My Image

Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

நித்தமும் நினதாகுறேன் - பாகம் 11

IVNP27

Member
Joined
Mar 27, 2025
Messages
30
நான் உணரவில்லை ஆனால் தேடுகிறேன் உன்னை விலகி விடாதே உணர வைக்க வருவாயா....

.... கனலின் தேடல் மொழி.....

பாகம் -11

கனவு கலைந்து எழுந்தவளுக்கு தாங்கவில்லை ஏதோ அழுத்துவது போல் இருக்க மூச்சு முட்டியது "என்ன சொன்னான் நான் உணரவில்லையா அப்டினா என் கண் முன்னே இருக்கானா அவன், யார் அது,எப்படி கண்டு பிடிக்குறது, இவன் காதல் மட்டும் பெருசாம், என் காதல் என்ன சிறுசா, முத்தம் கொடுத்து மனச கெடுத்துட்டான், எனக்கு தான் மறந்து போச்சே இவன் புரிஞ்சிக்கலைனு என்னை சொல்றான் இவன் மட்டும் என்னை புரிஞ்சிகிட்டானா, என்னலாம் பேசிட்டான் டேய் உனக்கு இருக்குடா ஒரு நாள் மாட்டாமலா போவ, அப்போ பார்த்துக்குறேன்டா " கண்டபடி வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி தீர்த்தவள் தூங்க சென்றால் ஏதோ ஒரு நிம்மதியில்....

மிகிரனோ ஊரில் உள்ள நண்பனுக்கு அழைத்து பேசியவன் யோசனையோடு இருந்தான், கொஞ்ச நேரம் நடந்து கொண்டே யோசிக்க பிறகு தெளிவடைந்தவன் தனது டைரியில் கொஞ்ச நேரம் எழுதி விட்டு மூடியவன் அதற்கு ஒரு முத்தமும் கொடுத்து விட்டு சிரித்துக் கொண்டு படுத்தான்.

"எத்தனை வருட காதல், சொல்லிய காதலை விட சொல்லாத மறைத்து வைத்த காதலுக்கு அழுத்தமும் அதிகம், ஆழமும் அதிகம், அவள் நினைவு நித்தமும் அவனை இதமாக்கி கொண்டிருக்கிறதே, வெளியே அழுத்தக் காரன், கோவக்காரன், சிரிக்க மறந்தவன் ஆயிரம் பட்டப் பெயர்கள், அவன் தான் மனதிற்க்குள்ளேயே மறைத்து வைத்து அவளுடன் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும் எங்கெங்கோ சுற்றிக் கொண்டு இருக்கிறானே, இந்த ஜென்மம் முழுவதும் இவள் மட்டும் போதும் என்று எப்போதோ முடிவெடுத்து விட்டான் வேறு யாரும் அவனுக்கு தேவையில்லை, காலம் இவர்களை சேர்த்து வைக்க திட்டம் தீட்டி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது. அவள் நினைவினில் உறங்கியும் போனான்.

பொழுது புலர்ந்தது அழகாக... காலையில் எழுந்த கனலி சீக்கிரமே கிளம்பி கனவில் சென்ற ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றாள் சிவனை மனமுறுக வேண்டியவள் கோவிலை பொறுமையாக சுற்றி வந்தால் தன்னை யாரேனும் பார்க்கிறார்களா திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே அங்கே இருந்த சுவற்றில் முட்டிக் கொண்டாள். தலையை தேய்த்துக் கொண்டே யாரேனும் பார்க்கிறார்களா என பார்க்க சிரிப்பு சத்தம் கேட்டது பதறியவள் பார்க்க மிகிரன் கடையில் வேலை செய்யும் சக்கரை இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்

"நீயா தம்பி நான் வேற யாரோன்னு பயந்துட்டேன் "... சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து முடித்தவன்

"என்ன அக்கா இது ஏன் இப்படி கோவில்ல காமெடி பண்ணிட்டு இருக்க"...

