Deepa senbagam
Moderator
- Joined
- Dec 13, 2024
- Messages
- 1,641
110.தேன்சிட்டுகள்
உதயன், ஹரிணியை சந்தித்து விட்டு வந்த மீனா, ஹரீஷ் விருமாண்டியிடம் விவரத்தைச் சொல்ல, மருத்துவர்கள் இருவருமாக அதைப் பற்றி விவாதித்தனர்.“ ஹரிணியை நல்லா ட்யூன் பண்ணி வச்சிருக்காங்க டீன். இவளும் அவுங்க சொல்றதை கேட்டு மண்டையை ஆட்டுறா. இது நல்லதா, கெட்டதா?” என கேட்டு நிற்க,
“ உதயன் இஸ் நாட் டேஞ்சரஸ் நௌ” என்றான்.
“ இப்போ டேஞ்சரஸ் இல்லைனா? முதல்ல டேஞ்சரஸா இருந்தாரா? “ மீனா குறுக்கு கேள்வி கேட்க, அவர்கள் சொல்லும் பாதிப்புகள் உண்மை என உறுதி செய்த மருத்துவன்,
“ சின்ன வயசில வயலெண்டா இருந்திருக்காரு. அவர் பேரண்ட்ஸ் முயற்சியில, நல்லாவே குணமாகி இருக்கார். அவர் கவனத்தை ஸ்போர்ட்ஸ், ஸ்டெடீஸ், பிஸ்னெஸ்னு திருப்பி விட்டு இருக்காங்க. நம்ம ஹரிணியோட எப்படியோ கணெக்ட் ஆகியிருக்கார். அதனால தேடிப் பிடிச்சு, மேரேஜ் பண்ணி வச்சிருக்காங்க. ஹரிணி அவருக்கு பிடிச்ச பொம்மை . அவ அவர் கூட இருக்கிற வரை நார்மலா இருப்பாரு. இன்னும் பேபி பிறந்துட்டா, அதுவும் கேர்ள் பேபி பிறந்துட்டா, தான் அம்மாவே தன்கிட்ட வந்த மாதிரி ஹேப்பியா ஃபீல் பண்ணுவார். ஹரிணியை நல்லா பார்த்துக்குவார்” என சான்றிதழ் தர, மீனாவுக்கு இன்னும் சந்தேகம் எழுந்தது.
“ இதெல்லாம் எப்படி விசாரிச்சிங்க டீன். பர்ஸனல் டீடைல்ஸ் சொல்லமாட்டங்களே. நம்ம ப்ரபஷனல் எத்திக்ஸ்கு விரோதம் ஆச்சே” என்று வினவ,
“ விஜயோட எலைட் ஹாஸ்பிடல்ல தான் ட்ரீட்மெண்ட் பார்க்குறாங்க , நம்ம பாண்டி குடும்பம் ரிலேடிவ், டாக்ட்டர்ஸ்கிறதால கேஸ் பத்தி அண்டர்ஸ்டேண்ட் பண்ணிக்குவோம், நாளைக்கு இதை வச்சு எதாவது பிரச்சனை வந்தாலும், எடுத்துச் சொல்லுவோம்கிற நம்பிக்கையில சொன்னாங்க” என்றான் ஹரீஷ் விருமாண்டி.
“ இந்த பில்டப்பை பார்த்தா தான் எனக்கு பயந்து வருது. ஆதி சொல்ற மாதிரி, ஹரிணி, உதயன் மேரேஜ்ல ஏதோ கலி கிண்டியிருப்பாயங்க போலயே” என கவலைப் பட,
“ வாட், வாட் கலி?” என்றான் மருத்துவன்.
