்கு உதவ என பூங்குயிலும் கிளம்பி இருந்தாள்.
முன்னதாக முதல் நாளே பாண்டிக் குடும்பத்திலிருந்து முத்துவும், வீரனுமாக, கோதை, பூவு இருவருக்கும் பொங்கல் சீர் செய்திருந்தனர். இன்று பாண்டிக் குடும்பமும் ஹரிணிக்கு சீர் செய்ய, வளையபட்டி செல்கின்றனர்.
இந்த ஒரு மாதத்தில் சித்ரா சந்தோஷத்தில் ஒரு சுற்று பெருத்து, முக மலர்ச்சியோடு பூரிப்பாக இருக்க, இரு பக்க பெற்றவர்களுக்குமே மகிழ்ச்சி.
சித்ரா பிறந்த வீட்டினரை அகமும், முகமும் மலர, புகுந்த வீட்டினரோடு சேர்ந்து வரவேற்றாள்.
சாமி, சரோஜா, சஞ்சனா மூவருமாக ராதாவோடு சேர்ந்து சீர் தட்டுகளை எடுத்து வைக்க, கோதை விருமனுக்கு ரங்கதுரையும், ஆதி சித்ராவுக்கு சரோஜா, சாமியை கொடுக்கச் சொல்ல, “தாய் தகப்பன் ஸ்தானத்திலிருந்து நீங்களே கொடுங்க” என சரோஜா உணர்ச்சி வயப்பட்டார்.
“மதினி, இதில என்ன செண்டிமெண்ட் வேண்டி கிடக்கு. உங்க மகளுக்கு உங்களை விடவா ஒருத்தர் நல்லது நினைச்சிட முடியும். ஆளுக்கு ஒண்ணா தூக்கி கொடுப்போம். நீங்களும் கொடுங்க” என ராஜதுரை சொல்ல,
“அதெல்லாம் இல்லை ராதா தான் கொடுக்கணும்” என சரோஜா பிடிவாதம் பிடிக்க, “நீங்க எடுத்து கொடுங்க, நான் கொடுக்குறேன்” என டீல் போட்டு, குடும்பமாக சித்ராவுக்கு சீர் செய்தனர்.
மாமியார்களோடு, சித்ரா உடன் நின்று எல்லோருக்கும் பரிமாற, மீனா எல்லோரோடும் கதையளந்தபடி அமர்ந்திருந்தாள். அவள் மகன் அகிலை, மாமனும் , சித்தியுமாக தூக்கிச் சுமந்தனர்.
“ ஏண்டி நீயும் வந்து பரிமாறினா என்ன? “ பூங்குயில் அழைக்க,
“ போ அத்தை, நைட் ஒரு டெலிவரி கேசு. வீட்டுக்கு வரவே, மூணு மணியியிடுச்சு. ரெஸ்ட் எடுக்கலாமுண்டு பார்த்தா, சித்தி இங்குட்டு கூட்டிட்டு வந்திடுச்சு” என வருந்த,
“ நீ ரெஸ்ட் எடு ஆத்தா, யாரு இன்னும் சாப்பிடலை, உட்காருங்க. நான் பரிமாறுறேன்” என ராஜதுரை எழுந்திரிக்க ,
“ நீ உட்காரு சித்தப்பா. அவ செய்யமாட்டாண்டு தெரிஞ்சு தான் கூப்பிட்டேன். மாமியாரையே ஐஸ் வச்சு வேலை வாங்கிடுவா? நாங்க எம்மாத்திரம்? இப்ப இருக்க பொண்ணுங்கல்லையே சித்ரா தான் பொறுப்பான பொண்ணு அக்கா, நீ குடுத்து வச்சவ தான் ” என பூவுச் சொல்ல,
“ அது தான் எனக்குத் தெரியுமே. ஆதியவே மாத்திக் கொண்ட்வந்திடுச்சு” என கோதைப் பெருமை பட, சரோஜாவுக்கும் மகிழ்ச்சி.
“ என்னாடா நல்லவனே, பொண்டாட்டி தாசன் ஆயிட்டியா, இம்புட்டு பெருமையா பேசிக்குதுங்க” மீனா, ஆதியை வம்பிழுக்க,
“ ஆமாம், எங்கண்ணேன் எவ்வழியோ, நானும் அவ்வழி” என அவன் சக்தி பிரியனைக் காட்ட,
“என்னையே ஏண்டா உன் லிஸ்ட்ல சேர்க்குற” என சக்தி ஜகா வாங்க.