முறைத்தவள் "நீ வேற நானே ஒரு பிரச்சனையில இருக்கேன் அதான் யோசுச்சுகிட்டே இப்டி மோதிட்டேன் வலிக்குது நீ என்னனா சிரிக்குற "... அப்பாவியை போல பேசியவளை பார்த்து

"நம்ம அண்ணா கோவக்காரர், இவங்களோ இவ்ளோ அப்பாவியா இருக்காங்க, இவங்க பண்றது, பேசுறது பார்த்தாலே சிரிப்பு வருது, இவங்க தான் நம்ம அண்ணனா சந்தோஷமா மாத்தணும், கடவுளே எங்க எல்லாரோட வேண்டுதலை நிறை வேத்து"... மனதில் வேண்டுதல் வைத்தவன்

"அக்கா வா முதல்ல இங்க உட்காரு என்னனு சொல்லு என்னால முடிஞ்ச உதவி பண்றேன். உன் முகமே கவலையா இருக்கு, நீ இப்படி இருக்க மாட்டியே, சிரிச்சிட்டு தானே இருப்ப "....

கடையில் பார்த்ததுல இருந்து அக்கா, அக்கா என பாசமாக கூப்பிடுவதும் உதவி செய்வதும் என இவளுக்கு பிடித்து விட சரி இவன் கிட்ட சொல்லுவோம், ஏதாவது ஐடியா சொல்றானன்னு பாப்போம் "சக்கரை நான் சொல்லுவேன் நீ சிரிக்க கூடாது,கிண்டல் பண்ணக் கூடாது "....

யோசித்தவன் "சரிக்கா சொல்லு சிரிக்க மாட்டேன்"...

"எனக்கு கனவு வரும் அடிக்கடி ஒரே மாதிரி அப்புறம் கொஞ்ச நாள் வராம இருந்தது, இப்போ திரும்பவும் கனவு வருது".... "

அக்கா நிஜமாவா இதுலாம் சினிமாவுல பார்க்குற மாதிரி இருக்கு, அப்புறம்".... "சின்ன வயசுல பழகின ஒருத்தர் ஆனா எனக்கு நியாபகம் இல்லை இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் என்னை தேடி வந்திருக்காரு கனவுல எவ்ளோ பாசம் வச்சிருக்காரு தெரியுமா, நான் தான் ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு அவரை திட்டிட்டேன், மனச கஷ்ட படுத்திட்டேன், வர மாட்டேன் முடிஞ்சா நேர்ல என்னை கண்டுபிடின்னு சொல்லிட்டு கோவமா போய்ட்டாரு "... ஆச்சர்யமாக பாத்தவன்

"நம்பவே முடியல கா, ஆனா நீ பொய் சொல்ல மாட்ட அதனால நம்பாமலும் இருக்க முடியாது, சரி அவர் எப்டி இருப்பாருன்னு தெரியுமா முகம் நியாபகம் இருக்கா "...

சலித்துக் கொண்டவள் " எங்கடா கனவுல முகம் நல்லா தெரியுது அழகா இருக்காரு, சிரிக்கிறாரு ஆனால் அப்புறம் யோசிச்சா முகம் நியாபகத்துல வரலையே, ஆனா அவர் மீசைக்கு பக்கத்தில ஒரு மச்சம் இருக்கு அது அவருக்கு சூப்பரா இருக்கும் தெரியுமா"...

"ஏதே மச்சமா, யக்கோவ் நீ நினைத்தேன் வந்தாய் படம் பார்த்தியா அந்த நியாபகத்துல கனவு கண்டுருப்ப போ கா "....

"தம்பி நம்புடா நிஜமா இது சினிமா இல்லை அவரை அம்மா சின்ன வயசுல பார்த்து இருக்காங்க, அவர் நிஜம் தான், ஏதாவது ஐடியா சொல்லுடா நீயாவது புரிஞ்சிக்கோ"... கலங்கிய கண்களுடன் பேச

"அக்கா சாரி கா நான் சும்மா காமெடிக்கு சொன்னேன் "... முறைத்து பார்த்தால் "நான் ஒன்னு சொல்லவா "... 👍

"சொல்லு ".... கோவமாக கூற

"அவரு ஒரு வேளை நம்ம பக்கத்தில இருக்காரோ, உனக்கு தெரிஞ்சவங்க யார்னா இருந்தா சொல்லு மச்சம் இருக்கானு பார்ப்போம் "...

"எங்க இப்போ எல்லாம் தாடி வச்சிட்டு அலையுறாங்க எப்டி கண்டு பிடிக்குறது "...

கனலி சொல்லவும் அவனும் யோசித்தவாறே"அதுவும் சரி தான் அக்கா ஒருத்தர் மேல டவுட் வருது சொன்னா திட்ட கூடாது "...