“ அச்சோ நீங்க எலைட், அமெரிக்க ரிடர்னுங்கிறதை மறந்துட்டு சொல்லிட்டேன் டீன் . குழப்பம், கன்ப்யூசன் இருக்குமுண்டு சொல்ல வந்தேன்” என விளக்கவுரை கொடுக்க,
“ நீயும், சிவா மாதிரி புரியாத லேங்க்வேஜ் தான் பேசுற. நீ ஒரு டாக்டர். அந்த டிக்னிட்டியை பேசுற லேங்க்வேஜ்ல மெயின்டைன் பண்ணு” என நடுவில் அவளுக்கும் ஒரு குட்டு வைக்க,
“ ஓகே டீன்” என்றாள் பவ்யமாக. தொழில், உறவு இரண்டிலும் சீனியர் என்பதால், மீனாவுக்கு கடிவாளம் போடும், ஒரே மனிதன் ஹரிஷ் விருமாண்டி தான். சக்தியே அடங்க மறுக்கும் மனையாளை அவ்வப்போது அண்ணனின் பெயரை சொல்லி தான் அடக்குவான்.
“ ஆதி, சித்ரா எப்படி இருக்காங்க” என மருத்துவன், விசாரிக்க “ இன்டிமேட், லவ் அண்ட் அபெக்ஸனோட இருக்காங்க” என பொறுப்பாக பதில் தர,
“ இட் இஸ் குட். இனிமே பாஸ்ட் பத்தி திங்க் பண்ணி நோ யூஸ். இரண்டு பேரும், அவரவர் லைஃப்ல அடுத்த ஸ்டெப் போயிட்டாங்க. இனி ஒரி பண்ண ஒன்னுமில்லை” என்றான்.
“ இல்லை டீன் உங்களுக்கு ஹரிணியை தெரியாது. தன் ஜாதகத்தினால ஆதி உயிருக்கு ஆபத்துன்னு தான், உதயனை கல்யாணம் பண்ண சம்மதிச்சா. அவளே யாரையும் நம்பாமல், ப்ரண்டோட அப்பாட்ட கொடுத்து ஜாதகத்தை க்ராஸ் செக் பண்ணா. எல்லா பக்கமும், ஒரே மாதிரி சொல்லவும், ஆதிக்காக உதயனை ஓகே சொன்னா. இப்பவும் ஆதி கூட தான் அவளுக்கு போட்டி. அவ பேச்சுல முக்கால்வாசி ஆதி வந்துடுறான். ” என ஹரிணி பேசியவைகளையும் சொல்ல,
“ புவர் கேர்ள். ஆதியோட அட்டன்சன் சீக் பண்றதுக்காக இப்படி எல்லாம் செய்யிறா. அவன் ப்ரண்லியா பேசிட்டா, எல்லாம் சரியாகிடும். நம்ம ஆதி, சித்ராகிட்டையும் பேசுவோம். “ என்று சொல்ல
“ நீங்க என்னமோ சொல்றீங்க. இன்னோரு சந்தேகம், ஆதியை பத்தி ஹரிணி உதயன்கிட்டேயே பேசுறாளே, இது அவரை ட்ரிகர் பண்ணாதா, ” என்றும் கேட்க,
“ கொஞ்சம் இரிடேட் ஆவார், இது ஜெனரல். பட் உதயன், ஆதிகிட்ட இருந்து தானே, ஹரிணையை தட்டி பறிச்சிருக்காரு. அதனால பொறுமையா தான் ஹேண்டில் பண்ணுவாரு. ஹரிணியோட சின்ன முக மாற்றமும் அவரை பாதிக்கும், அதனால தான் அவளை எதுவுமே சொல்றதில்லை” என ஹரீஷ் விளக்க,
“என்னமோ சொல்றிங்க, நல்லா இருந்தானா சரி தான்” என, தினசரி ஹரிணியின் போன் பேசும் லிஸ்டில் தான் இருக்கும்படி பார்த்துக் கொண்டாள் மீனா.