“ அதானே, என் புருஷனை உன்னோடவெல்லாம் கம்பேர் பண்ணாத. அவன் நிஜமாவே ப்யூர் கோல்ட். நீ வில்லங்கம்” என மீனாச் சொல்ல,
“ அப்படிச் சொல்லுக்கா.” என சித்ரா, அக்காவுக்கு சப்போர்ட், ஆதி அவளை பார்வையாளே மிரட்ட, அவளும் நமட்டுச் சிரிப்போடே கடந்தாள்.
எல்லோரும் சாப்பிட்டு வெற்றிலை பாக்கோடு அமர, கேலியும் கிண்டலுமாக பேச்சும் தொடர்ந்தது.
“ பரவாயில்லடா மகனே, சொன்ன சொல்லை காப்பாத்திட்ட. மருமக முக கலையே, நீ சந்தோஷமா வச்சிருக்கிறதை சொல்லுது” என செல்வமணி பாராட்ட,
“ இல்லையிண்டா, அம்புட்டு பேரும் என்னை துவைச்சு தொங்கவிட்டுற மாட்டீங்க” ஆதி கேட்க,
“ மிரட்டி தாலி கட்ட வைக்கலாம். குடும்பம் நடுத்த வைக்க முடியுமா மாப்பிள, எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு வாழ்க்கையில முன்னேறுற பார்த்தியா? இந்த குணத்தை அறிஞ்சு தான், எங்க பொண்ணை கட்டிக் கொடுத்தோம்” என்றான் ராஜதுரை.
“ பேராண்டி மனசு தங்கமில்ல” என ரங்கதுரையும் சில்லாகித்தார். சரோஜா மகளின் முகத்தை பார்த்தே மனம் நிறைந்திருந்தார்.
ராதாராணி, “ நான் கவலைப்பட்டதை விட, ஆதி மெச்சூட்டாவே நடந்துக்கிட்டப்பா. ஸோ ப்ரவுட் ஆப் யூ” என்றவள்,.
“ ஆனா ஒரு குறை” எனவும்,
“ என்னண்டு சொல்லுங்க மதினி. அதையும் உங்க மருமகன் மாத்திக்கிடுவான்” என கோதை சொல்ல,
“ பாரப்பா, மாப்பிளை வீட்டுகாரவுக டயலாக்கை, பொண்ணு வீடு சொல்றாக, அதுக்காக பையனை பெத்தவளும், பம்மிகிட்டு பதில் சொல்றியே. காலம் மாற்றம் தான் “ என செல்வமணி கமெண்ட் அடிக்க,
“ உன் பெரிய மகன் செஞ்ச வேலை அப்படிப்பா.” என்றார் விருமன் சிரித்தபடி.
“ அண்ணா, நீங்க இரண்டு பேருமே இப்படி சொல்றீங்களே. நான் கவலையோடத் தான் அண்ணா சொல்றேன். மாமனாரும், மருமகனும் சேர்ந்து என்ன ப்ளான் போடுறாங்கன்னு கேளுங்க” என ராதாராணிச் சொல்ல,
“ எலிசபத்து சும்மா, என்னை கோர்த்துவிடாத” என ராஜதுரையை மீசையை நீவ, ஆதி மர்மமாக சிரித்தான்.
“ ஆத்தி, இந்த இரண்டு வில்லங்கமும் சேர்ந்தா, நமக்கு ஏழரைய கூட்டாம விடமாட்டாய்ங்களே. அப்படி என்ன தங்கச்சி செஞ்சாக, சொல்லுங்க” என செல்வமணி தைரியமாக பேச, விருமன் அமைதியாக பார்த்தார்.
“ சித்தப்பாவோட சேர்ந்துண்டா, ஏதாவது தொழில் விசயமா தான் இருக்கும். அதிலென்ன வில்லங்கம்” என கோதையும்,
“ பாண்டிகுடும்பம் எங்குட்டும் சமப்ந்த பட்டிருக்கா? மத்தவுக இடமுண்டாலும் பிரச்சினை இருக்காது. செல்லம் அண்ணன் இடமுண்டா வம்பா ஒரண்டை இழுக்க வேண்டாம்” என பூங்குயிலும் சொல்ல, சித்ரா, ஆதியை அர்த்தமாக பார்த்தாள்.