அப்படி யாரை சொல்ல போறான் யோசித்தவள் "சொல்லு திட்ட மாட்டேன் எனக்கு கண்டு பிடிக்கணும் அதான் முக்கியம் "...

எவ்ளோ பிளான் போட்டோம் இப்போ எப்படியாவது அண்ணன கோர்த்து விட்ரனும் இப்போதைக்கு சொல்லி வைப்போம் அப்புறம் நம்ம டீம் கிட்ட சொல்லி நம்ப வச்சிடலாம் மனதுக்குள்ளே திட்டம் போட்டவன் "மிகிரன் அண்ணா மேல டவுட் ஏன்னா அவர் ரொம்ப நாளா தாடியில இருக்காரு மச்சம் இருக்கானு பாத்துட்டா நம்ம டவுட் கிளியர் ஆகிடும் என்ன சொல்றீங்க "....

வேறு எதுவோ சொல்லப் போகிறான் என்று நினைத்தவள், மிகிரன் பேரை சொன்னதும் விழி விரித்தவள் "என்ன அவரா, டேய் சக்கரை ஏன்டா அவர் கிட்ட கோர்த்து விட்ற, அவர பார்த்தாலே பயமா இருக்கு இதுல மகியா நான் எப்படி அவர ஏத்துக்குவேன் நீ சொல்றதுக்காக டவுட் கிளியர் பண்ணிக்கிறேன் அவ்ளோ தான் ஆனா நீ எனக்கு சத்யம் பண்ணிக் கொடு யார் கிட்டயும் இதை பத்தி பேச மாட்டேன்னு அப்போ தான் நான் இதுக்கு சரினு சொல்லுவேன்"...

அப்பாவினு நினச்சா இவங்க ஷார்பா இருக்காங்க சத்தியம் வாங்கிட்டா எப்படி மிகிரன் ஆபரேஷனக்கு நம்ம டீம் கிட்ட சொல்றது, சரி இப்போதைக்கு சத்தியம் பண்ணுவோம் ஒரு வேளை மச்சம் இருந்துட்டா நல்லது தானே நினைத்தவன் "அக்கா நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன் சத்தியம், இப்போ நம்புறியா"...

"தேங்க்ஸ் தம்பி இந்த உதவிய நான் எப்பவும் மறக்க மாட்டேன் "...

"அக்கா நமக்குள்ள என்ன தேங்க்ஸ் சீக்ரம் கண்டுபிடிச்சி சொல்றேன் நீ கவலை படாத, நிம்மதியா இரு, சந்தோஷமா இரு அது போதும் "....

"சக்கரை வா சாப்பிட்டு போகலாம் நான் இந்த டென்ஷன்ல சாப்பிடவே இல்லை இப்போ தான் பசிக்குது"..... "கவலை,டென்ஷன் வந்தா பசி கூட மறந்து போகுது நான்லாம் கவலைல தான் அதிகமா சாப்பிடுவேன் தெரியுமா, நீ எல்லாம் எனக்கு அக்கானு சொல்லாத முதல்ல வா சாப்டலாம் "... மனது குழப்பமாக வந்தவளுக்கு இப்போது தெளிவு கிடைத்தது மட்டுமின்றி கள்ளம் கபடமில்லாத இவனின் பேச்சும், அன்பும் சந்தோஷத்தை குடுத்தது. ஹோட்டல் சென்று அவனுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி குடுத்தவள் இவளும் சாப்பிட்டு அவனை அனுப்பி விட்டு அலுவலகம் வந்தாள்.,...

அலுவலக வாசலில் நின்றவள் இப்போதைக்கு சக்கரை கிட்ட பேசினத தாரு கிட்ட சொல்ல வேணாம் அவன் கண்டுபிடிச்சி சொல்லட்டும் அப்புறம் சொல்லிக்கலாம். மனதில் நினைத்தவள் இயல்பாக உள்ளே சென்றால் "கனல் வா வா என்ன இன்னைக்கு கோவிலுக்கு எதனா ஸ்பெஷல், முகம் வேற பளிச்சுனு இருக்கு"...