ஹரிணிக்கு , தன் வயிற்றில் குழந்தையின் அசைவு தெரிய ஆரம்பித்திருக்க, எக்ஸைட்மெண்ட்டோடு , அலைபேசியிலோ, மீனா பிசியாக இருந்தால், வாய்ஸ் மெஸேஜ் அனுப்பவோ ஆரம்பித்திருந்தாள். இந்த உறவு அவளை சீராக வைத்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.
உதயனின் காயங்கள் ஆறியிருக்க, ஹரிணியின் அனுசரனையில் வழக்கத்துக்கு மாறி, முன்னிலும் கெத்தாக தொழிலை கவனிக்க ஆரம்பித்திருந்தான்.
ஆதிசிவா, சித்ரா ஜோடி, பூம்பொழில் ரிசார்டு, கருமாத்தூர், பெருமாள் பட்டி என சண்டிங்க் அடித்துக் கொண்டிருந்தனர். சித்ராவோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து, அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலும், தொழிலிலோ, அரசியலிலோ, செல்லபாண்டி, உதயன் மீது கொண்ட கோபத்திலோ, அவர்களை அம்பலப்படுத்தும் முயற்சியிலோ ஆதியின் இலக்கு மாறவில்லை. மெல்ல காய்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.
பூம்பொழில் எஸ்டேட் வேலைகளை ஆரம்பித்து, ஆதி கண்ஸ்டக்சன் ஆட்கள் கையில் கொடுத்து, அதனை மேற்பார்வை பார்க்கும் பொறுப்பையும் சித்ராவிடம் கொடுத்திருக்க, அவளும் உற்சாகமாகவே செய்தாள். சி ஏ ரிசல்ட் வர ஒரு மாத காலமிருக்க, கணவனின் காரியம் யாவிலும் கை கொடுக்கும் காரிகையாக அவன் தொழிலை பற்றியும் அறிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
வளையப்பட்டி ஜமீன் வீட்டில் அடைந்து கிடக்க முடியாமல், ஹரிணி அவ்வப்போது உதயனோட லாங்க் ட்ரைவ் போக ஆசைப் பட, “ நீ கேட்டு நோ சொல்லுவேனா? போலாம் ஹனிமா” என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கம் அழைத்துச் சென்றான்.
ஜல்லிக்கட்டு அரங்கை காட்டி, ” கவர்ண்மெண்ட் தேவையில்லாத வெட்டிச் செலவு செய்யுது” என அவன் கருத்துச் சொல்ல,
“ ஆதி இங்க வேலை செய்யிறதினால அப்படிச் சொல்றீங்களா? “ என அவள் கோபிக்க,
“ நிச்சயமா இல்லை. இந்த மாடுங்களுக்கு ஒரு ஸ்டேடியம் கட்டளையின்னு யார் அழுதா? நான் வெறுக்கிற ஒரே அனிமல் இது தான் .” என அவன் கொந்தளிக்க,
“ ரிலேக்ஸ் உதி. ஐந்தறிவுள்ள ஜீவன். அத்தையை குத்தினது. தாங்கமுடியாத வலி தான். அதுக்காக அந்த இணத்தையே வெறுக்க கூடாது” என அவள் சமாதானம் சொல்ல,
“ இந்த டாப்பிக்க விடு ஹனிமா. ஐ கெட் டென்ஸ்டு” என்றான்.