“ அவுக என்ன விசயமுண்டே சொல்லலை. அதுக்குள்ள அக்காளும், தங்கச்சியும் பிறந்த வீட்டுக்கு சப்போர்டுக்கு வந்துட்டீங்க” என செல்வமணிச் சொல்ல,
“ அவுங்க யூகம் சரி தான் அண்ணா. மாமனாரும், மருமகனும், பெரிய குடும்பத்தோட ஒரண்டை இழுக்கத் தான் ரெடியாகிட்டு இருக்காங்க” என்றாள் ராதா
“ ஆதி, உனக்கு வேற இடமே கிடைக்கலையா” என கோதை மகனை திட்ட,
“இடமுண்டா வேற மாத்திக்கலாம். ஆனா தங்கச்சி சொல்றதைப் பார்த்தா, இடம் விசயம் மாதிரி தெரியலை. ஆதி என்ன விசயம். புதுசா எதுவும் ஒரண்டையா? என விருமன் மகனைக் கேட்க, அவனின் சிரிப்பு இன்னும் விரிவடைந்தது.
“ யோவ் மாப்பிளை சிரிக்காத” என ராஜதுரை முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு சொல்ல, “ ஆத்தி, என்னா நடிப்புடா சாமி” என மீனா இடைச்செருக,
“ போதும் உன் நடிப்பு, சின்ன பையனை தூண்டி விட்டு உன் ஆசையை நிறைவேத்த பார்க்கிற” ராதாராணி நேரடியாகவே கணவனைத் திட்டடினாள்.
“ நான் என்னா செஞ்சேன். மாப்பிள்ளை ஆசைப்பட்டாப்ல, நம்ம பயலுகளும் விருப்ப பட்டானுக. நான் மண்டையாட்டுங்குள்ள அம்புட்டு சோலியையும் முடிச்சுபுட்டானுக” என பீடிகை போட,
“ அட என்னண்டு சொல்லிபுட்டு அப்புறம் சண்டையை போடுங்க” என்றார் ரங்கதுரை.
“ இந்த எலக்ஷன்ல நிக்கறதுக்கு, கட்சி தலைமையில ராஜதுரை மாமா பேர்ல விருப்ப மணு தாக்கல் பண்ணியிருக்கோம். அதுக்கு தான் அத்தை பயப்புடுறாக” என ஆதி விசயத்தை போட்டு உடைக்க,
“ எந்த தொகுதியில நிக்கிறதுக்கு” என கோதை கலவரமாகவே கேட்டாள்.
“ வேற எந்த தொகுதி. எல்லாம் உசிலம்பட்டி தான். மாமாக்கு இருக்கிற செல்வாக்குக்கு சுயேச்சையா நிண்டாவே ஜெயிப்பாரு. கட்சி நிறுத்துச்சுண்டா இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில கண்பார்மா ஜெயிப்பாரு” என ஆதி அடுக்கிக் கொண்டே போக,
“ ஏன் இந்த வருஷம், செல்லண்ணேன் நிற்கலையா” என பூவு சந்தேகம் கேட்டாள்.
“ ஏண்டி உன் அண்ணனுக்குண்டு இந்த தொகுதி எழுதி கொடுத்திருக்கா” என செல்வமணி கேட்க,
“ அண்ணனுக்கு எழுதி கொடுக்கலை. ஆனா பாண்டிகுடும்பத்துகுண்டு ஒரு செல்வாக்கு இருக்குல்ல” என்றாள் பூவு.
“ அந்த செல்வாக்கை தான் உங்க அண்ணேன் சரிச்சு புட்டானே. ஊர் பூரா கெட்டப் பேரு. வேற எவனோ நிக்கிறதுக்கு, சின்ன துரை நிக்கலாம்” என செல்வமணி கருத்துச் சொல்ல,
“ ஏன் மாமா, நீ புரிஞ்சு தான் பேசுறியா” என பூவும்
“ குடும்பத்துக்குள்ள சண்டை பெரிசா போயிடும்” என கோதையும் புலம்பினர்.