ஏன்டி நைட்ல தூங்காம கண்ணுக்கு கீழ கருவளையமே வந்திருக்கு இதுல முகம் பளிச்சுனு இருக்கோ எப்டி டி இப்டி பொய் சொல்றீங்க, இருடி இந்த பிரச்சனை முடியட்டும் அப்புறம் இருக்கு உனக்கு இதை மறக்கவே மாட்டேன்டி சபத மேற்றவள் வெளியே சிரித்துக் கொண்டு

"இன்னைக்கு போகணும்னு தோணுச்சு எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு தான் தெரியுமே இந்தா பிரசாதம் "... கனலி கொடுத்ததை வாங்கி நெற்றியில் பூசிக் கொண்டவள் கடவுளே நீயாச்சும் அவளுக்கு நல்ல புத்தி கொடு வேண்டிக்கொண்டால்... கடவுள் யாருடைய வேண்டுதலை நிறைவேற்று வாரோ....

சக்கரையின் அம்மா தான் கோவிலுக்கு போய்ட்டு அர்ச்சனை பண்ணிட்டு போ அவர்கள் வாரம் தோறும் திங்கட்கிழமை வந்து செல்வார்கள் இன்று வர முடியாத சூழலில் சக்கரை கோவிலுக்கு வந்தான்... கனலியை பார்த்தது, பேசியது அதை யோசித்துக் கொண்டே கடைக்கு வந்தான் கடையை திறந்து சாமிக்கு விளக்கு ஏற்றி ஊதுவத்தி கொளுத்தி வைத்து விட்டு பெருக்கி சுத்தம் செய்தவன் அண்ணனுக்காக காத்திருந்தான்...

"அண்ணன் வருவதற்குள் நித்யா அக்காவிற்கு போன் பண்ணி நேரிடையாக கேட்காமல் அடையாளம் கேட்பது போல் கேட்கலாம் என்று யோசித்தவன் நித்யாவிற்கு அழைத்து கேட்க "அடையாளமா நெத்தில வலது ஒரு மச்சம் அப்புறம் வலது கை பெரு விரல்ல ஒரு மச்சம், அப்புறம் கால்ல ஒரு தழும்பு அவ்ளோ தான்டா "... நாம நினைச்சது சொல்ல மாட்றங்களே "அக்கா, அம்மா இல்லையா பக்கத்தில இருந்தா கொடுங்களேன் ".... "அம்மா வெளிய போய் இருக்காங்க வந்ததும் பேச வைக்கிறேன் டா "... "ஓகே கா வச்சிடறேன் ".... இப்பவே கண்ணு கட்டுதே, சரி அண்ணனே வரட்டும் எப்படியாவது பார்த்துடலாம்.... அவர் வருவதற்குள் இருக்கும் வேலையை முடித்து வைக்கலாம் என்று நினைத்து சின்ன, சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

மிகிரன் வந்தான் "என்னடா அதிசயமா இருக்கு நான் வரதுக்குள்ள கடையை சுத்தம் பண்ணி, பார்ரா சின்ன வேலை யெல்லாம் முடிச்சி வச்சிருக்க என் தம்பிக்கு இவ்ளோ பொறுப்பு வந்திருக்கு சந்தோஷம் டா".... தன்னை பாராட்டி பேசியதோடு, சிரித்தவனையும் பார்த்த சக்கரைக்கு அவ்வளவு சந்தோஷம் "அண்ணா நீ இவ்ளோ வார்த்தை என் கிட்ட முதல் முறை பேசி இருக்க, சிரிச்சி இருக்க எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, வீட்ல அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லனும் ".... கோவமாக பார்த்து "ஏன்டா நான் என்ன ரோபோவா டா, நானும் மனுஷன் தான் எனக்கும் பேச, சிரிக்க தெரியும் புரியுதா".... "இது போதும்ணா இப்படியே இருணா ப்ளீஸ் ".... அதுக்கு அவ வேணுமே, சீக்கிரம் நித்யா பிரச்சனை முடிச்சிட்டு அவளை தேடி போறேன், அவ வேணும் எனக்கு உள்ளுக்குள் மகிழ்ந்து வெளியே இயல்பாய் இருக்கமாய் மாற்றிக் கொண்டான்

"டேய் என்ன ஆச்சி உனக்கு தாடிய புடுச்சி இழுக்குற, மூஞ்ச பாரு, காலைல வேலை செஞ்சதோட சரி இப்போ என்னடானா என்னையே சுத்தி வர, திரும்பவும் வந்த தொலைச்சிடுவேன் போடா " மிகரனிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் சக்கரை...

என்ன நடந்திருக்கும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்
 
Last edited by a moderator:
Facebook iruvachi
YouTube
Deepasenbagam Papr
Deebas Papr
Facebook papr
Back
Top