“ அந்த டென்சனிலிருந்து உங்களை முழுசா வெளியே கொண்டு வர தான் ட்ரை பண்றேன்” என்றவள்,
“ தங்கம் சித்தப்பா, அன்புச் செல்வன்னு ஒரு டி எஸ்பி பத்திச் சொல்லுவாரு. பதினெட்டு வயசிலிருந்து ஒரு ஜல்லிக்கட்டு விடாமல் கலந்துக்கிட்டு ஜெயிப்பாராம். மாடை அடக்குறது பெரிசில்ல, வளர்த்து பேருந்து யாரோ சவால் விட, அதுக்காக காளை மாடை ஜல்லிக்கட்டுக்காக வளர்க்க ஆரம்பிச்சாராம். எதிர்பாராத விதமா அவர் வளர்த்த மாடே, அவுங்க அம்மாவை குத்துச்சாம். அதில மனசு உடைஞ்சு, பரிசம் போட்ட மாமன் மகளை கூட ஊரை விட்டே போயிட்டாராம். இத்தனைக்கும் டின் என் பி எஸ் சி, க்ரூப் ஒன்ல செலக்ட் ஆகி கவர்ன்மென்ட் வேளையில் சேர ரெடியா இருந்திருக்கார். . உங்களை மாதிரியே அம்மா பாசம். மாடு பிடி வீரனா இருந்தவரு, எதுவுமே வேண்டாம்னு ஒதுங்கி போயிருக்காரு. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தப்ப தான் பெரிய ட்விஸ்ட் நடந்துச்சாம்” என ராசாக்கள் பட்டி சிவகாமி அம்மாள் மகன், அன்புச் செல்வனைப் பற்றி அவள் சொல்ல
” ஹனிமா, நம்ம ஜமீன் வட்டத்தில இருக்கவுங்க. நம்ம ஊருக்கு பக்கத்து ஊரு, ராசக்காள் பட்டி காரர். அப்பா இந்த கதையை நிறைய தரம் சொல்லி இருக்கார். என்னை பூஸ்ட்ப் பண்ணனும்னு அவரை நேரா சந்திச்சு, அவரை விட்டே எனக்கு எடுத்துச் சொல்லச் சொன்னார்” என்றவன்,
“ பாதிக்க்ப்பட்டவன்கிற முறையில நான் சொல்றேன். எத்தனை பேர் ஆறுதல் சொன்னப்பவும், எங்கம்மா இழப்பை என்னால தாங்கவே முடியலை. குடும்ப வாழ்க்கைகுள்ள வந்துட்டாலும், ஊருக்குள்ள வராமல் இருந்தேன். ‘ நீயே எந்தன் மகளாய் வரனும்னு வேண்டுப்பா, அம்மா உன்கிட்ட வருவான்னு, என் அப்பாவும், வொயிப்பும் விடாமல் சொன்னாங்க. எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனாலும் எனக்கு மகள் பிறந்த பிறகு, அது அம்பேனு கூப்பிடும் போது, எங்கம்மாவே கூப்பிட்ட மாதிரி பீல் பண்ணேன்னு. அது மாதிரி அவரா உணருவாரு. நீங்க ஃபோர்ஸ் பண்ணாதீங்கனு சொல்லிட்டாரு” என உதயன் சொல்ல,
“ அப்போ நான் சொன்னாலும் கேட்க மாட்டிங்க. என் வயித்துக்குள்ள இருக்க உங்க பேபி, உங்க மம்மி சொன்னா தான் கேட்பீங்க” என அவள் முகத்தை திருப்ப, ஹாஹாவென சிரித்தவன்,
“ க்யூட்னெஸ் ஓவர் லோடட் மை ஸ்வீட் ஹனி” என அவளைக் கொஞ்சியவன்,
“பேபி வரட்டும் எனக்கு டைம் குடுடா” என்றான்.
“அவரோட ஸ்டோரி தெரியும்னு சொல்றிங்கள்ல, விதி வலியது, முதல் கவர்ன்மென்ட் போஸ்டிங்க, அலங்காநல்லோர் ஜல்லி கட்டை நடத்துற மாதிரி ஆனது. அதே தான் உங்களுக்கு” என அவள் ஆரூடம் சொல்ல,
“அவர் மாடு பிடி வீரர் மாட்டை பிடிச்சார். நான் கிரவுண்டுக்கே வரமாட்டேன்” என இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஓட, சண்டையும், சமாதானமுமாக பேசிக் கொண்டே வந்தனர்.
“ சரி வா. ஸ்டேடியத்தை பார்த்துட்டு வருவோம்” என அழைத்துச் செல்ல, மந்திரி மகன் என்பதில், அரங்கின் உள் பகுதி வரை, காரில் செல்ல அனுமதித்தனர்.