“ நானும் அதே தான் சொல்றேன். இத்தனை வருஷம் கழிச்சு குடும்பத்தை உருவாக்கி இருக்கோம். பயந்து பார்த்தவுக எல்லாம், இப்ப தான் நெருங்கி வந்து உறவு கொண்டாடுறங்கன்னு நீங்க தானே சொன்னீங்க. இப்ப தான் கட்டப் பஞ்சாயத்து, வேலூர்காரன், சிலை கடத்தல் பிரச்சனை எல்லாம் ஓய்ஞ்சு இருக்கு, நிம்மதியான பொழப்பை கெடுக்காதீங்க” என ராதாராணி ஓங்கிப் பேச,
“ அத்தை, இது தான் சரியான மூவ்(நகர்வு). நான் இப்படி சொல்றதுக்கு மன்னிக்கனும். என்ன தான் நல்ல பேரு வந்தாலும், கட்ட பஞ்சாயத்து பண்றவர், ஜெயிலுக்கு போயிட்டு வந்தவைங்கண்டு இந்த குடும்பத்து மேல ஒரு கறை இருக்க தான் செய்யுது” என ஆதி சொல்ல,
“ அது நிஜம்தான மாப்பிளை “ என்றான் ரங்கம்.
“ நீங்க செய்யாத குத்ததுக்கு தண்டனை அனுபவிச்சீங்க. உங்களால துரை குடும்பமே உரு குலைஞ்சு திசைக்கு ஒன்னா பிரிஞ்சு போச்சு. கெட்ட பெயரு இருக்க போயி தானே, என் மாமியாரே இதுங்க இரண்டுயும் தனியா நிண்டு வளர்திருக்காங்க. ராதா அத்தை வரவும், அவுக செல்வாக்கு, மீனாவோட முயற்சியால ஒன்னு சேர்ந்திங்க. என்ன தான் ஆஸ்பத்திரி கட்டினாலும், இன்னும் உங்க அடையாளம், சம்பவம் பண்ணவைங்ககிறது தான். நாளைக்கு சாமி, சங்கருக்கே அது தொல்லையா மாறலாம். ஒரு தடவை மாமா எம் எல் ஏ ஆயிட்டாருண்டா, அந்த கவுரதையே வேற. நாம ஒன்னும் வம்பா, பாண்டிக் குடும்பத்துகிட்ட இருந்து, எம் ஏழே ஏ சீட்டை தட்டி பறிக்கலை. சிட்டிங்க் எம் எல் ஏக்கு இந்த தடவை கட்டாயம் சீட் கொடுக்க மாட்டாய்ங்க. அது கன்பார்ம்டு, அந்த சீட்டு மாமாவுக்கு கிடைச்சிட்டு போகுது ” என்ற ஆதி, அடுக்கடுக்காக இந்த முடிவின் சாதக, பாதகங்களை பற்றி பேச, எல்லாருமே கவனமாக கேட்டனர்.
“ஏற்கனவே நம்ம சித்தப்பா குடும்பத்து பக்கம் சாஞ்சிட்டோமுண்டு பேசுறாங்க. இப்ப சுத்தம்” என கோதை புலம்ப,
“உன் மகனுக்கு யாரு பொண்ணு கொடுத்து உன் மானத்தை காப்பாத்துனா? அதை மட்டும் யோசி” என ஆதி அம்மாவை ஓங்கி பேச, விருமான், “நீ சொல்றது வாஸ்தவம் தானப்பா. நான் சின்ன துரை பக்கம் நிக்கிறேன்” என விருமான் முதல் ஆளாக முடிவெடுக்க, பூவும், கோதையும் குழம்பினர்.
“ எனக்கு கூட, நீ நிக்கலாமுண்டு தான் பா தோணுது” என மீனாச் சொல்லவும்,
“ ஆத்தாளே வாக்கு கொடுத்திடுச்சு. நீங்க என்ன அண்ணேன் சொல்றீங்க” என ராஜதுரை, ரங்கதுரையை கேட்க,
“ துரை அண்ணன்கிட்ட கலந்தகிட்டு, பெரியண்ணன்கிட்டையும் பேசிட்டு ஒரு முடிவெடுப்போம்” என்றார் ரங்கம்.