ஆதியின் காரும் அங்கே நிற்க, “ டப்பா மண்டையன், இங்க தான் இருக்கான் போல, நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டு வர்றேன்” என அவள் சொல்ல,
“ ஹனி, அவன் லைஃபை அவன் ஆரம்பிச்சுட்டான். நீ இப்படி பிஹேப் பண்றது தான் எனக்கு பிடிக்கலை” உதயன் கடுமையாகச் சொல்ல,
“ ப்ளீஸ் உதி. அவன் நல்லா இருக்கட்டும். எனக்கும அது தான் வேணும். ஒரு தடவை அவன் சந்தோஷமா இருக்கிற முசரக்கட்டையை பார்த்திட்டேண்டா, என் மனசில் இருக்க குற்றவுண்ர்ச்சி போயிடும். நம்ம பேபி லரும் போது, நம்ம லைப்ல நம்ம மூணு பேரும் தான் இருக்கனும். இந்த தேவையில்லாத ஆணியெல்லாம், தூரப் போடனுமுண்டு நினைக்கிறேன்” அவள் லாஜிக் பேச,
“ சரி வா. சொன்னா கேட்க்கவா போற” என அழைத்துச் சென்றான். ஆதியின் கார் நின்றாலும், ஆதி இல்லை என்றனர். மந்திரி குடும்பம் எனவும், அரங்கத்தை சுற்றி காட்டி ஆதியின் யோசனையையும் பெருமையாகப் பேசினர்.
‘ இதெல்லாம் நல்லா தான் செய்வான், டப்பா மண்டையா, ஒரு தடவை நேரா பார்த்து என் மேல உள்ள கோபமெல்லாம் போச்சுண்டு சொன்னா என்னடா டப்பா மண்டையா’ என மனதிலேயே பொருமி விட்டு,
“ போகலாம் உதி. எனக்கு நிற்க முடியலை” என நிறைவேறாத ஆசையோடு திரும்பி சென்றாள்.
அன்றைய தினம், ஆதி, சித்ராவையும் அரங்கைப் பார்க்க அழைத்து வந்திருந்தான். உதயன் கார் வருவதையும், ஹரிணியையும் பார்த்து விட்டு, தான் இல்லை என ஆட்களை வைத்து சொல்லச் சொன்னவனும் அவன் தான்.
அதில் சித்ராவுக்கு வருத்தம்,“ மாசமா இருக்கப் பொண்ணு, பக்கத்துக்கு ஊர்லையே இருக்க, நீங்க வரமாட்டீங்க, என்னையும் பார்க்க போக கூடாதுண்டு சொல்லிட்டீங்க. ஓகேன்னு உங்க பீலிங்குக்கு மரியாதை கொடுத்து பேசாமல் இருந்துட்டேன். இப்போ நம்மளை தேடி வர்றா. அவளைப் பார்க்க கூடாதுண்டு உங்களுக்கு, அப்படி என்ன பிடிவாதம் ஆதி ” என அவள் சண்டைப் போட,
“ அவன் தான் உசத்திண்டு போனால்ல, அப்புறம் என்ன? எனக்கு போலியா உறவாடவெல்லாம் தெரியாது. நீ சொன்னதுக்காக அமைதியா இருக்கேன், அதோட விடு” என்றான்.
“ நானாவது பார்த்துட்டு வர்றேன்” என அவள் இறங்கப் போக, அவளை இழுத்து சிறை செய்தவன், “ போகக் கூடாதுண்டா, போகக் கூடாது தான். என் பீலிங்ஸ்க்கு மதிப்பு குடு சிட்டு” என கண்சிமிட்டி , மறைவில் சுவற்றோடு சேர்த்து வைத்து வன்மையான இதழொற்றலைத் தர, முதலில் எதிர்த்தவள், பின் அடங்கி அவனையும் சமாளித்தாள்.