“ இதை எதுக்கு தாத்தா பாண்டிக் குடுமபத்தில கேட்குறீங்க. அவுங்க குடும்பத்துக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க” என ஆதி ஆட்சேபிக்க,
“ நம்ம முடிவு குடும்பத்தில சங்கடத்தை உண்டாக்க கூடாது. உன் அப்பா, அம்மா, சித்த்ப்பா, சித்திண்டு இவுக எல்லாருமே, பாண்டிகுடும்பத்தில ஒரு அங்கம். அவுகளுக்கு நாம சங்கடத்தை கூட்டக் கூடாதில்ல” என ரங்கம் சொல்ல,
“ வாஸ்தவம் தான். நீங்க அண்ணனுங்ககிட்ட பேசுங்க. கட்சி மீட்டிங்கிலையே செல்லத்துக்கு எதிரா பெரிய குரல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்கே. ராஜாண்ணேன் தலையிட்டும் ஒன்னும் நடக்கலை. பெரியண்ணேன் காது வரைக்கும் விசயம் போயிடுச்சு. அன்னைக்கே மகனை தனிச்சு கூப்பிட்டு கண்டிச்சாராம்” என ராஜதுரை முக்கியமான தகவல்களைச் சொல்ல,
“ அங்கையும் ஸ்பை வச்சிருக்கியா மாமு. குடும்பத்து ஆட்களுக்கு தெரியாதது எல்லாம் சொல்ற” என செல்வமணி கேட்க,
“ வீட்டில வச்சு வஞ்சிருந்தாருண்டா உங்களுக்கு தெரியும். ரகசிய இடத்தில வச்சு விலாசுனது. அதுக்க்ப்புறம் தான் பண்த்துக்காக மச்சினனும், மச்சுனுனும் பரபண்ஞு திரியிறாய்ங்கே. பொங்கல் கழிச்சு, அவனுங்களுக்கும் பொங்கல் வச்சிருவாரு” என்றான் ராஜதுரை.
“ மாமனும், மருமகனும் டேட்டா, பேஸோட, மோதுறததுக்கு ரெடியா தான் இருக்கீங்க” என செல்வமணி சொல்ல,
“ கட்டாயம். உங்களை எல்லாம் பார்த்து கத்துக்கிட்டது தான் சித்தப்பா. நீங்க மட்டும் , இங்குட்டு சப்போர்ட் பண்ணுங்க, மத்த விக்கெட்டை எடுக்கிறது பொறுப்பு. மாமாவை எம்எல்ஏ ஆக்காம விடுறது இல்லை. தேர்தல் ஸ்ட்ரெடஜி எல்லாம் ரெடி” என்றான் ஆதி சிவா.
இந்த முடிவு, கோதை, விருமன், பூங்குயிலுக்கு மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது எனில், செல்வமணி, ரங்கதுரை பல மனக் கணக்குகளை போட்டனர்.
“ வரட்டும், பார்த்துக்கலாம் பா. நீ கவலைப் படாமல் இறங்கு” என மீனாவும்,
“ என் சப்போர்ட் எப்பவும் உங்களுக்கு இருக்கும் மாமா” என சக்தி பிரியனும் ஆதரவு தெரிவிக்க,
“ நீங்கல்லாம் ஒன்னும் சொல்லலை” என சாமி, சித்ரா, சரோஜாவிடம் ராஜதுரை கேட்க,
“ எம் எல் ஏ குடும்பமுண்டா, செல்வாக்கு தானே. நம்ம குடும்பம் பட்ட அவமானத்துக்கு எல்லாம் விடிவுகாலமா இருக்கும். நீ எலக்சன்ல நில்லு தம்பி” என சரோஜா ஆதரவு தெரிவிக்க, மகனும், மகளும் அதையே வழி மொழிந்தனர்.
விருமன், “ என் மகன், நொந்து நிண்டப்ப அரவனைச்சு ஆதரவு தந்தீங்க. மகாலட்சமியாட்டம் மருமகளை என் வீட்டுக்கு கொடுத்திருக்கீங்க. இதுக்கே, நாங்க கடமை பட்டிருக்கோம். நீங்க எலக்சன்ல நில்லுங்க. நாங்க முழு ஆதரவு தர்றேம்” என்றார் விருமன்.
எல்லாரும் செல்வமணி அபிப்ராயத்துக்காக அவனைப் பார்க்க, “ போடுற குண்டை போட்டு விடுங்க, குட்டை குழம்பும் அப்புறம் பார்க்கலாம்” என்றான் அவன்.
“ஆக மொத்தத்துல , இவருக்கு சலங்கை கட்டி விடுறீங்க. இனி ஆட்டம் தாங்காதே. என் மண்டை தான் உருளும்” என ராதாராணி புலம்ப,
“அத்தை , பூர்வ ஜென்மத்துல நீங்க இந்த பக்கத்தையே ஆண்டவுங்க, அதை ஞாபகத்துல வச்சுக்குங்க” என ஆதி கொளுத்தி போட,
“ஆமாம் போ” என அவள் குறை பட,
“அது தானே, திரும்பி ஆட்சியை புடிக்கிறோம்டா” என ராஜதுரையும் சூளுரைக்க , வீடும் சூடு பிடிக்க ஆரம்பித்தது.