இதுவும் அவ்வப்போது அவர்களிடம் நடப்பது தான். அதற்காக சித்ரா அவனைப் போல் கோபப்டாமல் நிதானமாகவே கையாள்வாள். அவன் போக்கில் சென்று அவனை வெல்லும் உத்தியில், அந்த அன்பில் தான் அவனும் அவளிடம் அடங்கிக் கிடந்தான்.
ஜல்லிக்கட்டு அரங்கில் தொன்னூறு சதவித வேலை முடிந்திருக்க, ஆதியின் சின்சியாரிட்டியை சாந்த் தேவ் நிறுவனமும் பாராட்டி, அடுத்த ப்ராஜட்டிலும் அவனை இணைத்துக் கொள்ள முன் வந்தது.
பெங்களூரில் நடந்த புதுவருட பார்ட்டிக்கு, ஆதி, சித்ராவுக்கு அழைப்பு விடுக்க, அவனும் அழைத்துச் சென்றான்.
உயர்தர ஸ்டார் ஹோட்டல், அந்த பவிசுக்கும் சித்ரா தன்னை பொறுத்திக் கொண்டாள். இடத்துக்கு தக்கன, டிசைனர் சேரி, பார்லர் அலங்காரம் என அமெரிக்கையாக மனைவியை பார்க்கவும், ஆதியின் இதய துடிப்பு அதிகரிக்க, “ என் தேவதை சிட்டு நீ” என ஆசையாக கொஞ்சி, பெங்களூரிலும் தேனிலவை கொண்டாடினான்.
தொழில் வட்டத்தில், சித்ராவை ஆடிட்டர் என அறிமுகப் படுத்தியதில் அவனுக்கும் பெருமை. சித்ராவும் தான் ஏற்கனவே ஆராய்ந்து வைத்திருந்த சாந் தேவ் நிறுவனத்தின் மிகப் பிரம்மாண்ட வளர்ச்சியை பற்றி பாராட்டி பேச, “ இம்பிரசிவ். ஆதி, நம்ம ஆடிட்டிங்க் டீம்ல, மேடத்துக்கும் ஒரு சீட் ரிவர் பண்ணிடுவோம்” என சந்திரதேவ் சொல்ல,
“ இட் ஸ் எ ஹானர் சார். “ என தலையை ஆட்டிவிட்டு வந்திருந்தனர்.
உசிலம்பட்டியில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. செல்லபாண்டிக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்கக் கூடாது என அவர்கள் சாதியினரும் ,கட்சியினருமே குரல் கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.
ராஜன் அழைத்து பேசியும், அந்த பிரச்சினைகளை செல்லபாண்டி சீர் செய்யவே இல்லை. மச்சினன்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடக்க, மலரு தான் செய்வதறியாது கையை பிசைந்தாள்.
மெல்ல விசயம், சிவபாண்டி காதுக்கும் போக, விசயம் அதன் தீவிரத்தை அடைந்துக் கொண்டிருந்தது. ஆதிசிவாவும் ராஜதுரை ஆட்களும் இதை கூர்மையாக கவனித்து, ராஜதுரைக்கே தெரியாமல் தேர்தலில் போட்டியிட அவன் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டோரைத் திரட்டி , டெபாசிட் பணம் கட்டச் செய்ய, தலமை கழகத்திலேயே அது பேசுபொருளாக இருந்தது.
“ராஜதுரை யாருப்பா” என்ற விவாதங்கள் ஓட, வேலூர் முதல் கன்னியாகுமாரி வரை பெரும்புள்ளிகளுக்கு அவனை தெரிந்திருக்க , வேட்பாளர் யோசனை பட்டியலில் அவனும் இடம் பெற்றிருந்தான்.
இதனை, பாண்டி, துரை குடும்பங்கள் எப்படி எதிர் கொள்ளும் பொறுத்திருந்து பார்ப்போம்.